Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 539
- Thread Author
- #1
சீமைக்கரை:
வளவா இன்னைக்கு வேலைக்கு போக வேண்டாம். தேனூருக்கு பொண்ணு பார்க்க போகணுமென்று பெருமாள் சொல்ல அப்பா அது வந்து என்று தடுமாறினான்.
ம்ம்..
சொல்லுப்பா என்ன விஷயம்?
உனக்கு எதாவது பொண்ணு புடிச்சிருந்தா சொல்லு அதையே பேசி முடிச்சிடலாமென்றவர் மகனை பார்க்க அதான் எவனுக்கோ அவளை பரிசம் போட்டுட்டாங்களே இனி எந்த சனியனை கட்டுனால் என்ன என்று சொல்லியவன் அப்படிலாம் இல்லப்பா என்றான்.
அப்போ சரினு தனது போனை எடுத்து கால் பண்ணியவர் மச்சான் தட்டு மாத்திக்கிற போல வரோம்னு பொண்ணு வீட்ல சொல்லிடுங்க.
இப்போ நமக்குள்ள முடிச்சிக்கலாம்.அதானால் சொந்த பந்தங்களை நிறைய கூப்பிட்டு வரலைனு சொல்லிடுங்க என்று போனை வைத்தர் சீதா ராதா சொன்னதெல்லாம் எடுத்து வச்சீங்கள் தானேனு கேட்க எல்லாம் தயாரா தான் இருக்கு மாமா என்றார்.
சரி பத்து மணிக்கு வேன் வந்துரும் அக்காளும் தங்கச்சியும் சீவி சிங்காரிச்சிட்டு கிளம்பிடுங்க.
தங்கச்சி கையில பொண்ணுக்கு வாங்குன நகைய காட்டி நல்லா இருக்கானு கேட்டுக்குங்க என்றவர் முத்து வடக்கால மடையை திறந்து வச்சிட்டு வந்துடு என ஆளுக்கொரு வேலையை ஒப்படைத்தார்.
எதேஏஏஏ தட்டு மாத்துரதா....!
இவங்க என்ன முன்னவே பேசி வச்சிக்கிட்டு நம்மை கூப்பிடுறாங்க போலவே என முணுமுணுத்தவன் அப்பா அண்ணனும் தாமரையும் இல்லையே?.
உனக்கு பொண்ணு பார்த்து பேசி முடிச்சதே அவன் தான் நீ போயி உன் மொகரைல இருக்க தாடி வழிச்சிட்டு வாடா.என்னமோ ராஜேந்திரன் போல நிக்கிற என்று சத்தம் போட்டார்.அப்பா நாங்களும் வரோம் தானே என்று செல்வி கேட்க... என்ன கழுதை கேள்வி இது?
நாத்தனார் முறை நீதானே பொண்ணுக்கு நகை போட போற.போ உம்மாகிட்ட கேட்டு அளவா நகைய போட்டுக்க போ என்றார்.
வளவனுக்கோ விழி பிதுங்கி போனது.
மாமா பழம்லாம் வந்துடுச்சி என்றவாறு வேலு வீட்டிற்குள் வந்தான்.சரி எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிக்குங்க. அங்க வந்து அது இல்லை இது இல்லனு பேச்சு வந்துது மனுசனா இருக்கமாட்டேன் சொல்லிட்டேன் என்றவாறு ரூமிற்குள் சென்றார்....
ச்சூஊஊஊ...
மழை பேஞ்சி விட்ட போல இருக்கு என்றவன் அத்தை கொஞ்சம் மோர் கொண்டு வாங்களேன் தொண்ட காயுது.
சிறிது நொடியில் சொம்பில் மோரோடு அங்கு வந்த ராதா இந்தா வேலு.எங்க அண்ணிய காணுமென்கும் போது பார்வதியும் அங்கு வந்தார்.
வாங்கண்ணி எல்லாம் எடுத்து வச்சிருக்கு ஒருவாட்டி நீங்க பாருங்களென்க...
அதுக்கென்ன இதோ வந்துட்டேன் என்றவர் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்து முடிக்க பழத்தை தான் காணும் என்றார்.
எம்மா அங்க பெட்டில இருக்கு கண்ணை தொறந்து பாரு என்ற வேலு டேய் சீக்கிரம் கிளம்பி வாடா என்க வளவன் முறைத்துக்கொண்டே மாடிக்கு போனான்.
வேலுக்கு மாமன் மகனை நினைக்க கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.வாயை திறந்து திருட்டு பயல் சொல்லலைனா என்ன செய்யவென்று தனக்குள் சொல்லியவன் கொலுசு சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க பாவாடை தாவணியில் வருபவளை பார்த்து மூச்சடைத்து போனான்.
என்னா இன்னைக்கு இவ இவ்வளவு அழகா இருக்காள்.
இது என்ன வழக்கமாக போடுற தாவணி போல இல்லையே என்று யோசனையோடு செல்வியை பார்க்க அவளும் படியில் இறங்கும் போது தன் மாமனை பார்த்துக்கொண்டே தான் வந்தாள்.
வேன் வந்துடுச்சி என்கும் முத்துவின் குரலில் சுதாரித்து திரும்பியவன் ஊப் எப்பா இங்க இருந்து ஓடிடுடா வேலு என தனக்குள் சொல்லிக்கொண்டான்.
யோவ் என்ன முழிச்சிட்டு நிக்கிற?
அதான் தேவி காவினு அந்த அக்கா நினைப்பில் திருஞ்சியே இதெல்லாம் எனக்கு தெரியாதென்று நினைச்சிட்ட போல என்க....
ஏய் எதுக்குடி அந்த பொண்ண பற்றி பேசுற என்று ஜான் பதற... ஓஓஓஓ தொரைக்கு அல்லு விட்டுருச்சோ என்றாள்.
அடியேய் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்துருவாங்கடி என்றவாறு அல்லியின் கையை எட்டி பிடிக்க...
யோவ் தள்ளுயா என்ன பண்ணுறயென்று அல்லி பதற வாயை மூடுடி என்றவாறு அல்லியை பிடித்து இழுக்க ஜான் நெஞ்சில் வந்து இடித்து நின்றாள்.
என்ன என்ன பண்ணுற என்று அல்லி தடுமாற ஒன்னும் பண்ணலடி என்றவன் பட்டென்று அவள் இதழில் முத்தமிட்டு அங்கிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு கதிர் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
அட திருட்டு பூனை...
இதுக்கு தான் இந்த திருட்டுதனமா என வெட்கப்பட்டு சிரித்தவள்,யாருக்கும் தெரியாமல் வந்தது போலவே அல்லியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
நீலகிரி..
அடுத்து என்ன பண்ணலாமென்ற யோசனையோடு தாமரை வீட்டிற்குள் வர அங்கிருந்த வேதாவை பார்த்தவள் அத்தையம்மா என்றவாறு ஓடிப்போய் அவரை கட்டிக்கொண்டாள்.
வேதாவோ சாதாரணமாக வா தாமரை நல்லா இருக்கியா என்க அவரின் அந்நியத்தனமான பேச்சே நெருடலை கொடுத்தது.
நல்லா இருக்கேன் அத்தை.நீங்க எப்படி இருக்கீங்களென்க எனக்கென்னமா மயிலா அண்ணன் மருது மற்றவங்களாம் இங்க நல்லா பார்த்துக்குறாங்க என்றவர் சரி நான் போய் பிரஷாகிட்டு வரேனென்று அவளிடமிருந்து விலகி கீழே இருக்கும் இன்னொரு அறைக்கு சென்று விட தாமரைக்கோ மூஞ்சில் அடித்த போல ஆனது.
வேதாவின் இந்த செயலே தன் தவற்றை தாமரைக்கு உணர்த்த குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.
அவளை கவனித்துக்கொண்டிருந்த கதிர் கண்ணை மூடி சரியாகிடுமென்று சொல்ல கண்ணில் நீரோடு தலையாட்டியவள் படியில் ஏறி மேலே செல்ல மருதுவும் மேலிருந்து கீழே இறங்கி வர என்ன பண்ணுவது என்று தெரியாமல் அவள் பின்பக்கமாவே படியில் இறங்கினாள்.
அம்மா கொஞ்சம் வேலையா வெளியே போறேன் மதிய சாப்பாடு வேண்டாமென்று சொல்லிவிட்டு மருது சென்றுவிட்டான்.
மாடியில் ஏறும் போது இதை காதில் வாங்கிய தாமரை இன்னும் எத்தனை நாளைக்கு என்னை பார்த்து நீ ஓடுறனு பாக்குறேன்டா என மனதிற்குள் நினைத்தவள் அங்கிருந்த பால்கனியில் நின்று சுற்றி பார்க்க தூரத்தில் வரும் உருவத்தை கண்டு உடல் விரைத்தது.
யாரை பார்க்க கூடாதென்று நினைத்தாளே அந்த உருவமே இந்த வீட்டை நோக்கி வருவது தெரிந்து
அவளையும் அறியாமல் பவி என உதடுகள் முணு முணுத்தது...!!
ஆன்ட்டி என்றவாறு உள்ளே வந்த பவியை பார்த்த மயிலா சொல்லுமா பவி என்க,தாமரை வந்துருக்காளென்று சொன்னாங்கள் அதான் அவளை பார்த்துட்டு போகலாமென்று வந்தேனென்றாள்.
ஓஓஓ... அப்படியா பாப்பா மாடிக்கு போயிருக்கு நீ உட்காருமா வருமென்க இருக்கட்டும் ஆன்ட்டி நான் போய் மேலே பார்க்குறேனென்றாள்.
அட இதிலென்ன இருக்குமா நீ செத்த நேரம் உட்காரு நான் பாப்பாவை வர சொல்லுறேன் என்றவர்,கதிரு மருமவளை கூப்பிட்டு வாய்யா என்க..சரி மா என்றவாறு படியில் ஏறி மேலே சென்றான்.
பவிக்கோ எத்தனை முறை வந்தாலும் இந்த பொம்பளை நம்மை இந்த ஹாலை தாண்டி உள்ளே விட மாட்டுறாளே.பாக்குறவங்க எல்லாம் மாடியில இருக்கும் ரூம்களையும் அலங்காரத்தையும் ஆஹா ஓஹோனு சொல்லி கடுப்பேத்துறாங்கள்.
ஒருமுறையாவது மேலே போய் இந்த காட்டான் அப்படி என்ன வீடு கட்டிருக்கானென்று பார்க்கலாமென்றாள் நந்தி போல யாராவது ஒருத்தர் இருக்காங்களென்று பெருமுச்சு விட்டவள் அந்த ஹாலை சுற்றி பார்க்க பார்க்க பொறாமை வந்தது.
அவசரப்பட்டு இந்த காட்டானை டைவர்ஸ் பண்ணிட்டோமோமென்று சில மாதங்களாக அவள் நினைக்காத நாளில்லை.
அதற்கு காரணம் அவளின் இரண்டாவது கணவன் தான்.வீம்புக்கு பணக்காரனென்று அவனை கட்டியதற்கு அவனால் வாங்கும் சம்பளத்தை தவிற வேறு வருமானத்திற்கு வழியில்லை.
எஸ்டேட் ஓனர் மகனென்று வந்து இவளிடம் சீன் போட இவளும் பேராசையால் மருதுவை டைவர்ஸ் பண்ண முடிவுக்கு வந்தாள்.
அவளின் தாத்தா பாட்டி எவ்வளவோ சொல்லி பார்க்க யார் பேச்சையும் பவி காதில் வாங்கவேயில்லை.விடாப்பிடியாக ஒரு வருடத்தில் டைவர்ஸ் வாங்கியவள் அடுத்த மாதமே கோலாகலாமாக இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொண்டாள்.
எஸ்டேட்டிற்கு மருமகளென்று ராஜ வாழ்க்கை வாழ கனவு கண்டவளுக்கு அவளின் மாமனார் மூலயமாய் இடி விழுந்தது.
நான் இருக்கும் வரைக்கும் நீ சாதாரண தொழிலாளியே என மகனிற்கு சொல்லியவர் அந்த வருமானத்திலே நீ குடும்பத்தை கவனிக்கணுமென்றும் உறுதியாக சொல்ல,ராணி போல் அதிகாரம் பண்ணி வாழலாமென்று கற்பனை பண்ணியவள் திருமணம் முடிந்த மறாவது வாரமே வேலைக்கு வர ஆரம்பித்தாள்.
இதற்கு இடையில் மருது தங்களுடைய வீட்டை இடித்து புது வீடு கட்ட பவிக்கோ அதை ஏற்கவே முடியவில்லை.
காதலித்தவளும் கிடைக்காமல் நம்மளோடும் வாழாமல் கடைசி வரையில் அவன் புழுங்கியே வேதனை படணும். இதுதான் அவனை காதலித்த என் மனதிற்கு ஆறுதலென்று நினைத்தவளின் எண்ணமோ நொருங்கியது.
சுற்றி இருப்பவர்களே மருதுவின் வீட்டையும் வீட்டில் உள்ள வசதி வாய்ப்பை பக்கம் பக்கமாய் பேச அதை பார்க்க வேண்டுமென்று பவிக்கு தோண வருஷமோ ஒன்று ஆனது இது வரை அவளால் அந்த வீட்டின் ஹாலை கூட தாண்டி அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.
கொலுசு சத்தம் கேட்டு மாடிப்படியை திரும்பி பார்க்க மகாராணி தோரணையோடு இறங்கி வருபவளை பார்க்க பார்க்க ஆத்திரமும் பொறிமையும் வந்தது.
வா பவியென்று தாமரை சொல்ல ஹாய் நல்லா இருக்கியா?நீ வந்துருக்கேயென்று ஸ்கூலுக்கு போகும் போது ஊர்காரவங்க பேசியது காதில் விழுந்தது அதான் வந்தேனென்றாள்.
ஹம் என்றவள் ஏன் நிக்கிற உட்காரு என்றவாறு அங்கிருந்த சோபாவில் உட்கார பவியின் கண்களோ தாமரையை உச்சியிலிருந்து பாதம் வரை எடை போட்டது.
ஹிஹிஹி என சிரித்தவள் இன்னும் இந்த டூப்ளிகேட் இயரிங்ஸ்தான் போடுற போலயென்க...
அதுவா என சிரித்தவள் இது அமெரிக்கன் டைமண்ட் நான் டிசைன் பண்ணியது பவி என்றாள்.