• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
533
கணவன் செய்த வேலையால் வாய்விட்டு கத்த முடியாமல் அவன் போன திசையை பார்த்து முறைத்தவாறு தாமரை நின்று கொண்டிருந்தாள்.

சிறிது தூரம் வண்டியில் சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க தாமரை இவனை முறைத்தபடி நிற்பது தெரிந்தது.

உள்ள போடி என்று கதிர் தலையசைக்க நீ வீட்டுக்கு வாயா என்று ஒரு விரலை நீட்டி தாமரையும் சொன்னாள்.

அவனோ உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல சைகை செய்ய அய்யோஓஓ என்றவாறு வீட்டிற்குள் ஓடியவளை பார்த்து சிரித்தவன் ஹப்பாடா நல்லவேளை அந்த சண்டிராணி கிட்ட இருந்து தப்பிச்சடா.

கையில மட்டும் நீ மாட்டியிருந்த கதிரு உனக்கு கைமா தான் என்று தனக்குள் சொல்லியபடி இருக்க,என்ன மருமவனே தானே பேசிட்டு இருக்கீங்களென்று அங்கு வந்த அத்தை முறை உள்ளவர் கதிரிடம் கேட்டார்.

ஹாஹாஹாஹ என்று சிரித்தவன் உங்க மவள் வந்துருக்காத்தை அதான் வீட்ல விட்டுட்டு வரேன் என்றவனுக்கு அப்படியா கண்ணு...சரிய்யா சீக்கிரம் என்னை பாட்டியாக்கு கண்ணு என்றவருக்கு சிரித்துக்கொண்டே சரித்தை.நான் போய்ட்டு வாரேனென்று அங்கிருந்து சென்றான்.

வீட்டிற்குள் வந்த தாமரைக்கு கணவனின் சேட்டைகள் சிரிப்பையும் வெட்கத்தையும் வரவைத்தது.பின்னர் பாட்டிகளோடு அவள் பேசியபடி இருக்க அம்மாடி என்கும் பார்வதியின் குரல் கேட்டவள் அம்மா என்று ஓடி போய் அவரை அணைத்துக்கொண்டாள்.

ஏத்தா வந்துட்டியா கண்ணு என்று மகளை கிள்ளி முத்தமிட்டவர் பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

நேரமும் கடந்து சென்றது...

களத்து மேட்டிற்கு வந்த கதிருக்கோ மனைவியின் மென்மையான தேகத்தின் நினைவுகள் அலைகழித்தது.

நெல்லு மூட்டை எடை போடும் இடத்தில் முத்துவும் பெருமாளும் நிற்க அவனோ அலைப்பாறும் மனதை நிலைப்படுத்த வரப்பில் இறங்கி உளுந்து விதைச்சலை பார்க்க சென்றான்.

ராட்சசி ரெண்டு வருஷமா அங்க இருந்து கொன்னாள். இப்ப கூட இருந்து கொல்றாளே என்று முணுமுணுத்தவன் இடுப்பில் சொருகியிருந்த போனை எடுத்து பொண்டாட்டி என்று சேவ் பண்ணியிருக்கும் நம்பருக்கு கால் பண்ணினான்.

மூன்றாவது ரிங்கில் அட்டென் பண்ணியவள் கிசுகிசுப்பாக சொல்லுங்களென்றாள்.

என்னடி பண்ணுற?.

ம்ம் பேசிட்டு இருக்கேன் என்றாள்.

ஓஓஓஓ....

யார்கிட்ட என்று கதிர் கேட்க,என் புருஷன் கிட்டதானென்று தாமரை சொல்ல,முதல் முறையாக அவள் வாயிலிருந்து உரிமையாக புருஷனென்று சொல்லியதை கேட்டவனுக்கு வானத்தில் பறப்பதை போல இருந்தது. ஆஹான்..என்றவன் புருஷன் கிட்ட போன்ல தான் பேசுவாங்களாடி?

நேர்ல பேச விட்டால் தானே என்று தாமரை சொல்ல... ஹம் முடியாது தான் என்றவன் எப்போ வீட்டுக்கு வரயென்றான்.

அதைக்கேட்டவளுக்கு கோவம் வந்தது.
என்ன கிண்டலா?.வந்து அரை மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள எப்ப வீட்டுக்கு வரேன்னு கேட்டால் என்ன அர்த்தம்?.நான் என்ன பாகிஸ்தான் பார்டர்லையா இருக்கிறேன்?.பக்கத்து தெருவில் தானே இருக்கிறேன் என்று தாமரை கோபமாக கேட்க,அதுக்கு கதிரோ இப்ப என்னடி கேட்டேன்.
எப்போ வரேனு ஒரு வார்த்தை கேட்டேன் அதுக்கு ஏண்டி இப்படி கத்துற என்றான்.

பின்ன கத்தாம என்ன பண்ணுவாங்க?
இன்னும் அப்பா அம்மாவை பாக்கல ரெண்டு பேரும் தேனூருக்கு ஏதோ வேலையா போயிருக்குறாங்களாம்.
வேலையில் இருந்து சிவா வரல அல்லி வரல என்று தாமரையும் தனது வீட்டினரை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் பேச அது கதிருக்கு நன்கு புரிந்தது.

மனைவியை சீண்டி பார்க்க எண்ணியவன்,ஏண்டி வளவன் வந்துட்டான் உன் தம்பி வராம எங்க போனான்.ஒருவேளை ஏதாச்சும் பொண்ணுக்கு ரூட்டு விடுகிறானோ என்று கதிர் மனைவியிடம் கேட்க என் தம்பி ஒன்னும் உங்களை போல கிடையாது என்றாள்.

அடியேய்...

நான் எத்தனை பேர் கிட்ட ரூட் விட்டேன் நீ வந்து விளக்கு வச்சிக்கிட்டு பார்த்த என்று கதிர் கேட்க...

ம்கும்...

ஒருத்தியை கரெக்ட் பண்ணி குடும்பம் பண்ண துப்பு இல்ல இவருக்கு எத்தனை பேராம்,இதில் நான் இந்த அய்யாவுக்கு விளக்கு பிடிக்கனும் என்றாள்.

மனைவியின் பேச்சைக் கேட்டவன் என்னடி எட்ட இருக்கிறேன்னு உன் இஷ்டத்துக்கு பேசுறியா என்று கேட்க நீங்க கிட்ட இருந்தாலும் அப்படித்தான் பேசுவேன்.உங்களால் என்ன பண்ணிட முடியும் என்று கேட்டாள்.

ஓஓஓஓ...என்ன பண்ண முடியும் என்று சொல்ல மாட்டேன்டி செய்து காட்டறவன்தான் உன் புருஷன் என்று சொல்ல...

அப்படியா மிஸ்டர் புருஷா...சும்மா வாய்சவடால்ல சொல்லாதீங்க செஞ்சு காட்டுங்க என்றாள்.

கதிர்வீடு:

அப்பு நல்ல இடம்யா உன்னை என்ன இன்னைக்கேவ கட்டி குடும்பம் பண்ண சொல்லுது,பேசி வச்சிப்போம். அடுத்த தையில முடிச்சிக்கலாம்யா என்று வள்ளி அப்பாயி சொல்ல, அப்பாயி என பல்லை கடித்தவன் அதான் இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றனே உனக்கு புரியலையா என்று கோபமாக கேட்க...

ஏன்டா கால்வா மண்டையா அந்த காரணத்தை தான் சொல்லி தொலையேண்டாணு வேலுவும் சொல்ல காரணம் கீரணம்லாம் ஒன்னும் இல்ல மாமா என்றான்.

சின்னப்பு என்று சீதா குரல் கொடுக்க நல்ல வேளை என்ன காப்பாத்துணியேம்மா என்று மனதிற்குள்ளே தனது அம்மாவுக்கு நன்றி சொன்னவன் வேகமாக கிச்சனிற்குள் சென்றான்.

இந்தாயா என்று அவனுக்கு பிடித்த இஞ்சி டீயை கொடுக்க அதை வாங்கி குடிக்கவும்,அவனை பார்த்தவர் அந்த நிலா பொண்ணை பாக்கலாமா என்க, வளவனுக்கு புரையேறியது.

பார்த்துய்யா என்று மகனின் தலையில் ராதா தட்ட சூடுமா என்றான்.

இருவரும் மகனை பார்த்து சிரித்து விட்டு சரி விடு உங்க தாத்தா பாத்துருக்கும் ராஜாங்கம் அண்ணா பொண்ணையே கட்டிக்க.

நம்ப வீட்டுக்கு அந்த புள்ள தான் மருமவளா வரணுமென்று ஆண்டவன் எழுதியிருக்கான் போலயென்ற சீதா,ராதா நான் போய் கறுவேப்பில்லை பரிச்சிட்டு வாரேன்.நீ பருப்பு வேக போடுடி என்று வெளியே சென்றார்.

வளவனுக்கோ என்ன சொல்வதென்று தெரியவில்லையே.

அய்யோஓஓஓ என்ன முடிவு பண்றது அய்யனாரே என்று மனதிற்குள் நினைத்தவன் டீயை குடித்துவிட்டு அங்கிருந்து மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்து கதவை தாழிட்டவன் தலையில் கை வைத்துக் கொண்டு அங்கிருந்து சேரில் உட்கார்ந்து கொண்டான்.


சரி சரி போனை வச்சுட்டு உருப்படியா வேலைய பாருங்க.எப்ப பார்த்தாலும் என்கிட்ட வழக்கு பண்ணாம என்றவள் அப்பா அம்மா வந்துட்டாங்க.

நான் அப்புறம் பேசுறேன் என்று சொல்லி கதிரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் போனை கட் பண்ணி விட்டு வெளியே வந்து பார்க்க...
அப்போதுதான் கவிதாவும் அன்பழகன் வீட்டிற்குள் வந்தவர்கள் தங்களது மூத்த மகள் அங்கு இருப்பதை பார்த்து தாமரை என்று இருவரும் அதிர...

அம்மா அப்பா என்று வேகமாக போனவள் இருவரின் கையையும் இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

தாமரை வந்துட்டியாயென்று கவிதா தனது நெஞ்சை பிடித்து கீழே உட்கார அதைப் பார்த்து மற்றவர்கள் ஐயோ என்னாச்சு என்னாச்சு என்று பதறினர்.

பார்வதியோ கவிதா என்னடி ஆச்சு உனக்கு என்று ஓடிவந்து தங்கச்சியை பிடித்தார்.அக்கா ஒன்னும் இல்ல ஒன்னும் இல்லக்கா என்றார்.

அம்மாடி தண்ணி கொண்டுவாயென்று சொல்ல தாமரை கிச்சனிற்குள் ஓடிப்போய் ஒரு செம்பிள் தண்ணி எடுத்துட்டு வந்து கவிதாவிடம் நீட்ட அதை வாங்கி குடித்தவர் எனக்கு ஒன்னும் இல்ல.

நல்லா தான் இருக்கேன் யாரும் பதறாதீங்க என்று சொல்லியவர் நான் பெத்த மவளே வந்துட்டியாத்தா என்று மகளின் முகத்தை இரண்டு கைகளாலும் தடவும் போது கவிதாவின் கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து ஓடியது.

அம்மா அம்மாயென்று தாமரை அழ...

ஏத்தா கவிதா...

புள்ளை கண்ணாலம் கட்டுன பொறவு மொத மொதலா ஊட்டுக்கு இன்னைக்கு தான் வந்துருக்கு.
வந்த புள்ளைவோகூட ஆசை தீர பேசுவியா அதை விட்டு இப்படி அழுறாயே இது நல்லாவா இருக்கென்று குப்பாயி ஆச்சி கேட்க...

தாமரைய பார்த்ததும் பதறிட்டேன் மா என்று கண்ணை துடைத்தவர் எப்போ வந்த கண்ணு? .நீ மட்டுமா வந்தெயென்று தனது அண்ணன் மகனை தேட மாமா தான் மா வந்து விட்டு போனாங்க. அங்க களத்துக்கு லோடு ஏத்த லாரி வந்துருக்குனு கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் போனாங்களென்றாள்.

சரி அங்க வினிதா அக்கா நல்லா இருக்காங்களா?என்று அன்புவும் கவிதாவும் விசாரிக்க நல்லா இருக்காங்கம்மா என்றாள்.

ஏத்தா எங்க மேல எதாவது கோவமா?

இந்த ரெண்டு வருசத்துல போனு வரும் போதுலாம் நீயானு பாத்து பாத்து கண்ணு பூத்துடுச்சி என்று அன்பு சொல்ல மன்னிச்சிடுங்கப்பா என்றாள்.

எங்களை விடு உனக்கு தாலி கட்டுன மனுஷனென்று ஒரு ஆள் இருக்கே அந்த பையனுக்காவது போன் பண்ணி பேசணுமா வேண்டாமா?

உன் சம்மதத்தோட தானே கல்யாணம் பண்ணியது?

இல்லை எங்க விருப்பத்திற்காக பண்ணிக்கிட்டியா தாமரை என்று அவள் அப்பா அன்பழகன் கேட்க தாமரையால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அப்பொழுது மாமா என்னும் கண்டனக்குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் திரும்பி பார்க்க கதிர் நின்று கொண்டிருந்தான்.

வாங்க மாப்பிள்ளையென்று அன்பழகன் சொல்ல மனைவியை முறைத்தவாறு உள்ளே வந்தவன் அங்கிருந்த சேரில் உட்கார்ந்தான்.

ஏய் கவிதா போய் சாப்பாட்டுக்கு ரெடி பண்ணுயென்று அவர் சொல்ல இருக்கட்டும் மாமா. வீட்ல படையல் போட கூப்டாங்களென்று சொல்ல ஓஓஓ என்றார்.

தாமரை கிளம்பலாம் என்க அவளுக்கு தான் என்ன பண்ணயென்று புரியவில்லை.

மாமா இன்னைக்கு ராவுக்கு நாங்க நீலகிரிக்கு போறோம்.வந்த பிறகு விருந்து வைங்க என்று சிரித்தவாறு கதிர் சொல்ல சரிங்க மாப்ளை.
அப்படியே செஞ்சிடுறோம். நல்லபடியாக ரெண்டு பேரும் போய்ட்டு வாங்களென்றார்.

கண்களாலே அனைவரிடமும் போய் வரேனென்று சொல்லிய தாமாரை கதிரோடு வெளியே சென்றாள்.
இருவரும் எதுவும் பேசிக்காமல் வீட்டிற்கு வந்து சேர அங்கு பூஜைக்கு எல்லாம் தயாராக இருந்தது.

இவர்களும் அங்கு வந்து நிற்க வள்ளி அப்பாயி சாமிக்கு தீபத்தை காட்டியவர் மற்றவர்களுக்கும் காட்டி விட்டு என்னைக்கும் இந்த குடும்பம் ஒன்றுமையாக இருக்க வேண்டுமென்று வேண்டினார்.

என்னங்கத்தை இந்த நேரத்தில் படையலென்று தாமரை கேட்க உங்க கல்யாண நாளுக்கு வருஷா வருஷம் பண்ணுறது தான் மா என்றார்.

ஓஓஓ என்றவள் கணவனை பார்க்க அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக மாடிக்கு சென்றான்.
சிறிது நிமிடம் கீழே இருந்தவள் அத்தை என்க,சொல்லுமா என்றனர்.

இல்லை புடவையை மாத்திக்கிட்டு சுடிதார் போட்டுக்கட்டுமா என்க,யாத்தே என்ற சீதா உன் புருஷன்கிட்ட கேளுத்தா.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
533
செல்வி கூட நம்ப வீட்டில் தாவணி தான் போடும் தெரியும் தானே என்கும் போது அம்மாடி தாமரை என்கும் முத்துவின் குரல் கேட்க...வரேன் மாமா என்று வெளியே போனவளை பார்த்தவர் ஏத்தா உன் அத்தைங்கதான் பொழுதன்னைக்கும் இந்த படுதாவை சுத்திட்டு இருக்காங்க. நீ படிச்ச புள்ளை நம்ப ஊடு பழைய பஞ்சாங்கமா இருக்க வேண்டாம். நாலு கிழமைக்கு ஏற்ற போல புடவைய கட்டு.

போ அதான் சுடிதாரு இருக்கே அதை போட்டுக்க என்க... தங்கச்சி மவளென்றதும் கொழுந்தனாருக்கு கரிசனை நீளுதோயென்று சீதா கேட்க...

அண்ணி என்று சிரித்தவர் நம்ப புள்ளைங்க நம்ப ஊட்டுல சுதந்திரமா இருக்கணுங்கண்ணி.

செல்வி இன்னொரு வீட்டுக்கு போற புள்ளை.அதை நல்லபடியா அங்க அனுப்பி வைக்குறவரைக்கும் பொறுப்பு நமக்கு.ஆனால் நம்ப மருமவளுங்க நம்ப ஊட்டு மகராசிங்கண்ணி என்றார்.

இந்த வியாக்கினத்துக்கு ஒன்னும் கொரச்சல் இல்லையென்று ராதா சொல்ல வேற என்னத்துக்குடி உன் புருஷனுக்கு கொறச்சல் சொல்லு பாக்கலாமென்று முத்து தனது மனைவியை பார்த்து கண்ணடித்து கேட்க...

விவஸ்தை கெட்ட மனுஷனென் மருமவள் மகனுங்க இருக்கும் போது சேட்டைய பாருயென்று சிரித்துக்கொண்டே சாப்பாட்டை பரிமாறினார்.

தாமரையும் படியில் ஏறி மேலே தங்களது அறைக்கதவை திறந்து உள்ளே வந்தவள் கணவனை தேட அவனோ பால்கனியில் நிற்பது தெரிந்தது.

மாமா என்றவாறு அங்கே போனவள் சாப்டலையா என்க பசிக்கலை என்றான்.

அவன் குரலில் உள்ள அனலே கோவமாக இருக்கிறான் என்பதை சொல்ல வேகமாக அவனிடம் நெருங்கி வந்து நின்றவள் என் அய்யனாருக்கு என்னாச்சென்று கதிரை பின்பக்கமாய் இருக்கி அணைத்தவாறு கேட்க...

அடியேய் என்று பதறினான்.

ஏய் என்னடி பண்ணுறயென்று அவளின் கையை பிடித்து முன்பக்கமாய் இழுத்தவன் மனைவியின் முகத்தை பார்க்க அதில் நாணம் தளும்பி நின்றது.

தாமரை என்று அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன் துடிக்கும் அவள் இதழில் தனது முரட்டு இதழை பதிக்க முதல் முறையா தன்னவன் கொடுத்த அதிரடியில் அதிர்ந்து போனாள்.

தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top