Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 531
- Thread Author
- #1
வேகமாக வந்து கோயிலின் வாசலில் வண்டியை நிறுத்தியவன் இறங்கி போடி.
போய் உருண்டு புரண்டு கும்புடு.
வேண்டும்ணா அவருக்கு துணையா பக்கத்திலே உட்கார்ந்துக்கடி என்றவன் தாமரை வண்டியில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து வேகமாக சென்றான்.
போகும் தனது மாமனை பார்த்தவள் இவருக்கு என்ன பைத்தியம் எதாவது புடிச்சிட்டா?
கோயிலுக்கு கூப்பிட்டது ஒரு குத்தமா என்று முணுமுணுத்தவள் சரி சாமியை முதலில் கும்பிடுவோமென்று அந்த செம்மண் பாதையில் நடந்து போனவளுக்கு கடைசியாக இந்த கோயிலுக்கு வந்த நினைவுகள் வந்து சென்றது.
சில அடி தூரத்தில் கடந்து வரும் போதே அங்கே குதிரையின் மேல் கம்பீரமாக இருக்கும் அய்யனாரை பார்த்தவளுக்கு அழுகை பொங்கி வந்தது.
வேகமாக ஓடி வந்தவள் அய்யாஆஆஆ
என் வேண்டுதல் படி நிறைவேற்றுனீரோ என் உசுரு இருக்கும் வரை உன்னை மறக்கமாட்டேன்யா என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
எவ்வளவு நிமிடம் அவரை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாளோ தெரியவில்லை.
அப்பொழுது யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டாலும் சாமியின் முகத்திலிருந்து அவள் தனது பார்வையை விலக்கவில்லை.
பூசாரியோடு வந்த கதிர் சித்தப்பா நீ பூசையை பண்ணு என்று அவர் கையில் பூசைக்கான பொருட்கள் உள்ள பையை நீட்டினான்...
சரிடா தம்பி என்றவாறு அதை வாங்கியவர் குதிரையின் மேல் கம்பீரமாய் இருக்கும் அய்யனாரை வணங்கிவிட்டு வாழை இலையை விரித்து அதில் பூசைக்கான பொருட்களை பரப்பியவர் தேங்காயை உடைத்து வைத்து சூடத்தை ஏற்றி அய்யனாருக்கு காட்டி விட்டு தம்பதிகளுக்கு காட்ட இருவரும் ஆரத்தி எடுத்துக் கொண்டனர்.
எங்கள் குலத்தை காக்கும் அப்பனே என் கனவை அடைஞ்சிட்டு வாழ்க்கையை தேடி மீண்டும் இங்கு வந்துருக்கேன். இந்த வாழ்க்கை எனக்கு என்ன வைத்திருக்கின்றதோ தெரியாது.எல்லாத்தையும் நீயே பார்த்துக்கைய்யா.என் மாமா கூட யாரும் வாழாத வாழ்வை நான் வாழணும்...நீயே அதுக்கு துணையா இருய்யா என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.
எம்மா தாமரை விபூதி எடுத்துக்கத்தா என்று பூசாரி சொல்ல கண்ணை திறந்தவள் அவர் முன்பு வலது கையை நீட்ட குங்குமத்தையும் விபூதியை கையில் எடுத்து போட்டவர் தீர்க சுமங்கலியா வாழுத்தா என்று சொல்லி அவள் நெற்றியில் விபூதியை பூசினார்.
மீண்டும் ஒரு முறை மனதார சாமியை வணங்கியவள் திரும்பி கணவனை பார்க்க அவனோ யார்க்கு வந்த விதியோவென தூரத்தில் இருக்கும் ஏரியை பார்த்தபடி நின்றான்.
அதற்குள் கோயிலை பூட்டி வெளியே வந்த பூசாரி,நல்லா இருக்கியாத்தா தாமரை என்க...
நல்லா இருக்கேன் மாமா.நீங்கள்,வீட்டில் அத்தை புள்ளைங்களாம் நல்லா இருக்காங்களா என்றாள். எல்லாரும் சுகம் தான் தா. இந்தா இதை போய் பெரியாத்தாகிட்ட குடு என்றவாறு கவரை நீட்ட சரிங்க மாமா என்றவளிடம் பார்த்து வீட்டுக்கு போங்க.
எலேய் கூப்டு போடா என்று கதிரிடம் சொல்ல சரி சித்தப்பா என்றவன் முன்னே செல்ல இவர்கள் இருவரும் அவன் பின்னே சென்றனர்.
சரிமா நான் கிளம்புறேனென்ற பூசாரி அவர் வண்டியில் ஏறி போக, கதிரும் அவனுடைய புல்லட்டில் உட்கார்ந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன் அடுத்து எந்த கோயிலுக்கு போகணும் சொல்லுடியென்று கேட்டான்.
நான் என்ன கோயில் கோயிலா கூழா ஊத்துறேனென்று சொல்லியபடி ஏறி உட்கார்ந்தவள் இப்போ பாருடா என்றவாறு கதிரோடு நெருங்கி உட்கார்ந்து அவன் இடுப்பை பிடிக்க....
யாத்தே.....
ஏய் என்னடி பண்ற கையை எடுடி. மனுஷன் வண்டியை ஓட்டுறதா இல்லையா என்று பதறினான்.
ஏன் நான் என்ன பண்ணுனேன் என்று தாமரை கேட்க என்னடி பண்ணலயென்றவன் வண்டி ரோட்ல போகணும்டி.நீ இப்படி இருந்தால் ஏரிக்குள்ள தான் போகுமென்க ஓஓஓஓ தொரைக்கு வாய் சவடால் மட்டும் தான் போல..மத்ததுக்கு ஒன்னும் லாயக்கில்லைனு இப்போ தானே தெரியுதென்று சொல்லியவள் சிறிது இடைவெளி விட்டு தள்ளி உட்கார..
எதேஏஏஏ லாயக்கில்லையா?என்னடி லந்தா?.உன் புருஷனை பற்றி இன்னும் தெரியலைடி தெரிஞ்சா இப்படி பேசமாட்ட என்றவனின் முரட்டு இதழில் அடக்கப்பட்ட சிரிப்போடு வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.
ஏனோ வரும் போது இருந்த இறுக்கம் இப்பொழுது கதிருக்கு இல்லை.
மாமா என்றாள்.
ம்ம் சொல்லுடி என்க...
எனக்கு தாமரை வேண்டுமென்க, ஏண்டி இந்த வசனத்தை நான் சொல்லணும் விதி நீ சொல்லுற..
யோவ் வில்லேஜ் மேங்கோ நான் தாமரைப்பூ வேண்டும்னு சொல்லுறேன் என்றாள்.
இப்போவா டி?
ஏன் இப்போ என்னவாம்?
நாள் நல்லா இல்லையா? என கோவமாக தாமரை கேட்க,அடி கூறு கெட்ட குப்பாயி.கோயிலுக்கு போய்ட்டு வந்து யாராவது குளிப்பாங்களா? என்றான்.
அட ஆமாம் இதை நான் யோசிக்கலையே என்றவளுக்கு அங்கு தான் மேல்மாடி காலியாச்சே பிறகு என்னத்தை யோசிக்க என்று சொல்லி சிரித்தான்.
இருவரும் அந்த வாக்கு வாத பேச்சை ரசித்தபடியே சிறிது நிமிடத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.அம்மாச்சி இதை பூசாரி மாமா கொடுத்தாங்களென்று வள்ளி அப்பாயிடம் பையை கொடுத்தாள்.
அப்பொழுது கதிரின் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்டு பாக்கெட்டில் இருந்ததை எடுத்து யாரென்று பார்த்து அட்டென் பண்ணியவன் சொல்லுங்கம்மா..
நல்லா இருக்கீங்களா என பரஸ்பரம் நலம் விசாரித்து பேசியவன் மனைவிடம் வந்து போனை நீட்ட யாரென்று யோசனையோடு ஹலோ என்றவள் அங்கு கேட்ட குரலில் ஆன்டிஇஇ என்க...
ம்ம்...
உன் போன் என்னாச்சி ஏஞ்சல்?.
போய் சேர்ந்துட்டேனு சொல்றது இல்லையா என்று விவி சத்தம் போட சாரிங்க ஆன்ட்டி.மிட் நைட் ஆச்சுனு வந்ததும் படுத்துட்டேன்.மார்னிங் பேசணுமென்று இருந்தேனா கோயிலுக்கு போய்ட்டு இப்போ தான் வந்தேனென்க...
ஹேப்பி அனிவர்சரி ஏஞ்சல் என்றவரிடம் மேலும் சிறிது நிமிடம் பேசிவிட்டு வைத்தாள்.
நேரமும் கடந்து சென்றது.
வளவனோ தூங்க போகாமல் ஹாலில் உட்கார்ந்து டீவியை பார்க்க வீட்டினரோ அவனை அதிசயமாக பார்த்தனர்.
நைட் ஷிப்ட் போய்ட்டு வந்தால் காலையில் சாப்பிட்டு படுப்பவன் இரவு உணவுக்கு தான் எழுவான்.
அப்படியாப்பட்டவன் தூங்க போகாமல் உட்கார்ந்திருப்பதை கண்ட பிரகாசம் தாத்தா தனது அருகில் இருந்த வேலுவிடம் என்னடா இவன் சங்கதி என்றார்.
ம்ம் காதல் தோல்வி தாத்தா என வேலு சொல்ல...
எதேஏஏஏ என்று அதிர்ந்தார்!!.
தாத்தாவின் அதிர்ச்சியை பார்த்தவன் உனக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி!
என்னமோ உன் பொண்டாட்டியை காதலிச்சு தோல்வியானவன் போல பதருற என்று கேட்டான்.
அடேய் கூறுகெட்ட பயலே என்னடா பேசுரயென்று வேலுவின் தலையில் பிரகாசம் தாத்தா தட்டினார்.
என்னை விடு முதல்ல..அந்த டி.ஆர் கதை என்னனு கேளு பெருசு என்றவனுக்கு இதோடா என்றவர் சின்னப்பு இங்க வாய்யா என்க,சொல்லு தாத்தா என்றவாறு அருகில் வந்து நின்றான் வளவன்.
ஏன்யா தூங்கலையா?