Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 616
- Thread Author
- #1
சீமக்கரை:
இரண்டாவது செமஸ்டரை எழுதி முடித்து வீட்டிற்கு வந்த மகளிடம் ஊருக்கு போவதற்கு நிலவன் டிக்கெட் போட்டிருப்பதை ராதா சொல்ல சரிமா என்றாள். பின்னர் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு மூவரும் அங்கிருந்து சீமக்கரைக்கு பயணமானார்கள்.
அதிகாலை தேனூர் பேருந்து நிலையத்திற்கு வர அவர்களுக்கு வளவனும் காரில் காத்திருந்தான் அவரிடம் நலம் விசாரித்துவிட்டு தம்பி தங்கை இருவரிடம் எப்படி பரீட்சை எழுதி இருக்க என்று கேட்க நல்லா எழுதிருக்கோம் ணா என்றனர்.
அண்ணா என்னை அங்கு வீட்டில் விடு என்க சரிடா என்றவன் அதே போல் அத்தை வீட்டில் தங்கையை இறக்கி விட்டு செல்ல,வாசல் கூட்ட வந்த பார்வதி கதவு திறக்கும் சத்தம் கேட்டு யாரென்று பார்த்தவர் செல்வி என்றார்.
நான் தான் த்தை..
எப்படி இருக்கத்தா என்க...
நான் நல்லா இருக்கேன் அத்தை நீங்க நல்லா இருக்கீங்களா மாமா நல்லா இருக்காரா என்க எல்லாரும் நல்லா இருக்கிறோம். என்னத்தா வரேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே என்க... பரீட்சை முடிந்து லீவு விட்டுட்டாங்க அத்தை அதனால் தான் நான் அண்ணன் அம்மா மூணு பேரும் கிளம்பி வந்தோம் என்றாள்.
அப்படியா சரித்தா சரித்தா சரி உள்ள போ வாசல் கூட்டிட்டு பால் கறந்துட்டு வருகிறேன் என்கவும் சரிங்கத்தை என்று லக்கேஜோடு உள்ளே போனவள் கதவை திறந்து பார்க்க அங்கே கணவன் நன்கு உறக்கத்தில் இருப்பதை தெரிந்தது.
சத்தம் இல்லாமல் போனவள் மாற்றுத் துணி எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு போய் குளித்து கபோர்டில் இருந்த புடவை சட்டை எடுத்து மாற்றிக்கொண்டு வர அதற்குள் பார்வதியும் சானம் தெளித்து வாசலை கூட்டி கோலம் போட்டிருந்தார்.
மருமகளாக வீட்டு வேலையை கையில் எடுக்க இருவரும் பேசிக்கொண்டே டீ போட்டு குடிக்க செல்வமும் எழுந்து வந்தவர் அங்கிருந்த மருமகளை பார்த்து நலம் விசாரித்தார்.
தம்பி எந்திரிக்கலையா என்க..வந்ததே நைட்டு இரண்டு மணிக்கு மாமா என்றார்.
அவ்வளவு நேரம் மாமா எங்கே போனாங்களென்று செல்வி கேட்க,
நம்ம வயல்ல நெல்லு மூட்டை எடை போடுவதற்கு லாரி லேட்டா தான் வந்துச்சு அது முடிச்சிட்டு தான் வந்தான் என்றார்.
சிங்கப்பூர்:
தாமரை செல்ல வேண்டிய பிளைட்டிற்கான அறிவிப்பு வந்ததும் மீண்டும் குழந்தைகள் இருவரையும் தூக்கி முத்தமிட்டவளுக்கு அழுகை வந்தது.வழியும் கண்ணீரோடு எல்லாரையும் பார்த்து தலையசைத்தவள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.
குழந்தைகள் இருவரும் அம்மா அம்மா என்று கூப்பிட தாமரைக்கு அந்த வலியை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
கண்ணை கூட துடைக்காமல் அவள் போக எதிரே வந்தவர்கள் அவளை பார்த்துக் கொண்டுதான் சென்றனர் அதையெல்லாம் அவள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அவளுக்கான சீட்டில் உட்கார்ந்து கொண்டவளுக்கு மனமெல்லாம் கணவன் குழந்தைகள் மேல தான் இருந்தது. மேலும் சிறிது நிமிடத்தில் மதுரையிலிருந்து சிங்கப்பூர்கான பிளைட் வானில் பறந்து சென்றது.
ஒன்பது மணி நேரம் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவள் மற்ற பார்மாலிட்டிஸை முடித்துக் கொண்டு தாமரை வெளியே வர அவளுக்காக அங்க லீலாவும் மாறனும் நின்றனர் இருவரையும் பார்த்து ஆனந்த அதிர்ச்சியில் அதிர்ந்து போனாள்.
தாமரையை பார்த்து உள்ளுக்குள் சுருக்கென்று ஒரு வலி வந்தாலும் அதை வழக்கம் போல் மறைத்துக்கொண்ட மாறனும் இயல்பாக அவளிடம் பேசினான்.
பின்னர் மூவரும் அங்கிருந்து விவி பேலசை நோக்கி சென்றனர்.போகும் வழியில் குழந்தைகள் மற்றவர்கள் பற்றி இருவரும் விசாரிக்க அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே வந்தாள்.
தாமரைக்காக வினிதாவும் அங்கு காத்திருந்தார் இரண்டு வருடங்களுக்கு பிறகு தனது அத்தையை பார்த்தவளோ இறுக்கமாக அணைத்துக் கொண்டதும் அழுகை வந்தது.
நான் நல்லா இருக்கேன் டா..
மாறன் என்ன ரொம்ப நல்லா பாத்துக்குறான் என்கவும் ம்ம் என்று தலையசைத்தாள்.
கொஞ்சம் ரெஸ்ட் எடு அப்புறம் பேசலாம் என்க சரியென்று மேலே இருக்கும் அவள் ரூம்கதவை திறந்து பார்க்க இரண்டு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ இன்றும் அதேபோலவே இருந்தது.
பின்னர் பெட்டில் படுத்தவளோ சிறிது நிமிடத்தில் தூங்கி விட்டாள்.
ஒரு வழியாக தூங்கி எழ காலை 11:00 மணியானது கொட்டாவி விட்டுக்கொண்டு கைகளை தூக்கி சோம்பல் முறித்தவள் கண்களை திறந்து எதிரில் பார்க்க அங்கே கதிர் உட்கார்ந்து இருப்பது போல் இருக்க என்ன மாமா பக்கத்துல இல்லணும் கனவில் வந்துட்டியா என்று சொல்லிக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்கு போனாள்.
பின்னர் குளித்துவிட்டு டவலோடு வந்தவள் அங்கிருந்த ஷோபாவில் கதிர் உட்கார்ந்து இருப்பது போல தெரிய என்ன இது?
கனவு இவ்வளவு நேரமாக இருக்கு என்று கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க அங்கே கால் மேல் கால் போட்டு கொண்டு சோபாவில் கைகளை நீட்டிக்கொண்டு கதிர் உட்கார்ந்திருந்தான்.
இது நிஜமா என்று வேகமாய் வந்தவள் கணவனின் கன்னத்தை தொட நிஜம் என்று உணர்ந்தவள் மாமா என்கவும் மனைவியை எட்டி இழுத்து அணைத்தவன் அந்த தரையிலே சரிந்தான்.
கணவனை விட்டு பிரிந்து இருந்தது வெறும் பத்து மணி நேரம்தான் அதற்குள் அவள் எவ்வளவு தவித்தாள் என்று அவள் தவிப்பை செயல்களில் உணர்த்த...
தனக்கான தேடல் மனைவியிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன் இறக்கை இல்லாமல் வானத்தில் பறப்பது போல சந்தோஷப்பட்டான்.
காதலோடு காமத்தை நிறைவாக கொடுத்தும் பெற்றும் மகிழ்ந்தவர்கள் மீண்டும் குளித்து பிரஷ் ஆகி கீழே வர அங்கே வினிதாவும் சீதாவும் குழந்தைகளோடு இருப்பதை பார்த்து சர்ப்ரைஸ் பயங்கரமா இருக்குங்க அத்தை..சொல்லவே இல்லையே என்று சொல்லிக் கொண்டே குழந்தைகள் இருவரின் முன்பு மண்டியிட்டு அணைத்தவள் எண்ணற்ற முத்தங்களை கொடுத்தாள்.
ஏண்டி என்னமோ பத்து வருஷம் பாக்காத போல இவ்வளவு சீன் போடுறியே என்று அந்த முத்தங்கள் தனக்கு கொடுக்கவில்லை என்று கடுப்பில் கதிர் சொல்ல கணவனை திரும்பி பார்த்தவள் எலி எதுக்கு அம்மனமா ஓடுதுனு தெரியாதா என்கவும் வினிதாவும் சீதாவும் சத்தமாக சிரித்து விட்டனர்.
தாமரை சிங்கப்பூர் வந்த விஷயத்தை எந்த காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்று வினிதா கறாராக சொல்லிவிட்டார் அதேபோல் அவளுக்கு வீட்டிலேயே ட்ரைனிங் கொடுத்தனர்.
குழந்தைகளும் கணவனும் பக்கத்திலே இருப்பதால் தாமரையும் தனது பேஷன் பரைடில் கவனத்தை செலுத்தினாள். அதோ இதோ என்று நாட்களும் வேகமாக ஓட,பேஷன் ஷோ நடக்க வேண்டிய நாளும் வந்தது.
நான் சீதாவை கூப்பிட்டு முன்னாடி போறேன் கதிர் மாறன் லீலா தாமரை பத்திரம் சரியான நேரத்துக்கு வந்துடுங்க என்று சொல்லிக்கொண்டு இன்னொரு காரில் குழந்தைகளோடு வினிதா ஏறி சென்றனர்
ரோசி இன்னைக்கு நான் தான் வின் பண்ண போறேன் என்று விக்டர் சொல்ல கண்டிப்பா அதுல சந்தேகம் இல்லை என்றாள்.
இன்னும் அவள் சிங்கப்பூருக்கு வரலையே ரெண்டு குழந்தைகளுக்கு மூக்கு சிந்தி ஆய் கழுவி விட்டுட்டு வீட்ல இருப்பா.நீ எதுக்கு தேவை இல்லாம டென்ஷன் ஆகுற இந்த முறை பெஸ்ட் டிசைனரா நீ தான் செலக்டாக போற என்று ரோசி சொல்ல சரிடி என்றான்.
மற்றவர்களெல்லாம் வந்து அரங்கத்தில் குழுவினர்.ஷோ ஆரம்பிப்பதற்கு இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது வினிதாவும் அப்போது தனது வாட்சைப் பார்த்துக் கொண்டிருக்க அவருக்கு எதிர்பக்கமாக உட்கார்ந்து இருந்த விக்டர் வினிதாவை பார்த்து இளக்காரமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
லீலாவின் மாமனார் மாமியார் அவர்களோடு சீதா குழந்தை வைத்து உட்கார்ந்து இருப்பதால் தாமரையின் குழந்தைகள் என்பது ரோசி-விக்டர் இருவருக்கும் தெரியவில்லை.
ஷோ ஆரம்பிப்பதாக ஆங்கரும் சொல்ல அங்கிருந்த டிசைனர்களின் மாடல்கள் ஒவ்வொருவராக அவர்கள் தயாரித்த ஆடையை போட்டுக் கொண்டு மேடையில் ஒய்ரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
எல்லாரும் ஆவளுடன் எதிர்பார்த்தது வினிதாவின் டிசைனர் தான்...
மற்றவர்கள் மாடல்கள் எல்லாம் அவர்கள் தயாரித்த உடையில் வந்து போஸ் கொடுத்து விட்டு செல்ல கடைசியாக வி வி பேஷன் என்கவும் யாரா இருக்கும் என்று விக்டரும் ரோசியும் எதிர் பார்க்க அங்கே மேடைக்கு வந்தவளை பார்த்து இருவரும் அதிர்ந்து போனார்கள்.
தாமரையோ இந்த முறை அவள் தயாரித்த ஆடைகளிலேயே அன்ன நடை போட்டு ஸ்டேஜிற்கு வந்து செல்ல அவளை பார்த்து சீதாவும் கதிரும் வாய் அடைத்துப் போனார்கள்.
ஒவ்வொரு உடையிலும் அவளின் அழகு மேலும் மேலும் மெருகேறிக் கொண்டே இருக்க அடுத்தது என்ன ஆடை போட்டுட்டு வருவா என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.மொத்தமாக எல்லா ரவுண்டு முடிந்த பிறகு கடைசியில் ரிசல்டிற்கான நேரமும் வந்தது .
விகடருக்கு புரிந்து விட்டது நிச்சயமாக இந்த முறையும் பெஸ்ட் டிசைனராக விவிக்கு தான் போகும் என்பது,ரோசியை கொலவெறியில் பார்த்துக் கொண்டிருக்க அவளும் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை சொன்னாள்.
பின்னர் ஜட்ஜ்கள் அவரவர் மார்க் டோட்டல் பண்ணி ரிசல்ட் அறிவிக்கிற ஸ்டேஜ் க்கு வந்தனர்.முதலில் பெஸ்ட் டிசைனர் விவி பேஷன் தாமரை என்கவும் அரங்கமே கைத்தட்டலில் குலுங்கியது.
அதன் பின்னர் பெஸ்ட் மாடல் அவார்டும் தாமரைக்கு கொடுக்க கதிருக்கு தனது மனைவியின் மேல் இருந்து பார்வையை அங்கே இங்கே திருப்ப முடியவில்லை.
இவ்வளவு திறமையான பெண்ணை இரண்டு வருடமாக வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கிறோம் என்று உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியும் இருந்தது.
அப்பொழுது தாமரை அங்கிருந்த ஜட்ஜிடம் ஏதோ சொல்லவும் சீதா பெருமாள் என்று மைக்கில் அலோன்ஸ் பண்ண தனது பெயரை சொல்கிறார்கள் என்று சீதா அதிர்ந்து போய் பார்க்க அத்தை வாங்க என்று தாமரை அங்கிருந்து கையசைத்தாள்.
உன்னை தான் மா என்று கதிர் சொல்ல தம்பி என்ன எதுக்குடா உன் பொண்டாட்டி கோர்த்து விட்டிருக்கா என்க... மேடைக்கு போ மா என்றான்.
இத்தனை பேருக்கு முன்னாடி ஸ்டேஜுக்கு வர ஒரு வித கூச்சம் இருந்தாலும் தைரியத்தை வர வைத்துக் கொண்டு சீதாவும் மேடைக்கு வர அப்பொழுது மைக்கில் தாமரையும் பேச தொடங்கினாள்.
பட்டுப் புடவைக்கு டிசைன் பண்ணியது தான் நான்.மத்தபடி என்னுடைய டிசைனர் சாரிக்கெல்லாம் ஆரி ஒர்க் எம்பிராய்டிங் டிசைன் பண்ணியது என்னோட அத்தை என்கவும் நான் போட்ட டிசைனா என்று சீதா அதிர ஆமாங்கத்தை என்றாள்.
அப்போ நியாயமாக இந்த அவார்டு என்னுடைய அத்தைக்கு தான் சேரனும் என்று சீதாவிற்கு கொடுக்க சொல்ல திஸ் இயர் பெஸ்ட் டிசைனர் அவார்ட் கோஸ் டு மிஸ்ஸஸ் சீதா பெருமாள் என்று அவருக்கு கொடுக்க கண்கள் கலங்கி ஒருவித உணர்ச்சி பிழம்பிலிருந்து அந்த அவார்ட் வாங்கியவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ஃபேமிலியே டிசைனர்ஸா இருக்கீங்களே என்று அங்கிருந்து ஆங்சர் கிண்டல் பண்ண என் மருமகள் அளவுக்கு நான் கிடையாது ஏதோ எனக்கு தெரிஞ்சதை கிறுக்குனேன் என்கவும் அம்மா இதுங்களா கிறுக்கல் என்று கேட்டனர்.
பின்னர் மற்ற டிசைனர்களையும் பாராட்டி விட்டு ஷோவும் முடிய இரவு உணவு அங்கேயே சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர்.
குழந்தைகள் இருவரும் தூங்கிவிட ஆளுக்கு ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு மேல் இருக்கும் அறைக்கு வந்தனர் சீதாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை