• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
614
அழுகையோடு வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு எழுந்தவள் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு இரவு விளக்கை மட்டும் ஆன் பண்ணிட்டு ரூம் கதவை திறந்து உள்ளே வர வேலுவே நெற்றியின் மேல் வலது கையை வைத்து படுத்திருப்பது தெரிந்தது.

இதுவரை ஒரு வாழ்த்துக்கள் கூட கணவனுக்கு சொல்ல மனம் வரலையா என்று நினைக்கும் போது இன்னும் அழுகை பொங்கி வந்தது.

கதவை தாழிட்டு விட்டு மாற்றுடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் போனவள் ஒரு குளியலை போட்டு வெளியே வந்தவள் லைட்டை ஆப் பண்ணிட்டு பெட்டில் வந்து படுத்தாள்.

கண்களை திறந்தவன் மனைவியை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டு தூங்க முயல,செல்வியோ கணவனிடமிருந்து திமிறினாள்.

அதை கண்டு என்னடி என்க,உள்ளுக்குள் இருக்கும் ஆத்திரத்தால் உங்களுக்கு படுக்கைக்கும் வீட்டு வேலைக்கு மட்டும் தான் நான் வேண்டும் இல்லையா என்கவும் அணைத்த கையை எடுத்தவன் எழுந்து போய் லைட்டை ஆன் பண்ணிட்டு மனைவியை பார்த்தவன் என்ன சொன்ன என்றான்.

கணவனின் கோவத்தை பார்த்தவளோ ஏன் சொன்னது காதில் விலையா?படுக்கையில் உங்களுக்கு சந்தோஷப்படுத்த மட்டும் நான் போதும் அவ்வளவு தானே என்றவள் போட்டிருந்த நைட்டியை கழட்டி எறிந்து விட்டு வாங்க உங்கள் தேவையை தீர்த்துக்குங்க..ஊர்ல இருக்கவங்களில் இருந்து தெரிந்த எல்லாரும் எனக்கு வாழ்த்துகள் சொன்னாங்க.கட்டுன புருசனுக்கு இந்த நிமிஷம் வரை ஒரு விஷ் பண்ண துப்பு இல்லை...

ஆனால் பொண்டாட்டி மட்டும் வேண்டும் என்று மனதில் இருந்ததை யெல்லாம் கொட்டி தீர்க்க...எதுவும் பேசாமல் அவளின் முன்னால் வந்தவன் பளார் பளாரென்று நாலு அறையை விட....பீரோவின் ஓரமாக போய் விழுந்தாள்.

இன்னொரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது வெட்டி புதைச்சிடுவேன்.என்னடி பேச்சு பேசுற நீ?

அப்படி என்ன உன்கிட்ட உடம்புக்கு நான் அலச்சிட்டு இருக்கேன் சொல்லு? கல்யாணம் பண்ணி இத்தனை மாசம் ஆகுது உடல் ரீதியாக உன்ன நான் கஷ்டப்படுத்தி இருக்கேனா இல்ல புருஷனா உன்கிட்ட அந்த உரிமையை நான் எடுத்து இருக்கேனா சொல்லு?
எல்லா மயிரையும் உன் மனசுக்குள்ள வச்சா எனக்கு எப்படி தெரியும் வாயை திறந்து சொன்னா தானடி தெரியும். உன் அண்ணா எங்க இருக்கிறான் சென்னையில் இருக்கிறான் அவனுக்கு போன் பண்ணி பாஸ் பண்ணிட்டேன்.
என்ன படிக்க ஆசைப்படுறேன்னு சொல்ல உனக்கு முடிந்தது உன் கழுத்துல மூணு முடிச்சு போட்ட பரதேசி பையன் நான் இருக்கிறேன் எனக்கு சொல்ல உனக்கு தோணல.

நானெல்லாம் ஒரு ஆளா இருந்தா தானே.உன் அளவுக்கு படிக்கல அதுக்கு நான் மனுஷன் கூட கிடையாதா சொல்லுடி என்கவும் அழுது கொண்டிருந்தவளோ அதிர்ந்து பார்க்க உன்னை பார்க்கவே எனக்கு புடிக்கல ச்சீஈஈஉ.

இனிமே உன்ன தொட்டுட்டேனா பாருடி என்று கதவை திறந்து வெளியே போனவன் மீண்டும் உள்ளே வந்து கபோர்ட்டில் இருந்து கவரை எடுத்து அவள் முகத்தின் மேலே தூக்கி எறிந்து விட்டு வெளியே போனான் அதிலிருந்து ஒரு பைலும் புது புடவையும் சிதறி விழுந்தது.

அந்த கவரை எடுத்துப் பார்க்க அதில் சென்னை மெடிக்கல் காலேஜில் படிப்பதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம், ஹாஸ்டலில் தங்குவதற்கான மற்ற பீஸ் டீடெயில்ஸ் எல்லாம் இருந்தது.

அவசரப்பட்டுட்டோமே என்று வெளியே வந்து பார்க்க மெயின் கதவு திறந்து இருப்பது தெரிந்தது ஓடி வந்து பார்க்க வேலுவோ தெரு முனையில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.

டேய் அயோக்கிய பையன் மவனுங்களா தூங்குங்க டா.என் பொண்டாட்டி கிட்ட ஆசையா கொஞ்சி பேச முடியல என்று குழந்தைகள் இருவரையும் கதிர் திட்டிக் கொண்டு ஊஞ்சலாட்ட...

மாமா என்று பல்லை கடித்தவள் தலையை பின்னி முடித்துவிட்டு வந்து கணவனின் தலையிலே நங்கு நங்கு என்று கொட்டியவள் பிள்ளைங்கள என்ன சொல்றீங்க என்று முறைக்க...

அப்புறம் என்னடி 24 மணி நேரமும் இவனுங்களே உன் கூட ஒட்டிக்கிட்டு இருக்கானுங்க புருசன்காரன் எனக்கு கொஞ்சமாச்சும் அனுமதி கொடுக்கணுமேடி...

உன் மகனுங்க வந்ததிலிருந்து கொஞ்சம் கூட நீ என்ன கண்டுக்கவே மாட்டேங்குற தெரியுமா நானும் மனுஷன் தான் என்று கதிர் கொஞ்சம் வருத்தமாக பேச இப்பொழுதுதான் தாமரைக்கும் கணவனின் மனநிலையை புரிந்தது.

மன்னிச்சிடு மாமா என்று கணவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் பிள்ளைகளை பத்திதான் யோசிக்கிறேன் தவிர உன்னை நான் யோசிக்கவே இல்ல மாமா.

அதுதான் தெரியுமே என்னைக்கு வயித்துல குழந்தை இருக்குன்னு தெரிஞ்சு அன்னைக்கு இருந்து நீ என்ன கண்டுக்கிறதே இல்லடி என்றான்.

மாமா அப்படியெல்லாம் சொல்லாதே நீ உன்னோட உசுரு உன்ன விட்டுட்டு நான் எங்க போயிடுவேன் சொல்லு ரெண்டு பேரும் ரொம்ப சின்ன குழந்தையா இருக்கிறாங்களே அதுக்காக தான் என்கும் போது போடி என்று மனைவியின் அணைப்பில் இருந்து விலக முயல...

அவளோ கணவனின் உதட்டோடு தனது உதட்டை பொருத்தியவள் அந்த மெத்தையில் சரிந்தாள். இப்பொழுது மனைவியின் செயலை தனதாக்கிக் கொண்டவன் அவளை இறுக்கமாய் தன்னோடு அணைத்துக் கொள்ளும் போது கதிரின் போனுக்கு கால் வரும் சத்தம் கேடக...

எந்த பரதேசி பய இந்த நேரத்தில் கால் பண்றான்னு தெரியலையே?

ரெண்டு நாதாரி பயல்ல ஒருத்தவனா தான் இருப்பான் என்று திட்டிக்கொண்டு மனைவியை அணைத்து பக்கத்தில் படுக்க வைத்தவன் எழுந்து போய் டேபிளின் மேல் இருந்த போனை எடுத்து பார்த்தவன் சொன்னேன்ல உன் அண்ணன் பரதேசி பையன் தான்டி கால் பண்றான்.

இந்த நேரத்துல எதுக்குடி எனக்கு போன் பண்றான் என்று திட்டி கொண்டு அட்டென்ட் பண்ணி சொல்லு நாயே என்கவும் அந்த பக்கம் வேலுவின் குரலை கேட்டவன் என்னடா ஆச்சு?

எங்க இருக்கிற என்க வேலு சொன்னதை கேட்டவன் சரி இரு நான் வரேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் செல்லம் என்னன்னே தெரியல மச்சானோட குரலே சரி இல்லை.காலையில் போனவன் டி இப்பதான் வீட்டுக்கு வந்து இருக்கான் நான் போய் பாத்துட்டு வரேன். நீ பிள்ளைங்கள பாத்துக்கோ வந்துடுறேன் என்கவும் சரி மாமா என்றாள்.

வேகமாக சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன் பால்கனி கதவை திறந்து அங்கிருந்த படியில் கீழே இறங்கி வர தெருமுனையில் இருக்கும் போஸ்ட் மரத்தில் வேலு சாய்ந்து கொண்டு நிற்பது தெரிந்தது.

வேகமாக நடந்து வந்தவன் வேலுவின் முகத்தைப் பார்த்து என்ன இவன் முகமே சரியில்ல ஏதாச்சு பிரச்சனையாக இருக்குமோ என்று யோசனையோடு பார்க்க என்ன மாப்பி தூங்கிட்டியா என்கவும் இல்லடா கோலம் போட்டுட்டு இருந்தேன் என்று கதிர் சொல்ல அப்படியா...சாணி தெளித்து போட்டியா இல்ல வெறும் தண்ணி தெளிச்சு கூட்டிட்டு கோலம் போட்டியா என்றான்...

"நக்கலடா

எருமை மாடு எங்க தான் டா போன போன் எடுத்து தொலையில என்கவும் ஒரு நல்ல விஷயமாக போனேன் என்று கதிரிடம் விஷயத்தை சொல்ல அதைக் கேட்டவனோ வேலு இப்படி ஒரு முடிவெடுப்பான் என்பதை எதிர்பார்க்கவில்லை.

என்னடா சொல்ற என்க..ஆமாடா ஆசைப்படுறாள் படிச்சிட்டு போகட்டுமே என்று கதிரை பார்க்க,அது நல்ல விஷயம் தான் மாப்பி.அதுக்குன்னு இவ்வளவு தூரம் அனுப்பி வைக்கணுமா அதை யோசி என்றான்.

நல்லா யோசிக்காம இருப்பேனா.நாலு வருஷம் தானே படிக்கட்டுமே கூட தான் அத்தையும் நிலவனும் இருக்கிறாங்கல்ல அப்புறம் எதுக்கு நம்ம கவலைப்படணும் என்க கதிரோ எதுவும் சொல்லாமல் தனது அத்தை மகனை அணைத்துக் கொண்டான்.

திடீரென்று தனது மச்சான் அணைப்பதை பார்த்து அட பரதேசி பயலே யாராச்சும் நம்ப ரெண்டு பேரும் கட்டிப்பிடித்து நிக்கிறதை இந்த நேரத்தில் பார்த்தால் தப்பா நினைக்க போறாங்கடா தள்ளி போடா நாயே என்று விலக்கி விட சிரித்துக் கொண்ட கதிர்,நீ எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட டா என்றான்.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் நேரம் ஆயிடுச்சென்று அவரவர் வீட்டை நோக்கி சென்றனர்.குழந்தைகள் இருவரும் தூங்கி விட தாமரையும் கணவனுக்காக காத்திருந்தாள்.
கதவை திறந்துட்டு உள்ளே வந்த கதிர் முழித்துக் கொண்டிருக்கும் மனைவியை பார்த்தவன் என்ன செல்லம் தூக்கம் வரலையா என்கவும் ஆமாம் மாமா..

என்ன ஆச்சு இப்படி பதறி அடிச்சுட்டு ஓடுன என்று கேட்க பின்னர் வேலு சொன்ன விஷயத்தை தாமரையிடம் கதிர் சொல்ல இதுல வேற ஒன்னும் உள்குத்து இல்லையே மாமா என்றாள்.

எதுக்கு டி இப்படி சந்தேகப்படுறது என்று கதிர் முறைக்க சாதாரணமாக தான் கேட்கிறேன் சந்தேகம்லாம் இல்லையே என்றாள்.

அப்போனா சரி என்றவன் அப்புறம் வேற என்ன என்று குழந்தைகளை எட்டிப் பார்த்து கேட்க வேற என்ன படுத்து தூங்குங்க காலையில எனக்கு ஒரு ப்ராஜெக்ட் டிசைன் பண்ணி அனுப்ப வேண்டிய வேலை இருக்கு என்கவும் ஓ என்றவன் சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு லைட்டை ஆப் பண்ணிட்டு வந்து அமைதியாக படுத்திருந்தான்.

சிறிது நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருக்க ஓய் என்னடி தூங்கிட்டியா என்கவும் ஆமாம் தூங்கிட்டேன் என்றாள்.

அப்படியா நிஜமாகத்தான் தூங்கிட்டியா என்று கதிர் கேட்க ஆமாம் மாமா நிஜமாலே தூங்கிட்டேன் என்று தாமரை சொல்ல அது எப்படி நான் பக்கத்துல இருக்கும்போது நீ தூங்கலாம் என்று சொல்லிக் கொண்டே மனைவியை இறுக்கி அணைத்துக் கொண்டவன் இப்போ உடம்பு பரவால்லையா செல்லமென்க...

எனக்கு ஓகே மாமா பெட்டர் தான் என்றாள்.அப்படியா கை கால் வலி இடுப்பு வலி முட்டி வலி அந்த வலி இந்த வலி ஏதாச்சும் இருக்கா என்க இல்லையே நார்மலா தான் இருக்கிறேன்.

இருந்தா வலிக்குதுன்னு சொல்ல போறேன் என்கவும் அப்ப அடுத்த பிராசஸ ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான் என்றவாறு மனைவியின் இதழில் புதைந்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
614
கதவு திறந்திருப்பதை பார்த்தவாறு உள்ளே வந்த வேலு அங்கே அழுது கொண்டிருப்பவளை கண்டு கொள்ளாமல் ரூமுக்கு போனவன் லைட் ஆஃப் பண்ணிவிட்டு பெட்டில் படுத்து விட்டான்.

அழுது கொண்டிருந்தவளோ கதவை சாத்திவிட்டு ரூமிற்கு வர ஒரே இருட்டாக இருந்தது தட்டு தடுமாறி பெட்டில் ஏறி படுத்தவள் மாமா என்று கூப்பிட ஒழுங்கு மரியாதையா படு என்றான்.

சாரி மாமா என்று வேலுடன் நெருங்கி படுக்க செல்வி ஒழுங்கு மரியாதையா தள்ளி படுனு சொல்லிட்டேன் தயவு செய்து இனிமே என்னை தொடாதே நீ தொட்டாவே எனக்கு அருவருப்பா இருக்கு என்றான்.

இப்படி ஒரு வார்த்தையை தனது கணவனிடம் எதிர்பார்க்காதவளோ அதிர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள். தாய் தகப்பன் பக்கத்தில் இருந்தாலும் வேலுவோ செல்வியை இடித்துக் கொண்டுதான் எப்பொழுதும் உட்கார்ந்திருப்பான்.

அவளே சொல்வாள் அத்தை மாமா இருக்காங்க ஏன் மாமா இப்படியென,யாரு இருந்தா என்னடி என் பொண்டாட்டி கூட நான் இருக்கிறேன் என்று சொல்லும் அப்படிப்பட்டவன் இப்படி ஒரு வார்த்தை சொல்லவும் உடைந்து போனவள் தேம்பி தேம்பி அழுக வேலு கண்ணை மூடி சிறிது நேரம் அமைதியாக ஏதோ யோசித்தவன் பின்னர் அவனை மறந்து உறங்கி விட்டான்.

இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டிருந்தவளோ விடியற்காலை தான் கண்ணசைந்தாள்.

வழக்கம்போல் எழுந்தவனோ பக்கத்துல ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட கண்டுகொள்ளாமல் பிரஷ் ஆகிவிட்டு வெளியே வர அங்கே பார்வதியும் செல்வம் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.

மருமகள் இன்னும் எழுந்து வரவில்லை என்பதை பார்த்து உடம்பு கிடம்பு சரியில்லையோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவர் ஆனால் எதுவும் கேட்கவில்லை.

அப்பாடி டீ எடுத்துட்டு வரட்டு மா என்க குடுமா என்றபடியே தந்தையின் அருகில் போய் உட்கார்ந்திருந்தான்.அப்பா ஒரு விஷயம் சொல்லனும் என்கவும் சொல்லுப்பா என்றார்.

செல்வியை படிக்க வைக்கலானு இருக்கேன் என்கவும் நல்ல விஷயம் தானே தாராளமா படிக்கட்டுமே என்க.. அவளுக்கும் நிலவனை போல டாக்டராக ஆசை ஆனால் அவ வாயை திறந்து சொல்லலப்பா. எனக்கு தெரியும் அதுக்கு தான் மதுரை வரைக்கும் போயி அதுக்கான ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வந்தேன் என்கவும் நல்ல விஷயம் தான் யா. பணம் எவ்வளவு தேவைப்படுதனு பாரு.

மேற்கொண்டு ஏதாச்சும் தேவைனா நம்ம நிலத்தை அடகு வைக்கலாம் என்கவும் அதெல்லாம் ஒன்னும் தேவைப்படாதுப்பா.அவதான் நல்ல மார்க் எடுத்திருக்கிறாளே.ஸ்கூல்ல இரண்டாவதா வந்துருக்காள்.

மெரிட்டில் சீட்டு கிடைக்கும் கவுன்சிலிங் போடுவாங்க அவள் மார்கிற்கு ஏற்ற போல காலேஜ் கிடைக்கும்.நிலவன் காலேஜ்ல கிடைக்க 90% வாய்ப்பு இருக்குப்பா என்றான்.

அப்புறம் ஹாஸ்டல்ல தங்க வைக்க போறதில்ல ராதா அத்தை கூட தான் அங்கு ஒரு வீடு பார்த்து தங்க வைக்கலான்னு யோசனையாக இருக்கிறேன். நீ என்னப்பா சொல்ற என்க ரொம்ப நல்ல விஷயம்.

நிலவனும் ஹாஸ்டல்ல தானே தங்கிருக்கான் மூணு பேரும் ஒரே இடத்தில் இருக்கிறது நல்லது தானே சரி மச்சான் கிட்ட பேசி பார்க்கலாம் அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ என்க...நீயே மாமா கிட்ட பேசுப்பா என்க அதைவிட எனக்கு வேற வேலை என்னயா என்றார்.

என்னம்மா நீ எதுமே சொல்லாம அமைதியா இருக்குற என்கவும் எனக்கு சந்தோசம் தான் கண்ணு என் மருமக டாக்டர் என்று நானும் பெருமையா சொல்லிப்பேன்.

தாராளமாக படிக்கட்டும். என்ன தூரமா இருக்கே அதான் யோசனை என்றார்.அப்புறம் மா பேரபிள்ளை கொஞ்சணும் கிஞ்சணுமென்று நாலு வருஷம் வரைக்கும் வாயை திறகாககூடாது என்று கொஞ்சம் கடுமையாக வேலு சொல்ல...

ஐயா என் மருமகள் சின்ன புள்ளன்னு எனக்கு தெரியாதா அந்த அளவுக்கு அம்மா கெட்டவளா?? காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்கும்.நான் ஏன் அதெல்லாம் பத்தி கவலைப்பட போறேன் தூரமா இருக்கு அதுதான் கவலை வேற ஒன்னும் இல்லை என்றார்...

ஆமா பக்கத்துல இருந்தா மட்டும் நீ என்ன பண்ணிடுவ என்கவும் இல்லை பா.ஏதாவது நல்லது பொல்லது செஞ்சா கொண்டு போய் கொடுத்துட்டு வரலாமேனு என்று பார்வதி சொல்ல...

யம்மா அவ டாக்டருக்கு படிக்க போற என்னமோ ஸ்கூல் ஹாஸ்டல்ல தங்கூற போல பேசுற என்று முறைத்தான்.

அது இருக்கட்டும் வேலு என்ன இன்னும் செல்வி எந்திரிஞ்சு வரல உடம்பு சரியில்லைமா என்க, இவ்வளவு நேரம் எந்திரிச்சு உங்களோட வெட்டியா தான் பேசிட்டு இருப்பாளே..இரு போய் பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உள்ளே வர அங்கே செல்வியோ பீவரில் அனத்திக் கொண்டு படுத்திருப்பது தெரிந்தது

நல்லா தானே இருந்தா திடீர்னு எப்படி இவளுக்கு ஜுரம் வந்தது என்ற முணவிக்கு கொண்டு வெளியே வந்தவன் அம்மா அவளுக்கு ஃபீவர் அடிக்குது மா என்க...

தோட்டத்திலிருந்து சில மூலிகை செடிகளை பறிச்சிட்டு வந்து கஷாயம் வைத்தவர் எடுத்துக் கொண்டு போய் செல்வியை எழுப்பி குடிக்க கொடுக்க அவளும் கசப்பா இருந்தாலும் குடித்து முடித்து விட்டு படுத்து கொண்டாள்.

மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க செல்விக்கும் ஃபீவர் குறைந்து நார்மலாக எழுந்து நடமாடினாள் ஆனால் வேலு அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை இது தனது அப்பா அம்மாவுக்கு தெரியாமல் ரொம்ப கவனமாக பார்த்துக் கொண்டான்.

காலை சாப்பாடு எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது செல்வமும் வீட்டிற்குள் வர அவரை பார்த்தவர்கள் வா மச்சான் வாப்பா என்றனர். ஹம் என சிரித்தவரிடம் வா சாப்பிடலாம் என்க இப்பதான் செல்வி புட்டு அவிச்சது சாப்பிட்டு தான் வரேன் என்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்தார்.

மச்சான் டீயாவது குடியா என்று பெருமாள் சொல்ல, டீ மட்டும் கொடுத்தா ராதா என்கவும் சரி ணா என்று அவரும் சிறிது நிமிடத்தில் எடுத்து வந்து கொடுக்க குடித்துக் கொண்டு பொதுவாக பேசிக் கொண்டிருந்தனர்.

பெருமாளும் சாப்பிட்டு வர மச்சான் ஒரு முக்கியமான விஷயமா தான் பேசிட்டு போகலாம்னு வந்தேன் என்றார்.

சொல்லு மாமா என்ன விஷயம் என்க பின்னர் செல்வியை சென்னையிலிருக்கும் மெடிக்கல் காலேஜில் படிக்க வைக்க போறதை சொல்ல அதை கேட்டவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

செல்வத்தின் கையை பிடித்த பெருமாள் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல மாமா என்க...என் மருமவள் டாக்டரா இருந்தா எனக்கு பெருமை தானே..

சின்ன மருமவனும் அங்குட்டு தான் படிச்சிட்டு இருக்காரு.அவருக்கு அடுத்த வருஷத்தோட முடியுது அதுக்கப்புறம் செல்வி மட்டும் எப்படி தனியா ஹாஸ்டல்ல தங்க வைக்கிறது அதுதான் யோசனை..

என்ன பண்ணலாம் நீயே ஒரு வழி சொல்லு என்கவும் யோசித்து பார்த்த பெருமாள் சீதாவே இல்ல ராதா ரெண்டு பேர்ல யாராச்சு ஒருத்தங்களை வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்துவிடலாமா என்றார்.

நல்ல யோசனை தான் தங்கச்சிங்க என்ன சொல்றாங்கன்னு தெரியலை...யாராவது ஒருத்தர் இங்கு இருக்குறதை பார்க்கணும் என்று பெருமாள் கேட்க ராதாவும் சீதாவும் ஒன்னு கூடி பேசியவர்கள் பின்னர் ராதாவே போவதாக சொல்ல சரிமா அதுக்கு தேவையான ஏற்பாடெல்லாம் பண்ணுங்கள் என்றார்.

ரெண்டு மாதம் கடந்திருக்க கவுன்சிலிங்கில் செல்விக்கு சென்னை மெடிக்கல் காலேஜ்ல இடம் கிடைத்தது பின்னர் நிலவனிடம் பக்கத்தில் ஏதாவது வீடு வாடகைக்கு கிடைத்தால் பார் என்று சொல்லியிருக்க அதே போல் இரண்டு பெட்ரூம் கிச்சனோடு ஒரு பிளாட்டும் கிடைத்தது.

நல்ல நாளில் அந்த வீட்டில் பாலை காய்ச்சி அவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை இங்கிருந்து ஒரு மினி வேனில் எடுத்துட்டு போனார்கள்.

நாட்களும் ஓட கல்லூரி செல்லும் நாளும் வந்தது.செல்வியை அழைத்துக் கொண்டு எல்லாரும் சென்னைக்கு வந்தனர்.இப்பொழுதாவது மாமன் தன்னுடன் பேசுவான் என்று செல்வியும் காத்திருக்க,வேலுவோ அதற்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை நல்ல நேரத்தில் அவளை கல்லூரியில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

ஒருமுறையாவது தன்னவன் திரும்பி பார்ப்பான் என்று கண்ணீரோடு செல்வி திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு செல்ல, வேலுவோ எனக்கு என்ன விதியோ என்று போய்க்கொண்டு இருந்தான்.

இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி விட்டு எல்லாரும் ஊருக்கு வந்து வழக்கமாய் அவரவர் வேலைகளை பார்த்தனர். ஜானுக்கும் அல்லிக்கும் கல்யாணம் ஏற்பாடு ஆரம்பமானது.

அல்லியோ அங்கிருக்கும் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள்.பின்னர் ஒரு நல்ல நாளில் கிறிஸ்டியன் முறைப்படி இருவருக்கும் சர்ச்சில் கல்யாணம் நடந்தது.பின்னர் இந்து முறைப்படி அய்யனார் கோயிலில் பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு தாலியை கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டான்.

வேலு பகலில் வேலையில் தன்னை வருத்திக் கொண்டாலும் இரவு நேரத்தில் செல்வியின் நினைவுகள் வட்டாமல் இல்லை. ஒருமுறையாவது தன்னவன் கால் பண்ண மாட்டானா என்று அங்கே அவள் ஏங்கிப் போயிருக்க இவனோ பிடிவாதமாக பேசவே கூடாது என்று இருந்தான்.

கல்லூரியில் புது நண்பர்கள் கிடைக்க செல்வியும் ஓரளவுக்கு தன்னவன் கவலை இருந்தாலும் படிப்பில் கவனத்தை செலுத்தினாள்.நிலவன் அவளுடைய அண்ணன் என்று தெரிந்ததால் அவளுக்கு ராகிங்கோ மற்ற மாணவர்களால் எந்த பிரச்சினையும் இல்லாமல் போனது.

படிப்பிலும் கவனத்தை செலுத்தினாலும் தன்னவன் தன்னைத் தேடி எப்போ வருவான் என்று அவளும் காத்துக் கொண்டிருந்தாள்.

மாதங்களும் கடக்க தாமரை சிங்கப்பூருக்கு போக வேண்டிய நாட்களோ இன்னும் ஒரு வரமே இருந்தது.டிசம்பர் 25ஆம் தேதி அங்கு நடக்கும் பேஷன் ஷோவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் அதற்காக அவளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தாள்.

குழந்தைகளை விட்டுட்டு போக மனது வரவில்லை இருந்தாலும் அக்ரிமெண்டில் சைன் பண்ணியபடி போய் தானே ஆகணும் என்ன பண்ணுவது என்று உள்ளுக்குள் ஒரு பக்கம் வேதனையாக இருக்க மனைவியின் மனதை புரிந்தவனோ அவளுக்கு தெரியாமல் ஒரு ஏற்பாடு பண்ணியிருந்தான்.

குழந்தைகளுக்கு அப்பா அம்மா முகம் நன்கு தெரிந்து விட்டது. கதவு திறந்து இருந்தாலே போதும் இரட்டை பிள்ளைகள் இருவரும் மண்டி போட்டு வாசலுக்கு சென்று விடுவார்கள் அவர்களுக்காகவே வாசல் பக்கம் ஒரு கிரில் கேட் வைத்து எப்பொழுதும் அந்த கதவு சாத்தியே இருக்கும்.

தனது லக்கேஜ் எல்லாம் முதல் நாள் இரவே பேக் பண்ணிவைத்தவள் காலையிலே எழுந்து குளித்து நேரமாக அய்யனார் கோவிலுக்கு போய் சாமியை கும்பிட்டு வந்தாள்.

மனைவியை பார்த்து உள்ளுக்குள் சிரித்தாலும் அதை பெரிதாக காட்டிக் கொள்ளாமல் எப்பொழுதும் போல இயல்பாக இருப்பது போல் கதிர் இருந்து கொண்டான்.

இரவு எட்டு மணிக்கு அவளுக்கு மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்கான பிளைட் என்பதால் இங்கு இருந்து ஒரு மணிக்கு கிளம்பினால் சரியாக இருக்கும் என்று சீக்கிரமாகவே மதிய உணவு சமைத்து முடித்தனர்.

அவளை சாப்பிட வைத்து பூஜை அறைக்கு அழைத்துச்சென்று குங்குமத்தை அவளுக்கு பூசி விட்டனர் பெரியவர்களின் காலில் விழுந்தவள் நான் போயிட்டு வரேன் என்று குழந்தைகளை முத்தமிட்டு அங்கிருந்த சீதாவிடம் கொடுக்க மற்றவர்களே நல்லபடியாக போயிட்டு வாம்மா என்றனர்.

தொடரும்..
 
Active member
Joined
May 9, 2025
Messages
141
Though the boys are playful,kannum karuthum when it comes to their family.so nice 👍
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top