Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 614
- Thread Author
- #1
நேரமும் கடந்து கொண்டே இருந்தது வேலுவோ அவன் அறைக்குள்ளே அங்குட்டும் இங்குட்டும் நடந்து கொண்டிருந்தவன் இன்னும் இவ என்னதான் பண்றாள்?.மணி என்ன ஆகுது இன்னும் வரலையே என்று யோசனையோடு கதவை திறந்து வெளியே வந்து பார்க்க வீட்டில் யாரும் இருப்பது போல் தெரியவில்லை.
அடக்கடவுளே கிளம்பி அவங்க அப்பா வீட்டுக்கு ஓடிட்டாளா என்று பதறி அடித்து வந்தவன் ஹாலில் இருந்து முன்பக்கம் போய் பார்க்க அங்கே கேட் பூட்டி இருப்பது தெரிந்தது.
கேட்டு பூட்டிருக்கு மத்த யாருமே காணோம்.எல்லாரும் பின் வீட்டுக்கு போய் இருக்காங்களா என்று தோட்டத்து கதவின் அருகே வந்து பார்க்க அதுவும் வெளி பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருந்தது.
அய்யனாரப்பா இவ எங்க தான் போனா என்று புலம்பியபடியே நைட் வந்து தங்குனாளே அந்த அறையில் இருக்காளா என்று கதவை திறந்து போக அங்கு கட்டில் மேல் உட்கார்ந்திருந்தவளோ திடீரென்று கதவு திறக்கவும் பதறி அடித்து எழுந்தாள்.
மனைவியின் பயத்தை பார்த்த உடனே நான் தாண்டி எதுக்குடி இப்படி பயப்படுற என்றான். நீங்க நீங்க உங்களை யாரு இங்கு வர சொன்னா என்று பதட்டமாக சொல்லவும் என்ன பண்றது என் கிரகம் நீ அங்க வரணும் அதை விட்டுட்டு நான் தேடிட்டு இருக்கேன் என்று பல்லை கடித்தான்.
அது வந்து அது வந்து என்று கணவனை பார்க்க முடியாமல் வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டு செல்வி சொல்ல ஏய் வந்து சேருடி அங்கு என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றான்.
சிறிது நொடிகளில் சென்று என்ன பண்றது சிங்கத்தின் குகைக்குள் போய் தான் ஆகணும் என்று கண்ணை மூடி திறந்தவள் அங்கிருந்த பால் சொம்பை எடுத்துக்கொண்டு பொறுமையாக நடந்து வேலுவின் ரூமிற்கு முன்னால் போய் நின்று கதவில் கையை வைக்க திறந்து கொண்டது.
கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அங்கே உட்கார்ந்திருக்கும் தனது மாமனின் முன்னால் போய் நின்றவள் பால் சொம்பை நீட்ட...அதை வாங்கியவன் அங்கிருந்து டேபிளில் வைக்கவும் அவளுக்கு சொல்லிக் கொடுத்தது போல கீழே குனிந்து கணவனின் காலை தொட வேலுவோ எதுவும் சொல்லாமல் அமைதியாக அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மாமா இடுப்பு வலிக்குது சீக்கிரம் என்கவும் ஏண்டி உனக்கு எழுந்திருக்க தெரியாதா என்று கேக்க யோவ் கால்ல விழுந்தா ஆசீர்வாதம் பண்ணனும்னு கூட உனக்கு தெரியாதா மாங்கா மடையா என்பவளின் பழைய குணம் திரும்புவதை பார்த்தவன் ஓஓஓ இது வேற இருக்கு இல்ல...
பதினாறும் பெற்று அதோடு 16 புள்ள குட்டி சேர்த்தே பெற்று தீர்க்க சுமங்கலியாக பெருவாழ்வு வாழ்கடி என்க...முறைத்துக் கொண்டே எழுந்து நின்றவள் ஆசீர்வாதம் கூட உனக்கு பண்ண தெரியாத விளக்கெண்ணெய் என்று திட்டினாள்.
மனைவியை மேலிருந்து கீழ் வரை இமைக்காமல் பார்க்க வேலுவின் பார்வையோ செல்விக்கு ஒருவித குறுகுறுப்பை உண்டாக்கவும் வேறு பக்கம் திரும்ப நின்றவள் என்ன புதுசா பாக்குறீங்கள் என்று சொல்லும்போது அவளுக்கு வார்த்தைகள் வராமல் தடுமாறியது.
ஆனால் அவனும் தனது பார்வையை மட்டும் நிறுத்தவில்லை.மனைவியை அங்குலம் அங்குலமாக ரசித்தவன் செல்வி என்று கூப்பிட அந்த குரலில் இருந்த ஏதோ ஒரு உணர்வு அவளை திரும்ப வைக்கவும் மனைவியை நோக்கி இரண்டு கைகளையும் நீட்ட வேகமாய் வந்து அந்த கையில் அடைக்கலமானாள்.
இறுக்கமாய் மனைவியை அணைத்துக் கொண்டு அவள் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தவன் நீ பிறந்த அன்னைக்கு எங்க அம்மா சொல்லுச்சு வேலு உனக்கு பொண்டாட்டி பிறந்து இருக்கானு...அந்த நிமிஷத்தில் இருந்து உன் கழுத்துல தாலி கட்டுற நிமிஷம் வரைக்கும் உன்னைய மாமா பொண்ணா நான் பார்க்கவே இல்லடி என் பொண்டாட்டியாக பார்த்தேன்.
மனசுல நிறைய ஆசைகள் வந்துச்சு எல்லாரும் போலையும்..ஆனா சின்ன பொண்ணு படிச்சிட்டு இருக்கியே உன் மனசுல எந்த ஒரு தப்பான எண்ணத்தை விதைக்க கூடாதுன்னு என்னை நானே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தேன் தெரியுமா என்கவும் தனது மாமன் மனதில் உள்ளதை கேட்டு அதிர்ந்து போய் செல்வி நிமிர்ந்து பார்க்க அந்த இரண்டு குண்டு கண்களில் மீசை முடி குத்த முத்தமிட்டவன் 18 வருஷமா காத்துட்டு இருக்கு என்று தனது மனதை தொட்டு காட்ட செல்வியோ எதுவும் சொல்லாமல் மாமனின் கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என்கவும் சொல்லுங்க என்றாள்.அதாவது கொஞ்ச நாள் நமக்குள்ள தாம்பத்திய உறவு தள்ளி போடலாம்.
இப்படி தனது மாமா சொல்லுவான் என்பதை எதிர்பார்க்காதவளோ நிமிர்ந்து வேலுவை பார்க்க,இல்லடி இப்பதான் 12வது முடிச்சிருக்க அடுத்த வருஷம் குழந்தை குட்டி கூட நின்னாக்க எப்படி இருக்கும் 18 வயசு தானே ஆகுது இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே டி..
அதுவரைக்கும் இன்னும் அதிகமாக நம்ம லவ் பண்ணலாம் அதுக்காக மாமா சாமியார் போலதான் இருப்பாணு கனவு கூட காணாதடி.தாம்பத்தியத்தை தவிற மத்த எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்லி மனைவியை அணைத்துக் கொண்டே கட்டிலில் சரிந்தான்.
சம்பிரதாயபடி மறுநாள் இருவரும் மரு வீடு போயிட்டு வந்த இருவருக்கும் விருந்து வைத்து முடிக்கவும் வழக்கமாய் அவர்கள் நாட்களும் சென்றது.
மனைவியிடம் பல சேட்டைகள் செய்து தனது அப்பா அம்மா முன்னாடியே வேலு கரண்டி மத்து என செல்வியின் கையில் கிடைத்த பொருளால் அடி வாங்கவும் செல்வமோ மகனை பார்த்து சத்தமாக தினமும் சிரிக்க..என்னப்பா உனக்கு நக்கலா இருக்கா என்று கேட்கவும் இது எல்லாம் புதுசா நல்லா வாங்குடா என்பார்.
நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வாரங்களாய் கடந்து இரண்டு மாதங்கள் ஓடியது.ஒன்பதாவது மாதம் வரவும் ஒரு நல்ல நாளில் தாமரைக்கு சொந்தங்கள் சூழ வளையல் போட்டு அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கதிரோ மனைவியை அனுப்ப மாட்டேன் என்று இல்லாத அக்கப்போர் பண்ண தாமரைதான் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றாள்.
தனது வீட்டிற்கு வந்து எல்லாரும் பேசிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு கணவனின் நினைவாகத்தான் இருந்தது.சரி போன் பண்ணி பார்க்கலாமா என்று நினைத்தவள் கட்டில் மேல் இருக்கும் போனை எடுக்க போக ஓய் பொண்டாட்டி என்னும் குரல் ஜன்னல் வழியாக கேட்கவும் வேகமாய் திரும்ப அங்கே கதிர் நின்று கொண்டிருந்தான்.
வேகமாய் எழுந்தவள் ஜன்னல் அருகில் வந்து நின்று கொண்டு மாமா என்று கம்பி வழியாக கதிரின் கையை பிடித்தாள்.
இப்படி என்னை விட்டுட்டு வந்துட்டே இதெல்லாம் நியாயமா இருக்கா டி?நீ இல்லாம நான் எப்படி தூங்குவேன் சொல்லுடி என்கவும் இவ்வளவு நேரம் கணவனை நினைத்து கவலையாக இருந்தவள் இப்பொழுது முறைத்து பார்த்தாள்.
மனைவியின் பார்வையை உணர்ந்தவன் அதாவது நான் என்ன சொல்ல வரேனா டி உனக்கு கட்டுப்பிடித்து தூங்க முடியவில்லை என்பது தான் பெரும் கவலையா இருக்கு நான் அங்கு இல்லாதது உனக்கு கவலை இல்லை அப்படித்தானே என்கவும் அய்யோ செல்லம் நீயேன் டி இப்படி எல்லாம் தப்பா நினைக்கிற.
நீ இல்லாம ரூமுக்கு போகவே கடுப்பா இருக்குடி வா டி நம்ம வீட்டுக்கு போகலாம் என்கவும்,என்னய்யா விளையாடுறியா?.இன்னைக்கு தான் இங்கு வந்திருக்கிறேன் ஒரு சம்பிரதாயத்துக்காவது எங்கள் வீட்டில் இருக்கிறது இல்லையா என்க...எனக்கு தெரியாது டி.
இந்த விளக்கெண்ணெய் பேச்சு மயிருலாம் ஒன்னும் தேவையில்லை. நீ வா நம்ப வீட்டுக்கு போகலாம்.தலை பிரசவம் அப்பா வீட்டுல பாக்கணும்னு எந்த கிழட்டு சிறுக்கி தான் கண்டுபிடிச்சாளே தெரியல.அவ மட்டும் கையில கிடைச்சாள் குருத்து எலும்பிலே மிதிப்பேன் என்று திட்டி தள்ளினான்.
மேலும் சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு மனமே இல்லாமல் கதிர் அங்கிருந்து செல்ல தாமரைக்கும் கணவனை நினைத்து சிரிப்பாக இருந்தாலும் உள்ளுக்குள் கவலையாக தான் இருந்தது.
இப்படியே இரண்டு வாரம் சென்றது. கடந்த நான்கு நாட்களாகவே தாமரைக்கு வயிறு வலிப்பது போல் இருக்க கவிதாவிடமும் சொல்லி இருந்ததாள். சூட்டு வலியென்றவர் எல்லாத்துக்கும் தயாராக இருந்தார்.
புதன்கிழமை காலை வழக்கம்போல் தூங்கி எழுந்து குளித்துவிட்டு வெளியே வந்தவள் புடவை மாற்றிக் கொண்டு ஏதாவது குடிக்கலாம் என்று நினைத்து கதவை திறக்கும் போது அடி வயிற்றில் சுள்ளென்று வலி வரவும் வழக்கமாய் வந்த வலியை விடு இந்த வலி கொஞ்சம் வித்தியாசமாக இருக்க அம்மா வலிக்குதும்மா என்றாள்.
மகளை பார்த்த கவிதாவிற்கு பிரசவ வலி தான் போல என்பது புரிந்து சிவா சிவா சீக்கிரம் கதிருக்கு போன் போட்டு காரை எடுத்துட்டு வர சொல்லு என்கவும் சரிமா என்றவன் அதேபோல் தனது அக்கா புருஷனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல கதிரோடு ராதாவும் சீதாவும் வந்து விட்டனர்.
தாமரையை காரில் ஏற்றிக்கொண்டு தேனூரில் இருக்கும் ஹாஸ்பிடல் நோக்கி சொல்ல மற்றவர்களோ வண்டியில் வந்தார்கள்.
புயல் வேகத்தில் காரை ஓட்டுபவனை பார்த்த வேலுவோ காரை வழிமறித்து கதிரை வண்டியில் வரச்சொல்லி அவன் காரை ஓட்டினான்.
அரை மணி நேரத்தில் தேனூரில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர்.தாமரையை செக் பண்ணி பார்த்த டாக்டரோ இது லேபர் பெயின் தான். எப்படியும் இன்னும் நாலு இல்லை அஞ்சு மணி நேரத்தில் டெலிவரி ஆகிவிடும் என்றவர் அங்கிருந்த நர்சிடம் டெலிவரிக்கு அழைத்து போக அவளை ரெடி பண்ண சொன்னார்.
நேரமும் கடக்க தாமரைக்கு வலியும் அதிகமாகிக் கொண்டே போனது....
மூன்று மணி நேரம் கடந்திருக்க தாமரைக்கு சிவியர் பெயின் வரவும் அவளை ஓ. பி தியேட்டருக்கு அழைத்து போக கதிரோ அழும் மனைவியை பார்த்து கலங்கி நின்றான்.
உள்ளே போய் சில நிமிடத்தில் தாமரை பெருங்குரலெடுத்து கத்த வீலென்று குழந்தையின் சத்தம் கேட்டது. ஹப்பாடா என்று வெளியே இருந்தவர்கள் சந்தோஷப்பட மீண்டும் வீலென்று குழந்தை சத்தம் கேட்டது.
என்ன கதிரோட புள்ளை இப்படி அழுவுது என்று செல்வம் கேட்க அப்பனுக்கு ஏழு ஊர் வாய்.பிறகு புள்ளைக்கு சொல்லவா வேண்டும் பா என்று வேலு சொல்ல கதிரோ தனது மச்சானை முறைக்க சும்மா என்றான்.
கால் மணி நேரம் சென்று ஆப்ரேஷன் தியேட்டர் கதவு திறப்பது தெரிந்து ஆர்வமாக பார்க்க இரண்டு நர்ஸூங்கள் ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக்கொண்டு வர ரெட்டையா என்று சந்தோஷத்தில் கூச்சலிட்டனர்...
குடும்பத்தில் மூத்தவர்களான வள்ளி அப்பாயியும், கலா அப்பாயியும் இரண்டு குழந்தைகளை வாங்கியவர்கள் ஒரு சேர அய்யனார் அப்பா எங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறை வாரிசு கொடுத்ததுக்கு கோடான கோடி நன்றி என்று சொல்லிக் கொண்டு குழந்தையை நெஞ்சோடு அணைத்து கண்ணை மூடி சாமிக்கு நன்றி சொன்னார்கள்.
பின்னர் ஒவ்வொருத்தரும் குழந்தையை பார்க்க முதல்ல என்ன குழந்தை என்று பாருங்கள் என்று சிவசாமி தாத்தா சொல்லவும், ஆமா இதை நம்ம யோசிக்கவில்லை என்று என்ன குழந்தை என்று பார்க்க இருவரும் ஆண் குழந்தையாக இருந்தனர்.