• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
596
சீமக்கரை:

ஆமா இவரு தேனூர்ல இருந்து நடந்து எடுத்துட்டு வர்றாரு நேரமாவதற்கு...ஏன் மாமா பக்கத்து தெருவுல இருந்து வருவதற்கு ஒரு ரெண்டு நிமிஷம் ஆகுமா??

வயசு பையன் தானே நீ?

இல்லை கிழவனா என்றவாறு வேகமாக போய் வேலுவின் கையில் இருந்த மெழுகுவத்தியை பிடுங்கி கொண்டு வளவன் உள்ளார போக அட சண்டாள பாவி...வருங்கால தங்கச்சி புருஷன் என்கிற மரியாதை சுத்தமா கிடையாது இந்த வீட்ல எனக்கு என்று சொல்லிக் கொண்டே உள்ளே வர மரியாதை வேற கேடு இந்த நாய்க்கு என்று கதிர் சொன்னான்...

என்னை நாறடிக்கும் போது மட்டும் உனக்கு மூக்கு வேர்த்துடுமேடா என்று வேலு முறைக்க,என்ன செய்யறது உன் விதி எங்களுக்கு வாக்கப்படனும்னு இருக்கே மாப்பி என்று அத்தை மகனின் கழுத்தை பிடித்து நெரித்தான்..

டேய் ஏண்டா ஏன் விட்றா என்று சொல்ல மாமா என்ன பண்றீங்க என்று தாமரை அங்கிருந்து சத்தம் போட்டாள்..

சும்மா உன் அண்ணன் கிட்ட விளாடுறேன்டி என்கவும்,இதுதான் விளையாட்டா என்ற முறைக்க, அடேய் எங்களுக்கும் ஆளு இருக்குடா எடுடா கையை என்று தனது தங்கை புருஷனின் கையை தட்டி விட்டு உள்ளே வந்தவன் ஏன் தடிமாடு இப்படி கால்ல வெந்நீரை ஊத்தி குதிச்சுட்டு கிடந்த மெழுகுவத்தி வரலன்னு...

இப்போது என்னவென்றால் ஊஞ்சலில் உட்கார்ந்து இருக்கிறியே எருமை என்று சொல்லவும் குருட்டு மாமா அங்க கடிகாரத்தை பாரு...இன்னும் கால் மணி நேரம் இருக்கு 12 மணியாக என்று வளவன் சொல்ல எதேஏஏஏ கால் மணி நேரம் இருக்கா...அறிவு கெட்ட பயலே பின்ன எதுக்குடா இவ்வளவு பறந்த...

எல்லாம் ஒரு டைம் பாஸ்க்கு தான் என்று வளவன் சிரிக்க நன்னாரி பயலே எனக்குன்னு பெத்து போட்டு இருக்காங்களே அத்தைங்கள் என்று தனது மைத்துனர் இருவரையும் பார்த்து முறைத்தான்.

விதியின் சதி மாமா விதியின் சதி உன் குடுமி எங்க கையில தான் இருக்கு அதை ஒன்னும் பண்ண முடியாது நீ என்னதான் ஒட்ட வெட்டினாலும் அதில் ஆணி அடிச்சு கயிறு கட்டி எங்க கையில வச்சிருக்கோம் என்று வளவன் சிரிக்க கிராதகா....

இருக்கட்டும் டா என் தங்கச்சி நிலாவும் வருமில்ல...ரெண்டு பேரு கிட்ட விளக்கமாத்தை கொடுத்து உங்க ரெண்டு பேரையும் விலாச சொல்லல நான் அவங்களுக்கு அண்ணனே இல்லை என்கவும்...ஏன் தம்பி என்று பேரை மாத்தி வச்சுக்க போறியா என்று கதிர் கேட்க நான் மாத்தி வச்சுக்க போறதில்லைடா...உங்க ரெண்டு பேர் முகரையை கிழிக்கிறதை பார்த்து கைதட்டி சிரிப்பேன் என்றான்...

ஓஓஓஓஓ...என்ன மாமா பகல் கனவு காண்கிறீயா என்று வளவன் கேட்க இப்ப இப்படித்தான்டா இருக்கும் உன் கால்ல என் தங்கச்சி கட்டு போடும் அன்னைக்கு நொண்டி நொண்டிக்கிட்டு வருவல்ல அப்போ இருக்குடா என்றவன் ஏன்டா தாமரை படுத்து தூங்க வேண்டியது தானே...
பன்னெண்டு மணிக்கு இந்த மாடு எழுப்பிருப்பான் இல்ல...நான் தூங்கிட்டு தான் இருந்தேன் ணா. மாமா இப்பதான் எழுப்பி விட்டாங்க என்றாள்..

சரி சரி இந்த அளவுக்காவது உன் புருஷனுக்கு அறிவு இருக்கே அது எனக்கு சந்தோஷமா இருக்கு என்றபடியே அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்தவன் வேகமாக ஊஞ்சலாட்ட, ஆட்டாத மாமா சும்மா உக்காரு என்று பக்கத்தில் உட்கார்ந்து இருந்த வளவன் சொல்லவும்,ஏண்டா இது ஆடுறதுக்கு தாண்டா என் மாமா வாங்கி கொடுத்திருக்கிறாரு பின்ன பூச பண்றதுக்கா.

இதெல்லாம் நல்லா பேசு இன்னும் கொஞ்சம் சத்தமா பேசு அப்பா வரட்டும் என்று வளவன் முறைக்க சும்மா இருடா...இந்த நேரத்துல அந்த வெட்டரு வந்தார்னாக்க 40 பக்கத்துக்கு வசனம் பேசுவார் டா...

அது எப்படி தான் தம் கட்டி பேசுறாரோ எனக்கு ஆச்சரியமா இருக்குடா நம்மளால அப்படி பேசவே முடியல என்று தனது மைத்துனரிடம் வேலு சொல்லிக் கொண்டிருக்க பேச்சு சத்தம் கேட்டு ரூமில் இருந்த பெருமாளும் எழுந்து வந்து பார்த்தவருக்கு இதெல்லாம் அரைகுறையாக காதில் விழுந்தது.

ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்று நினைத்து என்னப்பா இன்னும் நீங்கள் தூங்கவில்லையா என்க...ஆத்தாடி என்று வேலு திரும்பி பார்க்க அங்கே பெருமாள் நின்று கொண்டிருந்தார்.

வேலு நீ என்னப்பா இங்க?.

அது ஒன்னும் இல்லைங்க மாமா நாளைக்கு செல்விக்கு பிறந்தநாள் இல்லையா கேக்கு வாங்கிட்டு வந்துருக்கான்...மெழுகுவர்த்தியை மறந்து என் வண்டியில வச்சுட்டு வந்துட்டான் அதை தான் எடுத்துட்டு வந்தேன் என்கவும், ஏப்பா அறிவு இருக்கா இல்லையா அதுக்குன்னு இந்த நேரத்துல போன் பண்ணி புள்ளைய வர சொல்றது...

காத்து கருப்பு வர நேரம் என்று தனது தங்கை மகனுக்காக பேசுவும்,மருமகன் மேல பாசம் பொத்துக்கிட்டு ஊத்துது என் அப்பனுக்கு என்று வளவன் பொறுமையாக சொன்னான்..

டேய் உங்களுக்கு அப்பாடா...ஆயிரம் தான் இருந்தாலும் எனக்கு தாய் மாமன் டா தாய்க்கு அப்புறம் இந்த நாய் மாமன் அடச்சை தாய்மாமன் உறவு தான் பெருசு..அதுக்கப்புறம் மேல தான் மத்த சொந்தங்கள் என்கவும் ராசா என் அப்பா போடுற பிளேடு போதும் நீ அறுக்காத எப்படியாவது அவரை ரூமுக்குள் அனுப்ப பாரு என்றான்.

ஏன் மாமா நாளைக்கு நீங்க பாளையங்கோட்டை வரைக்கும் போகணும்னு சொன்னிங்களே தூங்கலையா என்று வேலு கேட்க ஆமா வேலு நான் வேற அதை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்...லாரன்ஸ் காலையிலே போன் பண்றேன்னு சொல்லி இருக்கிறான் என்றவர் சரிப்பா பார்த்து முடித்துவிட்டு படுங்கள் என்று சொல்லிக்கொண்டு கதவை சாற்றி விட்டு உள்ளே போனார்...

அது எப்படி மாமா இவ்வளவு நல்ல புள்ளையா எங்க அப்பா கிட்டெல்லாம் பேசுறீங்க?டேய் உண்மையிலேயே உன் மாமா நல்லவன் தான்டா..இதை நானேவாடா சொல்லிக்கிறது நான் நல்லவன் நல்லவன் என்று...நீங்க தான்டா சொல்லணும் ..ஆனா நாதாரி பயலுங்க உங்க வாயில வரவே வராதுடா என்றான்...

அப்படி இருந்தாதானே நாங்க சொல்லுவோம் என்றபடியே வேலுவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்ட கதிர் அவன் முதுகில் ஓங்கி வைக்க ஏண்டா ஏன் ...

இது கையா இல்ல இரும்பா நீ அடிச்சு அடிச்சு என் முதுகு கூன் விழுந்திருச்சு பாரு...நாளைக்கு உன் தங்கச்சி பின்னாடி போனால் கூனன் போறான் கூனன் போறான்னு சொல்லுவாங்க டா...

இது யோசிக்க வேண்டிய விஷயம் தான் மாமா வேணும்னா தங்கச்சிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கட்டுமா எங்க..அட சண்டாள பாவிங்களா..என் வாழ்க்கைக்கா உல வைக்கிறீர்கள் நாதாரிங்களா என்று இரண்டு பேரின் கழுத்தையும் இரண்டு கையால் வளைத்தான்.. :

ஐயோ மாமா என்னய்யா பண்ற என்று வளவனும் டேய் லூசு பயலே என்று கதிரும் கத்தினர்...

ரெண்டு பேரும் எதுக்கு இப்படி காட்டு கத்து கத்துறீங்க??உங்க ரெண்டு பேரும் கழுத்தை அணைத்து தானே புடிச்சு இருக்கு என்று தாமரை கேட்க வேலு தங்கையை பார்க்கவும் கண்ணை காட்டினாள்...

இல்லை உங்க ரெண்டு பேரு கழுத்தைப் பிடித்து இறுக்கியதா என்க வேலுவும் அதே போல் இறுக்கினான்..

இல்ல உங்க ரெண்டு பேர் காலையும் அண்ணன் ஓங்கி மிதிச்சிதா என்கவும் அதேபோல் இரண்டு காலால் இரண்டு மைத்துனரின் காலில் ஓங்கி மிதித்தான்.

இல்ல ரெண்டு பேரும் தலையை முட்டிவிட்டதா?அதே போல் இருவரின் தலையை ஒன்றாக முட்டி விட, அய்யோ ஆத்தா பரதேவதையே போதும் போதும் நீங்க கேட்ட கேட்க உங்க பாசமலர் டி ராஜேந்தர் இங்க பண்ணிக்கிட்டு இருக்கிறார்...எங்களை பார்த்த பாவமா தெரியலையா போதும் தாமரை போதும் விட்டுடு ஆத்தா தெரியாம உன் அண்ணனை நாங்கள் சொல்லிட்டோம் என்று வளவன் அலறினான்.

அந்த பயம் இருக்கட்டும் மாமா எங்க அண்ணன பத்தி என்ன நினைச்சீங்க வீராத வீரன் சூராதி சூரன் பாசத்துக்கு மட்டும் தான் எங்க அண்ணா பனித்துளி போல அடிபணிந்து போகும் மற்றபடி எல்லாம் அர்னால்டு தான் என்கவும்,நானா டா தங்கம் அர்னால்டு என்று வேலு கேட்க நீயேதாணா என்றாள்..

என் தங்கச்சி சொன்னதால விடுறேன்.இல்லன்னா ரெண்டு பேர் தோலையும் உரிச்சு தொங்க விட்டுவிடுவேன் என்று சொல்லிக் கொண்டு மைத்துனர்களின் கழுத்தில் இருந்து தனது கையை எடுக்க ஆத்தாடி....

கையா மாமா இது என்ற வளவன் வேலுவின் கையை தூக்கி பார்க்க ஆமான்டா பிஞ்சு கை என்றான்...எதேஏஏ பிஞ்சு கையாஆஆஆ...இரும்புல போட்டு மிதிச்ச போல இருந்துச்சு..இங்க பாருயா கழுத்து எலும்பு ஒரு பக்கம் பொடச்சிகிட்டு நிக்குது என்கவும் அவன் சொன்ன விதத்தில் வேலுக்கும் தாமரைக்கும் சிரிப்பு வந்துவிட்டது..

அப்பொழுது கதிரின் நம்பருக்கு கால் வர இந்த நேரத்தில் யாரு என்று வேலு கேட்க சின்னவன் தான் டா போன் பண்றேன்னு சொல்லி இருந்தான்.
எப்படியும் நாம கேக் வெட்டுவோம் என்று தெரியும் இல்லையா என்கவும், ஓஓஓஓ மூணாவது சிவாஜி என்று வேலு சொல்ல, கதிரும் வளவனும் தனது அத்தை மகனை முறைத்துப் பார்த்தனர்.

மாமா இன்னும் இரண்டு நிமிஷம் தான் இருக்கு வாங்க நாம மாடிக்கு போகலாம் என்று தாமரை சொல்ல,சரி என்று கேக் பாக்ஸை எடுத்துக் கொண்டு நால்வரும் மாடிப்படி ஏறும்போது சீதாவும் ராதாவும் அவர்களோடு வந்து இணைந்து கொண்டனர்..

என்னத்தை ரெண்டு பேரும் தூங்கவில்லையா என்று வேலு கேட்க,எங்க புள்ளைக்கு பொறந்த நாளு நாங்க எப்படி தூங்குவோம் என்று கேட்டனர்..

அதுவும் வாஸ்தவம் தான் ரெண்டு பேரும் சேர்ந்து ஒத்த ராஜகுமாரிய பெத்து வச்சிருக்கீங்களே அப்போ உங்களுக்கு தூக்கம் வராது தான் என்றான்...

அதற்கு வளவனோ யோவ் மாமா பேச்சைக் குறை வளவளவென்று பானையில் போட்ட நண்டு போல பேசிட்டு இருக்குற முதல்ல கேக் வெட்ட விடு என்க..

ஏன்டா நான் என்ன கேக் வெட்டுற கத்தியை திருடிட்டு போயிட்டனா இல்ல உன் தங்கச்சிய தூக்கிட்டு போயிட்டானா என்கவும் வேலு என்று ராதா சொல்ல, ஒரு ப்ளோல வந்துடுச்சுங்கத்தை மன்னிச்சு மன்னிச்சு என்று காதை பிடித்துக் கொண்டு கேட்டான்..

யோவ் மாமா வாய வச்சிட்டு சும்மா வாயா இல்ல என் ரெண்டு அம்மாவும் சேர்ந்து உன்னை மொத்தி எடுத்துடும் என்று வளவன் சொல்ல எல்லா நேரம்டா என்று பல்லை கடித்தான்.

செல்வியின் ரூமின் அருகில் வந்தவர்கள் அம்மா நீங்க போய் கதவை திறங்கள் என்று சொல்ல,ராதாவும் சீதாவும் மகள் ரூமை திறந்து கொண்டு உள்ளே போக அங்கே செல்வியோ மெத்தையில் படுத்து நன்கு தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.

வாங்கப்பா என்று சொல்ல தாமரை இந்தா மெழுகுவர்த்தி ஏற்று என்று கதிர் சொல்லவும் சரி என்று அதே போல் செய்தாள்.பின்னர் ராதா போய் மகளை எழுப்ப, தூக்கத்தில் இருந்தவளோ என்னம்மா அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சு என்று கேட்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்லவும் அடித்து பிடித்து எழுந்தவள் அங்கிருந்த தனது வீட்டினரில் தன்னவன் தான் முதலில் கண்ணில் பட்டான்...

ஹாப்பி பர்த்டே டூ யூ என்று பாட்டு பாடி கொண்டு கேக்கை அவளின் முன்னால் கதிர் நீட்ட, சிரித்துக்கொண்டே அண்ணனிடமிருந்து கத்தியை வாங்கி கேக் வெட்டியவள் முதல் துண்டை எடுத்து தாமரைக்கு கொடுத்தவள் இது என்னோட மருமக பிள்ளைக்கு என்று சொல்லி சிரிக்க அவளும் சிரித்துக் கொண்டே வாங்கியவள் ஹாப்பி பர்த்டே என்று சொல்லிவிட்டு அவளுக்காக தயாரித்த புடவையை நீட்டியவள் இது உன்னுடைய பிறந்தநாளுக்கான கிப்ட் என்று சொன்னாள்...

தேங்க்யூ அண்ணி என்று சொல்லியவள் பின்னர் மற்றவர்களும் அவளுக்கு கேக் ஊட்டி விட்டு அவரவர் வாங்கிட்டு வந்த பொருட்களை கொடுத்தனர்.

கடைசியில் வேலு மட்டும் இருக்க யோ மாமா என்ன வேடிக்கை பார்த்து நிக்கிற...என் தங்கச்சிக்கு ஒன்னு கிப்ட் தான் வாங்கிட்டு வரல வாழ்த்துக்கள் சொல்லலாமே என்று வளவன் சொல்ல,போடா பன்னாட பயலே என்றவன் தனது பாக்கெட்டில் இருந்த நகை பெட்டி எடுத்தவன் அத்தை என்னோட வருங்கால மனைவிக்கு உங்கள் அனுமதியோடு போட்டுவிடலாமா என்று கேட்க, அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே தலையாட்டினர்.

மச்சான் என்க...போடா விளக்கெண்ணெய் என்றவன் அதிலிருந்த கைச்செயின் எடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வி என்று சொல்லவும் எல்லாருக்கும் முன்னாடி எதுவும் சொல்ல முடியாமல் தேங்க்யூ மாமா என்று செல்வி சொல்லவும் கையை நீட்டு என்றான்.

பரவால்ல கையில் கொடுங்கள் என்கவும் செல்வி என்று கதிர் அதட்ட பிறகு கையை நீட்டினாள். தன்னவளுக்காக வாங்கிய கைச்செயினை அவளின் கையில் போட்டுவிட்டு நறுக்கென்ற கிள்ளிவிட்டு எட்ட வந்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
596
இதெல்லாம் வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்த நிலவனும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா பாப்பா உனக்காக அண்ணன் கிப்ட் அனுப்பி இருக்கேன் அம்மா வாங்கி வச்சிருக்க காலையில கொடுக்கும் என்று சொல்ல...

போ....இந்த வருஷம் பர்த்டேக்கு நீ பக்கத்துல இல்லையென்று செல்வி வருத்தமாக சொல்ல நான் என்ன பண்றது சொல்லு?அடுத்த வாரம் செமஸ்டர் இருக்கு இப்ப வந்தாக அப்பா அடிச்சு துரத்துவார் உனக்கு தெரியாதா என்கவும் ஆமா ஆமா என்று சிரித்தவள் நல்லா எக்ஸாம் எழுதிட்டு வா ணா என்றாள்.

மேலும் சிறிது நேரம் வீட்டினரோடு பேசிவிட்டு போனை வைத்தான்.செல்வி படுத்து தூங்குடா என்று சொல்லிவிட்டு எல்லாரும் அங்கிருந்து வந்தனர் ..

எருமை மாடு இதுக்கப்புறம் வீட்ல போயி என்னத்த தூங்க போற...இங்கேயே படு என்று கதிர் சொல்ல பரவால்லடா நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்லிக்கொண்டு வேலு அங்கிருந்து சென்றான். .

செல்வியோ தன்னவன் போட்டுவிட்டு கைச்செயினையே தடவிப் பார்த்தாள். அதில் இதய வடிவில் இருக்க அதற்குள் ஒரு இதயம் அதற்குள் இரண்டு இதயங்களும் இணைந்து இருப்பது போல் இருந்தது....

வீட்டிற்கு வந்து படுத்த வேலுவோ தூக்கம் இன்றி தவித்தான் ஒரு வார்த்தையாவது மாமா கேக் சாப்பிடுங்கன்னு சொன்னாளா பாரு அண்ணனுங்க இரண்டு பேருக்கு மட்டும் முன்ன பின்ன பாக்காத போல வச்சு வச்சு தள்றா...

புருஷன் காரன் ஒருத்தன் இருக்கானே அவனுக்கு ஒரு துண்டு கேக் கொடுக்கவும் நினைச்சாளா பாரு சண்டாள சிறுக்கி...எனக்கு நேரம் வருடி அன்னைக்கு உன்னை பார்த்துக்கிறேன் என்று திட்டிக்கொண்டு கண்ணை மூடியவனுக்கு உறக்கம் தழுவியது. ..

நீலகிரி:

எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது நாளைக்கு தாமரைக்கு அஞ்சாவது மாசம் சாப்பாடு கொடுக்கிறார்கள்..

நானும் அக்காவும் போயிட்டு வரலாம்னு இருக்கிறோம் என்று மயிலா சொல்ல எனக்கும் வரணும் என்று தானுங்கத்தை ஆசையா இருக்கு..ஆனா இந்த நேரத்துல தான் டாக்டர்கள் ட்ராவல் பண்ண வேண்டாம்னு சொல்றாரு என்று செல்லா சொல்ல...அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்...

நீ உடம்ப பாத்துக்கோ முருகாயிகிட்ட சொல்லி இருக்கிறேன் வந்து கொண்டே இருந்தாலும் இருக்கும் என்று சொல்லும்போது வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டது.

இதோ ஆயிசு 100 என் நாத்தனாருக்கு என்று சொல்ல நான் போய் பார்க்கிறேன் அம்மா என்ற மருதுவும் போய் கதவை திறங்க அங்கே அவனது அத்தையும் மாமாவும் நின்றனர்.

வாங்கத்தை வாங்க மாமா என்று சொல்லு வரோம் பா நல்லா இருக்கீங்களா என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் வந்தனர்...

கையை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம் என்று சொல்ல அவர்களும் கை கழுவிட்டு வந்து உட்காரவும் செல்லாவே தனது அப்பா அம்மாவுக்கு பரிமாறினாள்..

என்னத்தா உடம்பெல்லாம் நல்லா இருக்கா என்க நல்லா இருக்கென்றாள்...

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் பின்னர். வாங்கிட்டு வந்த பொருட்களை எடுத்துக் கொடுத்துவிட்டு இது தாமரைக்காக செஞ்சு எடுத்துட்டு வந்தேன் நான் கொடுத்தேன்னு மறக்காமல் கொடுங்கள் என்று முருகாயி சொல்ல,கண்டிப்பா மா..
கொடுக்காமல் இருப்பேனா என்றார்...

இந்த வருஷம் வெயில்ல என்ன மண்டைய ரொம்ப பொளக்குது என்ற குப்பிளான் எங்க மயிலா மச்சான காணும் என்கவும் கோயம்புத்தூர் வரைக்கும் போய் இருக்கிறார் அண்ணா..

நம்ப எஸ்டேட்டில் முறம் வேணும்னு கேட்டிருந்தாங்க இல்ல அந்த லோடு டெம்போல ஏத்திட்டு போயிருக்காங்க சாயந்தரம் தான் வருவாரு எங்கவும் சரி சரி நான் காத்தாட படுக்கிறேன் என்றவர் வெளியே போக...

ரூமிற்குள் போய் படுங்க என்க நமக்கு என்ன பரவால்ல என்று அங்கிருந்த மரத்தின் நிழலில் துண்டை விரித்து போட்டு படுத்து விட்டார்...

நேரமும் கடந்து சென்றது..

ஏண்டி கொஞ்ச நேரம் தான் வந்து படுக்க வேண்டி தானா சொன்னா கேட்க மாட்டியா என்று செல்லாவை மருது முறைத்து பார்க்க....

ஆமா அப்படி என்னை தூங்க விட்டு தான் மறு வேலை பார்ப்பீங்க பாரு என்கவும் அவனும் சிரித்துக்கொண்டு நான் ஒரு அப்பாவிடி...உன்னை ஏதாச்சும் பண்றேனா என்க...

மாமா வாய மூடுங்க எனக்கு கோவம் வந்துரும் என்றாள்...


சிங்கப்பூர்:

என்னடா ரொம்ப இளைத்த போல இருக்க என்று மகளிடம் விஸ்வநாதனும் கோமதியும் கேட்க இது உங்களுக்கே ஓவரா தெரியலையா நான் வேற 2 கிலோ வெயிட் போட்டுட்டேன்னு உங்க மருமகன் சொல்றாரே என்றாள்...

பெத்தவங்களுக்கு தான் தெரியும் பிள்ளையோட அருமை என்றனர்.

சரி வாங்க இங்கேயே பேசிட்டு இருக்கோமே உள்ள போகலாம் என்று வீட்டிற்குள் அழைத்து போனவள் உட்காருங்கள் காபி எடுத்துட்டு வரேன் என்று கிச்சனுக்கு சென்று வேக வேகமாக காபியை தயாரித்து எடுத்துட்டு வந்து ஆளுக்கு ஒரு கப் கொடுத்தவளிடம் வினிதாவுக்கு எப்படி இருக்கு என்கவும் ஆன்ட்டி ரூம்ல படுத்து இருக்காங்கப்பா மெடிசன் கொடுத்து இருக்கேன்...

கோமதியோ கணவருக்கும் வினிதாவுக்கும் தனிமையை கொடுக்க நினைத்தவர் 29 வருடங்களுக்கு பிறகு இருவரும் சந்திக்கிறார்கள் மனம் விட்டு ஏதாவது பேசிப்பாங்கள்..அந்த இடத்தில் நாமும் மகளும் இருந்தால் அது நல்லா இருக்காது என்று நினைத்தவர் லீலா எனக்கு அப்படியே பக்கத்துல எல்லாம் சுத்தி பார்க்கணும் போல ஆசையா இருக்கு. உங்க அப்பாவுக்கு தான் ஷாப்பிங் பண்ணலாம் பிடிக்காதே,நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாமா என்று கேட்க தனது தாய்க்கும் இதுபோல சுற்றி பார்ப்பது பிடிக்கும்.

ஆனால் வினிதாவின் உடல்நிலை சரியில்லை என்பதை நினைத்தவள் எனக்கும் உங்க கூட வர ஆசைதான் ஆனால் ஆண்டி என்க...அதான் அப்பா இருப்பார் அவரை பற்றி தான் தெரியும் நல்லா கவனிப்பாரு என்கவும்,அது உண்மைதான்.

சரிங்கமா நம்ம போகலாம் ஆன்ட்டி எப்படியும் தூங்கி எந்திரிக்க இரண்டு மூணு மணி நேரத்திற்கு மேல் ஆகும் அப்ப எந்திருச்சாக்க பார்த்துக் கொள்ளுங்கப்பா.மெடிசனெல்லாம் அங்கே இருக்கு என்கும் மகளை பார்த்தவர் நான் பாத்துக்கிறேன் நீ உங்க அம்மாவை கூப்பிட்டு போ என்று மனைவி பார்த்தவர் கண்களாலே நன்றி சொன்னார்.

தலையை அசைத்த கோமதி பேசுங்கள் என்று சொல்லிவிட்டு மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றார்.

ஒருவித படபடப்போடு வினிதா இருக்கும் ரூமை நோக்கி விஸ்வநாதன் சென்றார்.இதோ அந்த ஹாலுக்கும் ரூமுக்கும் 10 அடி தூரம் தான் இருக்கும் ஆனால் நீண்ட தூரம் நடப்பது போல கால்கள் பின்னி எடுத்தது. .

தயக்கத்தை உதறி தள்ளிவிட்டு கதவைத் திறந்து உள்ளே போக அங்கே பெட்டில் மேல் படுத்திருந்த வினிதாவோ கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்ப அங்கிருந்த உருவத்தை பார்த்தவருக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது...

வினிதாவை பார்த்த விஸ்வநாதனும் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தார்.

விஷ்வா என்று வினிதா உதடுகள் முணுமுணுப்பது கேட்டு இந்த வயதிலும் விஸ்வநாதனுக்கு சிலிர்ப்பு வந்தது. .

வினி என்றவாறு போய் வினிதாவின் கால்களை பிடித்தவர் என்னை மன்னித்துவிடு மா...சூழ்நிலை காரணமாக தான் உனக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன் உன்னை ஏமாத்தணும்னு என்ற எண்ணம் சத்தியமா கிடையாது.

உன்னை தேடி நான் லண்டனில் அலைந்தேன் தாமரை சொல்லித்தான் நீ சிங்கப்பூர்ல இருக்க விஷயமே தெரிஞ்சது என்று இத்தனை வருடங்களாக தனது மனதில் பூட்டி வைத்த வேதனை எல்லாம் கொட்டி தீர்க்க தனது கால்களை கட்டிக்கொண்டு கதறி அழும் கணவனை இது நிஜமா என கண்ணீரோடு பார்த்தவர் ப்ளீஸ் விஷ்வா அழாதீங்க அழாதீங்க என்றார்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top