• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
583
நீலகிரி:

பொடிநடையாக நடந்து வந்த குப்பிளான் பள்ளிக்கூடத்தின் அருகில் வர இன்டர்வல் நேரம் என்பதால் பிள்ளைகள் அங்கே ஓடி ஆடி விளையாடுவது தெரிந்தது.

மகள் எங்கேயாவது தென்படுகிறாளா என்று கேட்டின் அருகே நின்று எட்டி பார்த்துக் கொண்டிருக்க அப்போதுதான் வெளியே வந்த செல்லா, தற்செயலாக வாசல் பக்கம் பார்க்க அங்கே தனது அப்பா நிற்கவும் வேகமாக நடந்து வந்து அப்பா என்றாள்.

ஆத்தா என்று அங்கிருந்த இரும்பு கேட்டின் இடைவெளியில் கையை விட்டு மகளின் கன்னத்தை தடவியவர் உடனே பார்க்கணும் போல இருந்துச்சு ஆத்தா, அதனால் தான் வந்துட்டேன் என்று சொல்லும்போது சந்தோஷத்தில் அவரின் கண்கள் கலங்கியது.

அப்பா நீங்க எப்ப வந்தீக?

இன்னும் இரண்டு பீரியட் தான் இருக்கிறது.அது முடிஞ்ச பிறகு நானே வீட்டுக்கு வரேன்.எதுக்குப்பா இந்த வெயில்ல நீங்க வந்தீங்க என்று தனது தந்தைக்காக செல்லா பேச...உன்ன விட வெயில் ஒன்னும் முக்கியமாத்தா.
மழை புயல் தாங்கின உடம்பு இது.என்ன ஆயிட போகுது உன் பிள்ளைகளை தூக்கி கொஞ்சினாவே போதும் பாதி வயசு திரும்பிடும் என்றார்.தனது தந்தைக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை கேட்டு அமைதியாக சிரித்தாள்.

பின்னர்,எப்படிப்பா தெரியும் என்க, மயிலா தான் போன் பண்ணி சொல்லுச்சு...நானும் உன் அம்மாகாரியும் வந்துட்டோம்.உன் ஆத்தா தலகால் புரியாம அங்க ஆடிக்கிட்டு இருக்கிறா என்று சிரித்துக் கொண்டே சொன்னவர் சரித்தா நான் வீட்டுக்கு போறேன் நீ பார்த்து பத்திரமா வா.இல்லை வெயிலா இருக்கு நீ வர வேணாம் சோறு நான் உனக்கு எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்க அப்பாவை பார்த்து சிரித்தவள் நான் வீட்டுக்கு வந்துடுவேன் பா.

மாமா தான் கூப்பிட வருமே என்கவும் சரித்தா சரித்தா. கொடை எடுத்துட்டு வந்தியா என்க சிரித்துக் கொண்டே இல்லப்பா என்றாள்.

என்னா வெயில் அடிக்குது குடை எடுத்து வராமல் வந்திருக்கிறாயே என்ன புள்ள நீனு நான் போய் எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்கும் தனது தந்தையின் அன்பை பார்த்து அவளுக்கு வழக்கம் போல் பிரமிப்பாக தான் இருந்தது.

காசு பணம் இல்லை என்றாலும் அன்புக்கு ஏழைகள் இடத்தில் என்றுமே பஞ்சமில்லை இல்லையே என்று மனதிற்கு நினைத்தவள் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா.

மாமா வந்துருவாங்க...

வரும்போது குடை எடுத்துட்டு தான் வரும் என்று சொல்ல சரி நான் போயிட்டு வரேன் நீ உள்ள போ என்றவர் திரும்பி ஒரு நிமிஷம் ஆத்தா என்று தனது இடுப்பு வேஷ்டியில் மேல் கட்டி இருந்த பச்சை வார் பெல்ட்டை திறந்தவர் அதற்கு உள்ளே இருந்த ஜிப்பை திறந்து அதிலிருந்த பொருளை எடுத்து மகளின் கையை காட்ட சொல்லி அதில் வைத்தார்.

செல்லாவும் அது என்னதுனு பார்க்க அதில் அம்மன் சிலை போட்ட தங்க காசு இருந்தது.இது எங்க அம்மாவோட அம்மா தன் குடும்பத்துல யாருக்கு மொத வாரிசு பொறக்குறாங்களோ அவங்களுக்கு கையில் கொடுத்து வைக்க சொல்லுவாங்க. இது அந்த மலையாத்தவே கூட துணைக்கு வந்த போல இருக்குமாம். எங்க அம்மாவோட அம்மாவுக்கு அப்புறம் எங்க அம்மா கிட்ட கொடுத்தாங்க.

எங்க அம்மா சாகும்போது என்கிட்ட கொடுத்துட்டு செத்துப்போனாங்க.அது இன்னைக்கு உனக்கு கொடுக்கிறேன் பத்திரமா வச்சுக்கோ போ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்தார்.

தனது தந்தையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.சிரித்துக் கொண்டே அதை துடைத்தவள் ஸ்கூல் உள்ளே செல்ல பெல் அடித்து அடுத்த பீரியட் ஆரம்பமானது.

....

ஏங்க முரளி தான் எஸ்டேட்டை நல்லா கவனிக்குறானே பொறுப்பை புள்ளகிட்ட ஒப்படைச்சிட்டு நீங்கள் ஓய்வெடுங்களேன் என்று சொல்லிய கோமதி டீ கப்பை கணவரிடம் நீட்டினார்..

மனைவியை ஒரு பார்வை பார்த்தவர் எனக்கு மட்டுமே ஆசையா சாகுற வரைக்கும் இப்படி நான் அல்லாட பட்டுக்கிட்டு இருக்கணும்னு?.
உன் பையனுக்கு பொறுப்பு வந்துடுச்சு ஆனா உன் மருமகளுக்கு இன்னும் பேராசை போகல கோமதி..அந்த பொண்ணோட சிந்தனை எண்ணம் ஆசை எல்லாமே பணம் மட்டும்தான் புரியுதா?

பணம் என்று வரும் போதும் நம்ப புள்ளைய தூக்கி எறிய கூட அந்த பொண்ணு தயங்காது மா...ஒன்னும் இன்று நேற்று அந்த பொண்ணை நான் பார்க்கல...

எத்தனையோ முறை நான் கவனித்ததில் பேராசை மட்டுமே இருக்கு...இந்த லட்சணத்தில் முரளிகிட்ட எல்லாவற்றையும் தூக்கி கொடுத்துட்டு நாம பிச்சை தான் எடுக்கணும் தெரியுமா?.

கணவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான கோமதி என்னங்க இப்படி சொல்றீங்க??நம்ம புள்ள ஒரு காலத்திலும் அப்படி விட மாட்டாங்க என்கவும் நம்ப புள்ள விடமாட்டான் தான்...ஆனால் அந்த பொண்ணு விடும் கோமதி...

நான் நிறைய விதத்தில் பாத்துட்டேன் அந்த பொண்ணோட ஆசை சொத்து மேல தான் இருக்கே தவிர மற்றபடி குடும்பம் கணவன் குட்டி அதில் கிடையாது. வந்து ரெண்டு வருஷம் ஆகுது இதுவரைக்கும் உனக்கு ஒரு நல்ல மருமகளா நடந்து இருக்கா சொல்லு பாக்கலாம் என்க அவரால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் கணவரிடம் விட்டுக் கொடுக்காமல் ஏங்க வேலைக்கு போற பொண்ணு நம்ம வீட்டுல தான் இத்தனை வேலைக்காரங்க இருக்காங்க என்றார்...

கோமதி எங்கப்பா இந்த எஸ்டேட் நிர்வாகிக்கும் போது நானும் வேலைக்கு தான் போனேன் நீ அப்படித்தான் இருந்தியா?.

நம்ம காலம் வேறு இந்த காலம் வேறு என்கும் மனைவியை பார்த்தவர் எத்தனை காலமானாலும் புருஷன் புருஷன் தான் பொண்டாட்டி பொண்டாட்டி தான் பொறுப்பு வரட்டும் தானாகவே நானே கொடுப்பேன் என்று சொன்னார்.

இதை எல்லாம் தனது ரூம் ஜன்னல் வழியாக காதில் வாங்கிய பவியோ தனது மேல் இப்படி ஒரு எண்ணம் இருக்கே...அப்ப நாம் நல்ல மருமகளா நடந்து கொள்ளவில்லையே என்பதை நினைத்து வருத்தப்பட்டாள்.

பின்னர் அவர் சொல்வது போல தானே நம்ம நடந்து கொண்டிருக்கோம் நம்மள பத்தி இப்படி ஒரு எண்ணம் இருக்கே...பின்னர் முரளியை நினைத்துப் பார்க்க அவ்வளவு பெரிய பணக்காரன் ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்பது தெரிந்தும் தன்னை உருகி உருகி காதலிச்சானே.அவன்கிட்ட இருக்க பணத்துக்காக தான் கல்யாணம் பண்ணுன அது உண்மைதானே என்று மனசாட்சி அவளை கேள்வி கேட்க அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை..

முதல் வாழ்க்கையை கெடுத்துக் கொண்ட இந்த வாழ்க்கையாவது ஒழுங்காக வாழப்பார் என்று மனசாட்சி சொல்லும்போது அன்று எஸ்டேட்டில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டது ஞாபகம். ..முதலில் தனது வாழ்க்கை தான் முக்கியம் என்று முடிவெடுத்தவள் இனி நல்ல மருமகளாக நீங்கள் பார்ப்பீங்க மாமா என்று சொல்லிக் கொண்டு ஸ்கூலுக்கு கிளம்பினாள்

சீமக்கரை:

தயவுசெய்து போயிட்டு படுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு.உங்க கிட்ட பேசி என் மூட ஸ்பாயில் பண்ணிக்க நான் விரும்பல..இன்னும் நிறைய எனக்கு டிசைன் பண்ற வேலை இருக்கு என்கவும் ஏண்டி என்னை விட உனக்கு அந்த காக்கா வலிப்பு வந்த போல கிறுக்கிறது தான் முக்கியமா என்றான்...

தாமரையோ அவன் கிறுக்குறது என்று சொன்னதை கேட்டு பல்லை கடித்தாள். அட கடவுளே கதிர் உன் வாயில வசம்பு தாண்டா வெச்சு தேய்க்கணும்...உனக்கு நேரமே சரியில்லை வாயைக் கொடுத்து அவகிட்ட வாங்கி கட்டுகிறதே பொழப்பா வைத்திருக்கிற என்று தனக்குள் சொல்லியவன் சாரி டி சாரிடி டிசைன் பண்றது...

எதுக்கு என்ன தொங்கிட்டு இருக்கீங்க?.போயிட்டு உங்க வேலையை பார்க்க வேண்டியது தானே என்க..என் பொண்டாட்டி நீ தானடி பின்ன உங்க பின்னாடி தானே தொங்கிட்டு அலைய முடியும் வேற எவளை போய் தொங்க சொல்ற?.

அதான் ரெண்டு பேரு இருங்காங்களே அவங்க பின்னாடி போய் அலைய வேண்டியதானே என்றாள்.

ஏன்டி என்ன பாத்தா என்ன பொம்பள பொறுக்கி போலயா இருக்கு என்று கோவமாக கேட்க கணவனை மேலிருந்து கீழாக பார்த்தவள் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு மீண்டும் சேரில் உட்கார்ந்து வேலையை பார்த்தாள்.

என்னடி இப்படி சொல்ற என்க போங்க போய் ரெண்டு பேருக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வையுங்க எப்ப இருந்து விவசாய வேலையில் இருந்து தரகரா ஆனீங்களென்று தெரியவில்லை. உங்களை நினைச்சு கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறா என்பதனால் தான் இரவில் உறக்கம் இல்லாமே தவிக்கிறீங்களே...இப்பதான் எனக்கு விஷயம் புரியுது அடிக்கடி எந்திரிச்சு போய் பால்கனியில் நிற்கும் காரணம் என்கவும், அடிப்பாவி....!

ஏன் டி, எதையும் எதோடு நீ சேர்த்து முடிச்சு போடுற?அந்த குள்ள மாடு ஏதோ இல்லாததை அள்ளி போட்டிருக்காள். அதை போய் நம்பிகிட்டு உன் புருஷன் கிட்ட சண்டை போடுறிய பார்வதி இதெல்லாம் நல்லாவாடி இருக்கு என்கவும்,வீல் சேர் என்பதால் டக்குனு திரும்பி பார்த்தாள்.

இப்போ என்ன பேர் சொன்னீங்க?என்றாள்...ஆஹா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானடா சொன்னோம் வாய் தான் உனக்கு எதிரி என்று செத்தடா நீனு என்று திருதிருயென்று முழித்தான்.

மாமா உங்களுக்கு நிஜமாகவே அந்த பார்வதியை கல்யாணம் பண்ணிக்கணும்னு எண்ணம் இருந்தா தயவுசெய்து கல்யாணம் பண்ணிக்கீங்க...சும்மா என்கிட்ட அத சொல்லிக் காட்டிக்கிட்டு இருக்காதீங்க என்று தாமரை வருத்தமாக சொல்ல, மனைவியின் முகத்தை பார்த்தவன் ஏய் தங்கமே செல்லமே அப்படி ஒரு எண்ணம் கனவுல கூட எனக்கு கிடையாது டி. ..ஏதோ வாய் தவறி அவ பேரு வந்துடுச்சு.


சத்தியமா எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லடி என்கவும்,இல்ல மாமா தாமரை என்கிற பேரு உங்க வாயில வந்து எத்தனை நாளாவது நல்லா யோசிங்க?.

வாயை திறந்தவே பார்வதி பார்வதி பார்வதி என்று தான் சொல்லிட்டு இருக்கீங்க அப்போ உங்க மனசுல தேவி இருப்பதில்லாமல் இப்ப பார்வதி ஏறிட்டாளா என்க...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
583
அய்யா தாயேஏஏஏ முடியலடி....ஏய் போதும் வேணாம் டி.எனக்கு எவளும் வேணாண்டி நீ மட்டும் போதும்டி ஏண்டி இதை நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற பார்வதி என்கவும் இப்பொழுது தாமரைக்கு கோவம் வர கணவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாள்.

என் பேரு கூட மறந்து போய் பார்வதினு சொல்றீங்களே என்ன மாமா இதெல்லாம் என்று அவனின் பனியனை பிடித்து உலுக்கி கேட்க அவசரத்தில் சொல்லிவிட்டேன்டி மன்னிச்சிடுடி என்று கையைக் கூப்பினான்...

எது அவசரத்தில் சொல்வது மனசுல இருக்கறது தான் வார்த்தையா வரும் உங்களை பார்க்கவே எனக்கு கோவம் வருது தயவுசெய்து எங்கேயாவது போய் தொலைங்க.என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க என்று அங்கிருந்து அவனை தள்ளி விட்டாள். ..

தவறு தன்மேல் இருப்பதால் மனைவி அறைந்தது கூட பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் அவள் இருக்கும் நிலைக்கு கோவப்பட்டால் குழந்தைக்கு தான் பாதிப்பு என்பது புரிந்து உன்னை சும்மா கூல் பண்றதுக்காக தான் இப்படி சொன்னேன் டி என்றான்.

அதை கேட்டவளோ ஏன் மாமா இதே வேற ஒருத்தனை என்கூட இணைச்சு பேசினா உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா என்க,ஏய் என அவள் தொண்டையை பிடித்தவன் உன்னையும் வெட்டிட்டு அவனை வெட்டுவேன் டி.

நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் புரிகிறதா? ஏற்கனவே உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன் விளையாட்டுக்குக் கூட இன்னொருத்தன் கூட உன்னை சேர்த்து வைத்து பேசக்கூடாது னு...

ஏன் மாமா விளையாட்டுக்கு என் கூட சேர்த்து வைத்து பேசக்கூடாது ஆனா நிஜத்துல மட்டும் நீ கிருஷ்ணனை போல கோபியர்கள் கூட உலாவுறியே...

எதேஏஏஏ உலாவுரனா ஏண்டி எவ கூடடி நான் சுத்துற நீ பார்த்த என்க யாருக்கு தெரியும் ஊருக்கு முன்னாடியே கனியூருக்கு போகணும்னு குதிச்ச விஷயம் இப்பதானே ஒன்னு ஒன்னா வெளியில வருது என்று சொல்லும் போதே தாமரைக்கு அழுகை வந்தது.

எல்லாரையும் போல தானே என் புருஷன் எனக்கு மட்டும் நினைப்பது...

ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?.

அது தாண்டி எனக்கும் தெரியல ஒருவேளை நான் நல்லவனா இருக்கிறதால எல்லாரும் மாமாவ சுத்தி சுத்தி வராங்க போல என்று கதிர் கேட்க, டேய் மரியாதையா மூடிட்டு போயிடுடா.

எனக்கு வர கோவத்துக்கு உன் மண்டைய பொளந்து விடுவேன் என்றாள்.மனைவியிடம் தனது மரியாதை தேய்வதை பார்த்தவுடன் ரைட்டு..இன்னும் இங்க இருந்தா இவ நம்மள அடிச்சி மண்டையை உடைக்காமல் விட மாட்டா.அவ கொஞ்சம் சாந்தமாகட்டும் என்று தனது போனை எடுத்துக் கொண்டு வெளியில் போனவன் வேலுக்கு கால் பண்ணி உடனே மாடிப்படிக்கு வருமாறு சொன்னான்.

ஏன்டா நம்ம என்ன லவ்வரா இந்த நேரத்தில் மீட் பண்ணிக்கிறதுக்கு நாயே, நாளைக்கு காலைல பேசிக்கலாம் என்க முடியாது இப்ப நீ வந்தே ஆவனும் இல்லனா நடக்கிறதே வேற என்றான்.

என்னடா இப்படி மிரட்டிக்கொண்டு இருக்கிறாய் ஆமாடா...மரியாதையா வந்து தொலை என்று சொல்லி போனை கட் பண்ணினான்.

சிறிது நிமிடத்தில் வேலுவும் அங்கு வர அவனிடம் விஷயத்தை சொல்ல உனக்கு மட்டும் ஏன் மாப்பிள்ளை இப்படி நடக்குது என்று சத்தம் போட்டு சிரிக்கவும் தனது அண்ணனின் குரல் கேட்டு வேலையாக இருந்த தாமரையும் எழுந்து வந்து பார்க்க அங்கே வேலு சிரிக்கவும் கதிரோ அவனை முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது

அண்ணா என்க...ஏண்டா தூங்கலையா இன்னும் முழிச்சிட்டு இருக்க என்று வேலு கேட்க,கொஞ்சம் வேலையா இருந்தேன்ணா என்றாள்.

நைட்ல எல்லாம் எதுக்கு கண்ணு முழிச்சு வேலை பாக்குற நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்தா தானே என் மருமக புள்ளைய சிங்கக்குட்டி போல பெத்து கொடுப்ப என்றான்.

அதெல்லாம் நல்லபடியா பெற்றுக் கொடுக்கிறேன்ணா.அப்புறம் கனியூர் போனீங்களே அங்கே பங்ஷன்ல நல்லபடியா முடிஞ்சுதா என்கவும்,ஆமா ஆமா நல்லபடியா முடிஞ்சுதுடா.

மாப்பிள்ளைக்கும் ஒரு லவ்வும் அங்க செட் ஆனது எங்கவும் அடேய் ஏன்டா ஏன் வாயை மூடி தொலடா என்று கதிரவன் வாயை மூட போக மரியாதையா கையை எடுங்க மாமா என்றாள்.

வேலுவோ,மாட்டுனடி மாப்பு எத்தனை நாள் என்னை முழி பிதுங்க வச்சிருப்ப இன்னைக்கு என் தங்கச்சி கிட்ட உன் பெண்டு கழட்டாமல் விடமாட்டேன் டா பாருடா என்று சொன்னவன் ஆமாண்டா என்னன்னு தெரியல ரெண்டு பேரும் தனியா தான் பேசினாங்க .

இத்தனை வருஷம் கூட சுத்திட்டு இருந்த எங்களுக்கே தெரியல டா?.உன் புருஷன் இப்படி மறைச்சிருக்க கூடாதுடா. இவனெல்லாம் என்ன நண்பன் சொல்லு என்று பாவமாக கேட்டான்...

உனக்கும் இவர் சொல்லலையாணா என்கவும் சுத்தம் என்று சொல்லியவன் டேய் நாரதா உன்னை எதுக்குடா கூப்பிட்டேன்?.அன்னைக்கு அந்த தேவி கிட்ட பேசினதை உன்கிட்ட நானும் சொன்னேன் தான டா.

ஆமா தேவி கிட்ட பேசி முடித்த பிறகு தான் சொன்ன..பேச போறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா என்றான்.

இப்போ உன்கிட்ட சொல்லாம போனது தான் தெய்வ குத்தம் ஆயிடுச்சு என கதிர் கேட்க,யாருக்கு தெரியும் அங்க போய் நீ என்ன பேசினியோ எங்களுக்கு எப்படிடா தெரியும் என்க... எப்பா சாமி போதும்டா போதும் அண்ணனும் தங்கச்சியும் என்னை கும்மி அடிச்ச வரைக்கும் போதும் தயவு செய்து போய் தூங்குங்க டா...

நான் இப்படி மொட்டை மாடியிலே படுக்குறேன் என்று அங்கிருந்த சேரில் போய் சாய்ந்து உட்கார ஆமா அப்போதான் நைட் எல்லாம் சாட் பண்றதுக்கு வசதியா இருக்கும் இல்லையா என்றாள்.

இது சரியான பாயிண்ட் டா பாப்பா இதுக்கு தான் உன் புருஷன் மொட்டை மாடியில இந்த நேரத்துல படுக்குறேன்னு ஒத்த கால்ல நிக்கிறான் பாத்தியா...

சரிடா பனி அதிகமா இருக்கு நீ போய் படுடா என்று தங்கைக்கு சொல்லிவிட்டு மாப்பி சேதாரம் இல்லாமல் இருந்தால் காலையில் நாம் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டு வேலுவும் அங்கிருந்து சென்றான்.

கனியூர்:

பார்வதி நாளைக்கு காலையில 10 மணிக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்க என்று சொல்லிக்கொண்டே அவள் அம்மா சாப்பாட்டை பரிமாறினார்.

பார்வதியின் காதல் விஷயம் அவள் அம்மாவிற்கு இன்னும் தெரியாது.அவர் தனது தாயிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் பத்து நாட்கள் ஊரில் இருந்துவிட்டு நேற்றுதான் ஊருக்கு வந்திருந்தார்.

நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு நாள் என்பதால் பொண்ணு பார்க்க வருவதாக அவர்கள் சொல்லியதாக வர்ஷன் முதல் நாள் சாயந்திரம் வந்து சொல்லிச் சென்றான்.

பார்வதிக்கோ எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணம் அதிகமாய் இருந்தது ஒரு பக்கம் அவள் மனநிலையோ வர்ஷன் சொல்லிய விஷயத்தை நம்பவில்லை ...

நிச்சயமாக அவருக்கு கல்யாணம் ஆகி இருக்காது அண்ணன் வேணுமுன்னு தான் ஏதோ நம்மகிட்ட பொய் சொல்றாரு என்று நினைத்தாள்.

என்ன பண்ணலாம் என்று யோசனை பண்ணிக் கொண்டே சாப்பிட முடித்து தனது ரூமிற்கு போனவள் மலருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல அவளோ திட்டினாள்.

ஏண்டி அவங்களுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சு குழந்தை பிறக்க போதுன்னு மாமா சொல்றாங்க...மாமா போய் பொய் சொல்றார்ன்னு சொல்றியே நீ ரொம்ப யோக்கியமா?.உன் வாயில பொய்யே வராதா என்று திட்டவும் இல்லடி அண்ணா எனக்காக ஒருவேளை சொல்லி இருக்கலாமே அந்த எண்ணத்தில் தான் நான் சொன்னேன் என்றாள்.

உன் மேல தப்பு வச்சுக்கிட்டு எதுக்கு மாமாவை குறை சொல்ற வைடி என்று சொல்லி மலர் போனை கட் பண்ணி விட்டாள்.

இப்போ என்ன பண்ணலாம் என யோசித்தவர்களுக்கு அவருடைய நம்பர் எப்படி கண்டுபிடிக்கிறது என்று தோண உடனே மித்ரன் ஞாபகம் வந்தது கண்டிப்பா அண்ணனுக்கு அவர் நம்பர் தெரிஞ்சிருக்கும்.

அப்ப அண்ணன் போன்ல இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள் நான் பெரியம்மா வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று சொல்லிக்கொண்டு அங்கிருந்து நேராக மித்திரனின் வீட்டுக்கு வந்தாள்.

அங்கு மித்ரன் அம்மாவோ வாடா பாரு எப்படிடா இருக்க ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது என்று விசாரிக்க நல்லா போகுதுமா...எங்கம்மா அண்ணனும் அண்ணி பசங்க எல்லாம் காணும் என்று கேட்க மெடிக்கல் கான்பரன்ஸ் என்று உன் அண்ணி போய் இருக்கிறாள்.

உன் மருமகன் அழுதான்னு வயலுக்கு தூக்கிட்டு போயிருக்கிறான் என்கவும் ஐயோ அப்போ அண்ணன் ஃபோனை எடுத்துட்டு போயிருக்குமே என்று யோசிக்க மித்திரனின் போனுக்கு ரிங் வரும் சத்தம் கேட்டது.

அவள் நேரமோ என்னவோ தெரியவில்லை சார்ஜிங் போட்டு விட்டு சென்றிருந்தான். பாரு அண்ணன் போன் தான் அடிக்குது போய் கொஞ்சம் யாருன்னு பாரு என்று சொல்லிக் கொண்டே அவர் பூவை கட்டிக் கொண்டிருந்தார்.

நல்ல வாய்ப்புடா என்று வேகமாக போனவள் போன் எடுத்து பார்க்க அதில் கம்பெனி கால் வந்துச்சு அம்மா கம்பெனி கால் மா என்று சொல்லிக் கொண்டு கட் பண்ணியவள் அதில் காண்டாக்ட் லிஸ்டில் போயிட்டு கதிர் என்ற பெயரை தேடினாள்.

வர்ஷன் தன்னவன் பெயர் கதிர் என்று சொல்லி இருந்தான் நல்ல வேலை கதிர் போட்டோவோடு நம்பர் இருக்க உடனே அந்த நம்பரை மனதிற்குள் குறித்துக் கொண்டு போனை இருந்த போலவே வைத்துவிட்டு வந்தவள் சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினாள்....

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top