Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 581
- Thread Author
- #1
நீலகிரி:
ஏன் மயிலா கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகுது இன்னும் மருது பொண்டாட்டி வயித்துல ஒன்னும் புள்ள பூச்சி உண்டாகலையா என்று கேட்டுக்கொண்டே கூடை பின்னிக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணி...
பொறுமையாக இருக்கட்டுமேக்கா... இருவருக்கும் இப்ப என்ன வயசு ஆகிவிட்டது என்று கேட்டுக் கொண்டே மயிலாவும் கூடையை பின்னிக் கொண்டிருக்கு அப்போது அம்மா அம்மா என்று மருத கூப்பிடும் குரல் சத்தமா கேட்டது.
மயிலாவும் மருது கூப்பிடுற போல இருக்கே கா என்று எட்டிப் பார்க்க அவன் தான் வாசலில் வந்து நின்று சற்று தூரத்தில் கூடை பின்னிக் கொண்டிருக்கும் தனது அம்மாவை பார்த்து அம்மா சீக்கிரமா என்று பதட்டமாக கூப்பிட்டான்..
மகனின் பதட்டத்தை பார்த்தவர் என்னாச்சுன்னு தெரியலையே என்று பின்னிய கூடையே அப்படி கீழே போட்டுக்கிட்டு வேகமாக உள்ளே வர என்னன்னு தெரியல வாந்தி மேல வாந்தி எடுத்துட்டு இருக்காள்.
அங்க படுக்க வச்சிருக்கேன் என்று சொன்னான்.ஆத்தா மலையம்மா என்று வேண்டிக்கொண்டு வேகமாக மருமகள் படுத்து இருக்கும் ரூமிற்குள் வந்தவர் என்னாச்சு செல்லா?இந்த மாசம் தல குளிர்ச்சியா?
சிறிது நிமிடம் யோசித்தவள் இல்லைங்க என்றாள்.ஏஏஏஏ ஆத்தா வந்துட்டியா என் வீட்டுக்கு என்று சொல்லும் போது மயிலாவின் கண்கள் கலங்கியது...
இதோ வந்துடுறேன் என்று வேகமாக அங்கிருந்து வேதாவை கூப்பிடுவதற்காக சென்றார்.சிறிது நிமிடத்தில் அங்கு வந்தவர் மருமகளின் கைய பிடித்து பார்க்க சந்தோஷம் தாங்கவில்லை.
மயிலா நாம பாட்டி ஆகிட்டோம் என்க, பார்ப்பவர்கள் எல்லாரும் குழந்தை இல்லை என்று சொல்லும் போதெல்லாம் கஷ்டமாகத்தான் இருந்தது.
இப்பொழுது தனது மருமகள் மாசமாய் இருப்பதை கேட்டு சந்தோஷத்தில் கலங்கினர்.பின்னர் மகன் மருமகள் இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே போனார்கள்.
மருதுவோ கதவை தாழ்ப்பாள் போட்டவன் மனைவியை கீழ குனிந்து அள்ளித் தூக்கியவன் அவளுக்கு ஆழ்ந்த முத்தத்தை பரிசாக கொடுக்கும்போது இருவர் கண்ணிலும் ஆனந்த கண்ணீர் வடிந்து ஓடியது.
எத்தனை நாள் குழந்தை இல்லை என்று இந்த நான்கு மாதங்களாக செல்லா அழுவது அவர்கள் இருவருக்குமே தெரியும் பார்ப்பவரெல்லாம் குழந்தையை பற்றி கேட்டு கேட்டு அவளை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இன்று தங்களுக்கு வாரிசு வந்து விட்டதென்கும் மகிழ்ச்சியில் திளைக்க,மாமா நேரம் ஆகிவிட்டது என்ன ஸ்கூல்ல கொண்டு வந்து விடுங்கள் என்க,ஏய் இன்றைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோடி நாளைக்கு போகலாம் என்றான்.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நான் நல்லா தான் இருக்கேன் வாங்க என்று வெளியே வந்து தனது அத்தைகளிடம் சொல்லிக் கொண்டு கணவனோடு ஸ்கூலை நோக்கி சென்றாள்.
நீலகிரி:
மயிலா உடனே தனது போனை எடுத்து நாத்தனாருக்கு கால் பண்ணினார் முருகாயியும் அந்த பக்கம் இருந்து அட்டென்ட் பண்ணியவர் சொல்லு மயிலா நல்லா இருக்கியா எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று பொதுவாக இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஆத்தா முருகாயி உன் மவள் மாசமா இருக்கிறாத்தா என்று சொன்னவுடனே அப்படியா என்று கேட்ட முருகாயிக்கு அழுகையை வந்து விட்டது சந்தோஷத்தில்.
நெசமாவா என்று கேட்கவும் இதுல எங்கேயாச்சும் பொய் சொல்லுவனா என்றவர் சரி நான் வைக்கிறேன் என்று போனை வைத்து விட்டார்.கண்ணை துடைத்துக் கொண்ட முருகாயி உள்ளே இருக்கும் தனது குலதெய்வத்திடம் போய் நின்று ஆத்தா என் மகள் மூலமாக என் அண்ணன் குடும்பத்தை தழைக்க வச்சுட்டியா உனக்கு நாலு கிடாவெட்டுறேனு வேண்டிக் கொண்டார்....
பின்னர் தோட்டத்தில் கூடை பின்னி கொண்டிருக்கும் தனது கணவரை தேடி வேகமாக ஓடியவர் ஏய்யா ஏய்யா என்க....அடியேய் 18 வயசு குமரி ஆட்டம் ஓடி வர....காலு தடுக்கி கீழே விழுந்ததாக மூஞ்சி மொகரையெல்லாம் பேந்துடும் என்னும் போது மனைவி முகத்தில் இருக்கும் சிரிப்பும் பதட்டத்தையும் பார்த்தவர் என்னடி..ஆற அமர சொல்லு இங்கதான் இருக்கிறேன்....
உடனே போயிட்டு எல்லா வகை இனிப்பு வாங்கிக்கொண்டு சீக்கிரம் வா நம்ப அங்க போகணும்...
ஏப்புள்ள விஷயத்தை சொல்லாம மொட்டையா இப்படி சொன்னாக்க என்னடி அர்த்தம் கூறு கெட்டவளே புரிகிற போல சொல்லுடி என்றார்.
நம்ம மவள் உண்டாகியிருக்காயா எங்கவும் என்னடி சொல்ற என்று அவரும் சந்தோஷத்தில் எழுந்தவர் தலையில் கட்டி இருந்த துண்டை உதறி போட்டுக் கொண்டு வேகமாக அங்கிருந்து போனார்.
அரைமணி நேரத்தில் இரண்டு பை நிறைய மகளுக்கு வேண்டிய பழங்களை இனிப்பு வகையில் கண்ணில் படுவது எல்லாம் வாங்கிட்டு வர அதற்குள் முருகாயியும் இன்னும் இரண்டு நாளில் மகளை பார்க்க போகலாம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிலேயே தயார் செய்து வைத்திருந்த தின்பண்டங்கள் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு தயாராக இருக்க வீட்டை பூட்டிக் கொண்டு இருவரும் ஜீப் வரும் இடத்திற்கு போனார்கள்.
பத்து நிமிடத்தில் ஜீப்பும் நீலகிரிக்கு போவதற்காக வர ஏறி உட்கார்ந்தனர். ஒரு மணி நேரத்தில் நீலகிரிக்கு வந்து சேர்ந்தார்கள்.இருவரும் ஆளுக்கு ஒரு பையை எடுத்துக்கொண்டு நடையை எட்டிப் போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
இருவரையும் பார்த்த மயிலா வாங்கண்ணா வா முருகாயி என்றவர் இருவருக்கும் ஆளுக்கு ஒரு சொம்பு மோரை கலக்கி கொடுக்க வெயிலுக்கு அது தொண்டைக்கு இதமாக இருந்தது.
நல்லா இருக்கிறீர்களா என்று பொதுவாக நலம் விசாரித்துக் கொண்டனர்.
மச்சான் எங்கத்தா என குப்பிளான் கேட்க, முறம் பின்னி எடுத்துட்டு போனாரு அங்க எஸ்டேட் கொடுக்கிறது இன்னும் வரலைணா.
மருதுவும் கோயம்புத்தூருக்கு போய் இருக்கிறான் என்று சொல்லவும் செல்லா இல்லையா என்றனர்.
சொல்வதை கேட்காமல் பள்ளிக்கூடம் போயிருக்கிறாளே என்க....ஒன்னும் அவசரமில்லை என்று நாத்தனார்- நாத்தனார் இருவரும் பேசிக்கொண்டு மதிய உணவை சமைத்தனர்.
குப்பிளானுக்கு தனது மகளை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்க எழுந்து அப்படி பொடி நடையாக ஸ்கூலை நோக்கி சென்றார்
சீமக்கரை:
மேலும் மூன்று நாட்கள் கடந்த இருக்க கதிரும் மனைவியிடம் பேச எவ்வளவோ முயற்சி செய்தும் புண்ணியமில்லை.
விடிந்தால் கணேசனின் மகனுக்கு நிச்சயதார்த்தம் என்பதால் அதற்கு தேவையான புடவையை தயார் பண்ணியவள் சீதாவிடம் கொடுத்து அவர்கள் வீட்டில் கொடுக்கச் சொன்னாள்.
அதேப்போல சீதாவும் ராதாவும் கொண்டு போய் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.மறுநாளும் வந்தது. இன்று தேனூரில் இருக்கும் மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தம் என்பதால் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
சிலர் மாப்பிள்ளை வீட்டில் வைத்த வேனில் ஏறி சென்று விட மற்றவர்கள் எல்லாம் பைக் ஆட்டோ என கிடைத்ததில் சென்றனர்.
தாமரை தயாராகி கீழே வர அவளுக்காக கதிர் காத்திருந்தான்.அவளோ வழக்கம் போல் கணவனை கண்டு கொள்ளாமல் அங்கிருந்த சீதா ராதவரிடம் அத்தை போகலாமா என்கவும் போகலாம் தாமரை என்றனர்.
பின்னர் அனைவரும் காரில் ஏறிக்கொள்ள பின்னாடி உட்கார்ந்திருக்கும் மனைவியை தான் கண்ணாடி வழியாக அவ்வப்போது கதிரும் பார்த்துக் கொண்டே வந்தான்.
இன்னைக்கு கணேசன் மருமகளோட மொகரை உடையது நிச்சயம் தான் என்று வள்ளிய அப்பாயி தனது கணவரிடம் சொல்ல, விடு வள்ளி ஏதோ சின்ன புள்ள பேசிடுச்சு என்கவும் அது என்னங்க வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசுறதா என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
அவர்களும் மண்டபத்திற்கு வந்து சேர தெரிந்தவர்கள் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தனர் கதிரும் வேலுவும் அங்கு இருக்கிறவர்களோடு கலந்து கொண்டனர்.
சுதாவிற்கோ புடவை எப்படி இருக்குமோ என்றுதான் பெருங் கவலையாக இருந்தது.பியூட்டிஷனும் அவளுக்கு மேக்கப் பண்ணி முடித்தாலும் அதைப்பற்றி அவள் பெரிதும் கண்டுகொள்ளாமல் தனது அருகில் இருந்த தோழியிடமே அந்த பெண் புடவை எப்படி செஞ்சிருக்காங்கன்னு தெரியலையே?.
அறைகுறையா செஞ்சி இருந்தாக்க அசிங்கமா போயிடுமே அப்படி இப்படி என்று புலம்பிக் கொண்டு இருந்தாள்.
சிலர் பொண்ணு எப்படி இருக்குன்னு வாங்க பார்த்துட்டு வரலாம் என்று கதவை திறந்து அவளை பார்த்துட்டு சென்றனர்.
வந்தவருக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக சுதாவும் கொடுத்துக் கொண்டிருந்தாள் நேரமும் கடந்திருக்க வழக்கமான சம்பிரதாயபடி நிச்சயதார்த்தம் ஆரம்பமானது.
அப்பொழுது பொண்ணுக்கு புடவையை கொடுக்க அவளை ஸ்டேஜுக்கு வர வைத்தனர் அவளும் அங்கே வர,தாம்பாளத்தை எடுத்துக் கொடுக்கவும் அதை வாங்கிக் கொண்டு கீழே இருக்கும் ரூமிற்குள் சென்றாள்...
புடவையில் இருக்கும் டிசைனை பார்த்த அதிர்ச்சியில் சுதாவிற்கு வாயடைத்து போனது....
சுதாவின் உறவினர் பெண்களோ புடவையை பாராட்டி தள்ளிவிட்டனர் அவளுக்கு புடவை கட்டி அலங்காரம் பண்ணி ஸ்டேஜிற்கு அனுப்பிவிட்டார் நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிய அந்த மண்டபத்தில் எங்கு பார்த்தாலும் புடவை பற்றிய பேச்சு தான் இருந்தது.
அப்பொழுது அவர்களை ஆசிர்வாதம் பண்ண கதிர் குடும்பத்தை வந்து கணேசன் கூப்பிட குடும்பமாய் ஸ்டேஜ்க்கு சென்றனர்.அங்கிருந்த சுதாவிடம் என்னுடைய பெரிய அண்ணன் மருமகள் தான்
உனக்கு புடவை தயார் பண்ணி கொடுத்ததுமா...
இதான் எங்க குடும்பத்து மூத்த மருமகள் தாமரை என்று சொல்லியவர் புடவை எப்படி இருக்குமோனு என்று ரொம்ப கவலையா இருந்தியே..என் அண்ண மருமக வெளிநாட்டில் வேலை பார்த்த பொண்ணு என்கவும் சுதாவிற்கு பேச்சே வரவில்லை.
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ராதாவும் என் மருமகள் இதை போல சின்ன வேலைகள் எல்லாம் செஞ்சு கொடுக்கிறது கிடையாது.
மாமா கேட்டார்கள் என்பதற்காக தான் உனக்காக பண்ணி கொடுத்தாம்மா மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாள்.அங்கு வேலையை விட்டுட்டு இங்க வந்து இருக்கு என்று குத்தலாக சொல்லவும் சுதாவிற்கு மூஞ்சி செத்துவிட்டது. ..
அந்த பங்க்ஷனிற்கு வந்திருந்த சுதாவின் சொந்தக்காரங்கள் சிலரோ தாமரையிடம் தேடிப் போய் பேசியவர்கள் அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு இதேபோல் செய்து தர முடியுமா என்று கேட்கவும் தாமரையும் சரி என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்...
எவ்வளவு பெரிய வேலையில் இருக்கிற பொண்ணு இவ்வளவு அடக்கமாக அமைதியாக தலைகணம் இல்லாமல் பதில் சொல்லுது என்று சொல்லுவது சுதாவின் காதிலும் விழுந்தது....
ஆமாம் உங்க அண்ணி என்ன படிசாசிருக்காங்களென்று தனது அருகில் இருக்கும் கணவனிடம் சுதா கேட்க அவளை ஒரு பார்வை பார்த்தவன் கூகுள்ல போய் வி. வி டிசைன்ஸ்னு செக் பண்ணி பாரு தெரியும் என்றவன் நாவடக்கம் ரொம்ப முக்கியம் இல்லைனா மூஞ்சி மொகரை உடைபட வேண்டிய நிலை வரும் என்றான்... கணவனின் பேச்சை கேட்டவளுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.
இரவு டின்னரை அங்கையே முடித்துக்கொண்டு பங்ஷனிற்கு வந்தவர்களும் கிளம்பி சென்றனர்.
கதிர் வீட்டினரும் காரில் ஏறி வீட்டை நோக்கி கிளம்பினர்.பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.தாமரை கொஞ்சம் லெமன் சோடா போட்டு தரட்டுமாயென ராதா கேட்க, அவளுக்கும் அன்னீசியாக இருப்பது போல இருந்ததால் சரிங்கத்தை என்றாள்