• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
579
கதிரோ மனைவியை பார்க்க அவளோ அவன் ஒருத்தன் இருப்பதை சிறிதும் கண்டுகொள்ளாமல் கீழே வந்தவள் வழக்கம் போல் பூஜை அறைக்கு சென்று சாமியை கும்பிட்டு விட்டு கிச்சனுக்கு சென்று அவளுக்கான பாலில் பாதாம் பவுடர் கலந்து உள்ளயே குடித்தாள்.

முந்தாநேத்து ஒருத்தன் ஊருக்கு போனானே...வாயா..நல்லபடியாக வந்துட்டியானு ஒரு வார்த்தை விசாரிக்கிறாளா பாத்தியா உன் பேத்தி?. அவ பாட்டிற்கு போறாளே என்று அப்பாயிக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தான்.

என்னன்னு தெரியல நல்லா தான் இருந்தா.நேத்து மதியத்தில் இருந்து இப்படித்தான் உன் பொண்டாட்டி இருக்கிறா அப்பு.நம்ப கணேசன் அவன் மருமகளுக்கு புடவை செஞ்சு கொடுக்க சொல்லி உன் பொண்டாட்டி கிட்ட தான் சொல்லிட்டு போயிருக்கான். ஒருவேளை அது செய்யறது நினைச்சு வெசனமா இருந்தாலும் இருக்கலாம் என்க...அப்படியா என்றவன் சரி நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று பேகோடு மாடிக்கு சென்று விட்டான்.

வயலுக்கு சென்றிருந்த பெருமாலும் முத்துவும் வீட்டிற்கு வர அனைவருக்கும் காலை உணவு பரிமாறியதும் தாமரையோ கிச்சனுக்குள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தாளே தவிர வெளியே வரவில்லை.

மனைவி வருவாள் வருவாள் என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றம் தான் ஆனது.உள்ளேயே அடுப்பை கட்டிக்கிட்டு என்ன பண்றாளோ. ஏன் வெளியில வந்து பரிமாறினா ஆகாதா என்று முணுமுணுத்துக் கொண்டு சாப்பிட முடித்தான்.

தாமரையோ கிச்சனுக்குள்ளே சாப்பிட்டவள் அத்தை அங்கு தறி ரூமுக்கு போறேன் என்று சொல்ல இந்தா பால் எடுத்துட்டு போ?.

வேண்டாங்கத்தை லேட்டா குடிச்சுகிறேன் என்று சொல்ல சரி என்று அவளின் மாமியார்கள் சொல்லி விடவும் பக்கத்தில் இருக்கும் ஷெட்டின் ரூம் சாவியை எடுத்துக்கொண்டு தாமரை அங்கிருந்து சென்று விட்டாள்.

கதிரோ அங்கு டிவி பக்கம் பார்த்து உட்கார்ந்து தனது தந்தைகளோடு பேசிக் கொண்டிருப்பதால் மனைவி பின்பக்கமாய் போனது தெரியவில்லை.

நேரமும் கடந்திருக்க பிறகு அவரவர் அவரவர் வேலையை பார்க்க செல்க,கதிரும் எழுந்து கிட்சன் வாசலில் நின்று பார்த்தால் அங்கே செல்வி மற்றும் ஏதோ உருட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.

இங்கே இல்லையா?.எங்க போனா இவ என்று யோசனையோடு வெளியே வர பக்கத்தில் இருக்கும் ஷெட் கதவு திறந்திருக்கவும் இங்கு வந்து விட்டாளா என்றவன் நேராக அங்கே போய் கதவை திறந்து உள்ளே போக தாமரையோ அங்கிருந்த கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு டிசைனிங் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஓய் பொண்டாட்டி அவ்வளவு பிஸியா?.

மாமன் வந்துருக்கேன் கொஞ்சம் கூட கண்டுக்காம நீ பாட்டுல இங்க வந்து உட்கார்ந்து இருக்க?

தாமரையோ அவன் சொல்லுவது எதுவும் காதுல வாங்காமல் தனது வேலையில் மட்டுமே கவனமாக இருந்தாள்.

மனைவி உட்கார்ந்திருக்கும் சேரின் அருகில் வந்தவன் பின்பக்கமாக இருந்து அவள் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் தலையில் தனது தாவங்கட்டையை வைத்து என்னடி செல்லம் அமைதியாக இருக்கிற?

எதுவுமே பேசாமல் கிளம்புங்கள் என்றாள்.அவளின் குரலில் இருக்கும் உஷ்னமோ கதிருக்கு புதிதாக இருக்க என்னடி ஆச்சு என்கவும் இப்ப கையை எடுக்க போறீங்களா இல்லையா என்றாள்.

ஏண்டி போகும்போது நல்லா தான இருந்த அதுக்குள்ள என்னடி ஆச்சு என்று கேட்கவும் ஏன் எனக்கு ஏதாவது ஆகணுமா?அப்படியானால் அந்த பார்வதியை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறீங்களா?.

எதேஏஏஏ நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறேனா?என்னடி உளறிக்கிட்டு இருக்க?என்றவனை எழுந்து நின்று பார்த்து முறைத்தவள் யாரு நான் உளறிக்கிட்டு இருக்கேன்?.

கனியூர்ல என்ன நடந்துச்சு என்று கேட்கவும் கதிருக்கோ ஒரு நொடி திக் என்று இருந்தது.இது எப்படி இவளுக்கு தெரிஞ்சது? ஒருவேளை இவளோட அண்ணங்காரன் தங்கச்சி கிட்ட சொல்லிட்டானா என்று வேலுவை நினைத்து அந்த நேரத்தில் திட்டினான்.

இந்த பொண்ணுக்காக தான் என்னை டைவர்ஸ் பண்றதுக்காக வக்கீல் கிட்ட போனீங்களா என்றாள்... மனைவியின் கேள்வியில் அடியே என்னடி உன் இஷ்டத்துக்கு என்னென்னமோ பேசிட்டு இருக்கு என்று கதிர் கேட்க...

அப்படியா கனியயூர்ல என்ன நடந்தது நீங்க சொல்லவே இல்லையே என்றாள்.

சரி அது முடிஞ்சி போயிட்டு.முந்தா நேத்து போனீங்க இங்க வர வரைக்கும் ஒரு போன் பண்ணி போய் சேர்ந்துட்டேன் என்ன பண்றேன்னு ஒரு வார்த்தை விசாரிக்க முடிஞ்சதா உங்களால என்று கேட்கவும் அது வந்து அங்கிருந்த டென்ஷன்ல நான் உனக்கு போன் பண்றது மறந்து விட்டேன் என்றான்.

அப்படி என்ன அங்க டென்ஷன் என்றாள்.அங்க ஒருத்தி டென்ஷன் படுத்திட்டாள் என்று வாய் விட்டவன் பின்னர் தனது வாயை மூட அப்ப எவளோ ஒருத்திக்காக தாலி கட்டுன பொண்டாட்டி நான் இருக்கறது உங்களுக்கு ஞாபகம் வரலனாக்க என்ன அர்த்தம் சொல்லுங்க?.

சரி இப்போ இப்படி வச்சிக்கலாம் எனக்காக ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறான்.அவன் கவலையிலே நானும் இருந்துட்டு உங்களை கண்டுக்காம இருக்கட்டுமா என்றாள்...

தாமரை சொன்னதை கேட்டவன் என்னடி சொன்ன என்று மனைவியின் கழுத்தை எட்டிப் பிடித்தவன் விளையாட்டுக்கு கூட உன் வாயிலிருந்து இப்படி வந்துச்சு நான் மனுஷனா இருக்க மாட்டேன் டி...
உன் நெனப்பு உன் சிந்தன எல்லாத்திலயும் நான் ஒருவன் மட்டும் தான் இருக்கணும் புரியுதா என்கவும், வேகமாக கதிரின் கையை தட்டி விட்டவள் இத முதல்ல எனக்கு சொல்லாதீங்க நீங்க நினைச்சுக்கோங்க உங்களை பார்க்கவே எனக்கு சுத்தமா பிடிக்கலை தயவுசெய்து வெளியில போங்க என்று கத்தினாள்.

அப்புறம் இன்னொரு விஷயம் உங்கள மாப்பிள பாக்குறதுக்கு இன்னும் ரெண்டு மூணு நாள்ல அந்த பொண்ணு வீட்ல வராங்கள்.உங்க வீட்ல பேசி சரி பண்ணிட்டு நீங்களே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கங்க அதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

மனைவி சொன்னதை கேட்டு கதிருக்கு ஆத்திரம் வர அங்கிருந்த டேபிளின் மேல் ஓங்கி குத்தினான்.நீ என்ன வேணாலும் பண்ணிட்டு போடா எனக்கென்ன வந்துச்சு என்று தாமரை அவள் வேலையில் மட்டுமே கவனமாக இருக்க...

எனக்கு ஒரு விஷயத்தை சொல்லு உனக்கு யாரு இதெல்லாம் சொன்னா என்று கேட்க இப்ப கூட அங்க என்ன நடந்துச்சு நீங்க சொல்லலையே தவிர யார் எனக்கு சொன்னாங்க என்கிறது தான் பிரச்சனையா என்று தாமரை கேட்க ஆத்தாடி இப்படி லெஃப்ட் ரைட்டு நம்மள வாங்குறாளே என்று முணுமுணுத்தான்...

நான் ஏகப்பத்னி விரதன்டி.உன்ன தவிர மனசார வேற ஒருத்தியை நினைக்க மாட்டேன் என்க...இந்த டயலாக் எல்லாம் எவளாச்சும் முட்டாள் இருப்பா போய் அவகிட்ட சொல்லிக்கிட்டு இருங்கள்...
என்கிட்ட சொல்ல வேண்டாம். இதெல்லாம் கேட்க எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை...எனக்கு வேலை இருக்கு வெளியில போங்க என்றாள்...

தாமரைக்கு யார் இந்த விஷயத்தை சொல்லியிருப்பா என்று யோசித்தபடியே வெளியே வந்த கதிருக்கு மண்டை பிச்சிக் கொண்டு போனது...

அனேகமா இவளோட அண்ணன்கார பயல் பண்ணிய வேலையா தான் இருக்கும்...அடேய் மச்சான் இன்னைக்கு நீ செத்தடா என்றவன் வண்டியை எடுத்துக்கொண்டு ஏரிக்கரைக்குப் போகும் போது வேலுக்கு போன் பண்ணி உடனே அங்கு வருமாறு சொல்லிவிட்டு போனை வைத்தான்.

எதுக்கு இந்த நாய் என்னமோ லவ்வரை மீட் பண்ற போல ரகசியமா வர சொல்றது என்று வேலுவும் தனது வண்டியில் ஏறி வர, போகும் வழியில் உள்ள ஆலமரத்தின் கீழே கதிர் தனது புல்லட்டில் காத்திருக்கவும் வண்டி வரும் சத்தத்தை கேட்டு திரும்பி பார்க்க வேலு தான் வந்து கொண்டிருந்தான்.

பின்னர் எதுவும் பேசாமல் இருவரும் நேராக ஏரிக்கரைக்கு சென்றனர்.

வழக்கமாய் நிறுத்துமிடத்தில் வண்டியை போய் கதிர் நிறுத்த வேலுவும் அங்கு வந்து தனது புல்லட்டை நிறுத்த என்னடா எதுக்கு இங்க வர சொன்ன அந்த எவ்வளவு வேலை கிடக்கு?

கடலை மூட்டை வேற லோடு ஏத்த போகணும் வண்டியில் இருந்து இறங்கியவன் நேராக தனது அத்தை மகனிடம் வந்து அறிவு கெட்ட பயலே என்னடா பண்ணி வைத்திருக்கிற எதுக்குடா உன் தங்கச்சிக்காரி கிட்ட அங்க கனியூர்ல நடந்ததெல்லாம் சொன்ன என்று அவன் தோள் பட்டையில் பட்டு பட்டென்று அடிக்க வேலுவோ அடேய் பைத்தியம் என்னடா பண்ற என்று கதிர் கையை தடுத்தான்.

நடிக்காதடா நீ தானே உன் தங்கச்சிக்கு போன் பண்ணி அந்த பார்வதி விஷயத்தை சொன்ன என்கவும் பார்வதியா இவ யாருடா புதுசா என வேலு கேட்க அதாண்டா கனியூர்ல அந்த பொண்ணு....

ஓஓஓ அது பேர் பார்வதியா கதிர் பார்வதி பார்வதி கதிர் நல்லா இருக்கே என்கவும் தனது அத்தை மகனை பார்த்து முறைத்தவன் உன் தங்கச்சி என்னை லெப்ட் ரைட் வாங்கிட்டா தெரியுமா?

என்னடா சொல்ற என்று வேலு அதிர்ச்சியாக கேட்க எப்படி இந்த விஷயம் அவளுக்கு தெரிஞ்சது?ஒன்னு நீ சொல்லி இருக்கனும் இல்லனா ஜான் சொல்லி இருக்கணும்..

முதல்ல என்ன விஷயம்னு எங்களுக்கே தெரியாது எங்க கிட்டயே சொல்லாம ரகசியமாக இத்தனை வருஷம் வச்சிருக்கியே என்கவும் அடப்பாவி ஏன்டா....

நீ வேற எரிகிற தீயில் எண்ணெய் ஊத்துற சும்மாவே உன் தங்கச்சி ஆடுவாள்...மரியாதையா வெளியில் போங்கன்னு என்ன ரூமை விட்டு துரத்திட்டாடா என்று கதிர் பாவமாக சொல்ல, என்னடா மாப்பி சொல்ற?.

டேய் அப்ப யாருடா இந்த விஷயத்தை சொன்னது என்று வேலும் யோசிக்க எதுக்கும் பனமரத்துக்கு ஒரு போன் போட்டு விசாரி..உன் பங்காளி தனது கொழுந்தியா வாழ்க்கை காப்பாத்தணும் என்கிற எண்ணத்திலே சொல்லிருப்பான் என்கவும் இருக்குமோ என்று யோசனையோடு கதிர் போன் பண்ண போக நீ இரு நான் பண்றேன்...

பெட்டில் படுத்திருந்தவனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டு எட்டி எடுத்தவன் அட்டென்ட் பண்ணி சொல்லுடா என்க....

ஏன்டா பனைமரம் என்னடா வேலை பண்ணி வச்சிருக்க என்று வேலு கேட்க ஜானோ நம்ம ஒன்னும் பண்ணலையே...இவன் என்ன சம்பந்தமில்லாமல் கத்துரான் என்று யோசனையானவன் அடேய் என்னடா சொல்ற என்க தாமரைக்கு போன் பண்ணி என்னடா சொன்ன என்று கேட்க...எதேஏஏஏ தாமரைக்கு நான் போன் பண்ணுனேனாஆஆஆ என்று அதிர்ந்தான்.

போன் கால் ஸ்பீக்கரில் இருந்ததால் அவன் அதிர்வை கேட்ட கதிருக்கும் பிறகு யாரு சொல்லி இருப்பா என்று யோசனையானது
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
579
என்னடா பனமரம் பயந்துட்டியா சும்மா கிண்டல் பண்ணனேன் மணி பத்து ஆகுது இன்னும் என்னடா உனக்கு தூக்கம் வேண்டி கிடக்கு எருமை மாடு என்று வேலு சொல்ல கையில கிடைச்ச உன் மூஞ்ச பேத்துருவேன் என்று கட் பண்ணி விட்டு தூக்கத்தை மீண்டும் ஜான் தொடர்ந்தான்.

கம்ப்யூட்டரின் முன்னால் உட்கார்ந்து இருந்த தாமரைக்கு கணவனின் மேல் கட்டுக்கடங்காமல் ஆத்திரமும் கோபமும் மேலெழுப்பியது...

அந்த நேரம் பார்த்து அவளுக்கு கால் வர தனது போனை எடுத்தவள் நம்பரை பார்த்து விட்டு ஊப் என்றவாறு அட்டென் பண்ணி சொல்லுங்கள் மேடம் இப்பதான் நான் இருப்பது உங்களுக்கு கண்ணு தெரிந்ததா என்று கேட்க அந்தப் பக்கம் இருந்த லீலாவோ ஏய் தாமரை என்ன கிண்டலா என்றாள்..

பின்ன என்னங்க இத்தனை மாசமா ஒரு போன் இல்ல கல்யாண வாழ்க்கைல அவ்ளோ பிஸியா ஆயிட்டீங்களா என்கவும் சிங்கப்பூருக்கு வந்துட்டேன். வந்து ஒன் வீக் ஆகுது என்றாள்.

அப்படியா ஆன்ட்டி எதுவுமே சொல்லவில்லையே என்க, ஆன்ட்டிக்கு இரண்டு நாளா உடம்பு சரியில்லை தாமரை, ஐயோ என்ன ஆச்சு அக்கா என்று அதிர்ந்தாள்.

நார்மல் ஃபீவர் தான் பயப்படும் அளவுக்கு ஒன்னும் இல்ல நான் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போயிட்டு வந்தேன் உன் கிட்ட சொல்ல வேணாம்னு தான் சொன்னாங்க எனக்கு தான் மனசு கேட்கவில்லை....
நான் சொன்ன போல நீ காட்டிக்காதே என்றவள் உன்னுடைய ஹெல்த் எப்படி இருக்கு ஹாஸ்பிடலுக்கு செக் அப் எல்லாம் போனியா என்று பொதுவாக இருவரும் பேசி விட்டு போனை வைத்தவள் உடனே வினிதாவிற்கு கால் பண்ணினாள்.

அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவர் சொல்லுடா எப்படி இருக்கு என்க நீங்க எப்படி இருக்கீங்க அத்தை?

எனக்கு என்ன நல்லா கன் போல இருக்கனே என்றார்.

அப்படி இருந்தால் சந்தோஷம் தான் டைமிங்ல சாப்பிடுறீங்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை துளைத்து எடுத்தாள்.ஒரு வழியாக வினிதா தாமரையிடம் இருந்து தப்பித்து போனை வைக்கவும் போதும் என்றானது.

ஏன்டா மாப்பிள்ளை பேசாம தாமரை கிட்ட யாரு சொன்னாங்கன்னு கேட்க வேண்டியதுதானே என்று வேலு சொல்ல ஏண்டா ஏன்....உன் தங்கச்சி கிட்ட நான் செருப்படி வாங்கணும் உனக்கு அவ்வளவு ஆனந்தம் இல்லையா என கதிர் முறைக்க...டேய் யாரு சொன்னாங்கன்னு இப்ப தெரிஞ்சாகனும்.

நம்ம மூணு பேருமே கிடையாது.வர்ஷன் அண்ணா சொல்லியிருக்கு வாய்ப்பே கிடையாது டா...பிறகு இந்த விஷயம் எப்படி தாமரைக்கு தெரிந்தது?.

தெரிஞ்சிடுச்சி இனி என்னத்த பண்ண....அது இருக்கட்டும் நீ ஏன் இதை பத்தி இவ்வளவு வெசன படுற அப்போ உனக்கு பார்வதிக்கும் ஏதாச்சும் லிங்க் இருக்கா?என வேலு முறைத்தான்.

அட நாதாரி பயலே நீயே உன் தங்கச்சிக்கு என்ன கொல பண்ண ஐடியா கொடுக்கிறியாடா ஏன்டா ஏன் இப்படி?.மாசமா இருக்க நேரத்துல எதுக்கு தேவையில்லாம டென்ஷன் அவளுக்கு கொடுக்கணும் என்பதற்காக தான் இதை நான் பெருசா எடுத்துக்கறேன்.

அப்படியா அவ்வளவு நல்லவனா நீ என வேலு கேட்க, நீ ஒரு ஆளே போதும்டா என்னை உசுரோட பொதைப்பதற்கு என்றான்.

ஹா ஹா என்று சிரித்த வேலு மலைக்கு போனாலும் மச்சானோட உதவி வேணும்டா...நல்லா உதவி பண்றடா நீ என்கும் கதிரை பார்த்தவன் சரி வா நாம போய் வேலையை பார்க்கலாம் என்க, பின்னர் இருவரும் அங்கிருந்து கிளம்பி கடலை மூட்டைகளை லோடு ஏத்த சென்றனர்...

தாமரை மீண்டும் தனது வேலையை பார்க்க தொடங்கினாள்.அப்பொழுது தாமரை என்றவாறு உள்ளே வந்த சீதா மருமகளுக்கு குடிப்பதற்காக ஜூஸை கொண்டு வந்து கொடுக்க கூப்பிட்டா நானே வந்திருப்பேனே என்றாள்.

இதில் என்ன இருக்கு இந்தா மணி பாரு என்று சொல்ல காலை11.30 என்று காட்டியது.

சிறிது நேரம் மருமகளுடன் பேசிட்டு இருந்தவர் தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.தாமரையோ சிஸ்டத்தை ஆப் பண்ணிவிட்டு தறி மெஷினை ஆன் பண்ணியவள் அதில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.

மிஷின் ஓடிக் கொண்டிருந்தாலும் சிந்தனை மட்டும் வினிதாவின் மேல் தான் இருந்தது.

கடைசி காலத்தில் யாராவது நிச்சயமாக அவருக்கு ஒரு துணை வேண்டும் என்பது புரிந்து இதற்கு என்ன ஏற்பாடு பண்ணலாம் என்று யோசனையானவளுக்கு விசஸ்வநாதனிடம் பேசினால் சரியா வரும் என்பது புரிந்து உடனே தனது ஃபோனில் இருந்து சகாராவில் இருக்கும் விஸ்வநாதனுக்கு கால் பண்ணினாள்.

இரண்டே ரிங்கிள் அட்டென்ட் பண்ணியவர் தாமரை எப்படிமா இருக்க என்க, நல்லா இருக்கேன் அங்கிள். நீங்கள் எப்படி இருக்கீங்க?,ஆன்ட்டி மாறன் சார் எல்லாரும் நல்லா இருக்காங்களா என்க.

ஆமா மா…எல்லாரும் நல்லா இருக்கோம்...

மாறன் பிசினஸ் விஷயமா லண்டன் போயிருக்கான் என்க அப்படிங்களா சூப்பர் என்றவளிடம் நீ எப்படி இருக்க ஹெல்த் இப்ப நல்லா இருக்கா செக்கப் எல்லாம் ஒழுங்கா போறியா என்று அவர் விசாரிக்க ம்ம் என்றாள் .

பின்னர் பொதுவாக பிசினஸ் பற்றி பேசியவரின் அங்கிள் ஃப்ரீயா இருக்கீங்களா?சொல்லுடா தாமரை ஃப்ரீயா தான் இருக்கேன்...

வினிதா பற்றி சொல்ல அப்படியா என்றார். ஆமாம் ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்லை ஒருமுறை நீங்க அவங்கள பாத்துட்டு வாங்கலேன் என்கவும் எனக்கும் அவள பாக்கணும்னு ஆசையா தான் இருக்கு..நானா பார்க்க மாட்டேன்னு சொல்றேன் உன் அத்தை அதுக்கு சம்மதிக்க மாட்டேங்கிறாளே என்கவும் மயிலே மயிலே என்றால் இறகு போடாது. ஒருமுறை நேரில் தான் போய் பார்த்துட்டு வாங்களேன் அங்கிள்..

அது வந்து லீலா அங்க இருக்களேமா நான் எப்படி போகிறது இன்னும் மாறனுக்கு லீலாவுக்கும் இந்த விஷயமே தெரியாது என்று வருத்தமாக சொல்ல இப்போ அவங்க ஹஸ்பண்ட் கூட தானே இருக்காங்க.

நீங்க லீலா அக்காவை பார்க்கிறபோல போங்க ஆண்டியை பொதுவாக பார்க்கிற போல பாருங்கள்.யாருக்கும் எந்த சந்தேகம் வராது இல்லையா?.

சரி உன் ஆன்ட்டி கிட்ட நான் சொல்லிட்டு அதுக்கு ஏற்ற போல முடிவு பண்ணுகிறேன் என்றவர் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்து வீட்டிற்குள் சென்றவர் மங்கலம் மங்கலம் என்று கூப்பிட அவரின் மனைவிக்கு கிச்சனிலிருந்து வெளியே வந்தவர் சொல்லுங்கள் என்க தாமரை சொன்ன விஷயத்தை சொல்லவும் நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க என்று கேட்டார்.

எனக்கு என்னமோ வினிதாவ ஒரு முறை பார்க்கணும் போல இருக்கு மங்கலம்.சரிங்க அப்போ கிளம்புங்க டிக்கெட் போடுங்க போகலாமே என்றார்.

உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?.எனக்கு என்னங்க பிரச்சனை தெரியாம ஒன்னும் நான் கல்யாணம் பண்ணிக்கலையே.மாறனுக்கு லீலாவுக்கு தான் இந்த விஷயம் இன்னும் தெரியாது .

இது ஒன்னும் முடிந்த அத்தியாயம் இல்லையே மனசார ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தவங்க தான் நினைச்சிட்டு இருக்கீங்க என்ன நம்ப மூணு பேருக்குமே தெரிந்த விஷயம் தானே என்றார்.

தன்னை புரிந்து கொண்ட மனைவி கிடைப்பது எவ்வளவு பெரிய வரம் என்று நினைத்து இந்த வயதிலும் அவரால் பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை.

நீலகிரி:

வழக்கம்போல் ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருந்த செல்லாவை மருதுவும் வம்பு பண்ணிக் கொண்டிருந்தான்.

ஐயோ மாமா கொஞ்ச நேரம் சும்மா இருங்க நான் ரெடி ஆகிடுறேனென்று சொல்ல நான் என்னடி பண்ணேன் என்று மனைவியின் இடுப்பை தன்னோடு இறுக்கி அணைத்தபடி கேட்க ஆமா இப்படி இருந்தாக்க நான் எப்படி ரெடி ஆகிறது..

விடுங்க தலை சீவனும் என்று சொல்ல நீ செய்யுடி நான் என்ன உன் தலை முடியை பிடித்து வைத்திருக்கிறேனா? இது ஒன்றும் குறைச்சல் இல்லை என்ற பல்லை கடித்தவள் அவன் கைகளில் இருந்தவாறு திரும்பி நின்று அங்கிருந்த கண்ணாடியை பார்த்து தலை முடியை சீவ மருதுவோ தன் மனைவியின் முதுகில் முகத்தை வைத்து உரச அவனின் தாடியும் மீசையின் குறுகுறுப்பில் செல்லாவும் அப்படி இப்படி என்று நெளிந்தாள்....

ஒரு வழியாக கணவனின் சேட்டைகளில் இருந்து தப்பித்து தயாராகி தனது ஹேண்ட் பேக்கோடு வெளியே வந்தவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

என்ன இப்படி இருக்கு என்று யோசித்துக்கொண்டு படியிறங்கி வந்த செல்லாவிற்கு தலை சுற்றுவது போல் இருக்க படியில் கால் வைக்கும் போது தடுமாறியவள் பக்கத்திலிருந்த மாடிப்படியின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள்.

மனைவியின் பின்னாடியே வந்தவன் அவள் அங்கே உட்கார்ந்து இருப்பது பார்த்து என்னடி ஆச்சு என்க...தெரியலை மாமா தலை சுத்துற போல இருக்கு என்றாள்.

நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிட்டா தானே டி.மனசுல என்னமோ பீரங்கி குண்டுனு நெனப்பு போல சும்மா சின்ன பிள்ளைங்க சாப்பிடுற போலவே சாப்பிட்டுட்டு இருக்க...

ஒழுங்கா சாப்பிடு டி பாரு குச்சி போல இருக்கிற அப்புறம் என் அத்தையும் மாமாவும் என்ன நினைப்பாங்க சாப்பாடு போடாம உன்னை பட்டினி போட்ட போல நினைக்க மாட்டார்களா என்று திட்டிக்கொண்டு மனைவியின் கையை பிடித்து தூக்கி விட்டவன் பொறுமையாக அவளை அழைத்துக்கொண்டு கீழே வந்தவன் அங்கிருந்த டைனிங் டேபிளில் உட்கார வைத்து தயாராக இருந்த டிபனை எடுத்து பரிமாறு இருக்கட்டும் மாமா நானே சாப்பிடுகிறேன் என்றாள்.

தனக்கான தீர்வு எடுத்து வைத்து சாப்பிட்டான் இரண்டு வாய் சாப்பிட்டவர்களுக்கு உமட்டுவது போல் இருக்கவும் வேகமாய் எழுந்து போய் வாஷ்பேஷன் அருகில் சென்று வாமிட் பண்ண மனைவியின் வேகமாக போவதை பார்த்து பின்னாடியே வந்த மாதிரி அவள் தலையை பிடித்துக் கொண்டு என்னடி ஆச்சு என்றான். ...

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top