Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 570
- Thread Author
- #1
பரவாயில்லங்கணா கொஞ்ச தூரம் தானே நான் போய்கிறேன்.நீங்க ஸ்கேன் முடிச்சுட்டு நல்லபடியா வீட்டுக்கு போங்கள் என்று இருவரிடமும் சொல்லிக் கொண்டு வெண்ணிலா அங்கிருந்து சென்றாள்.
சிறிது நிமிடங்கள் சென்று தாமரை என்று அட்டெண்டர் கூப்பிட அவளும் அங்கிருந்த ஸ்கேன் ரூமுக்கு சென்றாள். உள்ளே வந்தவளை இதில் படுமா என்று அங்கு இருந்து மானிட்டர் முன்பு உட்கார்ந்திருந்த டாக்டரோ பக்கத்தில் இருந்த பெட்டை காட்டி சொல்ல...
தாமரையும் பொறுமையாக அதில் ஏறிப் படுக்க புடவையை விலக்குமா என்கவும் தாமரையும் வயிறு தெரியும்படி கொஞ்சம் முந்தானை எடுத்து விடவும் அதன் மேல் ஒரு ஜெல்லை தடவியவர் கையில் இருந்த மவுஸ் மூலம் வயிற்றில் மூமென்ட் பண்ணி மானிட்டரை பார்க்க குழந்தையின் இதய துடிப்பு அதில் நன்கு தெரிந்தது...
சில நிமிடங்கள் சென்று உங்களுடைய பேபி பாருங்கள் என்று சொல்ல தாமரையும் அந்த மானிட்டரை திரும்பி பார்த்தவளுக்கு புதுவிதமான உணர்வாய் இருந்தது.
கூட யாராவது வந்திருக்காங்களா என்று டாக்டர் கேட்க என்னோட ஹஸ்பண்ட் வந்திருக்காங்க டாக்டர் என்று சொல்லவும் பேர் சொல்லுங்க என்றார்.
என்னவோ என்று பதட்டத்தோடு உள்ளே வர,உங்க பேபியை பாருங்க சார் என்று அவனிடம் மானிட்டரை காண்பிக்க முதன் முதலாக தனது குழந்தையை ஸ்கேனில் பார்த்தவனுக்கு கண்கள் கலங்கியது.
இருவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதை அந்த டாக்டரால் புரிந்து கொள்ள முடிந்தது.முதல் பேபியா என்று கேட்க ஆமாம் என்றனர்.
ஓகே நீங்க போங்க என்று சொல்லிவிட்டு தாமரையிடம் டிஷ்யூ பேப்பரை கொடுத்து ஜெல்லை இதில் துடைத்து கொள்ளுமா என்று சொல்லவும் தாமரையும் பொறுமையாக எழுந்தவள் வயிற்றில் இருந்த ஜெல்லை துடைத்துவிட்டு புடவையை சரி பண்ணிக்கொண்டு வெளியே வந்து கணவன் அருகில் உட்கார்ந்தாள்.
அரை மணி நேரம் சென்றிருக்க குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட் ரெடியாகவும் பெயரை கூப்பிடவும் அதை வாங்கிக் கொண்டு எவ்வளவு பணம் என்று கேட்டு கொடுத்துவிட்டு இருவரும் வீட்டை நோக்கி வரும்போது எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
சிறிது நிமிடங்கள் அமைதியாக பயணம் செய்ய,என்ன மாமா அமைதியாக வர என்று கேட்க ஒரு மாதிரியா இருக்குடி. ஆனால் ரொம்ப சந்தோஷமா இருக்கு.ஒரு சிறு கருவுதான் குழந்தையா வளர்கிறது இல்லையா பெரிய அதிசயம் என்கவும்,ஆமாம் பின்ன குழந்தை என்றால் சும்மாவா என்றாள்
அப்படி கிடையாது எவ்வளவு ஆச்சரியமான விஷயம் பாரேன் என்று பேசிக்கொண்டே இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
வழக்கமாக நாட்களும் செல்ல மசக்கையின் அவஸ்தை தாமரைக்கு அதிகமாக இருந்தது.எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்துக் கொண்டே இருக்க மருமகள் நிலையைப் பார்த்து கவலை பட்டனர்...
இருந்தாலும் பெண்களுக்கே உள்ள வரப்பிரசாதம் என்பதால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.அவரவருக்கு போகும் இடத்தில் என்ன பார்க்கிறார்களோ அதை எல்லாம் தாமரை சாப்பிடுவதற்காக வாங்கிட்டு வந்து ஆளுக்கு ஆள் கொடுக்க, அத்தனை பேர் அன்பிலும் தாமரையும் மூழ்கி திளைத்தாள் ..
ஒரு மாதம் வரையும் தாமரையோடு தங்கி மருமகளுக்கு பிடிக்கும் அத்தனையும் செய்து கொடுத்த வேதாவோ மீண்டும் நீலகிரிக்கு கிளம்பி சென்றார்..
வழக்கம்போல் செல்வி அல்லி இருவரும் ஸ்கூலிற்கு கிளம்பி போய் விட்டனர். அன்று வயலில் மருந்து போடணும் என்பதால் வேலு வண்டியை எடுத்துக்கொண்டு மருந்து வாங்குவதற்காக தேனூர் செல்லும்போது தூரத்தில் பஸ் நிற்பதும் மாணவர்கள் எல்லாம் கீழே இறங்கி நிற்பதும் தெரிந்தது..
என்ன ஆச்சு என்று இவன் அங்கே போக சற்று தூரத்தில் அல்லி அழுது கொண்டிருப்பது தெரிந்து அல்லி என்ன ஆச்சுடா என்று வண்டியை நிறுத்திட்ட போய் கேட்டான்.
தனது அண்ணனை அங்கு பார்க்க அண்ணா என்று வேலுவை கட்டிக்கொண்டு அழுதாள்.பாப்பா என்னடா ஆச்சு எதுக்கு பஸ் நிறுத்தி இருக்கிறார்கள் என்க...
சொல்ல முடியாமல் அவள் தவிக்க செல்வி எங்கே என்று கேட்கவும் அங்கு இருக்கிறாள் என்று பஸ்ஸுக்கு பின்னாடி காட்ட,என்ன ஆச்சு அவளுக்கு என்று தனது தங்கையை அங்கே விட்டுவிட்டு செல்வி செல்வி என்று கூப்பிட மாமா என்று அவனை அணைத்துக்கொண்டு கதறி அழுதாள்.
என்னடா ஆச்சு என்கிற போது அவன் காதில் விஷயத்தை சொல்ல வந்ததே கோபம் அவனுக்கு...சட்டையை கழட்டி தனது வருங்கால மனைவியிடம் கொடுத்து போட்டுக்க சொன்னவன், நேராக அங்கே டிரைவரும் நடத்துனரும் வாக்குவாதத்தில் இருக்கும் மாணவர்களிடம் போனவன் நாலு பேரை அடித்து நொறுக்கி எடுத்தவன் எட்டி அங்கிருக்கும் வேப்ப மரத்தில் குச்சியை ஒடித்து அதாலே அடித்து ரோட்டிலேயே முட்டி போட வைத்தவன் உங்க அப்பனுக்கு போன் பண்ணுங்க டா என்று சொல்ல நால்வரும் தெரியாமல் செய்துவிட்டோம் மன்னித்து விடுங்கள் என்றனர்..
மற்றவர்களோ இவனுகளுக்கு இதே வேலை தம்பி. யாராச்சும் ஒருத்தவங்க இப்படி முடிவெடுத்தா தான் இவனுங்க திருந்துவானுங்க. அவன் வீட்டில் பொம்பள புள்ள இருக்கே அறிவு கிடையாதா என்று ஆளுக்கு ஆள் நாலு பேரையும் திட்டினர்.
இப்ப நீங்களே போன் பண்றீங்களா இல்ல நானே பண்ணட்டுமா டா என்க வேலுவின் தோரணையில் ஒவ்வொருத்தனும் வீட்டு நம்பரை கொடுக்க அவர்களுக்கு கால் பண்ணி உங்க பையனுக்கு அடிபட்டுடுச்சு வாங்க என்று இடத்தை சொல்லி போனை வைத்தான்.
அரை மணி நேரத்தில் நாலு பேரின் அப்பாவும் அங்கே பதரி ஓடி வர மகன் முட்டி போட்டு இருப்பதை பார்த்தவர்கள் என்ன ஆச்சு என்று திரும்ப அங்கிருந்த வேலுவோ அதில் ஓருவரை பார்த்து ஐயா நீங்களா என்று அதிர ஆமா தம்பி....
என்னப்பா இதுலாம்?
எதுக்கு இப்படி இருக்கான் என்று கேட்கவும் சொல்லவே வெட்கமா இருக்கு என்றவன்,அக்கா தங்கையா நினைக்க வேண்டிய பொம்பளைப் பிள்ளைங்களை அதுங்க உடம்ப வச்சு அசிங்க அசிங்கமா பேசிட்டு தொந்தரவு பண்ணியிருக்கிறானுங்க என்று சொல்ல அப்படியா என்றவர் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அவர் மகனை அடித்தவர் உன் கூட ரெண்டு புள்ளை பொறந்து இருக்கிறார்களே அவங்களையும் இப்படிதான் பாப்பியா என்று அத்தனை பேருக்கு முன்னாடி மகனை கேள்வி கேட்டு அடித்தார்.
மற்ற மூவரின் தகப்பனார்களும் என் பையன் அப்படி பண்ணி இருக்க மாட்டேன் என்று சொல்ல ரொம்ப யோக்கியமான பிள்ளையை பெற்று வைத்திருப்பது போல பேசாதீர்கள் என்று டிரைவரும் கண்டக்டரும் சொன்னார்கள்.
டிரைவர் சார் கொஞ்சம் தள்ளி கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டு நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அங்கு வந்தார்.
அவரின் தோற்றத்தை பார்த்தாலே ஆசிரியர் போல் தோன்ற அங்கே தனது பிள்ளைகளை நல்லவர் என்று சொல்லிக் கொண்ட பெற்றோர்கள் முன்பு வந்தவர் இந்த மூன்று பேரில் யாரு உங்களோட பசங்க என்று கேட்க மூன்று பேரும் அவரவர் பிள்ளையை காட்டினர்.
இவனுங்க வயசு என்ன என்னோட வயசு என்ன சொல்லுங்க அனேகமா உங்களோட வயசுல எனக்கு முக்கால் இருக்குமா என்னையே எவ்வளவு கமெண்ட் பண்ணி இருக்காங்க இந்த பஸ்ல என்பது உங்களுக்கு தெரியுமா இல்லை எனக்கு தெரியுமா?
ஒரு நிமிஷம் ஆகுமா இவங்களை செருப்பால என்னால் அடிக்கிறதுக்கு.என் பையனோட வயசு இவங்களுக்கெல்லாம் ஒரு பெத்த தாயை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கணுமோ அதை பார்க்காம அவளோட உடம்பு ரசிக்கிறதுதான் லட்சணமா? வெக்கமா இல்லையா இந்த கேடு கெட்ட பையனுக்காக கொடி புடிச்சுகிட்டு வரீங்களே..இதே பஸ்ல மற்ற பிள்ளைங்க எல்லாம் வராங்களே அவங்க பேர் எல்லாம் எங்கேயாச்சும் வெளியில வந்து இருக்கா?.
நினைச்சிருந்தாக்க இவனுங்களை எப்பவோ போலீஸ் ஸ்டேஷன்ல தூக்கி உள்ள போட சொல்லிருப்பேன். இவனுங்க வயசும் படிக்கிற பிள்ளை கெட்டுப் போயிடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக தான் நானும் பல்ல கடிச்சுக்கிட்டு இரண்டு வருஷமா இந்த பஸ்ல வந்துட்டு இருக்கேன் அது தெரியுமா உங்களுக்கு என்று கேட்கவும் இவ்வளவு நேரம் தனது பிள்ளைகளுக்காக சப்போர்ட் பண்ணி பேசியவர்களோ தலை குனிந்து கொண்டனர்...
தம்பி அந்த அந்த குச்சியில் அடிக்க கூடாது அந்த பொம்பள புள்ள கால்ல போட்டு இருக்க செருப்பு இருக்கு அதை கழட்டிட்டு வந்து இவனுங்கள அடிக்கணும் அப்பயாவது புத்தி வரும் தம்பி.
ரொம்ப நல்ல காரியம் பண்ணீங்க என்று வேலுவை பாராட்டியவர் இனியாவது இவனுங்கள அடக்கி வளங்க. இல்லனா எல்லா நேரமும் இதேபோல பொறுமையா போகமாட்டோம் என்று அவனுங்களின் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து செல்லும் போது கண்டக்டர் சார்,டிரைவர் சார் நீங்க போய் பஸ் எடுங்க நீங்க போங்க என்று அவரையும் வேலு அனுப்பி விட்டான்.
செல்வி அல்லி ஸ்கூலுக்கு கிளம்புங்கள் என்று சொல்ல நாங்கள் போக மாட்டோம் என்று அழுதனர் இப்ப என்ன நடந்துச்சு ரோட்டுல போகும் போது சில எச்செல்லாம் நம்ம மேல படதான் செய்யும் அதெல்லாம் தட்டி விட்டுட்டு போகணும் புரியுதா என்ற கடுமையாக சொல்லவும் வேலுவின் வார்த்தையை மறுக்க முடியாமல் இருவரும் சரி என்று தலை ஆட்டிட்டு பஸ்ஸில் போய் ஏற சிறிது நிமிடத்தில் பஸ்ஸும் அங்கிருந்து தேனுரை நோக்கி புறப்பட்டது. ..
இந்த விஷயமோ காட்டுத் தீ போல் சுற்றி இருக்கும் மக்களுக்கு பரவ பெண்பிள்ளைகளுக்கு பாதுகாப்பை எல்லா நேரமும் கூட இருந்து யாராவது கொடுத்துக்கிட்டே இருக்க முடியாது.
அவர்களை அவர்கள் தான் பாதுகாக்கணும் என்றவர்கள் பள்ளியிலேயே தற்காப்பு கலையை பெண்களுக்கு கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
நாட்களும் ஓட செல்வி அல்லியும் 12த் பப்ளிக் எக்ஸாம் எழுதி முடித்தனர் அதோ இதோ என்று தாமரைக்கும் 5 மாதம் நடந்து கொண்டிருக்க வயிறு கொஞ்சம் மேடிட்டு முகத்தில் புதுவித அழகோடு வலம் வரும் மனைவியை பார்க்க கதிருக்கு திகட்டவில்லை.
ஐந்தாவது மாதத்தில் அனாடமி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருக்க அந்த ஸ்கேனுக்கான வசதிகள் இங்கு இல்லை மதுரைக்கு தான் போக வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
அதேபோல் மனைவியை அழைத்துக்கொண்டு கூட ராதாவோடு காலையிலேயே மதுரைக்கு கிளம்பினர்... நான்கு மணி நேரத்தில் மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.
நாலு மணிக்கு தான் தாமரைக்கான அப்பாயின்மென்ட் என்பதால் அங்கு ஒரு கடையிலேயே காரை நிறுத்தியவன் தாமரைக்கு பாலும் தனக்கும் தனது அம்மாவுக்கும் டீ வாங்கியவன் மற்றது ஏதாவது சாப்பிடுறிங்களா என்று கேட்க இருவரும் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.
பின்னர் அங்கிருந்து அந்த மல்டி ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிடல் போய் சேர்ந்தவர்கள் ரிசப்ஷனில் விஷயத்தை சொல்ல அவர்களோ மூன்றாவது மாடியில் இடது பக்கம் போனால் வரும் என்று சொன்னாள்.
அனாடமி ஸ்கேனில் தான் குழந்தையின் முடியில் இருந்து கால் நகம் வரை ஸ்கேன் பண்ணி ஏதாவது குறைகள் இருக்குமா என்று தெரிந்து கொள்வது...
தாமரையின் மனதிற்குள் ஒருவித பயம் இருந்தது எந்த குறையும் இல்லாமல் குழந்தை நல்லபடியாக இருக்கணும் அய்யனாரே என வேண்டிக் கொண்டே இருந்தாள்.