• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
567
நீலகிரி:

இங்க இருக்குற ஸ்கூலுக்கு இவளால் நடந்து வர முடியாதா?

என்னமோ ஊர்ல இல்லாதவனை கட்டிக்கிட்ட போல சீனப்போடுறாளே என மனதில் திட்டிக் கொண்டே பவி ஸ்கூலுக்கு வந்தாள்.

அங்கே கணவனோடு வண்டியில் போய் செல்லா இறங்கும் போது ஸ்கூல் ஹெட்மாஸ்டரும் வண்டியில் வந்து இறங்கினார்.

குட்மார்னிங் சாரென்று செல்லா சொல்ல வண்டியை நிறுத்திட்டு வந்தவர் குட்மார்னிங் மா.என்ன சார்க்கு இன்னைக்கு லீவா என்க... இல்லைங்க சார்.நைட் ஷிப்ட். அதான் கூப்பிட்டு வந்தேனென்று மருது சிரிக்க, ரொம்ப நல்ல காரியம் பண்ணுனீங்க மருது.நேரம் கிடைக்கும்போது மனைவிக்கும் கொஞ்சம் டைம் குடுங்க இல்லனா இதையே பெரிய இஷ்யூ ஆக்குவாங்க என்று இப்பொழுது ஹெச்சம் சிரிக்க ரொம்ப அனுபவம் போல இருக்கே சார் என்றான்.

ஹாஹாஹா என்று சிரித்தவர் ஆமா ஆமா ஆமா அனுபவம் தானே சிறந்த பாடம். நேரம் ஆயிடுச்சு இன்னொரு நாளைக்கு பார்த்து பேசலாம் என்று அவர் சென்று விட மதியம் சாப்பிடுவதற்கு நான் கூப்பிட வரேன் என்று மருதும் சொல்லிக்கொண்டு வண்டியில் ஏறி சென்றான்.

மூச்சு வாங்க நடந்து வந்தவளோ செல்லா எங்க இருக்கிறாள் என்று தேட அவளோ இன்னொரு டீச்சரிடம் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்க பவிக்கு எரிந்தது.

உள்ளே போய் வருகை நோட்டில் கையெழுத்து போட்டவள் வெளியே வரவும் பிரேயர் ஆரம்பிப்பதற்கான பெல் அடிக்க செல்லாவிடம் அவளால் பேச முடியவில்லை.

சரி எப்படியும் இன்டர்வல் வருமே அப்ப மூக்கை உடைக்கிற போல ஏதாச்சும் பேசியே ஆகணும் என்று நினைத்துக் கொண்டு பிரேயர் அட்டென்ட் பண்ண சென்று விட்டாள். நேரமும் கடந்து செல்ல அதே போல் மூன்றாவது பாட வேளைக்கு பிறகு இன்டர்வெல் பெல் அடித்தது.

ஸ்டாப் ரூமில் மூன்று பேரும் உட்கார்ந்து இருக்கும் போது அர்ப்பணுக்கு வாழ்வு வந்த அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிற கதை போல இங்கு இருக்கிற வீட்டிலிருந்து ஸ்கூலுக்கு வர வண்டியில் வந்து இறங்குறியே செல்லா என்று சிரித்துக் கொண்டே நக்கலாக பவி கேட்க...

அதற்கு செல்லவோ அடுத்த வீட்டில் ஆண் குழந்தை பிறந்ததற்கு நமக்கு குத்துதே குடையுதேனா என்னங்க டீச்சர் அர்த்தம்?.நீங்களும் உங்க வீட்டுக்காரர் கூட வண்டியில் வந்து இறங்கலாம் இல்லையா அப்படி யாரும் வந்து இறங்கக்கூடாது என்று ஹெச்சம் சார் ஏதாவது ரூல்ஸ் போட்டு இருக்காரா என்று கேட்க அதைக் கேட்டு மற்றொரு டீச்சரோ குட் கொஸ்டீன் என்று சிரித்து விட்டார்.

பவிக்கோ அவர்கள் இருவரும் சிரிப்பதை கேட்டு ரொம்ப இன்சல்டாக இருந்தது. எப்படியாவது இவ மூக்கு உடைத்தே ஆகணும் என்று நினைத்தவர் என்ன செல்ல பண்றது உன் வீட்டுக்காரர் போல என் புருஷன் வெட்டியா இல்லையென்க..

அப்படிங்களா என் வீட்டுக்காரர் வெட்டியா இருக்குறாங்க நீங்க வந்து பாத்தீங்களா மேடம் என்று கேட்க,மற்றொரு டீச்சரோ பவி மேடம் எதுக்கு இப்படி அனாவசியமாக பேசுறீங்க?

மருதுசார் நல்ல போஸ்டிங்கில் மாதம் 70000 ஆயிரம் சேலரி வாங்குறார்.பட் உங்க ஹஸ்பண்ட் சொந்த எஸ்டேட்டில் மேனேஜரா இருக்காரு அவருக்கு என்ன எப்படியும் 20 இல்லை 30 ஆயிரம் சம்பளம் இருக்குமா என்க... பவிக்கோ முகம் கறுத்துவிட்டது.

ஏனென்றால் அவள் புருஷனுக்கோ 40 ஆயிரம் சம்பளம் ஆனால் இந்த ஆட்டுக்கார பயலுக்கு 70 ஆயிரமா என பொறாமையாக இருக்க கடவுளே எப்படியாவது இந்த வேலை அவனுக்கு நிலைக்க கூடாதென்று வேண்டிக் கொண்டாள்.

மதியம் சாப்பிட கூப்பிடுவதற்காக மருதுவும் வந்து கேட்டின் அருகில் நிற்க செல்லாவும் பெல் அடித்த உடனே வந்தாள். அவள் போவதை ஸ்டாப் ரூமில் இருந்து எட்டிப் பார்த்த பவி எங்க போறாள் என்று பார்க்க அவள் போய் மருது பின்னால் உட்காருவதை பார்த்து இவளுக்கு முழு நேர பாடிகார்ட் ஆகிட்டான் போல என்று முணவியவள் சாப்பிட சென்றாள்.

செல்லாவோ அமைதியாக உட்கார்ந்து வருவதை கண்ணாடி வழியாக பார்த்தவன் என்னடி ஆச்சு பிள்ளைகளுக்கு பாடம் நடத்தி நடத்தி வாய்வலித்து விட்டதா என்று கேட்க அதற்கும் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

காலையில் நல்லா தானே போனாள் அதற்குள்ள என்ன வந்துச்சு என்று யோசித்தவனுக்கு பவியின் நினைவு வர அவங்கதான் என்னமோ சொல்லி இருக்காங்க போல என்று நினைத்தவன் பவி உன்னை என்ன சொன்னார்கள் என்று கேட்க ஒன்னும் சொல்லவில்லை என்று இப்பொழுதுதான் வாயை திறந்தாள்.

ஒன்னும் சொல்லாமதான் இப்படி மூஞ்சிய தூக்கி மோட்டு வளையில வச்சு இருக்கியா டி என்று கேட்க இங்கு இருக்கிற ஸ்கூலுக்கு என்னால நடந்து வர முடியாத மாமா இத்தனை நாள்ல நான் நடந்து தானே வந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் போதே அவள் குரல் அழுகுரல் போல இருக்க என்னடி ஆச்சு என்று வண்டியை நிறுத்தி பின்னாடி திரும்பி மனைவியை பார்க்க செல்லாவின் கண்கள் கலங்கி இருந்தது.

ஒழுங்கு மரியாதையா சொல்லு அந்த பவி உன்னை என்ன சொன்னாங்க என்று கேட்க பின்னர் காலையில் நடந்தது எல்லாம் சொல்லும்போது அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது...

அடி அறிவு கெட்டவளே அவங்க பொறாமையில பேசுறாங்க இது கூட உனக்கு புரியலையா...நானே அவங்களை வாங்க போங்கன்னு மூணாவது மனுஷனா கூட நினைக்காம பேசிட்டு இருக்கேன்.

நீ என்னமோ இதெல்லாம் போய் சட்ட பண்ணிட்டு இருக்கே உன் புருஷன் கூட தானே வண்டில போய் இறங்குற ?இல்லை ஊர்ல இருக்கிறவன் கூட போய் இறங்குறியா என்று கேட்க, என்ன என்று இப்பொழுது செல்லா கணவனை முறைத்து பார்க்க, இந்த ரோஷத்தை எல்லாம் அவங்ககிட்ட காட்டுடி என் கிட்ட காட்டாதே என்று வண்டியை கிளப்பி வீட்டை நோக்கி சென்றான்.....


சீமக்கரை:

வழக்கம்போல குளித்து தயாராகி கீழே வந்த தாமரை பூஜை அறைக்கு போய் சாமியை கும்பிட்டு விட்டு கிச்சனுக்கு போக அங்கே ராதாவோ கூழ் கிண்டிக்கொண்டு இருந்தார்.

அத்தை என்க வாம்மா என்றவர் மதியம் வயலுக்கு கொடுத்து அனுப்புறதுக்காக ராகி கூழ் கிண்டிக்கிட்டு இருக்கேன் என்க சரிங்க அத்தை என்றவள் அவள் வழக்கமாய் செய்யும் வேலையை தொடங்கினாள்.

சீதாவோ தோட்டத்திலிருந்த பசுவிடமிருந்து பால் கரந்து எடுத்துட்டு வந்தவர் அடுப்பில் வைத்து சூடு பண்ணியவர் முதலில் மருமகளுக்கு ஒரு கிளாஸில் தனியாக ஊற்றி வைத்துவிட்டு மற்றவர்களுக்கு டீ போட தாமரையும் வீட்டை கூட்டு முடித்துவிட்டு வர, அதுல பால் இருக்கு பாரு எடுத்து குடி தாமரை என்கவும் பாலா என்றாள்.

இந்த நேரத்துல காபி எல்லாம் குடிக்க கூடாது பால் தான் குடிக்கணும் எனக்கு பாலே பிடிக்காதுங்கத்தை என்பவளை பார்த்து,அது சுண்ட காய்ச்சின பால் குடிச்சு பாரு...

அந்த டேஸ்ட் உனக்கு ரொம்ப பிடித்து விடும் என்பது ராதா சொல்ல சரிங்கத்தை என்று வேண்டா வெறுப்பாக குடிக்க ஆரம்பித்தவளுக்கு உண்மையிலேயே அதன் சுவை மிகவும் பிடித்து விட்டது.

ஹார்லிக்ஸ் போல இருக்குங்கத்தை என்க, பால் சுண்டக்காச்சுன்னாக்க அப்படித்தான் இருக்கும்மா என்று சிரித்தார்.

அத்தை இன்னைக்கு காலையில ஹாஸ்பிடல் போகலாமென்று உங்க பையன் சொன்னாரு என்று சொல்ல, சரிம்மா.அந்த காஞ்சனா அம்மா கிட்ட தானே..ரொம்ப கைராசியானவங்க..

அப்புறம் இவ்வளவு தூரம் வண்டியில் வேண்டாம். கதிர கார் எடுத்துட்டு வர சொல்லு என்க சரிங்கத்தை என்றாள். பின்னர் மூவரும் பேசிக்கொண்டே காலை உணவு தயார் பண்ணினார்கள்.

நேரமும் கடந்து செல்ல இருவரும் தயாராகி கீழே வந்தவர்கள் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு காரில் ஏறி ஹாஸ்பிடல்லை நோக்கி சென்றனர்.

அப்புறம் மேடம் உங்களுக்கு என்ன வேண்டும்னு கேட்டேனே என்றவாறு கதிர் கார் ஓட்ட தாமரையா ஒன்னும் வேண்டாம் என்றாள்.

அப்போது இருப்பவர்களுக்கு முன்னால் தேவி நடந்து சென்று கொண்டிருக்க தங்களின் ஜோடி புறா நடந்து போவுது என்று கிண்டல் பண்ணினாள்.

என் ஜோடி புறாதான் இங்க இருக்கியேடி என்றவன் தேவியின் அருகில் போய் காரை நிறுத்த அவளோ திடிரென்று பக்கத்தில் கார் வந்து நிற்கவும் திடிக்கிட, வா மா டவுனுக்கு தான் போறேன் உன்னை ஸ்கூல்ல விட்டு போறேன் என்று கூப்பிட அவளோ இல்லைங்க பரவாயில்லை என்று சொல்லி நடந்து சென்றாள்.

ஆஹான்....

முறைப்பொண்ணு நடக்குறது சார்க்கு நெஞ்சு வலிக்கிது போலயென்று தாமரை கேட்க,ஆமாடி ஆமாம் என்று சிரித்தவன் நல்ல புள்ளைடி.ஒரு விதத்தில் தேவிக்கு நீ நன்றி சொல்லணும்டி.

அந்த புள்ளை மட்டும் அன்றைக்கு அப்படி ஒரு வேலை பண்ணவில்லை என்றால் இதயம் முரளி போல உன்னை எட்டி நின்று பார்த்தே ஏங்கி போய் துரும்பா இளைச்சிருப்பேன்டி என்று சொல்ல...

அப்போ ஐயா சரியான தொட நடுங்கி அதானே என்று தாமரை சிரிக்க எதேஏஏஏஏ உன் புருஷன் வீராதி வீரன்டியென தனது மீசையை நீவி விட்டு சொல்ல ஆமாம் ஆமாமென்று சிரித்தாள்...


இவரும் பேசிக்கொண்டே டவுனில் இருக்கும் காஞ்சனா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

மனைவியோடு உள்ளே போனவன் அங்கிருந்த பெண்ணிடம் தாமரைக்கு டோக்கன் போட சொல்ல,15 வது டோக்கன் என்று அவனிடம் கொடுக்கவும் அதை வாங்கிட்டு வந்து மனைவியோடு உட்கார்ந்து கொண்டான்.

இந்த ஊரிலே இதுதான் பெரிய ஹாஸ்பிடல்.இதுக்கு அப்புறம் டிரீட்மென்ட் பாக்கணும்னாக்க மதுரைக்கு தாண்டி போகணும் என்று மனைவியிடம் அந்த ஹாஸ்பிடலை பற்றி கதிர் சொல்லிக் கொண்டிருந்தான்...

நேரமும் கடந்து சென்றது டோக்கன் நம்பர் 15 என்று கூப்பிட்டவுடன் தாமரையும் கதிரும் எழுந்து உள்ளே போக அங்கே 55 வயது மதிக்க தக்க டாக்டர் காஞ்சனா உட்கார்ந்து இருந்தார்.

குட் மார்னிங் டாக்டர் என்றபடியே தாமரை அங்க போய் உட்கார அவரும் குட் மார்னிங் என்றவர் சொல்லுங்கம்மா என்ன பண்ணுது என்க,தனக்கு வந்த தலைச்சுற்றலையும் வாந்தியும் பற்றி சொல்ல பிரக்னன்சி டெஸ்ட் எடுத்து பார்க்கலாம் என்று சொல்லியவர் மெடிக்கலில் இருந்து கிட்டு வாங்கிட்டு போய் டெஸ்ட் பண்ணி வர சொன்னார்.

இருவரும் வெளியே வர கதிர் போய் மெடிக்கலில் கிட் வாங்கிட்டு வந்து மனைவியிடம் கொடுக்க தாமரையும் அங்கிருந்து உள்ளே இருக்கும் ரெஸ்ட் ரூமை நோக்கி சென்றாள்.

சிறிது நிமிடத்தில் வெளியே வரும் மனைவின் முகத்தை பார்த்து கொண்டிருந்தவனோ என்ன என்று புருவத்தால் கேட்க ஒன்றும் இல்லை என்று மௌனமாக சிரித்தாள்.அதற்கு பின்னர் இரண்டு பேஷண்ட் உள்ளே போயிட்டு வர இப்பொழுது கதிரும் தாமரையும் உள்ளே போய் டாக்டரிடம் ரிசல்ட் காண்பித்தனர்.

அவரும் எத்தனை நாட்கள் ஆகுது என்று கேட்கவும் தாமரையும் கணக்கு பண்ணி சொல்ல அடுத்த வாரம் ஸ்கேன் ஒன்னு எடுத்து பாத்துடலாம் என்று சொன்னவர் மேலும் வழக்கமாக கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லும் அறிவுரையை அவளுக்கும் சொல்லி அனுப்பினார்.

இருவரும் பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தவர்கள் நேராக அங்கு இருக்கும் அப்பு பேக்கரிக்கு சென்று வீட்டினற்கு கொடுப்பதற்காக சுவீட் மற்றும் கேக் வகைகளை வாங்கியவன் அங்கிருக்கும் அம்மன் கோயிலுக்கு அழைத்து போனான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
567
அங்கு போய் அர்ச்சனை பண்ணிவிட்டு சாமியை வணங்கியவர்கள் கோயிலில் சுற்றி வந்து உட்காரவும் மதியம் 12 மணிக்கு நடை சாத்தும் நேரம் வரவும் சரியாக இருந்தது.

பின்னர் இருவரும் காரில் ஏறி வீட்டுக்கு வரும்போது அங்கே வழியில் நிறைய மரங்கள் இருப்பதால் புளிய மரத்தின் ஓரமாய் போய் காரை நிறுத்தியவன் தனது பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை எடுத்துப் பிரித்தவன் வாழ்த்துக்கள் டி என்று மனைவியின் முன்னால் நீட்ட, சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டாள்.

பாதியை சாப்பிட்டவள் உங்களுக்கு மாமா என்க,எங்கடி?கொடுத்தால் தானே சாப்பிட முடியும் என்றவன் மனைவியின் கழுத்தை எட்டி வளைத்து தன் பக்கம் இழுத்தவன் அவள் உதட்டோடு உதட்டை பொறுத்த அவள் வாயில் இருந்த சாக்லேட் கதிரின் வாய்க்குள் மாறியது.

ஆழ்ந்த முத்தத்தை மனைவிக்கு கொடுத்தவன் ரொம்ப சந்தோஷமா இருக்குடி.நமக்கென்று வாரிசு வரப்போகுது இருந்தாலும் டாக்டர் கிட்ட வந்து கன்ஃபார்ம் பண்ணினால் தான் மனசு திருப்தி ஆகுது என்க...

போக்கிரி மாமா என்னையா வேலை பார்த்த என்று முறைக்க சாக்லேட் சாப்பிட்டேன் டி என்றான்.ஓ உங்க ஊர்ல இப்படித்தான் சாக்லேட் சாப்பிடுவாங்களா என்று கணவனின் தோள்பட்டையில் அடிக்க,ஆமாண்டி ஆமா...

இது தான் ஸ்டார்டிங் இன்னும் எவ்வளவோ இருக்கு தெரியுமா எங்க ஊரு பழக்கம்....

எல்லாம் போக போக மாமா உனக்கு கத்து தரேன் என்று சொல்லிவிட்டு காரை ஸ்டார்ட் பண்ணியவன் முன்னே பின்னே ஏதாவது வண்டி வருதா என்று பார்த்துவிட்டு அங்கிருந்து வீட்டை நோக்கி சென்றான்.

வீட்டிற்கு வந்தவர்கள் டாக்டர் சொல்லியதை சொல்ல சீதா உடனே கவிதாவுக்கும் பாருக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்லு என்று வள்ளி அப்பாயி சொல்ல சரிங்கத்தை என்றவர் அதே போல் தனது நாத்தனார்களுக்கு போன் பண்ணி மருமகள் உண்டாகி இருக்கும் விஷயத்தை சொல்ல இருவரும் கேள்விப்பட்ட உடனே சந்தோஷமாக வீட்டிற்கு வந்து விட்டனர்.

மகளை கிள்ளி முத்தமிட்ட இருவரும் எத்தனை நாள் தள்ளி போயிருக்கு என்று விசாரித்துவிட்டு மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து அங்கிருந்து அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

தாமரை உண்டாகியிருக்கும் விஷயத்தை கேள்வி பட்ட வேதாவோ அன்றே அங்கிருந்து சீமக்கரைக்கு கிளம்பி வந்து விட்டார்.தான் தூக்கி வளர்த்தவள் இன்று தாயாகியிருப்பதை பார்க்க வேதாவிற்கு ஆனந்தக் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

நாட்களும் செல்ல மசக்கையின் அசௌகரியங்கள் தாமரையை வாட்ட ஆரம்பித்தது. எது சாப்பிட்டாலும் வாந்தி எடுத்துக் கொண்டிருக்க பார்ப்பவர்களுக்கும் பாவமாக இருந்தது.

பகலெல்லாம் வயலில் பாடுபடுபவனோ இரவில் மனைவியை கையில் வைத்து தாங்கினான்.வயலுக்கு செல்லும் நேரத்தை குறைத்தவன் மனைவியோடு இருக்கும் நேரத்தை அதிகரித்தான்.

டாக்டர் சொன்ன போலவே 10 நாட்கள் சென்று இருவரும் ஹாஸ்பிடலுக்கு ஸ்கேன் பண்ண சென்றிருந்தனர். ஸ்கேன் பண்ணுவதற்கு முன்னால் தண்ணீர் நிறையாக குடித்துக்கொள்ள சொல்ல முடிந்த அளவுக்கு தாமரையும் குடித்துவிட்டு போதும் மாமா என்று சொல்ல அவள் முகத்தை பார்த்தவன் சரி என்று விட்டு விட்டான்.

அப்பொழுது தாமரையை பார்ப்பதற்காக நிலாவும் அங்கு வந்திருந்தாள்.அவள் யார் என்று தாமரைக்கு தெரியாது. அவளைப் பார்த்த கதிரோ வா மா வெண்ணிலா என்க அந்தப் பெயரை வைத்து தான் வளவனிற்கு நிச்சயம் பண்ணிய பெண் என்பதை புரிந்து கொண்ட தாமரையும் வா மா நல்லா இருக்கியா என்று கேட்டாள்.

நல்லா இருக்கேன் கா. நீங்க நல்லா இருக்கீங்களா?நீங்க ஹாஸ்பிடல்ல வந்து இருக்கீங்கன்னு அவர் சொன்னாரு அதான் ஸ்கூல்ல இருந்து உங்கள பாத்துட்டு போகலாம்னு வந்தேன் என்று சொன்னவள் தாமரைக்காக வாங்கிட்டு வந்து பழ கவரை அவளின் முன்பு நீட்டினாள்.

எதுக்கு இதெல்லாம் என்றபடி வாங்கியவள் வீட்டுக்கு வரலாம் இல்லையா என்கவும் கல்யாணத்துக்கு முன்னாடி வரக்கூடாது இல்லைங்களாக்கா என்று சிரித்தாள்.

வெண்ணிலாவும் தனது தம்பி சிவாவும் சிறு வயது நண்பர்கள் என்று கேள்வி பட்டிருக்காளே தவிர இன்றுதான் தாமரையும் அவளை பார்க்கிறாள்.

சிறிது நிமிடங்கள் பேசியிருந்து விட்டு சரிக்கா பர்மிஷன் கேட்டுதான் வந்தேன் நான் கிளம்புறேன் என்று சொல்ல எப்படி மா வந்த என்று கதிர் கேட்க நடந்து தான் ணா வந்தேன் என்றாள்.

என்னாஆஆஆ நடந்து வந்தியா இப்ப லஞ்ச் டைம் தானே போகும்போது உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு போறேன் என்று கதிர் சொல்ல இருக்கட்டும் ணா. நான் போயிக்கிறேன் என்ற நிலாவை பார்த்தவள் இவர் உனக்கு அண்ணா இல்ல மூத்தார்.மாமா என்று சொல்லு என்கவும்,அண்ணன் என்று சொல்லி பழக்கம் ஆயிடுச்சுங்கக்கா என்றாள்.....

சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலவனின் போனிற்கு கால் வர அந்த வழியாக வந்த ராதாவோ மகனின் போனை எடுத்தவர் நிலவா போன் வருது பா என்று சொல்ல பெயர் என்னம்மா என்று கேட்டான்.

அஞ்சு என்று வருது என்கவும் அவ கூட பெரிய ரோதனையா இருக்கு என்று முணுமுணுத்தவன் அட்டென்ட் பண்ணாதே விடுமா என்று சொல்லியவன் ம்மா எனக்கு ஒரு முட்டை தோசை என்று கிச்சனில் இருக்கும் சீதாவிற்கு குரல் கொடுத்தான்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மகனின் அருகில் வந்த ராதாவோ யார்ரா அந்த அஞ்சு என்று முறைத்துக் கொண்டு கேட்க என்னோட ஜூனியர் பொண்ணு மா என்றான்.

ஜூனியர் பொண்ணு உனக்கு எதுக்கு போன் பண்ணுது என்று அடுத்த கேள்வியை கேட்க,நம்ப ஊட்டுக்கு மருமகளா வரணும்னு ரொம்ப ஆசையா இருக்காம்.அதுக்கு தான் ஓயாம போன் பண்ணி உசுர வாங்குறாள் போதுமா?
உன் சிஐடி கேள்வி முடிஞ்சிடுச்சுனா என்ன சாப்பிட விடுகிறாயா என்று கடுப்பில் நிலவன் சொல்ல,உள்ளே வந்த பெருமாள் அதைக் கேட்டு என்னடா பண்ணி வைத்திருக்கிறாய் என்று சத்தம் போட்டார்.

அய்யய்யோ அப்பா என்று அவன் அதிர்ந்து போய் சொல்ல அப்பத்தாண்டா பின்ன யாரு இல்லைன்னு சொன்னா என்றவாறு அவனுக்கு எதிரில் இருந்த ஷோபாவில் வந்து உட்கார்ந்தவர் என்ன சமாச்சாரம் ராதா என்கவும் ஏதோ ஒரு பொண்ணு அஞ்சுன்னு போன் பண்ணுச்சி மாமா.

கேட்டா ஜூனியர் பொண்ணு வீட்டுக்கு மருமகளா வரணும்னு ஆசைப்படுகிறானு உங்க மகன் சொல்றான் என்று ராதா போட்டு கொடுக்க அடக்கடவுளே...விஜயசாந்தி இப்படி பண்ணிட்டியே என்று தனது அம்மாவை பார்த்து முறைத்தான்.

சரி நீ சாப்பிடு என்றவரின் பார்வை மட்டும் நிலவனிடம் இருக்க அவனோ எந்த பதட்டமும் இல்லாமல் சீதா கொடுத்த தோசையை சாப்பிட்டு முடித்தவன் கையை கழுவிட்டு வந்து பெருமாளின் முன்னே நின்றவன் அப்பா அந்த பொண்ணு பேரு அஞ்சு..
என்னுடைய ஜூனியர் தான்.சொந்த ஊர் கல்பாக்கம் அவங்க அப்பா அம்மா இரண்டு பேரும் டாக்டர் தான்.அந்த பொண்ணு அதோட விருப்பத்தை சொல்லுச்சு ஆனா எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரலப்பா.

அந்த புள்ளைய பார்க்கும்போது எனக்கு நம்ப செல்வி போல தான் தோணுது தங்கச்சியா நினைக்கிற பிள்ளையை போய் பொண்டாட்டியா நினைக்க எனக்கு மனசு வரல...அந்த புள்ள கிட்ட எவ்வளவு சொல்லிட்டேன் அது புரிஞ்சுக்கவே மாட்டேங்குது என்று தன் மனதில் இருப்பதை சொல்ல மகனை நினைத்து அவருக்கு பெருமையாக இருந்தது.

ஐயா உன் மேல பெரிய கனவு கோட்டையை கட்டி வைத்திருக்கிறோம். இந்த ஊர்ல யாருமே படிக்காத படிப்பை நீ படிக்கிறாய்,.அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு.அதனால உன் மனசுல இருக்குற ஆசையை விட்டுட்டு உன் கனவை நிறைவேத்தனும்னு அப்பா என்னைக்குமே சொல்ல மாட்டேன்.

உனக்கு புடிச்சிருந்தா சொல்லு படிச்சி முடிச்சி வேலைக்கு போன பொரவு அதே புள்ளைய கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்லவும்,இல்லப்பா எனக்கு அப்படி ஒரு எண்ணம் வரல...நான்தான் சொல்லிட்டேனே எனக்கு அந்த பிள்ளையை பார்த்தால் செல்வி போல தோணுது அது கூட என்னால எப்படி வாழ முடியும்.இப்போதைக்கு என் மனசுல யாருமே இல்ல.

ஒருவேளை நான் படிச்சு முடிச்ச பிறகு வேற யாராச்சும் பார்த்தால் அப்படி ஒரு எண்ணம் வருமானு எனக்கு தெரியாது. வந்தால் அப்போ நிச்சயமா நான் வந்து உங்க கிட்ட சொல்லுவேன்பா மத்தபடி உங்ககிட்ட மறைச்சி நானே திருட்டுத்தனமா பண்ணும் எண்ணம் எனக்கு சுத்தமா கிடையாது.

அப்படி என்னை நீங்க வளக்கவில்லை என்று சொல்ல தங்களது வளர்ப்பு தவறாக போகவில்லை என்பதை கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் நிலவனை நினைத்து பெருமையாக இருந்தது.

அப்பொழுது மீண்டும் அஞ்சுவின் நம்பரிலிருந்து கால் வர இந்த முறை அட்டென்ட் பண்ணிய பெருமாள் அம்மாடி அஞ்சு நல்லா இருக்கிறியா என்று கேட்க அவளோ ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனாள்.

நிலவன் இப்ப தான் விஷயத்தை சொன்னாம்மா.இந்த வயசுல எல்லாருக்கும் வர விருப்பம் தான் உனக்கு வந்துருக்கு.ஆனா அவன் உன்னை என் பொண்ணு போல பாக்குறான். இதுக்கு அப்புறம் உனக்கு விளக்கமா சொல்லணும்னு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் என்று சொல்ல சிறிது நொடிகள் சென்று அந்த பக்கம் இருந்து அஞ்சுவோ என்னை மன்னிச்சிட சொல்லுங்க அங்கிள் என்று சொல்லி போனை வைத்தாள்.


காத்திருந்தேன்...
 
Active member
Joined
May 9, 2025
Messages
122
Pavima why sooooo jealous of everyone
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top