• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
563
சீமக்கரை:

நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிய எல்லாரையும் சாப்பிட அனுப்பி வைத்தனர்.வந்தவர்கள் எல்லாரையும் நன்கு கவனித்து அனுப்பவும் கடைசியாக பொண்ணு மாப்பிள்ளையோடு வீட்டினர் எல்லாரும் சாப்பிட போனார்கள்..

தாமரையும் கதிரும் அருகருகே அமர்ந்தது போல வேலு-செல்வி,ஜான்-அல்லி ஜோடி ஒரே வரிசையில் அவரவர் இணையோடு அமர்ந்து கொண்டனர்.

தனது இடது பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவளின் இடது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கதிர் உட்கார்ந்திருக்க மாமா என்றாள்.
என்னடி என்று அவள் பக்கம் குனிந்து கேட்க லவ் யூ என்று சொல்லவும் கதிருக்கோ சிரிப்பு வந்துவிட்டது.என்னடி திடீர்னு என்று கேட்க ரொம்ப அழகா இருக்க என்றாள்.

ஓஓஓஓ அப்போ இத்தனை நாளும் என்ன குறவன் போலயா இருந்தேன் என்று கேட்க ,ஆமா அதுல என்ன சந்தேகம். இருந்தாலும் இதைவிட அந்த தாடியோடு தான் நல்ல அழகா இருந்த மாமா. பார்க்க நல்லா அடங்காத காளை போல என்று சொல்ல அடக்கடவுளே...உனக்கு பிடிக்கலைன்னு தாண்டி நான் வேறு அவசரப்பட்டு மனசு இல்லாம ஷேவ் பண்ணுனேன்.
இனி எந்த காலம் தாடி வளரும் என்று கேட்க,யோவ் இப்பயும் நல்லா இருக்குயா என்று அவசரமாக சொன்னாள்.

அப்படியா...உனக்கு புடிச்சிருந்தா எனக்கு ஓகே தான்டி.என் பொண்டாட்டிக்காக தான் ஷேவ் பண்ணுனேன் என்று சொல்ல, நிஜமாவா என்பவளுக்கு ஆமாண்டி இதுல என்ன சந்தேகம். அந்த நேரத்தில் அந்த ஏர்போர்ட் சுத்தி இருக்கிற இடம் ஃபுல்லா அலைஞ்சேன்.

ஒரே ஒரு பார்லர் திறந்து இருந்துச்சு. அவனும் கடை கட்டுற நேரம்.அவனிடம் கெஞ்சி கையில கால்ல விழாத குறையா மனுஷன் சேவ் பண்ணிட்டு வந்தேன்டி என்க அப்படி என்று ஆச்சரியப்பட்டாள்.

ஆமாடி காலையில உன்னை பார்க்கும் போது இந்த கெட்டப்பல இருக்கணும் நீ அசந்து போறதை பார்த்து ரசிக்கணும்னு ஆசை ஆசையா வந்தேன். திடீர்னு வேதா அம்மா போன் பண்ணிச்சு.மதுரை கிட்ட வரும்போது அவங்க வந்த கார் பிரேக் டவுன்ஆயிடுச்சுணு. அதனால தான் நான் கார் எடுத்துட்டு அவங்களை பிக் அப் பண்ணிக்க போனேன்.

கொஞ்ச நேரம் கார்ல வெயிட் பண்ணுங்க நான் ரெடி ஆயிட்டு வரேன்னு உள்ள போய் கிடுகிடுன்னு ரெடி ஆயிட்டு தான் அவங்க கூட உள்ள வந்தேன்டி என்று சொன்னான்.

காலையில இருந்து உன்னை தேடி எப்படி தவித்தேன் தெரியுமா மாமா என்று கவலையாக கேட்க,தெரியும்டி.என் பொண்டாட்டியோட தவிப்பு எனக்கு இருக்காதா.நான் மட்டும் உன்னை நினைக்காமலா இருந்தேன் சொல்லுடி என்க,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்பவளை பார்த்து கண்ணடித்தபடியே தனது இடது பக்க மீசையை முறுக்கி விட்டவன் வேற எதுக்குடி குறைச்சல் சொல்லு பார்க்கலாம் என்க...

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஜான் சாப்பிட வந்திருக்கோம் டா. அதை விட்டு இங்க என்னடா நடக்குது என்க,உன் பொண்டாட்டி தான் பக்கத்துல இருக்கிறாளே மைக் முழுங்கியபோல...அவளிடம் பேச வேண்டியதுதானே.இங்கே எட்டி பாக்குறியே பங்காளி, வெக்கமா இல்லையா என்று கதிர் கேட்க எனக்கு இது தேவைதான் என்றவன் அல்லி பக்கம் திரும்பி அப்புறம் செல்லம் நம்ம கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம் என்று கேட்க அவளோ முறைத்து பார்த்தாள்.

ஏண்டி கல்யாணம் எப்ப வச்சுக்கலாம்னு தானே கேட்டேன்.என்னமோ இப்பவே குழந்தை பெத்துக்கலாம்னு கூப்பிட்ட போல இப்படி முறைக்கிறியே என்று சொல்ல, வாய் வாய் என்று ஜானின் தலையில் அல்லி குட்ட மற்றவர்களும் அதை பார்த்து சத்தமாக சிரித்து விட்டனர்.

அடி சண்டாள சிறிக்கி... மானத்தை வாங்கிட்டியேடி.உன் அண்ணனை பார்டி விழுந்து விழுந்து சிரிக்கிறானே என்று வேலுவை காட்ட,நீ நடத்துடா சின்ன குட்டி.அண்ணன் நான் இருக்கிறேன். அங்க பாரு ஆப்போசிட்ல தான் அந்த குழம்பு கரண்டி எல்லாம் இருக்கு.அதால அடிடா உனக்கு கை வலிக்காது செல்லம் என்க, அப்படியாண்ணா அப்போ சரி..

யாராச்சும் சாப்பாடு பரிமாற வருவார்களே அவங்க கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்ணா என்று அல்லி சொல்ல அட கொலைகார கும்பலிடம் தெரிஞ்சே வந்து தலையை கொடுத்துட்டனே...

அப்பா அய்யனாரே.. இவனுங்களுக்கு மத்தியில் நீதான் என் உசுர காப்பாத்தணும் என்றான். அவர்களுக்கு உணவு பரிமாற போட்டோகிராபரும் அங்கு வந்து விதவிதமாக போஸ் கொடுக்க சொல்லி மூவர் ஜோடியும் போட்டோ எடுத்து செல்ல ஒரு வழியாக சாப்பிட்டு வெளியே வந்தனர்.

பின்னர் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் சம்பிரதாயபடி சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

மருது செல்லாவை பற்றி வீட்டினார்கள் பேசிக் கொண்டிருக்க தாமரை அவர்களிடம் சொல்லிக் கொண்டு மேலே அறைக்குள் வந்தவுடன் மாற்றுடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமுக்கு குளிக்கு சென்று சிறிது நிமிடத்திலேயே கதவு தட்டும் சத்தம் கேட்டது.

என்ன மாமா என்க...

சீக்கிரம் கதவு திறடி அர்ஜெண்டா இருக்கு என்று சொல்ல, உன்ன பத்தி எனக்கு தெரியும் இப்படித்தான் சொல்லுவ பின்ன வேற வேலை எல்லாம் பண்ணுவ என்று கேட்க இல்லடி இல்லடி அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்றான்.

நம்பலாமா என்று கேட்க நம்பலாண்டி என்று சொன்னவுடன் கதவை திறக்க புயல் போல் உள்ள வந்தவன் கதவை தாழிட்டு விட்டு மனைவியோடு காதல் பாடத்தோடு காம பாடத்தையும் அங்கே தொடங்க, இருவரும் குளித்து முடித்து வெளியே வரவே ஒரு மணி நேரத்துக்கு மேலானது.

இந்த மனுஷனுக்கு கொஞ்சம் கூட விவஸ்தை கிடையாது என்க,காதலுக்கு ஏதடி நேரம்.கிடைக்கும்போது லவ் பண்ணிட்டு தான் இருக்கணும்.
இது கூட தெரியாதாடி மக்கு பொண்டாட்டி என்க, போயா என்று சொல்லி வெட்கப்பட்ட தாமரை சிரித்தபடியே வெளியே போனவள் அங்கிருந்த மறைவில் நைட் டிரஸை மாற்றினாள்.

சீக்கிரம் வாடி செல்லம் நேரம் ஆயிடுச்சு அடுத்த நம்ம வேலையை பார்க்கலாம் என்று சொல்லு எதே என்று அதிர்ந்தவளை பின்னாடி இருந்து அணைத்து தூக்கியவன் பெட்டின் மேல் வந்து உக்காந்து தனது மடியில் மனைவியை உட்கார வைத்துக் கொண்டு சந்தோசமா இருக்கியாடி என்று கேட்டான் .

வாயால சொல்லுவதை விட செயலே தன்னவனுக்கு பிடித்தமானது என்று புரிந்தவள் கணவனின் கழுத்தில் கையை வைத்து தன் பக்கம் இழுத்தவள் அவன் முரட்டு இதழில் தனது மென்மையான இதழை பதித்தாள்...
.


ஆதவனின் பொற்கரங்கள் கிழக்கே உதயமாக வழக்கம்போல் அவரவர் வேலை பார்க்க தொடங்கினர். இன்று வயலில் எள்ளு விதைப்பதால் ஆண்களோ காலையிலேயே சென்றுவிட்டனர்.

காலை டிபனை மற்றவர்கள் முடித்திருக்க,
அப்பொழுது டெம்போவில் சில பொருட்களோடு வந்து நான்கு பேர் கதிரின் வீட்டின் முன்னால் இறங்கினர்.

சார் சார் என யாரோ கூப்பிட சத்தம் கேட்டு தாமரையும் வாசலில் வந்து பார்த்தவள் சொல்லுங்க என்க,பெருமாள் சார் என்கவும், உட்காருங்க இதோ வருவாங்களென்று அங்கிருந்த திண்ணையை காட்டி சொல்லியவள் வீட்டிற்குள் சென்று அத்தை மாமாவை பார்க்க வந்திருக்கிறார்கள் என்க...

சரிமா நீயே போன் போட்டு விஷயத்தை சொல்லு என்கவும் வீட்டிலிருந்த போனிலிருந்து பெரும்மாளுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல இதோ வருகிறேன் என்று சொல்லி போனை வைத்தார்.

அந்த நால்வரும் டெம்போவில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே இறக்கி வைக்க அண்ணா டீ குடிக்கிறீங்களா இல்ல மோரா என்று தாமரை கேட்க எதுவுமே வேண்டாம் மா.வரும்போது சாப்பிட்டு வந்தோம் என்றனர்.

பெருமாளும் வந்துவிட பின்னர் அவரிடம் சில விஷயங்களை பேசிவிட்டு வந்த வேலையை ஆரம்பித்தனர். வீட்டில் இருப்பவர்களுக்கு அங்கே என்ன வேலை பண்ணுகிறார்கள் என்பது புரியவில்லை. உள்ளே வந்தவரோ வேலையை முடித்து போகும் வரை அவர்களுக்கும் சேர்த்து சமைக்குமாறு சொன்னார்.

மேலும் இரண்டு நாட்கள் வேதா மயிலா மூக்கையன் மூவரும் சீமக்கரையில் தங்கி விட்டு அன்று இரவே அவர்களிடம் சொல்லிக் கொண்டு நீலகிரிக்கு கிளம்பினர்.

தனது மருமகளிடம் வந்த வேதாவோ அடுத்த முறை உன்னை பார்க்கும் பொழுது என் பேரப்பிள்ளை செய்தி ஏதாவது சொல்லணும் என்க தனது அத்தையை அணைத்துக் கொண்டவள் சரிகத்தை என்றாள்.

அவர்களை பஸ் ஏற்றி விட்டு வீட்டிற்கு மேலே இருக்கும் தனது ரூமிற்கு வந்த கதிர் என்னடி ரெடியா என்று கேட்க தாமரையோ கம்ப்யூட்டரில் டிசைனிங் பண்ணிக் கொண்டிருந்தவள்,என்ன சொல்லிட்டு போனீங்க ரெடி பண்ணி வைக்கிறதுக்கு என்று குழப்பமாக கேட்க...

என்னடி இப்படி கேட்டுட்ட??

எங்க அம்மா எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு போயிருக்காங்க அதற்கான ப்ராசஸ்ல இறங்காமல் உன் பாட்டுக்கு ஹாயா உட்கார்ந்து இருக்கிறியேடி. ..

கணவன் என்ன பேசுகிறான் என்பது புரியாமல் அத்தை என்கிட்ட அப்படி எந்த வேலையையும் கொடுக்கவில்லையே என்று யோசனை செய்து பார்த்தாள்.

கதிருக்கு தனது மனைவியை பார்த்து சிரிப்பு வந்தது.இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் என்னடி இவ்வளவு மக்கா இருக்க??

உன்னை வச்சிக்கிட்டு நான் எப்படி காலத்தை தள்றது. படிப்பில் மட்டும் தான் மார்க் போல மற்றதில் ஜீரோ தானோ...

இந்த கதிருக்கு இப்படி ஒரு மக்கு மட சாம்பிராணி பொண்டாட்டியா என்க...யோவ் ஒழுங்கு மரியாதைய என்ன விஷயம் சொல்லுயா. அதைவிட்டு உன் பாட்டுக்கு நீ பாட்டுக்கு பேசிட்டு இருக்கியே என்றாள்.

ஏதேஏஏஏ யோவா என்றவாறு மனைவியிடம் வந்தவன் அவள் உதட்டை பிடித்து திருக வலியில் ஆஆஆ என்று கத்துபவளை பிடித்து இழுத்தவன் அவள் உதட்டோடு தனது முரட்டிதழை பொருத்தினான்.

சிறிது நொடிகளில் சென்று விட்டவன் எங்க அம்மா பேரப்பிள்ளை கேட்டாங்களே ஞாபகம் இல்லையாடி என அவள் காதில் சொல்ல இப்பொழுது தாமரைக்கு வெட்கம் வந்தது.

குழந்தை பெத்துக்கலாமாடி என்று கேட்க போயா என்று கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்...


மேலும் ஒரு வரம் கடந்து சென்றது. ஆனால் வீட்டில் இருப்பவர்களுக்கோ பக்கத்தில் ஷெட் போட்டு சுற்றியும் ஹாலோ பிளாக் கல்லால் சிறிய வீடு போல கட்டுகிறார்களே அது எதற்கு என்பது மட்டும் தெரியவில்லை
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
563
இரண்டு மூன்று முறை பெருமாளிடம் கேட்க,வேலை முடிந்த பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

இன்னும் ஒரு வாரம் கடக்க இப்பொழுது அது நடுத்தரமான வீடு போல் தயாராக இருந்தது.இரவு உணவு எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நாளைக்கு அந்த வீட்டிற்கு பூஜை பண்றதுக்கு ஐயர் வர சொல்லி இருக்கிறேன் என்று சொல்ல,மகன் ஏதோ காரணத்திற்காக தான் செய்கிறான் என்பது புரிந்து அவர்களும் சரிப்பா என்றார்கள்.

மறுநாள் காலையில் கணபதி பூஜைக்காக மூன்று அய்யர் அங்கு வந்திருந்தனர்.அவர்களுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் முதல்நாள் இரவே முத்து வாங்கிட்டு வந்து வைத்திருக்க அவர்களும் பூஜைக்கு ஆயத்தம் பண்ணினார்கள்.

பிறகு பெருமாள் வாங்க என்று குரல் கொடுக்க வீட்டினரை அழைத்துக் கொண்டு அங்கிருந்த கதவை திறந்து உள்ளே போக, பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

தாமரைக்கோ ஒரு நிமிடமும் கண்கள் கலங்கிவிட்டது.அம்மாடி நீயும் கதிரும் போய் ஓம குண்டத்தில் உட்காருங்களென்க நாங்களா என அதிர்ந்தாள்.

ஆமா...

நீ தான் போ என்றார். அதன் பின்னர் வேத மந்திரங்கள் ஓதி பூஜையை நல்ல முறையில் செய்து முடித்தவர் அங்கிருந்த தறி மெஷினுக்கு பொட்டு வைத்து துளசி தீர்த்தத்தை தெளித்தவர் அம்மா இன்னைக்கு ரொம்ப நல்லநாள்.

நீங்க முதல் முதல்ல வேலையை ஆரம்பிங்கோ என்கவும் ம்ம் என தலையசைத்தவள் சாமிக்காக பட்டு சீலை நெய்ய தயார் பண்ணியவள் மிஷினை ஆன் பண்ண சிகப்புகலர் புடவையில் வைலட்டும் தங்கநூலும் சேர்ந்த பார்டரோடு நெய்து வந்தது.

மிஷினின் சத்தம் வெளியே கேட்க கூடாது என்பதற்காக அதற்கு ஏற்ற போல அந்த அறை தயார் செய்யப்பட்டிருந்தது.

வீட்டில் சும்மா இருந்தால் கண்டதையெல்லாம் யோசிக்க தோணும்.உங்கூட உன் அத்தைங்களையும் சேர்த்துக்கோ...
ரெண்டு பேரும் சும்மா தானே இருக்காங்க...வீட்டு வேலைய முடிச்சிட்டு இங்க வந்து உன் வேலைய பாரு.

பெருமாள் சொல்வதை கேட்டு அக்கா தங்கை இருவரும் அவரை முறைத்துப் பார்த்தனர்.

ராதாக்கு டாக்டருக்கு படிக்கணும்னு கொள்ள ஆசை... அது தெரிந்துதான் நான் மேற்கொண்டு படிக்க சொன்னேன்.அப்பா அம்மா இல்லாம அக்கா புருஷன் என்னத்த படிக்க வச்சிடுவானு நினைச்சிது என்னன்னு தெரியல வேண்டாம்னு சொல்லிடுச்சு.

அதுக்காக தான் நிலவன இன்னிக்கி டாக்டருக்கு படிக்க வைக்கிறேன் அது ஆசை இவனுங்க நிறைவேத்துவாணுங்கனு பார்த்தால் இந்த ரெண்டு பயலும் படிக்கல....உன் அத்தக்காரி நல்லா வரைவா. அவகிட்ட வரைஞ்சி வாங்கிக்க என்றார்.

ராதாவோ மாமாயென கண்கலங்க,முறைக்கு என் தம்பி பொண்டாட்டியா இருந்தாலும் செல்விக்கு முன்ன நீ எனக்கு மவள்தான் ராதா..

உன் அக்கா பேரைவிட உன் பேரதான் அதிகமா சொல்லி கூப்பிட்டுட்டே வீட்டுக்கு வருவேன். சரி அதுகடக்கட்டும்..சின்னவன் நாளைக்கு வந்துடுவான்னு நினைக்கிறேன்.அவனுக்கு பிடித்தது எல்லாம் ஆக்கி போடுங்க என்று சொல்லிவிட்டு பெருமாள் அங்கிருந்து சென்று விட...

பெருமாள் முன்கோபக்காரர் தான் ஆனால் இவ்வளவு பாசம் வைத்திருப்பார் என்று அவர்களுக்கு இவ்வளவு நாள் தெரியவில்லை.

மற்றவர்களோ தாமரையிடம் அங்கு இருந்த மிஷினை பற்றி இதில் எதெல்லாம் நெய்யலாம் என்று விசாரித்துக் கொண்டிருந்தனர்.

தாமரையும் இந்த தறி விஷயத்தை பற்றி வினிதாவிடம் சொல்ல அவரும் சந்தோஷப்பட்டார்.அதன் பின்னர் நாட்களும் வழமை போல வாரமோ கடந்து இரண்டு மாதங்களை தாண்டி ஓடியது...

தாமரையும் அந்த தறியில் தனது வீட்டில் உள்ளவர்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டுப் புடவை அவள் டிசைன் பண்ணி நெய்து கொடுத்தாள்.

இந்த விஷயம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தெரிய அவர்களும் எங்களுக்கு ஒரு புடவை செய்து தர முடியுமா என்று கேட்டனர் எல்லாம் அங்காளி பங்காளி சொந்தக்காரர்கள் என்பதால் மறுக்க முடியவில்லை.

தாமரையின் கை வண்ணத்தை பற்றி சீமைக்கரையை தாண்டி பக்கத்தில் இருக்கும் தேனூருக்கும் பரவ ஆரம்பிக்க அவர்களும் தங்கள் வீட்டு பெண்களுக்காக புடவை நெய்து தரக்கேட்டு வரத் தொடங்கினர்.

வரும் கூட்டத்தை பார்த்து... ரொம்ப சிரமத்தை இழுத்துக் கொள்ள வேண்டாம் என்று பெருமாளே மருமகளுக்கு சொன்னார்.

ஓர் நாள் மதிய உணவை சமைத்துக் கொண்டிருக்கும் போது தாமரைக்கு குமட்டல் போல உணர்வு வந்தது.

என்ன இப்படி இருக்கிறது என்று நினைத்தவள் கடுகை எண்ணெயில் போட்டு பொரிந்ததும் வெங்காயம் போட்டு தாளிக்க மீண்டும் குமட்டல் வரவும், வாயை பொத்திக் கொண்டே வெளியே இருக்கும் வாஷ்பேஷனிற்கு போக மல மல என்று வாமிட் பண்ணி விட்டாள்.

வீட்டில் வேறு யாரும் இல்லை.

தலை சுற்றுவது போல் இருக்க வாயை கொப்பளித்தவள் அப்படியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கண்ணை மூடி உட்கார்ந்து என்ன சாப்பிட்டோம் ?

எதுக்கு நமக்கு இப்படி இருக்கு என்று யோசனை பண்ணி பார்க்க காலையில் டிபன் சாப்பிட்டது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.

சரி எழுந்து போய் ஒரு காபியை குடிப்போம்.மதிய சாப்பாடு வேற வயலுக்கு கொடுத்து அனுப்பனுமே என்று முகத்தை கழுவிக்கொண்டு கிச்சனிற்குள் சென்றவள் மீதமிருந்த வேலைகளை பார்க்க தொடங்கினாள்.


நீலகிரி:

கதவை திறந்து உள்ளே வந்த செல்லாவோ டிரேவை அங்கிருந்து டீபாய் மேல் வைத்தவள் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு சிறிது ஞாணத்தோடு மாமா மாமா என்று மருதுவை எழுப்ப அவள் சத்தத்தில் கையைப் பிடித்து இழுக்க பெட்டில் வந்து விழுந்தாள்.

ஐயோ மாமா என்ன பண்றீங்க என்றவளிடம் எல்லாரும் போயாச்சாடி என்று கேட்க, ஹம் போயாச்சு என்றாள்.
அப்போ உடனே மேலதானடி வரணும் என்று மனைவியோடு மீண்டும் மோகம் கொண்டு காதலை அவளுக்குள் ஆழமாய் விதைத்தான்...

மீண்டும் இருவரும் எழவே மதிய உணவு வேலையும் வந்தது. டீ யோ இவர்களைப் பார்த்து சிரிப்பது போல் இருக்க ஏன் மாமா இப்படி பண்ணுனீங்கள்?.நான் காலையில குளிச்சிட்டேன் தானே என்று சினுங்கினாள். அதனால் என்ன மீண்டும் குளித்தால் சரியாகும். மாமன் எதுக்குடி இருக்கேன் என்றவன் மனைவியை இரு கைகளிலும் ஏந்தி கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் சென்றான்.

இருவரும் குளித்து தயாராகி கீழே வந்தவர்கள் மணியை பார்க்க இரண்டரை என்று காட்டியது. இதற்கு மேல் என்னத்தை சாப்பிடுவது என்றவன்...சரி ப்ரிஜ்ல என்ன இருக்குன்னு பார்டி..

செல்லாவும் ப்ரிஜை திறந்து பார்த்தவள் பிரட் ஜாம் புரூட் எக்கு பால் இருக்கு மாமா என்க... ஓகே டி பொண்டாட்டி என்று அவளை தூக்கி கிச்சன் மேடையில் உட்கார வைத்தவன் இதோ 5 மினிடீஸ் டி என்றான்.

அடுப்பை பற்ற வைத்து முட்டையை உடைத்து உப்பு போட்டு கலக்கி தவாவில் ஊற்றி விட்டு அதன் மேல் பிரட்டை வைத்து சில நிமிடத்தில் திருப்பி போட்டு எடுத்தவன் மை டியர் பொண்டாட்டி இதோ பிரட் ஆம்லெட் ரெடி என்க, செல்லாவோ தனது கணவனை ரசித்து பார்த்தாள்.

இருவரும் மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர். சரிடி கோயம்புத்தூர் வரைக்கும் போயிட்டு வரலாமா என்று கூப்பிட இந்த நேரத்திலா?.

அத்தை கிட்ட சொல்லலையே என்றாள்.

அடியேய் உன் புருஷன் கூட தாண்டி போற அதற்கு யார் கிட்டயும் பர்மிஷன் கேட்க வேண்டாம் வாடி என்றவாறு பைக் சாவி எடுத்துக்கொண்டு வருது வெளியே செல்லவும் சிலிடரை ஆப் பண்ணிவிட்டு பின்னர் விட்டு வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

அங்கே மருதுவோ பைக்கில் உட்கார்ந்திருக்க, செல்லா போய் பின்னாடி உட்கார்ந்தாள். இருவரும் அந்த பயணத்தை ரசித்துக் கொண்டே சென்றனர் போகும் வழியோ தனது வீட்டுக்கு போற வழியாக இருக்கவும், மாமா எங்கே போகிறோம் என்று செல்லா கேட்க என் மாமியார் வீட்டிற்கு என்றவன், போகும் வழியிலே இருந்த கடையில் திண் பண்டங்களை வாங்கிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தனர்.

கால் மணி நேரத்தில் செல்லாவின் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வீட்டுக்குள்ளே சோளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த முருகாயியோ வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்க்க தனது மகளும் மருமகனும் இறங்கி வருவதைப் பார்த்தவர் யாத்தே என்றவாறு இருவரின் கையை பிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.

வீட்ல எல்லாரும் நல்லா இருக்கிறார்களா என்று கேட்க அவர்கள் செல்வி நிச்சயதார்த்தத்துக்கு போய் இருப்பதைப் பற்றி மருது சொன்னான்.

அப்படியா என்று கேட்ட முருகாயி யாத்தே வந்த பிள்ளைகளுக்கு ஒன்று கொடுக்கவில்லையே என்று உறியில் இருக்கும் மோரை மொண்டு ஆளுக்கு ஒரு கிளாஸில் ஊற்றி கொடுத்தார் .

மாமா எங்க அத்தை என்று கேட்க மூங்கில் கூட கேட்டிருந்தாங்க மருது.அதை தான் மாமா எடுத்துட்டு போயிருக்காரு என்று சொல்லும் போது குப்பிளானும் வீட்டிற்கு வந்தார்.

அவரும் மகளையும் மருமகனையும் பார்த்து சந்தோஷப்பட்டவர் வாங்கப்பா எப்ப வந்தீங்க என்று கேட்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் என்று சொன்னார்கள்.

பின்னர் பேசிக் கொண்டிருக்கும் போது முருகாயி இரவு உணவு சமைக்க போ, அதெல்லாம் ஒன்னும் வேணாம் கதை அம்மா அப்பா வந்தபோது எப்படியும் சம்பிரதாயபடி வரணும் இல்ல அப்ப வந்து சாப்பிடுகிறோம் இப்ப நாங்க வீட்டுக்கு கிளம்பறோம் என்று சொல்லிக் கொண்டு மனைவியோடு மருது அங்கிருந்து கிளம்பினான்.

ஆனால் நேராக நீலகிரிக்கு போகாமல் மலையில் இருந்து கீழே இறங்கி கோயம்புத்தூருக்கு போகும் வழியில் பைக் செல்லவும் இந்த நேரத்தில் எதுக்கு கீழே போறாங்க என்று யோசனை வந்தாலும் கணவனிடம் கேட்கவில்லை....

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top