• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
561
நீலகிரி:

குழந்தைக்கு சளி அதனால் தான் என்னால் வர முடியவில்லை என்று பவி சொல்ல பரவாயில்லைக்கா இதுல என்ன இருக்கு என்பவள் போட்டிருக்கும் நகைகளை பார்த்தவள் என்ன இவ்வளவு போட்டுருக்காள்.

பார்த்தால் கவரிங் போல தெரியலையேனு நினைத்தவள் தாலியை காட்டு செல்லா என்க,அவளும் தனது கழுத்தில் இருந்ததை காட்ட என்ன ரெண்டு பவுன் இருக்குமா என்க...

அந்நேரம் அங்கு வந்து மயிலாவோ சிரித்துவிட்டு அது 9 பவுன் பவி என்கவும், எனது ஒன்பது பவுனா என்று அதிர்ந்து போனாள்.

நம்பலே அஞ்சு பவுண்ல தான் போட்டு இருக்கோம் இந்த ஆடு மேய்க்கிறவளுக்கு ஒன்பது பவுன் கேட்குதா என உள்ளுக்குள் பொறாமையாக...அப்படி என்ன இதுல இருக்கு?வெறும் கருப்பு மணி தானே இருக்கு என்று குறை சொல்ல...ஐயோ பவி உனக்கு கண்ணு தெரியலையா அந்த தாலி டாலரே நாலு பவுன் என்கவும் அவ்வளவா என்று அதிர்ந்தாள்.

நானும் மருமகளா இருந்தேன் இந்தக் கிழவி எனக்கு ஒரு குண்டு மணி தங்கம் கூட வாங்கி கொடுக்கல.இன்னைக்கு இந்த ஆட்டுக்காரிக்கு மட்டும் ஒன்பது பவுன்ல தாலி செய்து வாங்கி கொடுத்து இருக்கா பாரு சண்டாளி..

இவள் நடக்கும்போது எங்கையாச்சும் தடுக்கி விழுந்து கை கால் உடைந்து போகணும் என்று மனிதிற்குள் திட்டியவள்,இதற்கு மேலும் அங்கு இருந்தால் கோபத்தில் வெடித்து விடுவோம் என்பது புரிந்து சரி செல்லா நான் கிளம்புறேன் என்று சொல்ல...
இருங்கக்கா சாப்பிட்டு போகலாம் என்றவளுக்கு அதுலாம் ஒன்னும் வேண்டாம் செல்லா.அங்கு அரண்மனையில் எனக்கு சாப்பாடு இருக்கு நான் போயிருக்கிறேன் என்று சொல்லவும் சரி போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டாள்.

அப்பொழுது பவி கொஞ்சம் நில்லு என்று கையில் ஒரு பையோடு வந்த மயிலா இந்தா..கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு ஞாபகார்த்தமாக மருது கிப்ட் வாங்கினான் என்று சொல்ல அப்படி என்ன பொல்லாத கிப்ட்...

தேங்காவும் பழமும் தான் இருக்கும்.இதுக்கு இவ்வளவு பில்டப்பா என்று மனதிற்கு நினைத்தபடியே எதுக்கு இதெல்லாம் எனக்கு அதெல்லாம் வேண்டாம் என்க..சும்மா வச்சுக்க உனக்கு வேண்டாம்னா அங்க வீட்ல அம்மா கிட்ட கொடுத்து என்று சொல்லவும் அதற்கு மேலும் மறுக்க முடியாமல் வேண்டா வெருப்பாக பையை வாங்கிக்கொண்டு செல்லும்போது என்ன இவ்வளவு வெயிட்டா இருக்கு ?எங்கையாவது ஓசில கிடைச்சிதுனு ரெண்டு தேங்காயா போட்டிருப்பாங்க போல என்று சொல்லிக் கொண்டாள்.


நீலகிரி...

நேரமும் கடந்து சென்றது. மருது செல்லா இருவருக்குமான சம்பிரதாய சாந்தி முகூர்த்த சடங்கு அன்று இரவு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதுவரை இருந்த மனநிலை போய் இப்பொழுது செல்லாவிற்கு திக் திக்கென்று இருந்தது. அவளை குளித்து தூதுவடையை மாற்றி வரச் சொன்னார்கள் அதேபோல் செல்லவும் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வைத்து மேலே இருக்கும் மருதவின் ரூமிற்கு அனுப்பி வைத்தனர்.

கை கால் நடுங்க படியில் ஏறி மேலே வந்தவள் கதவு பிடியில் கையை வைத்து திருகு கதவும் திறந்து கொண்டது.உள்ளே வந்தவள் கதவை லாக் பண்ணிவிட்டு கட்டிலின் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பவனை பார்த்து கீழே குனிந்து கொண்டாள்.

கண்ணெதிரிலே வெட்கம் கொண்டு கீழே குனிந்து நிற்கும் மனைவியை ஆசை திரு ரசித்துப் பார்த்தான்.

நிமிடங்களும் ஓட இன்னும் எவ்வளவு நேரம் டி ஆணி அடித்த போல் அங்கே நிற்க போறேன் என்றவன் எழுந்து ஈவள் எதிரில் வர செல்லாவோ பின்னாடியே சென்றவள் அங்கிருந்த கபோர்டின் மேல் இடித்து நின்றாள்.

சிரித்துக் கொண்டே அவளின் இரண்டு தோள்பட்டையின் வழியாக தனது நீண்ட கைகளை சுவற்றில் ஊன்றியவன் என்னவாம் புலிக்குட்டியா இருப்பனு பார்த்தால் பூனை குட்டி போல பம்முறியேடி...

ஆமா உன் பிரண்டுங்க எல்லாம் ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு எப்படி வரணும்னு ஒருத்தியும் உனக்கு பாட எல்லாம் எடுக்கலையா புருஷன் காரில் வந்து விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும் அதெல்லாம் சொல்லவில்லையா அப்புறமா புருஷன் கன்னத்தை எல்லாம் கிள்ளி முத்தம் கொடுக்கணும்னு சொல்லவில்லையா என்று கேட்க மருது சொல்லும் ஒவ்வொன்றையும் கேட்க கேட்க நாணம் தாங்காமல் அவன் நெஞ்சில் மீது சாய்ந்து கொண்டாள்.

இதுக்கே வெக்கப்பட்டால் என்னடி நான் பண்ணுவேன் என்று ஒரு கையால் தன்னவளை இறுக்கமாய் அணைத்தவன் அவள் காதோரம் செல்ல கடி கடித்து வாழ்க்கையை இப்பவே தொடங்கணுமென்று ஒன்னும் அவசரமில்லை சரியா...

இன்னும் நமக்கு எவ்வளவோ வயசு இருக்கு முதல் என்னை நீயும் உன்னை நானும் புரிந்து கொள்ளலாம்டி.கொஞ்ச நாள் ஜாலியா லவ் பண்ணுவோம் அப்புறம் புருஷன் பொண்டாட்டியா வாழ்க்கை தொடங்கலாம் ஓகேவா என்று சொல்ல இவ்வளவு நேரம் இருந்து நடுக்கம் போய் இப்பொழுது செல்லா இயல்பாக இருந்தாள்.

ம்ம் என்று தலையாட்ட..

இப்படி எல்லாம் சொல்லுவன்னு கனவுல கூட காணாதடி என்றபடியே அவளை கையில் ஏந்தியவன் அவள் கையில் இருக்கும் பால் சொம்பை வாங்கி பாதி அவன் குடித்தவன் மிதி அவளுக்கு நீட்ட கையெனில் வைத்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டகருந்தவளோ இப்படி அந்தரத்தில் மிதந்து கொண்டே எப்படி குடிப்பது என்று கேட்டாள்.

ஓஓஓ..இவ்வளவு தானா...இப்ப பார் என்று மீதமிருந்த பாலை தனது வாயில் கவுத்தவன் அவள் வாயோடு தனது வாயை பொருத்த செல்லாவோ அதிரடியில் அதிர்ந்து கண்களை விரிக்க முத்தமிட்டபடியே நடந்து சென்றவன் அங்கிருந்த மெத்தையில் சரிய அழகான இல்லரம் காதலோடும் காமத்தோடும் அரங்கேறியது...

விடியலும் ஆரம்பமாக இன்று செல்விக்கு நிச்சயதார்த்தத்துக்கு காலையிலே நாங்கள் கிளம்பினோம் என்று முதல் நாள் இரவே மருதுவிடவும் செல்லாவிடவும் மூவரும் சொல்லியிருந்ததால் மூக்கையன், வேதா,மயிலா மூவரும் குளித்திட்டு தயாராக,செல்லாக்கு அதிகாலையிலே எழுந்து பழக்கம் உள்ளதால் அந்த நேரத்திற்கெல்லாம் விழிப்பு வந்தது.

தன்னை அணைத்தி படுத்திருக்கும் கணவனின் கையை பொறுமையாக விலக்கியவள்,எழுந்து ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ஹீட்டரை ஆன் பண்ணியவள் குளித்து தயாராகி கீழே வந்தாள்.

மருமகளின் முகத்தை பார்த்து அவர்களுக்கு திருப்தியாக இருக்க செல்லா விளக்கு ஏத்திடுத்தா என்று மயிலா சொல்லு சரிங்க அத்தை என்றவள் விளக்கேற்றி சாமி கும்பிட்டு வெளியே வந்தாள்.

நாங்க டீ குடிச்சிட்டோம் பால் காய்ச்சி தயாராதான் இருக்கு காபி வேணுமோ இல்லை டீ வேண்டுமோ போட்டு குடிச்சுக்கோங்க...

நம்ப பொன்னாத்தா வரும் உறியில் தயிர் இருக்கு நாலு கரண்டி மொண்டு குடுத்தா. எப்போதும் அவங காலைல இங்க வந்தால் தயிர் கொடுக்க மறந்துடாத செல்லா என்கவும் சரிங்கத்த என்றாள்.

முதல் நாளே இவர்கள் சீமக்கரைக்கு போவதற்காக மருது புக் பண்ணிய காரும் வந்துவிட சரி பத்திரமா இருங்க நாளைக்கு இல்லனா நாளைக்கு நாங்க வந்து விடுவோம் என்று சொல்லிக்கொண்டு மூவரும் செல்ல அவர்களை வழி அனுப்பி விட்டு கதவை பூட்டியவள் கிச்சனிற்கு சென்று டீயை போட்டவள் கணவனுக்கும் அவளுக்கும் எடுத்துக் கொண்டு மாடியில் இருக்கும் அறையை நோக்கி சென்றாள்


சீமக்கரை:

வெகுநேரம் வரை கணவனுக்காய் தூங்காமல் விழித்திருந்த தாமரை பிறகு தன்னையே மறந்து தூங்கி விட்டாள். அசாமிலிருந்து மதுரை ஏர்போர்ட்டிற்கு வந்த தனது அத்தையான சிந்துவை அழைத்துக்கொண்டு அதிகாலை நாலரை மணிக்குளாம் கதிரும் சீமக்கரைக்கு வந்து சேர்ந்தான்.

அந்த நேரத்திலும் வீட்டினர் சிந்துக்காய் தூங்காமல் காத்திருந்தனர்.இரண்டு வருடங்களுக்கு பின்னர் தனது வீட்டினரை பார்த்த மகிழ்ச்சியில் கண்கலங்கினார்.

பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க கதிரோ படியில் ஏறி மேலே வந்தவன் ரூம் கதவை திறந்து உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு பெட்டில் தூங்குபவளை பார்த்துக்கொண்டே ரெஸ்ட் ரூமிற்குள் சென்று கைலியை மாற்றி வந்து அவள் அருகில் படுத்தவன் அசதியில் தூங்கிவிட்டான்.

விடியலும் தொடங்க வீட்டின் முன்னே இருந்த இடத்தில் பங்க்ஷனிற்கு பந்தல் போட ஆட்கள் வந்து அவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.

சிந்துவோ தனது அத்தை வீட்டிற்கும் தங்கை வீட்டிற்கும் சென்று நலம் விசாரித்து வந்தார்.

நேரமும் கடந்து சென்றது..ஒரு வழியாக பந்தல் அலங்காரம் முடிந்து ரேடியோ செட்டுக்காரர் இளையராஜா பாட்டை ஓட விட அக்கம் பக்கத்தில் இருக்கும் சின்ன பிள்ளைகள் எல்லாம் அங்கு வந்து ஓடியாடி விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

நிச்சயதார்த்தம் மாலை 6 மணிக்கு ஆரம்பம் என்பதால் இரவு டிபனுக்கான சமையல் வேலையை ஒரு பக்கம் சமையல்காரர்களும் அவர்கள் வேலையை ஆரம்பித்தனர்.

தாமரையும் காலையிலிருந்து கணவனை பார்க்க முடியாமல் தவித்து தான் போனாள்.இந்த மனுஷன் எங்க தான் போனாரு என்று அவளும் அவ்வப்போது வெளியே வந்து பார்த்தாலும் கதிர் அங்கு இருப்பது போல் தெரியவில்லை..

நேரமும் கடந்த ஓட உறவினர்களின் வீட்டிற்கு வர தொடங்கினர். வந்தவர்களுக்கு தாமரையும் ராதாவும் டீ போட்டு கொடுத்து கொண்டிருந்தனர்.

ஏம்மா கவிதா எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க அப்புறம் அங்கு வந்து அது இல்ல இது இல்லன்னு அக்கா தங்கச்சி ஏதாச்சும் சொன்னீங்க நல்லா இருக்காது சொல்லிட்டேன் என்று செல்வம் சொல்ல..மாமா எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு தான் இருக்கிறோம் அதெல்லாம் ஒன்னும் குறை வராது என்றார்.

சரித்தா என்றபடியே அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மீண்டும் ஒருமுறை பார்வதியும் கவிதாவும் அங்கிருந்து சீர்வரிசை பொருட்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டனர்.கவிதா போய் உன் மாமன் கிட்ட சொல்லு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது என்க சரிக்கா என்றபடியே வெளியே வந்த கவிதா மாமா நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது என்கவும் சரி கிளம்புங்க என்றார்.

சொந்த பந்தங்களிடம் ஆளுக்கு ஒரு சிறு வரிசை தட்டையை எடுத்துக்க சொல்லிவிட்டு மேல தாளங்களும் வான வேடிக்கை விண்ணை பிளக்க பக்கத்து தெருவில் இருக்கும் செல்வின் வீட்டை நோக்கி சென்றனர்.

வேட்டு சத்தம் பெண் வீட்டில் இருந்தவர்களுக்கு கேட்கவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரார்கள் என்று குரல் கொடுத்தனர்.

பார்லரில் இருந்து வந்த பெண்ணும் செல்வியின் நீண்ட கூந்தலை பின்னி அலங்காரம் பண்ணி முடித்தார்.

இதுவரை இல்லாத உணர்வு இப்பொழுது செல்விக்கு வந்து படபடப்பாக இருந்தது. சிறுவயதிலேயே வேலுக்கும் செல்விக்கு தான் திருமணம் என்று பேச்சு இருந்தாலும் வளரவளர மாமனின் மேல் மானசிகமாக அவள் காதல் கொண்ட விஷயம் இதுவரை வேலுக்கு தெரியாது.

அவன் அறியாமல் அவனைப் பார்த்து ரசிப்பதும் அவன் பார்க்கும் போது அவனை கிண்டல் பண்ணுவது இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொள்ளவே அவள் பெரும்பாடு பட்ட விஷயம் அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

தாமரையும் மேலே உள்ள ரூமில் தயாரானவள் இந்த மனுஷன் எங்க தான் போய் தொலைஞ்சான் என்று வாய்விட்டு திட்டிக் கொண்டு கீழே வந்தாள்.

மற்றவர்களும் கதிர் எங்கே கதிர் எங்கே என்று கேட்க வேலையா வெளிய போயிருக்கான்.வந்து விடுவான் என்று ராதா தான் சொல்லிக் கொண்டிருந்தார்....!!!

பங்க்ஷனிற்கு அழைத்த எல்லாரும் வந்து சேர்ந்திருந்தாலும் கதிரை மட்டும் அங்கு காணாமல் தாமரை தவித்துக் கொண்டிருந்தாள்.உள்ளுக்குள் கோபம் எரிமலை போல் பொங்கிக் கொண்டிருக்க அதை வெளியே காட்டாமல் சிரித்த முகத்தோடு இருப்பது போல் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டாரும் சொந்த பந்தங்கள் சூழல சீர்வரிசை தட்டோடு அங்கு வந்து சேர அவர்களை பிரகாசம் குடும்பத்தினர் வாசலில் நின்று கைகூப்பி வரவேற்தனர்.

அவர்களும் அங்கிருக்கும் அலங்காரத்தை பார்த்து அசந்து போனார்கள்.வழக்கமாய் சாமியானாவை தான் பந்தலாக போட்டிருப்பார்கள் என்று அவர்களெல்லாம் நினைத்திருக்க, வண்ண பூக்களோடு விதவிதமான துணிகளை வைத்து அலங்காரம் பண்ணியிருப்பது அவ்வளவு அழகாக இருந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
561
அடேய் பனைமரம் ஒழுங்கு மரியாதையா சொல்லு,அவன் எங்க தாண்டா போனான்? காலையிலிருந்து ஆளையும் காணோம் ஒரு போன் இல்லை என்று இதோடு நூறாவது முறைக்கு மேல் வேலு தனது நண்பனிடம் கேட்க...

வந்துடுவான்டா என்றான்.

செருப்பு பிஞ்சிரும் நாயே...அப்போதிலிருந்து இதைத்தான் சொல்லிட்டு இருக்க.வந்துடுவான் வந்துடுவான்.வேலையா போயிருக்கான் வேலையா போயிருக்கான்னு..அப்படி எங்க தான் உன் பங்காளி புடுங்க போய் இருக்கான் என்று பல்லை கடித்துக் கொண்டு வேலு சத்தம் போட்டான்.

இங்க பாருடா இவ்வளவு நாளும் நீ பிரண்டா இருந்த,இப்ப எங்க தங்கச்சி புருஷன் ஆயிட்ட.ஒழுங்கா மரியாதைய எங்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்று ஜான் சொல்ல...

நண்பனை பார்த்தவன் செருப்புக்கு பதிலா காலில் சூ தான் போட்டுருக்கேன். கழட்டி அடிச்சேன் பல்லு மொத்தமும் பேந்திடும். மரியாதை ஒன்னு தான் உனக்கு கேடு போடா என்று வேலு சொல்ல,ஜானோ இது திருந்தாத நாய் என்றான்.

சரிப்பா...மாப்ளையை வரச்சொல்லுங்க என்று பெரியவர் ஒருவர் குரல் கொடுக்க வேலுவும் எழுந்தது மேடைக்கு போனான். அங்கே பொண்ணு வீட்டு சார்பாக துணியும் மற்ற பொருள்கள் அடங்கிய தாம்பாளத்தை எடுத்து ராதாவும் முத்துவும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டவன் ஜானோடு வீட்டிற்குள் சென்றான்.

அம்மா செல்வியலயும் வரச் சொல்லுங்க என்று சொல்லவும் அல்லியும் தாமரையும் செல்வியை அழைத்துக் கொண்டு மேடைக்கு வர அவர்களுக்கு பார்வதியும் செல்வமும் புடவை மற்ற மேக்கப் பொருள் அடங்கிய தட்டை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டு உள்ளே போனாள்.

தாமரையோ ஏதோ ஓர் உந்துதலில் வாசல் பக்கம் பார்க்க அங்கிருந்தவனை கண்டு அதிர்ந்து போக,கதிரோ வலது கண்ணை தூக்கி எப்படி என்று கேட்கவும் அவளுக்கோ வார்த்தை வரவேயில்லை.

சிரித்தபடியே அவன் பங்ஷன் நடக்கும் பந்தலுக்கு வர அவன் பின்னால் வேதா, மூக்கையன், மற்றும் மயிலாவும் வந்தனர். அவர்களை பார்த்து வேகமாக சென்றவள் வாங்க என்று சொல்ல தாமரையை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தனர்.

வேதாவோ தனது மருமகளின் கன்னத்தில் தடவியவர் நல்லா இருக்கியாடா என்க அத்தையம்மா என்று வேதாவை அணைத்துக் கொண்டாள்.

வீட்டினரும் இவர்களை பார்த்து தலையசைத்து ஸ்டேஜிக்கு வர சொல்லி அழைத்தார்கள்.

தாமரைக்கோ தனது கணவனிடமிருந்து பார்வையை வேறு எங்கும் திருப்ப முடியவில்லை.

ஜானின் அருகில் போய் நின்றவன் அங்கிருந்தவர்கள் எல்லாரையும் பார்த்து வணக்கம் சொல்லி வாங்க என்று சொல்ல,கதிரு இன்னைக்கு நிச்சயதார்த்தம் வேலுக்கா இல்ல உனக்கா என்று அவனுக்கு மாமன் மைத்துனர் உறவினர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள்.

தனது வீட்டாரிடம் நின்று பேசிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது எதிரில் உட்கார்ந்திருக்கும் கணவனை பார்க்க தாமரையும் மறக்கவில்லை.

மனைவியின் பார்வையோ தன் மேல் படுவது உணர்ந்தவனுக்கு வெட்கமாகவும் இருந்தது.அவள் பார்வையின் குறுகுறுப்பில் ஏதோ உடலுக்குள் புதிதாக ரத்தம் பாய்வது போல் தோன்றியது.

மனைவியின் குறுகுறு பார்வையை தனது மீசையை முறுக்கி விட்டபடியே பார்த்தவன் இவள் வேற நம்மளை பார்த்தே கொல்றாளே என்று வெட்கப்பட்டான். அவன் வெட்கத்தையும் அங்கிருந்து விழி விரிய ரசித்துக் கொண்டிருந்தாள்.

கதிரும் தன்னவளின் அலங்காரத்தை இங்கிருந்து ரசித்துக் கொண்டிருக்க தாமரைக்கும் அவன் பார்வையால் குறுகுறுப்பு உண்டாக்கியது.

அப்பொழுது ஜானோ,இங்கே என்னடா நடக்குது என்று கேட்க செல்வியோட நிச்சயதார்த்தம் நடக்குதுடா பங்காளி..
ஏன் உனக்கு கண்ணு தெரியலையா என்றான்.

அறிவே கெட்டவனே நான் அதைக் கேட்கவில்லை.நீயும் உன் பொண்டாட்டியும் புதுசா ஒரு படம் ஓட்டிட்டு இருக்கீங்களே...சத்தியமா முடியலடா..

என்ன போல கல்யாணமாகாத கன்னி பயல் சாபத்தை வாங்கி கொட்டிக்காதிங்கடா என்க, உன் பொண்டாட்டி கூட தான் செவுத்துக்கு சுண்ணாம்பு அடிச்சு போல ஃபுல் மேக்கப்புல வருவா..நீ அவளை ரசிக்க வேண்டியது தானே என்றவன் மீண்டும் அங்கிருந்து மனைவியை தான் பார்த்தான்.

இதற்கு மேலும் மனைவியை சோதிக்க விரும்பாதவன் அங்கிருந்து அவர்கள் பால்கனியை காட்டி வா என்று கண்ணாளே சொல்லி எழுந்து சென்றான்.

கதிரோ தனது ரூமில் இருக்கும் கண்ணாடியில் தலைமுடியை கோதி விட்டுக் கொண்டிருக்கும் போது கதவை திறந்து உள்ளே வந்தவள் வேகமாக போய் தன்னவனை பின்னால் இருந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

கதிருக்கும் அந்த இறுக்கமான அழைப்பு தேவையாக இருக்க, சிறிது நொடிகள் அமைதியாக நின்றவன் தனது கைகளை பின்னால் விட்டு தன்னவளின் கையை பிடித்து முன்னாடி இழுத்தவன் அவள் இதழோடு தனது இதழை புதைக்க தாமரையோ கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

சிறிது நிமிடங்களுக்கு பிறகு மனைவியின் இதழை விட்டவன் அவள் நெற்றியில் முட்டிக்கொண்டு இப்போ புடிச்சிருக்கா என்க,புதர் மண்டிய தாடியை ஷேவ் பண்ணி ஆண்மை மிளிர கம்பீரமாய் மீசையை முறுக்கி விட்டபடி இருப்பவனின் கன்னத்தை தடவியவள் வாட் எ சர்ப்ரைஸ் என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

என் பொண்டாட்டிக்கு தான் அந்த காட்டனை பிடிக்கலையே அதனாலதான் தாடியை எடுத்துட்டேன் என்று சொல்ல நிஜமாகவா என்று கேட்டாள்.

இதுல உனக்கு என்னடி சந்தேகம்?உனக்காக உயிரை கொடுக்கும் போது இந்த மயிரை தர மாட்டேனா என்றவன் சொல்லுங்க மேடம் ஐயா எப்படி இருக்கிறேன்...
அத்தனை பேருக்கு முன்னாடி பச்சையா சைட் அடிச்சியேடி என்று இரண்டு பக்கமும் மீசையை தடவிக் கொண்டு சொல்ல, என் புருஷனை நான் பார்த்தேன்.மத்தவங்களுக்கு என்ன வேலை என்றாள்.

சரி மத்ததெல்லாம் பங்க்ஷன் முடிந்த பிறகு பாத்துக்கலாம் இப்போ வாடி என்று மனைவியை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்...

வேலும் தயாராகி மேடைக்கு வந்தவன் அங்கிருந்து கதிரை பார்த்து முறைத்துக் கொண்டே நிற்க அவனும் தனது மச்சானை பார்த்து சிரித்தான்.
பின்னர் அருகில் இருக்கும் ஜானிடம் என்னடா உன் பங்காளி பளபளன்னு சுண்ணாம்பு அடிச்சு இருக்கிறான் என்ன சங்கதி என்று கேட்க,இதுக்கு தான் காலையிலிருந்து ஆளைக்காணும் போலடா ..

அடச்சே அவன் மட்டும் தப்பிச்சிட்டான்.நாதாரி பயலே உன் கூடயே இருந்து நான் மாட்டிக்கிட்டேன்.என் பங்காளி கூட போயிருந்தாலும் நான் சும்மா கும்முனு வந்திருப்பேனே என்று தனது தாடி தடவிக் கொண்டு ஜான் சொல்ல...

ஏண்டா நிச்சயதார்த்தம் எனக்கா இல்ல உனக்கும் உன் பங்காளிக்குமா என்று வேலு பல்லை கடித்தான். மாப்பிள்ளை வந்தாச்சு செல்விய வர சொல்லுங்க என்று கூட்டத்தில் ஒருவர் குரலை கொடுக்க தாமரையும் வீட்டுக்குள் சென்றவள் சிறிது நிமிடத்தில் செல்வியை அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தாள்.

பொண்ணு மாப்பிள்ளை நிக்க வைத்து சடங்கு சம்பிரதாயங்கள் படி ஒவ்வொன்றாக கிராமத் தலைவர் சொல்ல அதன்படி செய்து கொண்டிருந்தனர்.

முதலில் தட்டில் இருக்கும் மாலையை எடுத்து இருவரிடம் கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல அதேபோல் இருவரும் செய்து கொண்டனர் .

பின்னர் பார்வதியும் செல்வமும் தனது மருமகளுக்காக வாங்கி வைத்திருந்த வளையலையும் மோதிரத்தையும் மகனின் முன் நீட்ட,அதை எடுத்து தனது மனங் கவர்ந்தவளின் கைகளில் வேலுவும் போட்டுவிட்டான்.

அதேபோல் வேலுக்காக வாங்கி வைத்திருந்த கைசெயினை மச்சான் முறைக்கு ஜான் போட்டு விட, மோதிரத்தை செல்வி போட்டுவிட்டாள்.

ஊர் தலைவர் பத்திரிக்கையை படிக்க ஆரம்பித்தார். .. குரோதி வருடம் தை 13 சீமக்கரை தாலுக்காவில் பெரிய தெருவில் வசிக்கும் பிரகாசம் வள்ளி இவர்களின் பேத்தியான தவப்புதல்வி செல்விக்கும்,அதே தாலுகாவில் மேல தெருவில் வசிக்கும் செல்வம் பார்வதியின் தவப்புதல்வன் வேலுவிற்கும் இரு வீட்டார்களின் முன்னிலையில் திருமண நிச்சயிக்கப்படுகிறது என வாசித்து முடித்தவர் இருவிட்டார்களிடமும் ஊர் தலைவர்களிடம் அந்த பேப்பரில் கையெழுத்தை வாங்கியவர் அதை மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுத்தார்.

காத்திருந்தேன்..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top