• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
557
சீமக்கரை:

சமையல்கட்டில் எல்லாருக்கும் மதிய உணவை தாமரை சமைத்துக் கொண்டிருக்க வீட்டினரோ வயலில் களையெடுப்பதால் எல்லாரும் அங்கு சென்று இருந்தனர்.

அப்பு போயிட்டு டீயும் வடையும் வாங்கிட்டு வா.சூரியன் உச்சிக்கு வந்துடுச்சு பாரு என்று பிரகாசம் தனது பேரனிடம் சொல்ல,களைகளை கூடையில் அள்ளிக் கொண்டிருந்த கதிரோ சரி தாத்தா என்றவன் அங்கிருந்த வாய்க்காலில் கை கால்களை கழுவிக்கொண்டு மடித்துக் கட்டிய கைலியோடு வரப்பில் நடந்து ரோட்டில் நிறுத்தி இருக்கும் புல்லட்டின் அருகில் வந்தவன் அதில் ஏறி உட்கார்ந்து வீட்டை நோக்கி சென்றான்.

உச்சி வெயிலோ சுள்ளெண்டு சுட்டெரித்தது.

வயலில் 40 பேருக்கு மேல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எப்படித்தான் இத்தனை பேருக்கு டீ போட்டுருப்பாளோ ஒன்னும் புரியலையே?

சொன்னா கேக்க மாட்டேங்குறாள் நானே பார்த்து பண்ணிடுறேன்னு பெரிய வீரப்பாக வேறு காலையில சொல்லிட்டாள். என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலையே என்று புலம்பி கொண்டே வீட்டில் முன்னால் வந்து வண்டியை நிறுத்தியவன் கதவை தட்டினான்.

சிறிது நொடிகளில் வந்து கதவை திறந்தவளை இமைக்காமல் பார்த்தவன்,எட்டி இழுத்து தன்னோடு அணைத்தவன் பார்க்க எப்படி இருக்க தெரியுமா என்று அவள் காதில் கேட்க மீசையும் தாடியும் குத்தும் குறுகுறுப்பில் தாமரையோ நெளிந்தாள்.

என்னடி என்று தன் கைக்குள் நெளிபவளை கோவமாக கேட்க, மணி ஆயிடுச்சு சீக்கிரம் டீ வடை எடுத்துட்டு போங்களென்றாள்.

போறேன் போறேன்..போகாம இங்கே வா இருக்க போறேன் என்றவன் என்ன லட்சணத்துல பண்ணிருக்கியோ முதல்ல எனக்கு எடுத்துட்டு வா நான் குடித்து பார்க்கிறேன். எப்படி இருக்குன்னு பார்த்துவிட்டு டவுன்ல போய் வாங்கிட்டு வரேன் என்று சொல்லி அவளை விட்டவன் அங்கிருந்த ஊஞ்சலில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அவனை முறைத்துக் கொண்டு கிட்சனிற்கு சென்றவள் ஒரு டம்ளரில் சூடாக டீயும் ஒரு தட்டில் இரண்டு வடையும் எடுத்துட்டு வந்து நீட்ட உக்காருடி என்றான்.

பரவாயில்லை நீங்க சாப்பிடுங்கள் என்று வேறு பக்கம் திரும்பி கொண்டு சொல்ல அவள் திரும்பி நின்றதால் இடை தெரிய அதில் நறுக்கென்று கிள்ளினான்.

வலியில் ஐயோ என்று துள்ளினாள்.

எதுவும் தெரியாது போல் ஊஞ்சல் மேலிருந்த டீயை எடுத்து ஒருவாய் குடித்தவன் பின்னர் வடையை பிட்டு சாப்பிட பரவாயில்லை நல்லாதான் பண்ணி இருக்கிறாள் என்று சொல்லிக்கொண்டே இரண்டையும் காலி பண்ணியவன் இன்னொரு வடை எடுத்துட்டு வா என்று சொல்ல, தாமரையும் எதுவும் சொல்லாமல் கிச்சனுள் சென்றவள் இன்னும் இரண்டு வடையை வைத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை அதன் மேல் ஊற்றியவள் பொரியல் தாளிப்பதற்காக வெட்டி வைத்திருந்த பொடிதான வெங்காயத்தையும் அதன் மேல் தூவி எடுத்து வந்து நீட்டினாள்.

என்னடி என்னென்னமோ அலங்காரம் பண்ணியிருக்கிற என்றவாறு வாங்கியவன் சூடான சாம்பாருக்கும் வடைக்கும் அதன் மேல் தூவி இருந்த வெங்காயத்திற்கும் ருசியாக இருக்கவும் பிட்டு அவளுக்கு ஒரு வாய் நீட்ட வேண்டாம் என்றாள்.

சும்மா சாப்பிடுடி...நீ பார்த்துக் கொண்டே இருந்தால் எனக்கு வயிறு வலிக்கும் இல்லையா என்று மீண்டும் சொல்ல இப்போ பாருடா என்று அவன் நீட்டியதை வாங்கும்போது கதிரின் விரல்களை நன்கு கடித்து விட்டாள்.

ஆஆஆஆஆ ராட்சசி.....

அடியே நேத்து தானடி கறி சோறு சாப்பிட்ட அதுக்குள்ள இவ்வளவு வெறியா என்று தனது விரல்களை பார்த்துக் கொண்டே கதிர் கேட்க தாமரையோ எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

பயமில்லை துளிர்விட்டு போயிடுச்சு டி நைட்டு வந்து வச்சிக்கிறேன் இருடி என்றவன் அங்கிருந்த வாஷ்பேஷனில் போய் கையை கழுவியவன்,சரிடி போய் டீ வடை எடுத்துட்டு வா...

அங்க உன் தாத்தா அக்னி பகவானுக்கே போட்டியா நிற்பாரு என்றவன் கண்ணாடியில் தனது முகத்தை பார்க்க தாடி கொஞ்சம் அதிகமாக இருக்கே நாளைக்கு ஷேவ் பண்ணிடனுமென்றவாறு கிச்சனிற்குள் பொறுமையாக போனவன் வடையை எடுத்து வைத்துக் கொண்டிருப்பவளை போய் பின்பக்கமாய் இடையோடு இறுக்கி அணைக்க அய்யோ என்று கத்தினாள்...

ஏய்....

கிறுக்கு புடிச்சவளே...

பட்ட பகல்ல என்னடி உனக்கு பயம் என்க... இந்த திருட்டு பூனை இப்படி வந்து நிற்கும்னு யாருக்கு தெரியும். கொஞ்சமாவது உங்களுக்கு கூறு இருக்கா என்று சத்தம் போட்டாள்..

ஏகப்பட்ட கூறு இருக்க போகத் தாண்டி உன்னை கட்டி இருக்கேன் என்று தனது மீசையை முறுக்கிக் கொண்டு கதிர் சொல்ல, ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.

ஐயா அப்படியே பத்து வருஷம் நடையா நடந்து என்ன பொண்ணு தேடி கட்டின போல தான்...நான் ஏமாந்த நேரத்துல தாலியை கட்டி போட்டுட்டு பெரிய வீரவசனம் பேசிட்டு இருக்குறீங்களே போயா அங்குட்டு என்றவள் அடுப்பில் இருந்த டீயை இறக்கி அங்கிருந்த கேனில் ஊற்றி மூடினாள்.

தாமரையோ சும்மா கிண்டலுக்காக தான் தன் கணவனிடம் தாலி கட்டியதை பற்றி பேசியது..ஆனால் கதிருக்கு அதைக் கேட்ட உடனே முகம் ஒரு மாதிரியாகிவிட்டது..

உண்மையிலேயே அவள் சம்மதம் இல்லாமல் தானே தாலி கட்டினோம் என்று எண்ணம் வர அங்கிருந்து அமைதியாக வெளியே சென்று விட்டான்.

அதை கவனிக்காத தாமரையோ என்ன வாயில கொழுக்கட்டையா இருக்கு ஒன்னும் பேசாம நிக்கிறீங்களே என்று அவனிடம் பேசுவதாக நினைத்து பேசிக் கொண்டிருந்தவள் எந்த பதிலும் இல்லாமல் போகவும் திரும்பி பார்க்க கதிர் அங்கு இல்லை..எங்கே போனாரு என்றவாறு டீ கேனையும் வடை இருக்கும் பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வர அங்கே முற்றத்தில் இருக்கும் சேர் மேல் உட்கார்ந்திருப்பவனை பார்த்தவள் இந்தாங்களென்க அமைதியாக எழுந்து வந்தவன் அவள் கையிலிருந்ததை வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக வெளியே சென்றுவிட்டான்.

தாமரையோ அவன் பின்னாடியே வந்து வாசலில் நின்று பார்க்க வண்டியில் ஏறியவன் வீட்ட பூட்டிக்கோ என்று சொல்லிவிட்டு வேகமாய் சென்றான்...

டீ குடிக்கும் நேரம் ஆகிட்டு போல அதான் அமைதியா போறாரோயென நினைத்தவள் கதவை தாழ்பாள் போட்டு விட்டு விட்ட வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

ஏண்டா...

இவன் வீட்டுக்கு டீ எடுக்க போனானா இல்லை சீமைக்கு போய் மாடு வாங்கிட்டு வந்து பால கறந்து டீ போடுறானாயென வேலுவிடம் பிரகாசம் தாத்தா கேட்க...

செத்த பொறு சகலபாடி...மச்சான் வந்துடுவான் கேட்டு சொல்லுறேன் என்றான்.....


மேலும் இரண்டு நாட்கள் சென்றிருக்க இப்பொழுது தான் கணவனின் நடவடிக்கை தாமரைக்கும் புரிந்தது.

காலையிலே வயலுக்கு செல்பவன் விளக்கு வைத்த நேரத்திற்கு மேல்தான் வீட்டிற்கு வருவது.அப்படி வந்தாலும் இரவு அவள் தூங்கிய பிறகே மாடியில் இருக்கும் தனது ரூமிற்கு வந்து தூங்குவான்.

எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டமென்று மண்டையை உருட்டி யோசிக்க அவன் வேண்டுமென்று தன்னை தவிர்க்கிறான் என்பதை உணர்ந்தவள் என்ன தப்பு செய்தோமென்று நினைத்து பார்க்க,
அன்று வயலுக்கு டீ எடுத்து போனது தான் கடைசி..அதன் பின்னர் வந்த நாட்களிலிருந்து தான் இப்படி என்பது புரிந்தது.

சரி வீட்டிற்கு வரட்டும் இன்னைக்கு என்ன விஷயமென்று தெரிஞ்சிக்காமல் விடுவதில்லையென்று நினைத்தவள் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள்..

வக்கீல் ஆபிஸ்:

எதுக்கு இந்த நாய் இங்க கூப்பிட்டு வந்துருக்கென்று வேலு-ஜான் இருவரும் அங்கிருந்த கதிரை பார்க்க அவனோ இஞ்சி தின்ன குரங்கு போல உட்கார்ந்திருந்தான்.

நேரமும் கடந்து செல்ல வக்கீல் முனியப்பனும் அங்கே வந்தவர் அவர்கான சேரில் உட்கார்ந்து கொண்டு மூவரையும் பார்த்தவர் சொல்லுங்கள் என்ன கேஸ் என்கவும்,கதிரோ விவாகரத்து கேசாக வந்து இருக்கேன் என்றான்.

அவன் சொன்னதை கேட்டு நண்பர்கள் இருவரும் யாருக்கு கேட்கிறான் இவன் என்று குழப்பமாக...

ஓகே..யாருக்கு என்று வக்கில் கேட்க எனக்கு தான் என்று சொல்லவும் நண்பர்கள் இருவரும் அதிர்ந்து எழுந்தனர்.

சார் தப்பா எடுத்துக்காதீங்க என்றவாறு ஆளுக்கொரு அறையை இருவரும் கதிருக்கு விட்டர்கள் ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சி வா... இல்லை இங்க என்ன நடக்குமென்று தெரியாதென்று சொல்லிய வேலு வேகமாய் வெளியே செல்ல...
ஜானோ வாடா என்கவும் கதிரும் அவனோடு அமைதியாக சென்றான்.
வக்கீலோ பாவம் இந்த பையன் நல்லா மாட்டுனான் நண்பர்கள்கிட்டயென்று சிரித்தார்.

எதுவும் சொல்லாமல் வெளியே வந்தவன் அங்கே வண்டியில் இருவரும் உட்கார்ந்திருப்பதை பார்த்து தனது புல்லட்டில் ஏறியதும் அவர்கள் இருவரும் வேகமாய் சென்றனர்.

என்ன பண்ண போறானுங்களோயென்று கதிரும் புலம்பிக்கொண்டே போக வழக்கம் போல் அவர்கள் சந்தித்து பேசும் அந்த ஆலமரத்திடம் நின்றனர்.

கதிரும் வண்டியை நிறுத்திட்டு அவர்களிடம் போக, ஏண்டா நாயே உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கயென்று கேட்டு மேலும் இரண்டு அறையை விட்ட ஜான்,என்ன குடி மூழ்கி போயிடிச்சென்று இப்படி ஒரு முடிவெடுத்துருக்க சொல்டா முண்டம் என்று நண்பனின் சட்டையை பிடித்து கேட்டான்..

அவன் தங்கச்சிக்கு என்னை புடிக்கலை போலடா என்க...

செருப்பு பிஞ்சிடும் நன்னாரி பயலே.. என் தங்கச்சி உன்கிட்ட சொல்லுச்சாடாயென்று வேலு கேட்க,அப்படிதான் நினைக்கிறேனென்று சொல்பவனை பார்த்த இருவரும் அய்யா ராசா முதல்ல நடந்ததை சொல்லி தொலை என்கவும் கதிரும் தாமரை சொல்லியதை சொல்லி வருத்தப்பட்டான்.

ஸ்சுஊஊஊஊஊ...

எட்டி வாய்லே மிதிங்கணும் போல இருக்குடா.பண்ணாடை பயலே...என் கொழுந்தியா விளையாட்டுக்கு சொல்லியிருக்கு.

இவன் சின்ன தங்கச்சிகாரியோ தேவியை ரூட் விட்டதை வச்சிக்கிட்டு தினமும் என்னை பாடாய் படுத்துறாள்டா.அப்படி பார்த்தால் நான் தினமும் டைவர்ஸ் பண்ணனுமே என்று சொல்லவும் இருக்கும் சூழல் மறந்து அப்படியாடா பங்காளியென்று கதிரும் சிரித்துவிட்டான்.

அடேய் லூசு பயலே விளையாட்டுக்கு சொன்ன ஒரு விஷயத்தை போய் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு நீயே ஒரு முடிவு எடுத்துருக்கியே இது தாமரைக்கு தெரிஞ்சா என்ன நினைக்கும்?

சரி அதை விடு தங்கச்சி உன்கிட்ட எப்படி பழகுது சொல்லு?மனதார பழகுற போல இருக்கா இல்ல கடமைக்கு இருக்க போல உனக்கு தோணுதா என்று கேட்கவும் யோசித்துப் பார்த்த கதிருக்கு அவள் மனதார அவன்கூட வாழ்வது போல தான் இருந்துச்சு.

இல்லடா கடமைக்கு அவள் எதுவும் பண்ற போல தெரியவில்லை என்க,பின்ன என்னடா,கணவன் மனைவிக்குள்ள இது போல வார்த்தைகள் வருவது இயல்பு தானே இதை எல்லாரும் சீரியஸா எடுத்துட்டா யாரும் யாரு கூட வாழ மாட்டாங்க.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
557
ஒழுங்கு மரியாதையா போய் குடும்பம் பண்ற வழிய பாரு இல்ல இதுபோல லூசுத்தனமா பண்ணிக்கிட்டு இருந்த மாமன் மகன்னு பார்க்க மாட்டேன் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வண்டியில் போய் உட்கார்ந்து ஸ்டார்ட் பண்ணியவன்,டேய் பனமரம் வரியா உன்னை வீட்டில் விடுறேன் என்று வேலு கேட்க...
நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்கடா.நான் அப்படியே நடந்து போய்கிறேன் பொழுது போயிடுச்சு நீங்க போங்கடா என்றான் ஜான்.

கதிரூஊஊஊ என்ற கர்ஜனையோடு உள்ளே வந்த பெருமாளை பார்த்த வீட்டினர்கு ஏன் இவர் அவ்வளவு கோவமாக இருக்கிறார் என்று புரியாமல் பார்த்தனர்...

தைரியத்தை வர வைத்துக் கொண்ட ராதாவோ, என்னாச்சு மாமா என்று கேட்க உன் பெரியமவன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியுமா?.

ஆத்தாளுங்களா ரெண்டு பொம்பளைங்க வீட்டில் இருக்கீங்களே புள்ளைங்க என்ன பண்றாங்க ஏது பண்றாங்கன்னு தெரிஞ்சுக்காம அடுப்படியே கதினு குடும்பம் பண்றீங்க அப்படி தானே?.

மாமா...பெரியவன் என்ன பண்ணுனான் என்று பயத்தோடு கேட்கவும் உன் மவனுக்கு விவாகரத்து வேணுமா.நம்ம முனியப்பன் வக்கில போய் பார்த்து இருக்கிறான்.

அவரு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி சொன்னாரு என்ன நெனச்சிட்டு இருக்கான். எல்லா தலைவலியும் ஓய்ந்து போய் இப்பதான் குடும்பமா ஆகிருக்கானேன்னு பார்த்தா இப்ப போய் இந்த வேலை பண்ணியிருக்கிறானே? இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கத்தினார்..

பெருமாள் சொன்னதை கேட்டு என்ன என்று மற்றவர்கள் அதிர்ந்தனர்.பாவம் இது யாரு காதில் விழக்கூடாதோ அவள் காதிலும் விழுந்து தொலைத்தது விதியின் சதியோ இல்லை கதிரின் நேரமோ தெரியவில்லை.

அப்பொழுது தான் தனது ரூமில் இருந்து கீழே வருவதற்காக மாடிப்படி அருகில் வந்தவளுக்கு பெருமாளின் கோப குரல் கேட்டது.ஏன் மாமா இவ்வளவு கோவமா கூப்பிடுறாங்க என்றவாறு அங்கையே நின்றவளுக்கு அனைத்தும் காதில் விழ அதிர்ச்சியில் உறைந்து போனவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

என்ன மாமா சொல்றீங்க என்று அதிர்வாய் கேட்க, உன் மவனோட லட்சணத்தை பற்றி உண்மையை சொல்லிக்கிட்டு இருக்கேன்.
இன்னும் வீட்டிக்கு வரலையா அவன்?
என்ன பிரச்சனை ரெண்டு பேருக்கும்னு கேளுங்க என்றவாறு தனது ரூமிற்கு சென்று விட்டார்.

கணவர் சொன்னதெல்லாம் கேட்டு திகைத்து நின்று சீதாவோ பின் சுதாரித்தவர் நீ போய் தாமரையை கூப்பிட்டு வா என்க,ராதாவும் சரிக்கா என்று படிகளில் ஏறப்போக அங்கே அழுது கொண்டு நிற்பவளை பார்த்து அய்யோ அக்கா என்றார்.

என்னாச்சு ராதா என்று சீதாவும் வர அங்கிருந்த தாமரையைப் பார்த்தவர் அய்யோ அய்யனரே, என்னப்பா இது சோதனை என்று படியில் ஏறிப் போய் தாமரையை தொடவும் அதில் உணர்வு வந்தவள் எதுவும் பேசாமல் தனது ரூமிற்குள் சென்றுவிட்டாள்.

சிறிது நொடியில் கையில் பேகோடு வெளியே வந்தவளை பார்த்த இருவரும் திகைத்து நிற்க,எந்த காரணம் என்கிட்ட கேட்காதீங்க.எங்க வீட்டுக்கு போக விடுங்கள் என்று அழுது கொண்டே சொல்ல இது தப்பான முடிவு தாமரை. அவன் இல்லாத நேரத்தில் நீ இப்படி வீட்டை விட்டு போறது நல்லது இல்லை என்றனர்.

தாமரையோ தனது முடிவில் உறுதியாக இருந்தவள் மன்னிச்சிடுங்கத்தை என்று கீழே வர தாமரை கொஞ்சம் நில்லு உனக்கு என்ன வீட்டுக்கு தானே போகணும் இரு நான் கொண்டு வந்து விடுரேன் என்று வளவன் சொல்ல. ..வேண்டாம் மாமா என்றாள்.

நீ தனியா போக வேண்டாம் நான் உன்னை கொண்டு வந்து விடுரேன் என்று சாவி எடுத்துக் கொண்டு வளவன் போக தாமரையும் அவன் பின்னாடியே சென்று வண்டியில் உட்கார சிறிது நொடியில் அத்தை வீட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கி விட்டவன் ரொம்ப தவறான முடிவு எடுத்துருக்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

வீட்டிற்குள் வந்த மகளின் முகத்தை பார்த்து உடனே ஏதோ சரி இல்லை என்று புரிந்து கவிதாவும் அன்பும் வாம்மா தாமரை என்றவர்கள் வேறு எதுவும் கேட்கவில்லை.தாமரையோ நேராக தனது ரூமிற்குள் போய் கதவை சாத்திக் கொண்டாள்.

என்னங்க என்ன ஆச்சு என்று தனது கணவரிடம் கேட்க, எதுவும் கேட்க வேண்டாம். எப்பவும் போல உன் வேலையை பாரு கவிதா என்றார்.

சரிங்க என்றபடிஎன்றார்கு பிடித்தமான சமையலை வேக வேகமாக செய்ய தொடங்கினார்.

கதிரும் வேலுவும் ஊருக்குள் வந்து சேரவே இரவு 7 மணியானது.
வேலுவோ எதுவும் சொல்லாமல் தனது வீட்டிற்குள் செல்லும் பாதையில் பைக்கை திருப்ப கதிரோ அத்தை மகன் எதுவும் பேசாமல் போவதை சிறிநு நேரம் நின்று பார்த்தவன் பின்னர் தனது வீட்டை நோக்கி சென்றான்.

வண்டியை கொண்டு வந்து ஷெட்டில் நிறுத்திவிட்டு கேட்டை லாக் பண்ணி கொண்டு வீட்டுக்குள்ள வர வீடே அமைதியாக இருந்தது.

ராதாவும் சீதாவும் ஆளுக்கு ஒரு மூலையில் சாய்ந்து உட்கார்ந்திருக்க அப்பாயி தாத்தாவிடம் எதுவோ கோவமாக பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

என்ன ஆச்சு?

ஏன் இப்படி இருக்கீங்க?

அப்பாயி என்ன புலம்பிட்டு இருக்க என்று கதிரின் குரலைக் கேட்டு வேகமாக எழுந்து வந்து அப்பாயியோ பேரின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்.

வள்ளி என்று பிரகாசம் தாத்தா சத்தம் போட நீங்கள் சும்மா இருங்கள். தலைக்கு மேல வளர்ந்துட்டானுங்களே அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியும்னு நம்ம கண்டுக்காம விட்டாக்க இன்னிக்கு எதுல கொண்டு வந்து விட்டிருக்கிறது பாருங்கள் என்று பாட்டி கோவமா கேட்கவும் என்ன ஆச்சு எதுக்கு இவ்வளவு கோபம்?.

அட அப்பாயி..ஏன் உன்னை அடிக்கிறேன்னு கேக்கல காரணத்தை சொல்லிட்டு அடிக்க வேண்டியது தானே என்க, என்னடா காரணம் சொல்லனும் என்று பெருமாளும் அங்கு வந்து மகனின் கன்னத்தில் அவர் பங்குக்கு ஓங்கி ஒரு அறை விட அண்ணா என்ன பண்ற என்று முத்து சத்தம் போட்டார்.

வேற என்னடா பண்ண சொல்ற மான மரியாதை எல்லாம் சந்தி சிரிச்சது தான் மிச்சம் என்று கத்திவிட்டு அங்கிருந்த சேரில் போய் உட்கார்ந்து கொண்டார்.

கதிருக்கோ விஷயம் எதுவும் புரியாமல் அப்பா என்னப்பா ஆச்சு என்க, அண்ணா, வக்கில் முனியப்பன் அப்பாவுக்கு போன் பண்ணார் என்று வளவன் சொல்லவும் கதிருக்கு விஷயம் புரிந்து விட்டது உடனே தனது மனைவியை தேட அவள் கீழே இருப்பது போல தெரியவில்லை.

வேகமாக படிகளில் ஏறி மேல போக எங்கடா போற என்கும் சீதாவின் குரல் கேட்க படியில் தேங்கி நின்றவனோ திரும்பி பார்க்க, உன் பொண்டாட்டி வீட்டை விட்டு போய் இரண்டு மணி நேரத்துக்கு மேல ஆகுது என்கவும் என்னம்மா சொல்லுறீங்களென்று அதிர்ந்து போனான்...!


மேகமலை:

முருகாயியும் குப்புளானும் மகளின் கல்யாணத்திற்க்கு சேர்த்து வைத்த பணத்தை எடுத்து பேகில் வைத்துவிட்டு,செல்லாவிடம் பத்திரமா இருக்கு சொல்லிக்கொண்டு அவளுக்கு தேவையான தங்க நகைகளை வாங்குவதற்காக கோயம்புத்தூருக்கு சென்றிருந்தனர்..

குடிலில் உள்ள கட்டிலின் மேல் படுத்திருந்தவள் தன்னவன் போட்டு சென்ற செயினை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு போன் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டு எடுத்து பார்த்த மருது என்று வந்தது..

அட்டென் பண்ணியவள் ம்ம் என்க,என்னடி பண்ற என்று கேட்டான்.ஒன்னும் பண்ணல என்று சொன்னாள்.ஒன்னும் பண்ணாததுக்கு எதுக்கு அங்க இருக்குற இங்காவது வரலாம் இல்லையா என்று மருது சொல்ல...

செல்லாக்கு இன்னும் அவன் மேல் உள்ள ஆச்சரியம் போகவில்லை உண்மையிலேயே நீங்கதான் பேசுவதா என்று வாயை திறந்து கேட்க...ஏண்டி நான் ஊமையா இல்லை திக்குவாயா?
இல்லை எனக்கு பேச தெரியாதா இல்லை வாய்ல புண் என்று யாராவது உன் கிட்ட சொன்னாங்களா என்று கேள்விகளை அடுக்க,அய்யோ அய்யோ போதும் மாமா என்று சினுங்கினாள்.

மம்ம்... சரி உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கும் சின்ன மலைக்கு சீக்கிரம் வாடி என்று சொல்லி போனை வைத்தான்..

என்னாஆஆஆ என்று அதிர்ந்தவள் குடிலில் இருக்கும் ஜன்னல் வழியாக தூரத்திலிருக்கும் சின்ன மலையை பார்த்தவள் இவர் என்ன உண்மையா சொல்லுறாரா இல்லை பொய்யா என புலம்ப மீண்டும் போன் வந்தது..

அட்டென் பண்ணியவள் நிஜமாவா என்க ம்ம் டி...வா சீக்கிரமென்றவன் வரும் போது மோர் கொண்டு வாடி என்று சொல்லி போனை வைத்தான்.

செல்லாவோ இந்த மாமனுக்கு என்னாச்சினு தெரியலையே...எல்லாம் புதுசா இருக்கே என்றபடி முருகாயி காலையிலே சமைத்த ராகி களியையும் கருவாட்டு குழம்பையும் தூக்கில் போட்டு மூடியவள்,இன்னொரு கூஜாவில் உறியில் இருந்த தயிரை மொண்டு உப்பு போட்டு கடைந்தவள் அதையும் காலியாக இருந்த வாட்டர் பாட்டிலில் ஊற்றி மூடினாள்.

பின்னர் அதையெல்லாம் பரணில் இருந்த கூடையில் வைத்தவள் வீட்டை பூட்டிக்கொண்டு வீட்டின் பின்பக்கமிருக்கும் வயலின் வரப்பில் நடந்து சென்றாள்.

இடுப்பில் கூடையோடு நடந்து வரும் தன்னவளை மலையின் மேலே வளைந்து செல்லும் கிளையின் மீது உட்கார்ந்திருந்த மருதுவும் ரசித்து பார்த்தான்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top