• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
555
மேகமலை...

நம்ப வழக்கப்படி ரெண்டு குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு கல்யாணம் என்பது, மணமக்கள் சம்பந்தப்பட்ட இரு குடும்பத்தினர் காதோடு காது வைத்தாற் போல திடீரென தீர்மானித்து நடத்தி முடிப்பது காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

இதற்கு கெட்டி மேளம் கொட்டனுமென்றில்லை, அர்ச்சகர் எவரும் தேவையில்லை.நம்மை சுற்றி இருக்கும் குறைந்த சொந்தங்களை கொண்டு திருமணத்தை முடித்து அதையே சிறப்பானதாக முப்பாட்டனுங்க வழிவழியா வந்தாங்களே மாமா என்று மூக்கையன் சொல்ல மச்சான் நீ நடத்துயா...

என்னைக்கு இருந்தாளும் என் மவள் உனக்கு மருமவள்னு முடிவு பண்ணிட்ட அப்படிதானே என்று கந்தன் சிரிக்க அதே தான் மாமா என்றார்.

அம்மாடி செல்லக்கிளி...கண்ணாலம் ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் நடைபெறும் இன்றியமையாத ஒன்றுதான்.தம்பதிகள் எந்தக் குறையும் இல்லாமல் எல்லா வளங்களும் பெற்று இனிமையாய் வாழ வேண்டும் என நம்ப மூதாதையர்கள் பெரியோர்கள் பல சடங்கு முறைகளைச் செய்து திருமணத்தை நடத்திக் வைக்கின்றனர்.

இப்போ கால மாற்றத்தில் அவங்கவங்க வசதிக்கு ஏத்தப்போல ஆடம்பரமா கண்ணாலத்தை பண்ணுறாங்க.
இருந்தாலும் ஆண்கள் விருப்பத்தை விட, பெண்களின் விருப்பங்களும், உணர்வுகளும் உயர்வாய் மதிக்கப்படுகின்றது.

நம்ப சாதிப்படி மாப்ளை வீட்டார், பெண் வீட்டிற்குத் திங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் கேட்டுச் செல்வர்.உன் மாமனும் நல்லா விவரமா ஞாயிறுலதான் வந்துருக்காரு.

அதும் நல்லா முடிவு பண்ணி.. பெண் கேட்டுச் செல்லும்பொது, கையில் ஒரு இரும்புத்தடி அல்லது மரத்தடியைக் கொண்டு செல்ல வேண்டும்.அதையும் வெவரமா கொண்டு வந்துருக்கார்னா பாரு என்று சிரித்தவர் உன் மனசுல இருப்பதை சொல்லு கண்ணு.

அவங்க மவனுக்கு பொண்டாட்டினு எண்ணத்தோடதான் நம்ப வூடு தேடி வந்துருக்காங்க,நீ சொல்லுத்தா என்றார்.

இவ்வளவு நேரம் அவர் சொன்னதையெல்லாம் ஏற்கனவே தெரிந்ததென்றாலும் அமைதியாக கீழே குனிந்து கேட்டவளுக்கு எதிரில் உட்கார்ந்திருப்பவனின் மடித்த கால்களும் அதில் தெரிந்த சுருள் முடிகளும் விரல்களின் நீளமும் தெரிய ஒருவித படபடப்பு வந்தது.

சுற்றி இருப்பவர்களோ செல்லா என்ன சொல்ல போறாளோயென அவளையே பார்த்திருக்க,ஆத்தா உன் முடிவு எதா இருந்தாலும் சொல்லுத்தா யாருக்கும் நீ பயப்பட வேண்டாமென்று மீண்டும் கந்தன் சொல்ல...

எனக்கு சம்மதம்பா என்றுவள் அங்கிருந்து உள்ளே இருக்கும் கதவை திறந்து தனது குடிலுக்குள் ஓடிவிட்டாள்.செல்லாவின் முடிவை கேட்டு எல்லாருக்கும் சந்தோஷம் தாளவில்லை.

அப்புறம் என்ன....கண்ணால நாளை கையோடு முடிவு பண்ணிடலாமே மச்சானென்று மூக்கையன் சொல்ல,யோவ் வெவரமான ஆளுயா என்று சிரித்தவர் ஆத்தா முருகாயி அந்த நாள்காட்டிய கொண்டுவா என்றார்.

முகம் கொள்ளா சிரிப்பு தாண்டவம் ஆட முருகாயியும் காலண்டரை எடுத்துட்டு வந்து கொடுக்க அதை வாங்கிய கந்தன் திருப்பி முகூர்த்த நாளை பார்த்தார்.

குப்புளான்-மச்சான் இன்னைல இருந்து ஏழா நாளு வெள்ளிக்கிழமை நல்ல நாள் வருது அதை விட்டா அடுத்த மாசம்தான்.இதில் எதை வச்சிக்கலாமென்க...

வர வெள்ளியே வச்சிக்கலாம் மாமா..

எதுக்கு நாள கடத்தணும்.நீங்க என்ன சொல்றீங்க மச்சானென்று தனது தங்கச்சி புருஷனை கேட்க,எனக்கு ஒன்னும் இல்லை மச்சான்.எதுக்கும் உன் தங்கச்சிகாரிய ஒரு எட்டு கேட்டுக்கலாமென்றவர் முருகாயி நீ என்ன சொல்லுற?

இவர்கள் திருமணத்தை பற்றி பேசிக்கொண்டிருக்க மருதுவின் போனிற்கு சவுதியிலிருந்து கால் வரவும் அங்கிருந்து எழுந்தவன் அட்டென் பண்ணி பேசிக் கொண்டே வெளியே வந்தான்.

சில நிமிடங்கள் பேசியவன் வீட்டை எட்டி பார்க்க அவர்கள் திருமண பேச்சில் சீரியஸாக ஆலோசனை பண்ணுவது தெரிந்து பக்கத்திலிருக்கும் குடிலை நோக்கி போனவன் கதவின் மேல் கையை வைக்க பட்டென்று திறந்தது.

உள்ளே கட்டிலில் குப்புற படுத்திருந்தவள் காலடி சத்தம் கேட்டு திரும்பியவள் அங்கிருப்பவனை பார்த்து அய்யோ என அதிர்ந்து எழுந்தவள் ஒரு மூலையில் போய் திரும்பி நிற்க...

நிதானமாய் அவளின் அருகிள் வந்தவன் தனது பாக்கெட்டிலிருந்த ஒன்றை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிட அதை பார்த்து திகைத்தாள்.

இன்னும் கொஞ்ச நாள்ல இதில் என் பொண்டாட்டி என்ற உரிமையோட தாலியை கோர்த்து போட்டுக்கலாமென்றவன் அதிர்ந்து பார்ப்பவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன் என் மனசுல பொண்டாட்டியா நீ மட்டும் தான் டி இருக்க.

தேவையில்லாமல் மண்டைய போட்டு உழட்டாதே என்றவன் தன்னவளின் நடுங்கும் இதழை தனது முரட்டிதழால் சிறை செய்தான்.

நிதானமாக செல்லாவின் உதடுகளை தன்னிடமிருந்து பிரித்தவன் நான் முத்தமிடும் முதலும் கடைசியுமான பெண் நீ மட்டும் தான்டி.

தேவையில்லாத விஷயங்களை மனசுல நினைச்சி வாங்கி கட்டிக்காதே என்க செல்லாவோ அவன் அதிரடியில் மிரண்டவள் வேறு பக்கம் திரும்பி நிற்க மீண்டும் தன்வளின் இடையோடு இறுக்கி அணைத்தவன் என்னடி 45 கிலோக்குள்ள தான் இருப்ப போல...

நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தால் தானே இந்த மாமனை ரசிக்க முடியுமென்க,பேசுவது தன் மாமன் மகன் மருது தானாயென செல்லாவிற்கு நம்பவே முடியவில்லை.

சரி தலை முடியை சரி பண்ணு நான் வெளியே போறேனென்றவன் அங்கிருந்து வீட்டிற்குள் வர பெரியவர்களும் இருவரின் திருமணத்தை எப்படி பண்ணலாமென்று பேசி முடித்திருந்தனர்.

பின்னர் வந்தவர்களுக்கு மரியாதை செய்து வழியனுப்ப மூக்கையன் குடும்பத்தாரும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.

ஒரு முறையாவது தன்னவள் பார்ப்பாளென்று மருதுவும் எதிர் பார்ப்போடு அங்கிருந்து பஸ் ஏற சென்றான்.

எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று குப்புளானும் முருகாயியும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு அய்யோ மாமா கிளம்பிட்டாரா என்று நினைத்தவள் போகும் போது ஒருமுறை பார்த்திருக்கலாமோ என்று எண்ணம் வர குடிலில் இருந்து வெளியே வந்தவள் பின்பக்கம் உள்ள வயலில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினாள்.


ஏதோ ஓர் உந்துதலில் இடது பக்கமிருக்கும் வயலை மருது பார்க்க செல்லா ஓடி வருவது தெரிந்தது.ஹப்பாடா வந்துட்டாலென்று நினைத்தவன் பஸ் வருவதற்கு இன்னும் அரை மணி நேரத்திற்கு மேல் இருப்பதால் அப்படியே அங்கிருந்து மரங்களை நோக்கி சென்றான்.

ஓடி வந்தவள் சற்று தள்ளி இருந்த மரங்களுக்கு பின்னால் மறைந்து நிற்க அங்கு வந்தவன் என்னடி என்றான்.
மருதுவின் குரலை கேட்டவள் எதுவும் சொல்லாமல் அப்படியே நிற்க மரத்தின் மேல் இருக்கும் அவள் கையின் மேல் தனது கையை வைத்தவன் இன்னும் அஞ்சு நாள் தான்...அதுக்குள்ள இந்த ஊருக்குள்ள எங்க எங்க சுத்தி ஓடனுமோ ஓடிக்கோ..

அதுக்கப்புறம் என் பொண்டாட்டியா நீ அங்க இருக்கணும் என்கவும் மாமனின் பேச்சை கேட்ட செல்ல கிளிக்கு வெட்கம் வந்தது.

கையைப் பிடித்துக் கொண்டே மறைவில் நிற்பவளிடம் அங்க வரட்டுமாடி என்க என்று ஐயோ என்றாள். அப்போ வரச்சொல்லுற சரிதானென்று பட்டென்று அவளிடம் வந்தவன் மரங்களுக்கு ஊடே இரு கைகளால் சிறை செய்ய செல்லாவோ கீழே குனிந்து கொண்டாள். ஏய் ஒரு முறை நிமிர்ந்து பாருடி என்று சொல்ல கண்கள் படபடக்க நிமிர்ந்தவள் எதிரே நிற்பவனை பார்க்க முடியாமல் வெட்கம் தடுக்க கண்களை மூடிக்கொண்டாள்.

மூடியே இரு கண்களிலும் மீசை முடி குத்த முத்தமிட்டவன் அடுத்து துடித்துக் கொண்டிருக்கும் இதழை தொடப் போக மருது என்று அவன் அப்பா கூப்பிடும் சத்தம் கேட்டு ப்ச் என்றான்.

தன் காதல் கைகூடிய மயக்கத்தில் மூழ்கியிருந்தவளுக்கும் மூக்கையனின் குரல் காதில் கேட்டது கண்ணு திறந்தவள் மாமா கூப்பிடுறாங்க தான் என்று ஓட போக ஏய் இருடி என்று மீண்டும் அவள் கையை பிடித்து இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவன் பத்திரமா போ என்க கீழே குனிந்து கொண்டு தலையாட்டினாள்.

அப்புறம் இந்த கழுத்துல இருக்குற செயின் பற்றி வீட்ல கேப்பாங்க என்றதும்,அதைக் கேட்ட உடனே ஐயோ என்று சொன்னவளை பார்த்தவன் அப்படி கேட்கக்கூடாது .

உன் கழுத்தில் இருப்பது இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம் புரியுதா என்க சரி என்றாள்.ம்ம் உன் மாமனார் நம்மள ரொமான்ஸ் பண்ண விட மாட்டேங்குறாரு.மொத்தமா வசூல் பண்ணிக்கிறேன் இப்ப நீ போ என்றவன் அவள் கன்னத்தை தட்டி அனுப்பி விட்டு சிரித்துக் கொண்டே தனது தலைமுடி கோதிக்கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தான்.

அவர்களுக்கான பஸ் வந்ததும் அதில் ஏறி நீலகிரிக்கு வந்து சென்றனர்.

வீட்டிற்குள் வந்து செல்லாவிற்கு அவள் தாயும் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசுவதும் காதல் விழுந்தது.

என்ன முருகாயி நீ ஆசைப்பட்ட போலயே உன் பொறந்த வீட்டுக்கு உன் மகளை மருமகளா அனுப்பி வைக்கிற என்று கேட்க ஆமாங்க அக்கா இதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கு.

எனக்கு அப்புறம் என் பொண்ணுக்கு உறவு என் அண்ணன் வீடு தானே என்க, அதுவும் வாஸ்தவம் தான் மருது போல நல்ல பிள்ளைகள் படிச்சு நம்ம இனத்துல முன்னேறுவது குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதை தான்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
555
ஏதோ கடவுளா பார்த்து அந்த வேதா தாய இந்த ஊருக்கு அனுப்பி வச்சாங்க நமக்கும் நல்லது நடக்குது என்றார்.

நெசம் தான் கா நீங்க சொன்னது . அவங்க மட்டும் இங்கு வேலைக்கு வரலைன்னாக்க நம்பலாம் எவ்வளவு அவஸ்தப்பட்டுருப்போம் இந்த அரசாங்கமும் நமக்காக யாரையும் அனுப்பி இருக்காது.

இந்த புண்ணியவதி நோய் நொடி இல்லாமல் வாழணும் என்றார். சிறிது நேரம் பேசி இருந்து விட்டு அவர் சென்றுவிட குடலில் இருக்கும் கட்டிலில் வந்து படுத்தவளுக்கு தன் மாமன் செய்த சேட்டைகள் எல்லாம் நினைவுகள் வந்தது.

அந்நேரம் அவன் செல்போனுக்கு கால் வர புது நம்பராக இருந்ததும் அட்டென்ட் பண்ணாமல் யோசனையானாள்.

அப்பொழுது மெசேஜ் வரும் பீப் சவுண்ட் கேட்க ,சற்று முன்னர் கால் வந்த நம்பரில் இருந்து தான் மெசேஜ் வந்திருக்கிறது என்பது தெரிந்து ஓபன் பண்ணிப் பார்க்கவும் நான் தாண்டி உன் புருஷன் மருது என்கும் மெசேஜ் வந்திருந்தது....!

சீமக்கரை:

பின்னர் இருவரும் வண்டியில் ஏறி ஏரிக்கரையிலிருக்கும் அய்யனார் கோயிலை நோக்கி வந்தனர்.

புல்லட்டிலிருக்கும் கண்ணாடியை பின்னாடி உட்கார்ந்திருப்பியவளின் முகம் தெரியுமாறு திருப்பியவன் அதில் தெரியும் தன்னவளை பார்க்க இவள் என்னவளென்று கர்வம் வந்தது.

காற்றில் நெற்றி முடிகள் பறக்க காதிலிருந்த தொங்கட்டான் முன்னும் பின்னும் ஆட,கூந்தலில் இருந்த மல்லிப்பூவோ அவள் கன்னம் தீட்டி ஓடி ஆட படுத்துறாளேயென தனக்குள் முணவினான்.

அவனின் மேல் படாமல் சிறிது தள்ளி உட்கார்ந்து வருபவளை மனதிற்குள் திட்டியவன் இப்போ பாருடியென சடேன் பிரேக் அடிக்க கதிரின் மேல் வந்து மோதியவள் என்னாச்சு மாமா என்க...

நாய் குட்டிடி என்று சிரித்தவன் நடுவுல யார் உங்கப்பா உட்காரணுமா என்க ... கணவனின் செயல் புரிந்து அவனோடு நெருங்கி உட்கார்ந்தவளுக்கும் சிரிப்பு வர வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அந்த பயணத்தை ரசித்தபடியே இருவரும் கோயில் திடலுக்கு வந்து சேர அங்கிருந்த கூட்டத்தை பார்த்து திகைத்தாள்.

கனவு கண்டது போதும் இறங்குடி என்றவனின் குரலில் சுதாரித்தவள் வண்டியிலிருந்து இறங்க,கதிரும் தனது புல்லட்டை ஓரமாக நிறுத்தியவன் மனைவியோடு கோயிலை நோக்கி செல்ல,அவளோ தலை குனிந்தபடியே வந்தாள்.

அங்கே சொந்த பந்தங்கள் அங்காளி பங்காளி தெரிந்தவரெல்லாம் குழுமியிருந்தனர்.

அய்யா மாரி பூசையை ஆரம்பிப்பாயென சிவசாமி தாத்தா சொல்ல அவரும் சமைத்த உணவுகளையுய் மற்ற படையல் பொருட்களையும் நீளமான தலைவாழை இலையில் பரிமாறி தேங்காய் உடைத்து சூடத்தை அய்யனாருக்கு காட்டி விட்டு மற்றவர்களுக்கு காட்ட ஆரத்தி எடுத்துக்கொண்டனர்.

பின்னர் அனைவருக்கும் பந்தி போட ஏத்தா தாமரை போய் பெரியவங்களுக்கு பரிமாறி ஆசீர்வாதம் வாங்கிக்கோங்களென்று சொல்ல சரியென்று தலையாட்டினாள்.

பேசனில் இருந்த சாதத்தை எடுக்க போனவளுக்கு புடவை தடுக்கி கீழே விழப்போக ஏய் பார்த்துடியென்று வேகமாய் வந்த கதிர் தன் மனைவியை இடுப்போடு அணைத்து பிடிக்க அடேய் என்னடா நடக்குதென்று அவனுக்கு மாமன் மச்சான் உள்ளவர்கள் கேட்டு சிரித்தனர்...

பின்னர் இருவரும் இணைந்து சிலருக்கு பரிமாற தாமரையை போதுமென்று அனுப்பி விட்டு வேலுவும் ஜானும் பரிமாறினர்.

விருந்து உபசரிப்பு தடபுடலாக நடந்து முடிந்தது. பின்னர் வீட்டினர் சாப்பிட உட்கார்ந்தனர். அவர்களும் சாப்பிட்டு முடிக்கவே மாலை நான்கு மணிக்கு மேலானது.

அப்பொழுது தாமரைக்கு கால் வர டிஸ்பிளேவில் பெயரை பார்த்தவள் சிரித்தபடியே அட்டென் பண்ணி சொல்லுங்கத்தை எப்படி இருக்கீங்க?

சாப்டீங்களா?

டிசைன் அனுப்பியிருந்தேனே ஓகேவா என கேள்விகளை அடுக்கினாள்..

ஏய் ஏய் ஏஞ்சல்... ஸ்டாப் ஸ்டாப்..

உன்கிட்ட என்ன சொல்லி அனுப்புனேன் அங்கு போய் என் பையன் கூட வாழுற வாழ்க்கையை மட்டும் பார்கணும்னு தானே அதை விட்டு நீ என்ன பண்ணிட்டு இருக்க என்றார்.

அத்தை... லீலா அக்காவும் அங்கு இல்லை.எப்படி எல்லாத்தையும் நீங்களே மேனேஜ் பண்ணுவீங்களென்றவள் டிசம்பர் 25 டேட் டிக்ளர் பண்ணிட்டாங்க போலவே என்க...

ம்ம்...

நாம இந்த முறை கலந்துக்க வேண்டாம் ஏஞ்சல் என்பவருக்கு அத்தை...நம்மோட டிசைனின்கு வருஷா வருஷம் அவ்வளவு பேன்ஸ் கிடைக்கிறார்கள் அதை விட முடியாது.நான் வருவேனென்றவள் வினிதாவை மறுத்து பேச விடாமல் போனை வைத்தாள்.

சிங்கப்பூர்:

அந்த 20 அடுக்கு பில்டிங்கின் 17 ப்ளோரில் கால் மேல் கால் போட்டு சிகிரெட்டை ஊதிக் கொண்டிருந்தவன் எதிரில் இருப்பவனை பார்த்து இன்பர்மேஷன் சரி தானே என்க...

எஸ் சார்..

தாமரை மேடம் தற்பொழுது இங்கில்லை.அவர்கள் இந்தியாவிற்கு போயிருக்கிறார்கள் என்றான்..

ம்ம்... பைன்..

இந்த முறை அந்த போட்டியில் நம்ப கம்பெனி தான் வின் பண்ணனும் அண்டர்ஸ்டேன்ட் என்னு கர்ஜித்தவன் இன்னொரு கையிலிருக்கும் சாப் டிரிங்ஸை குடித்தான்.

வி.வி.... இந்த முறை உன்னை ஜெயித்து காட்டுறேனென்றவன் செலக்ட் பண்ணிய மாடல்ஸ் போட்டோக்களை வரிசையாக பார்த்தவன் அதில் சிலரை தேர்ந்தெடுத்தான்.

இவங்களுக்கு அக்ரிமெண்ட் போடு...

இந்த முறை எந்த தவறும் நடக்க கூடாது பி கேர்புல் என்றவாறு எழுந்து உள்ளே சென்றவன் தன் காதலியோடு ஐக்கியமானான்.

வி. வி. வில்லா:

மேடமென்று ஷெரின் கூப்பிட வேலையாய் இருந்த வினிதா திரும்பி பார்தார்.போட்டிக்கு டேட் டிக்ளர் பண்ணிட்டாங்கள் மேம்.இந்த முறை யாரை மாடலாக போடலாமென்க அவளை ஒரு பார்வை பார்த்த வினிதா என்னோட மருகள் வருவாள் மற்றதை நான் பார்த்துக்குறேன்.

அதிக பிரசங்கி தனமாக வேலை பார்க்க வேண்டாம்.தாமரை இந்தியாக்குதான் போயிருக்காள். விண்வெளிக்கு இல்லை ஓகே என்க ஷெரினின் முகம் கருத்துவிட்டது.

தாமரையையும் லீனாவையும் எப்படியாவது மட்டம் தட்டி அவர்களிடத்தை பிடிக்க விட வேண்டும் என்று ஷெரினும் கடந்த ஒரு வருடமாக எவ்வளவோ போராடி பார்க்கிறாள் அவளால் ஒன்னும் முடியவில்லை.

அவளுக்கு தெரியாத ஒன்று தாமரை வினிதாவின் செல்லமான மருமகள் என்பது...

மீண்டும் வினிதா தனது வேலையை தொடர ஷெரினும் அங்கிருந்து சென்று விட்டாள்.

ஏஞ்சலென்று சிரித்தவர் நீ போய் 1 மந்த் கூட ஆகவில்லை பட் ரொம்ப வருஷம் ஆன போல இருக்கேயென பெரு மூச்சி விட்டவர் மணியை பார்க்க எப்படியும் கோயில் பூஜை முடிந்து வீட்டிற்கு வந்துருப்பாள் என்பது தெரிந்து கால் பண்ணினார்...

மீதம் இருக்கும் வேலைகளை முடித்துவிட்டு எல்லாரும் வீட்டிற்கு கிளம்பினர். தாமரைக்கு எப்போடா வீட்டுக்கு போய் இந்த புடவையை கழட்டிவிட்டு சுடிதார் போடுவோம் என்று இருந்தது...

அவ்வப்போது அவள் புடவையை அட்ஜஸ்ட் பண்ணுவதை ஓரக்கண்ணால் பார்த்த கதிருக்கும் சிரிப்பு வந்தது.

மவளே இனி தினமும் உன்னை புடவை கட்ட சொல்லி ரசிக்கிறது தாண்டி இந்த மாமனோட வேலை என்று மனதிற்குள் முடிவெடுத்தவன் போகலாமாடி என்க..பின்னர் இருவரும் வண்டியில் ஏரிக்கரை வழியாக வந்தவர்கள் அந்த தாமரை பூவை பார்த்தவுடனே தாமரைக்கு அதில் இறங்கி கால் நனைக்கணும் போல் தோன்றியது.

ஏனோ கதிரும் சரியாக அந்த படிக்கட்டு முன்பு வந்து வண்டியை நிறுத்தினான். என்ன என்று தெரியாத போல கேட்க குளிச்சிட்டு வரேன் நீ உட்கார்ந்திரு என்று சொல்ல எதே என்றாள்.

இறங்குடி என்றவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வேஷ்டியை மடித்துக் கொண்டு படிக்கட்டில் இறங்கி தண்ணீரில் கால் வைக்க சில்லென்று இருந்தது.

தாமரையும் தனது புடவை லேசாக தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்து அந்த தண்ணீரில் நிற்பவளுக்கு மீண்டும் கதிரோடு இங்கு நடந்த சம்பவம் நினைவு வேறு பட்டென்று அவளை தண்ணிக்குள் தள்ளிவிட போக ஐயோ என்று அவனை இறுக்கிப்பிடித்துக் கொண்டாள்.

இவ்வளவுதான் உன் வீரப்பாடி என்று சிரித்தவனை முறைத்தவள் இப்ப பாருடா என்று கதிரை பிடித்து தண்ணிக்குள் தள்ளிவிட்டவள் மேலே ஏறி போய் நின்று கொண்டாள்.

இதை எதிர்பார்க்காத கதிரோ தண்ணிக்குள் மூழ்கி எழுந்தவன் அடியேய் இன்னைக்கு நீ என்ன பாடுபட போற பாருடி என்று சொல்லி கரைக்கு வந்தவன் மேல் சட்டையை கழட்டி பிழிய வேஷ்டி பனியனோடு ஈரம் சொட்ட சொட்ட நிற்கும் கணவனை பார்த்தவளுக்கு காதல் பொங்கி வெட்கம் வர வேறு பக்கம் திரும்பினாள்.

ஓய்...என்னடி மூஞ்சி அங்க திருப்பி இருக்க, அவ்வளவு கேவலமாக இருக்கிறேன் என்று கேட்க ,நேரம் கெட்ட நேரத்தில்தான் இந்த மனுஷன் நம்மள படுத்தி வைப்பான் என்று மனதிற்குள் முணவி கொண்டாள்.

பின்னர் இருவரும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் தாமரை பூவே பிச்சை எடுத்தனர்


படியில் ஏறி மேலே வந்தவன் பிழிந்த சட்டையை உதற மடித்து கட்டிய வேஷ்டியினால் கால்களில் இருக்கும் சுருள் முடிகளில் தண்ணீர் வழிந்தோட கட்டிளம் காளையாய் கம்பீரமாக நிற்கும் கணவனையும் ஓரக்கண்னால் பார்த்த தாமரைதான் தவித்து போனாள்.

மனைவியின் வெட்கத்தை ரசித்தவன் அவள் முந்தானை எடுத்து தனது தலை முகத்தையும் துடைத்துக் கொண்டவன் அங்க போய் நில்லடி வேஷ்டியை பிழிஞ்சிட்டு வரேன் என்று சொல்ல விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடினாள்.

மனைவியின் படபடப்பை ரசித்துக் கொண்டே துணியை பிழிந்து கட்டியவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணி அவள் நிற்கும் மரத்தின் அருகே போய் நிறுத்த தாமரையும் உட்கார்ந்து கொண்டாள்.

ஒரு தாமரையே இன்னொரு தாமரையை சுமந்து வருகிறதே!!என்று ஹைக்கு சொல்ல பார்ரா....இந்த முரட்டு அய்யனாருக்கு கவிதை கூட தெரியுது என்றாள்.

ஏண்டி எனக்கெல்லாம் கவிதை சொல்ல தெரியாதா? நானெல்லாம் கவிதை எழுதகூடாதா? உன் மாமா ஸ்கூல்ல எழுதாத கவிதையா என்க,அப்படியா...அப்போ கவிப்பேரரசு ஏ ஆர் ரகுமானா இல்ல இளையராஜாவா என்று கிண்டல் பண்ண நக்கல்டி உனக்கு என்றான்.

இருவரும் ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டே ஒருவர் அருகாமையை ஒருவர் ரசித்தபடி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் வரும் வழியில் அடித்த வெயிலில் துணியும் நன்கு காய்ந்து விட்டது.


தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top