Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 551
- Thread Author
- #1
சீமக்கரை:
சீதா ராதாயென்று வள்ளி அப்பாயி கூப்பிட, தோட்டத்தில் உட்கார்ந்திருந்த அக்கா தங்கை இருவரும் வீட்டிற்குள் வந்தனர்.
அம்மாடி அடுத்த ஞாயிறு செல்விக்கும் வேலுக்கும் நிச்சயம் வச்சிக்கலானு பேசிட்டு வந்துருக்கு.பள்ளிக்கூடம் லீவு உடுறதுக்கு சரியா இருக்குமென்றவர் அதுக்கே முன்னாடி தாமரைக்கு தாலி பிரிச்சி கோத்துடலாமா என்று கேட்டார்.
ஹம் சரிங்கத்தை ..
செயினும் உருவும் ரெடியாதான இருக்கு என்கும் போது வீட்டு போனுக்கு கால் வர,சீதா போய் எடுக்கவும் பெரியவன் தானென்றவாறு அட்டென் பண்ணியவர் சொல்லுப்பா என்றார்.
ஊருக்கு வரும் விஷயத்தை சொல்லிவிட்டு அவனும் போனை வைக்க மாமியாரிடம் விஷயத்தை சொன்னார்.
அப்படியா என்றவர் நாளைக்கு புதன் கிழமை சடங்கை கையோடு செஞ்சிடலாம். அதுக்கு ஏற்ற போல என்னென்ன வேண்டும்னு சின்னப்புகிட்ட சொல்லி வாங்கிடுங்கம்மா என்றவர் அங்கிருந்து தனது அறைக்குள் சென்றுவிட்டார்.
அக்கா தங்கை இருவரும் என்னென்ன வேண்டுமென்று லிஸ்டை போட்டு முடிக்கவும் தூங்கி எழுந்து குளித்து வேறு உடையை மாற்றிக்கொண்டு வளவன் வரவும் சரியாக இருந்தது.
அம்மா சாப்பாடு என்கவும், மகனுக்கு டிபனை பரிமாறிக்கொண்டே விஷயத்தை சொல்ல,ம்ம் நான் போய் வாங்கியாறேன்.சின்னவன் கிட்டயிருந்து போன் வந்துச்சா?.
இல்ல அப்பு என்க, ஏம்மா பத்து நாள் லீவுக்கு வந்துருக்கான் எதாவது கறிகஞ்சி ஆக்கி போட்டு தின்னுடானு சொல்லாம, எதுக்கு அவனை விளையாட அனுப்புனயென்க,ஆறு மாசமா படிப்பு படிப்புனு தானே இருக்கான்.
அவனுக்கும் கொஞ்சம் மனசு இளைப்பாறனும் அப்புயென்று சீதா சொல்ல, எல்லாம் உன் ஆத்தாகாரி குடுக்குற இடம்தான் என்று பெருமாள் சொல்லவும் இப்போ என் மவன் விளையாட போனதால என்ன நட்டமாகிட்டு?
நாளைக்கு வந்துடுவானென்று சொல்லி சீதா உள்ளே போக,மவனை ஒன்னு சொல்லிடக்கூடாது பார்வையாளே வெட்டிருவா உம்மாயென்க,வளவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
தம்பி இந்த மாசத்துக்கு நிலவனுக்கு பணம் கட்டனுமேயா என்கவும், போன வாரமே அண்ணன் கட்டிடுச்சிப்பாயென்றான்.
கடவுள் புண்ணியத்துல நம்ப பரம்பரையிலே யாரும் படிக்காத படிப்ப நம்ப புள்ள படிக்குறானு நினைக்க மனசு அப்படியே சொகமாதான் இருக்கு.
என்ன விளையாட்டு புத்திதான் அதிகமா இருக்கு.இந்த வயசுல விளையாடாமல் வேற எந்த வயசுல விளையாட சொல்லுற பெரியவனேயென்று அப்பாயி கேட்க,மாமியார் மருமவள் சேர்ந்து அவனுக்கு கொம்பு சீவிட்டே இருங்க என்றார்.
அப்பு டீ என்று ராதா டம்ளரை நீட்ட வாங்கி குடிச்சவன் பில்லு கொண்டுவாம்மா டவுனுக்கு போய்ட்டு வரேன் என்றதும் சிறிது நிமிடத்தில் பில்லும் பணமும் ராதா கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கியவன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு வெளியே போனான்.
ஊருக்குள்ளிருந்து காட்டு பாதைக்கு வந்தவன் வண்டியை ஓரமா நிறுத்திவிட்டு நிலாவுக்கு கால் பண்ண உடனே அட்டென் பண்ணியவள் ம்ம் என்க...
ஏன்டி இன்னுமா உனக்கு வெட்கம் விட்டு போகலை என்று அந்த மழைநாளை நினைத்து சொல்ல,இதை கேட்கதான் போன் போட்டிங்களாயென்றாள்.
ம்ம் என்றவன் டவுனுக்கு வரேன் கிளம்பி வா என்க எதேஏஏஏ என்ன விளையாடுறீங்களா என்றாள். அடியேய் நெசமாதான் சொல்லுறேன்.
நாளைக்கு அண்ணா அண்ணிக்கு தாலி பிரிச்சி கோர்க்குறதுடி அதுக்கு சாமான் வாங்கணும். நம்ப அண்ணாச்சி கடை சந்துல நிக்கிறேன் வாயென்று சொல்லி போனை வைத்தான். சொன்ன போலவே நிலாவும் அங்கு வர ஓய் என்றான்.வருங்கால கணவனை கண்டவள் யாராவது பார்த்திட போறாங்களென்கும் போது அவளை இழுத்து அங்கிருக்கும் சுவற்றில் சாய்தவன் இங்கு யார் வர போறாங்கள்?
வந்தாலும் எனக்கென்னடி?
என் பொண்டாட்டிகூட நானிருக்கேனென்று அவள் முகத்தோட இழைய நிலாவிற்கோ மூச்சடைத்தது.
ஒருநாள் இரண்டு நாள் இல்லையே...மூன்று வருடக்காதல்...தானே வெட்கத்தை விட்டு எத்தனையோ முறை இவனிடம் காதலை சொல்லி அடி வாங்கியிருக்கோமென்று நினைக்காமல் இல்லை.
இனி கல்யாணம் ஆகுற வரைக்கும் என்க...ம்ம் கல்யாண ஆகுறவரைக்குமென்று அவளும் கேட்க அது வந்து வந்து என தடுமாறியவன், பின்னர் அவள் கண்களை பார்த்தவன் அவளின் கழுத்தோரம் கையை விட்டு தன்னோடு இழுக்க,ம்ம் சொல்லுங்களென்று கண்ணை முடி நின்றாள்...
ஏனோ ஆண்மகனுக்கு தயக்கமும் தடுமாற்றமும் வர ஒரு கையால் தனது தலையை கோதியவன் லவ் யு டி என்று அவள் இதழில் புதைந்தான்.
சொல்லிட்டான்...
என்னவன் என்னிடம் காதலை சொல்லிட்டான்....இதற்காக தானே இவனிடம் அவ்வளவு போறாடினேன்...
கேட்க கூடாத பேச்செல்லாம் கேட்டேனே..பெற்றவர்களிடம் கூட அடி வாங்கியதில்லையே...இவனிடம் ரோடென்றும் பாராமல் எத்தனை அறை வாங்கி கீழே விழுந்து கைகள் சிராய்திருக்குமென்று மனம் ஓலமிட கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட அதை வளவனால் உணர முடிந்தது.
தன்னவள் எதிர்பார்த்த வார்த்தை இது தானே என்பது புரியாத ஆண்மகன் இல்லையே என நினைத்தாலும் அழட்டுமென்று மேலும் சுவற்றோடு அவளின் மேல் புதைந்தவன் கைகள் ரெண்டும் அவளது எலும்புகள் நொருங்குமாறு இறுக்கியது...
நொடிகள் நிமிடங்களாய் கடக்கவே அவளிதழிலிருந்து மீண்டவன் கலைந்திருக்கும் தலைமுடியை கோதி விட்டு கசங்கிய புடவை சீர் படுத்தியவன் கண்கள் மூடி நிற்பவளின் கண்களில் முத்தமிட்டவன் போகலாம் வா மா என்றான்..
எதுவும் சொல்லாமல் அவன் கரத்தோடு தன் கரத்தை கோர்த்து நடந்தாள்.
இருவரும் செட்டியார் கடைக்கு சென்றனர்.லிஸ்டை அவளிடம் கொடுத்து வாங்க சொன்னான்.
அனைத்தையும் வாங்கி முடித்தவன் கிளம்பட்டுமாடியென்க ம்ம் என்றாள். ஏய் வாய திறந்து சொல்லுடி ம்ம் னா என்ன அர்த்தமென்க....
போங்களேன்...
உங்களை என்ன நான் கட்டியா வச்சிருக்கேன் என்றவளை பார்த்தவன் ஆமாடி அதில் என்ன சந்தேகமென்று கண்ணடிக்க அச்சோ என்றாள்...
ம்ம் கனவு காணாமல் வீட்டுக்கு போடியென சிரித்தவாறு அவளை தெரு முனையில் இறக்கிவிட்டு சென்றான்....

இரவு பத்து மணிக்கு கோவை பஸ் ஸ்டாப்பிற்கு வந்தவர்கள் சீமக்கரை பஸ் நிற்கும் இடத்திற்கு செல்ல,அங்கே அவர்கள் ஊருக்கு போகும் பஸ்ஸும் நின்றது.
இருவரும் ஏறி உள்ளே போனவர்கள் நடு பக்கத்தில் இருக்கும் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டனர்.காபி டீ எதாவது குடிக்கிறியாடியென்று கதிர் கேட்க வேண்டாம் என்றாள்.
பஸ்ஸும் கோவையிலிருந்து புரப்பட்டது.ஏனோ வரும்போது தாமரைக்கு இருந்த இறுக்கம் தற்பொழுது அவளுக்கு இல்லை.
அதனால் சுற்றத்தை உணர முடிந்தது.
ஜன்னலோரம் உட்கார்ந்திருந்ததால் காற்றின் தீண்டலால் குளிரெடுக்க, அருகிலிருந்த கணவனின் வலது கையோடு தனது கையை கோர்த்துக்கொள்ளவும்,கண்ணை மூடியிருந்த கதிர் மனைவியின் இந்த செயலில் திக்கு முக்காடினான்.
அவளின் இடது பக்க நெஞ்சோரம் புதைந்திருக்கும் கையின் மேல் உணர முடிந்த மென்மையின் திண்மையில் அவளின் இடது பக்க காதோரமாய் சாய்ந்தவன் எதையோ சொல்ல அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
அவனும் அவள் பார்வையை இமைக்காமல் பார்க்க தாமரைக்கோ கணவனை கண்டு வெட்கம் வந்ததும் ஜன்னலோரம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
கன்ட்ரக்டர் டிக்கெட் டிக்கெட்டென்று வர தாமரை தனது கையை விலக்க,தேனூர் இரண்டென்று வாங்கியவன் மனைவியை தோளோடு இறுக்கி அணைத்தபடி உட்கார அந்த இரும்பு பிடியில் லேசாக வலி வர, இருந்தும் அந்த பிடி அவளுக்கு தேவையாகவே இருந்தது.......
சில நிமிடங்கள் கடந்திருக்க பேருந்தில் இரவு நேரமென்பதால் லைட்டை ஆப் பண்ணவும் தன்னவளை இழுத்து மடியில் கிடத்தியவன் அவள் காதோரம் செல்ல முத்தங்களை இட முட்கள் போன்ற தாடிகள் குத்தும் குறுகுறுப்பில் சிலிர்த்து போனாள்....
அவளின் படபடப்பும் நடுக்கமும் அவனின் கால்களில் இறுக்கி பிடிப்பதிலே உணர்ந்தவன் மேலும் தன்னவளை சோதிக்க விரும்பாமல் தலையை தடவி கொடுக்க தாமரையும் கண்களை மூடி சுகமாய் உறங்கினாள்..
இரவெல்லாம் ஓடி வந்த பஸ்ஸும் அதிகாலையில் சீமக்கரைக்கு வந்து சேர்ந்தது.
சற்று நேரத்திற்கு முன்னரே இருவரும் தூங்கி எழுந்திருந்ததனர். சீமக்கரை வந்துடுச்சி இறங்குங்களென்றவாறு நடத்துனர் கீழே இறங்கி சென்றார்.
பஸ்ஸிலிருந்த ஒரு சிலரும் இறங்க இவர்களும் லக்கேஜோடு கீழே இறங்க அங்கே வேலு காரோடு நிற்பது தெரிந்தது.
அவனிடம் சென்றவர்கள்.... காரில் ஏற பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்.
முக்கால்மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.இருவரும் வீட்டில் உள்ளவர்களிடம் நலன் விசாரிக்கும் போது இருவருக்கும் இன்று தாலி பிரித்து கோட்கும் நிகழ்வு இருப்பதல் சீக்கிரம் தயாராகி கீழே வரச்சொல்லினர்.
கதிரோ... அம்மா டீ என்க... தாமரையோ நான் குளித்துட்டு வந்து குடிச்சிக்கிறேனென்று மேலே இருக்கும் தங்களது அறைக்குள் சென்றாள்.
தாமரையும் குளித்து வெளியே வர கதவு தட்டும் சத்தம் கேட்டது.யாருயென்க அண்ணி நான் தான் என செல்வி சொல்ல 2 மினிட்ஸ் மா என்றவள் நைட்டியை மாட்டிக்கொண்டு கதவை திறக்க, இந்தாங்கண்ணி அம்மா கொடுத்தாங்களென்று மல்லிப்பூ பந்தை நீட்டினாள்.
உனக்கு மா என்க....
இதோ என தனது தலையை காட்ட பாம்பு போன்ற நீண்ட பின்னலில் சரமாய் பூ தொங்கியது.சரிங்கண்ணி ரெடியாகுங்களென்று கீழே சென்றாள்.
என்ன புடவை கட்டலாமென்று டிராலி பேகை திறந்து தேடும் போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் போய் திறக்க கதிர் உள்ளே வந்தான்.
கதவை தாழிட்டவன் துண்டோடு குளிக்க சென்று விட வேகமாய் போய் ரெஸ்ட் ரூம் கதவை வெளி பக்கமாய் தாழிட்டவள் புடவையை தேடி எடுத்து கட்டி முடிக்க தண்ணீர் சத்தம் நின்றது.
அதைப்போல் சத்தமின்றி போய் தாழ்ப்பாளை விளக்கி விட்டு பால்கனி கதவை திறந்து வெளியே போனவள் தனது நீண்ட முடியை ஈரம் போக துவட்டி காய வைத்தாள்
கதிரோ அவளிடம் எந்த சேட்டையும் பண்ணாமல் ரெடியாகி கீழே சென்றுவிட்டான்....
ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த கதிர் சில நிமிடங்கள் சென்று ஏதோ ஓர் உந்துதலில் மாடிப்படியை பார்க்க அங்கே வருபவளின் அழகை கண்டு மூச்சடைத்து போனான்.....