• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
549
நீலகிரி:

என்னடி?.

ஏன் இப்படி வாய பிளந்து பாக்குற என்றவன் நேரம் ஆகிட்டு வீட்டுக்கு கிளம்புடி.நாளைக்கு நான் வீட்டுக்கு வாரேன் அத்தைகிட்ட சொல்லுயென அவளை அணைத்தவாறு கூட்டிட்டு போக, பவிக்கோ முகம் கருத்து விட்டது...

சிறிது தூரம் வரை அப்படியே சென்றவன், அந்த தெருவின் திருப்பத்தில் திரும்பி கையை எடுத்தவன் எப்படி இருக்க செல்லா?

நீ எப்படி டி இங்கே என்றான்.

செல்லாவோ எதுவும் சொல்லாமல் வேகமாய் நடந்து போக,ஏய் உன்ன தான் டி கேட்குறேன்.நீ உம்பாட்டுக்கு போனால் என்னடி அர்தமென்று எட்டி செல்லாவின் கையை பிடிக்க, ஒரு நொடி மருதுவை நிமிர்ந்து பார்த்து ஓங்கி ஒரு அரையை விட்டவள் இன்னொரு முறை என்னை தொட்டிங்கள் கையை வெட்டிடுவேனென்று சொல்லிச் சென்றாள்.

வாங்கிய அறையில் சிரித்தபடியே நின்றவன் ஓய் கிளி நீ தான் என் பொண்டாட்டி இது மாறாது என்று கத்தி சொன்னவன் எப்பா என்னாஆஆ அடி...

யாராவது பார்த்தாங்களாயென சுற்றி பார்க்க யாரும் இல்லை என்பது தெரிந்து ஹப்பாடா நல்ல வேலை மானம் காத்துல பறந்திருக்குமென்றான்...

டேய் டேய் அடேய் தடிமாடு இங்க என்னடா நடக்குதென்னும் குரல் கேட்டு மருது திரும்ப அங்கே தாமரை கையை கட்டி நின்றாள்.

ஹிஹிஹி என சிரித்தவன் நீ வீட்டுக்கு போகலையாடி என்க தாமரையோ மருதுவை முறைத்தபடியே இருந்தாள்.

அய்யோஓஓ மானத்தை வாங்குவாளே.... சரி சமாளிப்போம் என்றவன், சொல்லுடி?...

நீ என்ன நினைச்சிட்டு இருக்க மருது?
பவிகிட்ட இருந்து தப்பிக்க எதுக்கு பாப்புவை ஹர்ட் பண்ற?இது நல்லா இருக்காயென்றாள்.

ச்சூஊஊ என கண்ணை மூடி திறந்தவன் இங்க வாடி என தாமரையின் கையை பிடிக்க என்னடா இதுவென்றாள்.

அடியேய் நீ கதிர் பொண்டாட்டியாக இருந்தாலும் எனக்கு தாமரை தான் போதுமாயென அவள் கண்களை பார்த்து சொல்ல,மருதுவின் கண்களில் கண்ணியமும் அன்பு மட்டுமே அவளுக்கு தெரிந்தது.

பின்னர் இடது கையை நீட்ட அதை பிடித்தவன் நான் பொய் சொல்லலைமா என்க... அப்போ பாப்புவை நீ கல்யாணம் பண்ணிக்க போறியா மருதுயென அதிர்ச்சியாய் தாமரை கேட்க... நான் சொல்றேன் வாடியென அவர்கள் வழக்கமாய் உட்கார்ந்து பேசும் வேப்ப மரமிருக்கும் இடத்திற்கு கூப்பிட்டு போனான்.

அங்கு இருக்கும் கல் பெஞ்சில் தாமரையை உட்கார வைத்தவன்,இது போன வருஷமே நான் எடுத்த முடிவு தாமரையென வானத்தை பார்த்து சொல்ல... என்னடா சொல்லுற என்றாள்.

ஆமாம்....

அம்மாக்கு உடம்பு முடியலைனு மிலன் எனக்கு போன்ல சொல்லி அழுதான்டி.ஏனோ எனக்கு இங்க வர மனசு வரலைடி.

அங்க நிம்மதியாக வேலையும் பார்க்க முடியலை. சரி வீட்டுக்கு போக வேண்டாம் ஹாஸ்பிட்டலில் போய் பார்த்துட்டு வந்துடலாமென்று யாருக்கும் சொல்லாமல் சவுதியில் இருந்து நான் வந்தேன்.

ஹாஸ்பிட்டலுக்கு வரும் போதுதான் கிளிய நான் பார்த்தேன்டி என்றவனின் நினைவுகள் ஒரு வருடத்திற்கு முன்பு சென்றது....

போன வருடம்-கோவை மர்த்துவமனை:

அம்மா மலையம்மா யாரு கண்ணிலும் நான் படாமல் அம்மாவை பார்த்துட்டு கிளம்பிடணுமென்று சொல்லியபடியே வேகமாய் நடந்து வந்தவன் மயிலாவை பற்றி ரிசப்ஷனிடம் கேட்டு விட்டு அந்த அறையை நோக்கி சென்றான்.

முகத்தில் மாஸ்க் இருப்பதால் அவனை அடையாளம் காண முடியாதென்பது புரிய உள்ளத்தில் இருக்கும் வேதனையோடு ஐசியுவின் முன்னால் போய் நிற்க,அங்கிருந்த நர்ஸோ யாரை பார்க்கணுமென்றார்.

என்னோட அம்மா என்று அழுதவன், சிஸ்டர் தயவு செய்து நான் வந்ததை சொல்லாதீங்க என்னை பற்றிய கவலையில் ஏற்கெனவே அவங்க நொந்துட்டாங்களென கை கூப்ப, தம்பி அழாதப்பா.

தொந்தரவு பண்ணாமல் நீ போய் பாருப்பா. அவங்ககூட இருந்த அட்டெண்டரும் இப்போ தான் ப்ரஷாக போனாங்கள் சோ நீ தாராளமாக பாரு.

அம்மாமேல இவ்வளவு அன்பு இருக்கும் போது ஏன் இப்படி என்க குடும்ப பிரச்சினை என்றான்.

அதன் பிறகு நர்ஸ் மருதுவிடம் எதுவும் கேட்காமல் நீ போ தம்பி என்று சொல்ல உள்ளே வந்தவன் அங்கு ஓய்ந்து போய் படுத்திருக்கும் தனது தாயைப் பார்த்து வாயில் கை வைத்து கதறி அழுதான்.

சீமக்கரை:

ஸ்கூல் முடிந்து பிள்ளைகள் எல்லாரும் போய்விட ஒரு சில டீச்சர்ஸ் மட்டும் இருந்தனர்.

அரையாண்டு பரிச்சை பேப்பரை திருத்தி முடித்தவள் 5 மணி பெல் அடிக்கும் சத்தம் கேட்டு,பேப்பர் கட்டுங்களை எடுத்து கவரில் வைத்தவள் தனது தோழியிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவளுக்கு மழை வருவது போல வானம் இருப்பது தெரிந்தது.

அய்யோ நாம குடை வேற கொண்டு வரலையே...வீட்டுக்கு போவதற்குள் மழை வந்துடும் போலவேயென்று புலம்பியவள் சரி பெருசா வருவதற்குள் வேகமாய் போய்விடலாமென்றவாறு ரோட்டில் நடக்க சிறு சிறு தூரல் விழ தொடங்கியது.

வானத்தை அன்னாந்து பார்க்க பெரிய தூரல் விழ வலது பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாப்பிற்குள் வேகமாய் போய் நுழையவும் மழையும் பெய்ய தொடங்கியது.

வீட்டுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு வைக்கவும் அந்த பஸ் ஸ்டாப்பின் முன்னால் காலையில் பார்த்த வண்டிகாரன் வந்து நின்றான்.

அவனை பார்த்த உடனே பயம் வந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ரோட்டில் யாராவது வருவாங்களா என எட்டி பார்க்க இறங்கி வந்தவன் நேராக அவள் முன்னால் வந்து நின்றான்.

தைரியத்தை வர வைத்தவள் என்ன என்றாள்.ஹெல்மெட் போட்டிருப்பவனோ எதுவும் சொல்லாமல் நின்றான்.

நிலா இவன் எதோ சரியில்லாத ஆள் போலடி.மழையில் நனைந்தாலும் பரவாயில்லை இங்கையை நின்றால் ஆபத்து தானென்று அங்கிருந்து ஒரு எட்டு வைத்தவளை வழியை மறைத்தவன் அவளின் கையை பிடித்து வளைத்து தன்னோடு இழுத்தான்.

நிலாவோ டேய் என்னடா பண்ணுறயென்று ஹீல்ஸ் உள்ள செப்பலால் எத்தி அவன் காலில் மிதிக்கவும் அது குத்தியதில் அவனுக்கு வலி வந்தது.

ஆஆஆஆ என்றவனின் குரலை கேட்டவள் அவன் ஹெல்மெட்டை கழட்டியவளுக்கு அழுகை வர ம்ம் என்றவன் இரண்டு கைகளையும் நீட்ட போடா என்றவள் பின் அந்த கைக்குள் போய் அடைக்கலமாகியவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

சும்மா விளையாட்டுக்குடி..

பயந்துட்டியா என வளவன் கேட்க நிலாவோ எதுவும் சொல்லாமல் அழுதவாறு நிற்க... அடியேய் இப்படிலாம் பண்ணாத பிறகு என்ன நடக்குமென்று நான் பொறுப்பில்லையென்றான்.

வளவன் சொன்னதை கேட்டவளுக்கு அச்சோ இவரை நாம கட்டிக்கிட்டு நிற்கிறோமே என வெட்கம் வர பட்டென்று விலகி வேறு பக்கம் திரும்பி கொண்டாள்.

வேலு வேலு என பார்வதி கூப்பிட என்னம்மா என்றான்.ஏய்யா சோத்துல கைய வச்சிக்கிட்டு அப்படி என்ன உனக்கு ரோசனை வேண்டி கடக்கு என்கும் போது எல்லாம் உன் மருமவள் ஞாபகம் தான் என்றவாறு செல்வம் உள்ளே வந்தார்.

தந்தையை முறைத்தவன் உங்க கிட்ட நான் சொன்னேனா என்க, மொசப் புடிக்கிற நாய முகரையை பார்த்தாலே தெரியாதா என்று சொன்னார்.

நாய் பேய்கூட சகவாசம்லாம் உங்களுக்குதான். எனக்கும் என் பையனுக்கு இல்ல என்று பார்வதி சொல்ல சரியா சொன்னமா என்றபடியே வேலு சாப்பிட ஆரம்பித்தான்.

ஆத்தாளுக்கும் மவுனுக்கும் நம்ம வாயவே திறக்க கூடாது. உடனே நம்மள மொன்னு தின்னுடுவாங்க ரெண்டு பேரும் என்றவர், ஏண்டி என் வயித்துக்கு எதாவது போடுவிய மாட்டியா என்று கேட்டார்.

பசிச்சா சாப்பிடுங்க இல்லன்னா அப்படியே உக்காந்துருங்க.என்னமோ உங்க வைத்த நான் புடிச்சுகிட்டு சாப்பிடாதீங்கன்னு சொல்ற போல தானே பண்றீங்களே என்க...

ஏண்டி பசிக்குதுன்னு சொன்னது ஒரு குற்றமாடி.எதுமே வாயை திறக்க கூடாது நானு.அதுக்கு அந்த ஆண்டவன் என்னை ஊமையா படைச்சிருக்கலாம் என்றவர் மகனுக்கு எதிரில் வந்து உட்கார கணவருக்கும் தட்டில் காலையில் செய்த டிபனையை பரிமாறினார்.

பாரு நீயும் உட்கார வேண்டியதானே என்க,இதோ வாரேன் என்றவாறு உள்ளே போய் இரண்டு தோசை ஊத்தி எடுத்துட்டு வந்து மகனுக்கும் கணவருக்கும் ஆளுக்கொன்றை வைத்தார்.

அதான் இட்லி இருக்கேமா இது ஏன் என்க,
இருக்கட்டும் தம்பி என்றவர் ஏன் மாமா இந்த வருஷம் செல்வி படிப்பை முடிச்சிடுவாள்.நாம கல்யாணத்தையும் பண்ணி வச்சிடலாமேயென்க... எனக்கும் அதான் பாரு யோசனையா இருக்கு.

இவனை விட சின்ன பயலுவோ புள்ள குட்டியோட இருக்கானுவோ அதுவேர மனச உருத்துது என்கும் போது மாமா என்றவாறு பெருமாளும் அவர் பின்னே வள்ளி அப்பாயியும் வந்தார்கள்.

மூவரும் அவர்களை வாங்க என்று சொல்லி சாப்பிட கூப்பிட அவர்களும் உட்கார்ந்து சாப்பிட்டனர்.

உனக்கு அப்படியே நம்ப ஆச்சி கை பக்குவம் பாருயென்று பெருமாள் சொல்ல என் மாமியா கையால சாப்பிட்ட காலமா இருக்குத்தா என மகளை பாராட்டினார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
549
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் அங்கிருந்த மர சோபாவில் உட்கார்ந்தனர்.சில நிமிடத்தில் அண்ணா டீ என பார்வதி நீட்ட வாங்கிய பெருமாள் அம்மா என்க.... ம்ம் என்றவர் அய்யா செல்வம் நம்ப புள்ளைவோ கல்யாணத்தை பற்றிதான் பேச வந்தோம்.

வேலு செல்வி கல்யாணத்தை வர தையில வச்சிக்கலாமா?அது கூட வளவனுக்கும் பண்ணிடலாம்.

ஜானு எதோ வேலையா வெளிநாட்டுக்கு போறானாம்.வந்து பண்ணிக்கிறேனு சொல்லுறான் நீ என்ன சொல்லுற சாமி என்றார்.

எனக்கும் அதே யோசனை தான் அத்தை. இப்போதான் உன் மவள்கிட்ட அதை பற்றி பேசிட்டு இருந்தேன் அந்த அய்யனாரு உங்களை அனுப்பி வச்சிட்டாரு என்க...

அப்பொழுது வேலுவோ...செல்லம்...மார்ச்ல செல்விக்கு எக்ஸாம் வருதே அது முடியட்டுமே. அங்க நிலாவுக்கும் மே ல லீவ் விட்டுருவாங்கள்.சொந்த பந்தமும் புள்ளைங்க கூட வர தோதா இருக்கும்.

அதும் இல்லாமல் பரிச்சை நேரத்தில் கல்யாணத்தை வச்சால் செல்வி கவனம் சிதறுமேயென்க...

நான் சொல்லையாம்மா என் மருமவன் இதான் சொல்லுவானென்று பெருமாள் கேட்க,ஆத்தாடி என் மவன் நீ என்ன சொல்லுவனு சொன்ன போலவே நீயும் சொல்லுறியே ராசாயென அருகில் உட்கார்ந்திருந்த பேரனின் முகத்தை தடவி முத்தமிட்டார்.

பாரு நீ என்னத்தா சொல்லுறயென்று பெருமாள் கேட்க அண்ணா என் மருமவள் என்ன படிக்கணுமோ படிக்கட்டும்.அது எனக்கு பிரச்சினை இல்லைணா.

வைகாசி முடிஞ்சால் உன் மருமவனுக்கு 28 ஆரம்பம் அதுக்குள்ள கல்யாணத்தை பண்ணிடலாம் என்க சரித்தா.சிறப்பா பண்ணிடலாமென்றார்.

அப்போ நாங்க ஒரு நாள் பொண்ணு கேட்டு வரோம் மச்சான்.முறைப்படி கேட்பது தான மரியாதை என செல்வம் சொல்லவும்...சரி மாமா எப்போனு சொல்லுங்க தட்டையும் கையோட மாத்திக்கலாமென்கவும்,ஆத்தா அந்த காலண்டரை எடுத்துவாயென்றார் வள்ளி அப்பாயி.

பார்வதியும் எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கிய அப்பாயி முகூர்த்த நாளை கணக்கு பண்ணி பார்த்தவர் அடுத்த ஞாயிறு நல்லநாளா இருக்குப்பா என்க...

இன்னும் 10 நாள் இருக்கா... அப்போ எல்லாத்தையும் தயார் பண்ண சரியாதான் இருக்கும்.சரி அன்னைக்கே நிச்சயமாகவே வச்சிடலாம் அத்தை,நீ என்ன சொல்லுறயென்று செல்வம் கேட்க, பண்ணிடலாம் சாமி...

உன்னோட கல்யாணத்து பொறவு இத்தன காலம் ஓடி போய் நான் பொறந்த ஊட்டுல இப்போதான் நல்லகாரியம் நடக்க போகுது அதை நினைக்க மனசு குளிந்து போயிடுச்சிய்யா என்றார்.பின்னர் மேலும் சில நிமிடங்கள் பேசியிருந்து விட்டு இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்..

மேகமலை:

எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு வந்தவள் அவளுக்காய் தனியாக அவள் அப்பா கட்டி கொடுத்திருக்கும் குடிலின் கதவை திறந்து உள்ளே போய் தாழிட்டு அதன் மேல் சாய்ந்து உட்கார்ந்து சத்தமின்றி கதறி அழுதாள்.

மாமா மாமா என அவள் மனம் ஓலமிட்டது.

ஒவ்வொரு முறையும் ஏன் என் மனசை இப்படி உடைக்குறீங்க மாமா?

உங்களை புருஷனாக மனசில் நினைத்ததைவிட நான் என்ன மாமா தப்பு பண்ணினேன்?.

முதல்முறை தாமரை அக்காவை பற்றி சொல்லி என்னை கொன்னீங்க...

அடுத்து பவியை கட்டி கொன்னீங்க... இப்போ அதே பவிக்காக என் மனசை உடைக்குறீங்களே இது எந்த வகையில் நியாம் மாமா?

எனக்கென்று ஒரு மனம் இருக்கும் அதில் வலிக்குமென்று உங்களுக்கு தெரியாதா?

வாய் கூசாமல் அவளுக்காக பொண்டாட்டினு சொல்லுறீங்களே உங்க மனதில் இருந்து இந்த வார்த்தை வரலையே என அழுதவளுக்கு காலடி சத்தம் கேட்கவும் கண்களை துடைத்தவள் குடிலின் இன்னொரு கதவை திறந்து அங்கிருந்த பாத்ரூமில் முகத்தை கழுவிட்டு வர முருகாயியின் செல்லா செல்லா என்கும் குரல் கேட்டது.

துணி மாத்துறேன்மா என்க,ஏத்தா உடம்பு ஏதும் முடியலையா?டீ எடுத்து வந்தேன் குடிச்சிட்டு செத்த படுத்தா.

புள்ளைவோகூட கத்தி கத்தி எம்மவளுக்கு ஆவி போயிருக்குமென்று சொல்லிக்கொண்டார்.

காத்திருந்தேன்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top