Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 549
- Thread Author
- #1
தேனூர்:
வேகமாக தான் வேலை பார்க்கும் எல்.டி ஸ்கூலுக்கு நடந்து வந்த நிலாவின் முன்பு வந்த பைக் ஒன்று பிரேக் போட்டு நிற்க, திக்கென்று பயந்தவள் ஒரு எட்டு கால் எடுத்து பின்னாடி வைத்தவள் அறிவுகெட்ட முண்டமே.....
நீ சர்கஸ் காட்ட நான் தான் கிடைத்தேனா பைத்தியக்கார பண்ணாடை. இது என்ன உங்கப்பா வீட்டு ரோடா மனுஷால் வருவது தெரிஞ்சும் முன்னாடி வந்து நிற்குற என்று திட்டியவள் வண்டியை தாண்டி போக அவள் கையை இறுக்கமாய் பிடித்தது வண்டியில் உட்கார்ந்திருந்தவனின் கரம்...
பிடியின் இருக்கத்தில் கை வலிக்க யாரென்று தெரியாத ஒருவன் தன்னை தொட்டதை கண்டு கோவம் வர கையிலிருந்த லஞ்ச் பேகால் ஓங்கி அவன் தலையில் அடிக்க போகவும், அவளின் செயலை புரிந்தவன் கையை சுண்டி இழுக்க வண்டியில் உட்கார்ந்திருந்தவனின் இடது பக்க தோள் பட்டையில் இடித்து நின்றாள்.
அந்தநேரம் தூரத்தில் சிவா வருவது தெரிந்து பயத்தில் இருந்தவளுக்கு தைரியம் வர சிவா சிவாயென கத்தவும்,வேகமாக வந்தவன்,என்ன இதுலாமென்றான்.
டேய்...
இவன் யாரென்று தெரியலை வம்பு பண்ணிட்டு இருக்கான்டா.ஸ்கூலுக்கு டைம் ஆகிட்டு. அந்த நெட்லிங்(ஜான்)வந்துட்டால் அவ்வளவுதான் காதுல ரத்தம் வரும் அளவு அட்வைஸை புழுஞ்சிடுவாரு இவனை வந்து அடிடா என்றாள்.
சிவாவோ ஹெல்மேட் போட்டிருப்பவனை முறைத்து பார்க்க இன்னும் அவளை வளைத்து பிடித்தவன் அவள் இடுப்பில் நன்கு கிள்ளி விட்டு, பின்னர் பொறுமையாக அவளை தள்ளி விட்டபடியே வண்டியை ஸ்டார்ட் பண்ணி வேகமாக அங்கிருந்து சென்றான்.
யாரென்று தெரியாத ஒருவன் இவ்வளவு அநாகரீகமாக நடந்ததை நினைத்து நிலாவிற்கு அழுகை வந்தது.ஒரு வழியாக அவளை சமாதானம் பண்ணி ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டவன் மாமாஆஆஆ என பல்லை கடித்தபடி பேக்டரிக்கு வந்தான்.
அங்கு தனது பைக்கின் மேல் சாய்ந்து நிற்கும் மாமனை பார்த்தவனுக்கு கொலை காண்டு வர ஏன்யா இப்படி என்று கத்த, என் பொண்டாட்டிகிட்ட நான் விளையாடாமல் வேறு யார்டா விளையாடனுமென்று தனது முறுக்கு மூசையை முறுக்கியபடியே வளவன் கேட்டான்...
இதுக்கு கொறைச்சல் இல்லை. அவள் ரொம்ப பயந்துட்டாள் மாமா. பாவம் அழுதுட்டே ஸ்கூல் போயிருக்காளென்கும் போது அடுத்த ஷிப்ட் ஆரம்பிப்பதற்கான பாங் சத்தம் கேட்க,ம்ம் இருக்கட்டுமென்று சிரித்தவாறு வளவன் அங்கிருந்து செல்ல...
இந்த மதுரைவீரனை எதில் சேர்பதென்றே தெரியவில்லையே... அய்யோ நிலா உன்னை நினைத்தால் கொஞ்சம் பாவமாகதான் இருக்குடி என புலம்பியவாறு சிவாவும் பேக்டரிக்குள் நுழைந்தான்.
நீலகிரி:
நான் போய் வீட்டுக்கு கொஞ்சம் மசாலா பொருளெல்லாம் வாங்கி வரேனென்று மருதுவின் வண்டியை எடுத்துக்கொண்டு கதிர் சென்றுவிட்டான்.
தாமரையோ மாடியில் இருக்கும் பால்கனியில் நின்று வேடிக்கை பார்க்க என்னடி யோசனை என்கும் சத்தம் கேட்டு திடிக்கிட்டு திரும்ப மருது கையை கட்டியபடி நின்றான்.
நண்பனை நிமிர்ந்து பார்த்தவள் எப்போ கல்யாணம் பண்ணிக்கலாமென்க எதேஏஏஏ என அதிர்ந்தான்.
அதான் நாம கட்டிக்கலானு சொன்னியே அதான் எப்போ என்க,ஓங்கி அறைஞ்சேன் பல்லு மொகரைலாம் பேந்துடும்.இன்னொருத்தன் கட்டுன தாலி கழுத்துல இருக்கும் போது என்னடி கேள்வி இது?இன்னொரு முறை இப்படிலாம் பேசுன சாவடிச்சிடுவேனென்றனை பார்த்தவள், அவன் முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க மருது ரெண்டடி பின்னால் நகர்ந்தான்.
சொல்லு இப்பவே தாலியை கழட்டிட்டு என்று தாமரை வார்த்தையை முடிப்பதற்குள் அவள் கன்னம் எரிந்தது.
ராஸ்கல் தொலைச்சிடுவேன்.என்னடி பேச்சு இது என அவளின் கழுத்தை நெரித்தவன் போய் கதிர் கூட ஒழுங்கு மரியாதையா வாழுற வழியை பாருயென்று அவளை தள்ளி விட்டு அங்கிருந்து சென்றான்.
எனக்கு தெரியும் உன் மனசென்று கண்ணீரோடு மனதிற்குள் பேசியவள் மீண்டும் பால்கனி பக்கம் திரும்பி நின்றாள்.
தனது அறைக்கு வந்த மருது அங்கிருந்த சுவற்றில் கையை குத்தினான். அய்யோ என் உசுரை போய் அடிச்சிட்டேனே அவளை பூப்போல் தாங்கணுமென்று இருந்தேன்.
இன்னைக்கு நானே மிருகமா அடிச்சிட்டேனே என ஓங்கி குத்திக்கொண்டே இருக்க அவன் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்ணில் வடியும் கண்ணீரை துடைத்தவன் போய் கதவை திறக்க தாமரைதான் நின்றாள்.
என்னமா என்க மருதுயென தனது நண்பனை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.அவள் தலையை தடவி விட்டவன் ஏண்டா ஏன் அழுற ஒன்னும் இல்லைடாமா என்கும் போது கதிர் அங்கு வர அவனை பார்த்து அதிர,அவள் அழட்டும் விடுயென்று சைகையில் சொன்னான்.
அழுகை தேம்பலாய் மாறி என்னால்தானே உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சி என்னை மன்னிச்சிடு மருது.உன் மேல் வராத காதல் எனக்கு மாமா மேல தான் வந்தது.
மாமா என்னோட உசுருடா அவர் இல்லாமல் என்னால் உயிர் வாழவே முடியாது.ரெண்டு வருஷமா அவரை பார்க்காமல் நான் எவ்வளவு தவித்தேனு தெரியுமா உனக்கென்று அவன் டி ஷர்டில் முகத்தை தேய்க்க,அடியேய் உன் மூக்கு சளியை தடவுறியா பன்னி என்றான்.
ம்ம் என முறைத்தவள் என்னை விட உனக்கு இந்த டி ஷர்ட் தான் முக்கியமா என்கவும், இல்ல செல்லம். ..உன்னை விட இந்த உலகத்தில் எனக்கு எதுவும் பெருசில்லை என்றான்.
இதை வேடிக்கை பார்த்த கதிருக்கோ அவர்கள் இருவரிடமிருக்கும் அன்பான நட்பென்ற உறவு மட்டுமே தெரிய, எப்படிதான் இவளை இத்தனை வருஷமா சமாளித்தானோ சாமியென தனக்குள் சொல்லிக்கொண்டான்.
சரி பாப்பா உன் புருஷன் நிற்குறார் பாரென்க, தெரியுமென்றாள்.
எதேஏஏஏ என மருது அதிர, எனக்குள் அவர் இருக்கும் போது அவரோட நடவடிக்கை எனக்கு தெரியாதாடா மாங்கா மண்டையாயென மருதுவின் தலையில் கொட்டியவள்,சீக்கிரமா கல்யாணம் பண்ணு அதை பார்த்த பிறகு தான் என் மனசு நிம்மதியாகும்.
சிரித்து மழுப்பியவன் தன் பால்யகால தோழியின் கண்ணீரை துடைத்து விட்டு அவளை தோளோடு அணைத்து கூப்பிட்டு போய் கதிரின் கையில் அவளை ஒப்படைத்தவன்,அண்ணா உனக்கு நான் சொல்லணுமென்றில்லை பூவை விட மென்மையானவள் பார்த்துக்கோணா என்றான்.
யாரு இவளாடா பூ...
ம்கும் சரியான ரவுடி பொம்பளைடா.அவள் கிட்ட உன் அண்ணனை கண்கலங்காமல் பார்த்துக்க சொன்னால் வாஸ்தவமென கதிர் சொல்லவும், மாமாஆஆஆஆ என முறைத்தவள் கதிரின் தோள்பட்டையில் அடிக்க நான் சொல்லலை நேர்ல பாருயென்றான்.
உங்க தலையெழுத்துணா அதை யாரால் மாற்ற முடியுமென்று மருது சிரித்தான்.
ஸ்கூல் முடிந்து வெளியே வந்த செல்லாவை பார்த்த பவி நீதான் புதுசா வந்துருக்கும் டீச்சரா என்க...செல்லாவோ எஸ் என்றாள்.
எவ்வளவு திமிரு பாரேன் இவளுக்கு?
ஏன் அக்கானு கூப்பிட்டாள் இவள் தலையில் இருக்கும் கிரீடம் விழுந்துடுமோயென முணுமுணுத்தவளை பார்த்த செல்லாவிற்கு நீயெல்லாம் எனக்கொரு ஆளா என்கும் எண்ணம் வந்தது.
பின்னர் அங்கிருந்து செல்லா போக ஏய் செல்லா என்னடி நீ பாட்டுக்கு போற? என்று கத்தும் போது ஹெட்மாஸ்டர் வெளியே வந்தவர் பவி என்ன பிகேவியர் இது?
தனிப்பட்ட முறையில் பேச்சு எல்லாம் கேம்பஸிற்கு வெளிய வைத்துக்கொள்ளுங்கள்.
பிள்ளைங்களுக்கு படிப்பை விட பிகேவியரைதான் முதல்ல கத்துக்கணும்.
அதுக்கு இடம் பொருள் பார்த்து பேசணுமென்று கடிந்தவாறு அங்கிருந்து சென்றார்.
ச்சைஐஐ
இந்த மலை ஜாதிகாரியால் நமக்கு பாட்டு வாங்க வேண்டிய நிலமை வந்துட்டேயென மறதிற்குள் திட்டியவள், வேகமாக நடந்து வந்து செல்லாவை பிடித்தவள்,கொஞ்சம் நில்லுடி உன் கிட்ட பேசணுமென்றாள்.
அவளை பார்த்த செல்லா என்கிட்ட பேச உங்களுக்கு என்னக்கா இருக்கென்க,அவள் அக்கா என்றதிலே பவிக்கு சற்று கோவம் மட்டு பட்டது.
ஏண்டி இதை அங்கு சொல்லியிருக்க வேண்டியதுதானே என்க,அக்கா அது ஸ்கூல். அங்க போய் உறவு முறையை கொண்டாடுறது நல்லாவா இருக்குமென்று கேட்டாள்.
அதுவும் சரிதான் செல்லா என்றவள்,மருது வந்தாச்சி தெரியுமாடி என்க,யாருக்கா மருது என்று செல்லா கேட்க... எதேஏஏஏஏ உன் மாமன்டி...
மருதையன்டி என்றாள்.
ஓஓஓ...
அவங்கள் வந்தாயென்ன வரலைனா எனக்கென்னங்கக்கா?அதை பற்றி தெரிஞ்சிக்க எனக்கு அவசியமில்லை என்கவும்,சரியான அழுத்தக்காரிதான் டி நீ.
இப்போ பாருயென நினைத்தவள்,தாமரை வந்துருக்காளென்க அதைக்கேட்ட செல்லாவோ,என்னக்கா சொல்லுறீங்களென்று அதிர்ந்தவள், நிஜாமாவாக்கா என்க...
ஆமாம் டி.
நான் ஏன் பொய் சொல்ல போறேன்?
நேற்றுதான் அவளை பார்த்துட்டு வந்தேன்.அதும் இல்லாமல் அவள் தனியாக வரவில்லை.அவள் புருஷன்கூட ஹனிமூனுக்கு வந்துருக்காளென்றாள்.
என்னாஆஆஆஆ!!
தாமரை அக்காக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என மீண்டும் செல்லா அதிர..ஆமாடி.கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது.இது உனக்கு தெரியாதா என கேட்க...
இல்லைக்கா எனக்கு தெரியாது.
இங்க உள்ள எதையும் நான் தெரிஞ்சிக்க நினைக்கவில்லை என்றவள் சரிகா நான் கிளம்புறேன்.மண்டே பார்க்கலாமென்றவள்,தனது போனை எடுத்தவள் அதில் சேவ் பண்ணியிருந்த தாமரையின் நம்பருக்கு கால் பண்ணினாள்.
மூன்றே ரிங்கில் அட்டென் பண்ணிய தாமரை,பாப்புஊஊஊஊ என்க...
போ நான் உன்கிட்ட பேச மாட்டேன் என்பவளை அச்சோ பாப்பு நீ எப்படி இருக்க?
என்னடி படிக்குற?
வீட்ல அம்மா அப்பா நல்லா இருக்காங்களா என்று கேட்டாள்.
நாங்க நல்லா இருக்கோம் நீ தான் எங்களை மறந்துட்ட என்று குறைபட்டவளுக்கு,இல்லை பாப்பு நான் மறக்கலை என்கவும்...
பொய்...
நீ பொய் சொல்லுற.பிறகு நீ நீலகிரிக்கு வந்ததை ஏன் சொல்லவில்லை என கேட்க, ஒரு நொடி அதிர்ந்தவள் நான் வந்தது உனக்கு எப்படி தெரியாமென்றாள்.
அது கிடக்கட்டும் உடனே நம்ப ஆலமரத்துக்கிட்ட வா என போனை வைத்தாள்.
படியிலிறங்கி வேகமாக வந்தவளை பார்த்த கதிர் ஏய் ஏய் ஏய் எதுக்குடி இவ்வளவு வேகம்?
எந்த டிரைன புடிக்க ஓடுற என்க,இதோ வரேன் இருங்களென்றவள் கதவை திறந்து வேகமாய் போவதை பார்த்தவன்,என்னம்மா உங்க மருமகளுக்கு பைத்தியம் எதாவது புடிச்சிட்டாளென்று வேதாவிடம் கேட்க அவரோ இருக்கலாம் பா என்று சிரித்தார்.
வேகமாய் ஓடி வந்தவள் ஆலமரத்தின் அருகில் வந்து மூச்சு வாங்க நின்று செல்லாவை தேட,பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைங்கள் வருவதும் சிலர் ஆடுகளை மேய்ச்சலுக்கே கூப்பிட்டு போய் மீண்டும் வீட்டிற்கு கூப்பிட்டு வருவதுமே தெரிந்தது.