Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 545
- Thread Author
- #1
நீலகிரி:
இரவு உணவை சாப்பிட்டு சிறிது நேரம் இருவரும் வெளியே நடந்து விட்டு மேலே இருக்கும் தங்களது ரூமிற்குள் வந்தனர்.
அய்யோஓஓ...
பகல்லையே இந்த மனுஷன் அந்த பாடு படுத்துனாரு இப்போ என்ன ஆக போறேனு தெரியலையேயென்று யோசனையோடே தாமரை ரெஸ்ட் ரூமிற்குள் செல்ல,கதிரோ வெளியே இருக்கும் டேப்பில் கால்களை கழுவிட்டு உள்ளே வந்தவன் கைலியை மாற்றிக்கொண்டு பெட்டில் படுத்து விட்டான்.
சிறிது நிமிடங்கள் சென்று நைட்டிரஸ் மாற்றிக்கொண்டு பொறுமையாக கதவை திறந்து பார்க்க நைட் லேம்ப் மட்டும் எரிவது தெரிந்தது.
இந்த மாம்ஸ் எங்கே போனாறு என்றவாறு வெளியே வந்தவளுக்கு அங்கே பெட்டில் படுத்திருக்கும் கதிர் தெரிந்தான்.
ஓஓஓ தூங்கிட்டாரா என்னடி இது ஆச்சர்யம் என்றவள் துவைக்க வேண்டிய இருவரின் துணிகளையும் அங்கிருந்த கூடையில் போட்டு மூடியவள்,தலையை வாரி பின்னல் போட்டு விட்டு பெட்டில் வந்து படுக்க,இரும்பு கரம் அவளை இழுத்து இறுக்கி அணைத்தது.
தூங்கலையா நீங்களென்க தூங்கிட்டு தாண்டி இருக்கேனென்றவனின் மூச்சு காத்து அவளின் கழுத்தில் பட சிலிர்த்து போனாள். மேலும் அவளை சோதிக்க மனமில்லாமல் ம்ம் தூங்குடி என்றவாறு நிமிர்ந்து படுத்து கண்ணை மூடினான்.
ஓய் பொண்ணு கொஞ்சம் நில்லு நில்லுனு சொல்றேனே நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கியே ஏய் உன்னை தான் நில்லுடி என்றதும் சற்று தொலைவில் நடந்து போனவள் என்னடா என்று திரும்ப அவள் முகத்தை பார்ப்பதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்த மருது அடச்சை கனவா என்றவன் எழுந்து போய் கதவை திறக்க மூக்கையன் நின்று கொண்டிருந்தார்.
முசலு புடிக்க போறோம் நீயும் வாரியா என்க,இதோ வரேன்பா நீ கீழ இரு என்றவன் தனது போனில் மணியை பார்க்க அதிகாலை நான்கு மணியென்று காட்டியது.
இந்த நேரத்தில் வந்த கனவு பலிக்குமென்று சொல்வாங்களே அப்படி எவள் வந்துருப்பாளென்று யோசனையோடு ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ப்ரஷாகி கீழே வர மகனுக்கு சூடான வரகாப்பியை மயிலா நீட்ட வாங்கி வேகமாக குடித்தவன் தந்தையோடு காட்டை நோக்கி சென்றான்.
இவர்களுக்காக சற்று தள்ளி அங்கே தெரிந்தவர்கள் சிலரும் காத்திருக்க அனைவரும் தங்களது கண்களை சுற்றி பார்வையால் அலசியபடியே காட்டுக்குள் நுழைந்தனர்.
எலே மருது அடுத்து என்னல உன் சோலியென ஒருவர் கேட்க,என்ன பண்ணனும் சொல்லும் மாமோவ் என்றான்.
ம்ம்...
உங்கப்பனை விருந்து சோறு பொங்க சொல்லும்ல,நல்லா இளம் கெடவா வாங்கி ஆக்க சொல்லுல.எத்தனை நாளுக்கு மயிலா இப்படி உன்ன நினைச்சி வெசனத்துல கடக்கும்.
உங்கப்பாரு நாலு பேர்கூட வெளியே வர வெசனம் தெரியல.தங்கச்சி ஊட்டுல இருக்கும் போது பலானது சிந்தனை மண்டக்குள்ள சுழலும்யா.
போனது போய் தொலையட்டும்ல நம்ப முருகாயி மவள் சமைஞ்சது இருக்கே கட்டிக்கலாம் என்றவர் என்ன மூக்கையா மவனை காலம் பூராவும் இப்படியே வச்சிக்கலானு கனாவுல இருக்கியேளோ என்க...
அய்யோ மாமாவ் அந்த மலையாத்த ஆணைய அப்படி இல்ல.எந்த மொசரைய வச்சிக்கிட்டு தங்கச்சிகிட்ட போய் பொண்ணு கேட்பேன்.ரெண்டு வருசம் ஓடிட்டு முருகாயி நம்ப ஊட்டுக்கு வந்து,பேச்சு வார்த்தைய நிறுத்தி...அந்த யோசனை தான் ஓடுது மாமோவ் என்றார்.
எலே யாரும்ல நீ கூறுகெட்டவனே...
நம்ப புள்ள அப்படிலாம் நினைக்காது.அதுக்கும் வெசனம் இருக்கும்டியோய்.நீ உன் மவன் மனசை மாத்தி மூக்கனாங்கயிறு கட்ட ஆவ வேண்டியது பாரு என்றவர் ச்சூஊஊ என வாயில் விரல் வைத்து வலது பக்கம் திரும்ப அங்கே நிலா வெளிச்சத்தில் நான்கு முயல்கள் எதையோ இந்த நேரத்தில் சாப்பிடுவது தெரிந்தது.
சுற்றி வளைத்தவர்கள் ஒருவழியாய் இரண்டு முயல்களை பிடித்து விட்டு அடுத்ததை தேடி போக விடியறதுற்குள்ளே ஆளுக்கு மூன்றென கணக்கு பண்ணி பிடித்து விட்டு திரும்பி வரும் போது மரத்தில் இருந்த தேனடை தாமரைக்கு புடிக்குமே என ஞாபகம் வந்ததும் வேகமாக மரத்தில் ஏறி பிய்த்து எடுத்த மகனை பார்த்த முருகையன் எதுவும் சொல்லாமல் அமைதியா இருந்தார்.
வழக்கம்போல விழிப்பு வர தன் மேல் எதுவோ பாரமாய் இருப்பதை உணர்ந்த கதிர் கண்ணை திறந்து பார்க்க ஒரு காலையும் கையையும் அவன் மேலே போட்டுக்கொண்டு இடது பக்க தோள் பட்டையில் தலை வைத்து தன்னவள் தூங்குவது தெரிந்தது.
வாயிலிருந்து சிறுது ஜொல்லு வழிய சீரான மூச்சோடு தூங்குபவளை பார்த்து சிரித்தவன் எட்டி தனது போனை எடுத்து இருவரையும் வித விதமாய் போட்டோ எடுக்க மனைவியின் ஆடையின் விலகலில் மனம் பேதலிக்க ஆணிற்கே உண்டான அவஸ்தை அவனுக்குள் எழுந்தது.
அவனை மேலும் சோதிப்பது போல குளிரின் காரணமாய் இன்னும் தாமரை நெருங்கி படுக்க சுத்தமென்றவன் என்னை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாள் போல...அடியேய் பொண்டாட்டி நானே ரொம்ப கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன்டி.ஆசையா காதலிச்சி கல்யாணம் பண்ணவளோட வாழாமல் இன்னும் கன்னிப்பையனா இருக்கேன்.
நீ என்னவென்றால் இப்படி என்னை சோதிக்குறியேடி என முணுமுணுத்தவன் இன்னும் கொஞ்ச நேரம் இவளோடு இப்படி இருந்தால் கண்டிப்பாக நம்ப கற்பை இவள் பரித்துவிடுவாளென்றவன் பொறுமையாக தாமரையின் காலை தனது காலால் விலக்கியவன்,
அவள் கையை எடுத்து விட தாமரையும் வேறு பக்கம் திரும்ப அவளின் நீளமான முடி பறந்து கதிரின் முகத்தை மூடியது.
அடியேய் என்னை சோதிக்காதடி நான் பாவம்டி என்றவன் முகத்தின் மேலிருந்த அவள் முடியை முகர சீயக்காயின் வாசனை நாசிக்குள் நுழைந்தது.
பரவாயில்லையே கண்ட கண்ட கெமிக்கலை போடாமல் இன்னும் என் பொண்டாட்டி சீயக்காய் போடுறாளே சூப்பரு என்றவன் அவள் முடியை விலக்கி விட்டு எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு சென்று ரெப்ரஷாகி கதவை திறந்து வெளியே வர பனி போர்த்தி அந்த சுற்று வட்டார இடமே புகை மூட்டமாய் இருந்தது.
மாடி சுவற்றின் மேல் சாய்ந்து நின்று பார்க்க சிறிது நேரம் சென்று இரண்டு கரங்கள் அவனை அணைப்பதை உணர்ந்தவன் தூங்கலையாடி என்க,இங்க என்ன பண்ணுறீங்களென்றவள் தன் மேல் போர்த்தியிருந்த சால்வையை கணவனுக்கும் போத்தியபடி அவனை இடுப்போடு இறுக்கமாய் அணைத்துக்கொண்டு முதுகின் மேல் சாய,என்னை பாடாய் படுத்திட்டுதான் இவள் ஊருக்கு கூப்பிட்டுப் போகப்போறாள்…
பாதகத்தி எப்படி என்னை பழி வாங்குறாள் பாரென்று முணுமுணுத்தவன் அடியேய் என்னடி பண்ணுற?
யாராவது பார்த்தால் என்னடி நினைப்பாங்களென்க...
ஆஹான்...
இந்த அறிவு நேற்று அய்யாக்கு எங்கே போச்சி?பட்டப்பகல்ல கட்டிக்கிட்டு நிக்கும் போது தெரியலை.இப்போ இந்த புகை மூட்டத்தில் எவங்க பார்க்க போறாங்களென்று இன்னும் கணவனை இறுக்கி அணைக்க,அடியேய் சோதிக்காதடி என்னை சோதிக்காதே...
நான் பாவம் டி என்னை விட்டுறு என்று அந்த ஆண்மகன் கதற ஹாஹாஹா என சிரித்தவள்,எப்படி நம்ப ஷாக்.எங்களுக்கும் தெரியும். அந்த பயம் இருக்கட்டுமென்றவாறு சால்வையை விலக்க கதிரோ பட்டென்று திரும்பவும் தாமரையின் மேல் இடித்து நின்றான்.
குளிர் ஒரு பக்கம் உடலை துளைக்க,எதிரே தன் காதல் மனைவி, மனம் முழுவதும் அவள் மீது கொள்ளை காதலையும் பிரியத்தையும் வைத்திருந்தவனால் தனது மன தைரியத்தை விட உடலில் செல்கள் படுத்தும் பாட்டோடு போறாட முடியாமல் தவிப்போடு நின்றான்.
தாமரையும் கணவனை நிமிர்ந்து பார்க்க கணவனின் கண்ணில் தெரிந்த காதலும் காமமும் வேட்கையும் பெண்ணவளை ஞாண வைக்க வேகமாய் திரும்பி ஓர் எட்டு வைத்தவள் அந்தரத்தில் மிதந்தாள்.
இரண்டு வலிமையான கரங்கள் அவளை ஏந்தியிருக்க கையில் பூப்போல் மிருதுவாய் இருப்பவளை நெஞ்சோடு அணைத்தவன் நாம ஊருக்கு கிளம்பலாம்டி என்க ம்ம் போகலாமென்றாள்.
நிஜமாவா என கேட்க ம்ம் நிஜம்தான் என்றவள் கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள கையிலேந்தியபடி உள்ளே போனவன் ஒரு காலால் கதவை உதைத்து சாத்திவிட்டு அவளோடு மெத்தையில் சரிந்தவன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குடி என்க ம்ம் என்றாள்.
தாமரை தூங்கி எழுந்து மணியை பார்க்க காலை பத்து என்று காட்டியது.திரும்பி கதிரை பார்க்க அந்த இடம் வெறுமையாய் இருந்தது.
எல்லாம் இந்த மனுஷனால் வந்தது.
அப்பவே எந்திரிச்சவளை படுடினு தூங்க வச்சிட்டாறே.இவ்வளவு நேரம் கழித்து கீழே போனால் என்னை என்ன நினைப்பாங்களென்று புலம்பியபடியே குளிக்க போனவள் சிறிது நிமிடத்தில் ப்ரஷாகி ஒருவித சங்கடத்தோடு கீழே வர...
வாடா பாப்பா இப்போ பரவாயில்லையா?
உனக்கு தலைவலினு பெரியவன் சொன்னான்.அதான் தூங்கட்டும்னு எழுப்ப வேண்டானு விட்டுட்டேன் என்றவாறு இஞ்சி டீயை கொண்டு வந்து மயிலா குடுக்க ஒரு மிடறு விழுங்கியவள் ஆன்ட்டி என்று கண்களை விரிக்க...
ம்ம் மருதுதான் உனக்கு ஆட்டு பால் புடிக்கும்னு காலையிலே போய் கறந்துட்டு வந்தான். நம்ப ஆடுங்கள் அங்க மேகமலையில பட்டி போட்டுருக்குடா என்றார்.
அத்தம்மா டூட்டிக்கு போயாச்சா என்றவள் அங்கிருந்த கண்ணாடி ஜன்னல் வழியாக ரோட்டை பார்க்க மருதுவும் கதிரும் பேசிக்கொண்டு வருவது தெரிந்தது.
நண்பனின் எண்ணம் எதுவென்று பாதி உறக்கம் கலைந்து யோசித்து பார்க்கும் பொழுது தாமரைக்கு புரிந்தது.
நீ நல்லா இருந்தால் தான் நான் நல்லா இருப்பேன்டா என தனக்குள் சொல்லியவள்,அய்யா அய்யனாரே மருதுக்கு சீக்கிரம் அவன் மனசுக்கு ஏற்றப்போல பொண்ணு கிடைச்சி அவனும் குடும்பமாக ஆகணும்யா.
இதுக்காக உன் சன்னதியில் அங்க பிரதட்சனை பண்ணுறேனென்று மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.