Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 543
- Thread Author
- #1
மேகமலை:
குளித்து தயாரான செல்லக்கிளி அங்கே சுவற்றில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து சாமியாக வழிபடும் செங்கல்லை அம்மனாக நினைத்து மனதுருக வேண்டியவள்,அம்மா மலையம்மா நீயே துணையா இருக்கணுமென்றவள் அங்கிருந்த விபூதி குங்குமத்தை பூசிக்கொண்டு திண்ணைக்கு வர, முருகாயியும் குப்பிளானும் மகளுக்காய் காத்திருந்தனர்.
இருவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவளை மகராசியா இரும்மா என்று தூக்கி விட்டனர்.சரி சீக்கிரம் நாலு கஞ்சியை அள்ளி வயித்துல போட்டுக்க ஜீப் வந்துட போகுதென்றனர்....
மகளுக்கு கம்மங்களியை கரைத்து எடுத்து வந்து முருகாயி குடுக்க வாங்கி குடித்தவள் நாளையில இருந்து சோறு கொண்டு போறேன் மா.இன்னைக்கு வேண்டாமென்க...சரித்தா....இந்த ஜீப்புக்கு காசு என்று சொல்லி தனது முந்தானையில் முடிந்திருந்த பணத்தை கொடுத்த முருகாயி அந்த தாளை(அப்பாயின்மெண்ட் லெட்டர்)எடுத்துகிட்டியா என்று கேட்க ம்ம் மா என்றாள்.
பின்னர் தோளில் மாட்டிய ஹேண்ட்பேகோடு இருவரும் நடந்து ஜீப் ஏறும் இடத்திற்கு வந்து சேர அங்கிருப்பவர்களோ செல்லாவை வாழ்த்தி ஆசீர்வதித்தனர்.
சிறிது நிமிடத்தில் ஜீப் வந்ததும் அம்மா வாரேனென்று செல்லா ஏறிக்கொள்ள, போய்ட்டு வாத்தா என்று மகளை வழியனுப்பியவர் கிழக்கே உதித்த சூரியனை பார்த்து அப்பனே நீயே பார்த்து நடத்து சாமி என்று வேண்டினார்.
ஒரு மணி நேர ஜீப் பயணத்தில் நீலகிரிக்கு வந்து சேர்ந்தாள். கிட்டதட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு இந்த ஊருக்கு வந்தவளின் பார்வையில் அங்கிருக்கும் மாற்றங்கள் பட்டது.
ம்ம் நல்ல முன்னேற்றம்தான் என்றவாறு மற்றவர்களோடு நடந்து சென்றவளின் பார்வையில் தனது அத்தை வீடும் அம்மா பிறந்த வீடானது கண்ணில் பட்டாலும் கண்டு கொள்ளாமல் அந்த வீட்டை தாண்டி ஸ்கூல் போகும் வழியில் நடந்து சென்றாள்.
கால்மணி நேர நடையில் அந்த சிறிய ஸ்கூலிற்கு வந்தவள் ஹெச்எம் ரூமை கேட்டு அங்கு போய் தான் வந்த விஷயத்தை சொல்லி லெட்டரை நீட்ட, அவரும் படித்து பார்த்து விட்டு அட்டென்டரை கூப்பிட்டு மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த சொன்னார்.
ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஒன்றிய பள்ளிக்கூடமென்பதென்றாலும் பார்க்க சுத்தமாக இருந்தது.மற்ற டீச்சருக்கும் பிள்ளைகளுக்கும் அறிமுக படலத்தை முடித்து விட்டு பாடத்தை நடத்த ஆரம்பித்தாள்.
மதிய உணவுக்கான இடைவேளை வந்த பொழுதுதான் அவள் வந்திருப்பாளாயென்று வேதா பார்க்க வர, அத்தை என்று ஓடி வந்து அவரை அணைத்துக்கொண்டாள்.
சந்தோஷம் செல்லா...
என் மகன் வாழ்க்கை இனி பிரகாசமாகிடும் அந்த நம்பிக்கை எனக்கு வந்துட்டு என்று சிரித்தார்.
நீலகிரி:
மதிய உணவை இருவரும் பேசிக்கொண்டே சமைத்து முடிக்க தனது அறையிலிருந்து வெளியே வந்த வேதாவை பார்த்த மயிலா,அக்கா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்று கேட்க...
கொஞ்ச நேரம் போகட்டும் மயிலா. ஸ்கூல்ல கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேனென்று அங்கிருந்து சென்றுவிட்டார்.
அத்தையம்மா என் மேல ரொம்ப கோவமா இருக்காங்க போல ஆன்ட்டியென்று தாமரை கேட்க,அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்த மயிலா சரியாகிடும் பாப்பா.
அதை விடு,எப்போ என்னை பாட்டியாக்க போற என்றதும் தாமரைக்கு வெட்கம் வந்தது.விரைவில் ஆன்ட்டி என்று சிரித்தவளை பார்த்தவர்,என் மகனுக்கு உன் கூட வாழ குடுத்து வைக்கலையே அந்த மலையம்மன்...
எம் புள்ளைக்கு ஒரு நல்ல வழி அந்த ஆத்தா காட்டிட்டால் என் வெசனம் விட்டதுயென்று நினைக்கும் போது சுவற்றில் இருந்த பல்லி சத்தம் கேட்டது.
பின்னர் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்க இவர்களோடு கதிரும் வந்து இணைந்து கொண்டவன் எங்கேம்மா அம்மாவை காணுமென்று கேட்க,அக்காக்கு பள்ளிகூடத்தில ஏதோ வேலையாம் அதான் போயிருக்காங்கப்பா என்றார்.
ஓஓஓ சரிங்கம்மா என்றவனுக்கு வேலுவிடமிருந்து கால் வந்ததும் போனோடு அவன் வெளியே சென்று விட்டான்.
ஏங்க ஆன்ட்டி மருதுக்கு வேற கல்யாணமென்று தாமரை தயங்கியவாறு கேட்டாள்,ம்ம் எங்கே புடி குடுக்கமாட்டுறான் பாப்பா.என் புள்ள வாழ்க்கையை இந்த பாவியே அழிச்சிட்டேனே என தனது தலையில் அடித்துக்கொண்டார்.
அய்யோ ஆன்ட்டி ஏன் இப்படி பண்ணுறீங்கள்.ஒரு உயிரோட கடைசி ஆசையை நிறைவேற்ற தானே இதை பண்ணுனீங்கள். இப்படி தவறாக போகுமென்று யார் நினைத்தாயென்று வருத்தமாக அவள் சொல்லும் போது மருது உள்ளே வந்தான்.
இருவரையும் பார்த்தவாறு வந்தவன் அம்மா கூழ் எடுத்துவா என்றவாறு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து கொண்டு தாமரையை பார்க்க,அவளுக்கோ அவன் பார்வை சிறிது நடுக்கத்தை கொடுக்கவும் எழுந்தவள் வேகமாக வெளியே நிற்கும் கணவனிடம் சென்றாள்.
போடி போ...
எத்தனை நாளைக்கு இப்படி ஓடுறனு பாக்குறேன்டி என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
நெஞ்சு படபடக்க வந்தவள் தூரத்தில் கதிர் நிற்பதை பார்த்து அவனிடம் சென்று நின்றுகொண்டாள்.போன் பேசியபடி திரும்பி பார்த்தவன் என்னடி என புருவத்தை உயர்த்தி சைகையில் கேட்க ஒன்னுமில்லையென்றாள்.
சரிடா நேர்ல வந்து பேசுறேனென்று போனை வைத்தவன் என்னாச்சி? ஏன் உன் மூஞ்சு இப்படி பேயறைஞ்ச போல இருக்கு என்க,இல்லையே நல்லா தானே இருக்குறேனென்றவளின் பார்வை சற்று தொலைவில் வேதாவோடு பேசியவாறு வருபவளின் மேல் படிந்தது.
யார் இந்த பொண்ணு?
இங்க உள்ள போலதான் டிரஸ் பண்ணிருக்காள்.ஆனால் இந்த பொண்ணை இங்கு பார்த்த போல இல்லையே....
நமக்கு தெரியாமல் இங்கே யார் வீட்டிலிருக்கிறாளென்று யோசனையாக அவளை பார்க்க, வேதாவோ அவளை வீட்டிற்கு கூப்பிட வேண்டாங்கத்தை என்றவாறு அவள் சொல்லி செல்வது இவளின் காதில் விழுந்தது.
ஏய் எதுக்கு அந்த பொண்ணை இப்படி பார்க்கேறயென்று தாமரையிடம் கதிர் கேட்க, இல்லை அந்த பொண்ணை இங்கு பார்த்த போல இல்லை அதான் யாரென்று யோசிக்குறேனென்றாள்.
ஏண்டி இதெல்லாம் உனக்கு ஓவரா தெரிலையா?
என்னமோ இங்க இருக்குற ஆளுங்க டீட்டைல்ஸ் எல்லாம் உன் கையில என்பது போல பேசுறியேயென்றவன் அந்த பொண்ணு அழகா இருக்கேனு பொறாமை தானே என்றான்.
எதேஏஏ...
ஓஓஓஓஓ
அப்போ தொரை அவளை ரசிச்சிருக்கீங்க அப்படி தானே என தனது இடுப்பில் கையை வைத்து முறைத்து பார்ப்பவளை கண்டவன்,சுற்றி தனது பார்வையால் அலச யாரும் அங்கு இருப்பது போல தெரியவில்லை.
எட்டி அவளை தன்னோடு இறுக்கி அணைத்தவன் எனக்கு உன்னை ரசிக்கவே நேரம் போதலைடி.இதில் எங்கேயிருந்து மற்ற பொண்ணை ரசிக்க, சொல்லு என மனைவியின் நெற்றியில் மோதியபடி கேட்க...
யோவ் என்ன பண்ணுற?
நடு வாசல்ல நின்னு கிட்டு இப்படி பண்றியே யாராவது பார்த்தால் என்ன ஆவதென்க, அப்படியே குனிந்து மனைவியை தூக்கியவன் அவள் கத்தாமல் இருக்க,அவள் இதழில் தனது உதட்டை பொறுத்தியபடி வீட்டின் பின்பக்க தோட்டத்திற்கு சென்றான்.
கால்களை உதறியவளை ஒரு கையால் இறுக்கி பிடிக்க தாமரை தான் தவித்து போனாள். உடலிலுள்ள செல்களெல்லாம் தன்னவனின் தீண்டலில் நெகிழ, பெண்ணவளோ மணாளனின் வலிமையான உதட்டின் போரில் கிளர்ச்சியுற்றாள்.
இவ்வளவு நேரம் கைகளால் அவனை அடித்தவள் மெல்லிய கரம் கொண்டு அவன் கழுத்தை கட்டிக்கொள்ள,வேகமாய் வந்த கதிரோ அங்கிருந்த கல்லின் மேல் உட்கார்ந்து தன்னவளை மடியில் இறுத்திக்கொண்டான்.
உதட்டிலிருந்து சுவை உப்பு கரிக்க பல்லின் தடம் பதிந்து இரத்தம் துளிர்த்துவிட்டதை புரிந்தவன் நாவால் தடவி கொடுக்க இதுவரை இல்லாத மயக்கமோ தாமரைக்கு இன்னும் மேலாக கண்களை மூடியவள் இன்னும் கணவனின் நெஞ்சில் புதைந்தாள்.
மெல்லிய குளிரும் தன் மனங்கவர்ந்தவள் கையிலும் இருக்க கதிருக்கோ ஆண்மகனாய் அவஸ்தை அதிகமானது.
தற்செயலாக தனது அறையில் இருக்கும் ஜன்னலருகில் வந்த மருது கீழே பார்க்க இருவரும் இருந்த கோலம் தெரிந்து இதழோரம் புன்னகை வந்தது.
தான் எதிர் பார்த்த ஒன்னு விரைவில் நடக்கப் போகுதென்பதை அங்கிருந்தவர்களின் நெருக்கம் சொல்லியது.
தாமரையின் மனம் குற்ற உணர்ச்சியாலே கணவனிடமிருந்து விலகி இருக்கின்றது என்பதை அவளின் ஆருயிர் நண்பனாக மருதுவால் புரிந்து கொள்ள முடிந்தது.
விட்டால் இவள் சாதிக்கிறேன் சோதிக்கிறேனென்று வருடத்தை கடத்துவாளே தவிர கதிரோடு சேர்ந்து வாழ யோசிக்கமாட்டாள்.நாம் தான் அதிரடியாக எதாவது பண்ணனுமென்று நினைத்தவன் அவளிடம் மனதை கல்லாக்கிக்கொண்டு பேசினான்.
அது நல்லா வேலை செய்வதை கண்டு கண்ணில் நீர் துளிர்க எங்கே இருந்தாலும் நீ நல்லா இருக்கணும்டி. உன்கிட்ட பாசமாக நான் பேசினால் நீ அந்த கூட்டிலிருந்து வெளியே வரமாட்டாய்.
உனக்கு இப்படி எதாவதே அதிரடி செயல் நடத்தினால் தான் கதிரோடு வாழணுமென்று தீர்க்கமாய் முடிவெடுப்பாய்.உன் பார்வையில் நான் கெட்டவனாக இருந்தாலும் பரவாயில்லை.
நீ குடும்பம் குழந்தையென்று வாழணுமென்று சொல்லியவன் சாகுர வரைக்கும் உன் மேல் வைத்த காதல் மாறாதுடி.ஆனால் அடுத்தவனுக்கு மனைவியானவளை விரும்பும் அளவிற்கு நான் தரங்கெட்டவனில்லை.
என்று இருந்தாலும் என் காதல் அந்த தாமரைக்கு மட்டும்தான். இந்த கதிரோட பொண்டாட்டிக்கு இல்லையென்று சொல்லியபடி அங்கிருந்து சென்றான்...