Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 543
- Thread Author
- #1
சீமக்கரை:
ஏண்டி இன்னுமா உன் பேரன் சீவி சிங்காரிக்கிரானென்று பிரகாசம் தாத்தா கோவமாக கேட்க ஆமாம் நான் தான் பூதுரமாவு(பவுடர்) குழைச்சி பூசிட்டு இருக்கேன் என்ன கேளுங்கயென்று தனது தாவங்கட்டையில் இடித்து காட்டிய வள்ளி அப்பாயி, ஏத்தா பார்வதி போய் நல்லவனை என்னனு பார்த்துட்டு வாத்தா என்றார்.
இதோமா என்றவாறு படியில் ஏறி மேலே வந்தவர் அப்பு அப்பு என வளவனின் ரூம் கதவை தட்ட உள்ள வாத்தை என்றான்.
கதவை திறந்து உள்ளோ போனவர் அங்கிருந்த மருமகனை பார்த்து அய்யா எம்புட்டு அழகா இருக்க.என் கண்ணே பட்டுரும் ராசாயென்று அவன் தலையை சுற்றி நெட்டி முறித்தவர் வாய்யா போகலாமென்றார்.
ம்ம் என்றவன் வேண்டானா விடவா போறீங்க?என்க, பொண்ணு நம்ப ஊட்டுக்கு ஏத்தவளா இருக்காயா. பாக்க எம்புட்டு லட்சணம் தெரியுமா,உன் மாமனுக்கு பாத்த உடனே இது தான் என் மருமவனுக்கு ஏத்த புள்ளனு சொல்லிட்டாரு.
எதேஏஏஏ!, என்னத்தை சொல்லுற?
எப்போ போனீங்க நீங்களாம் பொண்ணு பார்க்க என்று அதிர்வாய் கேட்க,அது போன மாசமே பேசிட்டு வந்துட்டோம்.
உனக்கு கல்யாண திசை நேற்று இருந்துதான் ஆரம்பம்னு சோசியகாரர் சொல்லிட்டாரு.அதனால் தான் இத்தனை நாளும் சும்மா இருந்தோமென்றவர் வாப்பு எல்லாரும் அங்க நிக்கிறாக...அண்ணன் கத்த போகுது?.
ஆக..முன்னாடியே பேசி முடிச்சிட்டீங்க இப்போ ஊர் முறைக்கு என்ன கூப்புடுறீங்க அதானே என்றவனை பார்த்தவர் நல்ல குடும்பத்துல பொண்ணு கிடைக்க ஏன் தட்டி விடணும்.
காலா காலத்துல உங்களுக்கு பண்ண வேண்டியதை பண்ணுனா கடமை முடிஞ்சிடும் கண்ணு என்றவர் சீக்கிரம் வாய்யா என கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே போக, பார்வதி இன்னும் என்னடி பண்ணுறயென்கும் செல்வத்தின் குரல் கேட்டதும் வரேன் மாமா என்றான்.
வேனில் கிளம்பியவர்கள் பொண்ணு வீட்டிற்கு வந்து சேர முக்கால் மணி நேரமானது. பொண்ணோட அம்மா அப்பா இருவரும் வந்தவர்களை வாங்க வாங்கயென்று வரவேற்று வீட்டிற்குள் கூப்பிட்டு போனார்கள்.
பெண்களோ வீட்டை சுற்றி பார்த்தனர்.
பொண்ணோட சித்தி வந்தவர்களுக்கு மோர் கொண்டு வந்து கொடுக்க, பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கவும் சோசியரும் வந்து சேர்ந்தார்.
சரி நேரம் ஆகுது புள்ளைய வர சொல்லுங்களென்று பெரியவர் ஒருவர் சொல்ல, மனைவியை பார்த்த பொண்ணுடைய அப்பா பொண்ணை கூப்பிட்டுவர சொல்லி தலையசைத்தார்.
சிறிது நிமிடத்தில் கொலு சத்தம் கிணுகிணுக்க தனது அக்காவின் துணையோடு வந்த பெண்ணவள் அங்கிருப்பவர்களை பார்த்து வணக்கம் சொன்னாள்.
எய்யா வளவா கீழயே குனிஞ்சிட்டு இருந்தால் என்ன அர்த்தம் நிமிர்ந்து பாருயென்று செல்வம் சொல்ல,மாமா உங்களுக்குலாம் புடிச்சிருந்தால் எனக்கு போதும் என்று சொல்லி விட்டான்.
தங்கள் வீட்டு பிள்ளையின் வார்த்தையை கேட்டு பெருமையா இருந்தது.பிறகென்ன பொருத்தமும் நல்லா இருக்கு கையோடு தட்டை மாற்றிக்கலாமேயென்று பிரகாசம் தாத்தா கேட்க எங்களுக்கு எப்படி என்றாலும் சரிதான் என்றனர்.
அதன் பின்னர் அதற்கான சடங்குகள் ஆரம்பமானது.வளவனின் மனமோ நிலாவை எண்ணி துடிக்க, வேலுவோ டேய் கொஞ்சம் தங்கச்சியை பாருடா என்கவும், தேவையில்ல மாமா.அதான் நீங்களாம் பார்த்துட்டீங்க இல்ல பிறகென்னவென்று வளவன் சொல்லி விட, விடுணா என்று சிவா சொல்லவும் அவனை முறைத்து பார்த்தான்.
ஏங்க தெரிஞ்ச மாப்ளை ரெடியா இருக்கு அப்படியே பாப்பாவுக்கும் பேசிடலாமாயென்று பெருமாளிடம் பொண்ணோட மாமா கேட்டார்.
ஹாஹாஹா என்று சிரித்தவர், வேலு எய்யா வேலு என குரல் கொடுக்க வாசல் பக்கம் நின்று பேசிக் கொண்டிருந்தவனோ தனது மாமாவின் குரல் கேட்டு உள்ளே வந்தவன் பெருமாளின் அருகில் வந்து நின்று சொல்லுங்க மாமா என்றான்.
என்னோட தங்கச்சி பையன்.என்னோட மவள் பொறந்த அன்னைக்கே என் தங்கச்சி ஆஸ்பத்திரியிலே பரிசம் போட்டுருச்சிங்க.புள்ள படிக்குதுனு அமைதியாக இருக்கிறோமென்றவருக்கு அச்சோ
மன்னிச்சிடுங்க. புள்ளைய பார்த்தும் புடிச்சிடுச்சிடுச்சி.
அதான் என் மச்சான் மவனுக்கு கேட்களானு எண்ணமென்றதும் வேலுக்கு விஷயம் புரிய எங்கே இவளென்று செல்வியை தேட அவளோ அல்லியோடு சிரித்து பேசிக்கொண்டு தூரத்தில் நிற்பது தெரிந்தது. இப்படி சிங்காரிச்சிட்டு வந்தால் பாக்குறவனெல்லாம் பொண்ணு கேட்காம என்ன பண்ணுவாங்களென்று மனசுக்குள் திட்டினான்.
சரி நீ போய்யா என்றதும் வேகமாக செல்வி நிற்கும் இடத்திற்கு வந்தவன் அல்லி உள்ள போ என்க வேலுவின் குரலில் இருந்த உஷ்ணமே அவளை அங்கிருந்து போக வைத்தது.
சுற்றி பார்த்தவன் அவள் கையை இழுத்துட்டு அந்த பக்கம் போய் சுவற்றில் சாய்த்தவன் என்னடி துணி இது?.அங்க இருந்து பார்க்கும் போது இதெல்லாம் தெரியுதென்று இடுப்பில் இறங்கியிருந்த தாவணியை காட்டி சொல்ல தன்னவனின் கைகள் பட்டதிலே விழி விரித்து நின்றாள்.
உன்னை தாண்டி கேட்குறேன்?
உனக்கா நிச்சயம்?
உன்னை யாருடி இப்படி வர சொன்னாயென்று கோவமாக கேட்டவன் பதில் சொல்லுடி என்று செல்வியின் முகத்தை பார்க்க அவள் அதிர்ந்து நிற்பது தெரிந்த பிறகே தனது செயல் புரிந்தது.
இடுப்பிலிருந்த கை பிடியை தன்னை நோக்கி இழுத்து இறுக்கி அணைத்தவன் அதிர்ந்து நிற்பவளின் இதழில் தனது இதழை பதித்தான்.
இருவருக்கும் இது தான் முதல் தீண்டலென்பதால் என்ன நடக்கின்றது என்பது புரியாமல் முத்தப்போரில் மூழ்கியிருக்க மூச்சுக்கு திணறிய பின்னரே தன்னிடமிருந்து அவளை பிரித்தவன் தலையை கோதிக்கொண்டு போ இங்க இருந்தென்றான்.
விட்டால் போதுமென்று ஓடப்போனவளின் கையை எட்டி பிடித்து இழுத்து அணைத்தவன் லவ் யூ டி பொண்டாட்டி என்று செல்வியின் காதில் சொல்ல வேலுவின் அதிரடியில் செல்வி மிரண்டுதான் போனாள்.
முடிய சரி பண்ணிட்டு போடி என்றவன் இடுப்பிலிருந்த தாவணியை மேலே இழுத்து விடும்போது நருக்கென்று கிள்ளிவிட்டவன் அங்கிருந்து வேகமாக சென்றான். என்னடி செல்வி இங்கே நடக்குதென்றவளுக்கு சிறிது வெட்கம் வர பின்னர் தாவணியை சரி பண்ணிக்கொண்டு அங்கிருந்து உள்ளே சென்றாள்.
வீட்டின் ஹாலிலே இரண்டு மரச்சேரை எடுத்து போட்டு அடுத்து நடக்க வேண்டிய சடங்கிற்கு தயார் பண்ணி முடிக்க எப்பா பொண்ணையும் மாப்பிள்ளையும் கூப்பிட்டு வாங்களென்று பிரகாசம் தாத்தா சொல்ல டேய் வாடா என்று வளவனை கூப்பிட எதுக்கு மாமா இதெல்லாம் என்றான்.
டேய் இப்ப போய் இப்படி சொன்னால் என்ன அர்த்தம் போடா எல்லா வெட்டருவாங்களும் ஒன்னா உட்கார்ந்து இருக்குங்க சீவிட போறாங்கள்.வா வா என்றவாறு வளவனை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவனுங்கள் போடா என்க... ம்ம் போறேன் என்றான்.
மாப்ளையோட தாய் மாமன் முதல்ல மாலையை போடுங்களென்றதும் அன்பழகனும் செல்வமும் இணைந்து தங்கள் மருமகனுக்கு மாலை போட்டு விட பொண்ணை வரச் சொல்லுங்களென்றதும் அன்னம் போல நடந்து வந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் தான் அதன் பின்னர் வளவனிடம் எந்த மூச்சு பேச்சும் இல்லை.
பொண்ணுக்கும் அதைப்போல மாலையை போட்டு விட்டதும்,இந்த நகையை போய் போட்டு விடு செல்வியென்று நெக்லஸ் பெட்டியை சீதா கொடுக்க, செல்வியும் வாங்கிட்டு போய் தனது அண்ணிக்கு போட்டு விட்டாள்.
பின்னர் மச்சானுக்கு போடுப்பாயென்று சிவாவிடம் செயினை நீட்ட அவனும் வளவனுக்கு போட,தனது அத்தை மகனை கொலவெறியில் பார்த்தவனை ஹிஹிஹி என சிரித்து சமாளித்தான்.
அதன் பின்னர் பெரியவர்கள் வந்து இருவரையும் ஆசீர்வதித்து செல்ல,மதிய உணவும் ஹோட்டலில் இருந்து வரவும், வந்தவர்களுக்கு உணவை பரிமாறினார்.
வர வைகாசியில் கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாமென்று முடிவு பண்ணி பொண்ணு வீட்டில் சொல்லிக்கொண்டு சீமக்கரைக்கு கிளம்பினர்...
மேகமலை:
வீட்டிற்குள் வந்த குப்பிளான் மனைவியையும் மகளையும் பாக்ர்க அவர்களோ எதுவும் நடக்காதது போல தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.
செல்லா நீ போகலையா என்றார்.
எங்கேப்பா என்றவளிடம் வேலைக்கு தான்.அவ்வளவு பெரியவங்க நம்ப வீடு தேடி வந்து பேசிட்டு போயிருக்காங்க.அவங்க வார்த்தைக்கு மரியாதை குடுக்கணும்.