- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
உன் நினைவுகள் என்னுள்,
நெருங்கிக் கரைகிறதடி!
உண்ணாமல், உறங்காமல்,
உனக்காக உருகிக் காத்திருந்தேன்!
உனக்காக ஏங்கி வாசலில்,
வாசமிருந்தே வசமிழந்தேன்!
உன்னுறவு என்னுறவாக,
மாறியது மாயம்தானோ!
மறந்தாலும் மறக்காது,
உனைச் சந்தித்த நிமிடங்கள்!
தோழமைச் சீண்டலில்
மனம் மகிழ,
உனக்காகக் கடன்காரனாய்க்
காத்திருக்கவும்
சித்தமாயிருக்கிறேனடி!
உன் வரவு
இல்லையெனில்,
அந்த மனவலி
மரணத்தைவிடக்
கொடுமையென்பதை
அறிவாயா!
உனை வர்ணிக்கையில்,
அதை ரசிக்கும்
உன்னழகு கோடியடி!
கண்ணில்லாக்
குருடனாய்த் திண்டாடினேன்
நின் காதலுக்காக!
தோல்வியில்லா
வாழ்வுக்குச் சாட்சியாய்
நம் காதல்!
வருடங்கடந்து காத்திருந்து
கரம்பிடித்தேனடி உனை!
எனக்கானாய்
எந்தன் தேவதையே!
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
நெருங்கிக் கரைகிறதடி!
உண்ணாமல், உறங்காமல்,
உனக்காக உருகிக் காத்திருந்தேன்!
உனக்காக ஏங்கி வாசலில்,
வாசமிருந்தே வசமிழந்தேன்!
உன்னுறவு என்னுறவாக,
மாறியது மாயம்தானோ!
மறந்தாலும் மறக்காது,
உனைச் சந்தித்த நிமிடங்கள்!
தோழமைச் சீண்டலில்
மனம் மகிழ,
உனக்காகக் கடன்காரனாய்க்
காத்திருக்கவும்
சித்தமாயிருக்கிறேனடி!
உன் வரவு
இல்லையெனில்,
அந்த மனவலி
மரணத்தைவிடக்
கொடுமையென்பதை
அறிவாயா!
உனை வர்ணிக்கையில்,
அதை ரசிக்கும்
உன்னழகு கோடியடி!
கண்ணில்லாக்
குருடனாய்த் திண்டாடினேன்
நின் காதலுக்காக!
தோல்வியில்லா
வாழ்வுக்குச் சாட்சியாய்
நம் காதல்!
வருடங்கடந்து காத்திருந்து
கரம்பிடித்தேனடி உனை!
எனக்கானாய்
எந்தன் தேவதையே!
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்