- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
உன் நினைவுகள்
எனை நெருங்கத்
தேவையில்லை!
உண்ணாமல், உறங்காமல்
உனக்காக உருகத்
தேவையில்லை!
உனக்காக ஏங்கி
வாசலில் வாசமிருக்கத்
தேவையில்லை!
உன்னுறவுகளை
என்னுறவாக எண்ணத்
தேவையில்லை!
உனைக்காண
என் தாயிடத்தில்
பொய்யுரைக்கத்
தேவையில்லை!
மறைந்து மறைத்து
உனை சந்திக்கத்
தேவையில்லை!
தோழிகளின் சீண்டல்
பேச்சுக்களைக் கேட்கத்
தேவையில்லை!
வாட்சப்பில்
வம்படியாகப் பேசத்
தேவையில்லை!
கைபேசியைக்
கையிலேயே வைத்திருக்கத்
தேவையில்லை!
கடன்காரி போல்
கால்கடுக்கக் காத்திருக்கத்
தேவையில்லை!
உன் வரவு இல்லையெனில்
மனம் மரண வலியை
உணரத் தேவையில்லை!
எனைப் பொய்யாக வர்ணிக்கும்
உன் பசப்பு வார்த்தைகளை
ரசிக்கத் தேவையில்லை!
நான் காணும் காட்சிகளை
உன்னிடம் பகிரத்
தேவையில்லை!
ஒரு தோல்வியில்
துவழ்ந்து விடுவேனென்று
நீ எண்ணத்
தேவையில்லை!
நீ மறுத்ததால்
இத்தனைத் தேவையில்லைகள்
என் வாழ்வில்!
ஆனால்,
தேவை!
எனக்கேயே எனக்கான
எனைப் புரிந்துணர்ந்து,
என் வாழ்வை மலரவைக்க
ஒரு அன்பான கணவன்!
காத்திருக்கிறேன்
என் கணவனை காதலனாக்க!
தேவை எந்தன் தே(கண)வனே!
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்
எனை நெருங்கத்
தேவையில்லை!
உண்ணாமல், உறங்காமல்
உனக்காக உருகத்
தேவையில்லை!
உனக்காக ஏங்கி
வாசலில் வாசமிருக்கத்
தேவையில்லை!
உன்னுறவுகளை
என்னுறவாக எண்ணத்
தேவையில்லை!
உனைக்காண
என் தாயிடத்தில்
பொய்யுரைக்கத்
தேவையில்லை!
மறைந்து மறைத்து
உனை சந்திக்கத்
தேவையில்லை!
தோழிகளின் சீண்டல்
பேச்சுக்களைக் கேட்கத்
தேவையில்லை!
வாட்சப்பில்
வம்படியாகப் பேசத்
தேவையில்லை!
கைபேசியைக்
கையிலேயே வைத்திருக்கத்
தேவையில்லை!
கடன்காரி போல்
கால்கடுக்கக் காத்திருக்கத்
தேவையில்லை!
உன் வரவு இல்லையெனில்
மனம் மரண வலியை
உணரத் தேவையில்லை!
எனைப் பொய்யாக வர்ணிக்கும்
உன் பசப்பு வார்த்தைகளை
ரசிக்கத் தேவையில்லை!
நான் காணும் காட்சிகளை
உன்னிடம் பகிரத்
தேவையில்லை!
ஒரு தோல்வியில்
துவழ்ந்து விடுவேனென்று
நீ எண்ணத்
தேவையில்லை!
நீ மறுத்ததால்
இத்தனைத் தேவையில்லைகள்
என் வாழ்வில்!
ஆனால்,
தேவை!
எனக்கேயே எனக்கான
எனைப் புரிந்துணர்ந்து,
என் வாழ்வை மலரவைக்க
ஒரு அன்பான கணவன்!
காத்திருக்கிறேன்
என் கணவனை காதலனாக்க!
தேவை எந்தன் தே(கண)வனே!
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்