Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 385
- Thread Author
- #1
என் தேடலின் வரம் நீ - 3
"கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இரயில் பத்து நிமிடம் நின்றது."
"அந்த நேரத்தில் பூவிழிக்கு வயிறு வலிப்பது, போல் தோன்ற நாப்கின் இல்லை. வேறு வழியின்றி தனது தோழிகளிடம், தான் சென்று வாங்கி வந்து விடுகிறேன், என்று இரயிலை விட்டு இறங்கிச் சென்றால், தேவையானதை வாங்கி விட்டு வந்து இருக்கலாம், ஆனால் நான்கு பேருக்கும் கொஞ்சம் நொறுக்குத் தீனி வாங்கியவள்.
"இரயில் கிளம்புவதற்கான ஹாரன் அடிக்கவும், தான் பணத்தை செல்போனில் அனுப்பி விட்டு மின்னல் மாதிரி ஓடி வந்தாள். "
அங்கே "பிளாட்பாரத்தில் இருந்தவர்கள்" இவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
"கோபி நந்தன்" தனக்கான உணவைக் கீழே இறங்கி வாங்கியவன், இரயில் கிளம்புவதை அறிந்து தனது கம்பார்ட்மெண்டில் ஏறினான்.
அப்போது தான் பூவிழி ஓடி வந்து கொண்டு இருப்பதை பார்த்தான். இரயில் கொஞ்சம் நகர்ந்து விட்டது. அவளால் என்னதான் ஓடி வந்தாலும் நகரும் இரயிலில் ஏறமுடியாது!!! என்று உணர்ந்தவன், தனது பெட்டி அருகில் வந்தவளை இடுப்போடு கை கொடுத்து உள்ளே இழுத்து இருந்தான்.
"கோபி நந்தன் அப்படி செய்யவில்லை என்றால் பூவிழி இரயிலின் அடியில் விழுந்து இருப்பாள்." அவளுக்கு தெரிந்துவிட்டது நாம் இறந்து விடுவோம் என்று அவ்வளவு வேகமாகத் துடித்தது, அவள் இதயம், அவளது தோழிகள் மூவரும் பரிதவித்துக் கொண்டு இருந்தனர்.
"கவி எனக்கு பயமா? இருக்குது டி இவளை இன்னமும் காணவில்லை, "என்று ஆதிரை அழுகவே ஆரம்பித்து விட்டாள்.
பூவிழி அவளுக்கு பீரியட்ஸ் வரும் தேதி நான் வரவில்லை என்று கூறினாலே நாம் மூவரும் கட்டாயபடுத்தியதால் தான் வந்தாள், அவள் நாப்கின் எடுத்து வைத்து இருந்தால், நான் தான் பேக்கிங் செய்ததை மறுபடியும் களைத்து எடுத்ததில் திரும்பவும் உள்ளே வைக்க மறந்து விட்டேன்.
அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இரயிலில் ஏறியதும் தான் நினைவு வந்து அவளிடம் சொன்னேன். அவளும் கூல்டி
இதற்கு போய் எதற்கு பீல் செய்கிறாய்?
அட்ஜஸ்ட் கரோ என்று சொல்லி விட்டாள். இப்போது அவள் இரயிலை மிஸ் செய்து விட்டால் அவளுக்கு திரும்பவும் எப்படி வருவது என்று தெரியாது? நாமளும் இறங்கி விடலாம் என்றால் ரயில் மூவாக ஆரம்பித்து விட்டது.
இவங்க மூன்று பேரும் அழுவதைப் பார்த்து அந்த கம்பார்ட்மெண்டில் இருந்தவர்
அந்த பெண் இரயிலைப் பிடிக்க ஓடி வருதும்மா, அழுகாதீங்க என்று கூறவும் தான் இவர்களுக்கு நிம்மதியானது, ஆனாலும் இரயில் போகும் வேகத்திற்கு சுடிதார் போட்டு இருந்தால் கூடப் பரவாயில்லை ஆப் சேரி போட்டு விட்டு எப்படி ஓடி வருவாள் என்று பதட்டமாக இருந்தனர்.
அந்தப் பெண் வேறு பெட்டியில் ஏறி விட்டாங்க என்று கூறினார். அவர் கவனிக்கவில்லை. பூவிழியை கோபி நந்தன் தூக்கியதை அவள் அங்கே ஓடி வந்ததைப் பார்த்தார்.
கோபி நந்தன் நெஞ்சுக்கு அருகில் முகத்தை வைத்து இருந்தாள் பூவிழி பயத்தில் அவனை அப்படியே கட்டிப் பிடித்து இருந்தாள். அவளது உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது.
நடுக்கம் நிற்கும் வரை அமைதியாக இருந்தவன். அவளைத் தன்னிலிருந்து விலக்கி நிறுத்தி உனக்கு எல்லாம் அறிவு என்பதே இல்லையா? அப்படி என்ன அடங்காத வாய் கொஞ்ச நேரம் தீனி இல்லாமல் இருக்க முடியாதா??
அது தான் இரயிலிலேயே விற்கிறார்களே அதை வாங்கித் திங்க வேண்டியது தானே, கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால் இரயிலில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பாய்?
நீ என்னடி செய்வாய்? எல்லாம் சினிமாவைப் பார்த்து கெட்டுப்போய் இருக்கிறீங்க ஓடி வந்து இரயில் ஏறிவிடலாம் என்று தேவையானதை எல்லாம் முதலிலேயே வாங்கி வைப்பதற்கு என்ன கேடு என்று அவனுக்கு கோபத்தை அடக்க முடியாமல் இப்போது இரயில் சீட்டில் குத்தினான்.
அப்படி என்னத்தை தான் வாங்கினாய்? என்று இப்போது அந்தக் கவரை வாங்கி கோபத்தில் பிரித்தான். அதில் நாப்கின் இருக்கவும். அவனுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது.
ச்சை அவசரப் பட்டு திட்டி விட்டோமே!! என்று சாரி நான் இதை எதிர்பார்க்கவில்லை.
கோபி நந்தன் சாரி கேட்கவும் இவளுக்கு வந்து விட்டது கோபம். என்னாங்க சார் என்னமோ? பெரிய இவர் மாதிரி திட்டுனீங்க உங்களை மாதிரி ஆண்களுக்கு எங்கே தெரியப் போகிறது. பெண்களோட வலி முசுடு என்பதை மட்டும் வாய்க்குள் முனங்கிக் கொண்டாள்.
பயணத்திற்கு முன்னால் இதை எல்லாம் வாங்க வேண்டியது தானே. மேக்கப் ஐட்டம் எல்லாம் எடுத்து வைக்கத் தெரியுது. முக்கியமானது எல்லாம் மறந்து விடுமா?
அதெல்லாம் மறக்கவில்லை. ஆனால் வரும் வழியில் வாங்கலாம் என்று இருந்தேன். டிராபிக் அதிகம் அதனால் ஷாப்பிற்குச் சென்று வாங்க முடியவில்லை. சும்மா தெரிஞ்ச மாதிரி பேச வேண்டாம்.
சரி அதை மட்டும் வாங்கி இருந்தால், இரயில் கிளம்பும் முன் வந்து இருக்கலாம். இது என்ன? என்று அவள் கரும்பு ஜூஸ் பாக்கெட் வைத்து இருப்பதைப் பார்த்து அவன் கேட்கவும்.
மாட்டிகிட்டா பங்கு என்று அவள் மனசாட்சி சமயம் பார்த்து எட்டிப் பார்க்க, எம்ட்டன் கண்ணில் தான் சிக்க வேண்டுமா?
சரி உண்மையைச் சொல்வோம் முசுடு மச்சான் நம்பினால் நம்பட்டும் என்று நினைத்தவளைப் பார்த்து, அடுத்து என்ன பொய் சொல்லலாம் என்று யோசிக்கிறாயா?
அதெல்லாம் இல்லைங்க சார், நீங்கள் ரொம்ப கோபமா ஒரு பச்சைப் பெண்ணைப் பார்த்து திட்டி விட்டீங்களா? அது தான் பயத்தில் வயிற்று வலி வந்து விட்டது. அது தான் கரும்பு ஜூஸ் குடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் வாங்கினேன். அது ஒரு குற்றமா?
நீ பச்சைக் குழந்தை வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாது!!
"ஆமாங்க சார், நான் எல்லாம் சின்னப் பெண் தான்" என்று அவள் பாவாடையை பிடித்துக் கொண்டு சொல்லவும்,
உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலையே!!? என்று அவளை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தான். அதில் அவளுக்குமே அல்லுவிட்டது. அய்ய இவன் என்ன இப்படி பார்க்கிறான்.
சார், நான் அப்படி சொல்லவில்லை சூது வாது தெரியாமல் எங்க அம்மா வளர்த்து விட்டாங்க, அப்படி வெள்ளந்தியான மனசு என்று தன் கண்களை சிமிட்டி பதில் சொன்னாள்,
ஓஹோ!! அப்புறம்..
நான் என்ன கதையா சொல்கிறேன். சார் ரொம்ப நன்றி என்னைக் காபாற்றியதிற்கு நான் போகிறேன். என்று தனது தோழிகள் இருக்கும் இடத்திற்கு போக நினைத்தாள்.
ஏய்? "ஒழுக்கமா இங்கேயே இரு இந்த இடத்தை விட்டு நகர்ந்தாய் மறுபடியும் தூக்கி வெளியே வீசி விடுவேன். "
என்னங்க சார் இந்த சலசலப்புக்கெல்லாம் நான் பயக்க மாட்டேன். இதோ இங்கே இருக்கிறது பாருங்கள் இந்தச் செயின் இழுத்துப் பிடித்தேன் என்றால் இரயில் நின்று விடும்.
ம்ம்ம்..
அப்புறம் நான் உங்கள் மேல் கம்ப்ளைணட் செய்வேன்?
என்னவென்று புகார் கொடுப்பாய்??
அது.. உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இது என்ன வம்பா போச்சு.. என் மேல் தான் புகார் தெரிவிப்பீங்க மேடம், ஆனால் அதில் சம்மந்தப்பட்ட நான் கேட்டால் சொல்ல மாட்டீங்களோ? என்று கேட்டுக் கொண்டே அவனது உணவுப் பார்சலை எடுத்து சாப்பிட்டான்.
பூவிழிக்கு மட்டன் பிரியாணி வாசம் அவளைப் பாடாய் படுத்தியது.
பாவி பார்க்க வைச்சு சாப்பிடுகிறானே. ஒரு பேச்சுக்காவது நீயும் சாப்பிடுகிறாயா? கேட்கிறானா?
ஆமா மா நீ சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி அவன் மேல் புகார் சொல்வேன் சொன்ன பிறகு அவன் உன்னை சாப்பிடலாம் என்று உபசரிப்பான் என்று மனசாட்சி டுவிட் அடிக்க.
அப்போது தான் தனது அலைபேசி ரிங்டோன் சத்ததில் தனது தோழிகள் தான் அழைக்கிறார்கள் என்று இப்போது கால் அட்டென் செய்து நான் இரயிலில் தான் இருக்கிறேன். அதனால் பயப்படாதீங்க டி அடுத்த ஸ்டேசனில் இறங்கி வருகிறேன்.
கவிநயா போனை வாங்கியவள். சேப்பா இருக்கிறாயா? தெரியாத நபர்களை நம்ப முடியாது டி நீ எந்தப் பெட்டியில் இருக்கிறாய்? நாங்கள் அங்கே வருகிறோம்.
கோபி நந்தன் அவளிடமிருந்து போனை வாங்கியவன். ஏய் எல்லாரும் அங்கேயே இருங்கள். அவள் இங்கே நான் இருக்கும் இடத்தில் தான் இருக்கிறாள். நான் ஒன்றும் அவளைக் கடித்து தின்று விட மாட்டேன்.
அவர்கள் இவன் குரலை வைத்து கண்டு கொண்டனர். போனில் கையை வைத்து மறைத்துக் கொண்டு முசுடு டி பேசறது. இவள் அங்கே தான் இருக்கிறாள்.
என்று மற்ற இருவருக்கு சொல்லி விட்டு இப்போது அவனிடம் சார் அது எப்படி அவளைத் தனியாக விடுவது நாங்கள் அங்கே வருகிறோம்.
சரியான குரங்குகள் ஏதாவது பேச விடுதுங்களா? என்று சலித்தவன், ஒருத்தன் சொல்கிறான் என்றால் புரிந்து கொள்ள வேண்டும். லூசு மாதிரி கூடக்கூட பேசாதீர்கள். உங்கள் கம்பார்ட்மெண்டில் இருந்து இங்கே வர வேண்டும் என்றால் இடையே ஒரு கம்பார்ட்மெண்ட் இருக்கிறது. அதில் இருப்பவர்கள் எல்லாம் வடக்கன்கள் பீர் பாட்டில் தான் கையில் இருந்தது.
சாதரணமாக இருப்பவர்களையே நம்ப முடியாது. இந்த லட்சணத்தில் போதையில் இருப்பவன் என்ன வேண்டும் செய்வான். அதனால் எங்கு இறங்க வேண்டும் அந்த ஸ்டேஷன் வரைக்கும். அதே பெட்டியில் இருங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்தான்.
பூவிழிக்கு இப்போது தான் அவன் ஏன் தன்னைப் போக வேண்டாம்
சொன்னான் என்று நினைத்து அமைதியாக இருந்து கொண்டாள்.
அவன் பாதி சாப்பாடு தான் சாப்பிட்டான். மீதியை இவளுக்கு கொடுத்தான்.
இவன் சாப்பிட்ட எச்சையை கொடுக்கிறான். நான் என்ன இவன் பொண்டாட்டியா? என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
என்ன? பார்க்கிறாய்? என் வாயையவே பார்க்கிறாய்?? எனக்கு வயிறு வலிக்குமே அது தான் கொடுத்தேன். உனக்கு வேண்டாமா?? என்று கேட்டுக் கொண்டே அவன் சாப்பிட ஆரம்பிக்க இவள் எச்சில் விழுங்குவது தொண்டையில் இறங்குவது அப்படியே தெரிந்தது.
குள்ளச்சி பார்வையே சரியில்லை என்று இப்போது அவளிடம் சாப்பாட்டைக் கொடுத்தவன். அவள் கையில் இருந்த கரும்பு ஜூஸ் பிடிங்கிக் கொண்டான்.
பிரியாணி தான் முக்கியம் பங்கு எச்சி எல்லாம் இல்லை அவள் தான் பார்த்துக் கொண்டு இருந்தாலே அவன் அந்தப் பாக்ஸின் மூடியில் தனியாக எடுத்து வைத்ததை, அதனால் பிரியாணி தான் முக்கியம் என்று இப்போது மட்டன் பீஸோடு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு இருந்தாள்.
எத்தேச்சையாகத் திரும்பியவள் அப்போது தான் பார்த்தாள், கோபி நந்தன் கரும்பு ஜூஸ் எடுத்து குடித்துக் கொண்டு இருந்ததை, அதைப் பார்த்து விக்கித்து விட்டது.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்ததே இந்த கரும்பு ஜூஸ் வாங்கித் தான் அதை எவ்வளவு கூலாக குடிக்கிறானே என்று அவனிடம் சண்டைக்குச் சென்றால் தன் கையில் மட்டன் பிரியாணி இருக்க அவனிடம் பிடுங்கப் போனவள் அவனது ஒயிட் சர்ட்டில் டிசைன் போட்டு விட்டாள்.
இந்தக் கோபக்கார கோவிந்தசாமி என்ன செய்யப் போகிறானோ??
தொடரும்...