Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 117
- Thread Author
- #1
தவறுகள் பிழை அல்ல
அஞ்சு மாடி கட்டிடத்தின் வகுப்பறையின் உள்ளே அமர்ந்திருக்கும் போது தான் ரமணனுக்கு முகநூல் பக்கத்திலிருந்து ஹாய்… என்று மெசேஜ் வந்தது. கோடை விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து, பாதி நேரம் சும்மாவே நேரம் கழிந்து கொண்டிருந்த நேரம் தான் அது.
மெசேஞ்சர் பக்கம் சென்று திரும்பவும், மெசேஜ் வர ரமணனுக்கு ஹ ஆர் யூ ன்னு ..மெசேஜ் அனுப்பினான். முகநூல் பக்கம் சென்று புகைப்படத்தை பார்க்கும் போது இரண்டு குழந்தைகள் படமாக இருக்க, அதில் ஒன்று பெண் குழந்தை , மற்றொன்று ,ஆண் குழந்தை, சொல்லப்போனால் ஆறாவது படிப்பார்கள்.
திரும்பவும் அவனுக்கு மெசேஜ் வந்தது.
ஹூ ஆர் யூ ன்னு அனுப்பினான்.
பதிலுக்கு ஈஸ்வரின்னு பதில் வந்தது .
ரமணன் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தான். ஈஸ்வரி என்ற பெயரில் இதுவரை யாருமே தெரியாது. யாராக இருக்கும் தெரியலன்னு பதிலை போட்டான்.
திரும்பவும் மெசேஜ் வர உற்றுப் பார்த்தான்.
பாண்டீஸ்வரி பெயர் வந்தது .
செல்போனை மேஜையின் மீது வைத்து விட்டு அமைதியாக இருக்க ,பக்கத்தில் இருந்த வேதியியல் சார்.. என்னங்க சார்.!
ஏதோ யோசனை பண்ற மாதிரி இருக்கு .
அப்படியெல்லாம் இல்லைங்க சார் ..
இரவு தூங்கல அதுதான்
அப்படி இருக்கு. உங்களுக்கு அப்படி தெரியுது சார் .
ரமணன் தான் சொந்த ஊரான தேனூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதுதான் பாண்டீஸ்வரி பார்த்தான்.
வேப்ப மரமும் , புளிய மரமும் நிறைய இருந்த பள்ளியில் பெரும்பாலும் வகுப்புகள் மரத்தடியில் தான் நடக்கும். கணித பாடம் நடத்தப்படும் போதும் மட்டும் ஆசிரியர்கள் வகுப்பறையை பயன்படுத்தி கொள்வார்கள் .
ரமணன் தேசிய மாணவர் படையில் செகண்ட் இயர் புதன், சனி இரு நாட்களிலும் காலை , மாலை இருவேளைகளில் பரைடு நடக்கும்.
அவளும் அவனைப் பார்த்து சிரித்து விட்டு செல்வாள். இருவரும் ஒரே தெரு, அவளது வீட்டை தாண்டித்தான் அவனது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
காலை , மாலை பள்ளிக்குப் போகும் வேளையில் அவளை பார்ப்பான். அவள் வீட்டிற்கு வெளியே நின்று தலைவாரி கொண்டிருப்பாள்.
வெள்ளை அடித்தது போல் இருந்தது வீடு. சில நேரங்களில் ஸ்கூல் சுடிதாரை போட்டு வெளியே நிற்பாள். கோழியின் கருமுட்டை போல அவளது கண். தேங்காய் கணுக்களை போன்ற அவ்வளவு கொங்கை. பார்ப்பதற்கு குட்டையாக இருந்தாள்.
அவளது கூந்தல் இடைக்கு கீழே பரவி இருந்தது. ரமணன் பள்ளி போகும் நேரங்களில் அவளையே பார்த்துவிட்டு செல்வான்.
பள்ளிக்குச் சென்ற பொழுதும், சில நேரங்களில் மதிய இடைவேளை, அவளை பார்ப்பான் . அவனுக்கு ஊரில் பாதிப்பேர் என்ன உறவு வேண்டும்.
யாரு ?
சொந்தமா, பந்தமா .. அவர்களை எப்படி கூப்பிடுவது கூட தெரியாது. .அவன் வளர்ந்த சூழ்நிலையும் வேறு மாதிரியானது . சூழ்நிலை தான் ஒருவனை தீர்மானிக்கப்படுகிறது என்பதை பெரும்பாலான மனிதர்களின் நிதர்சனம். ரமணன் பா ண்டிஸ்வரியை பார்க்கும் போதெல்லாம் அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்துக் கொண்டே இருக்கும். பெரும்பாலும் தூரத்திலிருந்து அவனுடைய காதல் மலர்ந்தது.
மனம் ஓரளவு தான் பொறுமையுடன் இருக்கும், பொங்கி விட்டால் அவ்வளவுதான்.
காலையில் பள்ளி செல்லும் முன்புதான் பார்த்தான் .அவள் வீட்டில் உள்ளே இருந்தால் வெளியே அவள் அம்மா என்று பக்கத்தில் நின்ற நரம்பி ஆத்தாளிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு வரும் பொழுது தான் பேசிவிடாமலே போய்விடும். வீட்டில் படுத்து நன்றாக மனனம் செய்து வந்தான் .காதலை கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தான். அன்று தான் அவன் மனம் நிம்மதி அடைந்தது.
வீட்டின் நிழக்கதவு முன் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்து விட்டான். அக்கம் , பக்கம் பக்கத்தில் ஒரு சனம் கூட இல்ல. நேராக சென்று நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லிவிட்டு வந்து விட்டான். அதன் பிறகு அவள் ரமணனுக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை.
ரமணன் வீட்டில் பக்கத்தில் பாண்டிஸ்வரி உடன் படித்த , குண்டு லட்சுமி இருந்தாள்.
இருவரும் ஒரே வகுப்பு . குண்டு பாண்டீஸ்வரிகிட்ட சொல்லியிருப்பாள் போல. ரமணன் வீட்டில் இருந்து வெளியே வரும் போது தெருவில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த குண்டு லட்சுமி சாடையாகச் சொல்வதை கேட்டான்
.பங்காளி முறை கூட தெரியாம, அந்த பொண்ண லவ் பண்ணி இருக்கான்.
காதலன்னா ஒரு உறவு முறை வேண்டாமான்னு சொல்வது போல் அவன் காதில் வந்து விழுந்தது. காதல் யார் மேலேயும் வரலாம் .அது உணர்வு மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரும் ஒரு சட்டத்துக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள்.
சொல்லப்போனால் ஒரு அமைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அவ்வளவே…
இந்த அமைப்பு எப்பொழுதும் உடையும் என்று யாருக்கும் தெரியாது. உடைந்ததால் சமூகம் ஏற்றுக் கொள்ளாது .
தமிழ்ச் சமூகம் செல்ல வேண்டிய தூரம் பெரியது. பக்குவம் பெரியது . அவ்வளவுதான் இந்த உலகம். ரமணன் தன் விருப்பத்தை அவன் மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறான்.
பத்து வருடங்களுக்கு கடந்து தற்போது முகநூலில் ரமணன் ஐடியை பார்த்தவாறு மெசேஜ் அனுப்பி இருக்கிறாள் பாண்டீஸ்வரி .
நல்லா இருக்கீங்களா…
நல்லா இருக்கேன்.
நீ!
எப்படி இருக்க என்றான்
இருக்கேன் .
ஏதோ என்றாள்
திருமணம் முடிச்சிட்டியா என்றாள். இன்னும் முடிக்கவில்லை.
எந்த ஊர்ல என்றான்.
நம்ம பக்கத்து ஊர்ல தான் மல்லிகாபுரம். இரண்டு குழந்தைகள் இருக்கு . எந்த ஊர்ல என்றான். வீட்டுக்காரரு என்ன பண்றாரு! பழையபுரத்தில் பெரிய மில்ல இருந்துச்சு இல்ல , அங்க தான் டிரைவரா இருக்காரு.
சம்பளம் என்றான் ..
வெறும் பத்தாயிரம் ரூபா , ரெண்டு பிள்ளைகளை வைத்து ஒன்றும் பண்ண முடியல . நானும் துணி தைக்கக போறேன் .
என்ன பண்ண! ஆனா உன்ன மட்டும் நான் ரொம்ப மிஸ் பண்றேன் டா …
நான் தான் அப்பவே சொன்னேன் இல்ல என்றான் .
என்னன்னு கேட்டான் .
லவ் பண்றேன்னு .
ஆமா ,அப்ப எனக்கு தெரியலப்பா … நீ என்ன பண்ணுற …
ஸ்கூல்ல வாத்தியார் வேலையா !. எங்க.
நாமக்கல்
என்ன சம்பளம் வாங்குற .. வாங்குறேன் .ஏன் கேக்குற
இல்ல சும்மாதான் கேட்டேன்.
என்ன எப்ப லவ் பண்ணுறயா இல்லன்னா இல்லன்னு சொல்லு .. ஆமான்னு சொல்லு அப்ப பண்ணல இப்ப பண்ணனும்னு தோணுது. பட் இப்ப லவ் பண்றேன் உன்ன சரியா என்றாள். அப்ப எல்லாம் தோணாது இப்போ மற்றும் தோணுதா ..அதான் நான் சொன்னேன் இல்ல அப்ப தோணல , எனக்கு தெரியல உன்னை மிஸ் பண்ணிட்டேன்.
இப்படியே ஜனவரி தொடங்கி மார்ச் வரை காலங்கள் ஓடின.
பாண்டீஸ்வரி திடீரென்று வாட்ஸ் ஆஃப் பாக்கு மெசேஜ் வந்தது.
ஹாய்..
சொல்லு என்ன பண்ற கேட்டாள்.
இருக்கேன் என்றான்.
வாட்ஸ்ஆஃப் இருந்து நிறைய போட்டோ செல்லுக்கு வந்தது. என்ன இது என்றான். பாட்டு ஏன்!!
பாட்டு உனக்கு பிடிக்காதா!
பிடிக்கும் அதுக்காக வேண்டி ஒரேதா பார்த்தா அனுப்பிவிட்டு இருக்கிறாயே…
சரி …
உன் போட்டோ அனுப்பு நான் பாக்கணும் என்றான்.
ஐந்து நிமிடத்தில் போட்டோவை அனுப்பினாள்.
ரமணன் பார்த்த, பள்ளி பாண்டிஸ்வரி யை குண்டாக மூக்குத்தி குத்திருந்தாள். ஆளை அடையாளம் தெரிய வண்ணம் இருந்தாள் .
ஆனால் சேலையில் ரொம்பவும் அழகாக இருந்தாள் .
என்பதுதான் உண்மை . இரவு ஒன்பது மணிக்கு மேல் தெனமும் மெசேஜ் செய்வாள். பெரும்பாலும் அதில் காதல் பாடல்களை வரும்.
ஏன் …சும்மா மெசேஜ் செய்ற … ஒரு ஹாய், கால் பண்ணி பேச மாட்டியா !என்றான். ரமணன்.
நெட்வொர்க் மட்டும் தான் போட்டு இருக்கிறேன். அதுதான் மெசேஜ் பண்றேன் நேத்து கால் பண்ணுனா எடுக்கல நீ என்றான். பாப்பாங்க வச்சிருந்தாங்க
சரி ..
நான் ஊருக்கு வந்தேன் . அதுதான் உனக்கு கால் பண்ண நீ எடுக்கல ரொம்ப வெயிட் பண்ணி பார்த்தேன் .செல்ல வீட்ல வச்சுட்டு வாய்க்காலில் துணி துவைக்க போயிருந்தேன்.
அதுதான் பாக்கல..
இப்பதான் வந்து பார்த்தேன்.
என்னை லவ் பண்ணுறயா என்றான் .
ஏன் !
சும்மா சும்மா அதே கேக்குற அப்படி என்றால் என்னை கல்யாணம் பண்ணிக்க என்றான்.
கல்யாணமெல்லாம் பண்ண முடியாது மாமா .
இப்படித்தான் இருக்க முடியும் .
உனக்கு நான் இருப்பேன். வாழ்க்கையில் அன்பை மட்டும் வைத்து நீங்கள் ஒன்றும் செய்து விட முடியாது.
வாழ்வதற்கு , பொருளும் தேவை, அந்த பொருளும் ,பணமும் எங்கே கிடைக்கிறதோ மனம் இலகுவாக அங்கே சென்று விடுகிறது.
இரண்டு நாள் கழித்து அவனுக்கு மெசேஜ் செய்தாள். மாமா இன்னைக்கு கண்டிப்பா பீஸ் கட்டணும்.
மாமா …
என்ன பண்றதுன்னு தெரியல.
நீ கொஞ்சம் இருந்தா எனக்கு போட்டு விடுறேயா..
நீ
அக்கவுண்ட் நம்பர் கூட அனுப்புறேன்.
வாட்ஸ் அப்ல போட்டோ எடுத்து அனுப்பி விடுறேன். பாண்டீஸ்வரி அவளுடைய வலிகளை சொல்லிக் கொண்டே இருந்தாள்.
ரமணன் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவே இல்லை. பற்றாக்குறைக்கு கால் வேற செய்தாள். அவன் எடுக்கவே இல்லை. அவன் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்று கொண்டே இருந்தான் .பேருந்து வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது . பேருந்தின் உள்ளே அழகான பாட்டு கேட்டுக் கொண்டே இருந்தது.
ஏதும் பந்தம் பாசம் எல்லாம் வெளி வேஷம்.