• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

SS26 - "இதயத்தின் இரண்டாம் ராகம்" குறுநாவல் போட்டி அறிவிப்பு!

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
983
வணக்கம் நட்புகளே!

நம் தளம் ஆரம்பித்து, இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகிறது. மூன்றாம் வருடம் ஆரம்பமான இன்று, மீண்டும் அடுத்த கதை போட்டியுடன், உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். தளத்தில் பிரச்சனை இருந்ததால், கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது. இதோ, மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

SS-26 - "இதயத்தின் இரண்டாம் ராகம்" குறுநாவல் போட்டிக்கு உங்களை வரவேற்கிறேன்.

"இதயத்தின் இரண்டாம் ராகம் - மறுமணக் கதைகள்!"

தலைப்பே நமக்குப் பல கதைகள் சொல்லும். நீங்களும் பல கதைகள் கொடுக்கலாம்.

போட்டிக்கான விதிமுறைகள் 👇👇👇

1. போட்டிக்காலம் செப்டம்பர் - 15 முதல் டிசம்பர் - 31 வரை. போட்டிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது.

2. குறுநாவலுக்கான வார்த்தை அளவு 25,000 வார்த்தைகள் முதல் 35,000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.

3. நீங்கள் எழுதும் கதை, தலைப்போடு ஒத்துப்போக வேண்டும். அதாவது, மறுகாதல் கிடையாது. மறுமணம் பற்றி கதைகள் இதில் இடம்பெற வேண்டும்.

4. கதையின் முடிவு சுபமானதாக இருக்க வேண்டும். சோகமான முடிவில், இதற்கு இது சரியான முடிவென்று, அனைவரையும் கவலைப்பட வைக்கும் எண்ணம் இருந்தால் வைக்கலாம்.

5. காதல் கதைதான் என்றாலும், எல்லை மீறிய வார்த்தைகளையோ, காட்சிப்படுத்துதலையோ தவிர்க்க வேண்டும்.

6. எழுத்துப் பிழைகள், சந்திப்பிழைகள் சரியாக இருக்க வேண்டும். அத்துடன் வாக்கிய முடிவின் பின் தொடர் புள்ளிகள் வைப்பதை முடிந்தளவு குறைக்கவும்.

7. எத்தனை கதை எழுதலாம் என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

8. இங்கு போட்டப்படும் கதை, இதற்கு முன் வேறு எங்கும் பதிவிட்டிருக்கக் கூடாது.

9. பெயரை மறைத்து எழுதுவதோ, அல்லது நேரடியாக எழுதுவதோ உங்கள் விருப்பம்.

போட்டி முடிவுகள்:
எழுத்தாளர்களுக்கு:

1. போட்டியின் முடிவில் மூன்று கதைகள் தேர்ந்தெடுக்கப்படும்.

2. முதல் பரிசு பெறும் வெற்றியாளருக்கு, 10 கிராம் வெள்ளி நாணயமும், இரண்டாம் பரிசு பெறும் வெற்றியாளருக்கு, 5 கிராம் வெள்ளி நாணயமும், மூன்றாம் பரிசு பெறும் வெற்றியாளருக்கு, 5 கிராம் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படும்.

வாசகர்களுக்கு:

சிறந்த விமர்சனம் கொடுக்கும் வாசகர்கள் மூவருக்கு, வரலாற்றுப் புதினம் புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

எழுத விரும்புவோர்:
sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும். இல்லையெனில் எனது முகநூல் இன்பாக்ஸில் தெரிவிக்கவும்.

நட்புடன்


சொர்ணா சந்தனகுமார்

SS26_website_1200x1200.webp
 
Last edited:
Active member
Joined
Jun 3, 2025
Messages
733
தளத்திற்கு ஆப்பி பொறந்தடே அக்கா 😜😜🤭🤭🤭🤩🤩🤩🥳😍😍😍🥳💐💐💐💐வெள்ளியை அப்படியே தங்கமாக மாற்றினால் என்ன என்று பரிசீலனை செய்யவும் அட்மின் அவர்களே 🤭🤭🤭🤭🥳🥳🥳😍😍😍...

புதிய போட்டிக்கு வாழ்த்துகள் அக்கா🤝🤝🤝🤝🤗🤗🤗🤗😍😍😍

இரண்டாம் ராகம் தானே இசைத்திட வேண்டிய தான்😁😁😜😜😜.. எடுடா அந்த பேனா நோட்டை 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
983
தளத்திற்கு ஆப்பி பொறந்தடே அக்கா 😜😜🤭🤭🤭🤩🤩🤩🥳😍😍😍🥳💐💐💐💐வெள்ளியை அப்படியே தங்கமாக மாற்றினால் என்ன என்று பரிசீலனை செய்யவும் அட்மின் அவர்களே 🤭🤭🤭🤭🥳🥳🥳😍😍😍...

புதிய போட்டிக்கு வாழ்த்துகள் அக்கா🤝🤝🤝🤝🤗🤗🤗🤗😍😍😍

இரண்டாம் ராகம் தானே இசைத்திட வேண்டிய தான்😁😁😜😜😜.. எடுடா அந்த பேனா நோட்டை 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
தங்கம் வாங்க பணம் கொஞ்சம் கம்மியா இருக்கு. இல்லன்னா வாங்கிக் கொடுத்துருவேன். தங்கம் ஒரு கிராம் ரூ.15,567 இருக்கு. எனக்கு 15,566 தேவைப்படுது. நீயும் கொஞ்சம் உதவி செய்தால் நல்லாயிருக்கும். :)
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
733
தங்கம் வாங்க பணம் கொஞ்சம் கம்மியா இருக்கு. இல்லன்னா வாங்கிக் கொடுத்துருவேன். தங்கம் ஒரு கிராம் ரூ.15,567 இருக்கு. எனக்கு 15,566 தேவைப்படுது. நீயும் கொஞ்சம் உதவி செய்தால் நல்லாயிருக்கும். :)
போதுமா தாயி🤭🤭🤭🤣🤣😁😁 யார்கிட்ட கேக்குறீங்க தங்கச்சி கிட்ட தானே கேக்குறீங்க அப்புறம் சேதாரம் செய்கூலி இருக்கு சேர்த்து கேளுங்க அக்கா 🤣🤣🤣🤣😜😜😍😍😍😁😁😁. ..
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
983
போதுமா தாயி🤭🤭🤭🤣🤣😁😁 யார்கிட்ட கேக்குறீங்க தங்கச்சி கிட்ட தானே கேக்குறீங்க அப்புறம் சேதாரம் செய்கூலி இருக்கு சேர்த்து கேளுங்க அக்கா 🤣🤣🤣🤣😜😜😍😍😍😁😁😁. ..
ஆமாடா. அதை மறந்துட்டேன் பாரேன். இருந்தாலும் உன்னை அதிகம் தொந்தரவு பண்ணக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், கடன் வாங்கினாலும் அதை நானே பார்த்துக்குறேன்.:D:D:D
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top