Administrator
- Joined
- Sep 3, 2024
- Messages
- 117
- Thread Author
- #1
வணக்கம் நட்புகளே!
அடுத்த போட்டிக்கதை அறிவிப்புடன் வந்திருக்கிறேன்.
SS25 - 'திக் திக் திக்' சிறுகதைப் போட்டி.
ஆமாங்க! திக் திக் திக் தான், நம்ம தலைப்பு.
போட்டிக்காலம் – மார்ச் 5 முதல் ஏப்ரல் 5, 2025 வரை.
போட்டிக்கான விதிமுறைகள்.
1. போட்டிக் காலம் - வரும் மார்ச் 5 முதல், ஏப்ரல் 5/2025 வரை.
2. வார்த்தை அளவு: 1,700 முதல் 2,000 வார்த்தைகள் மிகாமல் இருக்க வேண்டும்.
3. கதைக்கரு: அமானுஷ்யம், க்ரைம், சைக்கலாஜிக்கல், ஆன்மீகம், பேய்க்கதை, மெடிக்கல், இவற்றுள் ஒன்றை அடிப்படையாக கொண்ட, திரில்லர் கதைகளாக இருக்க வேண்டும். (Horror, Crime thriller, Psychological thriller, Supernatural thriller, Medical thriller.)
4. கதைகருவுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறீங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு, லாஜிக், திகில் சரியா இருக்கணும். இம்மூன்றையும் அடிப்படியாக கொண்டே கதைகளே தேர்ந்தெடுக்கப்படும்.
5. எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும். கதையைத் தேர்ந்தெடுக்கும் போது, இதுவும் பார்க்கப்படும். கமா, கொட்டேஷன், முற்றுப்புள்ளி இதெல்லாம் சரியாக இருக்க வேண்டும்.
6. போட்டிக்காலம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது. ஏப்ரல் 5 க்குள் உங்கள் சிறுகதைகளை தளத்தில் பதிவேற்றம் செய்துவிடவும்.
7. இங்கு போடப்படும் சிறுகதைகள், இதற்கு முன் வேறெங்கும் பதிவிடப்பட்டிருக்கக் கூடாது.
போட்டி முடிவுகள்:
1. போட்டியின் முடிவில் 5 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும்.
2. தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள், ஒன்றாகத் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளியிடப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு, அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
போட்டியில் பங்கு பெற விரும்புபவர்கள், உங்களின் பெயர் விவரங்களுடன், sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான திரி அமைத்துக் கொடுக்கப்படும்.
தளத்தில் எவ்வாறு பதிவு செய்வது, மற்றும் கதைகள் பதிவிடுவது பற்றிய விவரங்கள், கீழே உள்ள லிங்கில் உள்ளது.
How to Register in Site - Click Here
How to Post Stories - Click Here
போட்டியின் முடிவு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும்.
நட்புடன்
சொர்ணா சந்தனகுமார்.
Last edited: