• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

பூமாலை தோள் சேர்ந்தது 25

Active member
Joined
Jun 3, 2025
Messages
689
"பாதுகாப்பாக சாமிகண்ணுவை கொண்டு வந்து கஸ்டடியில் வைத்த மித்ரன், நாளைக்கு என்னோட சிஸ்டர் கல்யாணம் முடிஞ்ச பிறகு நான் நேரா டெல்லிக்கு வந்துடுறேன் நீங்க கூப்பிட்டு அங்க போயிடுங்க எதா இருந்தாலும் வந்து பேசிக்கலாம் என்றவனோ அடுத்த பிளைட்டில் பிடித்து மீஞ்சூருக்கு வந்து சேர விடியற்காலை ஆனத.

அதிகாலையிலே மண்டபம் முழுவதும் மல்லிகைப் பூக்களின் வாசனையும், நாதஸ்வரத்தின் மங்கல இசையும் நிறைந்திருந்தது. மேடை முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தேவதூதர்கள் வந்து செல்லும் இடத்தைப் போலக் காட்சியளித்தது.

சந்தன நிறப் பட்டு வேட்டிச் சட்டையில், தோளில் ஜரிகை அங்கவஸ்திரம் துலங்க, கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருந்த விக்ரம் பெற்றோர்களுக்கான பாத பூஜையை அவனது தாத்தா பாட்டிக்கு செய்ய, இருவரின் கண்ணிலிருந்து சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.

அடுத்ததாக மிருதுளாவை வரச்சொல்ல, விக்ரமின் கண்கள் மட்டும் அடிக்கடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன.

சற்று நேரத்தில், தோழிகள் சூழ மிருதுளா மெதுவாக மேடையை நோக்கி வந்தாள். விக்ரம் தேர்ந்தெடுத்த அதே முத்து வெள்ளை மற்றும் சிவப்பு பார்டர் பட்டுப் புடவையில் அவள் நடந்து வரும்போது, ஒரு கவிதை நடந்து வருவது போல இருந்தது. அவளது முகத்தில் இருந்த அந்தப் புதிய நாணமும், கண்களில் இருந்த மெல்லிய ஈரமும் அவளை இன்னும் அழகாக்கின.

விக்ரம் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது ரசனை வீண் போகவில்லை. அந்தப் புடவையில் அவள் உண்மையிலேயே ஒரு மகாராணி போலத் தெரிந்தாள்.

மிருதுளா மேடைக்கு வந்து விக்ரமின் அருகில் அமர்ந்தாள். அக்னி குண்டத்தில் இருந்து கிளம்பிய புகை, அந்த இடத்தையே ஒரு தெய்வீகச் சூழலாக மாற்றியது.

விக்ரம் அவள் பக்கம் லேசாக சாய்ந்து, மெல்லிய குரலில், "தூங்குனியா? கண்ணு கொஞ்சம் சிவந்திருக்கு," என்றான் அக்கறையுடன்.

மிருதுளா அவனைப் பார்த்து ஒரு புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தாள். அந்தப் புன்னகையில் "உங்களை நினைத்துக் கொண்டிருந்தால் எப்படித் தூக்கம் வரும்?" என்ற கேள்வி ஒளிந்திருந்தது.

மற்ற சடங்குகள் முடிந்ததும் தாலியை எடுத்து போய் ஆசீர்வாதம் வாங்கி வரச்சொல்ல, குமாரி வாங்கிட்டு போய் மண்டபத்தில் இருந்தவர்களிடம் காட்டி எடுத்து வந்து கொடுக்க...

மேடையில் நின்று கொண்டு இதை பார்த்துக் கொண்டிருந்த தினேஷுக்கு கண்கள் கலங்கியது. தனது தங்கையும், மைத்துனரும் இந்த இடத்திலிருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவருக்குள் வராமல் இல்லை.

ஐயரும் "மாங்கல்யம் தந்துநானேனா..." என்று மந்திரங்களை முழங்கினார்.

விக்ரமும் தாலியை எடுத்து மிருதுளாவின் கழுத்தில் கட்டிய அந்த நொடி, மிருதுளா மெல்லக் கண்களை மூடிக்கொண்டாள். சில மாதங்களுக்கு முன்பு வரை, "இவன் யாரோ?" என்று நினைத்து அழுதவளுக்கு, இன்று அவனே தன் கழுத்தில் தாலி கட்டுகிறான் என்பதை நினைக்கும் போது அவள் உடல் சிலிர்த்தது.

மூன்று முடிச்சுகள் இட்டதும், ஐயர் சொல்லிக் கொடுத்தது போல விக்ரம் அவளது நெற்றியில் குங்குமம் வைத்தான். அந்த ஒரு நொடியில், இத்தனை வருட காலப் பயம், தவிப்பு, ஏக்கங்கள் அனைத்தும் மறைந்து, அந்த இடம் பேரமைதி கொண்டது.

அட்சதை தூவி அனைவரும் வாழ்த்திய பிறகு, இருவரும் அக்னியை வலம் வந்தனர். அப்போது விக்ரம் மெதுவாக மிருதுளாவின் காதருகே குனிந்தான்.

"நான் சொன்னேனே... அந்த நிலா இன்னைக்கு என் கைக்கே வந்துடுச்சுன்னு!"

மிருதுளா அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள். "இன்னைக்கு நான் உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமான பொண்ணு . நம்ம காதலை இவ்வளவு அழகாச் சேர்த்து வச்ச அந்தப் பெரியவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்," என்றாள்.

மேடைச் சடங்குகள் முடிந்து இருவரும் அம்மி மிதிக்கச் சென்றனர். விக்ரம் அவளது கால்களைத் தொட்டு மெட்டி அணிவிக்கும் போது, மிருதுளாவின் கண்கள் மகிழ்ச்சியில் மீண்டும் பனித்தன.

"இனி உன் வாழ்க்கை முழுக்க நான் தான் துணையா இருப்பேன்" என்று விக்ரமின் பார்வை சொல்ல, "நீங்களே போதும் எனக்கு" என்று அவளது புன்னகை பதில் சொன்னது.

மச்சான் என்று பரத் மைக்கை தூக்கிப் போட, அதை கேட்ச் பிடித்த விக்ரம் "பூமாலையே தோள் சேரவா
பூமாலையே
ஏங்கும் இரு தோள்
தோள் சேரவா
வாசம் வரும் பூ
பூமாலையே
ஏங்கும் இரு தோள்
தோள் சேரவா
வாசம் வரும் பூ
நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே என்று விக்ரம் பாடவும் அவனது குரலில் மிருதுளா மெய்மறந்து நிற்க, அடேய் மச்சான்... அதான் பூமாலை தோள் சேர்ந்தது டா... இன்னும் எதுக்கு இந்த வயலின் வாசிக்கிற என்று மித்ரன் கேட்க, அந்த இடமே சிரிப்பு வெள்ளத்தில் மிதந்தது.

பின்னர் சொந்த பந்தங்கள் எல்லாம் மேடைக்கு வந்து சீர்வரிசை செய்து விட்டுப் போக, வாங்க வாங்க குரூப் போட்டோ எடுக்கணும் என்று எல்லாரையும் ஒன்று சேர்பதற்குள் பரத்திற்கு நாக்கு தள்ளியது.

முதலில் பெரியவர்கள் உட்கார சேர் போட, அதில் முதிய தம்பதிகளான, வேலன்-சுந்தரி, சுந்தர மூர்த்தி- வசு இவர்கள் நடுவில் உட்கார, சந்திரன் சுரேகா, சுரேந்தர்-உமா, தினேஷ்-குமாரி, கமலியின் அப்பா அம்மாவான திலக்- மீரா இரண்டு பக்கமும் உட்கார, அவர்களுக்கு பின்னாடி புதுமண தம்பதிகள் நடுவில் நிற்கவும், பரத்- கமலி, மித்ரன் தனது மகனை தூக்கிக்கொண்டு ரேகாவின் தோளில் கை போட்டிருக்க, ரெடி... எல்லாரும் கேமராவை பாருங்க ஸ்மைல் ப்ளீஸ். .

ஒன்..

டூ...

திரி... என்றவாறு அந்த குடும்பத்தை அழகாக படம் பிடித்தார்.

முற்றும்
 
Active member
Joined
May 9, 2025
Messages
170
White and red is the combination for the wedding in Andhra but in Tamilnadu, white color is not the one for marriage,
Why is the story a short one,looks like abrupt ending
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
689
White and red is the combination for the wedding in Andhra but in Tamilnadu, white color is not the one for marriage,
Why is the story a short one,looks like abrupt ending
இது சின்ன கதையாக தான் பிளான் பண்ணினேன் 😁😁😁தூய வெள்ளை இல்லை முத்து கோல்டன் கலந்த போல இருக்குமே அது🤩🤩🤩இறுதிவரை வாசித்து விமர்சித்தமைக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள் பல மா🤝🤝🤝🤝🤝
 
Active member
Joined
May 9, 2025
Messages
170
இது சின்ன கதையாக தான் பிளான் பண்ணினேன் 😁😁😁தூய வெள்ளை இல்லை முத்து கோல்டன் கலந்த போல இருக்குமே அது🤩🤩🤩இறுதிவரை வாசித்து விமர்சித்தமைக்கு எனது இதயம் நிறைந்த நன்றிகள் பல மா🤝🤝🤝🤝🤝
Thanks for your reply
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top