Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 648
- Thread Author
- #1
நான்கு வருடங்களுக்கு பிறகு...
ஏய் மிதுளா நில்லு டி..இரு டி எங்கப்பா கிட்ட சொல்லுறேன் என்று தனது மழலை மொழியில் சொல்லியவாறு தனது அத்தையை துரத்திக் கொண்டிருந்தான் மித்ரன் - ரேகாவின் மூன்று வயது புதல்வன் ருத்ரன்.
கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் கூத்து என்பதால் வீட்டிலிருந்த மற்ற எல்லாரும் இவர்களை கண்டுகொள்ளாமல் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
படியிலிறங்கி ஓடி வந்த மிருதுளா ஹேய் பப்பிஷேம் என்றவாறு டைனிங் டேபிளின் கீழ் ஒளிந்து கொள்ள, அதைக் கேட்ட சின்னவனோ பாட்டி என்று அழுதுகொண்டே அங்கிருந்த உமாவை கட்டிக்கொண்டவன் இவள் என்னை பப்பிஷேம் சொல்லிட்டு இருக்கா பேட் கேர்ள் இவளை அடிங்கனு அழுதான்.
அச்சோ...
என் அப்பு குட்டி எதுக்கு அழுறாங்க?
தாத்தா வரட்டும் அத்தையை பிச்சி எடுத்துடலாம் என்றவாறு பேரனின் கண்களை துடைக்க, ம்ம் அப்படியே முடியை புடிச்சு பிக்க சொல்லுனு தேம்பிக் கொண்டு சொல்லும் அண்ணன் மகனை பார்த்த மிருதுளாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.
ஒருவராக பேரனை சமாதானம் பண்ணிய உமா, குட்டிமானு பல்லை கடிக்க, பொறுமையாக எழுந்து வந்தவள் ஹேய் அப்பு குட்டி யென அண்ணன் மகனின் முன்பு கைகளை நீட்ட போடி யென்று தட்டி விட்டவன் தனது பாட்டியை இறுக்கி கட்டிக் கொண்டான்.
ஓகே...
வரலைனா போகட்டும்.
சரி மா நான் ஐஸ்கிரீம் சாப்பிட போறேன் என்கவும் அதைக் கேட்ட சின்னவன் வேகமாக தனது பாட்டியிடமிருந்து இறங்கிப் போய் தனது அத்தையின் கால்களை கட்டிக்கொள்ள, குனிந்து தூக்கியவள் செல்ல குட்டி என்றவாறு அவனது பிஞ்சு கன்னத்தில் முத்தமிட்டாள்.
இரண்டு நாட்கள் தனது வீட்டினருடன் இருந்தவள் மாலா அக்காவை அழைத்துக்கொண்டு டிரான்ஸ்பர் ஆகியிருக்கும் ஊரை நோக்கி புறப்பட்டாள்.
இந்த நான்கு வருடத்தில் தமிழ்நாட்டிற்கு அவ்வளவாக மிருதுளா வரவேயில்லை. அதனால் அவளை பார்க்க வீட்டினர் அங்கு சென்று விடுவார்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு...
வழமை போல காலை நேர பூஜையை முடித்துவிட்டு கணவரோடு சுந்தரி பாட்டி பேசிக் கொண்டிருக்கும் போது, கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, இவ்வளவு அதிகாலையில் யார் வராங்க என்றவாறு எழுந்தவர் ஜன்னல் வழியாக பார்க்கும்போது மிருதுளா தான் காரிலிருந்து கீழே இறங்குவது தெரிந்தது.
குட்டிமா என்றவர் வேகமாக போய் கதவை திறக்க, மனைவியின் வார்த்தைகள் காதில் விழழும், என்னா என்று வேலனும் எழுந்து வெளியே போக, தனது லக்கேஜோடு வந்தவள் தாத்தா- பாட்டியென இருவரையும் அணைத்துக் கொண்டாள்.
ஏன் குட்டிமா சொல்லிட்டு வருவதில்லையா?சுரேனை அனுப்பியிருப்போமே என்கவும், ஹலோ ஓல்டு லேடி... இப்போது நான் ஒரு மாவட்ட கலெக்டர். இப்படி தொட்டதுக்கெல்லாம் துணைக்கு ஆள் இருந்தால் நல்லாவா இருக்கும்.
பொண்ணுனா ஜான்சிராணி போல வீரமாகவும் விவேகமாகவும் இருக்கணும்னு யாரோ எனக்கு சொல்வார்கள் என்றவள் என்ன இப்படியே வாசலில் நிற்க வைத்தே பேசுற ஐடியா வா?.
வக்கீல் மேடம் எந்திரிச்சாச்சா?
இவ்வளவு நேரம் வந்துருக்கணுமே என்கவும், நீ வர சற்று நேரம் முன்பு தான் கேஸ் விஷயமாக திருச்சி வரை போகணும் னு ரெடியாக போனாள். வா என்று பேத்தியின் கையை பிடித்தவாறு உள்ளே வந்தவர் மாலா என்க...
இதோ ங்க பெரியம்மா என்றவாறு கிச்சனில் இருந்து வெளியே வந்தவர் குட்டிமா என்று அதிர... நானே தான் என்றாள்.
திருச்சி போக தயாராகி வந்த உமா-சுரேந்தரும் மகளை பார்த்து திகைக்க, இங்கு தான் இருக்கேன் உங்க வேலையை முடிச்சிட்டு வாங்க மா என்று சொல்லி விட்டாள்.
பின்னர் குளித்து ப்ரஷாகி சாமி கும்பிட்டு வந்தவள் தாத்தா பாட்டியோடு பேசிக் கொண்டிருக்கும் போது ரேகா வும் தனது மகனோடு கீழே வந்தவள் மிருதுளாவை பார்த்து முறைத்தாள்.
சரி சமாதானம் சமாதானம் என்று அத்தை மகளான அண்ணியை சமாதானம் செய்தவள் அண்ணன் மகனோடு ஒரு வாரம் ஐக்கியமாகியவள், இரண்டு நாளைக்கு முன்பு தான் அவளுக்கு டிரான்ஸபர் கிடைத்திருக்கும் விஷயத்தை சொல்லிவிட்டு இதோ புறப்பட்டு போகிறாள்.
மிருதுளாவும் மாலாவும் புதிய ஊருக்குள் வந்து சேரும் போது இரவும் ஆரம்பமாகியிருந்தது.
மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லம் (Collector's Residence/Bungalow) என்ற பெயர் பொறித்திருந்த பங்களாவிற்குள் கார் நுழைந்தது.
இங்கிருந்து பதினைந்து நிமிடம் தொலைவில் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கின்றது.
மேடம் வந்தாச்சென்று அங்கிருந்த பாதுகாவலர்கள் சல்யூட் அடிக்க, தலையை அசைத்தபடி உள்ளே போனாள்.
பின்னர் இரவு உணவை சாப்பிட்டு விட்டு படுத்து விட்டனர்.
மறுநாள் பொழுதும் ஆரம்பமானது...
வழக்கம் போல எழுந்தவளோ குளித்து தயாராகி வர மாலாவும் அவளுக்கு டிபனை பரிமாற, அங்கிருக்கும் வேலையாட்களை பார்த்தவள் இவங்க என்னோட பெரியம்மா. எந்த மரியாதை குறைவும் வந்துடக்கூடாது.
உங்களுக்கு என்ன தேவையோ பெரியம்மா கிட்ட தாராளமாக கேட்கலாம் என்கவும் இதை கேட்ட மாலாவோ அதிர்ச்சியில் கண் கலங்கி விட்டார்.
குட்டிமா என்று அவளது கன்னம் வழித்து முத்தமிட்டவர் பேச்சு வராமல் கலங்கி நிற்க... நான் வரேங்கமா என்றவளோ தனது காரில் ஏறி அலுவலகத்தை நோக்கிச் சென்றாள்.
தம்பி....நம்ப ஊருக்கு புது கலெக்டர் வந்துருக்காங்க மரியாதை நிமித்தமாக நம் ஊர் சார்பாக போய் பார்க்கணும் என்கவும், கையில் இருந்த பைலை மூடி வைத்தவன், சரிங்க சித்தப்பா.
தாராளமாக போகலாம். மதிய வாக்கில் போகலாமா என்றவாறு தனது மீசையை முறுக்கி விட்டவன் தான் அந்த ஊரின் பிரசிடென்ட்.
போகலாம் பா. நான் போய் நம்ப பஞ்சாயத்து வாசு கிட்ட சொல்லிடுறேன் என்கவும், சரி சித்தப்பா என்றவன் அவருடன் மற்ற வேலைகளை பேசிக்கொண்டே ஜீப்பில் ஏறி தங்களது வீட்டிற்கு புறப்பட்டான்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:
புதிய கலெக்டராகப் பொறுப்பேற்ற மிருதுளாவுக்கு, அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இது ஒரு சம்பிரதாயமான அரசு நடைமுறை தான். வண்ண வண்ண மலர்க்கொத்துகளும், சால்வைகள் என அந்த இடமே ஒருவிதப் பரபரப்பில் இருந்தது.
பின்னர் வரிசையாக ஒவ்வொருவராக வந்து தங்களை அறிமுகம் செய்து கொள்ள. "இவர் இந்தத் துறை அதிகாரி...", "இவர் இந்த ஊர் தலைவர்..." என உதவியாளர் அறிமுகம் செய்து கொண்டே வந்தார்.
ஓகே.... என்றவள் தனது வேலையை பார்க்கலானாள்...
நேரமும் கடந்திருக்க மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வரவும் மாலாவும் அவளுக்கு பிடித்த சமையலை செய்து வைத்திருக்கவும், ம்மா... உங்களை ரெஸ்ட் எடுக்க தானே சொல்லிட்டு போனேனென்று செல்லமாக முறைத்தாள்.
என் குட்டிமாவுக்கு சமைப்பதை விட வேறு என்னடா இருக்கிறது. இது மட்டும் நான் பார்க்கிறேன் என்க.. நீங்கள் இருக்கீங்களே என்றவள் பின்னர் சாப்பிட்டு கிளம்பி விட்டாள்.
மேடம் உங்களை பார்க்க பக்கத்து ஊரிலிருந்த பிரசிடென்ட் மற்றும் ஊர் தலைவர்கள் வந்துருக்காங்க என்கவும், ரெண்டு நிமிஷம் கழித்து உள்ளே அனுப்புங்கள் என்றவாறு பைலை தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாள்.
பி, ஏ வும் வெளியே வந்து சொன்னார்.அதே போல இரண்டு நிமிடங்களுக்கு பின்னர் அனுமதி கிடைத்தும் மற்றவர்களுடன் உள்ளே நுழைந்தவன் "வணக்கம் மேடம்," என்று சொல்லிக்கொண்டே, மேஜைக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவளைப் பார்த்தவன் உதடுகளோ "மிருதுளா" என்று அதிர்ச்சியில் முணுமுணுப்பதை அவளும் உணராமல் இல்லை.
ஒரு மாவட்டத்தையே ஆளும் கலெக்டராக, இவ்வளவு பெரிய அதிகாரத்தோடு இவள் இங்கே அமர்ந்திருப்பாள் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை. அவனது நண்பனின் தங்கை என்ற பிம்பம் மறைந்து, ஒரு அதிகாரமிக்க பெண்ணாக அவளை அங்கே பார்த்த அதிர்ச்சியில் பேச்சற்று போனவன், இவள் உதய்ப்பூர் ல வேலை பார்த்துக் கொண்டிருந்தாளென்று நினைக்காமலும் இல்லை.
பண்ணாடை பயலே... நேற்று கூட பேசினான்.இவள் தான் இங்கு வரப்போறாள்னு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே னு மனதிற்குள் தனது நண்பன் மித்ரனை வறுத்தெடுத்தான்.
அந்த கம்பீரமான குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த மிருதுளாவின் நிலையோ அதைவிடப் பெரிய அதிர்ச்சி தான்.கோடிக்கணக்கில் பிசினஸ் செய்யும் ஒரு பெரிய பிசினஸ்மேன். எப்போதும் பார்மல் டிரஸில், கண்ணில் கூலர்,டிரிம் செய்த முகத்தோடு இருப்பவனோ இன்று,வேட்டி சட்டையில், காடு போல முடியும், புதர் போல தாடியுடன், ஊர் பிரசிடெண்டாகத் தன் முன்னால் நிற்பதை அவளால் நம்பவே முடியவில்லை.
அந்த அறையில் இருந்த குளிர்ச்சியை விட, இருவர் மனதுக்குள் எழுந்த அந்த அதிர்ச்சியின் வேகம் தான் அதிகமாக இருந்தது.
விக்ரமோ இவள் தான் கலெக்டரா யென அதிர்ந்து நிற்க, மிருதுளாவோ அவனது மாற்றத்தைப் பார்த்து பேச்சடைத்து போனாள்.
இருவருமே ஒரு சில நொடிகள் மெளனமாக இருந்தனர். ஆனால், அறையில் மற்ற அதிகாரிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் இருந்ததால், சூழலைப் புரிந்து கொண்ட இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.
உட்காருங்கள் என்று அங்கிருந்து சேரை காட்டினாள்.
"மேடம், நான் மீஞ்சூர் கிராமத்தோட பிரசிடெண்ட் விக்ரம் ," என்று ஒரு புதிய நபரைப் போல அவனை அறிமுகம் செய்து கொண்டான்.
அவன் குரலில் இருந்த அந்த நிதானம் மிருதுளாவிற்கு புதிதாக ஒன்னும் ஆச்சரியமாக இல்லை.
ஹம் சொல்லுங்க சார்.. என்ன விஷயம் என்க..
பின்னர் தன்னிடம் இருந்த மனுவை நீட்டினான். அதை வாங்கியவளோ பிரித்து படிக்கலானாள்.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,
வணக்கம். இந்த மனுவின் வாயிலாக எங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு முக்கியமான தேவையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
எஸ். எம் எஸ்டேட் பகுதிக்கு அருகில் ஒரு கணிசமான பரப்பளவு கொண்ட அரசு நிலம் பல வருடங்களாக காலியாக உள்ளது. தற்போதைய நிலையில், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், எஸ்டேட் தொழிலாளர்களும் அவசர மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களிலும், அவசர காலங்களிலும் போக்குவரத்து வசதி குறைவால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றோம்.
எனவே, அந்த அரசு நிலத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது இந்தச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் காக்க உதவும் ஒரு உன்னதமான செயலாக அமையும்.
தங்கள் மேலான பதிலை எதிர்பார்க்கும்,
மீஞ்சூர் பொதுமக்கள்..
கடிதத்தை படித்து முடித்தவள் தனது பி. ஏ விடம் அது சம்பந்தமான டீட்டைல்ஸ் கேட்க,சிறிது நிமிடத்தில் அவரும் கொண்டு வந்து கொடுத்தார்.
பின்னர் அதையும் படித்து விட்டு நிமிர்ந்தவள், எஸ்டேட் ஓரமா இருக்கிற அந்த 2 ஏக்கர் வருவாய்த் துறை நிலத்தைப் பத்தி சொல்லிருக்கீங்க... அங்க ஒரு ஹாஸ்பிட்டல் வேணும்னு கேக்குறீங்க. ஆனா, அங்க இருந்து 15 கிலோமீட்டர்ல ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்கனவே இருக்கே?"