• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
642
உதய்ப்பூர்:

காலை 10:00 மணி. சப்-கலெக்டர் அலுவலகத்தின் அந்தப் பழைய கட்டிடம் வழக்கமான பரபரப்பில் இருந்தது. மிருதுளாவோ தனது பெற்றோருடன் காரில் வந்து இறங்கினாள் (அரசு காரைப் பயன்படுத்த இன்னும் அவள் விரும்பவில்லை).

அவள் இறங்கியதும் அங்கிருந்த காவலர் அவசரமாக எழுந்து நின்று சல்யூட் அடிக்கவும் மெல்லிய புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்டவள், "அப்பா, அம்மா, மாமா, அத்தை. வாங்க" என்று அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள்.

ஒரு அதிகாரி தன் பெற்றோருடன் இவ்வளவு எளிமையாக வருகிறாரேயென அங்கிருந்தவர்கள் ஆர்வத்தோடு பார்த்தனர்.

அப்பொழுது வட்டாட்சியர் முன்வந்து பூங்கொத்தை நீட்டினார். மிருதுளாவும் அதை வாங்கிக்கொண்டு, "வணக்கம் சார், எல்லாரும் எப்படி இருக்கீங்க?" என்று மிகச் சாதாரணமாகக் கேட்டாள்.

மிருதுளாவின் பெற்றோரோ இந்தச் சூழலைப் பார்த்து கொஞ்சம் மலைத்துப் போய் நின்றனர். இதுவரை தங்கள் மகளாக மட்டுமே பார்த்தவளுக்கு, ஒரு அலுவலகமே எழுந்து நின்று மரியாதை கொடுப்பது அவர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள். வரிசையாக நின்று கொண்டிருந்த மற்ற ஊழியர்களுக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலுக்குத் தந்துவிட்டு நேராகத் தனது அறைக்குச் சென்றாள்.

அறையின் வாசலில் நின்றிருந்த உதவியாளர் கதவைத் திறந்து விட, தன் வீட்டினரை முதலில் உள்ளே செல்லுமாறு சைகை காட்டினாள். அந்த அறையில் நிலவிய ஏசியின் குளிர்ச்சியும், மெல்லிய நறுமணமும், அங்கிருந்த கோப்புகளின் அடுக்கும் ஒரு புதிய அதிகாரத்தின் வருகையை உறுதிப்படுத்தின.

எந்த ஆரவாரமும் இல்லாமல், ஒரு அமைதியான அதே சமயம் நேர்த்தியான வரவேற்பு அவளுக்குக் காத்திருந்தது.

தனது அறைக்குள் நுழைந்ததும், அந்தப் பெரிய மர மேஜையும், அதன் பின்னால் இருந்த இருக்கையும் அவளை வரவேற்றன. அந்த நாற்காலியில் அமர்வதற்கு முன்னால், இங்கேயே உட்காருங்க. நான் ஜாயினிங் ரிப்போர்ட்ல சைன் பண்ணிட்டு வந்திடுறேன்," என்றாள்.

அவளது அப்பா சுரேந்தர், அந்த அறையையே வியப்போடு பார்த்தார். "நல்லா இருக்குமா... நல்லா விசாலமா இருக்கு," என்று ஒரு சாமானிய மனிதராக அந்த அறையை மதிப்பிட, அம்மா உமாவோ அமைதியாகத் தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

டேபிளின் மேல் இருந்த "மிருதுளா சுரேந்தர், I.A.S., சப்-கலெக்டர்" என்ற பெயர்ப்பலகை அவளைப் பார்த்துப் புன்னகைப்பது போல் இருந்தது.

பின்னர் அந்தப் பெரிய மர மேஜையின் பின்னால் இருந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததும் அறையில் இருந்த ஏசியின் குளுமையோ அவளது பதற்றத்தை மெல்லக் குறைத்தது.

அப்பொழுது கதவை தட்டி உள்ளே வந்த அவளது உதவியாளர் கையிலிருந்த பைலை அங்கிருந்த டேபிளில் வைத்தவர், "மேடம், உங்க ஜாயினிங் ரிப்போர்ட்," என்றார்.

ஹம் என்றவள் தனது ஹேண்ட் பேகிலிருந்த பேனாவை எடுத்துப் பார்க்கையில் ஏதேதோ நினைவுகள் அவளுக்குள் சுழலாமல் இல்லை.

இந்தப் பேனா முனையில் தான் எத்தனை பேரின் தலையெழுத்து இருக்கிறது என்பதை உணர்ந்ததால் எதிரிலிருக்கும் தனது பெற்றோர்களையும் அத்தை மாமாவையும் பார்க்க, அவர்களும் ஹம் என தலையசைக்கவும், பின்னர் நிதானமாக, தன் பெயரை அந்தத் தாளில் பதித்தாள்.

சரிங்க மேடம் நாங்க கிளம்புறோமென்று சுரேந்தர் சொல்ல, அப்பா என்று செல்லமாக முறைத்தாள். இல்லை டா நீ வேலையை பாரு என்றவாறு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

முதல் நாள் என்பதால் சில கோப்புகளைப் படித்துக் கொண்டிருக்க நேரமும் கடந்து சென்றது. அப்போது கதவுத் தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மேடம் உங்களுக்கு லஞ்ச் எடுத்துட்டு வந்துருக்காங்க என்கவும், அதற்குள் மணியாகிட்டா என்று வாட்சை பார்க்க, அதுவோ மதியம் 1.30 என்று காட்டியது.

ஓகே சார். மத்த ஃபைல்ஸை அப்புறம் பார்க்கிறேன் என்றவாறு அவளுக்கான டைனிங் ஹாலுக்கு போக அங்கே உமா இருக்கவும் அம்மா என்க...வா குட்டிமா.

நேரம் ஆகிட்டென பரபரப்போடு மகளுக்கு சாப்பாடு எடுத்து வைக்க கையை கழு விட்டு வந்து உட்கார்ந்தவள் நான் வீட்டிற்கு வந்துருப்பேனே மா என்றவாறு சாப்பிட்டு எழுந்தவள், சரி மா நீ பார்த்து போ, ஈவினிங் பார்க்கலாமென்றனர்.

அங்கிருந்த வட்டாட்சியரை அழைத்தவள், "சார், இன்னைக்கு முதல் நாள்... இப்போதைக்கு முக்கியமான பைல்கள் ஏதும் இருக்கா?" என்றாள்.

அவர் சில பைல்களைக் காண்பித்துவிட்டு, "மேடம், வெளியே ஒரு முப்பது நாற்பது பேர் மனு கொடுக்கக் காத்துட்டு இருக்காங்க. நீங்க வந்ததும் பார்க்கலாம்னு சொல்லிட்டோம்," என்றார்.

அப்படியா என்றவளோ ஜன்னல் வழியாக வெளியே பார்க்க, சுட்டெரிக்கும் வெயிலில், மரத்தடியில் முதியவர்களும் பெண்களும் கையில் காகிதங்களுடன் காத்திருப்பது தெரிந்ததும், "சார், முதல்ல அவங்களுக்கு அங்கே குடிக்கத் தண்ணி வசதி இருக்கான்னு பாருங்க. அப்புறம், ஒரு பத்து நிமிஷத்துல அவங்களை வரிசையா உள்ளே வரச் சொல்லுங்க. முதல் நாளே அவங்க காத்திட்டுப் போக வேண்டாம்," என்றாள்

சிறிது நிமிடங்கள் கடந்திருக்க, கதவு திறக்கும் சத்தம் கேட்டு மிருதுளா நிமிர்ந்து பார்க்க, முதிய தம்பதிகள் இருவர் வருவது தெரிந்தது.

தாத்தாவோ ஒரு கையில் அழுக்கான துணிப்பையையும், இன்னொரு கையில் தனது மனைவியின் கையையும் பிடித்துக் கொண்டு தயங்கியவாறு நின்றார்.

மிருதுளாவும் முகத்தில் புன்னகையோடு "வாங்க பெரியவரே... உள்ளே வாங்க. ஏன் அங்கேயே நிக்கிறீங்க? பாட்டி, நீங்களும் வாங்க."

அவர்களோ மெதுவாக உள்ளே வரும் போது தரையில் விரிக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த விரிப்பைப் பார்த்து, செருப்பைக் கழற்றத் தொடங்க, இதைப்பார்த்தவளோ உடனே எழுந்து வந்தவள் "பரவாயில்லை பாட்டி, செருப்போடவே உள்ளே வாங்க..." என்றபடி தனக்கு முன்னால் இருக்கும் சோபாவில் உட்கார வைத்தாள்.

பின்னர் அவளுக்கான சேரில் உட்காராமல், அவர்களுக்கு அருகிலேயே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தவள் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து நீட்டியவள் "முதல்ல இதைக் குடிங்க. ரொம்ப நேரமா வெயில்ல காத்துக்கிட்டு இருந்தீங்களா?"

"ஆமாம்மா... காலையில 9 மணிக்கே வந்துட்டோம். வெளிய இருந்தவங்களோ, மேடம் 'சாப்பிட்டு வருவாங்க, அப்புறம் வாங்க'ன்னு சொன்னாங்க. அதான்..." என்றவாறு தொண்டை அடைக்க தாத்தா சொன்னார்.

"எங்க மனுவை கொஞ்சம் பாருங்க தாயி. பையன் எங்களை அடிச்சுத் துரத்திட்டான். வீதி திண்ணையில தான் படுத்திருக்கோம். அரசாங்கம் கொடுக்கிற அந்த ஆயிரம் ரூபாய் கிடைச்சா, ஒரு வேளை கஞ்சியாவது குடிச்சிப்போம்." என்று அவளை பார்த்து கையை கூப்பினார்.

அச்சோ பாட்டி இப்படி பண்ணாதீங்க என்று அவரின் கையை கீழே இறக்கியவள் அவர்களின் மனுவை வாங்கிப் படிக்க, அதில் பல இடங்களில் சிவப்பு மையால் 'நிராகரிக்கப்பட்டது' என்று முத்திரை குத்தப்பட்டிருப்பதை பார்த்தவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது.

பின்னர் வேகமாக டேபிளின் மேலிருந்த மணியை அழுத்தி உதவியாளரை அழைத்தவள், "எதற்காக இந்த மனுவை மூணு தடவை தள்ளுபடி செஞ்சிருக்கீங்க? 'சொந்த வீடு இருக்கிறது'ன்னு காரணம் சொல்லியிருக்கீங்க. நேர்ல போய் நீங்கள் யாராவது பார்த்தீங்களா? அவங்க பையன் துரத்திட்டது உங்களுக்குத் தெரியாதா?"

அதைக் கேட்ட பி. ஏ வோ அது வந்துங்க மேடமென்க
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
642
இப்போவே இவங்க அப்ளிகேஷனை ஆன்லைன்ல அப்ரூவ் பண்ணுங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல இவங்களுக்கான 'ஆர்டர் காப்பி' என் டேபிளுக்கு வரணும். அதுமட்டும் இல்ல, இவங்க பையனை உடனே போன் பண்ணி வரச் சொல்லுங்க. பெத்தவங்களைப் பராமரிக்கலன்னா 'மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டப்படி' அவர் மேல ஆக்ஷன் எடுப்பேன்!"

போங்களென்கவும், மிருதுளாவின் அதிரடியான பேச்சைக் கேட்டு அந்தத் தம்பதி திகைத்துப் போக, பி. ஏ வோ வாயடைத்துப் போய் வேகமாக கதவை திறந்து வெளியே போனார்.

"தாயி... நீங்க இவ்வளவு வேகமா எங்களுக்குச் செய்வீங்கன்னு நாங்க நினைக்கல" என்று கண்கலங்கினார்.

அச்சோ பாட்டி என்றவாறு எழுந்து போய் தனது மேஜை டிராயரைத் திறந்தவள் , ஹேண்ட் பேகில் இருந்த தனது சொந்தப் பணத்தை எடுத்து அந்தப் பாட்டியின் கையில் வைக்க, அய்யோ தாயி வேண்டாமென்று இருவரும் பதறினர்.

"இது உங்க பேத்தி கொடுக்கிறதா நினைச்சு வச்சுக்கோங்க. இனிமே உங்களுக்குத் தேவையான உதவித்தொகை மாசம் மாசம் சரியா உங்க கைக்கு வரும். வேற எந்தப் பயமும் வேண்டாம். தைரியமா வீட்டுக்குப் போங்க" என்றாள்.

குடும்பம் புள்ளையோடு நல்லா இருக்கணும் தாயி என்றவர் தனது சுருக்கு பையை திறந்து அதிலிருந்த ஒரு பொருளை எடுத்தவர் இது எங்க அம்மா நினைவா வச்சிருக்கிறேன்.

இப்போதைக்கு என் கண்ணுக்கு நீயே என்னை பெத்தவளாக தெரியுர தாயி என்றவரோ மிருதுளாவின் கையை பிடித்து அதில் வைத்துவிட்டு இருவரும் வெளியே போனார்கள்.

மீஞ்சூர்:

பங்கு அவன் போக்கில் விட்டு பிடிக்கலாம் என்று மித்ரன் சொல்ல, ம் டா. ஆனால் இவன் இப்படி இருக்கிறது நல்லதுக்கு இல்லை டா. என்றாவது ஒருநாள் வெடித்து சிதறப்போறான் அந்த கோவம் யாரை காயப்படுத்த போகுது னு தெரியலை டா என்று பரத் சொல்ல அதுவும் வாஸ்தவம் தான் என்பது மித்ரனுக்கு புரிந்தது.

பின்னர் நாட்களும் அதன் போக்கில் ஓடவும் பதினாறாம் நாள் இறந்தவர்களுக்கு பண்ணும் கரும காரியத்தை ஊர் வழக்கப்படி செய்து முடித்து விட்டு ஓய்வாக உட்கார்ந்து இருக்கும் போது, விக்கி என வேலன் தாத்தா கூப்பிட, ஹம் சொல்லுங்க தாத்தா என்றான்.

என் நண்பன் அவன் வாழ்க்கையில் பார்க்காத வலி வேதனைகளை நீ பார்க்கவில்லை பா. போனவர்களை நினைத்து இருக்கிறவர்களை காப்பாற்றாமல் விடுவது தான் பெரிய தப்பு.

நம்மை நம்பி பல குடும்பங்கள் இருக்கிறது அதை மனதில் வை. நமக்காக மட்டும் வாழுவது வாழ்க்கையில்லை கண்ணு.பிறருக்கும் சேர்த்து வாழ்வதே மனிதன் என்கவும், சரிங்க தாத்தா என்றான்.

மறுநாள் பொழுதும் தொடங்க வழக்கம் போல காலையில் எழுந்து தனது உடற்பயிற்சியை செய்து முடித்தவனோ குளித்து விட்டு தனது ஆபிசிற்கு தயாராகவும், மித்ரனும் பரத்தும் அவனை யோசனையோடு பார்ப்பது கண்ணாடி வழியாக தெரியவும்,என்ன டா என்றான்.

பங்கு இந்த பயல் இவ்வளவு அடக்கமா கிளம்புர ரகம் இல்லை என்று மித்ரன் சொல்ல, அதை தானே நாயே இத்தனை நாளா நானும் சொல்லிட்டு இருக்கேன்னு பரத் முறைத்தான்.

டேய் போலி டாக்டர் ஹாஸ்பிடல் போற ஐடியா இருக்கா இல்லையா என்றவாறு விக்ரம் தனது சட்டை பட்டனை போட, என் வாயிலிருந்து எதாவது நாரசாரமா வந்துட போகுது டா. மரியாதையா நீ கிளம்பி போற வேலை மயிர பாரு என்றவாறு தலை வரை ரஜாயை இழுத்து போர்த்தி படுத்து விட்டான்.

பங்கு பங்கு னு மித்ரன் சுரண்ட சொல்லு நாயே உனக்கு என்ன வேண்டும் என்று கடுப்போடு பரத் கேட்க, எனக்கு ஒரு சந்தேகம் என்றான்.

இப்போ உனக்கு என்ன நான் டாக்டரா என்னனு கேள்வி அதானே... நான் டாக்டருக்கு படிக்கலை டா. மாடு மேச்சேன் போதுமா என்கவும், இதைக் கேட்ட விக்ரமும் மித்ரனும் சத்தமாக சிரித்து விட்டனர்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு தனது நண்பன் சிரித்ததை பார்த்து இருவருக்கும் உள்ளுக்குள் சந்தோஷம் தான்.

சரி டா... நான் பதினோரு மணிக்கெல்லாம் வந்துடுறேன் பிறகு ஏர்போர்ட்டிற்கு போகலாமென்க, இருக்கட்டும் நீ அங்கு பாரு. நான் போய் இவங்களை டிராப் பண்றேன்னு மித்ரன் சொல்ல ம்ம்..

சரி டா நான் வரேனென்றவாறு தனது கம்பீர நடையும் படியிலிறங்கி கீழே வந்தவன் வசு என்றவாறு டைனிங் டேபிளில் உட்கார, பேரனின் பிரத்தியேகமான அழைப்பை கேட்டவர் இதோ கண்ணா என்றபடி வந்தவர், தாயே போதும் என் பேரனை சோதித்தது.

இனியாவது அவனை நல்லபடியாக வாழ விடு என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டே டிபனை பரிமாறினார்.

வெளி மாநிலத்திற்கு அனுப்ப வேண்டிய அரிசி லோடுகளை விக்ரம் சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனது போனிற்கு கால் வரும் சத்தம் கேட்கவும் போனை எடுத்து பெயரை பார்த்தவன் பின்னர் அட்டெண்ட் பண்ண, ஹலோ விக்ரம்... மதி பேட்டி இருந்த வீட்டை காலி பண்ணியாச்சு பா என்கவும், ஓகே சார்...

திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டீங்க தானே என்கவும், ஆமா பா... நீ சொன்ன போல அத்தியாவசிய பொருட்களை வாட்ச்மென் கிட்ட கொடுத்துட்டேன். மற்றதை பார்சல் அனுப்பிடுறேன் என்றார்.

தேங்க்யூ அங்கிள் என்றவன் பின்னர் பொதுவாக சிறிது நிமிடங்கள் பேசிவிட்டு போனை வைத்து விட்டு வேலையை பார்க்கலானான்.

சரி வசு உடம்பை பார்த்துக்கோனு சுந்தரி- வேலன் தம்பதியர் சொல்லிக் கொண்டு காரில் ஏறியவர்கள் மித்ரனோடு ஏர்போர்ட்டிற்கு வந்தனர்.

அவர்களுக்கான ப்ளைட்டிற்கு காத்திருக்கும் போது பரத்தும் அங்கு வந்து சேர, ஏன் டா இப்படி?நான் தான் டூட்டிய பாருடானு சொன்னனே என்று வேலன் முறைக்க, இருக்கட்டும்... பேஷண்ட் அவ்வளவாக வரலை ஈ தான் ஓட்டிக் கொண்டிருந்தேன்.அதோட இன்று எனக்கு டூட்டி இல்லையேனு பரத் சிரிக்க, அதுதான் தெரிஞ்ச சங்கதியேனு மித்ரன் சிரிக்க, போடா என்றான்.

நேரமும் கடந்து செல்ல சென்னை செல்வதற்கான ப்ளைட்டின் அறிவிப்பு வந்ததும் முதிய தம்பதிகள் இருவரும் கிளம்பி விட, கண் பார்வையிலிருந்து மறையும் வரை நின்றவனுங்கள் பின்னர் வெளியே வந்தனர்.

நீ எப்படி டா, வீட்டுக்கு போறியா இல்லை எஸ்டேட் போறியா என்று பரத் கேட்கவும், உன் கூட ஹாஸ்பிட்டலுக்கு வரேன் என்கவும், ஏதேஏஏஏ...ஏன் இத்தனை நாள் என் மானத்தை வாங்கியது போதாதா?.

ஹாஸ்பிடலில் கால் வைத்த முதல் டெட் பாடி நீ தானென்று பரத் முறைக்க, ஹீஹீ ... அந்த கேரளத்து குட்டி ரொம்ப அம்சமா இருக்காள் டா... கொஞ்சம் கடலை போடுறனே என்று மித்ரன் சிரிக்கவும், அடேய்... அறிவுகெட்டவனே. உன் பங்காளியோட வருங்கால பொண்டாட்டி டா இப்படி பேசாதே தப்பென்று அவசரப்பட்டு பரத் உலர...

ஹா ஹா ஹா... எப்படி உன் வாயாலே வர வச்சேன் பார்த்தியா?.இப்படி எட்ட இருந்தே பார்த்துட்டு இருந்தால் போதாது டா... அப்ளிகேஷனை போட வேண்டிய தானே என்றான்.

எனக்கும் அந்த யோசனை தான் பங்கு.ஆனாலும் அவள் முடியாது னு சொல்லிடுவாளோனு பயமா இருக்கு டா என்று பரத் சொல்ல, ஆமா டா.... கோவத்தில் உனக்கு ஏதாவது ஆப்ரேஷனை மாத்தி பண்ணிட போகுதென்று மித்ரன் சிரிக்க, பரத்தோ தனது நண்பனை செம காண்டோடு பார்த்தான்.

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top