• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
மீஞ்சூர்:

ஓ ஷிட் என்று ஸ்டேரிங்கில் ஓங்கி குத்தியவன் இன்னும் பத்து நிமிடத்தில் நான் வந்துடுவேன் நீ அழாதே என்று அழைப்பை துண்டித்தவன் மச்சி, மதி விஷயம் டார்லிங்கிற்கு தெரிஞ்சிடுச்சு டா.

நியூஸ் ல சொல்லியதை பார்த்திருக்காங்க என்க, ஹம் என்றவன் வேறு எதுவும் பேசாமல் மேக மூட்டத்தோடு இருக்கும் வானத்தை பார்க்க அங்கே, இவனை தனியாக விட்டுவிட்டு மேலுலகம் போன அவனது அன்பிற்குரியவர்கள் எல்லாரும் வரிசையாக நிற்பது போல தெரிந்தது.

நண்பனை வேதனையோடு பார்த்த மித்ரன் வேகமாக தனது அம்மாவிற்கு கால் பண்ண அந்த பக்கம் அட்டெண்ட் பண்ணிய உமா, ஹம் சொல்லு கண்ணா?.நாங்கள் அங்கு தான் வந்துட்டு இருக்கோம். டாடி நேராக அங்கு ஏர்போர்ட்டிற்கு வராங்களாம் பா என்கவும், அப்படியா மா. அப்போ கார் அனுப்பட்டுமா என்க, இல்லை பா.

நாங்கள் அப்பாவிற்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். இன்னும் மூன்று மணி நேரத்தில் வந்துடுவோம். வேறு வழியில்லை அதனால் தான் நியூஸ்ல விஷயத்தை சொல்ல வேண்டிய அவசியம்.

கேஸ் கோர்ட்டில் இருக்கிறது இல்லையா, ஜெயில் ல போலீஸ்காரர்கள் மூலமாக எதாவது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வரக்கூடாதுனு அவங்க மேலிடத்தில் பர்மிஷன் வாங்கிட்டாங்க என்றபடி அழைப்பை துண்டித்தார்.

ஓ காட் என்றவாறு காரை ஸ்டார்ட் பண்ணியவன் காற்றைவிட வேகமாக வந்து சேர அதற்குள் விஷயத்தை தெரிந்து கொண்ட சிலர் வீட்டிற்கு வந்திருந்தனர்.

காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய மித்ரன், மச்சி என்க சமாளித்து தான் டா ஆகணும். என் தலையெழுத்து இப்படி தானே. இது ஒன்னும் புதிதில்லையே என்றவாறு இடது பக்க கையால் கார் கதவை திறந்து கீழே இறங்கியவன் அங்கிருப்பவர்களை பார்த்து தலையசைத்தபடி வீட்டிற்குள் போக, அய்யோஓஓஓ விக்கி என்று தனது வயதை பொருட்படுத்தாமல் ஓடி வந்த வசுந்தரா தனது பேரனை கட்டிக்கொண்டு கதறினார்.

சுந்தரமூர்த்தியோ இடிந்து போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்திருந்தார்.

விக்ரமின் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை ஆனால் கண்ணிலிருந்து மட்டும் அருவி கொட்டுவது நிற்கவில்லை.

பின்னர் ஊர்காரர்களுடன் சேர்ந்து கொண்டு மித்ரனே ஆக வேண்டியதை பார்க்கலானான்.

இரவு ஒன்பது மணி இருக்கும் போது மித்ரன் வீட்டினர் வந்து சேர்ந்தனர்.

சுந்தரி என்று தோழியை கட்டிக்கொண்டு வசு அழுக, வேலனோ தனது நண்பனின் கையை பிடித்துக்கொண்டார்.

மித்ரனின் அப்பா சுரேந்தரோ தனது ஆருயிர் நண்பனின் மகனான விக்ரமை அணைத்துக்கொண்டு மௌனமாக கண்ணீர் சிந்தியவர், ஏன் டா இப்படி எல்லாரும் பாதியிலே விட்டுட்டு போறிங்களென அங்கே ஆளுயர புகை படத்தில் தனது மனைவி கீதாவுடன் மாலை போட்டிருக்கும் பிரகாஷை பார்த்து கதறினார்.

மறுநாள் பொழுதும் வந்தது.

தொழில் ரீதியாகவும் தூரத்திலிருக்கும் சொந்தங்களும் வந்து கொண்டிருந்த வண்ணமே இருந்தனர்.

அப்போது மித்து தம்பியென ஊர் தலைவர் கூப்பிட, சொல்லுங்கள் மாமா என்கவும், வழக்கப்படி சடங்கு ஆரம்பிக்கனும் பா. பாடி இல்லை என்பதற்காக செய்ய வேண்டிய சடங்கை செய்யாமல் விடுவது குடும்பத்துக்கு நல்லது இல்லை என்கவும், புரிகிறது மாமா என்றவன் அம்மா யென்று உமாவை கூப்பிட்டான்.

சொல்லு பா என்று வந்தவரிடம் விஷயத்தை சொல்ல, மாடியில் இருக்கும் அகல்மதியின் ரூமிற்கு போனவர் கண்ணில் நீரோடு அவள் பயன்படுத்திய சில ஆடைகளையும் மற்ற பொருட்களையும் ஒரு மூட்டையாக கட்டி எடுத்து வந்தார்.

இதையெல்லாம் ஒரு பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த விக்ரமின் மனநிலையோ வெறுமையாக இருந்ததென்பதே உண்மை.

பின்னர் இறந்தவர்களுக்கு என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதையெல்லாம் அந்த துணிமூட்டைக்கு செய்துவிட்டு சுடலைக்கு எடுத்து போய் தீயிலிட்டனர்.

துக்க வீட்டிற்கு வந்து விட்டு திரும்பி போகும் போது சொல்லிவிட்டு போகக்கூடாது என்பதால் உமா- சுரேந்திரன் தம்பதியினர் சென்னைக்கு கிளம்பிவிட்டனர்.

வேலையாட்களோ அரண்மனை போன்ற வீட்டையும் தோட்டத்தையும் சுத்தம் செய்ததும் சுந்தரி பாட்டியோ அகல்மதியின் புடவை ஒன்றை மணையில் வைத்து அதற்கு பக்கத்தில் நல்ல விளக்கை ஏற்றி வைத்தார்.

பதினாறாம் நாள் காரியம் முடியும் வரை நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று வேலனும் சுந்தரியும் தங்களது மகன் மருமகளிடம் சொல்லிவிட்டு தங்கி விட்டனர்.

மறுநாள் மிருதுளா வேலையில் சேர வேண்டும் என்பதால் தான் உமாவும் சுரேந்திரனும் உடனடியாக புறப்பட வேண்டியதானது.

வசு இப்படி பச்சை தண்ணி கூட குடிக்காமல் கிடந்தால் போனவள் வந்துடுவாளா? இல்லை நடந்தது இல்லைனு மாறிடுமா? சொல்லு?.

நீங்க ரெண்டு பேரும் இப்படி இருந்தால் சின்னவனை யார் தேற்றுவா?.தாயில்லாத பிள்ளை டி என்கும் போது சுந்தரிக்கும் அழுகை வந்தது.

அந்த வார்த்தை வசுவின் இதயத்தில் சுருக்கென தைக்கவும் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தவர் பேரனை தேட, விக்ரமோ சோபாவில் உட்கார்ந்து கொண்டு சுவற்றில் தொங்கி கொண்டிருக்கும் அவனது அப்பா அம்மாவின் போட்டோவை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

வேகமாக தனது பேரன் பக்கத்தில் போய் உட்கார்ந்தவர் ஐயா நீ புது பிசினஸை ஆரம்பிக்கணும்னு சொன்னியே அது என்ன ஆச்சு?.
நம்மை பற்றி நினைக்காதவளை நாம் மட்டும் ஏன் நினைக்கனும் என்றாலும் மகள் வயிற்று பேத்தியை நினைத்து தொண்டை அடைத்தது.

தனது பாட்டியின் வார்த்தையை கேட்டு திரும்பி பார்த்தவன் நான் நல்லா இருக்கேன் நீங்க ரெண்டு பேரும் வருத்தப்படாதீங்க.

அவளை பற்றி நினைக்க இனி பெருசா ஒன்னும் இல்ல. எனக்கு என்று இருக்கிறது நீங்க எல்லாரும் தான் அந்த எண்ணம் உங்களுக்கு இருந்தா இதோட அவ பேச்ச விட்டுடுங்க என்றவாறு எழுந்து போய்விட்டான்.

மச்சி...என் யோசனை சரியா தவறா னு தெரியலை. ஆனால் எனக்கு இதான் தோணுது என்றவாறு மித்ரன்- விக்ரமை பார்த்து பரத் சொல்ல, டேய் டாக்டர் மயிறான் முதலில் விஷயத்தை சொல்லி தொலை டா என்று மித்ரன் முறைத்தான்.

ம்ம்...

நாம் ஏன் டெல்லிக்கு போக கூடாது?.

மதி தங்கியிருந்த இடத்தில் விசாரித்தால் ஏதாவது நமக்கு குளு கிடைக்கும் டா. மதி பற்றி நம்ப எல்லாருக்கும் நல்லா தெரியும். அவளால் அஞ்சு பேர் தற்கொலைக்கு முயன்றாலும் முயல்வார்கள் தவிர, இவள் இப்படி பண்ணிருக்கா என்றால் எதையோ மறைக்க முயற்சி பண்ண போல தோணலையா டா?.

உமா ஆன்ட்டி அவளோட ரிப்போர்ட் அனுப்பினார்கள். தவறா எதுவும் நடக்கவில்லை. ஆனால் ஏன் இப்படி என்ற அந்த கேள்வி மண்டைய குடையுது?.

நாம் உடனே டெல்லிக்கு போகலாம் என்கவும், செல்லமே.... வாழ்க்கையில் இன்று தான் டா பங்கு உருப்படியான ஐடியா கொடுத்திருக்க என்றவாறு பரத்தை அணைத்துக்கொண்டு மித்ரன் சொல்ல, பைத்தியக்கார பன்னி..

எட்டி மிதித்தேன் சங்கு நொருங்கிடும் என்றவன், உன் பாச வெள்ளத்தை கொஞ்சம் ஓரமாக மூட்டை கட்டி வை. இந்த நாய் எதுவும் சொல்லாமல் இருக்கிறானே அதை பாருடா என்றான்.

ம்ம் என்ற மித்ரன், டேய் இப்படி எதுவும் சொல்லாமல் இருக்கியே என்ன டா என்க, எனக்கு தூக்கம் வருது நான் போய் படுக்குறேனென்று பால்கனியில் நின்று கொண்டு இருளான வானத்தை பார்த்துக்கொண்டிருந்த விக்ரமோ ரூமிற்கு சென்று விட, இவன் என்னடா 9 மணிக்கே அதிசயமாக தூங்க போறானேன்று பரத் கேட்க, நீ தான் போலி டாக்டர் இருக்கியே கண்டு பிடித்து சொல்லு டா?.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
640
ஒருவேளை நானும் டாக்டருக்கு படிக்கிறேனு சும்மா காலேஜ் போயிட்டு வந்தியானு மித்ரன் சிரிக்க, பரத்தோ தனது நண்பனை கொலை வெறியில் பார்த்தான்.

பெட்டில் படுத்திருந்த விக்ரமின் மனமோ சற்று முன்னர் நண்பன் சொன்ன விஷயத்தை தான் அசைப் போட்டது.

பரத் சொல்வது சரி தான். ஆனால் அவளே இல்லை என்று ஆன பிறகு ஏன் எதற்காக என்ற காரணத்தை தேடி என்னப் பண்ண போகிறேன். இனி இவளை பற்றி நான் நினைக்க போவதில்லை.என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவிற்கு நான் இவளுக்கு வேண்டாதவனா?.

கல்யாணம் நடந்திருந்தால் நமக்கு இந்நேரம் ரெண்டு பிள்ளை இருக்கும் டி. இப்படி பாதியிலே விட்டு போகப் போற என்பதற்கு தான் ஒரு ஒட்டுதல் இல்லாமலே இத்தனை வருஷகாலமாய் இருந்தியோ? என்று ஏதேதோ கேள்விகள் தனக்குள்ளே கேட்டுக்கொண்டவன் இனி நீ என் வாழ்க்கையில் மட்டும் இல்லை, நினைப்பில் கூட இருக்க மாட்ட டி என்ற உறுதியான முடிவோடு தூங்க ஆரம்பித்தான்.

நீலாங்கரை:

குட்டிமா இன்னும் என்ன பண்ணுறனு உமா குரல் கொடுக்கவும், வந்துட்டேன் என்றவாறு படியில் இறங்கி வந்தவள் ம்ம் போகலாம் டாட் என்கவும், சுரேந்தரோ தனது மகளை பார்த்து சிரிக்க, உங்களை என்று இருவரையும் உமா முறைக்கவும், கூல் டவுன் பேபிமானு மனைவியை பார்த்து கண்டித்தார்.

அய்யோ கடவுளேனு தலையில் தட்டிக் கொண்டு உமா வெளியே போக மகளும் அப்பாவும் ஹை- பை கொடுத்துக் கொண்டார்கள்.

பின்னர் மூவரும் காரில் ஏறி ஏர்போர்ட்டிற்கு வந்தனர்.

இரண்டு மணி நேரம் கடந்து இருக்கவும் அவர்கள் செல்ல வேண்டிய பிளைட்டின் அறிவிப்பு வந்ததும் மூவரும் உள்ளே சென்றனர்.சென்னையில் இருந்து புறப்பட்ட விமானமோ சில மணி நேர பயணத்தில் உதய்ப்பூருக்கு வந்து சேர்ந்தது.

மற்ற பார்மாலிட்டிஸை முடித்துக் கொண்டு அவர்கள் வெளியே வரும் போது சுரேன் என்ற குரல் கேட்கவும் திரும்பி பார்க்க அங்கே சுரேந்தரனின் பிசினஸ் நண்பர் மதன் நின்று கொண்டிருந்தார்.

பின்னர் நண்பர்கள் இருவரும் கட்டி அணைத்து நலம் விசாரித்துக் கொண்டு, உமாவையும் மிருதுளாவையும் விசாரிக்க நல்லா இருக்கிறோம் என்றனர்.

ஹம்... இப்போது தான் ஸ்கூல் சேர்ந்த போல இருக்கிறது அதற்குள் மேடம் பெரிய பதவிக்கு வந்துட்டிங்களே என்கவும் மாமா என்றாள்.

ஹா ஹா என்றவர் வாங்க போகலாமென லக்கேஜை எடுத்துக்கொண்டு காரில் ஏறியவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

பேசிக் கொண்டே ஒரு மணி நேரத்தில் அந்த அப்பார்ட்மெண்ட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

மிருதுவை நம்ம வீட்டுல தங்க வைக்கலாம்னு சொன்னேன் எங்க டா கேட்டீங்க என்று மதன் முறைக்க, இருக்கட்டும் டா. நீ இருக்குற தைரியத்துல தானடா தனியா வீடு பார்க்க சொன்னேன்.

போஸ்டிங் இங்கென்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் நீ இருக்கும் போது எங்களுக்கு கவலையே இல்லை என்கவும் இதை நீ சொல்லனுமாடா என்றார்.

உதய்பூர்:

பின்னர் லிப்டில் ஏறி ஏழாவது தளத்திற்கு வந்தனர்.வீட்டு நம்பர் என்னடா என்கவும் 323 டா. நம்ம வீட்டிற்கு எதிரில் தான் என்றவாறு அங்கே போகவும், அந்நேரம் கதவும் திறந்ததோடு வெல்கம் என்று கோரசாக சத்தம் கேட்டது.

வாங்க ணா , வா உமா, மிருது குட்டி என்றவாறு மதனின் மனைவி ஜனனி அவளை அணைத்துக் கொண்டார்.

எப்படி இருக்கீங்க அத்தை என்கவும் நான் நல்லா இருக்கேன் நீ எப்படி டா இருக்க?.உள்ள வாங்க என்கவும் நாங்க ரெண்டு பேரும் கோவமா போகிறோம் என்று அவர்களின் இரண்டு மகன்களும் சொல்ல, அடப்பாவிகளா ஏண்டா இப்படி என்றாள்.

போடி நீ பேசாதே என்று வினோவும் மனோவும் சொல்ல, சரிங்கடா என்றாள்.

ஓ மேடம்க்கு அவ்வளவு கொழுப்பா என்று இருவரும் மிருதுளாவின் தலையில் கொட்ட ஏய் என்னடா பண்றீங்க பிள்ளை தலையில போய் அடிச்சுகிட்டுனு மதன் சத்தம் போட்டார்.

விடுடா விடுடா இதுங்க மூணு அடிச்சிக்கும்.அப்புறம் கடிச்சுக்கும் அப்புறம் சேர்ந்துக்குங்க.நடுவுல நுழைஞ்சா நம்ம தல தான் உருலுமே என்றவாறு சுரேந்தர் அங்கிருந்த சோபாவில் உட்கார, தெரிஞ்சா சரிதான் என்று மூவரும் சிரித்துக் கொண்டார்கள்.

பின்னர் வீட்டை சுற்றி பார்க்க,இரண்டு பெட்ரூம் ஹாலுடன் அனைத்து வசதிகளுடன் இருக்கவும் எதுக்கு ணா ஒருத்திக்கு இவ்வளவு வசதியென உமா முறைக்க, ஹலோ அத்தை... இது எல்லாம் இந்த மனோ சம்பாதித்து வாங்கியது... அதுவும் என் வருங்கால பொண்டாட்டிக்கு...

போனால் போகட்டும் என்று இவளை யூஸ் பண்ண பர்மிஷன் கொடுத்துருக்கேனு மனோ சொல்லவும் ஏதேஏஏஏ என்று உமா அதிர, மிருதுளாவோ அவனை கொலை வெறியில் பார்த்து விட்டு எட்டி ஒரு உதை விட, அய்யோ என்றவாறு தள்ளிப் போய் விழுந்தான்.

உமா, இதுவும் நம்ப வீடு தான் மா. கல்யாணத்துக்கு பிறகு பசங்க பிரைவேசி எதிர் பார்ப்பானுங்கணு உன் புருசன் தான் சொன்னான். அதான் குறைந்த விலையில் வந்ததுனு மனோ சம்பளத்தில் ரெண்டு வருஷத்துக்கு முன்பு தான் வாங்கினேன் என்றார்.

விக்கி எப்படி இருக்கான் டா?.இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை.பிரகாஷும் அப்படி போயிட்டானேனு மதன் வருத்தமாக சொல்ல, ம்ம் டா. மதி சொல்லியிருந்தால் மட்டும் தான் விஷயம் என்னனு தெரிஞ்சிருக்கும் டா.

எனக்கு என்னமோ இதில் வேற ஏதோ விஷயம் இருக்குனு தோணுதென்று சுரேந்தர் சொல்ல, ம்ம்...ரொம்ப தைரியமான பொண்ணு. இப்படி முடிவு எடுத்துட்டாளே டா?.. அத்தை மாமா தான் ரொம்ப வேதனைப்படுவார்கள்.

மிருது குட்டி வரதால தான் என்னால் வர முடியவில்லை. இன்னும் இரண்டு நாள் கழிச்சு நானும் வரேன் என்றான்.

நேரமும் கடந்து செல்ல படுத்து விட்டனர்

மறுநாள் பொழுதும் ஆரம்பமானது காலையிலே எழுந்து குளித்து பூஜையை முடித்த உமா சமையல் வேலையை செய்யும் போது காலிங் பெல் சத்தம் கேட்டது.

பின்னர் கதவை திறக்க குட் மார்னிங் அத்தை என்று வினோ சொல்ல, வா கண்ணா. டீ எடுத்து வரேன் என்கவும்,வக்கீல் மேடம் கையால மசாலா டீ குடிச்சு எத்தனை வருஷம் ஆகுது என்று சிரித்துக் கொண்டே சொல்ல நீங்க தான் பெரியவங்க ஆயிட்டீங்க உங்களுக்கு அத்தை வீட்டிற்கு வர ஏது நேரம் என்றார்.

அதானே வக்கீலுக்கு பேச சொல்லியா கொடுக்கணும் என்றவாறு வந்தவர்கள் என்னங்கத்தை இன்னும் அந்த தூங்க மூஞ்சிக்கு விடியலையா என்கும் போது அறிவு கெட்டவனே யாரை பார்த்துட்டு தூங்கு மூஞ்சி என்கிறடா என்றபடி காபி குடித்துக்கொண்டு கிச்சனிலிருந்து வெளியே வரும் மிருதுளாவை பார்த்தவன் என்னடி மண்டையில் ஏதாச்சு அடி பட்டுச்சா?

அதிசயமான லீவு நாள்ல இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சிட்டியே நம்ப முடியவில்லை..என் கண்ணு தானா என்று வினோ தனது கண்களை கசக்கி பார்க்க மனோவோ சத்தமாக சிரித்து விட்டான்.

பின்னர் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு நல்ல நேரத்தில் சாமி கும்பிட்டு விட்டு இரண்டு காரில் ஏறி கிளம்பியவர்கள் அரை மணி நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உதய்பூர் என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மிருதுளா தான் அங்கு சப் கலெக்டராக இன்று முதல் பொறுப்பு ஏற்பதால் அவளுக்கு வரவேற்பு கொடுக்க அலுவலகத்திலும் தயாராக இருந்தார்கள்.


சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top