Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 640
- Thread Author
- #1
நீலாங்கரை:
இந்த வீட்டில் பெட் காபி கூட குடுக்கமாட்றாங்க என்று புலம்பிக்கொண்டே கீழே வந்த மிருதுளா, தனது தாத்தா பாட்டி இருவரின் முகத்திலிருக்கும் சோகமும், ஏதோ சீரியஸாக பேசிக் கொண்டிருப்பதும் தெரிய, எங்கே இந்த வக்கீல் மேடத்தை காணும்?
அப்படி என்ன டிஸ்கஷன் போகுது என்றவாறு இருவருக்கும் நடுவில் உட்கார்ந்தாள்.
பேத்தியின் கேள்வியில் கலைந்தவர்கள் அந்த மதி பொண்ணு ஜெயில்லையே தற்கொலை பண்ணிக் கிட்டு அம்மு. பாவம் விக்கி என்கவும், என்னாஆஆஆ என்று அதிர்ந்தவள், அகல்மதி அக்கா ஜெயில்ல இருக்காங்களா என்கவும் மூத்த தம்பதிகள் இருவரும் ஆமாமென தலையசைத்தனர்.
கொஞ்சம் புரியும் போல சொல்லுங்கள் பாட்டி என்க...ஆறு பேரை கொலை பண்ணிய கேஸில் போன மாதம் தான் கைது பண்ணிருக்காங்க. இந்த விஷயம் டெல்லியில் நடந்திருக்கிறது.
ஆறு பேரில் ஒருத்தன் தமிழ்நாட்டின் மந்திரி பையன். கேஸை இங்கு மாத்தியாச்சு. நேற்று அவளுக்கு தண்டனை வழங்க வேண்டிய நாள். இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் ரேகா மூலயமாக விஷயம் தெரிந்து உன் அம்மாவும் வந்துட்டாள் டா என்றவர் பின்னர் நடந்ததை எல்லாம் சொல்ல, கேட்டவளுக்கும் அதிர்ச்சியோடு விக்ரமை நினைத்து கவலையாகவும் இருந்தது.
இப்போ அவங்க எங்கே பாட்டி?.
மித்து கூப்பிட்டு போயிருக்கான். இதிலிருந்து எப்படி மீண்டு வருவானோ தெரியலையேனு தம்பதிகள் இருவரும் விக்ரமிற்காக கவலைப்பட்டனர்.
இன்று என்று பார்த்து கடிகாரம் மிகவும் பொறுமையாக போவது போல் இருக்கவும் எப்போ விக்ரமை பார்ப்போம் என்று மிருதுளாவின் மனம் தவித்துக் கொண்டிருக்கிற ஒரு கட்டத்தில் எதுக்கு எனக்கு இப்படி இருக்கு என்று தலையை பிடித்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தவளின் பார்வையோ வாசல் பக்கமே இருந்தது.
கடைசியாக விக்ரமைப் பார்த்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கடந்து விட்டது. இந்த இடைப்பட்ட வருடங்களில் அவ்வப்போது எதோ ஒரு சூழலிலும் செயல்களிலும் விக்ரமின் நினைவுகள் வரும் போதெல்லாம் "கடுவன் பூனை" என்று சொல்ல அவளது உதடுகள் மறக்காது.
இதுவரை தனது அண்ணனின் ஆருயிர் நண்பன் என்பதை தாண்டி வேறெதுவும் நினைத்ததில்லை. ஆனால் நேற்றிலிருந்து அவளது மனதிற்குள் விக்ரமின் நினைவுகள் இம்சிக்க தொடங்கவும் அது என்னதென ஆராயும் மனநிலைக்கும் போகவில்லை.
வழக்கமாக விடுமுறை என்றால் காலை பத்து மணிக்கு மேல் எழுபவள் இன்று ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து கீழே வந்துவிட்டாள்.
இப்படியெல்லாம் தனது நினைவிற்குள் மூழ்கி காரணத்தை அலசி ஆராயும் போது அவளது போனிற்கு கால் வரவும் அதில் நிகழ்விற்கு வந்தவள் கையிலிருந்த போனில் பெயரை பார்த்து விட்டு அட்டென் பண்ணியவள் சொல்லுங்கள் மேடம் என்க..
ஏய் மித்து எப்படி இருக்க டி?.
"வாழ்த்துகள் செல்லம்"
செல்லாது செல்லாது என்ற மிருதுளா உங்கள் ஆள் வந்துச்சுனு இந்த போன் கால் இல்லையா என்கவும், ஏய்.... குட்டி சாத்தான். நீ தானே டி டிரைனிங்கில் இருக்கும் போது சரியா பேச முடியாதுனு நாலு வார்த்தை பேசியே ரெண்டு வருஷத்தை ஓட்டின என்று ரேகா திட்ட, ஆஹான்.
உங்க ஆளுக்கு மட்டும் போன் பேச முடிந்ததா சொல்லுங்களென்றாள்.
அடியேய் நீயும் அவரும் ஒன்றானு ரேகா பல்லை படிக்கவும், சரி சரி... பொழைச்சிட்டு போங்கள். அத்தை மாமா நல்லா இருக்காங்களா? என்கவும், உன் சொத்தை- நோமா அங்கு தான் வராங்க.
கிளம்பி டென் மினிட்ஸ் ஆகுது. அப்புறம் ரஞ்சித் அண்ணாக்கு பாப்பா பொறந்திருக்காள் டி என்கவும் அப்படியா என்று சந்தோஷப்பட்டவள் பின்னர் தனது பாட்டியிடம் போனை கொடுக்க, சுந்தரியும் வேலனும் தனது மகள் வயிற்று பேத்தியிடம் பேசிவிட்டு போனை வைத்தனர்.
விக்கியை பற்றி நேரடியாக விசாரிக்க முடியாது என்பதால், என்ன பாட்டி அம்மாவும் அண்ணாவும் இன்னும் வரலை? என்றவாறு வாசலுக்கு வந்தவள் தனது போனிலிருந்து அண்ணனுக்கு கால் பண்ணினாள்.
அந்த பக்கம் அட்டெண்ட் பண்ணிய மித்ரன் சொல்லு குட்டிமா என்க... என்னாச்சு ணா? என்க...
இங்கு புரொசுஜர் முடிய எப்படியும் ஈவ்னிங் ஆகிடும் போல டா தாத்தா பாட்டிகிட்ட சொல்லிடு என்கவும் சரி ணா. அவங்க எப்படி இருக்காங்களென தயங்கியபடி கேட்டாள்.
ம்ம்..
இருக்கான் டா.
இதுவரை ஒரு வார்த்தை கூட பேசல என்றவன் சரி டா அம்மா கூப்பிடுறாங்க நான் வைக்குறேனென்று அழைப்பு கட்டானது.
மாலையும் மறைய தொடங்கும் நேரத்தில் காரின் ஹாரன் சத்தம் கேட்டதும் இயல்பாக இருப்பது போல அம்மா வந்தாச்சு பாட்டி என்றவாறு வெளியே போகவும் இரண்டு கார்களும் உள்ளே வந்து நின்றது.
ஏய் சின்ன குட்டி என்றபடியே வெளியே வந்த பாட்டி அவங்களை தொடதே தள்ளி போடி என்றவர், மூன்று பேரும் வெளியே இருக்கும் பாத்ரூமில் குளித்துவிட்டு வாங்களென்றார்.
விக்ரமோ பொம்மை போல இறங்கி நண்பனோடு போவதை பார்த்த மிருதுளாவிற்கு சொல்லொன்னா வேதனையாக இருக்கவும் அவளது கண்ணிலிருந்து இரண்டு துளிகள் கன்னத்தில் வழிந்தோட அதில் சுதாரித்தவள் வேறு பக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டவளோ வேகமாக கிச்சனிற்கு போக, என்ன வேண்டும் குட்டிமானு மாலா கேட்க, அம்மா வந்தாச்சுங்க கா.
நான் டீ போடுறேன் என்கவும் அப்படியா, சரி டா. நான் போய் உமாக்கு துணி எடுத்து கொடுக்குறேனென்று அங்கிருந்து போனார்.
நேரமும் கடந்து சென்றது..
கண்ணா இதை குடி என்று டீ கப்பை விக்ரமிடம் நீட்ட வேண்டாமென்று தலையசைத்தான்.
காலையிலிருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்கலை பா. நீ தெம்பா இருந்தா தான் வசுவையும் அண்ணாவையும் சமாளிக்க முடியும் கண்ணா.
காரண காரியங்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை ராஜா. எத்தனையோ இடிகளை தாங்கி இன்று நிமிர்ந்து நிற்கிற மனசை விட்டுடாத கண்ணா என்றபடி அவனது கன்னத்தை தடவி சொல்லிய சுந்தரியின் கண்ணிலிருந்து கண்ணீர் வர மறக்கவில்லை.
ஏன் பாட்டி எனக்கு மட்டும் இப்படி நடக்கின்றது?.
நினைவு தெரிந்த நாளிலிருந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லையே பிறகு என் தலையெழுத்து எதுக்கு இப்படி?.
எதற்காக இவள் கொலை பண்ணினானும் தெரியலை. ஏன் தற்கொலை பண்ணிக் கொண்டாளென்றும் தெரியவில்லை. இவளுக்காக நான் ஒருத்தன் இருப்பதே நினைவு இல்லையா?.
ஒரு நிமிடம் கூட என்னை பற்றி யோசிக்காமல் இப்படி பண்ணிட்டாளே...
கண்ணா...
வேண்டாம் டா.
அவள் மனசுக்குள் என்ன இருந்ததென நமக்கு தெரியாதே...இதிலிருந்து கடந்து வா என்றவர் ஒருவழியாக அவனை தேற்றி டீ குடிக்க வைத்தவர் அடுத்தது என்னவென்று பேசும் போது, விக்ரம் கூட நானும் போறேன்னு மித்ரன் சொல்ல அதுவும் சரியென்கும் போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
யாரு வந்துருக்கானு உமா கேட்கும் போது தான் தனது அத்தை மாமா வரும் விஷயம் மிருதுளாவுக்கு ஞாபகம் வரவும் அச்சோ...
மாமா தான் மா என்கவும், அப்படியானு அதிர்ந்த உமாவோ வேகமாக எழுந்து வாசலுக்கு போவதற்குள் அவருடைய அண்ணன் சந்திரனும் அண்ணி சந்திரிகாவும் உள்ளே வர, வாங்க ணா. வா சந்திரிகா என்க..
நல்லாருக்கியா கண்ணம்மானு தனது தங்கையின் தலையை தடவினார்.
நல்லாருக்கேன் ணா என்றவாறு தனது தோழியும் அத்தைமகளுமாகிய சந்திரிகாவின் கையை பிடித்து கொண்டு உள்ளே வர பின்னர் அனைவரிடமும் நலம் விசாரித்தனர்.