Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 689
- Thread Author
- #1
ஏன் உங்க மனைவி ரிட்டையர் கலெக்டர் தானே அவங்களுக்கு தெரியாதா அரசாங்க விஷயத்தை வெளியே சொல்ல கூடாதென்று மித்ரன் கேட்க, இந்த அவமானம் உனக்கு தேவையா டா என்று தனது நண்பனை பார்த்து வேலன் தாத்தா சிரிக்கவும், அதற்கு சுந்தரமூர்த்தி தாத்தாவோ என்ன பண்றது வாங்கி வந்த வரம் என்றார்.
அதன் பின்னர் நாட்களும் துரிதமாக ஓடியது. பிசினஸில் கவனம் இருந்தாலும் மிருதுளாவின் பாதுகாப்பிற்கு தேவையான அத்தனையும் விக்ரம் கவனிக்காமல் இல்லை.தனது காதலியாக இருந்தபோதே அவளை பாதுகாக்க நினைத்தவன் தன்னில் சரிபாதி வருங்கால மனைவி சும்மா விடுவானா.
மலைவாழ் மக்களோ, ரோடு போட வந்தவர்களுக்கு அவர்களால் முடிந்த உணவுகளையும் சமைத்துக் கொடுக்க அங்கே ஒரு புதிய பந்தம் உருவாகியது.
நேரம் கிடைக்கும்போது எல்லாம் மிருதுளா வேலை நடக்கும் இடத்திற்கு போய் சோதனை செய்யாமல் வராமல் இருக்க மாட்டாள்.
அவளின் துணிச்சலையும் மக்களுக்காக அவள் போராடுகிறதையும் பார்த்து மாதர் சங்கங்களும் மற்ற அமைப்புகளும் அவளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
எல்லாரும் சமாதானமானார்கள்.ஆனால் ரேகா மட்டும் சமாதானமாகவே இல்லை. எப்படி என்னிடம் நீங்கள் போலீஸ்காரர் என்பதை மறைக்கலாமென்று அவள் சண்டை போட மித்ரன் தான் பாவம் அவளிடம் மாட்டிக் கொண்டு பாடாத பாடுபட்டுக் கொண்டிருந்தான்.
ஆர்மியில் சர்வீஸ் முடிந்து வந்த போது டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததாகவும் உங்களுடைய சேவை நாட்டுக்கு வேண்டுமென்று சொல்ல பின்னர் இடைப்பட்ட நாளில் அதற்கான பரிச்சை எழுதி அதில் தேர்வானதையும் ஏற்கனவே விக்ரம் சிபிஐ ஆபிசர் என்பதையும் சொன்ன பிறகுதான் ஓரளவுக்கு சமாதானமானாள்.
தனது அப்பாவிற்கு ஆப்ரேஷன் இருப்பதால் ஒரு மாதம் மெடிக்கல் லீவில் போயிருந்த வினோ இந்த விஷயத்தை கேள்வி பட்டதும் உடனே கிளம்பி வந்தவனோ குட்டிமா என்று அவளை அணைத்துக்கொள்ள, எனக்கு ஒன்றும் இல்லை டா.நல்லாருக்கேன்.
உன்னை யார் டா வரச் சொல்லியது?அங்கிளை பார்க்க தானே அனுப்பி வைத்ததென்று மிருதுளா சண்டைப்போட, அது எப்படி டி வராமல் இருப்பேன்.நான் வந்த பிறகு அங்கு போகலாம்னு சொன்னனே எங்கேயாவது கேட்டியாடி கொழுப்பெடுத்தவளே என்று சத்தம் போட்டவன், இனி இப்படி எல்லாம் பண்ணக்கூடாது டி.
எனக்கு இருப்பது ஒரே தங்கச்சி என்று அவளது தலையில் மென்மையாக முத்தம் வைக்க, விக்ரமிற்கு தான் அவர்கள் பந்தத்தைப் பார்த்து கன்னத்தில் அறை வழங்கியது போல இருந்தது.
அப்போ பரத்-கமலி கல்யாணத்தை முதலில் முடித்து விடலாம் என்று சுந்தரமூர்த்தி தாத்தா சொல்ல, தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே என்று பரத் பாட போடா போக்கிரி என்றார்.
சரி மூர்த்தி நாளை ஏன் கடத்திகிட்டு.பொண்ணு வீட்டுக்கு சம்மதம் என்றால் வர முகூர்த்தத்தில் கல்யாணத்தை வைத்துக் கொள்வோம். வா நேரில் போய் பேசிவிட்டு வரலாமென்று இரண்டு தாத்தாவும் அவர்கள் மனைவியோடு கமலி வீட்டிற்கு வந்தனர்.
வாங்க.மிருதுவை பார்க்க தான் நாங்கள் கிளம்பிக் கொண்டிருந்தோம் என்று கமலியின் அப்பா சொல்ல, பின்னர் வந்த விஷயத்தை வேலன் சொல்ல அவரோ இவர்களை பார்த்து கையை கூப்பினார்.
ஏன் இப்படி?.கையை இறக்குப்பா என்ற சுந்தரமூர்த்தி கல்யாண தேதியையும் முடிவு பண்ணிவிட்டு வீட்டிற்கு வந்தவர்கள் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் ஆளுக்கொரு வேலையை கையில் எடுக்க, அவர்கள் குறித்த நாளில் கோலாகலமாக பரத்- கமலி திருமணம் நல்லபடியாக முடிந்தது.
ஆறு மாதங்களுக்கு பிறகு...
காலை நேரம். வீடே பரபரப்பாக இருந்தது. கமலி தனது ஸ்டெதாஸ்கோப்பை பையில் திணித்துக் கொண்டு கிளம்பத் தயாரானாள். மருத்துவமனையில் இன்று அவளுக்கு முக்கியமான அறுவை சிகிச்சைகள் வரிசை கட்டி நின்றன.
"கமலி, டிபன் சாப்பிட்டுட்டு போம்மா," என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் மாமியார் குமாரி.
"நேரமாச்சு அத்தை, ஹாஸ்பிடல்லயே பார்த்துக்கிறேன்," என்று சொல்லிக்கொண்டே விறுவிறுவென்று ஹாலைக் கடந்தவள், சட்டென்று நின்றாள்.
திடீரென்று உலகம் அவளைச் சுற்றி ஒருமுறை வேகமாகச் சுழன்று நின்றது. கண்கள் இருள, நிலைதடுமாறி சோபாவின் கைப்பிடியைப் பற்றிக்கொண்டாள். அவள் முகம் சட்டென்று வெளுத்துப் போனது.
சத்தம் கேட்டு ஓடி வந்த பரத், "கமலி! என்னாச்சு? உடம்பு முடியலையா?" என்று பதற்றத்துடன் அவளைத் தாங்கிப் பிடித்து அமர வைத்தான்.
குமாரியும் பதறியபடி தண்ணீர் கொண்டு வந்தார்.
கமலி மெல்லக் கண்களைத் திறந்தாள். ஒரு நிமிடம் அமைதியாகத் தன் நாடித் துடிப்பையும், அந்தத் தலைச்சுற்றலின் தன்மையையும் கவனித்தாள். அவள் ஒரு திறமையான மருத்துவர் என்பதால், அந்தத் தலைச்சுற்றல் வெறும் அசதியால் வந்தது அல்ல என்பதை அவள் உள்மனம் சட்டென்று கணித்தது.
கடைசியாகத் தனது மாதவிடாய் சுழற்சி தள்ளிப்போன தேதியை மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்த்தாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
"கமலி, ஏன் சிரிக்கிற? உடனே கிளம்பு, போய் செக்கப் பண்ணலாம் ," என்றான் கவலையுடன்.
அவள் அவன் கையைப் பிடித்து அழுத்தியவள், "நான் டாக்டரா சொல்றேன்... அதை விட நீங்கள் பெரிய டாக்டர்....நாடி பிடித்துப் பார்த்தால் புரிந்து விடும்..எனக்கு வேற எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா, நம்ம வீட்டுக்கு ஒரு புது வரவு வரப்போகுதுன்னு மட்டும் புரியுது," என்றாள் கண்கள் பனிக்க.
அந்த ஒரு நொடி, வீட்டில் நிசப்தம் நிலவியது. அடுத்த விநாடி உண்மை புரிந்ததும் பரத்தின் முகம் அப்படியே மலர்ந்தது. "நிஜமாவா கமலி?" என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.
"ஆமாம் அத்தை, நீங்க பாட்டியாகப் போறீங்க!" என்று கமலி சொல்ல, குமாரியோ ஆனந்தக் கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டார்.
"டாக்டர் பொண்ணுக்கே டாக்டர் பார்க்க வேண்டிய நிலைமை வந்துடுச்சே!" என்று பரத் கிண்டல் செய்ய, அந்த வீடு முழுவதும் மகிழ்ச்சியும், சிரிப்பொலியும் நிறைந்திருந்தது. அன்று மருத்துவமனைக்கு விடுமுறை சொல்லிவிட்டு, குடும்பமே அந்தச் சந்தோஷத்தை இனிப்புடன் கொண்டாடத் தொடங்கியது.
விஷயத்தை கேள்விப்பட்டு எல்லாரும் வீட்டிற்கு வர, ஹேய் நான் மீண்டும் அத்தையாகிவிட்டேன் என்று மிருதுளா குதிக்க விக்ரமுக்கோ அவளை அணைத்து முத்தமிட உள்ளமும் உடலும் பரபரத்தது.
அந்த மலைக் கிராமமே இன்று ஒரு திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. எங்கும் தோரணங்கள், மங்கள இசை, மற்றும் அந்த மக்களின் முகங்களில் பல தலைமுறைக்காலக் கனவு நனவான திருப்தி.
மிருதுளா இப்போது முழுமையாகக் குணமடைந்துவிட்டாள். அவள் ஆசைப்பட்டபடியே, முதல்வர் அவளைக் கொண்டே அந்தப் புதிய சாலையைத் திறந்து வைக்க உத்தரவிட்டிருந்தார். பச்சை நிறப் பட்டுச் சேலையில், நெற்றியில் ஒரு சிறிய தழும்புடன் (அது அவளது வீரத்தின் அடையாளம்) மேடையில் நின்றாள் மிருதுளா.
அவளுக்கு இருபுறமும் அண்ணன்கள் பரத் மற்றும் மித்ரன் கம்பீரமாக நின்றிருக்க, கீழே முதல் வரிசையில் அவளது வீட்டினர். விக்ரம் கூட்டத்தோடு கூட்டமாக நின்று, தன் காதலியின் சாதனையை கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ரிப்பனை வெட்டி சாலையைத் திறந்து வைத்த பின் மிருதுளா மைக்கைப் பிடித்தாள்:
"இந்த ரோடு வெறும் தார்ச் சாலை இல்ல... இது இந்த மக்களோட முன்னேற்றத்துக்கான பாதை. என்னைக் கடத்தி மிரட்டினவங்க நினைச்சாங்க, என்னை முடக்கிட்டா இந்தத் திட்டம் நின்னுடும்னு. ஆனா, எனக்குப் பின்னாடி என் குடும்பமும், என் வருங்கால கணவர் விக்ரமும் உறுதியா நின்னதுனாலதான் இன்னைக்கு இது சாத்தியமாச்சு."
இதைச் சொல்லும்போது அவள் விக்ரமைப் பார்த்து மெலிதாகச் சிரிக்க, விக்ரமின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
சாலை திறக்கப்பட்டதும், முதல் வாகனமாக ஒரு ஆம்புலன்ஸ் அந்தப் பாதையில் பயணித்தது. அதைக் கண்டதும் அங்கிருந்த முதியவர்கள் கைகூப்பி அழுதனர். "இனிமே எங்க ஊர்ல யாரும் வழியிலேயே உயிர் விட மாட்டாங்கம்மா... நீ நல்லா இருக்கணும் தாயீ!" என்று மிருதுளாவை வாழ்த்தினர்.
"பார்த்தீங்களா நம்ம பொண்ணை அவங்க சாமி மாதிரி கும்பிடுறாங்க," என்று பெருமிதப்பட்டாள். சுரேந்தர் தன் மகளை அணைத்துக் கொண்டு, "நீ கலெக்டரா ஜெயிச்சதை விட, ஒரு மனுஷியா ஜெயிச்சதுதான் எனக்குப் பெருமைடா," என்றார்.
இனியாவது கல்யாண வேலையை ஆரம்பிக்கலாமா என்று கேட்க இருவரும் சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தனர்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீஞ்சூரில் இருக்கும் வேலனின் பூர்வீக வீடு புதுப்பிக்கப்பட்டது. தங்கள் பேத்தியின் திருமணம் தங்கள் பிறந்த ஊரிலேயே நடக்கப்போவதை நினைத்து வேலன் சுந்தரி தம்பதியினருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
இத்தனை வருஷமாக பூட்டி இருந்த இடமோ இந்த இடைப்பட்ட மாதத்தில் மறுசீரமைப்பு நடந்து பழைய கம்பீரத்தோடு நிமிர்ந்து நின்றது.
உலகத்தில் வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் பூர்விகத்தில் இருக்கும் மகிழ்ச்சி யாருக்கும் வராது என்பதை அவர்கள் உணர்வு பூர்வமாக உணர்ந்து கொண்டனர்.
சென்னையிலும் ஆபீஸ் இருப்பதால் மித்ரன் ரேகா தம்பதிகள் மட்டும் அங்கேயே தங்கிக்கவும் மற்றவர்கள் எல்லாம் ஊரோடு வர முடிவு செய்தனர்
அதோ இதோ என்று நாட்களும் ஓட...இருவரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் களைகட்டின.
எல்லாவற்றையும் விட முக்கியமான அந்த 'திருமணப் புடவை' எடுக்கும் நாள் வந்தது. விக்ரமும் மிருதுளாவும் தங்கள் குடும்பத்தினருடன் நகரின் பெரிய பட்டுச் சேலை கடைக்குச் சென்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், விக்ரமின் கண்கள் மிருதுளாவை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தன.
கடை ஊழியர் அடுக்கடுக்காகப் பட்டுப் புடவைகளை எடுத்துப் போட்டார். இளஞ்சிவப்பு, மாம்பழ மஞ்சள், பச்சை என வண்ணங்கள் ஜொலித்தன. மிருதுளாவின் அம்மா ஒரு அடர் பச்சை நிறப் புடவையை எடுத்துக் காட்டினார்.
உமா, "மிருது, இந்தப் பச்சை உனக்கு எடுப்பா இருக்கும் பாரு."
மிருதுளா அதை வாங்கித் தன் தோளில் வைத்துப் பார்த்தாள். பிறகு மெல்லத் திரும்பி விக்ரமைப் பார்த்தாள். அவன் முகத்தில் ஒரு சின்ன அசைவு கூட இல்லை. அவளுக்குப் புரிந்துவிட்டது, அவனுக்கு அது பிடிக்கவில்லை என்று.
அடுத்தடுத்து பத்து புடவைகள் பார்த்தும், விகாரமின் முகத்தில் அந்த 'ஸ்பெஷல்' திருப்தி வரவில்லை. கடைசியாக, ஊழியர் ஒரு அழகான 'முத்து வெள்ளை' மற்றும் 'சிவப்பு' கலந்த பார்டர் கொண்ட ஒரு பட்டுப் புடவையை விரித்தார்.
அந்தப் புடவையைப் பார்த்ததுமே அவன் கண்கள் விரிந்தன. அவன் மெல்ல அவளிடம் நெருங்கி வந்து காதருகே கிசுகிசுத்தான்.
"மிருது... இந்த கலர் தான். இதுல நீ அப்படியே அந்த நிலா மாதிரியே இருப்ப. அன்னைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சு மொட்டை மாடியில பார்த்தப்போ இருந்த அதே அழகு இதுல தெரியும்."
மிருதுளா வெட்கத்தில் சிவந்தாள். "உங்களுக்கு இது பிடிச்சிருக்கா?" என்று ஜாடையாகக் கேட்க, அவன் ஆமென்று தலையசைத்தான். பெரியவர்களிடம் அந்தப் புடவையே இறுதியானது என்று சொல்லிவிட்டார்கள்.
அடுத்து விக்ரமுக்குத் துணி எடுக்கும் நேரம். மிருதுளா சும்மா இருப்பாளா? அவள் ஒரு அழகான மிதக்கும் சந்தன நிறப் பட்டுச் சட்டையையும், அதற்குப் பொருத்தமான பார்டர் கொண்ட வேட்டியையும் தேர்வு செய்தாள். "நான் மட்டும் அழகா இருந்தா போதுமா? என் பக்கத்துல நிக்கிற மாப்பிள்ளையும் கம்பீரமா இருக்கணும்ல!"
அதில் என்னடி சந்தேகம் என்றவாறு அந்தப் பட்டு வேட்டியைத் தன் கையில் தொட்டுப் பார்த்தான். "நீ செலக்ட் பண்ணது எதுவா இருந்தாலும் எனக்கு அது ஸ்பெஷல் தான் மிருது" என்றான்.
மற்றவர்களுக்கும் துணிகள் எடுத்து முடித்துவிட்டுத் திரும்பும் போது, இருவர் கையிலும் அந்தப் பெரிய பைகள் இருந்தன. ஆனால், அந்தப் பைகளை விட அவர்கள் மனதுக்குள் இருந்த மகிழ்ச்சி தான் கனமாக இருந்தது.
"மிருது, அந்தப் புடவையைக் கட்டிக்கிட்டு நீ மேடைக்கு வரும்போது, நான் வேற யாரையும் பார்க்க மாட்டேன். உன்னையே தான் பார்த்துட்டு இருப்பேன்." என்றான் விக்ரம்.