• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
681
மறுநாள் பொழுதும் வந்தது.சொந்த பந்தங்கள் எல்லாரும் வீட்டிற்கு வருவதை பார்த்த விக்ரம் எதுக்கு எல்லாரும் வந்திருக்காங்க என்றான்.

ம்ம்...எல்லாம் வேண்டுதலை தான்...ஆமா உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை?.

குட்டிமா நிச்சயத்துக்கு அவங்க எல்லாம் போக மாட்டாங்களா எல்லாருக்கும் தானே சொந்தக்காரர்கள் என்று பரத் கேட்க ஆமாம் டா. ஆனால் நடக்காது நிச்சயதார்த்தத்துக்கு எதுக்கடா இத்தனை பேர் வராங்க என்றான்.

அது நமக்கு மட்டும் தான் தெரியும் இவங்களுக்கு தெரியாதே ராசா என்று நண்பனின் வாயை அடைத்தவன் இவனைக் கொண்டு போய் சேர்க்கிறதுக்குள் எனக்கு பாதி உசுரு போய்டுமே என்று புலம்பி கொண்டிருந்தான்.

அவன் புலம்பலை பார்த்து சுந்தரமூர்த்தி தாத்தாவும் சத்தமாக சிரித்தார்

நீலாங்கரை:

சுரேந்தர் - உமா தம்பதியினரின் இல்லம் இன்று ஒரு தேவாலயம் போலக் காட்சியளித்தது. வாசலில் கட்டப்பட்டிருந்த பச்சை மாவிலைத் தோரணங்களும், காற்றில் மிதந்து வந்த நாதஸ்வர இசையும் அந்த இடத்தையே மங்கலமாக மாற்றியிருந்து.

தன் மகள் ஒரு மாவட்ட ஆட்சியராகப் பெருமை சேர்த்தது ஒருபுறம் என்றால், அவளுக்குப் பிடித்தமானவனையே (அவளுக்கே தெரியாமல்) மணமகனாகத் தேர்ந்தெடுத்த திருப்தி சுரேந்தரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்றிருந்த சுரேந்தர், வாசலுக்கு வரும் ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி வரவேற்றார். "வாங்க... வாங்க... எங்க வீட்டு மகளோட பெரிய விசேஷம், எல்லாரும் இருந்து ஆசிர்வதிக்கணும்" என்று நெகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

உமாவோ பட்டுப்புடவையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். விருந்தினர்களுக்குப் பன்னீர் தெளிப்பதும், அவர்களுக்குச் சந்தனம் கொடுப்பதும் என அவர் காட்டிய உற்சாகம், ஒரு தாயின் கனவு நனவாகும் தருணத்தைப் பிரதிபலித்தது.

ஒரு வழியாக மீஞ்சூர் ல இருந்து எல்லாரும் புறப்பட்டு சென்னையில் இருக்கும் மிருதுளாவின் வீட்டிற்கு வந்து சேர மாலை ஆனது. அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்ததை பார்க்கவே அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வர, பக்கத்தில் வந்த பரத்தின் கையை பிடித்து அழுத்தவும் டேய் இது கை..இரும்பு கிடையாது. உன் வீரத்தை அங்க போய் காட்டு என்று பல்லை கடித்தான்.

அப்பொழுது மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்கள் என்று குரல் கேட்கவும் எவன்டா அவன் பின்னாடியே வர்றது என்று விக்ரம் கோவமாக திரும்பிப் பார்க்க கையில் ஆர்த்தி தட்டோடு வந்த உமா விக்கி என்று கூப்பிடவும் அவர் சத்தத்தில் திரும்ப அவன் தலையில் மூன்று சுற்று சுற்றி பொட்டு வைத்தார்.

என்னடா நடக்குது இங்கே என்று அவன் அதிர வாங்க மாப்பிள்ளை என்று சுரேந்தர் அவனை பார்த்து கை கூப்ப...மாமா என்று விக்ரம் அதிர, மற்றவர்களோ சத்தமாக சிரித்து விட்டனர்.

என்னடா மாப்பிள்ளை உன் நிச்சயத்தை நீயே நிறுத்திக்கிறியா என்று பரத் கேட்க திரும்பி நண்பனை ஒருமுறை முறைத்தவன் ரூமுக்கு வாடா உனக்கு இருக்கு என்று பல்லை கடித்தான் .

போடா என்றவன் டைம் ஆயிடுச்சு 6:00 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்குது அதுக்குள்ள வரணும் போடா என்று அவனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து ரூமுக்கு போனவன் என்ன மச்சி நிறுத்தனும்னு வந்து இப்படி 32 பல்லையும் காட்டிக்கொண்டு நிக்கிறியே...

அடப்பாவிகளா...

ஏன்டா எனக்கு தான் நிச்சயதார்த்தம் நான் தான் மாப்பிள்ளை என்று சொல்லவே இல்ல...என் மனசு என்ன பாடுபட்டுதுனு தெரியுமாடா என்று சொல்லவும், அது எங்களுக்கு எப்படி தெரியும்?...நீ சொன்னாதானே தெரியும் என்று நக்கலாக கேட்டுக் கொண்டே மித்ரன் அங்கு வர நீயுமாடா இதுல கூட்டணி என்றான்.

ஏன் டா... நாம அப்படியா பழகினோம்?.

உன் மனசில் குட்டிமா இருப்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல தோணலை இல்லையா? என்று மித்ரன் கேட்க, பங்கு என்ன சென்டிமென்ட் நாடகமாக்கும்...

அவனை கிளம்ப சொல்லுடா... இல்லை ரெண்டு வீரப்பனும் கிளம்பி வந்து பக்கம் பக்கமா பேசுங்கள் டா... சத்தியமாக அதை தாங்க எனக்கு தெம்பு இல்லை ராசா என்னும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது...

நான் சொல்லலை....கதை திற டி என்றவாறு பரத் ரெஸ்ட் ரூமிற்குள் ஓடிப்போக, மித்ரன் போய் கதவை திறக்க, உள்ளே வந்த இரண்டு தாத்தாக்கள் ஏன் டா அறிவு கெட்டவனுங்களா... நல்ல நேரம் இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது.

என்னமோ புள்ளதாச்சி ஆடி அசைந்து கிளம்புற போல இன்னும் இந்த எருமை மாடு நிக்குது... பந்தலில் எல்லாரும் மாப்பிள்ளையை காணும் னு கேள்வியா கேட்டு கொல்லுறாங்க...

இங்க என்ன னா சாவகாசமா கதை பேசுறீங்களென்று வேலன்- சுந்தரமூர்த்தி இருவரும் சராசரியாக திட்டியவர்கள், எங்கே இன்னொரு வளர்ந்த மாடு?...

நேரத்தோடு வந்து சேருங்கள் டா... இவனுங்க எல்லாம் என்னத்தை குடும்பம் பண்ண போறானுங்களோ என்றவாறு இருவரும் அங்கிருந்து வெளியே போக, யாத்தேஏஏ என்றவாறு காதை குடைந்தபடி வந்த பரத் ஒய் பிளட் சேம் பிளட் என்க... நண்பர்கள் மூவரும் சத்தமாக சிரித்து விட்டானுங்கள்.

சாரி டா மச்சியென்று விக்ரம் தனது நண்பனுங்களை அணைக்க, மரியாதையா காலில் விழுந்து மனிப்பு கேளு அப்போது யோசிக்கிறோம் என்று மித்ரன் சொல்ல, எதேஏஏ...அடேய் உங்களுக்கு இருக்கும் ஒரே மச்சான் டா... என்னை மரியாதையாக நடத்தினால் தான் உங்கள் தங்கச்சியை நல்லா பார்த்துப்பேன் என்கவும், த்தூ ....

காதலை சொல்ல துப்பு இல்லை... இதுல பகுமானம் வேற... முதலில் நார்நாராக என் தங்கச்சிக்கிட்ட கிழி வாங்காமல் குடும்பம் நடத்தும் வழியைப் பாரு டா என்ற பரத் சூட்கேஸை திறந்து இருவருக்கும் டிரஸ் எடுத்து வைத்தான்.

ரொம்ப மானத்தை வாங்குறானுங்களே என்று புலம்பிக்கொண்டே ரெஸ்ட் ரூமிற்குள் போன விக்ரம் வேகமாக ஒரு குளியலை போட்டு வந்தவன் அங்கிருந்த டிரஸை போட்டு பார்க்க இதுவரை இல்லாத தேஜஸ் இப்போது அவன் முகத்தில் வந்திருந்தது.

மச்சி எப்படி இருக்குடா என்க... செருப்பை கழட்டி நாலு அடி வேண்டும் என்றாலும் அடிச்சிக்க, இப்படி வெட்கப்படாத டா... சத்தியமா இந்த கொடுமையை எல்லாம் பார்க்க முடியலை என்று மித்ரன் தன் தலையில் அடித்துக்கொள்ள... மச்சி உன் பங்கு ரொம்ப சிலுத்துக்குறான்.

நீயாவது சொல்லு என்கவும்,
என் வாயிலிருந்து நல்லா வந்துரும் வேண்டாம் டா என்கவும்..
பொறாமை பிடித்த பயலுங்க என்றவாறு ஒருமுறை கண்ணாடியில் தன்னை பார்த்தவன் வாங்கடா என்று மணமேடையை நோக்கிப் போனான்.

வெளியே இவ்வளவு கொண்டாட்டங்கள் நடந்தாலும், மாடியில் இருக்கும் தன் அறையில் மிருதுளா ஒரு சிறைக்கைதியைப் போலவே உணர்ந்தாள். அவள் மனம் விக்ரமின் நினைவுகளோடு போராடிக் கொண்டிருந்தது.

தோழிகள் அவளுக்குப் பட்டுப்புடவை கட்டி, நகைகளை அணிவித்துக் கொண்டிருந்தனர். கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தைப் பார்த்தபோது, அவளுக்கு அது தன்னுடைய முகமாகவே தெரியவில்லை.

"என் காதலை அவனிடம் சொல்லத் துணிவில்லாத கோழை ஆகிவிட்டேனே..." என்று அவள் உள்மனம் கதறியது.

ஒவ்வொரு முறை வெளியே கேட்கும் சிரிப்புச் சத்தமும் அவளுக்கு ஒரு முள்ளாய் தைத்தது. பெற்றோர் தனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த இந்த ஏற்பாடுகளைத் தட்டவும் முடியாமல், விக்ரமை மறக்கவும் முடியாமல் அவள் ஒரு நடைப்பிணமாக அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.

தோழிகள் அவளைக் கைபிடித்து அழைத்துச் சென்றபோது, அவள் கால்கள் தரையில் பாவாமல் தள்ளாடின. தலையை நிமிர்த்தி யாரையும் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. விக்ரமைத் தவிர வேறு எவரையும் மணமகனாகப் பார்க்கும் தைரியம் அவளுக்குக் கிடையாது.

மேடைக்குக் கீழே அவளது பெற்றோர் சுரேந்தரும் உமாவும் ஆனந்தக் கண்ணீருடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேடைக்கு அழைத்து வரப்பட்ட மிருதுளா, ஒரு இயந்திரத்தைப் போல மெதுவாக நடந்தாள். சுற்றிலும் இருந்த உறவினர்களின் வாழ்த்துச் சத்தமும், கேமராக்களின் மின்னொளியும் அவளுக்கு எரிச்சலூட்டின.

தன் வாழ்நாள் முழுவதையும் விக்ரமின் நினைவுகளோடு கழிக்கப் போகிறோம் என்று எண்ணியபோது, அவளது பட்டுப்புடவையின் பாரத்தை விட மனதின் பாரம் அதிகமாக இருந்தது.

மணமகன் ஏற்கனவே மேடையில் அமர்ந்து, பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை மிருதுளா கவனித்தாள். ஆனால், அவன் முகத்தைப் பார்க்க அவளுக்குத் துணிவில்லை.

அருகில் இருப்பவன் யார் என்று கூடப் பார்க்காமல், வெறும் தரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

புரோகிதர், "மணமகன் மற்றும் மணமகள் மோதிரம் மாற்றிக் கொள்ளலாம்" என்கவும் சுரேந்தர் தட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுத்தார்.

மாப்பிள்ளை மெதுவாக மிருதுளாவின் கையைப் பற்றினான். அந்தத் தொடுதல்... அது அவளுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகத் தோன்றியது.

அவள் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தது. "யார் இது?" என்ற கேள்வியோடு மெல்லத் தன் இமைகளை உயர்த்தியவளோ அதிர்ந்து போக, அதே காதலோடு, அதே குறும்புச் சிரிப்போடு விக்ரம் அமர்ந்திருந்தான்.

மிருதுளாவால் எதையும் நம்ப முடியவில்லை. அவள் கண்கள் அகல விரிந்தன. மூச்சு சீரற்றுப் போனது.

"நீ... நீங்கள் எப்படி இங்கே?" என்று சத்தமில்லாமல் அவளது உதடுகள் மட்டும் அசைந்தன.

தம்பி நல்ல நேரம் போயிட்டு இருக்கு பொண்ணை அப்புறம் பார்க்கலாம் என்று ஐயர் சொல்லவும் மானத்தை வாங்காதடா என்று பக்கத்தில் இருந்த பரத் விக்ரமின் தோளைத் தட்டிச் சொல்ல, பின்னரே மிருதுளாவின் கையில் மோதிரத்தை போட்டு விட்டான்.

குட்டிமா என்று குமாரி நகைப்பெட்டியை நீட்ட அதிர்வில் இருந்தவளோ பொம்மை போல் வாங்கி விக்ரமின் விரல்களைப் பிடித்து நடுக்கத்தோடு போட்டு முடித்தாள்.

மிருதுளாவுக்கு தற்போது உலகமே ஸ்தம்பித்தது போல இருந்தது.

பெரியவர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். "என்ன ரெண்டு பேரும் சிலையாட்டம் இருக்குறீங்க? உங்களுக்குத் தெரியாம நாங்களே பேசி முடிச்சிட்டோம். இது எங்க 'சர்ப்ரைஸ்'!" என்றனர்.

பின்னர் பெரியவர்கள் மேடைக்கு வந்து இருவரையும் ஆசீர்வதித்து செல்ல, போட்டோகிராபரும் இதை அழகாக படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

நிச்சயதார்த்தம் இனிதே முடிந்தது. இரு வீட்டாருக்கும் இடையே தாம்பூலங்கள் மாற்றப்பட்டு, திருமண தேதி குறிக்கப்பட்டது. அந்த ஒரு வார காலத் தவிப்பு இப்போது ஒரு பெரும் நிம்மதியாக மாறியிருந்தது.

உறவினர்கள் அனைவரும் உணவருந்தச் சென்ற வேளையில்,
அவர்களைத் தனியாகப் பேசச் சொல்ல அனுப்பி வைத்தனர்.

மொட்டை மாடியில் தனியாக விக்ரம் நின்றிருந்தான்.

சிறிது நேரத்தில், மெல்லிய கொலுசுச் சத்தம் கேட்க, மிருதுளா அங்கே வந்தாள். வேகமாக திரும்பிப் பார்த்தான். நிலவின் ஒளியில், நிச்சயதார்த்தப் புடவையில் அவள் ஒரு தேவதை போலத் தெரிந்தாள்.

சிறிது நிமிடங்கள் இருவரிடமும் அமைதியே நிலவியது. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு மிருதுளாவின் விசும்பல் சத்தம் கேட்டது.

"அதைப் பார்த்தவன்... இப்போ எதுக்குடி அழற? எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சுல்ல?" இல்லை என் கூட நிச்சயம் ஆன கவலையா என்றான்.

அதைக்கேட்டவளோ வேகமாக வந்து விக்ரமின் சட்டையைப் பிடித்து உலுக்கி அழத் தொடங்கினாள்...என்ன பேசுறிங்க மாமா?.

"இந்த ஒரு வாரம் நான் அனுபவிச்ச நரகத்தை என்னால மறக்கவே முடியல. உங்களை எனக்காகத்தான் பார்த்திருக்காங்கன்னு தெரியாதப்போ, நான் மனசுக்குள்ள உங்களைக் காதலிக்கிறேன்னு சொல்ல முடியாம எவ்ளோ துடிச்சேன் தெரியுமா?"

"ஒரு வாரமா நான் பட்ட நரகம்! உங்களை விட்டுட்டு வேற யாரோ ஒருத்தரோட வாழணுமேன்னு நினைச்சு ஒரு ஒரு நிமிஷமும் செத்துட்டு இருந்தேன்.

"நீங்க இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. உங்க மேல நான் வச்சிருக்கிற காதல் சாதாரணமானது இல்லைங்க மாமா. எப்போ வந்துச்சினு கேட்டால் எனக்கு தெரியாது? "

ஆனால் நான் உங்களை மட்டும் தான் மனதார நேசிக்கிறேன் என்று அவனது நெஞ்சில் மேல் சாய்ந்து கொண்டு அழுதாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
681
விக்ரமோ தன்னவளின் வார்த்தைகளைக் கேட்டு பேச்சற்று நின்றவனோ பின்னர் சுதாரித்து அவளை இறுக அணைக்க, அழுகை ஓய்ந்து, இப்போது அவளிடம் விசும்பல் மட்டும் வந்தது.

சிறிது நிமிடங்களுக்கு பிறகு அன்னார்ந்து பார்த்தவள் ஏன் மாமா என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல?"

"சத்தியமா எனக்கும் தெரியாது டி! உன்னை காதலிக்கிற விஷயத்தை நேற்று தான் டி வீட்டில் சொன்னேன்.நான் இங்கு கிளம்பி வத்ததோ உன் நிச்சயத்தை நிறுத்த...ஆனால் இங்கு வந்த பிறகு தான் நான் தான் உனக்கு பார்த்த மாப்பிள்ளை என்பது தெரிந்து எனக்கும் அதிர்ச்சி டி".

அதோடு உனக்கும் விஷயம் தெரியாதுனு சொன்னாங்க... சரி அப்படியே இருக்கட்டும் நேரில் பார்த்து உன் ரியாக்ஷனை தெரிந்துக்கலாம்னு தான் இருந்தேன் என்றான்.

"நம்ம காதல் ஜெயிச்சிருச்சு. நம்ம வீட்லயே நமக்காகப் பேசி முடிச்சிருக்காங்கன்னா, நாம எவ்வளவு குடுத்து வச்சவங்க? இனி அழாதே..." என்று அவளது கண்ணீரைத் தன் விரல்களால் மெதுவாகத் துடைத்து விடாடவன் "இத்தனை வருஷமா உன்னைப் பார்த்திருக்கேன் மிருதுளா. ஆனா, இன்னைக்கு நீ என் 'நிச்சயிக்கப்பட்ட மனைவி'ங்கிற உரிமையோட பார்க்கும்போது... நீ இன்னும் அழகாத் தெரியற. இந்த ஒரு வாரம் பட்ட கஷ்டத்துக்குப் பதிலா, கடவுள் உன்னை இவ்வளவு அழகா என் முன்னாடி நிறுத்தியிருக்கார்னு தோணுது."

அவன் மெல்ல அவளது கைகளைப் பற்றினான். அவளது விரல்களில் மின்னிய அந்த நிச்சயதார்த்த மோதிரம், அவர்களின் பந்தத்திற்கு அத்தாட்சியாக இருந்தது.

காற்றில் பறந்த அவளது கூந்தலை மெதுவாகக் காதோரம் ஒதுக்கிவிட்டான்.

"மனசுக்குள் ஒருவிதமான படபடப்பு இருக்குங்க மாமா. என் காதலனே என் கணவனா வர்றது எல்லாருக்கும் கிடைக்காத வரம். அந்த வரத்தை ரசிச்சுட்டு இருக்கேன்."

குனிந்து அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் "இனி இந்தச் சிரிப்பு மட்டும் தான் உன் முகத்துல இருக்கணும். தூரத்துல இருந்து உன்னை ரசிச்ச காலம் முடிஞ்சுது... இனி ஆயுசுக்கும் பக்கத்துல இருந்து ரசிப்பேன்"

மித்து என்க... ம்ம் என்றாள்...

நல்லா பஞ்சு மூட்டை போல இருக்கடி என்கவும் அதில் சுதாரித்த பிறகே இவ்வளவு நேரம் தன்னவனை அணைத்துக்கொண்டு நிற்பது புரிந்து வெட்கம் வரவும் அய்யோ என்று விலகியவளின் கரத்தை எட்டிப் பிடித்து இழுக்க, விக்ரமின் நெஞ்சில் மோதி நின்றாள்.

தன்னவளை இறுக்கி அணைத்து அவளது கழுத்தோரம் தனது முகத்தை வைத்தவன் இப்போது என் மனசு எப்படி இருக்கிறது தெரியுமா டி?.உன் மஞ்சள் தண்ணீர் விசேஷத்தில் முதல் முறையாக உன் கழுத்தில் மாலை போடும் போது என் மனசு என்ன சொல்லியது தெரியுமா டி?.

அடுத்த முறை உன் கழுத்தில் ஊறரிய என் மனைவி என்ற உரிமையோடு போடணும்னு நினைத்தது. அந்த எண்ணத்தில் தான் போட்டேன்.நீ நினைக்கலாம் அகல்மதியை நான் கல்யாணம் பண்ண இருந்தனே பிறகு எப்படினு?. தாலி கட்டும் நிமிடத்தில் நின்ற கல்யாணம் எத்தனையோ..
என் மனசு எண்ணம் அத்தனை யிலும் நிறைந்திருப்பவள் நீ மட்டுமே என்றான்.

தன்னவனின் வார்த்தைகளை கேட்டவளுக்கு சந்தோஷத்தில் கண்கள் கலக்கியது..

அப்போது விக்ரமின் போனிற்கு கால் வரவும், ப்ச் என்றவாறு எடுத்து அட்டென் பண்ணியவன் சொல்லு டா என்க... அடேய் அறிவுகெட்டவனே தனியா பேச தான் அனுப்பி வைத்தது.

இவ்வளவு நேரம் என்ன பண்ற?.

வா எருமை மாடு ஊருக்கு எல்லாரும் புறப்பட்டாச்சு என்று பரத் திட்ட, ம்ம்ம் என்று கட் பண்ணியவன் தன்னவளை வேகமாக திருப்பியவனோ அவசர அவசரமாக எண்ணற்ற முத்தங்களை கொடுத்து விட்டு ஊரில் பார்க்கலாம் என்றவாறு கீழே போனான்.

பின்னர் மிருதுளா வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு மீஞ்சூருக்குப் புறப்பட்டனர்.

எவனோ ஒருத்தன் நிச்சயத்தை நிறுத்த வந்தான் அந்த ரோசக்கார பயல் இங்கு இருக்கானா தாத்ஸ் என்று பரத் கேட்க, யாருக்கு தெரியும்டா என்றவாறு சுந்தரமூர்த்தி சிரிக்க, ஜன்னல் ஓரம் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த விக்ரமின் நினைவுகளோ அவனது நிச்சயத்தில் தான் இருந்தது.

மறுநாள் விடியலும் தொடங்கியது..

முதல்வர் அலுவலகம்:

இன்று முதல்வரை பார்க்க ஏற்கனவே அப்பாயிண்மெண்ட் வாங்கியதால் மிருதுளா தனது தாயோடு வந்திருந்தாள்.

அடர்ந்த காடுகளுக்கு இடையே வசிக்கும் மலைவாழ் மக்களின் கஷ்டங்களை நேரில் கண்டவள். ஒரு அவசரத் தேவைக்குக் கூட ஆம்புலன்ஸ் வர முடியாத அந்தப் பாதை அவளை வெகுவாகப் பாதித்தது.

ஏற்கனவே இதைப் பற்றி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தாள். அதைப் பற்றி பேச இன்று அவளை வர வைத்திருந்தனர். அதோடு தன்னவனிடம் மெசேஜில் சாட்டிங்கிள் இருக்கும் போது மேடம் சார் வர சொல்கிறார் என்க...

வரேன் மா என்றவாறு கதவை திறந்து உள்ளேப் போனவள் மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்க, முதல்வர் கந்தனும் தலையசைத்தார்.

சொல்லுங்கள் என்றதும் "சார், அந்த மக்களுக்கு ஒரு ரோடு போட்டுக் கொடுத்தா அவங்க வாழ்க்கை மாறும்," ஏற்கனவே இதைப்பற்றி உங்களிடம் பேசியிருக்கிறேன் என்றவளோ அங்குள்ள சூழலையும் அவர்கள் கஷ்டத்தையும் ஆதாரங்களோடு எந்த பயமும் இல்லாமல் உறுதியாகப் பேசினாள். அவளது நேர்மையைக் கண்டு வியந்த முதல்வர், மௌனமாக சிரித்தார்.

அவரின் சிரிப்பை பார்த்து மிருதுளா யோசிக்க, த கிரேட் அயர்ன் பெண் புலி அட்வகேட் உமா மகேஸ்வரி சுரேந்தருக்கு பிறந்த மகள் மட்டும் எப்படி பூனை ஆகும் என்றவர் தனது பி. ஏ வை அழைத்து ஏதோ சொல்ல, அரை மணி நேரத்தில் மீஞ்சூர் மாவட்டத்தில் இருக்கும் கீழையூர் மலைவாழ் மக்களின் நீண்டகால கனவான சாலை வசதி திட்டத்தின் ஆணைக்கு கையெழுத்திட்டார்.

இதைப் பார்த்த மிருதுளாவிற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் இந்த செய்தி ஹெட்லைன் நியுசாக வந்தது.

மிக்க நன்றிங்க சார் என்றவாறு வெளியே வந்தவள் தனது அம்மாவிடமும் விஷயத்தை சொல்ல, ஒரு தாயாக மகளை நினைத்து பெறுமைப்பட்டார்.

பின்னர் இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வர அன்று மாலை பிளைட்டில் கிளம்பி மீஞ்சூருக்கு வந்தவளை அழைத்துப்போக விக்ரம் அங்கே ஏர்போர்ட்டில் காத்திருந்தான்.

மீஞ்சூர்:

அந்தக் காட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்களுக்கும், கடத்தல் தொழில் செய்பவர்களும் டிவியில் வந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்து போயினர்.

"ரோடு வந்தா போலீஸ் நடமாட்டம் அதிகமாயிடும், நம்ம தொழில் படுத்துடும்," என்ற அந்த கடத்தல் கும்பலின் தலைவனோ அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசித்து திட்டத்தை தீட்டத் தொடங்கினான்.

வெல்கம் மை டியர் மிசஸ் மிருதுளா விக்ரம் என்கவும் அந்த வார்த்தை மனதிற்குள் சந்தோஷத்தை கொடுத்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஹலோ...

இப்போது நான் மிருதுளா சுரேந்தர் தான். இன்னும் மிசஸ் ஆகவில்லை என்று முறுக்கி காட்ட, ஏய்.... ஏற்கனவே நீ எனக்கு பாதி பொண்டாட்டி ஆகிட்டடி என்றவாறு அவளது கையில் இருக்கும் மோதிரத்தை பிடித்துக் கொண்டு சொல்ல, பாதி தானே என்றாள்.

விரைவில்...மொத்தமும் எனக்கு தான் என்றவனோ காரை ஓட்ட ம்ம் என்றாள். பின்னர் இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வர அம்மு என்று பாட்டி அவரை அணைத்துக் கொண்டார்.

நிச்சயம் ஆன பிறகு ஒரே வீட்டில் இருந்தால் யாராவது எதாவது பேசுவார்கள்... அதனால் கலெக்டர் பங்களாவில் தங்க, தனது அப்பாவையும் அழைத்துக்கொண்டு மாலாவும் அங்கு வந்து விட்டார்.

பின்னர் அவள் ரெப்ரஷ் ஆகி வந்ததும் அவளது செயலை பாராட்டிக் கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.

மறுநாள் விடியலும் அழகாய் தொடங்க மூவரும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு பங்களாவிற்கு வர, சரிங்க ம்மா நான் கிளம்புறேன் என்றவளோ ஆபிசிற்கு தயாராகிச் சென்றாள்.

ஒருமாதம் கடந்திருந்தது. ரோடு போடும் வேலை இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிப்பதால் மலைப்பகுதியில் ஆய்வு முடித்துவிட்டுத் திரும்பும்போது, திட்டமிட்டபடி அந்தக் கும்பல் மரங்களைச் சாய்த்து மிருதுளாவின் காரை வழிமறித்தது.

முன்னே வந்த போலீஸ்காரர்கள் துப்பாக்கியோடு கீழே இறங்க, எங்கிருந்தோ வந்த அம்புகள் பாதுகாப்பிற்கு வந்தவர்களைத் தாக்கிச் சாய்த்தது.

சிறிது நிமிடங்களுக்குள் இதெல்லாம் நடந்து விட காரில் இருந்த மிருதுளாவோ அதிர்ந்து போனவள் பின்னர் சுதாரித்து விட்டு தனது பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் கன்னை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு விக்ரமுக்கு கால் பண்ண அது நெட்வொர்க் இல்லாத ஏறியா என்பதால் கால் போகவில்லை.

பயம் ஒரு பக்கம், எப்படி இந்த விஷயத்தை தன்னை சேர்ந்தவர்களுக்கு தெரிவிப்பது என்பது தெரியாமல் அவள் தடுமாறும் போது, கார் கண்ணாடி கதவு படாரென்று உடைய அடுத்ததை சுதாரிப்பதற்குள் மிருதுளாவை கடத்திச் சென்று அடர்ந்த காட்டின் குகை ஒன்றில் சிறை வைத்தனர்.

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top