• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
681
மீஞ்சூர்:

யோசனையோடு கீழே வந்த விக்ரமுக்கு அங்கு உட்கார்ந்து இருக்கும் வினோவை பார்த்தவுடன் அவ்வளவு ஆத்திரம் வந்தது.இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வாடா என்கவும் பையா எனக்கு ஒரு ஹெல்ப் என்று வினோ கேட்க, சொல்லுடா என்றான்.

மிருதுவ நீங்க ஏர்போர்ட்ல விட்டுடூங்களேன். யானைத் தந்தம் கடத்த வர போல ஒரு மெசேஜ் வந்திருக்கு இன்னைக்கு நான் ரவுண்ட்ஸ் போகணும்.

ஆஹா..பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக விக்ரமின் மனதிற்கு குதூகலமாக இருக்கவும் அதை வெளியே காட்டிக் கொள்ளாதவன் அப்படியாடா. ..உன் கூட வேற ஆஃபீஸர்ஸ் இருக்காங்களா என்று உண்மையான பதற்றத்தோடு கேட்க, அது இருக்கிறாங்க பையா பிரச்சினை இல்லை நான் பத்து நிமிஷத்துல கிளம்பனும்.

அவகிட்ட நான் போன்ல பேசிக் கொள்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் பதிலை கூட எதிர்பார்க்காமல் வேகமாக அங்கிருந்து சென்று விட்டான்.

பெருமூச்சு விட்டவள் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஊருக்கு போவதற்கு தயாரானவள் ஒருமுறை கண்களை மூடி தன் மனதில் இருக்கும் காதலன் விக்ரமை நினைத்துப் பார்க்க அவளையும் மீறி அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.

பின்னர் சுதாரித்துவிட்டு முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டது போல டிராலியை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.

அப்போது அவளது போனிற்கு கால் வரவும் அட்டென் பண்ணியவள் ம்ம் எங்க இருக்க? நான் ரெடி ஆகிட்டேன் என்கவும் அந்த பக்கம் வினோ சொன்னதைக் கேட்டவளோ திகைத்துப் போய் விக்ரமை பார்க்க அவனோ ரகசியமாக சிரித்துக் கொண்டான்..

பின்னர் முதிய தம்பதிகளிடம் சொல்லிக்கொண்டு அவள் வெளியே போக விக்ரமும் பின்னாடியே விசிலடித்தபடி வந்தான்.

மிருதுவோ பின்பக்க கதவை திறந்து லக்கேஜை வைத்துவிட்டு உட்கார, டிரைவர் சீட்டில் இருந்தவனோ வண்டியை ஸ்டார்ட் பண்ணாமல் அப்படியே இருக்கவும், டைம் ஆகுது கிளம்புங்க என்றாள்.

அவனோ பதில் சொல்லாமல் விசிலடித்தபடி உட்கார்ந்திருக்க பல்லைக் கடித்துக் கொண்டு கதவை திறந்து இறங்கியவளோ முன்பக்கம் வந்து உட்காரவும், எட்டி அவளது கழுத்தை பிடித்து தன்பக்கம் இழுத்தவன் உனக்கு நான் என்ன டிரைவரா டி?.முன்ன உட்கார கசக்குதோ என்கவும் நூலிடை இடைவெளியில் தெரியும் கூரான மீசைமுடிகள் எங்கே தன்னை தீண்டி விடுமோ என்று தவிப்போடு பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

நிச்சயத்துக்கு ரொம்ப குதிச்சிக்கிட்டு கிளம்புற போல... போடி போ... எவ்வளவு தூரம் ஆடூறனு நானும் பார்க்கிறேன் என்றவனோ காரை ஸ்டார்ட் பண்ணி புயல் வேகத்தில் ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தான்.

தன்னவனின் கோபம் புரிந்தாலும் அமைதியாக இறங்கி உள்ளேப் போனவள் மற்ற பார்மாலிட்டிஸ் முடித்துக் கொண்டு பிளைட்டை நோக்கிப் போக விக்ரமின் பார்வைகள் அவள் முதுகை துளைப்பதை உணர்ந்தாலும் திரும்பி பார்க்காமல் கண்ணில் நீர் கசிய சென்றாள்.

பல்லைக் கடித்துக் கொண்டு வெளியே வந்தவன் எப்படியாவது இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த வேண்டும் என்றபடி பரத்துக்கு கால் பண்ண,அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவனிடம் எங்கடா இருக்க என்கவும்..ம்ம் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன் என்றான்.

சரி நீ நாளைக்கு பொறுமையா மேயி...வா உடனே நம்ம சென்னைக்கு போகணும் என்றான்.

அடேய் நாளன்னைக்கு என் தங்கச்சிக்கு நிச்சியதார்தம் இருக்குடா. என் ஆசை மாப்பிள்ளைக்கு டிரஸ் எடுக்கறதுக்காக நான் கடையில இருக்கிறேன். இப்ப போய் சென்னைக்கு கூப்பிடுற?.
என்ன விளையாடுறியா என்கவும் என்னது அவ்ளோ திமிராடா உனக்கு. .
உனக்கு மாப்பிள்ளை என்றால் அது நான் மட்டும் தான் டா என்று விக்ரம் சொல்லவும் ஓஓஓஓ...துரைக்கு அந்த எண்ணம் வேறயா.

என் தங்கச்சி புருஷனுக்கு ஆசையா டிரஸ் எடுத்துட்டு இருக்கேன். தொந்தரவு பண்ணாமல் வைடா என்று கட் பண்ணிய பரத் சிரித்துக் கொண்டான்.

இவனுக்கு எவ்வளவு திமிரு இருந்தாக்க இன்னொருத்தனை போய் இவன் தங்கச்சிக்கு புருஷன்னு சொல்லுவான். வரேன் இருடா.நேர்ல வந்து உன்னை வச்சிக்கிறேன் என்று காரை எடுத்தவனும் பரத் எந்த கடைக்கு டிரஸ் வாங்கப் போவான் என்பது தெரிஞ்சு அரை மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான்.

நிச்சயமாக தனது மச்சான் வருவான் என்று தெரிந்து கொண்ட பரத்தின் பார்வை கண்ணாடி வழியாக வெளியே தான் இருந்தது.

அதேபோல் வேகமாக வருபவனை பார்த்து விட்டவன் அவன் கதவு திறக்கும் நேரத்தில் அண்ணா என் செல்ல தங்கச்சிக்கு கோலாகலமாக நிச்சயம் ஏற்பாடு பண்ணி இருக்கோம்.

எங்களுக்கு இருக்கிற ஒரே மாப்பிள்ளை தான். நல்லா ஒரிஜினல் பட்டு வேஷ்டி சட்டை எடுங்க என் மச்சானுக்கு வேஷ்டி சட்டை அவ்வளவு நல்லா இருக்கும் என்று சொல்வது விக்ரமின் காதில் விழுந்தது.

மச்சான் என்று வந்தவனோ எதுவும் தெரியாது போல் பரத்தின் காலில் ஓங்கி மிதிக்க, சண்டாளப் பாவி பயலே..உனக்கு தான்டா துணி எடுக்க வந்திருக்கேன் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், தம்பி தரை அங்க இருக்கு.

உங்க கால் என் மேல இருக்கு என்று பல்லை கடித்துக் கொண்டு வலியில் சொல்லவும், சாரி மச்சி பார்க்கலை என்றான்.

நம்பிட்டேன் டா நீ என்ன இவ்வளவு தூரம்?.

நல்ல வேலை நீயே வந்துடா. உன்னோட அளவு தான் என் தங்கச்சி புருஷன். அண்ணா இந்த பையன் அளவுக்கு எடுத்து போடுங்க என்கவும் பரத் என்று விக்ரம் பல்லை கடிப்பது அவனுக்கு நன்றாக கேட்டது.

இது பொது இடம் என்பதால் மச்சான் அநாகரிகமாக நடந்து கொள்ள மாட்டான் என்பது புரிந்தவன் அமைதியாகவே இருக்க, அதேபோல் சேல்ஸ்மேனும் பரத் கேட்டபோல பட்டு வேஷ்டி சட்டை எடுத்து போடவும், ஒன்றாக எடுத்து விக்ரமின் மேல் வைத்துப் பார்க்க, அவனுக்கோ பச்சை மிளகாயை அரைத்து பூசியது போல இருக்கவும், பரத்திற்கு சந்தோஷம் தாங்கவில்லை.


விக்ரமின் அளவிற்கு மாப்பிள்ளைக்கு தேவையான அத்தனையும் வாங்கி பில் போட்ட பரத் மாப்பிள்ளை ரொம்ப நன்றி டா. மச்சானோட அளவுக்கு எப்படி வாங்குவது என்று நான் வேற முழிச்சுக்கிட்டு இருந்தேன்.

நல்லவேளை நீ வந்த டா என்கவும், வீட்டுக்கு வா டா குறுத்து எலும்பிலே மிதிக்கிறேன் என்று விக்ரம் பல்லை கடித்தான்.

ஒழுங்கு மரியாதையா என் கூட வா என்று விக்ரம் சொல்ல, வரேன் முதல்ல எங்க போறன்னு சொல்லு என்றான்.

உன் தங்கச்சி நிச்சயத்தை நிறுத்தணும் என்கவும் என்னடா விளையாட்டு பண்ணிட்டு இருக்க? நாளை மறுநாள் அங்கு நிச்சயதார்த்தம்.. அதுக்கு தேவையான எல்லா ஏற்பாடும் அங்கு நடந்து கிட்டு இருக்கு.

இத்தனை நாள் என்ன மயிரு புடுங்கிட்டு இருந்தியா என்று பரத் உண்மையிலேயே கோபமாக கேட்கவும் அதெல்லாம் எனக்கு தெரியாது அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்க கூடாது அது மட்டும் தான் எனக்கு தேவை.

இந்த விஷயத்தை நான் தாத்தா பாட்டிகிட்ட சொல்ல போறேன் நீ பின்னாடியே வா என்று அவன் ஜீப் எடுத்துக்கொண்டு முன்னாடி போக பன்னாட பயல் இப்பயாவது ஒரு முடிவுக்கு வந்தானே என்று சிரித்துக் கொண்டே காரில் ஏறி அவனை பாலோ பண்ணிக் கொண்டே வந்தான்.

வீட்டிற்குள் நுழைந்த விக்ரமின் முகம் உற்சாகமாக இருந்தது. ஆனால், வரவேற்பறையில் காத்திருந்த தாத்தாவின் குரல் அந்த உற்சாகத்தை உடைத்தது.

"விக்ரம், இங்க வா... நாளைக்கு மறுநாள் உனக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு பண்ணிருக்கோம்" என்றார் தாத்தா அழுத்தமான குரலில்.

அதிர்ச்சியில் உறைந்து போன விக்ரம், "என்னது? எனக்கா? யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்தீங்க?" என்று சத்தமாகக் கேட்டான்.

அவன் பேசிய தோரணையைக் கண்டு கோபமடைந்த பாட்டி குறுக்கிட்டார். "என்னடா இது புதுப் பழக்கம்? பெரியவங்க நாங்க உனக்கு நல்லதுதானே செய்வோம்? இதுல கேக்க என்ன இருக்கு?" என்று ஆவேசப்பட்டார்.

"என்னை மன்னிச்சிருங்க பாட்டி... என்னால இந்த நிச்சயதார்த்தத்துக்குச் சம்மதிக்க முடியாது. ஏன்னா, நான் வேறொரு பெண்ணைக் காதலிக்கிறேன்," என்று கணீர் என்று கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்டு வீடே ஒரு நிமிடம் அமைதியானது. பரத் தனது கட்டைவிரலை தூக்கி பாட்டியிடம் சைகை காட்ட வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட பாட்டியின் முகம் சிவந்தது. "இப்பவா இதைச் சொல்லுவ? நாளைக்கு விடியப்போனா விசேஷம்... ஊரு உலகம் என்ன பேசும்னு யோசிச்சியா? யாரைக் கேட்டு காதலிச்ச?" என்று கோபமாகக் கத்தினார்.

"காதல் கேட்டு வர்றது இல்ல பாட்டி, அது தானா நடக்குற விஷயம்." "பிடிக்காத ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டு, அந்தப் பொண்ணோட வாழ்க்கையையும் என் வாழ்க்கையையும் கெடுக்க நான் விரும்பல."

"யாரைக் கேட்டு காதலிச்சேன்னு கேட்குறீங்களே... என் மனசைக் கேட்டுத்தான் காதலிச்சேன். அவளைத் தவிர வேற யாரையும் என் வாழ்க்கைத் துணையா என்னால நினைக்க முடியாது," என்று உறுதியாகக் கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான் விக்ரம்.

போகும் பேரனை பார்த்துக் கொண்டிருந்த சுந்தர மூர்த்தி இவன் என்ன இப்படி பேசிட்டு போறான் என்க...என்ன பெருசு காது அவுட்டா?.

தெளிவாக தமிழ் ல தானே அந்த மாடு சொன்னது என்று பரத் கேட்க, அடேய் ஓங்கி மிதித்தேன் குருத்தெலும்பு உடைஞ்சிடும்.

போய் அவனை சமாதானம் பண்ணி எப்படியாவது அங்கு இழுந்துட்டு வா என்க...ஏன் பெருசு குட்டிமா தான் பொண்ணு என்று சொன்னால் என்ன?..
பாவம் பையன் ரொம்ப பீல் பண்றானே என்கவும் இத்தனை நாள் விஷயத்தை நம்ம கிட்ட சொல்லல தானே...இன்னும் ஒரு நாள் கஷ்டப்படட்டும் ஒன்னும் தப்பு இல்லை என்று வசு சொல்லவும் தாய்க்குலமே உங்க மாஸ்டர் பிளான் இருக்கே வேற லெவல்.

ஆனா உங்களுக்கெல்லாம் வந்து வாக்கப்பட்டுக்கிட்டு நான் படுற பாடு இருக்கு அது அந்த கடவுளுக்கே பொறுக்காது .ஒரு டாக்டர் என்னை என்ன வேலை எல்லா பார்க்க வைக்கிறீங்கனு புலம்பிக்கொண்டே மாடியில் இருக்கும் தனது நண்பனின் ரூமை நோக்கிப் போனான்.

விக்ரம் தன் அறையில் அங்கும் இங்கும் வெறிபிடித்தது போல் நடந்து கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்து போயிருந்தன. கையில் இருந்த போனில் மீண்டும் மீண்டும் மிருதுவின் எண்ணை அழுத்திக் கொண்டே இருந்தான்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
681
.

"ஏன் எடுக்க மாட்டேங்கிறா? வேணும்னே பண்றாளா?" என்று தனக்குள்ளேயே கத்திக் கொண்டான்.

மறுமுனையில் 'ரிங்' போய்க் கொண்டே இருந்தது, ஆனால் அவள் எடுக்கவே இல்லை. ஒவ்வொரு முறை அழைப்பு துண்டிக்கப்படும் போதும், விக்ரமின் ஆத்திரம் பலமடங்கு அதிகரித்தது.

அவனது பொறுமை எல்லை மீறவும் இனிமேல் இந்த போன் தனக்குத் தேவையில்லை என்று முடிவு செய்தவன், அந்த விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை ஓங்கித் தரையில் அடித்து நொறுக்கத் தயாரானான்.
சரியாக அந்த நொடி...
அவன் கையை உயர்த்தி போனை கீழே வீசப் போனபோது, ஒரு வலுவான கரம் அவனது மணிக்கட்டைப் பற்றியது.

வேகமாக திரும்பிய விக்ரம், அங்கே தன் நண்பன் பரத் நிற்பதைக் கண்டான்.

பரத் அமைதியாக விக்ரமின் கையில் இருந்த போனைப் பிடுங்கி மேஜை மேல் வைத்த அடுத்த நொடி—சுவரே அதிரும் படி 'பளார்' என்று ஒரு அறை விக்ரமின் கன்னத்தில் விழுந்தது.

விக்ரம் அப்படியே அதிர்ந்து போய் நின்றான். அவனது ஆத்திரம் அந்த ஒரு அறையில் சட்டென்று அடங்கிப் போனது.

"ஒரு பொண்ணு போன் எடுக்கலங்கிறதுக்காக உன்னோட நிதானத்தை இழப்பியா?" என்று கோவத்தோடு கேட்வன் "உன் கோபத்தை காட்ட வேண்டிய இடம் உன் கையில் இருக்கிற உயிர் இல்லாத போன் இல்லை விக்ரம், உன்னோட பலவீனம் தான். முதல்ல போய்க் முகத்தை கழுவிட்டு வா, அப்புறம் பேசலாம்."

இப்ப என்ன குட்டிமாவுடைய நிச்சயதார்த்தத்தை நிறுத்தனும் உனக்கு அது தானே வேணும் என்க..ஆமாண்டா என்று விக்ரம் சொல்ல, மயிரான்...அதுக்கு இங்க இருந்து எப்படி நிறுத்த முடியும்?.

அங்க போனா தானே ஏதாச்சு பண்ணி நிறுத்த முடியும் அந்த அறிவு கூட உனக்கு இல்லையா என்கவும் வாங்கிய அறையை மறந்து ஹீஹீ என்று விக்ரம் சிரிக்க செருப்பு பிஞ்சிடும் போய் பிரஷாகி வந்து தொலை எனக்கு பசிக்கிது என்றவன் ஒத்த தங்கச்சி வச்சிக்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே முடியல என்றவாறு அங்கிருந்து சோபாவில் பரத் உட்கார, நண்பனின் புலம்பலை கேட்டு சிரித்துக் கொண்டே விக்ரமும் ரெஸ்ட் ரூமிற்குள் போனான்



நீலாங்கரை:

ஏர்போர்ட்டிற்கு வந்த தங்கையை பார்த்த மித்ரன், குட்டிமா என்று அவளின் தோளோடு கையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தவன் இரு டா கார் எடுத்து வரேனென்று அங்கிருந்து போனவன் சிறிது நிமிடத்தில் வர மிருதுவும் அமைதியாக காரில் ஏறி உட்கார்ந்தாள்.

இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர, மிருது என்று ஓடிப்போய் தனது அத்தையை கட்டிக் கொண்ட ருத்ரன், உனக்கு நிறைய டிரஸ் வாங்கியிருக்காங்க தாத்தா பாட்டி என்கவும், அமைதியாக சிரித்தவள் அண்ணன் மகனை தூக்கி முத்தமிட்டு தனது வீட்டினரிடம் நலம் விசாரித்து விட்டு பொதுவாக பேசிக்கொண்டிருந்தவள் பின்னர் இரவு டிபனை சாப்பிட்டு விட்டு தனது ரூமிற்குள் வந்தவளுக்கு தூக்கம் மட்டும் எட்டக் கனியானது....

சேருமா ?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top