Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 676
- Thread Author
- #1
ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால், இடையில் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர். விக்ரம் மிருதுளா பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டும்,இன்றுடன் நான்கு நாட்கள் ஆகிறது.அவள் கீழே வருவதற்கு முன்பே அவன் எஸ்டேட்டிற்கு போய் விடுவதும் அவள் தூங்கிய பிறகு தான் வீட்டிற்கு வருவது...
தற்போது ஒரு பில்டிங் ஹேண்ட் ஓவர் பண்ணும் சூழலில் இருப்பதால் பேரன் அதில் பிஸியாக இருக்கிறானென்று முதிய தம்பதிகள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சி க்கு இன்னும் மூன்று நாட்கள் தான் இருந்தது. மிருதுளாவிற்கு புடவை வாங்க வேண்டுமென வசு சொல்ல, அவள் தான் அங்கிருக்கிறாளே சாதாரணமாக கூப்பிட்டு போய் வாங்கிடு இதற்கு எதற்காக எல்லாரும் அலைய வைக்கணும் என்கவும்... நீ சொல்றது வாஸ்தவம் தான் சுந்தரி ஆனா இவளை இழுத்துட்டு போய் இவளுக்கே புடவை வாங்குவது தெரிந்தால் என்ன பண்றது என்கவும் அதெல்லாம் அவளுக்கு தெரியாது நான் சொல்றேன் நீ அதையே ஃபாலோ பண்ணு ..சரி என்று தனது தோழி சொன்னதை கேட்டுக் கொண்டார்.
அன்று வழக்கம் போல் ஆபீசுக்கு தயாராகி வந்தவளை பார்த்தவர் குட்டிமா ஒரு பதினோரு மணிக்கு என் கூட வர முடியுமா என்கவும் சொல்லுங்க பாட்டி எங்க போகணும்?.வேண்டும் என்றால் லீவு எடுத்துக்கட்டுமா என்று கேட்க, இல்ல ஒரு நல்ல காரியத்துக்கு புடவை வாங்கணும்.நம்ம கையால தான் வாங்கி கொடுக்கணும் அதனாலதான் டா.இந்த காலத்து பெண்களோட டேஸ்ட் உனக்கு தெரியுமே என்கவும் அதுக்கு என்ன பாட்டி நல்ல காரியம் சொல்றீங்க வராமல் இருப்பேனா?..நான் போயிட்டு ஒரு பத்தரை மணிக்கு இல்ல குட்டிமா நீ ஒரு 11 மணிக்கு நம்ம மூர்த்தி சில்குக்கு வந்துடு என்க சரிங்க பாட்டி என்றாள்.
அதே போல் ஆபிஸ்க்கு வந்தவள் முக்கியமான பைலை மட்டும் பார்த்துவிட்டு பத்து 50க்கு கிளம்பி பாட்டி சொன்ன கடைக்கு வந்து சேர, அங்கே சுந்தரமூர்த்தி வசுவுடன் பரத்தின் அம்மா அப்பா வந்திருந்தனர்.
என்னடா நடக்குது இங்கு?.
ஒரு வார்த்தை கூட நீங்க எல்லாம் வரீங்கன்னு சொல்லவே இல்லையே என்று மிருதுளா முறைக்க, நமக்கு ரொம்ப வேண்டியவங்க பங்ஷன் டா. பின்ன நம்ம புடவை எடுத்து கொடுக்கும்போது வராம இருக்கிறது நல்லாவா இருக்கும் என்று குமாரி சொல்லவும் தாய்க்குலமே நீங்கள் எப்போதும் செண்டிமெண்டா தான் பேசுவீங்க.சரி சரி ஏன் வெளியே நின்னுட்டு உள்ள போகலாம் என்றாள்.
அந்த மாவட்டத்தின் கலெக்டர் தங்களது ஷோரூமுக்கு வருவதை பார்த்து கடை ஓனரோ வாசல் வரை வந்து வாங்க மேடம் என்று வணக்கம் வைக்க நான் என்னோட பேமிலி கூட வந்து இருக்கேன் ப்ளீஸ் சார் என்றாள்.
பின்னர் முதலாவது மாடியில் இருக்கும் புடவை செக்சனுக்கு போக அங்கிருந்தவர்களும் வாங்க...என்ன பார்க்கணும் என்கவும் விலையைப் பற்றி கவலைப்படாத மிருது.
புடவை பார்க்க அவ்வளவு நல்லா இருக்கணும் உனக்கு எடுத்தால் எப்படி இருக்கும் அதே போல எடு என்கவும், பாட்டி நான் என்னைக்கு பட்டுப்புடவை வாங்கி இருக்கேன் என்று அவள் கேட்க நல்ல காரியம் டா...பார்த்து எடு ராஜாத்தி என்கவும் சரி சரி என்க..குமாரியும் வசுவும் அர்த்தமாக சிரித்துக் கொண்டார்கள்.
அவரும் ரேக்கில் அடிக்கி இருந்த புடவைகள் எல்லாம் எடுத்துப் போட ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தாள். அரை மணி நேரம் கடந்த பிறகு தான் அதிலிருந்து ஒரு புடவையை தேர்ந்தெடுத்தாள்.
பின்னர் பிரித்துக் காட்ட சொல்லிய வசுவோ மிருதுளாவின் மேல் போட்டு கண்ணாடியில் பார்க்க சொல்ல இந்த பாட்டி இருக்காங்களே என்ற முணவிக் கொண்டு அவளும் அதே போல் செய்ய அவளுக்காகவே நெய்தது போல இருந்தது அந்த புடவை. மிருதுளாவும் அதேபோல் கண்ணாடியில் பார்க்கும் பொழுது அவ்வளவு அழகாக இருந்தது.
பின்னர் அதற்கு தேவையான மற்றொரு பொருட்களையும் வாங்கணும் அதையும் வாங்கிடலாம் ராஜாத்தி என்கவும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க.. ஒரு மணிக்கு மீட்டிங் இருக்கு நான் போகணுமே என்றாள். அதுக்குள்ள முடிஞ்சிடும் என்றவர்கள் பக்கத்தில் இருந்த பேன்சி ஸ்டோருக்கு போய் புடவைக்கு மேட்ச் போல மிருதுளாவின் அளவிற்கு எல்லாத்தையும் பார்த்து வாங்கி முடித்தவர்கள் சரிடா நீ கிளம்பு என்று சொல்லிவிட்டு இவர்களும் வீட்டிற்கு வந்து விட்டனர்
அன்று மதியம் லஞ்ச் முடிச்ச பிறகு ஊழல் புகார்கள் வந்த ஒரு மணல் குவாரியை இன்று நேரடியாக ஆய்வு செய்யச் சென்றாள்.
விக்ரம் அதே பகுதியில் தன் நண்பனைப் பார்க்க வந்திருந்தான்.
அப்பொழுது நண்பனோடு பேசிக் கொண்டிருக்கும் போது கலெக்டர் கார் வருது என்று அவன் சொல்ல அப்படியா என்று திரும்பி பார்க்க, சில தூரத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கி குவாரி உள்ளே போகுபவளை பார்த்தான்.
அவர்களுக்கு தெரிந்த மணல் குவாரி என்பதால் என்னடா ஆச்சு என்று இருவரும் அங்கே வரவும் திடீரென வானம் இருட்டியது. அடுத்த சில நிமிடங்களில் கனமழை கொட்டத் தொடங்கியது.
குவாரியில் ஒதுங்க இடமில்லை. மிருதுளா நனைந்தபடியே தன் கோப்புகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்தாள். விக்ரம் தன் காரில் இருந்து குடையை எடுத்துக்கொண்டு அவளிடம் செல்லத் துணிந்தான்.
ஆனால், அவன் அங்கு செல்வதற்குள், அங்கிருந்த ஒரு இளம் அதிகாரி (மிருதுளாவின் உதவியாளர்) ஓடி வந்து, தன்னிடம் இருந்த ரெயின்கோட்டை பதற்றத்துடன் மிருதுளாவிடம் கொடுத்தான்.
"மேடம், நனையாதீங்க... இதை போட்டுக்கோங்க," என்று அவன் அக்கறையுடன் சொல்ல, மிருதுளாவும் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டாள்.
தூரத்திலிருந்து இதைப் பார்த்த விக்ரமுக்கு சுருக்கென்று கோபம் ஏறியது. நான்கு நாட்களாகத் தன்னிடம் பேசாதவள், இன்னொருவன் கொடுக்கும் உடையை வாங்கிப் போடுகிறாளா?
அவன் கையில் இருந்த குடையை இறுக்கிப் பிடித்தான். அவளுடைய கடமை உணர்வை அவன் மதித்தாலும், அந்த இடத்தில் இன்னொருவன் அவளுக்குப் பாதுகாப்பாக இருப்பதை அவன் மனதால் ஏற்க முடியவில்லை.
மிருதுளா தற்செயலாகத் திரும்பிப் பார்த்தபோது, மழையில் நனைந்தபடி நின்றிருந்த விக்ரமைக் கண்டவளோ திகைத்துப் போனாள். அவன் கண்களில் தெரிந்த அந்த 'அதிகாரப்பூர்வமான கோபம்' அவளுக்குப் புரிந்தது. அவள் மீதான அதீத உரிமை என்பதை அவள் உணர, பார்வையாலே அந்த ரைன் கோட்டை அவனிடம் கொடுக்க சொல்லி விக்ரம் சொல்லவும் முடியாது என்று அவளும் கண்களாலே பதில் சொன்னாள்.
இப்போ நீ கழட்டி கொடுக்கல என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாதுடி என்று அவன் கண்களால் சொல்லவும் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்ளடா என்று ரெயின் கோட்டை போட்டுக் கொண்டவள் இந்த பைல் எல்லாம் நான் எடுத்துட்டு போறேன் நேரா நீங்க ஆபீஸ்க்கு வாங்க என்று குவாரி ஓனரிடம் சொல்ல சரிங்க மேடம் என்றார்.
மிருதுளா விக்ரமை கண்டுகொள்ளாமல் பக்கத்தில் இருந்த ஆபீஸரிடம் சிரித்து பேசிக்கொண்டே அவனை தாண்டிச் செல்ல அந்த நேரம் வேகமாக ஜீப் ஒன்னு வந்து நின்றது அதிலிருந்து ரெயின் கோட் போட்டு கொண்டு வினோ இறங்கி வரவும் அவனைப் பார்த்ததும் விக்ரமுக்கு இன்னும் கோவம் வந்தது.
நேராக வந்தவன் அவளிடம் ஏதோ சொல்ல வரும்போது வினோ என்று கையசத்தவள் ஈரத்தில் கால் வைத்ததும் சேர் சரிக்கி விடவும் அவள் கீழே விழப் போவது தெரிந்து விக்ரம் ஓடி வந்து பிடிப்பதற்குள் குட்டிமா என்று வினோ வந்து அவளை தாங்கி விட்டான்.
ஆபீஸில் இருப்பவர்களுக்கு இருவரும் உடன் பிறப்பு என்று தெரியும் என்பதால் தவறாக நினைக்கவில்லை. இது தெரியாத விக்ரமோ வினோவின் கையில் மிருதுளா இருப்பதை பார்த்து நரநர என்று பல்லை கடிக்கவும் அவன் பக்கத்தில் இருந்த நண்பனுக்கு தான் அவனின் செயல் ஒன்னும் புரியவில்லை.
என்ன ஆச்சு கால் சுளிக்கிடிச்சா என்று பதற்றத்தோடு வினோ கேட்க...என்ன இவ்வளவு தூரம் என்று அவனின் கையைப் பிடித்துக் கொண்டு பேசியபடி கார் கிட்ட போனவள் அவள் போட்டிருந்த ரயின்கோட்டை கழட்டி அந்த ஆபிசரிடம் கொடுக்க, வேகமாக வினோ தான் போட்டிருந்ததை கழட்டி நீட்டவும் காரில் தானே போறேன் நீ போட்டுக்கோ என்றவளிடம் ஏதோ அவன் ரகசியமாக சொல்வதும் அதைக் கேட்டு அவளும் சந்தோஷத்தில் தலையசைப்பது எல்லாம் விக்ரமுக்கு பத்திக் கொண்டு வந்தது
கார் அங்கிருந்து புறப்பட்டு சென்றும் அவன் அதே இடத்தில் நிற்பதை பார்த்த நண்பன், மச்சான் மச்சான் என்று கூப்பிட்ட பிறகு சுயநினைக்கு வந்தவன் என்னடா உன்னோட செயல் எல்லாம் எனக்கு கொஞ்சம் வித்தியாசமா இருக்கு..
உனக்கும் கலெக்டர் அம்மாவுக்கு என்ன சங்கதி எங்கவும் அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ வேலைய பாரு.வீணா கற்பனை பண்ணாதடா என்கவும் மொச பிடிக்கிற நாய மூஞ்ச பாத்தாலே தெரியும் அதான் தங்கச்சி வந்ததுல இருந்து உன் மூஞ்சி போற போக்க கவனிச்சுக்கிட்டு இருந்தேனே என்னடா லவ்வா?.
அடேய் ஏண்டா நீ வேற. இப்போதைக்கு எதுவும் என்கிட்ட கேட்காத நான் அப்புறம் பேசுறேன் என்றவனும் வேகமாக ஜிப்பை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.
அன்று வழக்கம் போல் வேலை முடித்து வீட்டிற்கு வந்த மிருதுளா வழக்கம்போல் காபியை குடித்துவிட்டு தனது அறைக்குள் வந்து கதவை சாத்த, அங்கே கட்டில் மேல் கால் மேல் கால் போட்டு கொண்டு விக்ரம் உட்கார்ந்திருப்பது தெரிந்து திடுக்கிட்டுப் போனாள்.
ஒருவேளை கனவு ஏதாச்சும் காண்கிறோமா என்று கண்களை சிமிட்டி பார்க்க அப்பவும் அவன் அதே தோரணையோடு உட்கார்ந்திருப்பது தெரிந்து தாழ்பாளை விலக்க போவதற்குள் எட்டி வந்து அவள் கையோடு சேர்த்து தாழ்ப்பாளை பிடித்தவன் என்ன மேடம் ஊர் சுத்திட்டு வந்துட்டீங்களா? என்று அவளது கையை வளைத்து பிடித்தான்