Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 627
- Thread Author
- #1
"டாக்டர், கொஞ்சம் எங்க சூழ்நிலையையும் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்வது எங்களுக்குப் புரிகிறது. ஆனால், சட்டத்தையும் எங்களுடைய மேலதிகாரிகள் சொல்வதையும் தானே நாங்கள் கேட்க வேண்டும்? இப்போது ஜெயிலுக்குக் கூட்டிப் போகிறோம். அங்குள்ள சூப்பிரண்டிடம் நீங்கள் சொன்னதைச் சொல்கிறோம்," என்ற காவலரைப் பார்த்த டாக்டர், "ஓகே. இன்னும் ஒரு மணி நேரத்தில் மயக்கம் தெளிந்துவிடும், பிறகு கூட்டிப் போங்கள்," என்றார்.
"தேங்க்யூ டாக்டர்," என்றவாறு அவர்கள் வெளியே வந்தனர்.
"மேடம்!" என்று உமாவை அங்கிருந்த காவலர் ஒருவர் கூப்பிட, திரும்பிப் பார்த்தவர் "சொல்லுங்கள்," என்றார்.
"நீங்கள் இந்தப் பொண்ணோட வழக்கில் வாதாட வந்ததிலேயே ஏதோ மர்மம் இருக்குன்னு தெரிந்துவிட்டது. இவங்க உடல்நிலையைக் காரணம் காட்டிப் பரோலில் எடுத்து விடுங்கள். உங்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை. இன்று எப்படியாவது தண்டனை வந்துவிடுமென அந்த ஆறு பேர் வீட்டிலும் அவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள். இனி...?"
"ஓகே சார்.. நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. இனி நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றவர், "தேங்க்யூ," என்க, "இருக்கட்டும் மேடம்," என்றார் அவர்.
அப்பொழுது உமாவின் போனிற்கு அழைப்பு வர, திரையைப் பார்த்துவிட்டு அட்டெண்ட் பண்ணியவர், "இங்கே ஜி.ஹெச்-ல இருக்கேன்ப்பா," என்கவும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
'சரி, முதலில் இவனைப் பார்க்கலாம்' என மனதிற்குள் சொல்லிக் கொண்டவர், "விக்ரம்... விக்ரம்..." என்று அருகில் இருப்பவனின் தோளில் தட்டினார். அவனோ எதுவும் சொல்லாமல் அவரைப் பார்த்தான்.
"ஒண்ணும் இல்லை கண்ணா, எல்லாம் சரியாகிவிடும்," என்று அவர் சொல்லும்போதே புயல் போல உள்ளே வந்தவனோ, 'பளார் பளார்' என விக்ரமின் கன்னத்தில் அறைந்தான். இதைப் பார்த்த அங்கிருந்த போலீஸ்காரர்கள், "தம்பி, என்ன பண்றீங்க?" எனச் சத்தம் போட, உமாவோ "வேண்டாம்" என்று கையை அசைத்தார்.
அறை வாங்கியவனோ, "மச்சி..." எனத் தனது நண்பனைக் கட்டிக்கொண்டு கதறினான். 'இது ஹாஸ்பிடல்னு பார்க்கிறேன், இல்லையென்றால்...' எனப் பல்லைக் கடித்த மித்ரன், வேறு எதுவும் பேசாமல் நண்பனை அணைத்துக் கொண்டான்.
"மதிடா... என் மதி!" என்பதைத் தவிர விக்ரமின் வாயிலிருந்து வேறு வார்த்தை வரவில்லை.
"சரிடா, அதான் அம்மா வந்தாச்சே! இனி மதியை வீட்டிற்கு நாம கூட்டிப் போயிடலாம். நீ தைரியமாக இருடா," என்ற மித்ரன், "மாம்..." என உமாவை அழைத்தான்.
பின்னர் டாக்டர் சொன்னதையெல்லாம் உமா சொல்ல, "ஹ்ம்," என்ற மித்ரன், "வாடா," எனத் தனது நண்பனைத் தோளோடு அணைத்துக்கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமரவைத்தான்.
சிறிது நொடிகள் கடந்திருக்கவும்,
"என்னடா நடக்குது இங்கே? டெல்லியில் படிச்சிட்டு இருந்தவள் எப்படி இதையெல்லாம் பண்ணினாள்? எனக்கு எதுவுமே புரியலைடா. ரேகா விஷயத்தைச் சொன்னதும் உடனே அம்மாவை இங்கே அனுப்பி வைத்தேன். எனக்கு இப்போதுதான் லீவ் கிடைத்தது, மார்னிங்தான் வந்தேன். மதிக்கு எதுவும் ஆகாதுடா, நம்பிக்கையோடு இரு," என்று மித்ரன் சொல்ல, "புரியுதுடா," என்றவன் வேறு எதுவும் பேசவில்லை.
ஒரு மணி நேரம் கடந்து இருக்க, உள்ளே படுத்திருப்பவளுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதாக நர்ஸ் சொல்லவும், டாக்டரோ வெளியே இருப்பவர்களை வரச் சொன்னார்.
இவர்களும் உள்ளே போக, "பேஷன்ட் பற்றிய ரிப்போர்ட் இதிலிருக்கிறது, கூட்டிப் போங்கள்," என்றார் டாக்டர்.
"தேங்க்யூ டாக்டர்," என்றவாறு அகல்மதியின் கையில் விலங்கைப் போட்டு அழைத்துப்போக, அவளோ அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. "மதி... மதி..." என விக்ரம் பின்னாடியே வர, ஜீப்பில் ஏறியவளோ அங்கே பரிதவிப்போடு நிற்பவனைத் திரும்பிப் பார்த்தவள் இதழ் பிரியாமல் கண்களைச் சிமிட்டி, வழக்கம் போலச் சிரிக்கவும் ஜீப் அங்கிருந்து சென்றது.
கண்ணிலிருந்து அந்த ஜீப் மறையும் வரை பார்த்துக்கொண்டே நின்ற நண்பனின் தோளை அணைத்த மித்ரன், "வாடா," என்று தனது காருக்குக் கூட்டிப் போனான். முன்பக்கக் கதவைத் திறந்து நண்பனை உட்கார வைத்தவன், "மாம், நீங்கள்...?" என்றான்.
"நீங்கள் ரெண்டு பேரும் வீட்டிற்குப் போங்க கண்ணா. கொஞ்சம் வேலை இருக்கிறது, முடித்துவிட்டு வருகிறேன்," என்று உமாவோ, விக்ரமைப் பார்த்துக் கண்ணசைத்தார். "சரி மா," என்ற மித்ரன், காரில் ஏறித் தங்களது வீட்டை நோக்கிச் சென்றான்.
ஒரு மணி நேரத்தில் நீலாங்கரையில் இருக்கும் மித்ரனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கார் நின்று சில நிமிடங்கள் கடந்தும் விக்ரம் இறங்காமல் இருக்க, "மச்சி," என அவனின் தோளைத் தட்டினான்.
"ம்ம்," என்றவாறு கீழே இறங்கியவன், ஆறு வருடங்களுக்குப் பிறகு வந்தாலும் இன்றும் அன்று பார்த்தது போலவே இருக்கும் வீட்டைப் பார்த்தான்.
அப்போது மித்ரனின் போனிற்கு கால் வர, "மச்சி, நீ உள்ளே போ," என்றவாறு அழைப்பை ஏற்று வெளியே நின்று பேசலானான்.
விக்ரமோ ஹாலின் நடுநாயகமாக குழந்தை வடிவில் இருக்கும் கிருஷ்ணன் சிலையைப்பார்த்தபடி வீட்டிற்குள் வந்து நிற்க, அந்நேரம் "ஏய் சுவீட்டி, என்னை விடு!" என்று திரும்பியபடி ஓடிவந்த உருவமோ அங்கிருந்தவனின் மேல் மோத, இருவரும் கீழே விழுந்தனர்.
சத்தம் கேட்டு விக்ரமோ சட்டெனச் சுதாரிக்கும் முன்பே இதெல்லாம் நடந்துவிட, தன்மேல் விழுந்து கிடந்தவளின் கூந்தல் முழுவதும் தனது முகத்தை மறைத்திருக்க, "ப்ச்!" என்று அவளைத் தள்ளிவிட்ட விக்ரம், "இடியட்! கண்ணு தெரியாதா? இப்படியா வந்து மேல விழுவ?" எனத் திட்டிக்கொண்டே எழுந்தவன் கோவமாக திரும்பிப் பார்க்க, அங்கே மருண்ட விழிகளோடு, கண்களில் நீர் திரள நிற்பவளைப் பார்த்தவன் "மிருதுளா!" என்றான்.
அப்போது உள்ளே வந்த மித்ரன், "குட்டிமா!" என்கவும், தனது அண்ணனின் குரலைக் கேட்டு, 'இது நிஜமா?' எனத் திரும்பியவள், மித்ரனைக் கண்டு "அண்ணா!" என்று ஓடிப்போய் அவனை அணைத்துக்கொண்டு அழுதாள்.
"ஏய் குட்டிமா, ஏன் அழற? அதான் அண்ணா வந்துட்டேனேடா? பிறகு என்ன?" என்றவன் தனது தங்கையின் தலையில் முத்தமிட்டு, "வாழ்த்துகள் மேடம்," என்றான். "போ நீ, என்கிட்டப் பேசாதே!" என மூக்கை உறிஞ்சியவள் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.
அப்போது கோயிலுக்குப் போயிருந்த மித்ரனின் தாத்தா, பாட்டி இருவரும் வீட்டிற்குள் வந்தவர்கள் அங்கே இருக்கும் விக்ரமையும் மித்ரனையும் பார்த்துவிட்டு "விக்கி... மித்து..." என்று அதிர்ந்தனர்.
"நாங்களேதான்," என்றவாறு நண்பர்கள் இருவரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். "நல்லா இருங்கப்பா. எதுவும் கவலைப்படாதே விக்கி, அதான் நம்ம உமா வந்துட்டாளே," என்றார் சுந்தரி பாட்டி.
இதற்கு விக்ரமோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
"ஏண்டா, நாட்டுக்குச் சேவை செய்யப் போனா வீடுன்னு ஒண்ணு இருக்கிறதை மறந்துட்டியா? அஞ்சு வருஷமா இந்த வீட்டுப் பக்கமே திரும்பவில்லையே?" என்று தனது பேரனை முறைத்தார் வேதாச்சலம்.
"எப்படி இருக்கிறீங்க தாத்தா, பாட்டி?" என்று இருவரும் அவர்களை விசாரிக்க, "நாங்க நல்லா இருக்கிறோம். எப்பா, ரெண்டு பேரையும் பார்த்து எத்தனை வருஷம் ஆகுது? இவன் தான் மிலிட்டரிக்கு போயிட்டான், நீயாவது அடிக்கடி வந்து தாத்தா பாட்டியைப் பார்க்கிறது இல்லையா?" என்று விக்ரமிடம் கேட்டார் சுந்தரி பாட்டி.
"என்ன பண்றதுங்க பாட்டி, எல்லாம் என் தலையிலேயே வந்து விழுந்துடுச்சு," என்று விரக்தியாக சொன்னான்.
"ஹம் கண்ணா, எந்த நேரத்தில் என்ன நடக்குமோ அது அந்த கண்ணனுக்குத்தான் தெரியும்," என்றவர், "ஏய் வாலு! நீ என்ன பேய் அறைந்த மாதிரி நிக்கிற? போய் மாலாக்கிட்ட சொல்லி டீ எடுத்துட்டு வரச் சொல்லு," என்றார்.
பின்னர், பூஜை கூடையிலிருந்த விபூதி, குங்குமத்தை அவர்களுக்குப் பூசிவிட வந்தபோது, "இரு மா, அவனுங்க குளித்துவிட்டு வரட்டும்," என்றார் வேதாச்சலம்.
"வாடா," எனத் தனது நண்பனை அழைத்துக் கொண்டு மாடியில் இருக்கும் தனது அறைக்கு வந்தான் மித்ரன்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் வைத்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்கவும், "அம்மா..." என்று சிரித்துக் கொண்டவன், "விக்கி, குளிச்சிட்டு வாடா," என்றான்.
"டிரஸ் எதுவும் இல்லையேடா?" என விக்ரம் சொல்ல, "வரும்போதே நான் வாங்கினேன், உனக்கு எங்கேயாவது சுற்றம் ஞாபகம் இருக்கிறதா?".
எனக்கு வர கோவத்திற்கு நல்லா மிதிக்கணும் போல இருக்கிறது. பட் சூழல் சரியில்லை. உன்னை பிறகு கவனிக்கிறேனென்றான்.
சேருமா?