Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 673
- Thread Author
- #1
மீஞ்சூர்:
ஹிந்திக்கார பையன் யாருன்னு தெரியலையே இவ கூடையே சுத்திக்கிட்டு இருக்கானே என்று பல்லை கடித்தவன் பின்னர் சிரித்துக் கொண்டே யாருங்க பாட்டி? எனக்கு தெரியலையே என்றவாறு அவர்களுக்கு எதிரே வந்து உட்கார்ந்தவன் பார்வையோ மிருதுளாவின் மேல் தான் இருந்தது.
அவன் பார்வை தன்னையே துளைப்பது தெரிந்தாலும் மிருது இனி இவனை கண்டு கொள்ளாதடி. உனக்கு தான் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்களே என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் வலித்தது.
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தனது போனில் எதையோ பார்க்க, பாரேன்...இவளுக்கு எவ்வளவு திமிரு?.கொஞ்சம் கூட நம்மளை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டுறாளேடா விக்ரம் என்று மனதிற்குள் கறுவிக்கொண்டான்.
விக்கி...இந்த சார் தான் நம்ம மதன் ஜனனியுடைய இரண்டாவது பையன் வினோ. சின்ன வயசுல பார்த்தது உனக்கு தெரியாது தான் என்கவும் அப்படியா என்று ஆச்சரியப்பட்டவன் டேய் வினோ....நீயா டா என்க..
நானே தான் பையா என்று வினோ சிரிக்க அடப்பாவி...அடையாலமே தெரியலடா என்றவன், சித்தப்பா சித்தி எப்படி இருக்காங்க? .மனோ எப்படி இருக்கிறான்?.
எல்லாரும் நல்லா இருக்காங்க பையா. எனக்கு தான் இந்த காட்டேரி இருக்கிற ஊர்ல போஸ்டிங் போட்டு இருக்காங்களே என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு வினோ சொல்ல, அதைக் கேட்டு மிருதுளா முறைக்க, விக்ரமோ சத்தமாக சிரித்து விட்டான்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனது பேரனின் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்த வசு சுந்தரமூர்த்திக்கு சந்தோஷமாக இருந்தது.
என்னவோ அவன் சிரிப்பதைக் கேட்க அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்கவும், மேலும் தன்னுடைய காதல் இவ்வளவு சீக்கிரம் முறிந்து போனதே என்று வலி ஒரு பக்கம் இருக்க, அந்த இடத்தில் இருக்க அவளுக்கு மனம் வரவில்லை.
எனக்கு தலை வலிக்கிற போல இருக்கு பாட்டி நான் ரூமுக்கு போகிறேன் என்று அங்கிருந்து வேகமாக எழுந்து மாடிக்கு சென்று விட்டாள்.
உனக்கு தலை வலிக்கும் தான் டி. இவ்வளவு நேரம் அவன் கிட்ட சிரிச்சு பேசிகிட்டு இருந்த அப்போ வலிக்கல. இப்ப நான் வந்த உடனே உனக்கு வலிக்குது என்று மனதிற்குள் சொல்லியவன் பின்னர் வினோவிடம் பொதுவாக பேசிக் கொண்டிருக்க, வேலையாளும் டீ எடுத்துட்டு வந்து அவனுக்கு கொடுத்தார்.
அதை வாங்கியவன் அக்கா, மிருதுக்கும் தலைவலிக்குதுன்னு சொன்னா கொஞ்சம் இஞ்சி டீ போட்டு குடுங்க என்கவும் சரிங்க தம்பி என்று அவர் போக, இதைக் கேட்டு வசுவும் சுந்தரமூர்த்தியும் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்.
அப்புறம் பையா போஸ்டிங்க்ல நான் ஜாயின் பண்ண வரைக்கும் இங்க தான் தங்க போறேன்...என் இம்சையை நீங்கள் தாங்கி தான் ஆகணும்னு வினோ சொல்ல, டேய் இத நீ சொல்லனுமாடா.நீ எதுக்கு அங்க தங்குகிறாய் இங்கே நம்ம வீட்ல இருக்க வேண்டியதுதானே?..
பாரஸ்ட் ஆபிசர் பாரஸ்டில் தங்குவது தானே உலக வழக்கம் எனக்கு மட்டும் காட்டுக்குள் குப்பை கொட்டணும் என்ன ஆசையா என்றான்.
சாந்தாவும் டீ எடுத்துக் கொண்டு வர, அதை பார்த்த விக்ரம், கொடுங்க க்கா நான் ரூமிற்கு தான் போறேன் குடுத்துடுறேன் என்றவாறு அவர் பதிலை கூட எதிர் பார்க்காமல் வாங்கிக் கொண்டு மேல போகவும், அப்படியே என்னைப் போலவே என் பேரன் இருக்கிறான் என்று தாத்தா சிரிக்க, என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை என்று வசு அதிர்ச்சியோடு சொல்லவும் இன்னும் நீங்க பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்க பாட்டி என்று வினோ சிரித்தான்.
ஏன் தாதி, ரெண்டு பேருக்கும் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் என்கிற விஷயம் தெரியுமா என்கவும் இல்ல கண்ணு தெரியாது.
விக்ரம் கிட்ட முதல் நாள் சொல்லிக்கொள்ளலாம் என்று தாத்தா சொல்லிட்டாங்க. ஆனா மிருது கிட்டயும் மாப்பிள்ளை விக்கிதான் சொல்லலைன்னு நேத்து தான் சுந்தரி போன் பண்ணி சொன்னாள் என்கவும், ஹா ஹா...இரண்டு பேருக்கும் ஷாக் குடுக்கணும் அதை பார்த்து நாம் ரசிக்கணும்.
ஹைபை கொடுங்க தாதி யென்று வினோ கையை நீட்ட, நல்ல குடும்பம் என்று தாத்தா சிரித்தார்.
ஆமா பின்ன இப்பயே உங்க பேரன் கிட்ட சொன்னா தாம் தும் தைய தக்கான்னு குதிப்பானே. கடைசி நேரத்தில் சொன்னால் அவனால் எதுவும் பண்ண முடியாது இல்லையா? .
இப்படியே தனிமரமா நிக்கணும்னு ஆசைப்படுகிறீர்களா என்று வசு முறைக்கவும், மனைவி சொல்வதின் உண்மையை புரிந்து கொண்டவர், இல்ல வசு நீ சொன்னது சரிதான் என்றார்.
பின்ன எதுக்கு இந்த பகுமானம் என்று வினோ கேட்க, பொண்டாட்டின்னா அப்படி தான்டா.நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனா தெரியும் என்க..அது அப்போ பாத்துக்கலாம் தாதாஜி என்றான்.
தனது அறைக்குள் வந்த மிருதுளாவிற்கு நான்கு நாட்களுக்கு பிறகு விக்ரமை பார்த்ததும் அவள் மனம் பட்டப் பாடு அவளுக்கு தானே தெரியும்.
வீட்டில் வேறொருத்துடன் கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்கள்..இந்த நேரத்தில் தன் மனதில் இருப்பதையும் வெளியில சொல்ல முடியாமல் இயல்பாக இருப்பது போல உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தவளுக்கு கதவு தட்டும் சத்தம் கேட்க...
வரேன் இரு டா வினோ என்றபடி கதவை திறக்க, புயல் போல் உள்ளே வந்தவன் ஒரு கையால் கதவை தாழிட்டான்.
இதை எதிர்பார்க்காத மிருதுளாவோ அதிர்ந்து போனவள் பின்னர் சுதாரித்து வேறு பக்கம் திரும்பி கொண்டு உங்களை யார் வர சொன்ன?.
வெளியில போங்கள் என்கவும் எட்டி அவளது கழுத்தோடு பின்பக்கமாக வளைத்து தனது நெஞ்சோடு அணைத்தவன் முதலில் இந்த டீ யை குடி டி என்று அவளுக்கு முன்னால் நீட்டவும், அவளது நெஞ்சில் உரசிய வலிமையான கரங்களின் தீண்டலில் அவள் சிலிர்த்து போனாள்.
சில நொடிகளுக்கு பின்னரே அதன் மென்மையை உணர்ந்த விக்ரமுக்கு சிறிது தடுமாற்றம் வந்தது தான். இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவன் குடி டி என்கவும் அவனிடமிருந்து விலக முயற்சி பண்ண, இன்னும் அவளை தன்னோடு இறுக்கி அணைத்தபடி பின்பக்கமாகவே சுவற்றில் சாய்ந்தவன், நீ இதை குடிக்கல என்றால் நானே உன்னை குடிக்க வைப்பேன் என்று அதிகாரமாக சொல்ல அந்த குரலில் எதை உணர்ந்தாளோ தெரியவில்லை மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பை போல் அவனின் கையில் இருந்த டீயை வாங்கி வேகமாக குடித்தாள்.
அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் பின்னர் வேகமாக அவளை தன் பக்கம் திருப்ப, ஏதோ வலிமையான பாறையில் மோதியது போல மிருதுவுக்கு வலி எடுக்கவும் ஸ் என்று முகத்தை சுருக்கினாள்.
இதை கவனித்தவன், நாலு நாளா உனக்கு எத்தனை போன் பண்ணிருப்பேன்? எவ்வளவு மெசேஜ் அனுப்பி வைத்திருக்கிறேன். எதுக்கு டி எடுக்கவில்லை?.
நீங்க கால் பண்ணா எடுக்கணும்னு எனக்கு ஒன்னும் அவசியமில்லையே என்று எங்கே பார்த்துக் கொண்டு சொல்லவும், அதைக் கேட்டவனுக்கு கோபம் வரவும் கீழே உட்கார்ந்து இருக்கானே ஒருத்தன் அவன் கிட்ட மட்டும் இளிச்சி இளிச்சி பேசறதுக்கு முடியுதா என்று அவளின் கழுத்தை பிடித்தான்.
விக்ரமின் வார்த்தைகளை கேட்டவளுக்கு கோவம் வர,இருந்தும் இவனிடமிருந்து விலகியே இருக்கணும், வீணா மனசிற்குள் ஆசையை வளர்க்கக்கூடாது என்று முடிவு செய்தவள்,அவன் கிட்ட பேச எனக்கு பிடிச்சிருக்கு உங்க கூட பேச எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை என்றாள்.
ஓஓஓஓ...அது எப்படி டி உனக்கு பிடிக்காமல் போகும் சொல்லு?...நான் தொட்டால் நீ சிலிர்த்து போறியே இதுலே தெரியலையா நான் உனக்கு யாரென்று?..
அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே என்று அவன் கையை தட்டி விடவும் அதில் இன்னும் விக்கிரமுக்கு ஆத்திரம் வர,நான் தொடுரது உனக்கு பிடிக்காதா என்றவன் மனமோ அவளது விலகலை பொறுத்துக் கொள்ள முடியாமல் இருக்கும் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கையில் பட்ட முந்தானையை வேகமாக இழுத்தான்.
என்ன பண்றீங்க என்று ஒரு சுற்று சுற்றியவளோ இரண்டு கைகளாலும் தன்னை மறைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிப்போய் ஸ்கிரீனுக்கு பின்னால் மறைந்து நின்றவளுக்கு மேல் மூச்சு வாங்கியது.
பிடிக்கலை... என்னை பிடிக்கலையா டி என்றவாறு நிதானமாக அவளை நோக்கி வந்தவன் எல்லாம் பண்றதுக்கு எனக்கு மட்டும் தான் டி உரிமை இருக்கு என்றபடி எட்டி அவளை இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்தவன் நீ எனக்கு மட்டுமே சொந்தமானவள் புரியுதா?.
இனிமே கீழ உட்கார்ந்து இருக்கவன் மட்டும் இல்லை வேறு எவன் கூடயும் சிரிச்சு பேசின என்ன பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது என்கவும் விக்ரமின் இந்த அதிரடியில் மிருதுளா தான் அதிர்ந்து போனாள்.
என்ன டி சொல்றது புரியுதா என்க...தன்னை நிதானம் பண்ணிக் கொண்டவள் எனக்கு வீட்ல வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.விருப்பம் இல்லாத ஒரு பொண்ணு கிட்ட இப்படி அநாகரிகமாக நடந்துக்கிறீங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா என்றாள்.
இதைக் கேட்டவனோ என்னடி சொல்ற என்று அதிர, ஆமாம் தமிழ்ல தானே சொன்னேன் ஏன் உங்களுக்கு புரியாதா?.
இங்கிலீஷ் ல சொல்லணுமா இல்ல வேற லாங்குவேஜ்ல சொல்லனுமா என்று கடுப்போடு சொல்லவும் இதைக் கேட்டவனுக்கு மேலும் ஆத்திரம் வர அணைத்து பிடித்தவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன் பல்லெல்லாம் உடைச்சிடுவேன்டி.
எவ்வளவு திமிரு இருந்தால் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்வ? யாரை கேட்டு இந்த முடிவு எடுத்தீங்க என்று அவளது கழுத்தை பிடிக்க...வாங்கிய அறை ஒரு பக்கம் எரிந்தாலும் நடக்காத ஒரு விஷயத்தை ஆசைப்படக்கூடாது என்று மனதிற்குள் எண்ணம் இருந்ததால் என்னோட முடிவை எடுக்கறதுக்கு யார் கிட்ட கேக்கணும்?.
எங்க அப்பா அம்மா பார்த்து வச்ச மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன் இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாள்.
என்னடி உன் இஷ்டத்திற்கு பேசிட்டு இருக்க? எனக்கு என்ன பிரச்சனையா? வருஷக்கணக்கா உன்னை உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு இருக்கேன் டி. என்ன விட எவண்டி உனக்கு மாப்பிள்ளையா வர முடியும்.யாரை கேட்டு இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிச்ச?