• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
673
கேரளாவில் இருந்து புறப்பட்ட விமானமும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்து சேரவும் மற்ற பார்மாலிட்டிசை முடித்துக் கொண்டு மிருதுளா வெளிய வர அங்கே குட்டிமா என்றவாறு சுரேந்தர் தனது மகளை நோக்கி வந்தார்.

அப்பா என்றவாறு தனது தந்தையின் வயிற்றோடு கட்டிக்கொண்டாள். என்னதான் தனது மகள் ஒரு மாவட்டத்திற்கு கலெக்டராக இருந்தாலும் இன்னும் அவருக்கு அவள் குழந்தை தான் அல்லவா...

பின்னர் இருவரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்தனர். நீண்ட மாதங்களுக்குப் பிறகு தனது வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

வாசலில் நுழைந்ததுமே அம்மாவின் பாசமான வரவேற்பும், வீட்டின் அந்தப் பழக்கமான வாசனையும் அவளுக்குப் பெரும் நிம்மதியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், அவள் முகத்தில் ஒரு மெல்லிய நிழல் படிந்திருந்தது.
எல்லாரையும் பார்த்ததில் ஒரு பக்கம் சந்தோஷம் இருந்தாலும், காலையில் விக்ரம் அவளிடம் நடந்து கொண்ட விதம் அவள் மனதை ரணப்படுத்திக் கொண்டிருந்தது.

எப்போதும் தன்னை விட்டு சில அடி தள்ளியே இருப்பவன், இன்று ஏன் அப்படி ஒரு முரட்டுத்தனத்தைக் காட்டினான்? அந்த இறுக்கமான பார்வையும் அவள் நெஞ்சில் முள்ளாகக் குத்திக் கொண்டிருந்தன.

பின்னர் அவளுக்கு வீட்டினர் எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல தேங்க்யூ என்றவள் பசிக்குது சாப்பாடு குடுங்கள் என்கவும்,வா வா என்று அழைத்து போய் டைனிங் டேபிள் உட்கார வைத்தவர்கள் அவளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்ததை பரிமாற, வாவ் என்றாள்.

எல்லாரும் ஒன்றாக உக்காந்து சாப்பிடும்போது அண்ணி எப்படி இருக்கிறார்கள் என்க... ம்ம் நல்லாருக்கா. நாளைக்கு கல்யாணத்தை முடித்துக் கொண்டு வந்து விடுவாள் என்று உமா தனது மகளிடம் சொல்ல, சரி என்றவள் பின்னர் சாப்பிட்டு முடித்து தனது தாத்தா பாட்டி உடன் பொதுவாக பேசிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது குட்டிமா என்று சுரேந்தர் கூப்பிட சொல்லுங்க அப்பா என்கவும் உன்னை கேட்காமல் நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டோம் டா..

அதைக் கேட்டவளுக்கு பகிர் என்று இருந்தது. இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவள் சொல்லுங்கள் ப்பா என்க...

உனக்கு ஒரு நல்ல இடத்துல சம்பந்தம் பேசி முடித்திருக்கோம் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நிச்சயதார்த்தம் என்றவர் நீ என்ன சொல்ற எங்கவும் என்னப்பா சொல்றீங்க என்று அதிர்ந்து போனாள்.

ஆமாடா எங்களோட வார்த்தைக்கு நீ மறுக்க மாட்டேங்குற நம்பிக்கையில தான் நாங்களும் மாப்பிள்ளை வீட்ல வாக்கு கொடுத்துட்டோம் என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே சுரேந்தர் சொல்ல தனது மனதில் இருப்பதை வாய்விட்டு சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளே கதறியவள் முகத்தை மாறாமல் வைத்துக் கொண்டு சரிங்கப்பா உங்களுடைய சந்தோஷம் தான் என்னோட சந்தோஷம் என்றாள்.

அதன் பின்னர் அங்கு உட்கார அவளுக்கு மனம் வரவில்லை சரி சரி நான் வச்ச பூஞ்செடி எல்லாம் எப்படி இருக்கு என்று பார்த்துட்டு வரேன் என்றவாறு நைசாக நழுவி வெளியே வந்தவள் தோட்டத்தில் இருக்கும் ஊஞ்சலில் போய் உட்கார்ந்தாள்.

தற்செயலாக ஜன்னல் பக்கம் திரும்பிய உமாவிற்கு மிருதுளா எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்க, அதோடு காலையில் இருந்து மகளின் முகம் வாடியிருப்பதை ஒரு தாயால் உணராமல் இருக்க முடியுமா?.

பின்னர் மெதுவாக அவள் அருகில் வந்து அமர்ந்தவர், அவள் தலையை வருடியவர் "என்னம்மா மிருது? இப்பதான் வீட்டுக்குள்ள வந்திருக்க... ஆனா உன் மனசு இங்க இல்லையே? முகம் ஏன் இப்படி வாடிப்போயிருக்கு?" என்று கனிவோடு கேட்டார்.

சட்டென்று சுதாரித்துக்கொண்டவள், "ஒன்னும் இல்லையேம்மா, வேலை பற்றிய யோசனை" என்று சமாளிக்க முயன்றாள்.

"என்கிட்ட மறைக்காத மிருது. உன் கண்ணே சொல்லுது ஏதோ சரி இல்லைன்னு. எதுவும் பிரச்சனையா?" என நேரடியாகவே கேட்க, மிருதலாவின் கண்கள் லேசாகக் கலங்கின.

மிருதுளாவின் மௌனமான வலி
அவளால் எதையும் வெளியே சொல்ல முடியவில்லை. காதல் கொண்ட மனம், தன்னவன் முரட்டுத்தனமான செயல் தந்த வேதனையைத் தாங்கவும் முடியவில்லை.

இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அய்யோ அம்மா நீ வக்கீல் தான் 50 சிஐடி போல கேள்வி கேட்காதே அந்த கீழையூர்ல ரோடு போறத பத்தி ரொம்ப டென்ஷனா இருக்குமா அதை பற்றி முதல்வர் கிட்ட நாளைக்கு பேச போகணும். அப்பா தான் பர்சனலா பாக்க போலாம்னு சொல்லி இருக்காங்க அவரு சம்மதிப்பாரானு அந்த கவலையில் இருக்கேன் நீ உன் கற்பனை குதிரையை ஓட்டாதே என்று சமாளித்தாள்.

நேரமும் கடந்து செல்ல பின்னர் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு தனது அறைக்குள் வந்து விட்டாள்.

அங்கே விக்ரம் தன் அறையில் ஒரு தவிப்பான சூழலில் இருந்தான். பரத்தும் பேசிவிட்டு சென்ற பின்பு காலையிலிருந்து எத்தனையோ முறை மிருதுளாவின் ஃபோனுக்கு விக்ரம் கால் பண்ணி விட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் போனை எடுக்காதபோது விக்ரமின் படபடப்பு அதிகமானது. "அவள் என் மேல் எவ்வளவு கோபமாக இருந்தால் என் அழைப்பைத் தவிர்ப்பாள்?" என்று அவன் மனம் கிடந்து துடித்தது.

தன் போனைத் தூக்கி எறியப் போனவன், மீண்டும் அதையே பிடித்துக்கொண்டு அவளுக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினான்.
"மிருது, ... ப்ளீஸ் போனை எடு டி. உன்கிட்ட பேசணும்."

ஆனால் மிருதுளா அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. கண்களை மூடிக்கொண்டாள்.

மறுநாள் விடியலும் வந்தது. ஆனால் அன்று காலையில் இருந்தே சென்னையில் பயங்கரமான மழை.

மிருதலா ஜன்னல் ஓரம் நின்று மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள். யாரோ வருவது தெரிந்தும், அவள் திரும்பவில்லை.

ஏய் குட்டச்சி என்ற குரலில் வேகமாக திரும்பியவள் அங்கு வரும் தனது ஆருயிர் நண்பன் மனோவை பார்த்து அதிர்ந்து போக, பிலேட்டேடு விஷஸ் டி குட்டச்சி என்றவாறு அவளின் முன்பு பொக்கேவை நீட்டினான்.

அதில் சுதாரித்தவள் அடேய் வளர்ந்த மாடு நீ எப்படி டா இங்கு என்று அவள் அதிர, ஏண்டி நான் வரமாட்டேன் எனக்கு போஸ்டிங் தமிழ்நாட்டில் போட்டாங்கடி என்று மனோ சொல்லவும் அப்படியா என்று சிரித்தவள்.. எந்த ஊர்ல டா என்கவும் என்னத்த சொல்லுவேன் இந்த விளங்காத குட்டச்சி மிருதுளா கலெக்டராக இருக்கிறாளே அந்த ஊர்ல தான் என்று தலையில் கையை வைத்துக் கொண்டான்.

தான் வேலை பார்க்கும் அதே மாவட்டத்திற்கு, அவளது ஆருயிர் நண்பன் வினோ புதிய 'பாரெஸ்ட் ஆபிஸராக' பொறுப்பேற்க வந்திருந்தான். வழக்கமாக இந்தச் செய்தி அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இன்று அவள் முகம் வாடியிருந்தது.

"மிருது! நம்ம ஸ்கூல் டேஸ்க்கு அப்புறம் இப்பதான் ஒண்ணா இருக்கோம், வா ஷாப்பிங் போலாம்!" என்று அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான்.

ஷாப்பிங் மாலில் வண்ணமயமான உடைகளும், மக்களின் சிரிப்பொலியும் நிறைந்திருந்தது. ஆனால் மிருதுளாவின் மனம் அங்கே இல்லை. அவளது நினைவுகள் விக்ரம் அவளிடம் நடந்து கொண்ட விதத்தையே சுற்றிக் கொண்டிருந்தது.

விக்ரமின் கோபம்: "யாரை கேட்டு இந்த புடவையை கட்டுன?", "உனக்கு அறிவில்லையா டி?" என்று விக்ரம் கத்திய வார்த்தைகள் அவள் காதுகளில் இன்னும் ஒலித்தன.

அவளுக்காக ஒரு அழகான உடையைத் தேர்வு செய்து அவளிடம் காட்டினான். ஆனால் மிருதுவோ எதையோ வெறித்துப் பார்த்தபடி மௌனமாக நின்றிருந்தாள்.

வினோ ஒரு வனத்துறை அதிகாரி மட்டுமல்ல, மிருதுளாவின் மனதை நன்கு அறிந்தவன். அவளது முகவாட்டத்தை வைத்தே ஏதோ தவறு என்று அவனுக்குப் புரிந்துவிட்டது.

பின்னர் ஒரு ஓரமாக அவளை அழைத்துச் சென்று அமர வைத்து மிருது மா என்று மென்மையாக அவள் கையைப் பிடித்தவன்
"நீ என்கூட இருக்க ஆனா உன் மனசு இங்க இல்ல. அந்தப் பழைய மிருதுளா கிட்ட இருக்குற துடிப்பு இன்னைக்கு இல்லையே... என்ன ஆச்சு? என்கிட்ட மறைக்காத, உன் கண்ணுல ஏதோ பயம் தெரியுது."

இதைக்கேட்டு மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். நண்பனின் அந்த ஆறுதலான குரலில் அவளது பிடிவாதம் தளர்ந்தது. கண்களில் லேசாக நீர் கசிந்தது.

"வினோ... அது வந்து... நான் அந்த கடுவன் பூனையை காதலிக்கிறேன் டா," என்று மெதுவாக ஆரம்பித்தவள் பின்னர் மீஞ்சூரில் அவனை பார்த்ததிலிருந்து விக்ரம் தன்னிடம் எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டான் என்பதையும், அந்தச் சுமை அவளை எப்படி வாட்டுகிறது என்பதையும் ஒவ்வொன்றாக அவனிடம் கொட்டித் தீர்த்தாள்.

வினோ அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.

அனைத்தையும் கொட்டி முடித்தவள் நண்பனின் தோளில் சாய்ந்து கொள்ள, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வினோ சத்தமாக சிரித்து விட்டான்.

அவனின் சிரிப்பை பார்த்து மிருது முறைக்க... அந்த டெரர் உன்னை காதலிக்கிறாரே இதை விட அந்த மனுஷனுக்கு வேற என்ன தண்டனை இருக்க போகுதென்றான்.

வழக்கம்போல் வினோவின் கிண்டலுக்கு கோவப்படுபவள் தற்பொழுது இருக்கும் மனநிலையில் அதை பொருட்படுத்தாமல் அமைதியாக அவனைப் பார்க்க ஏ குட்டி என்று தன் தோழியின் தலையை தடவியவன் காதல் வந்தால் இப்படித்தான் புரியுதா.
எல்லாம் சரியாகும் வா டா என்று தனது தோழியின் மனநிலையை ஒருவாறு மாற்றி வீட்டிற்கு கூப்பிட்டு வந்தான்.

மேலும் இரண்டு நாட்கள் சில பல சேட்டைகளோடு மித்திரனின் மகனோடு சேர்ந்து கொண்டு செய்ய, வீட்டினருக்குதான் யாரு சிறுபிள்ளை என்பதை நினைத்து விழி பிதுங்கி போனது.

பின்னர் மிருதுளாவும் வினோவும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு மிஞ்சூருக்கு வந்து சேர்ந்தனர்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
673
மீஞ்சூர்:

நீ எப்போடா டூட்டில ஜாயின் பண்ணனும் என்று கேட்க நாளை மறுநாள் என்றான். அப்படியே சரி வா உன்னைய ஆபீஸ்ல இருக்குறவங்களுக்கு இன்ட்ரொடியூஸ் பண்ணி வைக்கிறேன் என்கவும் கண்டிப்பாக.கலெக்டரோட ஃப்ரெண்ட் என்றால் சும்மாவா டி என்று சிரித்துக் கொண்டே மிருதுளாவோடு கலெக்டர் ஆபீஸ்க்கு வந்தான்.

அங்கிருப்பவர்களோ மேடம் கூட ஒரு பையன் வராரு ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு என்று பேசிக்கொண்டு இருக்க, வழக்கம் போல் தனது அறைக்குள் வந்தவள் எப்படி இருக்குடா என்கவும் சூப்பர் டி என்றான்.

ஆபீஸில் இருந்தவர்களோ யாரா இருக்கும் என்று அவர்களுக்குள் ரகசியமாக பேசிக் கொண்டிருக்கும் போது எல்லாரையும் மீட்டிங் ஹாலுக்கு வரச் சொன்னவள் முதல்வரிடம் கீழயூருக்கு ரோடு போடுவதை பற்றி பேசியதாக சிறிது நேரம் அதைப் பற்றி பேசி முடித்தவள், இவர்கள் வினோதன்.

நம்ம ஊருக்கு வந்திருக்கும் ஃபாரஸ்ட் ஆபிசர். அது மட்டும் இல்லை என்னோட உடன் பிறந்தவன் என்கவும் ,அப்படியா என்று அவர்கள் ஆச்சர்யப்பட ஆமாம். நீங்கள் எல்லாம் வேறு என்ன நினைத்தீர்கள் என்று முறைத்தவள், எதையுமே நல்ல விதமாக யோசிக்கிறது மனிதனுடைய இயல்பு இல்லையே என்றவள்,எனக்கு 11 மணிக்கு அந்த ஜி ஹெச் ல இன்ஃபெக்சன் இருக்கு கிளம்பலாமா என்று பி. ஏ வை கூப்பிடவும் எஸ் மேடம் என்றார்.
பின்னர் வா வினோ என்று அவனோடு வெளியே போனாள்.

மிருதுளா தன் சொந்த ஊருக்குச் சென்று நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இந்த நான்கு நாட்களில் விக்ரம் அவளுக்குப் பலமுறை போன் செய்தான். ஆனால், அவள் ஒருமுறை கூட அவன் அழைப்பை ஏற்கவில்லை.

அவள் தன்னைத் தவிர்க்கிறாளோ என்ற கவலை விக்ரமிற்கு அதிகமானது. எப்படியாவது அவளைப் பார்த்துப் பேசிவிட வேண்டும் என்று துடித்தான்.

இன்று அவள் ஊருக்குத் திரும்பிவிட்டாள் என்பதும், தற்போது கலெக்டர் அலுவலகத்தில் இருக்கிறாள் என்பதும் அவனுக்கு மித்ரன் மூலமாக தெரிய வரவும், இரு டி நேரில் வரேன் என்று சொல்லிக் கொண்டவன் வேகமாக தயாராகி அவளைப் பார்க்க புறப்பட்டான்.

இன்று தன்னவளிடம் தன் மனதில் இருப்பதை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று உற்சாகத்தோடு கலெக்டர் அலுவலக ஆபீசுக்கு வந்து சேர்ந்தவனுக்கு அங்கே மிருதுளா ஒரு இளைஞனோடு சிரித்து பேசிக்கொண்டு காரில் ஏறுவதை பார்த்து ஒன்னும் சொல்ல முடியவில்லை.

ஆள் பார்க்க ஹிந்திக்காரன் போல இருக்கிறானே யார் இவன்?.இப்படி 32 பல்லும் தெரிகிற அளவுக்கு சிரிக்கிறாளே என்று முணவியவனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.

அவளைக் காண வேண்டும் என்று இதுவரை இருந்த சந்தோஷம் தற்பொழுது ஏனோ அவனுக்கு இல்லை.

அவன் கண் பார்வையிலே மிருதுளாவின் கார் அங்கிருந்து செல்ல வேறு வழியில்லாமல் திரும்பி தனது எஸ்டேட் வந்தவனுக்கு மிருதுளாவும் அந்த இளைஞனும் சிரித்து பேசிய அந்த நிகழ்வு தான் கண் முன்னால் ஓடிக் கொண்டிருந்தது.

தன்னை நிதானம் படுத்திக் கொண்டவன் பின்னர் வேலையில் கவனத்தை செலுத்தினான்.

நேரமும் கடந்து செல்ல ஒரு வழியாக அவன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வர, அங்கே மிருதுளாவும் காலையில் பார்த்த இளைஞனும் சுந்தரமூர்த்தி வசுந்தராவோடு சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

விக்ரமை பார்த்த வசுந்தரா..வா விக்கி...யார் வந்திருக்கா பாரு என்கவும் அவனைப் பார்த்து ஆத்திரம் வந்தாலும் பின்னர் சமாளித்தவன் வாங்க என்று சொல்லியவன் பார்வையோ மிருதுளாவிடம் தான் இருந்தது.


ஆனால் அவளோ விக்ரமை கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.


சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top