Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 668
- Thread Author
- #1
மீஞ்சூர்:
நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓடியது. மாலாவோ தனது தந்தையின் உடல்நிலை காரணம் காட்டி மிருதுளாவோடு வந்து தங்க முடியாமல் போகவும் நான் இருக்கும் போது என்ன கவலை என்று அவளை தங்களுடனே, வசு தம்பதியினர் தங்க வைத்துக் கொண்டார்.
தற்போது விக்ரமும் ஊரில் இல்லாததால் யாரும் தவறாக பேசவும் வாய்ப்பு இல்லாமல் போனது. வயசுப் பையன் இருக்கும் இடத்தில் என்னதான் சொந்தக்கார பொண்ணாக இருந்தாலும் ஊர் மக்களில் யாரோ ஒருவருக்கு இது தவறாக தெரியும் அல்லவா.
அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்தவள் தனது அம்மா வாங்கி அனுப்பிய புது டிரஸை போட்டுக்கொண்டு சாமி கும்பிடுவதற்காக கீழே வர, பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிமா என்ற வசு அவளின் முன்பு ஒரு கவரை நீட்டியவர் "இதை நீ கட்டிட்டு வரணும், அதுதான் எனக்குப் பெரிய சந்தோஷம்" போயிட்டு சீக்கிரம் கட்டிட்டு வா நான் பூஜைக்கு எல்லாம் ரெடி பண்றேன்னு அன்புடன் சொல்ல, மிருதுளாவும் மறுபேச்சின்றி அதை ஏற்றுக்கொண்டாள்.
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க, புடவையை உடுத்தி, அவளிடமிருந்த நகைகளை போட்டுக் கொண்டு தேவதை போல அவள் வெளியே வந்தபோது, பெரியவர்கள் இருவரும் அவளை விக்ரமோடு ஜோடி சேர்த்து மனதிற்குள் மகிழ, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் என்று இருவரின் காலில் விழுந்தாள்.
தீர்க்க சுமங்கலி நல்லா இரு என்று அவளை ஆசீர்வதித்தவர்கள் பின்னர் பூஜை அறைக்கு போய் சூடத்தை ஏற்றி சாமிக்கு காட்டிவிட்டு மிருதுவின் நெற்றியில் பூசி அவளை மனதார ஆசிர்வதித்தனர்.
சரி குட்டிமா உனக்கு 11 மணிக்கு தானே பிளைட் அதுக்குள்ள நாங்க வந்துட்றோம் என்று சொல்லிக்கொண்டு இருவரும் அவர்கள் எஸ்டேட்டில் வேலை செய்யும் வீட்டின் திருமணத்திற்கு சென்றுவிட, அந்தப் பிரம்மாண்டமான வீட்டில் இப்போது மிருதுளா மட்டுமே தனியாக இருந்தாள்.
அவ்வப்போது அவள் தொலைபேசியில் வந்த வாழ்த்து அழைப்பிற்கும் குறுஞ்செய்திகளுக்கும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டே இருக்க கடிகாரத்தின் முள் நகரும் சத்தம் மட்டும் கேட்கும் அந்த அமைதியான சூழலில், அவள் உடுத்தியிருக்கும் பட்டுப் புடவையின் சரசரப்பு அவளுக்குள்ளேயே எதிரொலிக்கிற போல இருந்தது.
கடைசியாக எப்போ பட்டுப் புடவை கட்டினோம் என்று நினைத்துப் பார்த்தவளுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு அவளது அண்ணன் மித்திரனின் திருமணத்தன்று கட்டி ஞாபகம் வந்தது.
அது மட்டும் இல்லாமல் கடந்த சில மாதமாக சென்னையில் இருக்கும் அவளது வீட்டிற்கு போகவில்லை.இப்பொழுது தொடர்ந்து நான்கு நாட்கள் லீவ் வரவும் ஊருக்கு வருவதாக சொல்ல, மகளுக்கு சுரேந்தரும் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறார்.
தாத்தா பாட்டி வந்ததும் அவள் ஊருக்கு புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு அந்தப் பெரிய வீட்டில், விலை உயர்ந்த பட்டுப் புடவை உடுத்திய தேவதையாய், தனது வீட்டினரைப் பார்க்க போகிறோம் என்ற எண்ணத்தோடு மிருதுளா அங்கே சுவற்றில் மாட்டியிருக்கும் விக்ரம் வரைந்து பிரேம் பண்ணி மாட்டியிருக்கும் ஓவியங்களை நிதானமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
விக்ரமின் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது. அந்தப் புதிய ப்ராஜெக்ட் மிகப்பெரிய வெற்றியில் முடிந்திருந்தது. அதன் மகிழ்ச்சியை விட, இப்போது அவனை ஆட்கொண்டிருப்பது ஊருக்குப் போகப் போகிறோம் என்கிற துடிப்புதான்.
எல்லாருக்கும் தேவையான பணத்தை செட்டில் பண்ணியவன் அடுத்த ப்ராஜெக்ட் பார்க்கலாம் என்று தனது காரில் புறப்பட்டவன் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்லவில்லை.
நள்ளிரவில் புறப்பட்டவன் ஊர் எல்லைக்குள் நுழையும்போதே நன்கு விடிந்திருந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு தன்னவள் முகத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் அவன் கால்களுக்குப் புது வேகத்தைக் கொடுக்கிறது.
கடந்த சில மாதங்களாக இவள் தன்னுடைய வீட்டில் இருந்து தான் வேலைக்கு போகிறாள் என்பது தெரிந்த விஷயம் தான். அதோடு இன்று அவளுடைய பிறந்த நாள் என்பதால் ஆந்திராவில் அவளுக்காக தேடி அலைந்து ஒரு கிப்ட் வாங்கியவன் இதை கொடுக்கும்போது தன் மனதில் இருக்கும் விஷயத்தை சொல்லிவிடலாம் என்று முடிவோடு தான் வந்து கொண்டு இருந்தான்.
அதோ இதோ என்று இன்னும் சிறிது நிமிடத்தில் அவனது வீடு இருக்கும் இடம் வந்து விடும் என்பது தெரிய எதோ புதிதாக அவனுக்குள் ஒரு உணர்வுகள் தோன்றியது.
இதோ தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் வாசல் கிட்ட இருந்து சில அடி தூரத்திற்கு முன்பே காரை நிறுத்திவிட்டு பொறுமையாக வந்தவனும் உள்ளே நிற்பவளின் பின்னழகை பார்த்து திகைத்தவன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா என்கும்போது அவ்ளோ பெரிய வீட்டுக்குள் திடீரென்று விக்ரமின் குரல் ஒலிப்பதைக் கேட்டு பதறிப் போய் மிருதுளா திரும்ப...
பிறகே அவள் கட்டியிருக்கும் புடவையை பார்த்தவனுக்கு எங்கிருந்து எவ்வளவு வெறி வந்ததோ தெரியவில்லை நோஓஓஓ என்று கத்திக் கொண்டே வேகமாக வந்தவன் எதுவும் யோசிக்காமல் உன்னை யாரு டி இந்த புடவையை கட்ட சொன்னா என்று ஓங்கி ஒரு அறை அறைந்து விட்டு அவள் கட்டியிருந்த புடவையை பிடித்து வேகமாக இழுக்கவும், புடவையோ பின்னோடு இழுத்ததில் ஜாக்கெட்டும் கிழிந்து விட...
ஏற்க்கெனவே அதிர்வில் இருந்தவோ தற்போது விக்ரமின் செயலில் நிகழ்விற்கு வந்தவள் நோஓஓ என்று கத்தும்போது அவளை அழைத்துப் போவதற்காக வந்த பரத்தின் காதில் இந்த சத்தம் கேட்கவும் என்னாச்சு மிருது என்று ஓடி வரும் பரத்தின் குரலைக் கேட்டவள் அண்ணா என்று இரண்டு கைகளாலும் தன்னை மறைத்துக் கொண்டு அழுதவாறு ஓடி வந்தாள்.
தங்கையின் அந்த கோலத்தையும் சற்று தள்ளி கிடக்கும் புடவையும் பார்த்தவன் விக்ரம் என்று பரத் கத்திய பிறகே அவனும் சுதாரித்து திரும்பினான்.
வேறு எதுவும் சொல்லாமல் வேகமாக தனது சட்டையை கழட்டி தங்கையிடம் கொடுத்துவிட்டு வந்தவனோ பளார் பளாரென்று விக்ரமின் கன்னத்தில் அறைய, பிறகே சற்று தள்ளி கிடக்கும் புடவை பார்த்ததும் தான் என்ன செய்தோம் என்பது புரிய ஓ ஷிட் என்று தனது நெற்றியில் அறைந்து கொண்டவன் ஹேய் கண்ணம்மா...
சாரி டி... அவளை நோக்கி வர மிருதுவோ பயந்து கொண்டே பரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள தனது தங்கை உடல் நடுங்குவதை உணர்ந்தவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது
ஏன் அப்படி என்று சொல்லவர, வாய மூடு டா என்று கத்திய பரத் மிருது போய் டிரஸ் மாத்திட்டு லக்கேஜ் எடுத்துட்டு வா என்று விக்ரமை ஒரு முறை முறைத்தவன் நல்லவேளை நான் வந்தேன் இல்லன்னா இங்க என்னடா நடக்கும்? அதைவிட பெரிய விஷயம் வீட்ல வேலை செய்றவங்க யாருமே இல்லை.
உன்கிட்ட இப்படி ஒரு மூர்க்கத்தனத்தை நான் எதிர்பார்க்கல என்கவும், மச்சி...அது வந்து டா. நான் சொல்ல வர்றது புரிஞ்சுக்கடா என்று விக்ரம் தடுமாற, எனக்கு உன்கிட்ட இப்போது எதுவும் பேச வேண்டாம்.
நான் அப்புறம் பேசுறேன் என்றவாறு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டான்.
மாடியில் இருக்கும் அறைக்கு வந்த மிருதுளாவுக்கு அவ்வளவு அழுகை வந்தது. விக்ரம் கண்ணில் இதுவரை பார்க்காத ஒரு வெறியை பார்த்தை இப்போதும் நினைக்க அவளது உடல் நடுங்கவும், அது மட்டும் இல்லாமல் அவன் இழுத்த இழுப்பில் சேரி பின் அவள் தோள் பட்டையில் நீளமாக கிழித்து அதில் ரத்தம் கசிவதையும் பார்த்தவளுக்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது.
தனது பிறந்தநாள் அதுவும் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பதை எதிர்பாக்காதவள் இனி ஒரு நிமிடங்கள் இங்கு இருக்க கூடாதென்று வேகமாக டிரஸ்ஸை மாற்றிக் கொண்டு ஊருக்கு போவதற்கு தயாராக வைத்திருந்த லக்கேஜ் எடுத்துக் கொண்டு கீழே வருபவளை விக்ரம் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் ஒருத்தன் இருப்பதையே கண்டு கொள்ளாதவள் அண்ணா என்று பரத்தின் சட்டையை கொடுக்க அதை வாங்கி போட்டுக் கொண்டவன் வாடா என்று தனது தங்கையை தோளோடு அழைத்துக் கொண்டு வெளியே போனவன் காரில் அவளை உட்கார வைத்துவிட்டு லக்கேஜை பின் சீட்டில் வைத்தவன் மிருது நீ அவனை தப்பா நினைக்காதே என்கவும் அவளோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
ஒரு மணி நேரத்தில் ஏர்போர்டிற்கு வந்தவன் குட்டிமா என்று தனது தங்கையின் தலையில் தடவியவன் விக்ரம் எது பண்ணினாலும் அதில் ஒரு காரணம் இருக்கும்.
ஆனால் அவன் தவறான எண்ணத்தில் இப்படி பண்ணினான் என்று மட்டும் நினைக்காதே என்கவும் அதில் அன்னார்ந்து பார்த்தவள் இல்லை ணா. நான் அப்படி நினைக்கலை. ஆனா அவரு ஒரு மாதிரி வெறிகொண்ட போல நடந்து கொண்டதை பார்த்து உண்மையிலே நான் பயந்துட்டேன் ணா என்று கண்கள் கலங்கினாள்.
என்னதான் மிருதுளா ஒரு மாவட்டத்தின் கலெக்டராக இருந்தாலும் அவளுக்குள் அந்த சிறு பயம் இல்லாமல் இல்லை. பின்னர் அவளுக்கான பிளைட்டின் அறிவிப்பு வந்ததும் பார்த்து போடா என்று தங்கையின் தோளை தட்டி சொல்ல சரி ணா என்றவள் அங்கிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவன் பின்னர் காரை எடுத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்குள் வர, விக்ரம் சோபாவில் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது.
எரும மாடு என்ற சத்தத்தில் வேகமாக எழுந்த விக்ரம் மச்சி என்றபடி நண்பனின் கையை பிடித்தவன் சத்தியமா அவ கிட்ட தவறான எண்ணத்தில் நான் இப்படி பண்ணல என்கவும் இதைக் கேட்ட பரத் பல்லை கடித்தவன் மீண்டும் இரண்டு அறையை அவனுக்கு விட்டு லூசு பயலே எதுக்குடா இப்படி எல்லாம் பேசுற?.
நான் உன்னை அடிச்சதுக்கு காரணமே உன் கோவத்தை நீ கண்ட்ரோல் பண்ணாம இருக்கிறியே என்பதற்காக தான். நீ அப்படி பண்ணுனதுக்கு நிச்சயமா ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு தெரியும்.
ஆனா உன் புத்தி போல கேவலமாக யோசிக்கவில்லை என்கவும் ஹப்பாடா என்று இருந்தது....எங்கே இவ்வளவு நேரம் எங்கே தனது நண்பன் தவறாக நினைப்பானோ என்று விக்ரமின் மனம் பட்ட பாடு அவனுக்கு தானே தெரியும்.