Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 666
- Thread Author
- #1
டைரி:
பிள்ளைகளும் வர அவனுங்க மூவரையும் இவர்கள் படித்த அதே ஊட்டி கான்வென்ட்ல படிக்க வைத்தவர்கள் அவரவர் தொழிலை பார்கலானார்கள்.
இரண்டு வருடங்கள் கடந்திருக்க மீண்டும் கர்பமான பவானி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அவளுக்கு அகல்மதி என்று பெயர் சூட்டினர்.
தற்போது மித்ரன் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மீண்டும் கர்பமான உமா இரண்டாவது பெண் குழந்தையை பெற்றெடுக்க அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
தங்களின் செல்ல மகளுக்கு மிருதுளா என்று பெயர் வைத்தனர். விடுமுறைக்கு வரும் போதெல்லாம் விக்ரமின் நேரமோ கொழுக் மொழுக் என்று இருக்கும் மிருதுளா வுடன் தான் போகும்.
என்னடா இப்பவே உன் பையன் என் மகளை சுற்றி சுற்றி வருகிறானென்று சுரேந்தர் சிரிக்க, என் மகனுக்காக பிறந்தவள் டா அதான் என்று பிராகாஷும் சொல்லுவார்.
வருடங்களும் வேகமாக ஓடியது. வடமாநிலங்களில் பூப்படைந்தால் பெரிதாக விசேஷம் வைக்க மாட்டார்கள் என்பதால் சுந்தரமூர்த்தி வசு மட்டும் போயிட்டு அகல்மதி க்கு செய்ய வேண்டிய சடங்கை தமிழ்நாட்டின் முறைப்படி நல்லபடியாக செய்து விட்டு வந்தனர்.
தற்பொழுது பையன்கள் மூவரும் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா பெரிய பொண்ணாகி விட்டாள் என்று செய்தி கேள்விப்பட்டனர்.
அவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை என்பதால் ஊருக்கு வந்திருந்தனர். தங்கள் ஒரே மகளின் விசேஷத்தை சீரும் சிறப்பாக கொண்டாடுவதற்காக சுரேந்திரன் வீட்டினர் ஏற்பாடு பண்ணியிருக்க, பிசினஸ் விஷயமாக திடீரென்று சந்திரன் வெளிநாட்டுக்கு போக வேண்டிய சூழல் வந்து விட்டது.
விசேஷத்திற்கு இன்னும் ஒரு நாள் இருக்க என்ன பண்ணுவது என்று எல்லாரும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் போது மாமன் நான் இருப்பது உங்களுக்கு கண்ணு தெரியலையா என்று பிரகாஷ் சத்தம் போட்ட பிறகுதான் மற்றவர்கள் அமைதியானார்கள்.
பின்னர் தாய்மாமன் முறைப்படி தேவையான அத்தனை சீர்வரிசை பொருள்களோடு பிரகாஷ் தம்பதியினர் மீஞ்சூரிலிருந்து புறப்பட்டு நீலாங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.
நல்ல நேரத்தில் பெண்கள் எல்லாம் மிருதுளாவுக்கு நலங்கு வைத்து குளித்து வந்ததும் பின்னர் பிரகாஷ் எடுத்துட்டு வந்த பட்டுப்புடவையை கட்டி அலங்காரம் பண்ணி மேடைக்கு அழைத்து வந்தார்கள்.
மாமாவை மாலைப் போடச் சொல்லுங்கள் என்கவும் கொழுக் மொழுக்கென்று சிறுமியாக இருந்தவள் இப்போது தளதளவென பெண்ணாய் வளர்ந்து நிற்பதை பார்த்த விக்ரமோ முதல் முறையாக தடுமாறினான்.
அவனின் அதிர்ந்து போன தோற்றத்தை பக்கத்தில் இருந்த அகமதியும் பார்க்கத் தவறவில்லை.
மேடையில் இருப்பவள் கழுத்தில் மாலை போடும்போது விக்ரமிற்கு ஏதோ சொல்லொன்னா உணர்வு வர அவன் கண்கள் ஓரவிழி பார்வையில் பக்கத்தில் இருக்கும் மிருதுளாவை ரசிக்க மறக்கவில்லை.
அதன் பின்னர் வந்திருந்தவர்கள் எல்லாம் அவர்களால் முடிந்த கிப்ட்டை கொடுத்து ஆசீர்வாதம் பண்ணி கொண்டு வர அங்கே விருந்தும் தரப்படலாக பரிமாறப்பட்டது.
பின்னர் வயிறார சாப்பிட்டு விட்டு எல்லாரும் கிளம்பி விட்டனர்.
அகல்மதிக்கும் ஸ்கூல் விடுமுறை என்பதால் தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு லீவுக்கு வந்திருந்தாள்.
அன்று வெகு நேரம் தூங்காமல் மொட்டை மாடியில் விக்ரம் நடந்து கொண்டிருக்க,அப்பொழுது காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்க்கவும் மதி தான் வந்தாள்.
ஏய் மதி இன்னும் தூங்காம என்ன பண்ற என்று கேட்கவும் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் மாமா என் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்தது அதனாலதான் என்கவும், ஏன் மா என்னாச்சு ஏதாச்சு பிரச்சனையா என்கவும் இல்ல இது வேற விஷயம் உங்கள பத்தி என்றாள்.
என்னை பற்றியா என்க..
ம்ம்...
கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாமா உங்களுக்கும் எனக்கும் தானே கல்யாணம் பண்ணனும்னு வீட்டில் பேச்சு வார்த்தை சின்ன வயசுல இருந்து போய்க்கொண்டிருக்கிறது என்கவும் ஆமாம் அதுக்கு என்ன என்றான்.
ஆனா இப்ப நீங்க மிருதுவை நேசிக்கிறீங்க அதுதானே உண்மை என்கவும் அதிர்ந்து போன விக்ரமும் தன்னை சமாளித்துக் கொண்டு அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீ ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற என்றான்.
இல்லை மாமா அவளை நீங்க ரசித்து பார்த்ததை நானும் பார்த்தேன். உங்கள் மனுச தொட்டு சொல்லுங்க உங்களுக்கு மிருதலாவை தானே பிடித்திருக்கிறது என்க...தனது தலை முடியை கோதி வேறுபக்கம் திரும்பிக் கொண்டவன் பின்னர் மதி உனக்கும் எனக்கும் வீட்ல கல்யாணம் பண்ணலாம்னு அத்தை ரொம்ப வருஷமா சொல்லிட்டு இருக்காங்க இதைப்பற்றி யோசிக்காத போய் படு.
உனக்கும் எனக்கும் தான் கல்யாணம் என்றவாறு அங்கிருந்து சென்று விட்டான்.
வேகமாக போகுபவனை பார்த்து கலங்கியவள் எனக்கு தெரியும் மாமா. உங்கள் மனசுல மிருது தான் இருக்காள். நிச்சயமாக இவங்க ஆசைப்படுவது போல நம் கல்யாணம் நடக்காது என்றவளின் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.
பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு கீழே வந்துவிட்டாள். விடுமுறை முடிந்து அகல்மதியும் அங்கிருந்து சென்று விட்டாள்.
சில நாட்கள் சென்றிருக்க பிரகாஷ்- கீதா இருவரும் தெரிந்த ஒருவரை பார்க்க போன இடத்தில் ஆக்ஸிடன்ட் ஆகி அதே இடத்தில் இறந்து விட்டனர்.
விஷயத்தை கேள்விப்பட்டு எல்லாரும் பதறியடித்து வந்தனர்.
ஒருவழியாக விக்ரமை தேற்றினர்.
அதன் பின்னர் வந்த நாட்களில் முன்பு போல விக்ரம் கிட்ட பேசுவதை அகல்மதி சுத்தமாக குறைத்து விட்டாள். ஊருக்கு வரும்போது நல்லா இருக்கியா என்பதோடு நிறுத்திவிட்டாள்.
அவனுங்களும் படித்து முடித்து அவரவர் தொழிலை பார்க்க மித்ரனோ ராணுவத்திற்கு போகணும் என்கவும் மகன் ஆசைப்படுகிறான் நல்லபடியாக போயிட்டு வரட்டும் என்று அவர்களும் அனுப்பி வைத்தனர்.
கடந்து சில மாதங்களாக அகல்மதி விக்ரம் கல்யாணபேச்சு வார்த்தை அதிகமாகிக் கொண்டிருக்கவும், மதிக்கு விக்ரமை கல்யாணம் பண்ணிக்கொள்ள மனம் வரவே இல்லை. ஏனென்றால் அவன் மனம் முழுவதும் மிருதுளா இருக்கிறாள் என்பதை அகல்மதியும் புரிந்து கொண்டாள்.
எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்தவள் நான் மேலே படிக்கப் போகிறேன் என்று சொல்ல பவனியும் வாசுவும் வேண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு பிறகு போய் படி என்றனர். அவளோ விக்ரமின் மூலமாக காயை நகர்த்த தொடங்கினாள்.
படிப்பு என்பதால் அவனும் சம்மதிக்க, அவள் ஆசைப்பட்ட போல டெல்லியில் மேற்படிப்பு படிக்க சேர்த்து விடவும் இரண்டு வருடம் கடந்து விட்டது.அதிலிருந்து திருமண பேச்சு அதோட நிற்கிறது என்பதோடு டைரி முடிந்து இருக்க என்ன இதுக்கு அப்புறம் ஒன்னும் காணும் என்று மிருதுளா ஆர்வமாக அடுத்தடுத்து பக்கத்தை திருப்பியவள் மனமோ விக்ரம் இத்தனை வருஷமாக என்னை காதலிக்காறாரா என்று கேள்விகள் தான் மலையளவு எழும்பி இருந்தாலும் அவளது உள்ளுக்குள் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
வேறு ஏதாவது எழுதி இருக்கா என்று
பக்கத்தை திருப்பிக் கொண்டே வரும்போது என் வாழ்வின் கருப்பு பக்கம் என்று ஹிந்தியில் இருக்கவும் என்னவா இருக்கும் என்று யோசித்தவள் அதையும் படிக்க தொடங்கினாள்.
அதில் என்ன எழுதி இருந்தது என்றால்…
ஒரு நாள் அப்பா அம்மா வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ பின்னாடி இருந்து இரும்பு ராடால் பவானி வாசுவை அடித்து விட்டு, அவள் வீடியோ காலில் இருப்பது தெரியாமல் 6 மனித மிருகங்கள் பவானிக்கு வீட்டு வேலைக்கு ஒத்தாசையாக இருந்த இளம் பெண்ணையும் பவானியையும் சேர்த்து கொடூரமாக வேட்டையாடியவனுங்கள் சிலிண்டரை ஆன் பண்ணிட்டு போவது தெரிந்து இவள் கத்தி கதறும் போது அவள் கண் முன்னால் அவளது வீடு வெடித்து சிதறுவதை பார்த்தாள்...
அய்யோ என்று அழுது ஓய்ந்தவளோ நடந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டாள். மதிக்கு ஒரு பழக்கம் உண்டு. அவள் எப்போ வீடியோ கால் இல்லை வாய்ஸ் காலில் வீட்டிற்கு அழைத்தாலும் அதை ரெக்கார்டிங் போட்டு வைப்பது...
அந்த ரெக்கார்டிங்கில் பதிவாகியிருந்த முகங்களை தேடி இனி என் வேட்டையை தொடங்கப் போகிறேன். அந்த ஆறு மிருகங்களையும் இந்த உலகத்தை விட்டு அனுப்புவது தான் என் வாழ்வின் லட்சியம் என்பதோடு முடிந்திருந்தது.
அகல்மதியின் தற்கொலைக்கான உண்மைக் காரணத்தை அந்த டைரியில் இருந்த எழுத்துகள் தெளிவாகச் சொல்லின.
"இதற்காக தான்... இவ்வளவு பெரிய வலியைச் சுமந்து கொண்டு மதி அக்கா சென்றாங்களா?" என்று நினைக்க மிருவின் இதயம் சுக்குநூறாக உடைந்தது. அதோடு அதிர்ச்சியில் அவள் கையில் இருந்த டைரியும் கீழே விழுந்தது.
இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று அவள் சிறிதும் கற்பனை கூட பண்ணி பார்த்ததில்லை. அன்று இரவு இறந்து போன ஐவரையும் நினைத்து ரொம்ப நேரம் அழுதவள், அப்படியே தூங்கிப்போனாள்.
அடுத்த நாள் பொழுதும் வந்தது.
எப்பொழுதுமே சீக்கிரமா எழுந்து வரும் மிருது இன்னும் கீழே வராததை பார்த்த வசு- சுந்தரமூர்த்தி இருவரும் என்ன ஆச்சு? .குட்டிமா இவ்வளவு நேரம் தூங்க மாட்டாளே என்று பேசிக் கொண்டிருக்க...
இன்னைக்கு ஒரு நாள் தானே தூங்கிட்டு போகட்டுமே என்று தாத்தா சொல்லவும், இல்லங்க குட்டிமா இப்படி எல்லாம் தூங்குறவள் கிடையாது மணி 8 ஆகிடுச்சு பாருங்க.
நான் போய் பார்த்துட்டு வரேன் என்கவும், மனைவி சொன்னதைக் கேட்டவர், ஆமாம் வசு என்ற சுந்தரமூர்த்தியும் சரி நானும் வரேன் என்று இருவரும் மாடியில் இருக்கும் மிருதுளாவின் அறைக்குள் சென்றனர்