• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
658
நீலாங்கரை:

வேலன் குரூப்ஸ்' நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் அங்கிருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களிடையே ஒருவிதமான பதற்றம் கலந்த ஆர்வம் நிலவியது என்பதே உண்மை.

இதுவரை தொழிலை ஒரு 'கார்ப்பரேட்' பாணியில் பார்த்தவர்களுக்கு, ஒரு ராணுவ வீரன் எப்படி தலைமை தாங்குவான் என்ற கேள்வி தான் ஒவ்வொருவர் மனதிலும் அதிகமாக இருந்தது.

சரியாக காலை 8:55 மணி. கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் கார் வந்து நிற்கவும் அதிலிருந்து கம்பீரமாக மித்ரன் இறங்கினான். வழக்கமான கோட்-சூட் அணிந்திருந்தாலும், அவனது நிமிர்ந்த நடையும், கூர்மையான பார்வையும் அவன் ஒரு 'மேஜர்' என்பதை பறைசாற்றாமல் இல்லை.

பூங்கொத்தை கொடுத்து அவனை வரவேற்க, சிறிய தலையசைப்போடு உள்ளே போனவனே நேராக தனது தந்தையின் அறைக்குச் சென்றவன் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினான்.

நல்லாருப்பா என்றபடி மகனின் தோளை தட்டிய சுரேந்தர், "இப்போதிலிருந்து இந்த சாம்ராஜ்யத்தின் தளபதி நீதான்" என்றபடி, புத்தம் புதிய பேனாவை நீடாடினார்.

அப்பா என்று சிரித்தபடி வாங்கியவன் அனைத்து துறைத் தலைவர்களையும் கான்ப்ரன்ஸ் ஹாலுக்கு வரச்சொல்லி பி. ஏ விடம் சொல்ல, அவர்களும் வந்து சேர்ந்தனர்.

பார்டரில் இருந்தவனுக்கு பிசினஸ் பற்றி என்ன தெரிய போகுதேன சிலர் நினைத்தவாறு உட்கார்ந்திருக்க, அழைத்தான் மித்ரன். அங்கே மௌனம் நிலவியது. மித்ரன் பேசத் தொடங்கினான்.

அனைவருக்கும் வணக்கம்...இன்னைக்கு இந்த சீட்ல உட்காரும்போது, எனக்கு முன்னாடி இருக்கிற 5000 ஊழியர்களோட வாழ்வாதாரம் என் கையில இருக்குங்கிற அதே பொறுப்புணர்வு எனக்கு பெரிதாக இருக்கு."

எந்தப் பிரச்சினையா இருந்தாலும் எந்த நேரத்தில் வேணாலும் நேரடியாக என்ன தொடர்பு கொள்ளலாம்.இதுவரைக்கும் அப்பாவுக்கு எந்த அளவுக்கு நீங்க சப்போர்ட்டா இருந்தீங்களோ அதே சப்போர்ட் எனக்கும் கொடுப்பீங்க என்று நம்புகிறேன் என்றவனின் முதல் கையெழுத்தோ பல கோடி ரூபாய் லாபம் தரும் ஒப்பந்தங்களில் இல்லை.

"நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்கான உயர் கல்வி நிதியுதவி மற்றும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கான பயிற்சி மையம்" தொடங்குவதற்கான கோப்பில் மித்ரன் சுரேந்தர் என்று கையெழுத்திட்டான்.

மீஞ்சூர்:

தான் மனதில் நினைத்த காதலியே மனைவியாக வரப்போகிறாள் என்பதை நினைத்து பரத்திற்கு சந்தோஷம் தாங்கவில்லை. அது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரியவும் அண்ணா ரொம்ப வழியுது தொடச்சிக்கோ என்று மிருதுளா சொல்ல, குட்டிமா என்றாலும் அவனால் வெட்கத்தையும் சிரிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

பின்னர் வீட்டிற்கு வந்தவர்கள் அப்பாடா என்று சோபாவில் உட்கார,சரிமா நான் கிளம்புறேன் என்ற மிருதுளா, அவளது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.

ஹாலில் உட்கார்ந்து இருந்த தினேஷ்,குமாரி என் மனசில் ஒரு விஷயம் இருக்கிறது என்கவும், ஏங்க நானும் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் என்றார்.

அப்படியா..

சரி நீ சொல்லு என்க...பரவால்ல நீங்க முதலில் சொல்லுங்க என்கவும், அவர்களுக்கு எதிரில் உள்ள ஷோபாவில் உட்கார்ந்து இருந்த பரத், அடடா...புருஷன் பொண்டாட்டி இரண்டு பேர்ல யாராச்சு ஒருத்தவங்க சொல்லி தொலைங்க என்று முறைக்க, ஏன்டா தம்பி நம்ம விக்கிக்கும் குட்டிமாவுக்கும் கல்யாணம் பண்ணினால் எப்படி இருக்கும் என்றார்.

இதைக் கேட்ட குமாரி....என்னங்க நானும் இதே தான் நினைச்சேன் என்று சந்தோஷத்தில் சொல்ல அப்படியா... நல்லது மா.

எதுக்கு இந்த பேச்சு வார்த்தைய தள்ளி போட்டுக்கிட்டே இருக்கணும் சொல்லுங்க...விட்டால் காலம் முழுவதும் தனிமரமா நின்னுடுவான் போல.

வயசு போகுது..அத்த மாமாவும் ஒரு முடிவெடுப்பாங்கன்னு பார்த்தாக்க அவங்களும் அமைதியா இருக்காங்க தாய்க்கு அப்புறம் தாய் மாமன் உயிரோட இருக்கிறேன் தானே.நானே இந்த வேலையில் இறங்குகிறேன் என்றவர் வா குமாரி என் தங்கச்சி வீடு வரைக்கும் போயிட்டு வரலாம் என்று வெளியே போனார்.

தனது அப்பா அம்மா பேசிக்கொண்டதை கேட்ட பரத்து ஹா ஹா ஹா..அடேய் அய்யனாரு...என் தங்கச்சி கிட்ட மாட்டிகிட்டு காலம் முழுவதும் நீ என்ன பாடு பட போறியோ என்று விக்கியை நினைத்து சத்தம் போட்டு சிரித்தான்.

அரை மணி நேரத்தில் அங்கு வந்த வந்து சேர்ந்த தினேஷ் குமாரி யை பார்த்த சுந்தரமூர்த்தி வசுந்தரா, வாங்கப்பா என்றனர்.

பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு பரத்துக்கு பேசிட்டு வந்த விஷயத்தை சொன்னவர் மாமா ஒரு விஷயம் சொல்லணும் என்கவும், சொல்லுப்பா..

தன் மனதில் உள்ளதை சொல்ல, கேட்டவர்களுக்கும் சந்தோஷம் தாங்கவில்லை நாங்களும் இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லவும் அப்ப சுரேந்தர் கிட்ட நேரடியாக பொண்ணு கேட்டு போகலாமா என்று குமாரி கேட்க ஆனா விக்கி என்ன சொல்லுவானோ என்றார் வசுந்தரா.

விக்ரமோ வீட்டுக்கு போகாமல் அவர்கள் எஸ்டேட்டிற்கு போனவன் தனது ஆபிஸில் உட்கார்ந்து கொண்டு மிருதுளாவை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தான். இவ வந்ததுல இருந்து எனக்குள்ள ரொம்ப தடுமாற்றம் ஆகுது...

ஏன்டி நீ வந்த?.

நிம்மதியா இருந்தேன்..உன்னை நினைக்கவும் முடியல நினைக்காம இருக்கவும் முடியலையே..என் பிரண்டோட தங்கச்சியா போயிட்டேன்னு எவ்ளோதான் என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியும்?.

எதுக்கு உன்னால தேவையில்லாம என் மனசுல இப்படி புதுசா ஆசை எல்லாம் வருது என்று யோசிக்கும் போது மிருதுளா அவன் கையில் விழும் போதெல்லாம் அவளின் மென்மையான அங்க அசைவுகளை நினைத்தவனுக்கு இப்போதும் உடல் சிலிர்த்தது.

நோ....

என் வாழ்க்கையில் யாருக்கும் இடம் இல்லை. யார் மேல நான் பாசம் வைக்கிறேனோ அவங்க எல்லாம் என்னை விட்டு போயிடுறாங்க.
இப்போ... இவள்... இல்லை... இவளுக்கு எதுவும் ஆகக் கூடாது. என் மனசுக்குள் வராத டி.. நீ நல்லா வாழணும் என்னும் போதே விக்ரமின் கண்கள் கலங்கியது.

"அகல்மதியின் நினைவுகள் இன்னும் ஈரமாக இருக்கும்போது, என்னால் எப்படி இன்னொருத்தியைப் பார்க்க முடிகிறது? இது அவளுக்கு நான் செய்யும் துரோகம் இல்லையா?" என்று அவன் துடித்தான்.

"காதல் என்பது ஒரு முறை மட்டுமே வரும் சாபமா? என் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கினால் அது தவறா? மரித்துப் போனது அகல்மதியை தவிர, என் உணர்வுகள் இல்லையே!" என்று அவன் அறிவு வாதிட்டது.

அப்போ எதுக்கு அவளைப் பார்த்தாலே உனக்கு உள்ளுக்குள் தடுமாற்றம் வருது என்று அவன் மனசாட்சி கேட்கவும், அது அது என்றான்.

பின்னர் அவனது மனசாட்சிக்கும் மனதிற்கும் போராடியவனுக்கு ஒரு கட்டத்தில் அவன் மிருதுளாவை காதலிப்பதையும் ஆழமாக நேசிப்பதும் புரிந்தது. ஆனால் அந்த உணர்வு அவனுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, மாறாக ஒரு பெரும் குற்றவுணர்வைத் தந்தது.

இரண்டு முறை காதல் வருமா?

"இரண்டாம் முறை வரும் காதல், முதல் காதலைக் குறைத்து மதிப்பிடுவதாகுமா? அல்லது ஒரு மனிதனின் இதயம் மீண்டும் மலரக் கூடியது என்பதற்கு அது ஒரு சான்றா?"

நேரமும் கடந்து கொண்டே இருந்ததே தவிர அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அப்பொழுது அவனது போனுக்கு கால் வரும் சத்தம் கேட்கவும் எடுத்துப் பார்த்தவன் உடனே அட்டென்ட் பண்ணி சொல்லுங்க சார் எனக்கு அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டது தெரியவில்லை உடனே கிளம்பி வருகிறேன் என்

சரிங்க மாமா...மித்து வர புதன்கிழமை பிசினஸை டேக் ஓவர் பண்றான். அப்படியே விக்கி பற்றியும் நான் பேசிட்டு வரேன். இப்போது உங்கள் பேரன் கிட்ட எதுவும் சொல்லாதிங்க என்று தினேஷ் சொல்லவும் சரி ப்பா என்றனர்.

மேலும் சிறிது நிமிடங்கள் அவர்களுடன் பேசியிருந்து விட்டு வீட்டிற்கு வந்தவர்கள் நாளைக்கு சென்னை போவதாக பரத் கிட்ட சொல்ல, ம்ம்...மச்சானை சம்சாரி ஆக்காமல் உட்கார மாட்டிங்களென்று சிரித்தவன் முடிந்தால் என் கல்யாணத்துக்கு முன்பே அவனுக்கு கல்யாணம் நடக்கின்ற போல பாருங்க ப்பா என்கவும் சரி தம்பி என்றனர்.

மறுநாள் விடியலும் தொடங்கியது...

தம்பி யென தினேஷ் கூப்பிட, டூட்டி க்கு கிளம்பி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவனோ சொல்லுப்பா என்க, அது நம்ப ஹாஸ்பிடல் தான். மதுரா உனக்கு பார்த்த பெண் தான்... அதை விட அது ஹாஸ்பிடல்..

உன் காதல் விளையாட்டை டூட்டி யில் காட்டாதே என்கவும்... எதே என்றான்.

ம்ம்..

ஆர்வ கோளாறில் நேற்று மானத்தை வாங்குனியே அதுக்கு தான் சொல்றேன் என்றவர், சரி பார்த்துக்க... முடிந்தால் ரெண்டு நாளில் திரும்ப வந்திடுறோம் என்க... சரி சரி யென பல்லைக் கடித்துக் கொண்டு சாப்பிட்டு எழுந்தவன் ஹாஸ்பிடலுக்கு சென்றான்.

தனது நினைவுகளில் இருந்து கலைந்த விக்ரம் வேகமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தவன் உடனடியாக ஆந்திரா கிளம்புவதாக சொல்லவும், ஏன் கண்ணு எதாவது பிரச்சினை யா என்றனர்.

அப்படி தான்...

இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றவனோ வேகமாக படியில் ஏறி தனது ரூமிற்கு வந்தவன் தேவையானதை எடுத்துக்கொண்டு இருவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

ஆந்திரா:

காரிலே போகலாமென்று முடிவு எடுத்து தான் வீட்டிற்கு வந்தான். எஸ்டேட்டின் நெருக்கடியான சாலைகளைக் கடந்து, நெடுஞ்சாலையில் கார் சீறிப்பாய்ந்தது.

முக்கியமான பிரச்சினை தான் ஆனால், உண்மையில் அவன் ஓடிக்கொண்டிருந்தது பிசினஸை நோக்கி அல்ல; மிருதுளாவின் நினைவுகளிடம் இருந்து.

"புது இடம், புது மனிதர்கள், பிஸியான வேலை... அங்கே போனால் எல்லாம் சரியாகிவிடும்" என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.

இரண்டு மணி நேர பயணத்தில் வழியில் ஒரு கஃபேயை பார்த்து விட்டு ஓரமாக நிறுத்தி உள்ளே வந்து உட்கார்ந்தபோது, எதிரே இருந்த ஒரு ஜோடியில் அந்தப் பெண் மிருதுளாவைப் போலவே தலையைக் கோதிச் சிரித்ததை பார்த்த விக்ரம் சட்டென்று பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

பின்னர் ஒரு காபியை மட்டும் ஆர்டர் பண்ணி குடித்தவனோ மீண்டும் பயணத்தை தொடர்ந்தவன் ஒருவழியாக ஆந்திரா வந்து சேர மறுநாள் ஆனது.

வழமை போல தங்கும் ஹோட்டலில் தங்கியபோது, ஜன்னல் வழியே தெரிந்த மலைச்சாரல் அவளுக்குப் பிடித்தமான இயற்கை அழகை நினைவூட்டியது. "இங்கே வந்திருந்தால் அவள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்?" — இந்த எண்ணம் வந்த கணமே விக்ரம் தன் தலையைத் தட்டிக்கொண்டான்.

முதலில் வந்த வேலையை பார்க்கலாம் யென்று குளித்து தயாரானவனோ தனது ஆபிசிற்கு வந்து சேர்ந்தவனோ நேராக மீட்டிங் ஹாலின் கதவை திறந்து உள்ளே போக, மற்ற அதிகாரிகளும் உள்ளே வந்து உட்கார்ந்தனர்

"எஸ்.எம் பில்டர்ஸின் புதிய போர்ட் புராஜெக்ட் (Port Project) பாதியில நிக்குது. இங்க இருக்கிற சில உள்ளூர் அரசியல் தலையீடுகளால லாரிகள் உள்ள வர முடியல. ஒரு நாளைக்கு 50 லட்சம் நஷ்டம். நாம் இதை எப்படி கையாளுவது?" என்று புரியாமல் தான் மேனேஜர் அவனை வர வைத்தார்
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
658
அங்கிருந்த அனுபவம் வாய்ந்த மேலாளர்கள் "பேச்சுவார்த்தை நடத்தலாம்", "லீகல் நோட்டீஸ் அனுப்பலாம்" எனப் பல யோசனைகளைச் சொன்னார்கள். விக்ரமோ அமைதியாக எழுந்து மேப்பில் அந்த இடத்தை தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்று தொழிலை கையில் எடுத்தானோ அன்றிலிருந்து தொழிலை லாப நஷ்டமாகப் பார்க்கவில்லை, ஒரு 'மிஷனாக' பார்க்கலானான்

ஏர்கண்டிஷன் அறையில் உட்காராமல், சரி இவ்வளவு தானே என்றபடி தனது சீட்டிலிருந்து எழுந்தவனோ நேராக ஸ்பாட்டுக்குச் சென்றான். அங்குள்ள பிரச்சினையின் வேர் எது என்பதை சிறுது நிமிடத்திலேயே கண்டறிந்தான்.

அரசியல்வாதி 'சாமிகண்ணு', தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டுமான நிறுவனத்தின் சிமெண்ட், இரும்பு கம்பிகள் மற்றும் இயந்திரங்களை "ஆவணங்கள் சரியில்லை" எனக் கூறி தனது சொந்த யார்டில் கொண்டு போய் பூட்டி வைத்துவிட்டார். அதனால் இப்போது புராஜக்ட் பாதியில் நிற்கிறது.

யாரும் இல்லாமல் தனியா காரை எடுத்த விக்ரம் நேராக அந்த அரசியல்வாதியின் அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்குச் சென்றான். அங்கே துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் தடுத்தும், அவர்களை ஒரு பார்வை பார்க்க, அதில் அவர்களுக்கு என்ன தோணியதோ உடனே வழியை விட்டு விலகினர்.

வேகமாக கதவை திறந்து உள்ளே வந்தவனைக் கண்டவன், "என்ன தைரியம் இருந்தா இங்க வருவ? அந்தப் பொருட்களை வித்தா கூட எனக்குப் பல கோடி கிடைக்கும். அது இனிமே உன் கம்பெனிக்கு வராது தம்பி", என்று சிரித்தான்.

தனது காதை குடைந்தவன் "தைரியம்ன்றது சத்தமா பேசுறது இல்ல சார்... சத்தமே இல்லாம ஒரு காரியத்தை முடிக்கிறது. நீங்க திருடிட்டு போனது வெறும் இரும்பும் சிமெண்ட்டும் இல்ல... என்னோட 'ஈகோ'. அதைத் தொட்ட எவனும் உருப்பட்டதா இதுவரை சரித்திரமே இல்ல."

சோ....என்ற விக்ரம் தனது கைக்கடிகாரத்தை ஒருமுறை அழுத்த,மேஜை மீது இருந்த டிவியில் ஒரு நேரடி ஒளிபரப்பு ஓடியது. அதில் அரசியல்வாதியின் ரகசிய யார்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, விக்ரமின் லாரிகள் உள்ளே நுழைந்து பொருட்களை ஏற்றத் தொடங்குவது தெரிகிறது.

அதைப் பார்த்தவன் அதிர்ச்சியுடன், "இது அராஜகம்! போலீஸைக் கூப்பிடுவேன்!" என்றான்.

ஹா ஹா ஹா.... தாராளமாக
"கூப்பிடுங்க... ஆனா வர்ற போலீஸ் கிட்ட, உங்க வீட்ல நீங்க பதுக்கி வெச்சிருக்கிற 'அந்த' ரகசிய டைரியை பத்தி என்ன பதில் சொல்லப்போறீங்க? நீங்க யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தீங்கன்னு அந்த டைரில அக்கு வேற ஆணி வேறா இருக்கு. அது இப்போ 'பாதுகாப்பான' ஒரு இடத்துல இருக்கு." அதை மறந்துட வேண்டாம்.

விக்ரமின் அந்தத் தீர்க்கமான பார்வையும், கையில் இருக்கும் ஆதாரங்களும் அரசியல்வாதிக்கு வேறு வழியில்லாமல் போக,பணிய வைத்தது.

பேண்ட் ஷர்ட் போட்டதால் இவன் என்ன பண்ணிடுவானு நினைச்சிட்ட போல.... வேஷ்டியை மடிச்சு கட்டுனேன் இருக்கும் இடம் தெரியாமல் உன் சாம்ராஜ்யத்தை இருந்த இடத்திலே அழிச்சிடுவன்.

எந்த கொம்பன் கிட்ட வேண்டும் என்றாலும் போயிக்கோ, இந்த விக்ரமின் முடியை கூட அசைக்க முடியாது என்றவனை பார்க்க முதல் முறையாக அவருக்கு பயம் வந்தது.

"இப்போவே உங்க ஆட்களுக்குப் போன் பண்ணுங்க. எடுத்த பொருட்கள் ஒரு கிராம் குறையாம, என் புராஜக்ட் சைட்டுக்குத் திரும்ப வரணும். வந்ததும் எனக்கு மெசேஜ் வரும். அதுவரைக்கும் நான் இங்கதான் இருப்பேன்... அதுவும் இந்த சேரில் என்றவாறு அங்கிருந்த சேரை இழுத்து அதில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான்!"

சேருமா?
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top