Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 656
- Thread Author
- #1
மீஞ்சூர்:
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தங்கச்சி மகனிடமிருந்து வந்த குறும்பான வார்த்தைகளை கேட்ட தினேஷிற்கு அவரது தங்கையும் விக்ரமின் அம்மாவான கீதாவை நினைத்து உள்ளுக்குள் கவலை இல்லாமல் இல்லை.
நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்க அப்பா அம்மாவும் சரி என் தங்கையும் நானும் எந்த பாவமும் செய்யவில்லையே. பிறகு ஏன் இந்த ஆண்டவன் வாழ வேண்டிய வயதிலே மகனை தனியாக விட்டுவிட்டு என் தங்கையையும் மச்சானையும் பரித்துக் கொண்டானே என்று மனதிற்குள் கதறியவர், என்று தனது தங்கையும் அவளது கணவனும் விபத்தில் பலியானார்களோ அன்றிலிருந்து சாமி கும்பிடுவதையே விட்டு விட்டார்.
விக்கி டீ என்றவாறு குமாரி எந்திரிக்க, பசிக்குது டிபனே கொடு த்தை என்றவன், அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்கலானான்.
அப்புறம் குட்டிமா என்ன பிளான் டா என்று பரத் கேட்க, ஏற்கெனவே ஒரு அட்டெம்ட் பெயிலியர் ஆனதில் கடுப்பில் இருந்தவள் நோ ணா. நீ டூட்டிக்கு போ. நாங்கள் மூவரும் கோயிலுக்கு போறோம் என்கவும் எதே யென அவன் அதிர, அதே அதே யென்றாள்.
அப்போது மிருதுளாவின் போனிற்கு கால் வரும் சத்தம் கேட்கவும்,திரையில் மின்னிய பெயரைப் பார்த்ததும் அவள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.
பேப்பர் படித்துக் கொண்டிருந்த விக்ரம்,உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய் என்ற பாடல் ரிங்டோனாக ஒலிக்கும் சத்தத்தில் பேப்பரை விலக்கி பார்க்க
"ஹலோ..." என்று அவள் ஆரம்பித்த போதே குரலில் அத்தனை உற்சாகம்.
பேசிக்கொண்டே வெளியே போனாள்.
விக்ரம் தன் கவனத்தைச் சிதறவிடாமல் இருக்க முயன்றான். ஆனால், ஜன்னலுக்கு வெளியே தெரிந்த அவளது உருவம் அவனை ஏதேதோ செய்தது. கண்ணாடி ஜன்னல் வழியாக அவள் பேசுவது தெளிவாகத் தெரிந்தது.
மிருதுளா வழக்கமாக அமைதியானவள். ஆனால் இப்போது, அவள் தன் கைகளை அசைத்து அசைத்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் வாய்விட்டுச் சிரித்தபோது, அந்தச் சிரிப்பு ஜன்னல் கண்ணாடியைத் தாண்டி விக்ரமின் இதயத்தில் ஒரு மெல்லிய அதிர்வை உண்டாக்கியது.
அவள் அவ்வளவு அழகாகச் சிரிப்பதை விக்ரம் இதற்கு முன் பார்த்ததே இல்லை.இப்படி பல்லைக் காட்டுறாளே "யாராக இருக்கும்? அவ்வளவு நெருக்கமானவங்களோ?"
அந்த பக்கம் அவளிடம் பேசுவது ஒரு ஆண் தான் என்பதை முடிவு பண்ணியவனுக்கு, அவன் அவளை இவ்வளவு சிரிக்க வைக்கிறான் என்பதை பார்க்கவே அவ்வளவு எரிச்சலைத் தந்தது.
வெளியே பேசிக் கொண்டிருந்தவளோ ஏதோ ஒரு உந்துதலில் திரும்பி ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தாள்.
அவளின் செயல்களை புரிந்து கொண்ட விக்ரம் உடனே திரும்பிக் கொண்டு பேப்பரில் மூழ்கியது போல் நடித்தான். ஆனால், அவன் கண்கள் ஓரப்பார்வையில் அவளையே அளவெடுத்தன.
பின்னர் அவள் மீண்டும் சிரித்துவிட்டு, தலைமுடியைக் காதோரம் ஒதுக்கியபடி பேசிக்கொண்டே இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனாள்.
இதை பார்த்த விக்ரமின் உள்ளுக்குள் ஒரு எரிமலை குமுறியது. முதல் முறையாக, அவளுக்குத் தெரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அந்தத் தெரியாத நபர் மீது கட்டுப்படுத்த முடியாத கோபமும், தன் வசமிழந்த பொறாமையும் ஒருசேர எழுந்தது.
பல்லை கடித்து தன்னை நிதானம் பண்ணிக் கொண்டவன் இவள் யார் கூட பேசினால் எனக்கென்ன வந்ததென வெட்டி வீராப்பில் உள்ளுக்குள் சொல்லிக் கொள்ள, அவனின் மனசாட்சியோ த்தூ யென துப்பிச் சென்றது.
பின்னர் பேசிவிட்டு உள்ளே வந்தவள் குமாரி யுடன் அரட்டை அடித்துக் கொண்டு மதிய சமையலை தடபுடலாக முடிக்க, அதற்கு முன்னரே விக்ரம் அங்கிருந்து எஸ்டேட் டிற்கு கிளம்பிச் சென்று விட்டான்.
அவனுக்கான லஞ்ச் பேக் பண்ணிய குமாரி பரத்திடம் கொடுக்க அவனும் நண்பனின் ஆபிஸை நோக்கிச் செல்ல, இவர்கள் மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
நேரமும் கடந்து சென்றது..
எந்த மறுப்பும் சொல்லாமல் கோயிலுக்கு வாங்க. நம்ப ஒத்த பிள்ளைக்கு பிறந்த நாளனு குமாரி சொல்லிச் சென்றார்.
மாலை வெயில் பொன்னிறமாகத் தரை இறங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்தப் பழமையான சிவன் கோயில் அமைதியாக இருந்தது. பரத்தின் பிறந்தநாளுக்காக தினேஷும், குமாரியும், மிருதுளாவும் ஏற்கனவே அங்கு வந்துவிட்டார்கள்.
சிறிது நிமிடங்கள் கடந்திருக்க பரத்-விக்ரம் இருவரும் கோயிலின் நுழைவாயிலைக் கடந்தபோது, விக்ரமோ ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
அடர் பச்சை நிறப் பட்டுப் புடவை, அதற்குப் பொருத்தமான மெல்லிய ஆபரணங்கள். எப்போதும் சுடிதாரிலும், அலுவலக உடையிலும் அவளைப் பார்த்துப் பழகிய விக்ரமுக்கு, இந்தப் புடவை அவளை ஒரு புதுப் பிறவியாகக் காட்டியது.
இடைவரை இருந்த கூந்தலில் மல்லிகைப் பூவும், நெற்றியில் வைத்திருந்த சிறிய குங்குமமும் அவளது முகத்திற்கு ஒரு தனித்துவமான தேஜஸைத் தந்திருந்தது.
மிருதுளாவோ தீபத்தை ஏற்றிவிட்டுத் திரும்பும்போது, புடவையின் முந்தானை சற்றே நழுவ, அவள் அதைச் சரி செய்தபடி நிமிர, விக்ரம் அவளை பார்த்துக் கொண்டே வருவது தெரிந்து கீழே குனிந்து கொண்டாள்.
விக்ரம் அவளைத் தாண்டிச் செல்ல முயன்றான். ஆனால், அவளது அருகில் செல்லும் போது காற்றில் கலந்த மல்லிகைப் பூவின் மணமும், பட்டுப் புடவையின் மெல்லிய உரசல் சத்தமும் அவனை அங்கேயே கட்டிப் போட்டது.
நண்பனின் தங்கை....இவளை இப்படி பார்க்கக் கூடாது என்று நினைத்தான். பகலில் அவள் யாரிடமோ போனில் சிரித்துப் பேசியது இன்னும் அவன் நெஞ்சில் முள்ளாய் தைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அவளது இந்தத் தோற்றம் அவனது பிடிவாதத்தை மெல்ல மெல்லத் தளர்த்தவும் அவனை அவனாலே புரிந்து கொள்ள முடியவில்லை.
எத்தனையோ முறை அகல்மதியை புடவை கட்டிக் கொண்டு வரச்சொல்லியிருக்கான். அவளோ, நோ மாம்ஸ் அந்த பட்டிக்காடு டிரஸ் நான் போட மாட்டேன் என்று மறுத்து விடுவாள்.
ஒருமுறை அப்படி தான் பிசினஸ் விஷயமாக காஞ்சிபுரம் வரை வந்தவன் அங்கிருந்த கடைக்கு போனவன் பாட்டிக்கும் அத்தைக்கும் புடவை வாங்கும் போது ஒரு புடவை ரொம்ப அழகாக இருந்தது.
அதை பிரித்து பார்த்து வாங்கியவன் மனமோ இது அகலமதிக்கா என்கவும், ஆமாம் என்று அன்று சொல்ல முடியவில்லை.
பின்னர் அதனோடு இன்னொரு புடவையை வாங்கி வந்தான்.ஆனால் திருமணத்திற்கு பிறகு கொடுக்கலாமென்று நினைத்தவனோ முதலாவதாக வாங்கிய புடவையை தனது கபோர்டில் வைத்தவன் இரண்டாவதாக வாங்கியதை அகல்மதிக்கென கொடுத்தான்.
காலேஜ் விடுமுறைக்கு வந்தவளிடம் பாட்டி புடவை கொடுக்க எனக்கு தேவையில்லை என்று அவரது கையிலிருந்ததை மறுத்தாள்.
இதை பார்த்துக்கொண்டே உள்ளே வந்தவன் அப்போ கல்யாணத்தாற்காவது கட்டுவாயா டி என்க, பார்க்கலாம் மாமா யென்று அவள் சிரித்ததை இப்போது நினைத்துப் பார்த்தவன் அமைதியாக போய் தனது மாமாவின் வலது பக்கத்தில் நின்று கொண்டான். ஆனால் மறந்தும் அவன் மனம் சாமியை நினைக்கவில்லை.
தனது வீட்டினர் எல்லாம் கண்களை மூடி கருவறையில் இருக்கும் சாமியை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த தினேஷ் பின் வாக்கிலேயே நகர்ந்து தள்ளி வந்தவர், தூரத்தில் இருக்கும் மேகங்களை பார்த்தவரின் சிந்தனைகளோ நாள் தவறாமல் இந்த சன்னிதிக்கு என் தங்கச்சி வருவாளே ஏன் இப்படி அவளை கைவிட்டாய்.
நீயும் கல்லு தானே உனக்கென்ன வந்ததென சிவனை நினைத்து சொல்லும் போது மணி சத்தம் கேட்டு திரும்பியவர் அங்கே விக்ரமும் அவன் பக்கத்தில் நிற்கும் மிருதுளாவை பார்க்க, ஏனோ இனம்புரியாத சந்தோஷம் உருவானது.
அவருக்கு மட்டுமில்லை எதிரே நின்ற பரத், குமாரிக்கும் இருவரையும் ஜோடியாக பார்க்க நல்லா இருந்தது. அவர்களின் வியப்பான பார்வையில் திரும்பி பார்த்தவனுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.
பக்கத்தில் நின்றிருந்த அவனது மாமா இல்லாமல் அங்கே கண்களை மூடியபடி மிருதுளா ஏதோ தீவிரமாக முணுமுணுப்பதை பார்த்தவனுக்கு காலையில் முத்தமிட்ட நினைவு வரவும், அய்யோ கோயிலென்று திரும்பிக் கொண்டான்.
அய்யரோ ஆரத்தி தட்டோடு வர, அப்பொழுது தான் கண் திறந்தவள் விக்ரம் பக்கத்தில் நிற்பதை பார்த்து திகைத்து விட்டு தன்னை சமாளித்துக் கொண்டாள்.
பின்னர் தினேஷிடம் வந்த குமாரி உங்களை என்று முறைக்க, நீ ஆசைப்பட்டனு வந்தேன் அவ்வளவு தான் என்றவாறு வெளியே போனார்.
இது தெரிந்த விஷயம் தானேனு பெருமூச்சு விட்ட குமாரி வாங்கப்பானு படியிலிறங்கி கீழே போனார்.
சரி வந்து சேருங்கணு சொல்லிய தினேஷ் காரை ஒட்டிக் கொண்டு முன்னே செல்ல, உன் நோமா எங்க டா ரகசியமாக வரச்சொல்லுறார்னு பரத் கேட்க, போனால் தெரிஞ்சிடும் வாடா யென்றான்.
அரைமணி நேரத்தில் அங்கிருந்த வீட்டின் முன்பு வந்து சேர, யார் வீடு டா என்றவாறு பரத் இறங்கவும், நமக்கு ரொம்ப வேண்டியவங்க தான் வாடா என்று விக்ரமும் உள்ளே போனான்.
என்ன சங்கதினு தெரியலையே னு புலம்பிக் கொண்டே வீட்டின் உள்ளே வந்த பரத் அங்கிருந்தவர்களை பார்த்து திகைத்தவன், இவங்க அவளுடைய அப்பா அம்மா... அப்போ இது அவள் வீடா?.
இல்லையே ஹாஸ்டல்ல தானே தங்கியிருக்கா என்று யோசனையாக, அவனது கையை இழுத்து தனது பக்கத்தில் உட்கார வைத்த விக்ரம் எதுக்குடா இவ்வளவு அதிர்ச்சி யென்று மௌனமாக சிரித்தான்.
ஆமாம்... எதுக்கு இங்கு யென பரத் முழிக்க, ம்ம் பொண்ணு பார்க்க என்கவும் எதேயென்று அவன் அதிரும் போது கையில் டிரோவோடு வந்தவளோ எல்லாருக்கும் டீ கொடுத்தவள் கடைசியா பரத்தின் முன்பு நீட்ட, கடந்த நான்கு வருடங்களாக சுடிதாரிலே பார்த்து பழக்கப்பட்டவள் இன்று அவர்கள் கலாச்சார புடவையில் அழகோவியமாய் இருப்பதை பார்த்து திகைத்தவனின் கையில் விக்ரம் தான் கிள்ளினான்.
அண்ணி டீ சூப்பரென்று மிருதுளா சொல்லவும் அண்ணியானு பரத் முழிக்க, அப்புறம் சம்பந்தி நாம முன்பு பேசியது போல அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்க, நான் சில கேள்வி கேட்கணும்னு மிருதுளா சொல்லவும் தாராளமா கேளுமானு பெண்ணுடைய அம்மா சொல்ல, அடேய் குட்டிமா ஆயிரம் தான் இருந்தாலும் உன் அண்ணி டா.
பாவம் விட்டுருனு பரத் பதற மற்றவர்களோ சத்தமாக சிரிக்க, வெலங்காத முண்டம் எதுக்குடா இப்படி மானத்தை வாங்குறனு விக்ரம் பல்லை கடித்த பிறகுதான் பரத் அவசரப்பட்டு வாய்விட்டது புரிய எல்லாரையும் பார்த்து அசட்டையாக சிரிக்கவும் தினேஷோ தனது தலையில் தட்டிக் கொண்டார்