• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
130
'என்ன... இந்த நேரத்துல மீட்டிங் போட்டு இருக்காங்க. ஏற்கனவே அந்த ராங்கி நம்ம வாங்க வேண்டிய இடத்தை வாங்கிட்டான்னு அப்பா நம்ப மேல கோவமா இருக்காரு. இப்போ எதை வைத்து நம்மள தாளிக்க போறாங்கன்னு தெரியலையே' என்று எண்ணியபடி கதிர் அங்கே சென்றான்.

கதிரை அவன் தந்தை கோவமாக பார்த்து இருக்க...'ஏன் டா பரமா கதிரை முறைக்கிற.நமக்கு பிறகு அவன் தான் டா இங்க எல்லாமே' என்றார் கதிரின் பெரியப்பா சாரங்கம்.

'ஆமா... நீங்க தான் இப்படி சொல்றிங்க. ஆனா இவன் வெங்கட்டை விடவே வீனா போனவனா இருக்கானே' என்று கதிரின் அப்பா பரந்தாமன் சொல்ல,

'சரி சரி... ஏதோ அந்த செட்டியார் விஷயத்துல நம்ம கோட்டை விட்டுட்டோம். இனி அப்படி நடக்காம கதிர் பார்த்துப்பான்' என்றார் சாரங்கம்.

தன் அப்பாவும் பெரியப்பாவும் ஆதியில் இருந்தே கதிரை இப்படி கொம்பு சீவி வளர்த்து இருக்க... அவர்கள் கை காட்டும் வேலையை செய்து முடிப்பது தான் கதிரின் முதல் வேலையாக இருந்தது.

இந்த முறை என்ன வேலைக்காக தன்னை அழைத்து உள்ளார்கள் என்று புரியாமல் கதிர் வெங்கட்டை பார்த்தவன்...'இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை' என்று எண்ணிகொண்டான்.

வெங்கட்டோ விட்டால் அழுதே விடுவான் என்ற நிலையில்,'அப்பா... ஆனா நான் கல்யாணம் ' என்று தன் வார்த்தையை இழுத்தான்.

ஆனால் அவன் வார்த்தையை முடிக்கும் முன்னே,'ஆமா கல்யாணம் தான். உனக்கும் கதிருக்கும் ஒரே மேடையில கல்யாணம் பண்ண போறோம்' என்ற சாரங்கத்தின் வார்த்தையில் வெங்கட்டை விடவே கதிரின் வயிற்றில் தான் புளியை கரைத்தது போல உணர்ந்தான் அவன்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

மறுபக்கம் இதே நேரம் VCR பங்களாவில்
நேரம் இரவு பத்தை கடந்து இருக்க... முல்லை அவள் அறையில் படுத்து இருந்தாள்.

உறக்கம் வராமல் தவித்தவள் 'கதிர் கொடுத்த நம்பருக்கு call பண்ணி பார்க்கலாமா' என்று எண்ணியருக்க, அவள் அருகே தான் கந்தன் படுத்து இருந்தான்.

'எப்பவும் இவன் அண்ணன் கூட தானே படுப்பான். இன்னைக்கு என்ன நம்மக்கூட தூங்கிட்டான். சரி... நம்ம பொறுமையா போய் அண்ணன் போனை எடுத்து கதிருக்கு call பண்ணலாம்' என்று எண்ணிய முல்லை மாறனின் அறைக்குள் செல்ல, அங்கே மாறன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

முல்லை நைசாக மாறனின் போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தவள்,'நம்ம ரூம்ல போய் பேசுனா கந்தன் கண்டு பிடிச்சிடுவான். பேசாம தோட்டத்துல போய் பேசலாம். அதான் வாட்ச் மேன் கூட இல்லையே' என்று எண்ணியவள் கைபேசியுடன் பார்க்கிங் ஏரியாவுக்கு சென்றாள்.

கதிர் தந்த எண் முல்லையின் எண்ணத்தில் பசு மரத்து ஆணியை போல பதிந்து போக...கண்கள் இரண்டிலும் காதல் பொங்க முல்லை அந்த எண்ணை கைபேசியில் பதிவிடும் தருணம் பங்களாவிற்குள் இருந்து ஈஷா வெளியே வந்து இருந்தாள்.

ஈஷாவை தூரத்தில் பார்த்த முல்லைக்கு,'இந்த இம்சை ஏன் இந்த நேரத்துல வெளிய வருது' என்று உள்ளுக்குள் நினைத்தவள் சட்டென்று அங்கே இருந்த கருப்பு காரின் பின்னே சென்று மறைந்துக்கொள்ள... ஈஷாவை தொடர்ந்து கருப்பு லேடி சூட்டில் சித்ராங்கி வெளியே வந்தாள்.

ஈஷாவும் சித்ராவும் ஒன்றாக நின்று இருப்பதை பார்த்த முல்லைக்கு,'ஐயோ... ஒருத்தவ இருந்தாலே சமாளிக்க முடியாது. இதுல ரெண்டு வேறையா' என்று எண்ணியவளுக்கு பிடிபட்டா என்ன ஆகும்னு யோசிக்க கூட நேரம் இல்லாமல் போனது.

ஓடலாமா… மறையலாமா… எதுவும் யோசிக்க முடியாத அளவுக்கு பயம் அவள் மூளையை உறைய வைக்க கண் முன்னே தெரிந்த ஒரே பாதுகாப்பு அந்த கருப்பு காரின் டிக்கியாக தான் இருந்தது.

காரை தவிர்த்து மேலும் மறைந்துகொள்ள இடம் தேடியவள் வேறு வழியே இல்லாமல் சட்டென்று கருப்பு காரின் டிக்கியில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.

'மேடம்... இங்க இருந்து அங்க போக எப்படியும் 2 மணி நேரம் ஆகும் மேடம். அப்புறம் அங்க பண்ண வேண்டிய சம்பவத்தை பண்ணி முடிச்சிட்டா மறுபடியும் இங்க காலையில 7மணிக்குள்ள வீடு திரும்பிடலாம் மேடம்' என்று ஈஷா சொல்ல... சித்ரா வேகமாக கருப்பு காரின் அருகே வந்து நின்றவள் தன் ஆள்க்காட்டி விரல் கொண்டு தன் நெற்றியை வருடினாள்.

'என்னாச்சு மேடம்' என்று ஈஷா கேட்க...
'5 மணிக்கு நம்ம இங்க இருந்தாகணும். So' என்றவள் காரின் ஓட்டுநர் இருக்கையில் சித்ரா ஏறி அமர்ந்ததும். ஈஷா ஓடி வந்து முன் இருக்கையில் அமந்துகொண்டவள் முன் ஜாக்கிரதையாக சீட் பெல்ட் போட்டுக் கொண்டாள்.

சித்ரா காரை ஸ்டார்ட் செய்ததும், கேட்டை ரிமோட் மூலம் ஈஷா திறந்து இருக்க...சித்ராங்கி விரட்டிய கார் ஆள் இல்லாத ரோட்டில் ஆயிரம் குதிரையின் வேகத்தில் சீறி பாய்ந்தது.

'ஐயையோ...வழியில போற சனியனை தூக்கி பனியனுக்குள் போட்டுகிட்ட கதையா ல்ல ஆச்சு' என்று டிக்கிக்குள் மறைந்து இருக்கும் முல்லைக்கு உள்ளுற பயம் எழுந்த நேரம். சத்தம் போடாமல் கால்களை மடக்கி வாயை பொத்திக்கொண்டு டிக்கி குள்ளே அமைதியாக ஐக்கியம் ஆகி இருந்தாள் முல்லை.

சித்ரா அவள் இயக்கும் காரை சந்து பொந்து என்று பல மேடு பல்லங்களில் ஏற்றி இரக்க...முல்லைக்கு உடம்பெல்லாம் உதிர்ந்த உப்புமாவாக மாறி போனது.

வழியெல்லாம் ஒரு வார்த்தை கூட ஈஷாவும் சித்ராவும் பேசாமல் இருக்க... கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்தில் சித்ரா அவள் காரை ஒரு காட்டின் நடுவே அமைந்துள்ள செங்கல் சூளைக்கு முன்னே நிறுத்தினாள்.

'வீட்டுக்கு வந்துட்டோமா' என்று முல்லை தனக்குள் நினைத்து இருக்க... காரில் இருந்து இறங்கிய ஈஷா வேகமாக அங்கிருந்த சின்ன வீட்டுக்குள் நுழைந்து ஒரு இருக்கையை எடுத்து வந்து அந்த இடத்தின் மத்தியில் வைத்ததும்.சித்ராங்கி காரில் இருந்து இறங்கி சென்று அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

அந்த இடம் முழுதும் இருள் சூழ்ந்து இருந்த நிலையில்... சித்ரா வந்து இறங்கிய காரின் ஹெட் லைட் ஒலி தான் அந்த இடத்தில் வெளிச்சத்தை கொடுத்து இருந்தது.

சித்ரா அமைதியாக அந்த இருக்கையில் அமர்ந்து இருந்தவள் கண்கள் மூடி ஆழ்ந்த மூச்சை உள் இழுத்து,'அழைச்சிட்டு வர சொல்லு' என்றவளின் வார்த்தையை கேட்டு ஈஷா தன் கைபேசியில் இருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.

ஈஷா போன் செய்த அடுத்த சில நொடிகளில் ஒரு சிவப்பு நிற கார் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர, அந்த காரில் இருந்து நான்கு பெண்கள் இறங்கியவர்கள், சித்ராவின் முன்னே கைகளை கட்டி நின்றார்கள்.

சித்ரா அந்த பெண்களை பார்த்தவள் ஈஷாவை பார்த்து கண்கள் அசைக்க... அங்குள்ள செங்கல் சூளையில் தீயை மூட்டினாள் ஈஷா.

வெளியே நடக்கும் எந்த விஷயமும் தெரியாமல் முல்லை டிக்கிக்குள் பதுங்கி இருந்தவள்,'ஒரு வேள வீட்டுக்கு வந்துட்டோமா' என்று எண்ணிக்கொண்டு பொறுமையாக டிக்கியின் கதவை திறந்து பார்க்க...கார் காட்டு பகுதியில் நின்று இருப்பதை அறிந்துகொண்டாள்.

'என்ன இது பேய் கதையில வர காடு மாதிரி இருக்கு' என்று எண்ணியவள் பொறுமையாக கதவை திறந்துகொண்டு கீழே இறங்க உள்ளுக்குள் அவளுக்கும் பயம் இருக்க தான் செய்தது.

அதே சமயம் அங்கு நின்று இருந்த நான்கு பெண்களில் ஒருவள் சிவப்பு நிற காரை திறந்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 40 வயது மதிக்க தக்க பெண்மணி கலாவை குண்டு கட்டாக தூக்கி வந்து சித்ராங்கியின் முன்னே நிற்க வைத்தார்கள்.

'ஏய்...இதெல்லாம் உன் வேலை தானா... வேணா CR. என்னை ஒன்னும் பண்ணிடாதே.. எனக்கு எதாவது ஆச்சுன்னா ஆதிசேஷன் உன்னை சும்மா விட மாட்டாரு' என்ற கலாவை பார்த்து அந்த இடமே அதிரும் படி சத்தமாக சிரித்தாள் சித்ராங்கி.

மையான அமைதியை தத்தேடுத்து இருக்கும் காட்டினில் சித்ராவின் சிரிப்போலி நாலா பக்கமும் ஒலிக்க...
செங்கல் சூலையில் ஈஷா பற்ற வைத்த நெருப்பின் ஒளியில் சித்ராங்கியின் முகத்தில் தெரிந்த கோவக்கனலை தூரத்தில் இருந்து பார்த்த முல்லைக்கு கை கால்கள் நடுக்கம் கொடுத்தது.

'வேண்டா CR... எங்கள பகச்சிக்காத...உனக்கு என்ன தேவைன்னு நீ என்கிட்ட சொல்லு... நானே ஆதிக்கிட்ட சொல்லி உனக்கு அதை வாங்கி தரேன்' என்ற கலாவை அடி மேல் அடி வைத்து நெருங்கிய சித்ராங்கி. அவள் கை கட்டை விடுவித்தாள்.

கலாவின் டீலுக்கு சம்மதித்து தான் சித்ரா அவள் கை கட்டை கழட்டி இருக்கிறாள் என்று அங்குள்ள அனைவரையும் போலவே தூரத்தில் நின்று இருந்த முல்லையும் நினைத்து இருக்க..'ஈஷா...' என்ற சித்ராங்கி தன் கையை நீட்டியதும்,துப்பாக்கி ஒன்றை சித்ராங்கி கையில் கொடுத்தாள் ஈஷா.

துப்பாக்கியை பார்த்ததும் கலாவின் கண்களில் கலவரம் கூடி போக...
'CR...' என்ற கலாவின் மிரட்டலான குரலின் முடிவில் துப்பாக்கியின் தொட்டா ஒன்று கலாவின் நெற்றி பொட்டில் இறங்கியது.

பெண்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ பிஸ்னஸ் விஷயமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என நினைத்து இருந்த முல்லைக்கு தன் கண் முன்னே நடந்த கொலையை பார்த்து ஈர குழையே நடுங்கி போய் நின்று இருந்தவள் கண் முன்னே சித்ராங்கியின் கொர முகம் தெரிந்தது.

'யாருக்கு யாரு பங்கு தரப்போறிங்க... இனி அந்த ஆதிஷேஷன் சம்பாதித்த ஆதியில் இருந்து அந்தம் வரை இந்த CR கால் அடிக்கு தான் வந்து சேரும்' என்ற சித்ராங்கி, தன் கண் முன்னே பிணமாக கிடக்கும் கலா என்கிற கலைவாணியை தன் கைகளால் தூக்கி,கொழுந்து விட்டு ஏரியும் செங்கல் சூளைக்குள் வீசினாள்.

இதுவரை தன் கண் முன்னே ஒரு பூச்சி துடிப்பதை கூட காண மனம் தாங்காத முல்லையின் கண் எதிரே நடந்த கொலையை பார்த்து பெண்ணவள் அதே இடத்தில் பேய் அறைந்தது போல நின்று இருந்தாள்.

கலாவை தூக்கி நெருப்பில் வீசிய சித்ராங்கி தன் கைகளை தூசி தட்டுவதை போல தட்டியவள் தன் உடம்பை முறித்து சோம்பல் எடுத்தவள்,

'என்ன ஈஷா... இந்த காட்டுக்குள்ள ரத்தினம் கிடைக்குமா என்ன!?' என்று கேட்டாள் சித்ராங்கி.

சித்ராவின் கேள்வியை புரிந்துக்கொள்ள முடியாமல் ஈஷா குழப்பத்துடன்,'என்ன மேடம் சொல்றிங்க... ரத்தினமா!?' என்று கேட்க,

'ம்... ரத்தினம் தான். அதுவும் வாசமிகுந்த ரத்தின முல்லை' என்ற சித்ராங்கி தன் காரின் பின்னே மறைந்து இருந்த முல்லையின் எதிரே சென்று நின்றாள்.

முல்லையை அங்கு பார்த்த ஈஷாவின் கண்கள் எப்படி அதிர்ச்சியில் உறைந்து போனதோ... அதே போல சித்ராவை தன் எதிரே பார்த்த முல்லையின் விழிகளும் ஸ்தம்பித்து போனது.

முல்லையின் கண்களுக்கு அந்த எமனே சித்ராங்கியின் உருவத்தில் தன் முன்னே நிற்பது போல எண்ணம் தோன்ற...'So....இங்க நடந்த சம்பவத்தை நீ பார்த்துட்ட!! அப்படி தானே!?' என்று சித்ராங்கி முல்லையை கேட்டாள்.

'நீ... நீ ஒரு கொலைக்காரியா!?' என்று முல்லை கேட்க,'முல்ல... மைண்ட் யுவர் வேர்ட்ஸ்' என்று ஈஷா பேசும் தருணம் அவள் முன்னே கையை நீட்டி ஈஷாவின் வார்த்தையை தடுத்தாள் சித்ராங்கி.

'நீ கொலைகாரி தான்...நீ ஒரு பொம்பளையை கொலைப்பண்ணி அதோ அந்த நெருப்புல' என்று முல்லை நடந்த கதையை சொல்லும் முன்னே... சித்ராங்கி முல்லையின் கண்களை பார்த்து விஷமமாக சிரித்தவள்,

'Good Night Flower' என்று சொன்ன வேகத்தில் முல்லையின் நெற்றிபொட்டில் தன் விரல்க் கொண்டு சித்ரா சுண்டியதும் முல்லை அதே இடத்தில் மயங்கி விழப்போனவளை

சித்ராங்கியே தன் தோளில் தாங்கி இருந்தாள்.

- தொடரும் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top