Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 130
- Thread Author
- #1
தீமையே
வெ[கொ]ல்லும்
படலம் - 9(1)
படலம் - 9(1)
தன் தங்கையின் கோவத்தை பார்த்த உதயா,' என்னாச்சு ரம்யா' என பதறிக்கொண்டு அவள் அருகே ஓடி வந்தான்.
உதயாவை கோபத்துடன் பார்த்த ரம்யா...'இங்க பாரு இந்த வீடியோவை' என்று தன் கையில் இருந்த போனை அவனிடம் காட்டியதும் உதயாவின் முகமும் கோவமாக மாறியது.
'என்ன ரம்யா இது... யாரு இந்த பொண்ணு' என்ற உதயாவை மேலும் முறைத்து பார்த்த ரம்யா...' அவ பேர் முல்ல... medical காலேஜ் ஸ்டுடென்ட்' என்றவளின் பார்வை வீடியோவில் தெரியும் முல்லையின் மீது வன்மமாக படிந்தது.
'ஆனா இந்த பொண்ணுக்கும் கதிருக்கும் என்ன உறவு... இந்த பொண்ணை ஏன் கதிர் மீட் பண்ணிருக்கான். இவங்க அப்படி என்ன பேசிக்கிறாங்க' என்று உதயா தன் கையில் இருக்கும் போனில் play ஆகும் வீடியோவை பார்த்து கேள்வி எழுப்பிக்கொண்டே போனான்.
'வீடியோ தூரத்துல இருந்து எடுத்து இருக்காங்க. அதனால அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு எனக்கு தெளிவா புரியல' என்ற ரம்யா, ஒரு கணம் அந்த வீடியோவை உற்று பார்த்தாள்.
ரம்யாவுக்கு கதிர் முல்லையின் நெருக்கத்தை பார்த்து ஆத்திரம் அதிகமாகிக்கொண்டு போக,
'அவ யாரா இருந்தா என்ன!! அவ எப்படி என் கதிர் கூட பேசலாம்' என்று கேட்டாள்.
தன் தங்கை எந்த அளவுக்கு கதிரை விரும்புகிறாள் என்று உதயா அறிந்து இருந்த பட்சத்தில்.'ரம்யா... நான் வேணும்னா கதிருக்கு போன் பண்ணி இந்த பொண்ணு யாருன்னு விசாரிக்கவா' என்று கேட்டான்.
'வேணா... நீ கேட்டா உனக்கு எப்படி இதெல்லாம் தெரியுமுன்னு கதிர் உன்னையே மறு கேள்வி கேட்பான்' என்ற ரம்யா... சில நொடிகள் ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தாள்.
'என்னாச்சு... என்ன யோசிக்கிற' என்று உதயா கேட்க,'இன்னும் ரெண்டு நாளுல அப்பா அந்த பனை மர தோப்பை என் பேர்ல வாங்க இங்க வராரு தானே... அப்போ எனக்கும் கதிருக்கும் சம்மந்தம் பேச சொல்லிடலாம்' என்றாள் ரம்யா.
தன் தங்கையின் திட்டத்தை கேட்டு,'இது கூட நல்லா தான் இருக்கு' என்ற உதயா.. வயிற்றை பிடித்துக்கொண்டு அங்குள்ள இருக்கையில் பொறுமையாக அமர்ந்தான்.
தன் அண்ணனின் நிலையை பார்த்த ரம்யாவுக்கு சட்டென்று சித்ராங்கியின் முகம் நினைவுக்கு வர,'ஆமா... நம்ம பங்களாவை வாங்கின அந்த ரவுடி பொம்பள யாருன்னு விசாரிச்சியா' என்று கேட்டாள்.
அது வரை இயல்பாக இருந்த உதயா...சித்ராங்கியை பற்றி ரம்யா பேசியதும் சட்டென்று முகம் மாறியவன்,'அவளை பற்றி எதுவுமே கண்டு பிடிக்க முடியல. அப்பா வந்ததும் தான் அவளைப்பற்றி விசாரிக்கனும்' என்றான்.
'விசாரிக்கிறது மட்டும் இல்ல. அவளை நம்ம காலுல விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கணும்' என்ற ரம்யாவை பார்த்து சம்மதமாக உதயா தலை அசைத்து வைக்க,
சித்ராங்கியின் ஆட்டம் இனி தான் ஆரம்பிக்கவே போகிறது என்ற உண்மை இந்த அரைவேக்காடுக்கு தெரியாமல் போனது.
இதே தருணம் VCR பங்களாவின் எதிரே இருக்கும் பனைமர தோப்பின் உள்ள வீட்டில், ' தேனு... எழுந்து சாப்பிடு மா' என இத்துடன் பத்தாவது முறையாக கருப்பசாமி என்கிற கருப்பு சிறுமியை எழுப்பி இருந்தான்.
'மாட்டேன்... நான் சாப்பிட மாட்டேன்' என்று குழந்தை அடம் பிடிக்க...'விடிஞ்சதும் நானே போய் உன் பணத்தை வாங்கியாந்து உன்கிட்ட கொடுக்குறேன்' என்றான் கருப்பன்.
'இல்ல... எனக்கு இப்போவே போய் அந்த பணத்தை வாங்கி வந்து கொடு. இல்லையா.. அவங்களை என் அம்மா அப்பா கல்லறையை இடிக்க வேணான்னு சொல்ல சொல்லு' என்று சிறுமி தேனு அடம் பிடிக்க...
கருப்பசாமிக்கோ என்ன பண்ணுவது என்றே புரியாமல் போனது.
கருப்பன் மாலை வீடு திரும்பிய கையோடு... தேன்மொழி VCR பங்களாவிற்கு சென்று சில்லறை பணத்தை சித்ராங்கியிடம் கொடுத்தத்தை பற்றி பத்மா சொல்லி இருக்க... பத்மா தான் கருப்பனை திருமணம் செய்துக்கொள்ள காத்து இருக்கும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
'நான் சொன்னா கேக்கணும். நாளைக்கு காலையில கண்டிப்பா நான் போய் பணத்தை வாங்கிட்டு வருவேன்' என்று கருப்பன் குழந்தையிடம் பொறுமையாக பேசிக்கொண்டு இருக்க,
'யோவ் மாமா ... அது தான் பைத்தியம் மாதிரி பேசுதுனா நீயும் ஏன்யா அத கொஞ்சிகிட்டு இருக்குற' என்று கேட்டாள் பத்மா.
பல வருடமாக பத்மா கருப்பனை மனம் முடிக்க காத்து இருக்க... அவனோ குழந்தை தேன்மொழிக்காக யாரையும் கல்யாணம் செய்துகொள்ளவே மாட்டேன் என்று முடிவு எடுத்து இருந்தான்.
தன் திருமண வாழ்க்கைக்கு தேன்மொழி தான் இடைஞ்சல் என்று எண்ணிய பத்மா அர்த்தமே இல்லாமல் சிறுமியின் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டு போக, கருப்பன் இல்லாத நேரத்தில் சிறுமியை துன்பறுத்தவும் செய்து இருந்தாள்.
எப்படியாவது தேன்மொழியை அனாதை விடுதியில் சேர்த்து விட வேண்டும் என்று எண்ணிய பத்மா... உறவாடி கெடுக்க முடிவு செய்து இவர்களுடன் அடிக்கடி வந்து பேசிக்கொண்டு இருக்க காரணமும் பணமாக தான் இருந்தது.
ஆம்...இந்த தோப்பை கருப்பனின் தம்பிகள் விற்க முடிவு செய்ததும். கருப்பனுக்கும் அதில் பங்கு வருமென்று காத்து இருக்கிறாள் பத்மா.
யார் என்ன நினைத்தாலும் இந்த இடத்தை நான் விற்கவே மாட்டேன் என்று கருப்பன் எண்ணி இருக்க,
'தேனு பாப்பா...நாளைக்கு நானே உன்னை அழைச்சிட்டு போய் அந்த பணத்தை வாங்கி தரேன். இப்போ வந்து சாப்பிடு' என்றவன் சிறுமியை அவன் பெற்ற பிள்ளையை போல பேணி காத்து வந்தான்.
'அப்போ உண்மையாவே நாளைக்கு என் பணத்தை வாங்கி தரணும்' என்று தேன்மொழி சொன்னதும்.
' கண்டிப்பா வாங்கி தருவேன்.' என்ற கருப்பனுக்கு, இதற்கெல்லாம் காரணமான XMLAசம்பத்தை தாண்டி சித்ராங்கி மீது தான் கோவம் எழுந்தது.
'ஏன் மாமா... இவ ஏன் அடிக்கடி அந்த பங்களாக்கு போறா' என்று பத்மா கேட்க,
'அவங்க தானே இந்த இடத்த வாங்க போறாங்க. அதான் சம்பத் குடும்பத்தை சார்ந்த ஆளுங்ககிட்ட தேனு போய் பேசி பார்க்குறா' என்று கருப்பன் சொல்ல... பத்மாவின் முகம் அஷ்ட கோனலாக மாறி போனது.
தேன்மொழி பிறந்ததுமே தாய் தந்தையை இழந்த பிள்ளைக்கு அன்னையாக நாம் தான் இருக்க வேண்டும் என்று எண்ணாத பத்மா, நாளைய மறுநாள் இந்த இடத்தை XMLA சம்பத்துக்கு விற்றால் லட்ச கணக்கான பணம் தங்களுக்கும் பங்காக வரும் என்று நினைத்தவள்,விரைவில் கருப்பனின் கையால் தாலியை கட்டிக்கொள்ள வேண்டும் என்ற பகல் கனவையும் காண ஆரம்பித்து இருந்தாள்.
ஆனால் சிறுமி தேனோ...
பணம் இல்லாட்டி சித்ராங்கி தன் அம்மா அப்பா கல்லறையை இடித்து விடுவாள்
என்ற பயம் அவள் பிஞ்சு மனதை ரணமாக்கி இருந்தது.
இதே தருணம் மறுபக்கம் கதிரின் அறையில் அவன் பொருள் எல்லாம் தரையில் சிதறி கிடந்தது.
நீண்ட நேரம் கதிர் எதையோ தேடுகிறான் என்று உணர்ந்த அவனின் பாட்டி தேவி,'என்னப்பா கதிர்... இவ்ளோ நேரம் என்னத்த தேடுற!?' என்று வினாவினார்.
'அது... ஒரு போட்டோ!!' என்று கதிர் வார்த்தையை இழுக்க...'யாரு போட்டோ மாமா... உன் Flower போட்டோவா!' என்று கேட்டுக்கொண்டே கையில் பால் கிளாஸ் உடன் கதிரின் அறைக்குள் நுழைந்தாள் மீனா.
'என்ன Flower!?' என்று தேவி பாட்டி புரியாமல் கேட்க... மீனா கதிரை பார்த்து கிண்டலாக சிரித்துக்கொண்டே அவன் கட்டிலின் மீது அமர்ந்தாள்.
மீனாவின் செயலில் மேலும் கடுப்பான கதிர் ஓங்கி அவள் தலையில் ஒரு குட்டு வைத்தவன்,'போட்டோ எங்கடி' என்று கேட்டான்.
'டேய்... என்ன என்கிட்ட கேக்குற... சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது' என்று மீனா தன் தலையை தடவி கொடுக்க...
'ஐயோ என்ன தான் போட்டோ அது' என்று கேட்டார் தேவி பாட்டி.
'பாட்டி... உன் பேரன் ஒரு பொண்ண...' என்று மீனா மேற்கொண்டு முல்லையை பற்றி சொல்ல வர...'என்ன பொண்ணு!?' என்று கேட்டுக்கொண்டே கதிரின் பெரியம்மா சாமுண்டி கதிரின் அறைக்குள் நுழைந்தார்.
கதிருக்கு அவன் பெரியம்மா மீது அதிகப்படியான மரியாதை கலந்த பயம் இருக்கும் காரணத்தால், 'அது... அது என் Friend போட்டோ' என்று சமாளித்த கதிரை பார்த்து சத்தமாக சிரித்து இருந்தாள் மீனா.
கதிர் முல்லையின் படத்தை தான் தேடுகிறான் என்று சாமுண்டியும் அறிந்து இருக்க...'ஏய் மீனா... வயசு பையன் இருக்குற ரூம்ல இந்த நேரத்துல உனக்கு என்ன டி வேலை' என்று கோபத்துடன் கேட்டார் சாமுண்டி.
'இந்தா ஆரம்பிச்சிட்டீங்களா... நீங்க எந்த காலத்துல இருக்கீங்க அத்த.இப்போ என்ன? நான் கதிர் மாமாவை வளைச்சி போட பாக்குறேன்னு சொல்ல வரிங்களா' என்று மீனா கேட்க...
'நீ பண்ணாலும் பண்ணுவ டி' என்று சொன்னார் சாமுண்டி.
'ஏய் அறிவு கெட்ட சாமு... பொம்பள பிள்ளைகிட்ட என்ன பேச்சு பேசுற' என்று தேவி பாட்டி தன் மகளை கண்டிக்கும் நேரம்..
'அட விடுங்க பாட்டி... உங்க பொண்ணு சின்ன வயசுல இப்படி தான் எல்லோரையும் வளைச்சி பார்த்து இருப்பாங்க போல' என்ற மீனா...கதிரின் அறையில் இருந்து தன் அத்தையை முறைத்தப்படி வெளியேறி இருந்தாள்.
மீனாவின் வார்த்தையில் உள்ள உள்குத்தை புரிந்துக் கொண்ட சாமுண்டி...'ஏய் நில்லு டி.. யாரை பார்த்து என்ன பேச்சு பேசுற' என்று கத்தியதும்...'நீ பேசுனதுக்கு தான் அவ பதில் தந்துட்டு போறா' என்றார் தேவி பாட்டி.
மீனாவும் தன் பெரியம்மாவும் பேசியதை காதில் வாங்காத கதிரோ... மேலும் அவன் அறையை ஆராய்ந்துக் கொண்டு இருக்க..
'கதிர்... உன் பெரியப்பாவும் உன் அப்பாவும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயமா பேசணும்னு சொன்னாங்க' என்றார் சாமுண்டி.
தன் பெரியம்மா தன்னிடம் தான் பேசுகிறார்கள் என்பதைக் கூட உணர்ந்திடாத கதிர் மேலும் மேலும் முல்லை இருக்கும் புகைப்படத்தை தேடிக்கொண்டு இருக்க..
' டேய் உன்கிட்ட தான்டா பேசறேன்' என்று அழுத்திச் சொன்னார் சாமுண்டி.
சாமுண்டியின் குரலைக் கேட்டு சுய நினைவுக்கு வந்த நிலையில்,' என்ன பெரியம்மா என்ன சொன்னீங்க' என்று கதிர் கேட்க,' என்னப்பா அப்படி எந்த ஃபோட்டோவை தான் தேடுற' என்று கேட்டார் தேவி பாட்டி.
'பாட்டி அதான் சொன்னேனே என் பிரண்டோட போட்டோ' என்று கதிர் சற்று கோபத்துடன் தன் வார்த்தைகளை உதிர்க்க
'அந்த போட்டோ கண்றாவி எல்லாம் அப்புறம் தேடிக்கலாம்.உன் அப்பாவும் பெரியப்பாவும் உன்னை உடனே மாடிக்கு வர சொன்னாங்க போ' என்று கட்டளையாக சொன்னாள் சாமுண்டி.
'இந்த போட்டோவை எங்க வெச்சேன். என் மணி பர்ஸ்லதானே வச்சிருந்தேன்' என்று உள்ளுக்குள் முல்லையின் படம் தொலைந்ததை எண்ணி வேதனை அடைந்த கதிர் மொட்டை மாடியில் இருக்கும் தன் தந்தையையும் பெரியப்பாவையும் சந்திப்பதற்காக மேலே செல்ல..அங்கே அவர்களுடன் வெங்கட்டும் சோகமாக நின்று இருந்தான்.