• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
128
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்.

✨படலம் - 8(1)


தன் காதலை கதிரிடம் சொல்லும் நேரம்...'முல்ல...' என்ற அழைப்பில் அவள் கண் எதிரே மாறன் நின்று இருக்க, அவள் சட்டென்று கதிரின் வசமிருந்து நகர்ந்துக் கொண்டாள்.

கதிரையும் முல்லையையும் ஜோடியாக பார்த்த மாறன் வேகமாக தன் சகோதரியின் அருகே சென்றவன் அவள் கையை பிடித்து ஓரமாக அழைத்து வந்தான்.

'அண்ணா...' என்று முல்லை பேசும் முன்னே...'வாயை மூடு... உன் விளக்க வெங்காயம் எதுவும் எனக்கு வேண்டாம்' என்று ஒரு கனம் கதிரை முறைத்தான்.

பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறியது போல, கதிர் முல்லையை ஒரு ஆவலில் பார்க்க வந்தவனுக்கு இது தேவையில்லாத ஆணியாக தான் தோன்றியது.

'அண்ணா... நான்...' என்று முல்லை மேலும் பேசும் முன்னே,'என்ன காதலா!?' என்று கேட்டான் மாறன்.

தன் சகோதரனின் நேரடியான கேள்வியில் முல்லை மௌனமாக நின்று இருக்க, மாறன் நேரே கதிரின் அருகே சென்றவன் அவன் கழுத்தில் இருக்கும் ID கார்டை பார்த்து,'எல்லாம் பொய் தான் போல!?' என கேட்டான் மாறன்.

மாறனின் வார்த்தையை கேட்டு மூர்க்க குணமுள்ள கதிரின் கண்கள் சட்டென்று கோவத்தில் சிவப்பை கூட்டி இருக்க,'அண்ணா...' என்று மாறனின் அருகே ஓடி வந்தாள் முல்லை.

தன் சகோதரியை அழுத்தமாக முறைத்து பார்த்த மாறனோ,'இவருக்கு எப்படியும் நம்மள விடவே ஐந்து ஆறு வயசு அதிகமா இருக்கும்' என்றான்.

மாறனின் வார்த்தையை கேட்டு,'ஆமா... கதிர் நம்மள விட பெரியவர் தான்' என்றாள்.

மாறனும் முல்லையும் பேசும் வரை கதிர் இந்த விஷயத்தை பெரிதாக எண்ணாமல் இருந்தவனின் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட...'ஆனா நம்ம அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பத்து வயசு வித்யாசம் தெரியுமா!!' என்றாள் முல்லை.

கதிர் இந்த நொடி வரை முல்லை மீது உள்ள காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வில்லை எனினும், அவளை அவன் எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்று அவன் மட்டுமே அறிந்து இருக்க, அந்த நொடி மாறனிடம் தன்னை விட்டு தராமல் பேசும் முல்லை மீது கதிருக்கு மேலும் காதல் அதிகரித்தது.

'என்ன நீ பைத்தியம் மாதிரி பேசுற... இப்போ நீ படிக்கிற,
படிக்கிற வயசுல காதல் மோதல் எல்லாம் சரிவராது.

அதுவும் இல்லாம இவர பார்த்தா பணக்கார வீட்டு பையன் மாதிரி இருக்கு,
நம்ம ஒரு சாதாரமான குடும்பத்த சார்ந்தவுங்க.

இதெல்லாம் யோசிக்காம நீ பாட்டுக்கு இவரை காலேஜ்ல நிக்க வச்சி பேசிகிட்டு இருக்கியே!!

இதெல்லாம் அப்பாவுக்கு தெரிஞ்சா என்னவாகும்னு யோசிச்சு பார்த்தியா' என்று கேட்டான் மாறன்.

தன்னை விட சின்னவனாக இருந்தாலும் மாறன் அவன் சகோதரியிடம் பேசும் வார்த்தை எல்லாம் கதிர் உள்ளுற மதித்து இருந்தாலும் வீம்புக்கு பாம்பு பிடிக்கும் குணம் கொண்ட கதிரோ,'ஹலோ கொஞ்சம் நிறுத்துறியா!' என்று உரும்பினான்.

கதிரின் கர்ஜனையான குரலில் மாறன் சிறு அச்சதுடன் அவனை பார்க்க,'இப்போ என்னாச்சுன்னு நீ இவ்ளோ பெரிய வசனம் பேசுற!?' என்று கேட்டான் கதிர்.

'ஏங்க... என்ன கேக்குறீங்க நீங்க... என் தங்கச்சி உங்கள காதலிக்கிறேன்னு சொல்லுறா!! நான் அத கேட்டுட்டு எப்படிங்க சும்மா இருப்பேன்' என்று மாறன் கேட்க,

'அண்ணா... நான் சொல்ல வரத முழுசா கேளு அண்ணா' என்றாள் முல்லை.

'நீ எதுவும் சொல்லாத முல்ல...இங்க நடந்தது மட்டும் இப்போ CR மேடமுக்கு தெரிந்தால், நம்ம நிலைமை என்னவாகும்ன்னு தெரியுமா உனக்கு' என்று மாறன் கேட்க... அதுவரை பொறுமை காத்து இருந்த கதிருக்கு சித்ராங்கியின் பெயரை கேட்டதும் நூறு பச்சை மிளகாயை கடிதத்தை போல கண்கள் சிவந்து போனது.

'ஏய் இரு இரு... என்ன சொன்ன... CR மேடமா!?' என்று கதிர் கேட்க,

'ஆமாங்க... அவங்க வீட்டுல வேலை பாக்குற ஆளுங்க எல்லாம் அவங்க சொல்றத கேக்கணும். ஏன்!! அவங்க வீட்டு நாய் கூட அவங்க கண் இமை அசைவுக்கு கட்டுப்படுத்துங்க' என்று மாறன் சொல்ல.

'நம்ம ஒன்னும் நாய் இல்ல' என்றாள் முல்லை.

'ஹாங்... நம்ம நாய் இல்ல தான். ஆனா நம்ம அப்பாவை இப்போ அவங்க தான் காப்பாத்துறங்க. நம்ம அப்பா வர வரைக்கும் நம்ம அவங்க கட்டுப்பாட்டுல தான் இருந்தாகணும்' என்று மாறன் சொல்ல...

'இப்போ என்னாச்சுன்னு நீ இப்படி கத்துற' என்று கேட்டாள் முல்லை.

'இன்னும் என்ன ஆகனும். நீ படிக்கிற வேலையை விட்டுட்டு என்ன வேல பார்த்துகிட்டு இருக்குற!?' என்று மாறன் கேட்டதும்,

'இங்க பாரு... என் படிப்பை எப்படி முடிக்கணும்னு எனக்கு தெரியும். நான் டாக்டர் ஆகிட்டு தான் கதிரை கல்யாணம் பண்ணிப்பேன். அதுவரைக்கும் நான் அவரை லவ் மட்டும் தான் பண்ணுவேன்' என்று ஒரே அடியாக தன் மனதில் உள்ள எண்ணத்தை தொப்பென்று போட்டு உடைத்து இருந்தாள் முல்லை.

'என்ன கல்யாணமா!?' என்று முல்லையின் எண்ணத்தை கேட்டு கதிரின் விழிகள் அகலமாக...

'ஆமா கதிர்...நம்ம இப்போ லவ் பண்ணலாம். நான் டாக்டர் ஆனதும் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்' என்றாள் முல்லை.

தன் சகோதரியின் வார்த்தைக்கு கதிர் பதில் தரும் முன்னே...'அதெல்லாம் நடக்கவே நடக்காது. அந்த CR மேடம் உங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டாங்க' என்று மாறன் சொல்ல...

'அவங்க யாரு என் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல?' என்று கேட்டாள் முல்லை.

அதுவரை கலங்கிய குட்டையாக இருந்த கதிரின் மனதில்,'ஏய் இரு இரு... முல்லை என்னை கல்யாணம் பண்ணிக்க உன் CR மேடம் ஒத்துக்க மாட்டாங்களா!?' என்று கடுப்பாக கேட்க...

'ஆமாங்க..அவங்க கண்டிப்பா இந்த கல்யாணதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. அவங்க பேச்சை மீறி எங்க அப்பாவும் உங்கள ஏத்துக்க மாட்டாரு' என்றான் மாறன்.

தன் சகோதரனின் வரத்தையில் முல்லையின் கண்கள் கலங்கி போக...
'ஹேய் முல்ல டார்லிங்... NO NO... don't Cry பேபி. இங்க வர வரைக்கும் நான் உன்னை பார்த்து நார்மலா பேசலாமுன்னு தான் வந்தேன். ஆனா எப்போ உன் Bro அந்த ராங்கிக்கு இவ்ளோ பெரிய Built up கொடுத்தானோ!! அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன்' என்ற கதிர் தன் சட்டை காலரை தூக்கி விட்டு ஒரு கனம் மாறனை அழுத்தமாக பார்த்தான்.

கதிரின் அடுத்த வார்த்தை என்னவென்று மாறனும் முல்லையும் உன்னிப்பாக கவனித்து இருக்க...
'முல்ல...இனி எவன் தடுத்தாலும்... எப்படி... அந்த எமனே தடுத்தாலும். இந்த கதிர்வேலன் தான் என் முல்லைக்கு கணவன்' என்றவனின் வார்த்தையை கேட்டு பெண்ணவளின் முகமெல்லாம் பிரகாசமாக மாறியது.

'ஏங்க..' என்று மாறன் ஏதோ பேச வர..
'வெயிட் மச்சான்... நீ இனி எதுவும் பேசாத. உன் தங்கச்சி நல்லப்படியா டாக்டர் படிக்கட்டும். ஆனா முருகனோட பொண்ணா இல்லாம. இந்த கதிர் வேலனோட பொஞ்சாதியா படிக்கட்டும் 'என்ற கதிர் முல்லையை பார்த்து அழகாய் கண் சிமிட்டினான்.

இத்தனை நாளாக கதிரிடம் தன் காதலை சொல்ல காத்து இருந்த முல்லைக்கு அவளின் கல்யாண செய்தியே அவள் செவிகளுக்கு விருந்தாக அமைந்து இருக்க...
'அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். உங்க CR மேடம் தான் எங்க கல்யாணத்துக்கு chief கெஸ்ட்' என்றான் கதிர்.

கதிரின் இந்த பேச்சில் முல்லை மீது அவனுக்கு இருந்த காதலை விடவே சித்ரா மீது அவனுக்கு இருக்கும் வன்மம் தான் அதிகமாக தெரிகிறது என்று உணர்ந்து இருந்த மாறனுக்கு இந்த உண்மையை முல்லைக்கு எப்படி எடுத்து சொல்வது என்று தெரியாமல் போனது.

'டார்லிங்... இனி நான் உன்னை வந்து டெய்லி மீட் பண்ணுவேன். உன்கிட்ட போன் இருக்கா!?' என்று கதிர் கேட்க...

'இல்லை' என்று அவள் தலைசைக்க..
'Ok விடு வாங்கிக்கலாம்' என்றவன் மாறனின் சட்டை பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்து முல்லையின் உள்ளங்கையில் கதிரின் கைபேசி எண்ணை எழுதினான்.

அவன் எழுதிய எண்ணை எண்ணத்தில் பதித்துக்கொண்ட முல்லை அவனை காதலாக பார்த்து இருக்க,

'இது தான் என் நம்பர். எப்போ முடியுமோ அப்போ கூப்பிடு,இப்போ போய் சாப்பிட்டு, கிளாஸ்க்கு போ... நாளைக்கு மீட் பண்ணலாம்' என்றவன் அவளை பார்த்து செல்லமாக கண்கள் சிமிட்டினான்.

'சரி... எனக்கு மணி ஆகுது. நான் கிளம்புறேன். ஹாங் மச்சான்... அடுத்து ஒரு முறை அந்த ராங்கியை பற்றி என்கிட்ட பேசினீனா...அப்புறம் எல்லாமே ராங்கா போய்டும்' என்ற கதிர் மாறனின் கன்னத்தில் லைட்டாக தட்டியவன். முல்லையை பார்த்து சிரித்த வண்ணமாக அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

முன்பே கதிரின் இந்த ஹீரோயிசமை பார்த்து மயங்கி இருந்த முல்லைக்கு இப்போது அவன் பெரிய கதாநாயகனாக அவள் கண்ணுக்கு தெரிய... தன் தங்கையின் கண்களில் தெரிந்த ஒலியை பார்த்து மாறனின் அவள் எதிர்காலத்தை எண்ணி அவன் முகத்தில் இருள் சூழ்ந்து
போனது.

கல்லூரியில் இருந்து கதிர் வெளியே செல்லும் வரை அவனையே பார்த்து இருந்த முல்லை... அப்போது தான் தன்னையே பார்த்து இருந்த மாறனை கண்டுகொண்டவள்,'சரி சரி... நீ ஏன் இந்த நேரத்துல இங்க வந்த!? என்ன என் மேல உனக்கு திடிர் பாசம் ' என்று இயல்பாக கேட்டாள்.

'நீ சாப்பிட்டு இருக்க மாட்ட... உன்கூட சேர்ந்து நானும் சாப்பிடலாமுன்னு தான் வந்தேன்' என்று மாறன் சொல்ல...
'சரி வா சாப்பிடலாம். எனக்கும் இப்போ தான் பசிக்குது என்றாள்.

தன் சகோதரயின் இந்த அறியாமையை பார்த்து மாறனுக்கு உள்ளுற பயம் எழுந்த நிலையில்...'இல்ல... எனக்கு பசியே போயிடுது'என்றவன்... வாடிய முகத்துடன் அந்த மருத்துவ கல்லூரியில் இருந்து அவன் படிக்கும் சட்ட கல்லூரிக்கு நடந்தே சென்று இருந்தான்.

என்னதான் படிப்பில் கெட்டிகாரியாக இருந்தாலும், கதிர் விஷயத்தில் ஏதோ தவறு செய்கிறோம் என்று உணராத முல்லையோ... கதிரும் தன்னை காதலிக்கிறான் என்ற மகிழ்ச்சியில் அவள் மதிய உணவை சாப்பிட தொடங்க...
இங்கே இத்தனை நிமிடங்கள் நடந்த அத்தனை காட்சியையும் வெவேறு இடத்தில் நின்று இருந்த இருவர் படம் பிடித்துக்கொண்டு இருந்தார்கள்.

படம் பிடித்தவர்கள் யாரென்று முல்லையும் கதிரும் பார்க்காமல் இருக்க, இவர்களால் யாருக்கு என்ன பிரச்சனை வரபோகிறது என்று பார்ப்போம்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top