• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
123
'அம்மா...வயசாகிடுத்தே தவிர உனக்கு அறிவுன்னு எதாவது இருக்கா இல்லையா.. யார் பையனுக்கு யார் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க உரிமை இருக்கு ஊறுகாய் இருக்குன்னு நீ பேசிகிட்டு இருக்க' என்று சாமுண்டி கேட்க.. இவர்கள் பேசுவதை கண்டுகொள்ளாமல் கதிர் இட்லியை விழுங்கிக்கொண்டு இருந்தான்.

'என் பையனுக்கும் சரி கதிருக்கும் சரி நாங்க கோடிஸ்வரன் வீட்டு பொண்ணை தான் சம்மந்தம் பேசி முடிப்போம். ஒரு கோடிஸ்வரி தான் இந்த வீட்டுக்கு மருமகளா வருவா' என்று சாமுண்டிஸ்வரி சொல்ல...'அண்ணி.. உங்க பையனுக்கு என் பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் கனவுல கூட நினைத்தது இல்லை' என்றாள் வள்ளி.

'ஹாங்... கனவுல கூட உன் பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு நினைத்து பார்க்கக்கூடாது ' என்று பரமேஸ்வரி சொல்ல...
இத்தனை பேச்சையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்த மீனாவோ சத்தமாக சிரித்து இருந்தாள்.

வள்ளி அழுதுக்கொண்டு இருக்க.. மீனா சிரிக்க... அப்போது தான் கதிர் மீனாவை பார்த்தவன், ஜீவாவை பார்த்து,' என்ன!?' என்பதை போல பார்வையால் கேள்வி எழுப்பினான்.

மீனாவின் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று வெங்கட்டை தொடங்கி அங்குள்ள அனைவரும் அவளையே பார்த்து இருக்க...
'அத்த...உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கணும்னு இங்க யாரும் ஒத்த காலுல தவம் இருக்கல' என்றாள்.

'ஹாங்... நீ தவம் இருந்தாலும் எனக்கு வீட்டுக்கு நீ மருமகளா வர முடியாது' என்று சாமுண்டி சொல்ல...
'முதல்ல நீங்களே இந்த வீட்டு மருமகள் இல்ல' என்றாள் மீனா.

மீனாவின் வார்த்தை சாமுண்டிக்கு கோவத்தை அதிகரிக்க,
' ஆமா அத்த... நீங்க இந்த வீட்டோட பொண்ணு... என் அம்மாவும், அப்புறம் விநாயகம் பெரியப்பாவோட பொஞ்சாதியும் தான் இந்த வீட்டுக்கு மருமகளுங்க' என்ற மீனாவை பரமேஸ்வரன் எரிக்கும் பார்வை பார்த்து இருந்தாள்.

'நீங்க அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் இந்த வீட்டு பொண்ணுங்க. உங்க புருஷங்க இந்த வீட்டுக்கு வீட்டோட மாப்பிளைங்க... அதனால நீங்க எல்லாம் இந்த வீட்டை பற்றி பேசவே கூடாது' என்ற மீனா... வெங்கட்டை பார்த்து முறைத்தாள்.

'என்னடி... பேச்சு எல்லாம் திமிரா இருக்கு.என்ன அதிகம் படிக்கிற கொழுப்பா' என்று சாமுண்டி கேட்க,'கொழுப்பு எனக்கு இல்ல.. அதெல்லாம் வயசான காலத்துல உங்களுக்கு தான் வரும் பார்த்து ஜாக்கிரதையா இருந்துகொங்க' என்ற மீனா...'அம்மா... இன்னைக்கு நான் வர லேட் ஆகும். ஒரு ஆர்ட்டிக்கில் விஷயமா நான் பக்கத்து ஊருக்கு போறேன்' என்றவள் வேகமாக அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.

'அக்கா... இந்த மீனாவுக்கு திமிர் அதிகமாகிடுது' என்று பரமேஸ்வரி சொல்ல...'பேனா பிடிக்கிற கை இல்ல... அதான் இவ்ளோ திமிர்' என்றாள் சாமுண்டி.

மீனாவை வெங்கட் மனதார விரும்பினாலும் அவனின் அம்மாவை மீறி அங்கே அவன் காதல் காணாமல் போனது.

தன் அண்ணனின் கவலை தோய்ந்த முகத்தை பார்த்த கதிரும்,'ஏன் பெரியம்மா... அண்ணுக்கு மீனாவை பிடித்து இருந்தால் அவளையே கட்டி வைக்கலாமே' என்று கதிர் முதன் முறையாக வெங்கட்டுக்காக பரிந்து பேசினான்.

'நான் சொல்லுற பெண்ணை தான் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணனும். இல்லைனா அதோ அந்த சுவத்துல உங்க ரெண்டு பேர் படமும் மாலையோட தொங்கும்' என்ற சாமுண்டியை வார்த்தையைக் கேட்டு கதிரின் விழிகளும் வெங்கட்டின் விழிகளும் அதிர்ந்து தான் போனது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

அன்றைய தினம் மதிய நேரம் கதிர் உதயாவை பார்ப்பதற்காக அவன் பங்களாவிற்கு சென்றான்.

'கதிர்... அந்த ரவுடி பொண்ணு யாருன்னு தெரிஞ்சுதா கதிர்' என்று ரம்யா கேட்க...
'உன் அப்பா தானே உங்க பங்களாவை அந்த ராங்கிக்கு வித்து இருக்காரு.. அப்போ அவரை கேட்க வேண்டியது தானே' என்று சீரினான் கதிர்.

'அப்பாவை எங்கனால காண்டாக்ட் பண்ணவே முடியல கதிர். ஆனா அவர் எங்க இருந்தாலும் கண்டிப்பா இந்த வீக் எண்ட் இங்க வந்துருவாரு'என்று ரம்யா சொல்ல...
'ஆமா கதிர்... அந்த பனை மர தோப்பை ரம்யா பேர்ல வாங்க போறோம்' என்றான் உதயா.

'ஓ..சூப்பர்' என்று கதிர் சுரத்தையே இல்லாமல் சொல்ல.' கதிர் அங்க அப்பா complex கட்ட போறாரு.அதுவும் என் பேர்ல' என்றாள் ரம்யா.

'ம்... Good' என்ற கதிர் மீண்டும் ஏதோ நினைவில் முழுகி போக...'ஆமா... நேத்தே கேட்டேனே கதிர்... யார் அந்த முல்ல?' என்று கேட்டாள் ரம்யா.

அதுவரை வாடி இருந்த கதிரின் முகம் முல்லையின் பேரை கேட்டதும் பிரேகாசமாக மாறி இருக்க.என்ன நினைத்தானோ சட்டென்று ரம்யாவின் பங்களாவில் இருந்து வேகமாக வெளியேறிய கதிர் அவன் பைக்கை சித்ராவின் பங்களாவை நோக்கி விரட்டினான்.

ஏதோ வேகத்தில் பங்களாவின் வாசல் வரை வந்த கதிருக்கு எப்படியாவது முல்லையின் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்ற... அப்போது தான் அந்த பங்களாவில் இருந்து வெள்ளை நிற கார் ஒன்று வெளியேறி இருந்தது.

அந்த காரை ஒரு பெண் ஓட்டுநர் இயக்கி இருக்க... கேட்டை சாத்தும் வாட்ச் மேன் செல்வாவின் முன்னே சென்று நின்றான் கதிர்.

'கதிர் சார்... மறுபடியும் நீங்க ஏன் இங்க வந்திங்க' என்று செல்வம் பதற...
'ஏய் அடங்கு... ஆமா இந்த வீட்டுல இருக்குற ராங்கிக்கும் முல்லைக்கும் என்ன சம்மந்தம்' என்று கேட்டான் கதிர்.

'சார்... நீங்க யார பத்தி கேக்குறீங்க. ராங்கி யாரு, முல்ல யாரு' என்று செல்வா புரியாமல் கேட்டதும்,'சரி... அந்த ராங்கியை விடு...நீ போய் முல்லைகிட்ட கதிர் வந்து இருக்கேன்னு சொல்லி அவளை வெளிய வர சொல்லு' என்றான் கதிர்.

'சார்... நீங்க யாருகிட்ட போய் சொல்ல சொல்லுறீங்கனே எனக்கு தெரியல சார். அதுவும் இல்லாம இப்போ வீட்டுல வேலை செய்யுற ஆளுங்கள தவிர வேற யாருமே இல்ல சார்' என்று செல்வம் சொல்ல...
'அப்போ முல்ல உள்ள இல்லையா' என்று கேட்டான் கதிர்.

'சார்... நேத்து தலையில அடிபட்ட பொண்ண பத்தியா கேக்குறிங்க' என்று செல்வம் சரியாக கேட்டதும்,'ஆமா ஆமா அவ தான்.. அவ உள்ள இல்லையா' என்று கேட்டான் கதிர்.

'சார்...அவங்க காலேஜ் போயிட்டாங்க சார். அவங்களுக்கு இப்போ தான் டிரைவர் சாப்பாடு கொண்டு போறாங்க' என்று செல்வம் சொல்லிமுடிப்பதற்குள்.
'பக்கத்து ஊருல இருக்குற மெடிக்கல் காலேஜ் தானே' என்ற கதிர்...மின்னல் வேகத்தில் தன் வண்டியை முல்லை படிக்கும் காலேஜை நோக்கி விரட்டினான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேர தொலைவில் ஒரு மருத்துவ கல்லூரி வாசலை சென்றடைந்த கதிர்,'அவ இந்த காலேஜ்ல படிக்கிறதா தானே அன்னைக்கு சொன்னா...' என்று எண்ணியவன் கண்ணில் சித்ரா வீட்டில் இருந்து வெளியேறிய அதே வெள்ளை நிற கார் தெரிந்தது.

'ஹான்... இந்த காலேஜ் தான் போல... அதான் சாப்பாடு கொடுத்துட்டு போறாங்க. ஆனா அந்த ராங்கிக்கும் நம்ம Flowerக்கும் என்ன சம்மந்தம். இவளோட அப்பா ஏதோ டிரைவர்ன்னு தானே சொன்னா' என்று தனக்குள் கேள்விக்கேட்டு கொண்டவன் சட்டென்று தன் அருகே வந்துக்கொண்டு இருந்த ஒருவனின் கழுத்தை வளைத்து பிடித்து இருந்தான்.

பார்க்க அம்மாஞ்சி போல இருந்த அந்த இளைஞனோ,' அண்ணா அண்ணா... நான் ஒன்னும் பண்ணல' என்று அலறியதும்,

'ஏய் தூ... வாயை மூடு. இந்தா.. என் வண்டில போய் எங்காவது அரைமணி நேரத்துக்கு சுத்தி பார்த்துட்டு வா' என்ற கதிர் அவனின் விலை உயர்ந்த பைகை அந்த பையனிடம் தந்தவன், அந்த பையன் கழுத்தில் இருந்த ID கார்டை பிடிங்கி தன் கழுத்தில் மாட்டிக்கொண்டான்.

'அண்ணா அண்ணா என்ன பண்றீங்க..ID கார்டு தாங்க அண்ணா' என்று அந்த இளைஞன் கெஞ்ச...'half n hour கழித்து வந்து வாங்கிக்கோ' என்ற கதிர்... நேரே மருத்துவ கல்லூரி மாணவனை போல முல்லை படிக்கும் காலேஜ்க்குள் நுழைந்து இருந்தான்.

கல்லூரியில் அங்கும் இங்கும் ஜோடி ஜோடியாக ஆண் பெண் வேதம் இல்லாமல் நண்பர்கள் அரட்டை அடித்தப்படி மதிய உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்க... கதிரின் விழிகளோ முல்லையை தேடி அலைந்தது.

'முல்ல எந்த வருஷம், எந்த டிபார்ட்மென்ட் படிக்கிறான்னு தெரியலையே' என்று கதிர் அங்குள்ள பெண்களில் அவன் தேடும் தேவதை எங்கே என்று அவன் விழிகள் தேடி அலைய...
'கண்டேன் முல்லையை!!' என்று அவன் பார்வை ஒரே இடத்தில் பதிந்து நின்றது.

மரத்தடி நிழலில் உள்ள ஒரு கல் இருக்கையில் தன் முன்னே இருந்த உணவு கூடையை பொருட்படுத்தாமல் முல்லை அமர்ந்து இருக்க...
'என்ன Flower... நானும் சாப்பிட வரட்டுமா?'என்று கேட்டான் கதிர்.

கடந்த இரண்டு நாட்களாக அனைவர் மீதும் முல்லையின் மனதில் தேவையில்லாத கோவம் எழுந்து இருந்த நிலையில், அவள் செவிகள் கதிரின் குரலைக்கேட்ட நொடியில் சட்டென்று எழுந்து கதிரின் அருகே சென்றவள்,'கதிர் நீங்களா!!?..' என்று ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியில் கேட்டாள்.

முல்லையின் அழகிய விழிகளுக்கு என்றோ அடிமையாகி இருந்த கதிருக்கு அவளை அருகே பார்த்ததும் ஒரு நொடி தன் நிலையை மறந்து அவளை உள்ளுற ரசித்தவன்,'நானே தான்' என்றான்.

கதிரை அங்கே முல்லை சற்றும் எதிர் பார்க்காதவள்.'அப்போ அன்னைக்கு சொன்னது போல எனக்கு ஒரு பிரெச்சனைன்னு தெரிஞ்சி தான் நீங்க என்னை தேடி வந்து இருக்கீங்களா' என்று முல்லை கேட்க,

அவளின் கேள்வியை சரியாக புரிந்து கொள்ளாமல்,'ஆம்'என்று கதிர் தலையாட்டி வைத்து இருந்தான்.

'அப்போ உண்மையாவே எனக்காக தான் வந்திங்களா கதிர்!?' என்ற முல்லை சட்டென்று கதிரின் கையை பற்றிகொண்டாள்.

'தேங்க்ஸ் கதிர்... எனக்கு தெரியும்.
எனக்கு ஒரு பிரச்சனைனா நீங்க தான் என்னை காப்பாத்த வருவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்' என்ற முல்லையின் முகத்தில் புன்னகை பூத்த வண்ணமாக இருந்தது.

முல்லையின் சிரிப்பில் கதிரும் அவளை ரசித்தபடியே நின்று இருக்க,'கதிர்...நான் உங்ககிட்ட அன்னைக்கே என் மனசுல இருக்குற காதலை...' என்று முல்லை அவள் காதலை நேரடியாக கதிரின் முன்னே சொல்ல துணிந்த தருணம்....

'ஏய் முல்ல....' என்று அந்த இடமே அதிருமப்படி யாரோ ஒருவரின் குரல் ஒலித்தது.

-தொடரும் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top