• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
116
தீமையே🔱வெ(கொ)ல்லும்

படலம் - 4
கதிர் அதீத கோவத்தில் நின்று இருந்தவனை நோக்கி துண்டுடன் வந்த ரம்யா அவன் முகத்தில் உள்ள வியர்வையை துடைத்தாள்.

கதிர் கோவப்படுவான் என்று அவன் நண்பர்களுக்கு தெரியும்.
ஆனால் இவன் இந்த அளவுக்கு வெறி பிடித்தவனை போல நடந்து கொண்டவனை பார்த்து அனைவரும் குழம்பிபோக,'என்னாச்சு Dude ?' என்று கேட்டாள் ரம்யா.

கதிர், ரம்யா, உதயா மூவரும் தான் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்த நண்பர்கள்.

ரம்யாவும் உதயாவும் அந்த ஊரின் X MLA சம்பத்தின் பிள்ளைகள்.
ரம்யாவிற்கு கதிர் மீது அளவுகடந்த வெறி.
எப்படியாவது கதிரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என தவம் இருக்கிறாள் என்று கூட சொல்லலாம்.

ஆனால் இத்தனை பிரியம் அவன் மீது வைத்து இருந்தும்,அவள் ஆசையை அவனிடம் சொல்லாததற்கு காரணம் பெண்கள் மீது அவன் வைத்து இருக்கும் சில கண்ணோட்டம் தான்.

'என்னாச்சு கதிர்' என்று ரம்யா கேட்க,
'அவளை நான் பழி வாங்கியே திறனும். டேய்...உடனே நீங்க அவளோட அட்ரஸ். அவளோட அம்மா அப்பா.. கூட பிறந்தவுங்கன்னு எல்லா detialsஸும் விசாரித்து சொல்லுறிங்க ' என்ற கதிர் காலையில் செட்டியார் வீட்டில் நடந்த சம்பவங்களை அதீத கோபத்துடன் சொல்லி இருந்தான்.

'என்ன... உன் மேல ஒரு பொண்ணு கை வச்சாளா... அதுவும் நம்ம ஊருக்கு வந்தா!!?' என்ற ரம்யா உடனே தன் தந்தைக்கு போன் செய்து பார்க்க... இவள் அழைப்புக்கு அவர் பதில் தரவில்லை.

'என்னாச்சு ரம்யா... அப்பா போன் எடுக்கலையா?' என்று உதயா கேட்க,'அவர் எடுக்கலைனா என்ன... நம்ம அந்த பொண்ணை சும்மா விட கூடாது' என்றாள் ரம்யா.

'எனக்கு அவளை நினைக்கல கொலை வெறி ஏறுது... யாரு இடத்துக்கு வந்து யாரு சீன் போடுறது' என்று மீண்டும் கதிர் கோவத்தில் கொந்தளிக்க, அவனை சமாதானம் படுத்தும் விதமாக கதிரை கட்டி கட்டி பிடித்துக்கொண்டாள் ரம்யா.

'மச்சான்... நீ கவலைப்படாத. எண்ணி 24மணி நேரத்துல அவளோட மொத்த ஜாதகத்தையும் உன் கையில க்கொண்டு வந்து கொடுக்குறேன்' என்ற உதயா அந்த இடத்தில் இருந்து வெளியேற.'You don't worry பேபி' என்று அவனை நெஞ்சோடு கட்டிக்கொண்டாள் ரம்யா.

✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம் முருகன் வீட்டில் இருந்து CR காரில் முல்லை மாறன் வேலன் என்று மூவரும் புதிய பங்களாவிற்கு கிளம்பி இருக்க... முல்லையின் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்துக்கொண்டு இருந்தது.

' ஆமா இப்போ நம்ம எங்க போறோம்' என்று சிறுவன் கந்தன் கேட்க,'பங்களாவுக்கு' என்றாள் ஈஷா.

'நீங்க மலேசியால தானே இருக்குறதா அப்பா சொன்னாரு. உங்களுக்கு இங்க பங்களா எல்லாம் இருக்கா' என்ற சிறுவன் சித்ராவை பார்க்க... அவளோ அவனை கண்டுகொள்ளாமல் மடி கணினியில் கவனத்தை செலுத்தி இருந்தாள்.

'அண்ணா... நம்ம ஏன் இவங்க கூட போகணும். எனக்கு இவங்கள பார்த்தாலே பிடிக்கல' என்ற முல்லை சித்ராவை பார்த்து முறைக்க.'நான் தான் உனக்கு அண்ணன் இல்ல தம்பின்னு சொன்னியே. இப்போ ஏன் இதெல்லாம் என்கிட்ட சொல்ற' என்று கேட்டான்.

'நேரம் பார்த்து காலை வராத. அம்மா அப்பாவை வேற இவங்க எங்க அனுப்ப போறாங்கன்னு தெரியல' என்று வழியெல்லாம் முல்லை முணங்கிக்கொண்டு இருக்க, கந்தனோ சித்ராவை கண் இமைக்காமல் பார்த்து இருந்தான்.

'டேய் நீ என்னடா... நான் இங்க ஒருத்தி லூசு போல புலம்பிகிட்டு இருக்கேன். என் பேச்சை கேக்காம முன்னாடி இருக்குற ஆளை எட்டி பார்த்துகிட்டு வர' என்று கோவமாக கேட்டாள் முல்லை.

'அக்கா... அவங்கள பார்த்தியா எவ்ளோ வேகமா type பன்றாங்க. சூப்பர் இல்ல க்கா' என்று சித்ராவை பற்றி கந்தன் முல்லையிடம் பெருமையாக பேச,'ஆமா... பெரிய வேகம்... யாரும் பண்ண முடியாததை இவங்க பண்ற மாதிரி இவன் வேற ரொம்ப பேசுறான்' என்று மேலும் புலம்பினாள் முல்லை.

பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மூவரும் பேசுவதை காதில் வாங்கிய சித்ரா அவர்களை கண்டுகொள்ளாதப்படி தன் மடி கணினி மீது கவனத்தை செலுத்தி இருக்க,
'மேடம்... ஐயர் யாராவது பார்க்கட்டுமா' என்று கேட்டாள் ஈஷா.

சித்ரா வாங்கிய புதிய பங்களாற்க்கு பூஜை செய்ய தான் ஈஷா கேட்கிறாள் என்று அறிந்து இருந்த சித்ரா,'அதெல்லாம் வேணா' என்ற ஒற்றை வார்த்தையில் அவள் கேள்விக்கு முற்று புள்ளி வைத்தாள்.

ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு ஈஷா இயக்கிய கார் பெரிய பங்களாவிற்க்கு வெளியே நின்றதும், வாசலில் நின்று இருந்த வாட்ச் மேன் பெரிய இரும்பு கேட்டை திறந்து விட, கார் உள்ளே சென்றது.

காரில் இருந்து சித்ரா முதல் ஆளாக இறங்கியதும்,'வணக்கம் மேடம்' என்று salute அடித்தவனை பார்த்து,
'Mr. செல்வம். இன்னும் கொஞ்ச நேரத்துல சில things எல்லாம் இங்க வந்து இறங்கும். அதெல்லாம் சரிப்பார்த்து உள்ள எடுத்துட்டு வந்து வைக்க சொல்லுங்க' என்றாள் சித்ரா.

'மேடம்...நீங்க தான் இந்த பங்களாவை புதுசா வாங்கி இருக்கீங்களா' என்று அந்த நபர் கேட்க,'ஏன் உங்களுக்கு அதுல எதாவது பிரச்சனையா'என்று சித்ரா கேட்க, அதே சமயம் மாறன் கந்தன் முல்லை என்று மூவரும் காரில் இருந்து இறங்கினார்கள்.

சித்ரா பார்க்க பணக்கார மிடுக்கிலும். முல்லை மாறன் கந்தன் என்று அவர்கள் மூவரும் நடுத்தர குடும்பத்தினரை போலவும் காட்சி அளிக்க,
அவர்களை பார்த்த வண்ணமாக,'இல்ல மேடம்... நீங்க இந்த பங்களாவை வாங்கி இருந்தா, சமையல் வேலை மத்த வேலைக்கு எல்லாம் நானே ஆள் ஏற்பாடு பண்ணலாமான்னு கேட்க நினைத்தேன்' என்றார் வாட்ச் மேன்.

'ம்... எல்லா வேலைக்கும் ஆள் ஏற்பாடு பண்ணுங்க. ஆனா Cook மட்டும் வேண்டாம்' என்ற சித்ரா,'ஈஷா' என்று தன் PAவை அழைக்க,
'நீங்க மூணு பேரும் உள்ள போங்க' என்று சித்ராவின் எண்ணத்தை அறிந்தவளாக சொன்னாள் ஈஷா.

'ஐயோ.... இவ்ளோ பெரிய வீட்டுலையா நம்ம தங்கப்போறோம்' என்ற கந்தன் முதல் ஆளாக வீட்டுக்குள் ஓடி போக,
சித்ரா யாருக்காகவும் காத்து இருக்கலாம் கையில் கைபேசியுடன் நேரே பங்களாக்குள் நுழைந்து இருந்தாள்.

'அண்ணா...எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல' என்று மீண்டும் முல்லை மாறனிடம் புலம்பினாள்

'உனக்கு எங்காவது அறிவு இருக்கா பாப்பா... அப்பாவுக்கு லட்ச கணக்குல பணம் செலவு பண்ணி தான் வைத்தியம் பார்க்கணும்னு டாக்டர் சொன்னாரு. ஆனா எந்த சாமி புண்ணியமோ இந்த மேடம் நம்ம அப்பா வைத்தியதுக்கு பொறுப்பு ஏத்து இருக்காங்க. அதனால ஒழுங்கா நம்ம இங்கேயே இருந்து அப்பாவுக்கு குணமானதும் நம்ம வீட்டுக்கு போகலாம்' என்ற மாறன் கந்தனை தொடர்ந்து வீட்டுக்குள் நுழைந்தான்.



யார் என்ன சொன்னாலும் முல்லைக்கு சித்ராவுடன் இருக்க பிடிக்காமல் போக, வேறு வழி இல்லாமல் அவளும் பங்களவினுள் நுழைந்தாள்.

ஈஷா அந்த பங்களாவில் உள்ள ஒவ்வொரு அறையை திறந்து பார்த்தவள்.
'இங்க மொத்தமா 8ரூம் இருக்கு. யாருக்கு எந்த ரூம் வேணுமோ ஸ்டே பண்ணிக்கோங்க' என்றாள்.

'என்ன ஆளுக்கு ஒரு ரூமா' என்ற கந்தன் நேரே ஒரு அறைக்குள் நுழைய,
'இந்த பங்களா உங்க மேடமொடாதா.. ஆனா இந்த இடத்தோட சொந்தக்காரங்க யாரோ ஒரு அரசியல்வாதின்னு கேள்விப்பட்ட மாதிரி இருக்கே' என்று மாறன் கேட்க, அதே சமயம் அங்கே சித்ரா வந்தாள்.

'ம்...சரி தான்...இன்னைக்கு காலையில வரைக்கும் இந்த பங்களா ஒரு அரசியல்வாதியோடது தான். ஆனா இந்த நொடியில் இருந்து இது VCRக்கு சொந்தமானது' என்றவள் வேகமாக மாடியில் உள்ள அறைக்கு சென்று இருந்தாள்.

சித்ராவை முல்லை கோவத்துடன் பார்த்தப்படியே நின்று இருக்க...
'உங்களுக்கும் எந்த ரூம் பிடிச்சி இருக்கோ... நீங்க அங்கேயே ஸ்டே பண்ணிக்கொங்க'என்று ஈஷா சொல்ல... விருப்பமே இல்லாமல் முல்லை ஒரு அறைக்குள் புகுந்து கதவை அடித்து சாத்தி இருந்தாள்.

முல்லையின் இந்த செயல் ஈஷாவை முகம் சுழிக்க வைக்க,
'ஆமா... நீங்களும் மலேசியா தானா' என்று ஈஷாவிடம் கேட்டான் மாறன்.

'ஆமா...' என்றவள் மேற்கொண்டு ஏதும் பேசாமல் சித்ராவை தேடி மாடிக்கு செல்ல... மாறனோ கந்தன் சென்ற அறைக்குள் நுழைந்தான்.

'அண்ணா.. நீங்க ஏன் இங்க வந்திங்க. எனக்கு தனி ரூம் வேணும்' என்று கந்தன் சொல்ல...'அதெல்லாம் தேவையில்ல.நீ என் கூடவே இரு' என்ற மாறன் தன் கைபேசி மூலம் பார்வதியை அழைத்து இங்கே வந்து சேர்ந்ததை தெரியப்படுத்தினான்.

இதே சமயம் சித்ராவின் அறைக்கதவை தட்டிக்கொண்டு ஈஷா உள்ளே நுழைய,சித்ரா அந்த அறையில் இருக்கும் பால்கனியில் நின்று வானத்தையே வெரித்து பார்த்து இருந்தாள்
 
Joined
Feb 6, 2025
Messages
116
'மேடம்...' என்று மீண்டும் ஈஷா அழைத்தவள்,
'அடுத்து நான் என்ன பண்ணனும்' என்று கேட்டாள்.

'Mondayல இருந்து இங்க இருந்தப்படியே முருகன் அங்கிள் பசங்க காலேஜ் and ஸ்கூல் போக என்ன பண்ணணுமோ அதை பண்ணு. and அவங்களுக்கு இன்னைக்கு மட்டும் தேவையான சாப்பாட்டை நீயே பண்ணிக்கொடு' என்றாள் சித்ரா.

'சரி மேடம்' என்ற ஈஷா அங்கிருந்து சென்றதும், சித்ரா மீண்டும் பழைய நினைவுகளை சுமந்தப்படி நின்று இருக்க, அந்த பங்களாவின் பக்கத்தில் இருக்கும் பெரிய பனை மர தோட்டத்தின் ஓரமாக ஒரு சின்ன சமாதியை பார்த்தாள்.

அந்த சமாதியின் அருகே 6 வயதில் ஒரு சிறுமி விளக்குடன் அமர்ந்து தனக்கு தானே பேசிக்கொண்டு இருக்க.
சித்ரா அந்த சிறுமியை மேலும் உற்று பார்த்தாள்.

சிறுமியை பார்த்துக்கொண்டே நின்று இருந்தவள்,சட்டென்று அவள் கைபேசி மூலம் வாட்ச் மேன் செல்வத்தை அழைத்தாள்.

'ஹலோ யாருங்க பேசுறது' என்று செல்வம் கேட்க,
'நான் CR பேசுறேன்' என்றவளின் பதிலில். இவளிடம் எப்படி நம்முடைய கைபேசி எண் கிடைத்தது என்று செல்வா யோசிக்கும் முன்னே,'இந்த பங்களாக்கு வெளியே பனைமர தோட்டத்துல ஒரு சமாதி இருக்கே, அது யாராடது' என்று கேட்டாள்.

'மேடம்... அந்த இடமே அண்ணன் தம்பிங்க நாலு பேருக்கு சேர வேண்டிய இடம் மேடம்.
ஆனா மூத்த அண்ணனை ஏமாற்றி மீதி மத்த தம்பிங்க அந்த இடத்தை இந்த வீட்டோட பழைய முதலாளி அரசியல்வாதி சம்பத்க்கு விக்க போறாங்க மேடம்' என்றார் செல்வா.

வாட்ச் மேனின் வார்த்தையை கேட்டு முகம் மாறிய சித்ரா,'பணத்துக்காக கொலைக்கூட செய்வாங்க' என்று தனக்குள் நினைத்தவள் கைபேசி இணைப்பை துண்டித்து மேலும் அந்த தோப்பில் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து பெருமூச்சு எடுத்தவளாக அவள் வேலையை செய்ய தொடங்கி இருந்தாள்.

இதே சமயம் கதிரின் கட்டளையைக்கேட்டு சித்ராவை பற்றி அவனின் நண்பர்கள் விசாரிக்க.யாருக்கும் எந்த தகவலும் கிடைக்காமல் போனது.

'என்னடா சொல்றிங்க. அது எப்படி ஒரு ஆளைப்பற்றி எந்த விவரமும் தெரியாமல் போகும்' என்று கதிர் மேலும் கோவம் கொண்டான்.

'கதி பேபி ஏன் கோவப்படுற. நான் அப்பாக்கு கால் பண்ணிருக்கேன். இரு அவரு நமக்கு போன் பண்ணுவாரு. ம்.... சரி நீ ரொம்ப சூடா இருக்க... வாயேன் வேணும்னா நாம். UD பங்களா போய் chill பண்ணலாம்' என்று ரம்யா கதிரை அழைத்தாள்.

'ஆமா மச்சி... வா நம்ம பங்களாக்கு போகலாம். நாளைக்குள்ள கண்டிப்பா உன்கிட்ட பிரச்சனை பண்ணவன்னு யாருன்னு கண்டுப்பிடிச்சிடலாம்' என்று கதிரின் நண்பன் உதயா சொல்ல, கதிர் கண்களை மூடி ஒரு இருக்கையில் சாய்ந்து இருந்தவனின் எண்ணம் எல்லாம் சித்ரா மட்டுமே நிறைந்து இருந்தாள்.

'உதயா... கதிர் இப்படியெல்லாம் சொன்னா கேட்க மாட்டான். நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு. பேபியை நான் அழைச்சிட்டு வரேன்' என்றாள் ரம்யா.

ஒரு வழியாக கதிரை சமாதானம் செய்து ரம்யா அவனை தன் நண்பர்களோடு அவள் பங்களாவிற்கு அழைத்து சென்றாள்.

'உதயா... நான் என்னை மறக்கணும். அந்த அளவுக்கு எனக்கு போதை வேண்டும்' என்ற கதிரை பார்த்து உதயா சிரித்தவன்.'கவலைப்படாத மச்சி...அங்க இருக்குற வாட்ச் மேனை அனுப்பி வாங்க சொல்லிடலாம்.அப்படியே நம்ம Friends நாலு பேருக்கு மெசேஜ் அனுப்புனா அவங்களும் அங்க வந்து joint பண்ணிப்பாங்க' என்றான் உதயா.

கதிரும் ரம்யாவும் பின் இருக்கையில் அமர்ந்து இருக்க...
உதயா அவன் பங்ககளாவை நோக்கி காரை விரட்டினான்.

சில நிமிடங்களில் காரை பாங்களாவின் வாசலில் நிறுத்திய உதயா காரின் ஹார்ன்னை அடிக்க, ஓரமாக நின்று இருந்த வாட்ச் மேன் செல்வம் @ செல்வா இவர்களை நோக்கி ஓடி வந்தான்.

'ஏய்... கேட்ல நிக்காம எங்க டா போன' என்று உதயா அதிகார தோரணையில் வாட்ச் மேனை மிரட்டியதும்,'ஐயா நீங்களா!?' என்று பம்பினான் செல்வா.

'என்னடா.. என்ன கேள்வி இது...நான் தான். ம் கதவை திற'
என்று உதயா காரில் இருந்தப்படியே கட்டளையிட,'ஐயா.. இந்த பங்களா!!' என்று வாட்ச் மேன் தன் வார்த்தையை மென்னு விழிங்கினான்.

'ஏய்...கேட்டை திற மேன்' என்ற ரம்யா கோவமாக காரில் இருந்து இறங்க...
இங்கே நடப்பதை எல்லாம் தன் அறைக்குள் இருந்தப்படி CCTV மூலம் பார்த்துக்கொண்டு இருந்தாள் சித்ரா.

'மேடம் இந்த பங்களா இப்போ உங்களோடது இல்ல மேடம்' என்று ஒரு வழியாக வாட்ச் மேன் உண்மையை சொல்லி முடித்து இருக்க,'என்னடா உளறுற!?' என்று பல்லைக் கடித்துக்கொண்டுக் கேட்டான் உதயா.

'ஆமா சார். இந்த பங்களாவை இப்போ வேற ஒருத்தவுங்க வாங்கிட்டாங்க. நீங்க வேணா நம்பலைனா இதோ இந்த பேர் பலகையை பாருங்க' என்று வாட்ச் மேன் சொல்ல,அந்த பலகையில் UD பங்களா என்று இல்லாமல் VCR பங்களா என்று பெயர் இருந்தது.

'டேய்... இங்க என்ன நடக்குது... யார் பங்களாவுக்கு யாரு சொந்தம் கொண்டாடுவது' என்ற உதயா வாட்ச் மேன் செல்வாவை அடிக்க கை ஓங்கிய வேளையில் பங்களாவின் வாசலுக்கு வந்த சித்ரா உதயாவின் கையை தடுத்து இருந்தாள்.

சித்ராவை அங்கே எதிர் பார்க்காத கதிர் காரில் இருந்து கோவமாக கீழே இறங்கியவன்,'ஏய் இவ தாண்டா என் மேல கை வச்சா' என்றான்.

கதிரை பார்த்து இதழ்கள் வளைத்து சித்ரா கிண்டலாக சிரிக்க...'மேடம் மேடம் இங்க என்ன பிரச்சனை' என்று ஈஷா வெளியே ஓடி வர... அவளை தொடர்ந்து மாறனும் கந்தனும் அங்கே வந்தார்கள்.

உதயாவின் கையை சித்ரா தடுத்து இருக்க,'ஏய்... என் வாட்ச் மேனை நான் அடிப்பேன்... என்னை தடுக்க நீ யாருடி' என்றவன் சித்ராவை அடிக்க கை ஓங்கியதும், சித்ரா அசால்ட்டாக உதயாவின் வயிற்றில் ஒரு குத்து வைக்க..அவன் அதே இடத்தில் ரத்த வாந்தி எடுத்து கீழே சரிந்தான்.

'உதயா உதயா...' என்று அலறிய ரம்யா தன் சகோதரனின் அருகே ஓடி வர...
இவர்கள் சத்தத்தைக் கேட்டு பங்களாவினுள் இருந்து முல்லை வெளியே வந்தாள்.

முல்லையின் கண் எதிரே உதயா ரத்த வாந்தி எடுத்து கீழே விழுந்து இருக்க...
'ஏய்.. உதயாவை என்ன பண்ண!?' என்ற ரம்யா... சித்ராவை அடிக்க கை ஓங்கியதும்... சித்ரா அவள் சுண்டு விரலால் அவள் காதை வருடியவள், திவ்யாவின் கன்னம் பழுக்கும்ப்படி ஓங்கி ஒரு அரை அறைந்து இருந்தாள்.

'ஐயோ... இவங்க என்ன எல்லோரையும் அடிக்கிறாங்க' என்ற மாறனை பார்த்து,'சரியான ராங்கி போல இவங்க' என்ற முல்லையின் கண்கள் முதல் முறை தூரத்தில் நின்று இருந்த கதிரை பார்த்து வியப்புடன் உறைந்து போனது.

'ஏய்.. யாருடி நீ!?ஊர் விட்டு ஊர் வந்து எங்ககிட்டயே சண்டைக்கு நிக்குறியே!என்ன உனக்கு இவ்ளோ திமிரா!?' என்ற கதிர் தன் கை சட்டை மடிப்பை மேலே இழுத்துக்கொண்டு சித்ராவிடம் எகுறிக்கொண்டு வந்தவனை தன் பார்வையால் அதே இடத்தில் நிறுத்தினாள் சித்ரா.

இங்கே பிரச்சனை கை மீறி போவதை கண்ட ஈஷா,'மேடம்... நீங்க உள்ள போங்க. நான் இவங்கள என்னனு கேக்குறேன்' என்று சொல்ல,

'கேக்குறேன் பாக்குறேன் என்ற வார்த்தைக்கு எல்லாம் இங்கே இடமே இல்ல... ஹே Fools. உங்க மூணு பேருக்கும் என் பங்களா முன்னாடி என்ன வேலை!?' என்று கேட்டாள் சித்ரா.

'என்ன உன் பங்களாவா!!?. ஏய்...இது எங்க பங்களா.' என்ற ரம்யா வீங்கிய கன்னத்தில் கையை வைத்தப்படி சித்ராவை முறைக்க,
'அது பாஸ்ட். இப்போ இது என்னோட பங்களா' என்றாள் சித்ரா.

'ஏய் செல்வா... யாருடா இவ... எங்க பங்களாகுள்ள நின்னுகிட்டு எங்க மேலேயே கை வைக்கிறா... நீ இவள என்னனு கேக்காம வேடிக்கை பார்த்துகிட்டு நிக்குற'என்ற ரம்யா மீண்டும் செல்வாவின்
சட்டை பிடிக்க போனதும், ரம்யாவின் மறு கன்னத்திலும் சித்ராவின் கைத்தடம் பதிந்தது.

சித்ராவின் இந்த கோவத்தை பார்த்து முல்லையின் முகம் இறுகி போக...
'Mr. செல்வா இந்த CRவோட Staff,
அவர் மேல கை வைக்க உங்க யாருக்கும் எந்த ரைட்ஸும் கிடையாது.மேற்கொண்டு நீ எதாவது தெரிஞ்சிக்கணும்னா இந்த பங்களாவை எனக்கு சேல்ஸ் பண்ண X mla சம்பத்தை போய் பாரு' என்ற சித்ரா ரம்யாவின் அருகே நின்று இருந்த கதிரை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

சித்ராவின் செயலை பார்த்து கோவம் கொண்ட ரம்யா,'ஏய் ஏய்... எங்க அப்பா யாரு தெரியுமா' என்று கேட்டதும்,

'It's none of my பிஸ்னஸ். நீ வேணும்னா உன் அம்மாக்கிட்ட போய் உன் அப்பா யாருன்னு கேளு' என்றவள் பங்களாவிற்குள் செல்லும் முன்னே ஈஷாவை பார்த்து அழுத்தமாக முறைத்தாள்.

சித்ராவின் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அறிந்து இருந்த ஈஷா,'மாறா.... நீங்க எல்லோரும் உள்ளே போங்க' என்று சொல்ல... முல்லை மட்டும் கதிரை பார்த்துக்கொண்டே நின்று இருந்தாள்.

அது வரை கதிர் பொறுமையாக இருந்தவன்,'ஏய் நில்லு டி...என்ன பேசிக்கிட்டு இருக்கும் போதே திமிரா உள்ள போற. காலையில என் மேல கை வச்சதுக்கே உன் உயிர நான் எடுத்துருப்பேன்'என்றவன் அதீத கோவத்தில் அருகே இருந்த கல்லை தூக்கி சித்ராவை நோக்கி வீசினான்.

தன்னை நோக்கி வந்த கல்லை சித்ரா சட்டென்று தட்டிவிட்ட வேகத்தில் அது சற்று துளைவில் நின்று இருந்த முல்லையின் தலையை பதம் பார்த்தது.

கல் பட்ட வேகத்தில்,'அம்மா...' என்று அலறிய முல்லை அதே இடத்தில் வலி தாங்காமல் ரத்தகாயத்தோடு கீழே அமர்ந்தவளை அப்போது தான் கவனித்த கதிர்,

'முல்ல...' என்றவன், ஓடிப்போய் முல்லையின் நெற்றியில் அவன் கைக்குட்டையைக் கொண்டு மேலும் ரத்தம் வராதப்படி கட்டி விட்டவனின் செயலில் சித்ராவின் புருவம் இடுங்க,

கதிருக்கும் முல்லைக்கும் எப்படி பழக்கம் என்று சித்ராவின் மூளை அவளுக்குள் கேள்வி எழுப்பியது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top