Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
'பெரிய பாப்பா கூப்பிடுறாங்க முல்ல... நான் போய்ட்டு சீக்கிரமா வந்துடுறேன்' என்ற முருகன் வேறு சட்டையுடன் அவர் அறையில் இருந்து வெளியேறியதும் முல்லை கோபத்துடன் அவரை தொடர்ந்து வந்தாள்.
'கிளாமலாமா பாப்பா' என்ற முருகனின் குரலில்.'ஆன்ட்டி போயிட்டு வரேன்' என்ற சித்ரா வாசலை நோக்கி செல்லும் முன்னே,
'எங்க அப்பாவை எங்க அழைச்சிட்டு போறீங்க... அவரே காலையில இருந்து ஹாஸ்பிடல்ல இருந்துட்டு இப்போ தான் களைப்பா வீட்டுக்கு வந்து இருக்காரு' என்றாள் முல்லை.

முல்லையின் வார்த்தையை கேட்டு சித்ராவின் முகம் இறுக்கமாக மாறிய நிலையில்...'what ஹாஸ்பிடல் போனீங்களா... ஏன் என்னாச்சு அங்கிள்?' என்று கேட்டாள் சித்ரா.
'அவருக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன? உங்களுக்கு தேவை அவரு உங்களுக்கு எப்பவும் கார் ஒட்டிகிட்டே இருக்கனும் அவ்ளோ தானே' என்ற முல்லையின் வார்த்தைகள் சித்ராவின் பொறுமையை சீண்டியது.
'முல்ல... என்ன பேசுற நீ... பெரிய பாப்பாக்கிட்ட இப்படியெல்லாம் யாரும் பேசக்கூடாது. மாறா... பாப்பாவை உள்ள அழைச்சிட்டு போ' என்ற முருகன் பார்வதியை பார்த்து முறைத்தார்.
'முல்ல... என்ன நீ... பெரியவுங்க எதிர்ல இப்படியா பேசுவ? வா வா உள்ள வா?' என்று பார்வதி முல்லையின் கையை பிடித்ததும்.
'அம்மா... அப்பாவுக்கு உடம்பு சரியில்ல மா... காலமெல்லாம் நம்ம அப்பா இவங்களுக்காக தானே ஓடி ஓடி உழைச்சாரு' என்ற முல்லையை புருவம் உயர்த்தி முறைத்தாள் சித்ரா.
'எங்கள கூட சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்ல சேர்த்துட்டு, எப்பப்பாரு பெரிய பாப்பா பெரிய பாப்பான்னு இவங்ககூடவே தானே இருந்தாரு. இவங்க எங்காவது என் அப்பாவை ஒழுங்கா பார்த்துகிட்டாங்களா' என்று முல்லை கோவமாக கேள்வி கேட்டாள்.
'மேடம்... நீங்க காருல போய் உக்காருங்க. முருகன் சார், உங்க பொண்ணுகிட்ட சொல்லி கொஞ்சம் மரியாதையா பேச சொல்லுங்க' என்ற ஈஷா, 'மேடம் நீங்க வாங்க' என்று சித்ராவை அழைத்தாள்.
'வெயிட்' என்று ஈஷாவின் அழைப்பை மறுத்த சித்ரா...'அங்கிள் என்னாச்சு உங்களுக்கு... ஏன் ஹாஸ்பிடல் போனீங்க?' என்று கேட்டதும்,'இல்ல மா அது...' என்று திக்கி திணறினார் முருகன்.
'கேக்குறேனே...என்ன பிரச்சனை உங்களுக்கு?' என்று பொறுமை இழந்தவளாக சித்ரா கர்ஜிக்க...
'அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாங்க' என்றான் மாறன்.
முருகனுக்கு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை என்று பார்வதி நம்பி இருக்க... மாறன் அந்த இடத்தில் யோசனையின்றி உண்மையை சொல்லியதும், அதை கேட்டு,'என்ன அப்பாவுக்கு ஆபரேஷன் பண்ணனுமா... டேய் மாறா என்னடா சொல்லுற?' என்று பதறினார் பார்வதி.
மாறன் சொன்ன உண்மையை கேட்டு முருகன் அவனை முறைத்தவன்,'ஏய் பார்வதி... எனக்கு ஒண்ணுமில்ல... நான் நல்லா தான் இருக்கேன்' என்று தன் மனைவியை சமாதானம் படுத்த.
'என்னங்க இதெல்லாம்' என்று கதறி அழுதார் பார்வதி.
'அண்ணா... நீ என்ன லூசா... ஏன் அம்மா எதிர்ல உண்மையை சொன்ன' என்று முல்லை மாறனிடம் கோவம் கொள்ள...
'எல்லாம் உன்னால தான்' என்று தன் தங்கையை கடிந்துகொண்டான் மாறன்.
'என்னால ஒன்னும் இல்ல. இதோ எல்லாம் இந்த பெரியபாப்பானால தான்' என்ற முல்லை,'அம்மா அழாத...' என்று பார்வதியை சமாதானம் படுத்திக்கொண்டு இருந்தாள்.
'அங்கிள்... என்னாச்சு உங்களுக்கு. டாக்டர் என்ன சொன்னாரு' என்று சித்ரா கேட்க
'இல்ல பாப்பா எனக்கு ஒண்ணுமில்ல' என்ற முருகனை கடுங் கோவத்தில் முறைத்தாள் சித்ரா.
சித்ராவின் கோவம் எப்படி பட்டது. அவள் பொறுமையை இழந்தால் என்னவெல்லாம் விபரிதம் நடக்கும் என்று ஏற்கனவே அறிந்து இருந்த முருகன்.
'இது எதோ பணக்கார வியாதி போல மா... அவங்க என்ன சொல்லுறாங்கனே எனக்கு புரியல' என்றார் முருகன்.
'ஈஷா...' என்ற சித்ராவின் அழைப்பை புரிந்துகொண்ட சித்ராவின் PA.,'முருகன் சாரோட ரிப்போர்ட்டஸ் எங்க?' என்று மாறனை பார்த்து கேட்டாள்.
'நீங்க ஏன் அத கேக்குறீங்க. என்ன நீங்க பெரிய டாக்டரா' என்று கேட்க..
'பாப்பா சும்மா இரு' என்ற மாறன் வேகமாக சென்று அறைனுள் இருந்த மருத்துவ ஆவணங்களை எடுத்து வந்தான்.
'ஐயோ என்னங்க... உங்களுக்கு எதாவதுனா நான் என்ன பண்ணுவேன். அந்த கடவுள் ஏன் இப்படி பண்ணுறாரு. அவருக்கு நான் தவறாமல் நெய் விளக்கு போட்டேனே. என் பிரத்தனையை அவர் ஏத்துக்கவே இல்லையா' என்று புலம்பி அழுதார் பார்வதி.
மாறன் கொடுத்த ரிப்போர்ட்டஸ் அனைத்தையும் ஈஷா அவள் செல் போனில் படம் பிடித்து அதை சித்ராவிடம் கொடுக்க... சித்ரா அந்த போனுடன் முருகனின் வீட்டில் இருந்து வெளியே சென்றாள்.
சித்ரா செல்லும் வழியை முல்லை பார்த்து இருக்க...'முல்ல... என்ன நீ... ஏன் பெரியபாப்பா கிட்ட இவ்ளோ கோவமா பேசற' என்று முருகன் கேட்க,
'அப்பா... அவங்க உங்க முதலாளியா இருக்கலாம்.அவங்க உங்களுக்கு ரொம்ப முக்கியமா இருக்கலாம். ஆனா என்னைக்குமே நீங்க தான் எங்களுக்கு முக்கியம்' என்றாள் முல்லை.
'இங்க பாருங்க. ஏன் இப்படி மேடமை கோவமா பேசுறீங்க. அவங்களுக்கு முருகன் சார் பிரச்சனை தெரிஞ்சு இருந்தா இந்நேரம் அவங்க இவரை பெரிய ஹாஸ்பிடல்ல சேர்த்து குணப்படுத்தி இருப்பாங்க' என்று ஈஷா சொல்ல,
'எங்க அப்பா உடம்பு இந்த நிலைமைக்கு ஆக காரணமே உங்க மேடம் தான்' என்றாள் முல்லை.
'முருகன் சார்... என்ன இது... ஏன் உங்க பொண்ணு இப்படி அர்த்தமே இல்லாம பேசுறாங்க'என்று ஈஷா கேட்க,
'பாப்பா சும்மா இருக்க மாட்ட... நீ முதல்ல உள்ள போ' என்று மிரட்டினான் மாறன்.
'நான் ஏன் உள்ள போகணும். நான் போக மாட்டேன்' என்ற முல்லை மேலும் அழுத்தமாக அதே இடத்தில் நின்று இருக்க.'அண்ணன் சொல்லுறேன். உள்ள போ' என்றான் மாறன்.
'நீ ஒன்னும் எனக்கு அண்ணன் இல்ல. நான் தான் உன்னை விட பெரியவ. நான் தான் முதல்ல பிறந்தேன். அதனால நீ சொல்லுறத நான் கேட்க மாட்டேன். நான் சொல்லுறத தான் நீ கேட்கணும்' என்றாள் முல்லை.
'நான் தான் உனக்கு அண்ணன். சயின்ஸ் படி ரெண்டாவது பிறக்குறவுங்க தான் பெரியவுங்க' என்று மாறனும் முல்லையிடம் சரிக்கு சமமாக சண்டைக்கு நிற்க...
'ஐயோ ரெண்டு பேரும் உங்க திருவாயை கொஞ்சம் மூடுறிங்களா' என்று கத்தினான் சிறுவன் கந்தன்.
மாறனும் முல்லையும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நின்று இருக்க...
'என்ன முருகன் சார்... உங்க ரெண்டு பசங்களும் இரட்ட பிள்ளைங்களா?' என்று கேட்டாள் ஈஷா.
'ஆமா ஆமா இவங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ். ஆனா எப்ப அடிச்சிப்பாங்க. எப்ப கூடிப்பாங்கன்னு இவங்கள படைச்ச அந்த சிவனுக்கும் தெரியாது, எங்கள பெத்த எங்க அப்பன் முருகனுக்கும் தெரியாது' என்றான் கந்தன்.
சிறுவனின் துடுக்கான பேச்சில் அவன் கன்னத்தை செல்லமாக ஈஷா கிள்ளியதும்,
'ஈஸ்வரி மா... பெரியபாப்பா கிட்ட எனக்கு ஒன்னுமில்லனு சொல்லு மா. மாத்திரை போட்டாலே சரியாகிடும்' என்று சொன்னார் முருகன்.
'இருங்க சார்... அதான் மேடம் ரிப்போர்ட்டஸ் பாக்குறாங்களே. அவங்க பார்த்துப்பாங்க' என்ற ஈஷா, முருகனின் வீட்டை நோட்டாமிட்டுக்கொண்டு இருக்க..பார்வதி இன்னுமும் அவர் அழுகையை நிறுத்தியப்பாடு இல்லை.
மாறனும் முல்லையும் ஒருவருக்கு ஒருவர் கோவமாக முகத்தை திருப்பிக்கொண்டு நின்று இருக்க... மாறன் பெண்களிடம் பேசுவதை எப்போதும் விரும்பாத முல்லையை கடுப்பேத்த முடிவு செய்து,
'நீங்க தான் சித்ரா மேடத்தோட PAவா?' என்று தானாக போய் அவளிடம் பேசினான் மாறன்.
'ஹாங் ஆமா... என் பேர் ஈஷா, ஆனா உங்க அப்பா மட்டும் ஈஸ்வரின்னு கூப்பிடுவாங்க'என்றாள் ஈஷா.
'ஈஸ்வரி கூட அழகான பெயர் தான்' என்று மாறன் சொல்ல... அவனை அடிப்பதை போல பாவனை காட்டினாள் முல்லை.
'அக்கா அக்கா.... அண்ணன் உன்னை கடுப்பேத்த தான் அந்த பொண்ணுகிட்ட பேசுது' என்று கந்தன் முல்லையிடம் சொல்ல,ஈஷா மாறன் கேட்கும் கேள்விக்கு எல்லாம் இன்முகத்துடன் பதில் அளித்தாள்.
சில நொடிகளில் புயலை போல வீட்டுக்குள் நுழைந்த சித்ரா,'அங்கிள்...நாளைக்கு நைட் உங்களுக்கும் பார்வதி ஆன்டிக்கும் Flight டிக்கெட் போட்டாச்சு, நீங்க மெடிக்கல் விசால தான் போறிங்க. So உங்க ரெண்டு பேரோட பாஸ்போர்ட் மட்டும் ஈஷாக்கிட்ட கொடுங்க' என்ற சித்ராவை அனைவரும் கேள்வியாக பார்த்தார்கள்.
சித்ராவின் சின்ன கண் அசைவுக்கு கூட என்ன அர்த்தம் என்று புரிந்து வைத்து இருக்கும் ஈஷா,'சார் உங்க ரெண்டு பேரோட பாஸ்போர்ட்ஸ் தாங்க' என்று கேட்டாள்.
'எங்க அம்மா அப்பா பாஸ்போர்ட் உங்களுக்கு எதுக்கு. அவங்கள நீங்க எங்க அனுப்ப போறிங்க' என்று முல்லை கோவமாக சித்ராவை பார்த்தப்படி ஈஷாவிடம் கேள்வி கேட்டாள்.